சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Yesterday at 14:01

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by Nisha Yesterday at 5:22

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by பானுஷபானா Sat 16 Dec 2017 - 16:13

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

.

படித்த சிறு கதைகள்

View previous topic View next topic Go down

Sticky படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 9 Jan 2014 - 8:40

”எலிப்பொறி”
************************
ஒரு விவசாயி வீட்ல ஒரு எலி வாழ்ந்து வந்துச்சாம்.ஒரு நாள் விவசாயி ஒரு பெட்டியை வீட்டுக்கு எடுத்து வந்தாராம்.அந்த பெட்டிக்குள்ள நமக்கு சாப்பிட ஏதாவது இருக்குமான்னு எலி ஓட்டைக்குள்ள இருந்தப்படியே பார்த்துகிட்டு இருந்ததாம்.விவசாயி ,அந்தபெட்டிகுள்ள இருப்பதை வெளியே எடுத்தார்,அது ஒரு எலி பொறி அதை பார்த்துவுடன் அந்த எலி அதிர்ச்சி அடைந்ததாம்.

எலி ஓடி போய் கோழியிடம் விவசாயி எலிப்பொறி வாங்கி வந்து இருக்கார் நான் என்ன செய்வது என்று கேட்டது.இது உன்னுடைய பிரச்சனை என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய் என்று சொல்லிவிட்டு சென்றது.

எலி, பக்கத்தில் இருந்த ஆட்டிடம் விவரத்தை சொன்னது.ஆடும் உனக்காக நான் வேண்டிக்கிறேன் ,என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு போய் விட்டது.

அடுத்து எலி ஓடி போய் மாட்டிடம் தன் பிரச்சனையை சொன்னது.மாடும் உன் பிரச்சனையை நீ தான் பார்த்துக்கனும் என்று சொல்லிவிட்டு போய்விட்டது.

எலி கவலையுடன் வீட்டுக்குள் சென்றது, நாம தான் ஜாக்கிரதையா இருக்கனும் என்று மனசை தேத்திக்கொண்டது.

அன்று இரவு எலிப்பொறியில் ’டமால்’ என்ற சத்தம் கேட்டது.விவசாயி மனைவி இருட்டில் ஆர்வமாக ஓடி வந்து பார்த்தாள்.பாம்பி ் வால் எலிப்பொறியில் மாட்டியுள்ளது,அது தெரியாமல் விவசாயி மனைவி கையை வைக்க போக அவள் கையை பாம்பு கொத்திவிட்டது.

விவசாயி தன் மனைவியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.பிறகு ஓரளவு குணமாகி ஜுரத்துடன் வீட்டுக்கு வந்தார்.பக்கத்து வீட்டில் இருப்பவர் கோழி சூப் கொடுத்தால் குணமாகும் என்றார்.

விவசாயி வீட்டில் இருந்த கோழியை அறுத்து சூப் வைத்து மனைவிக்கு கொடுத்தார்.அப்போதும் குணமாகவில்லை.அவர் மனைவியை பார்க்க நிறைய உறவினர்கள் வந்தனர்.

விவசாயி தன் வீட்டில் இருந்த ஆட்டை அறுத்து கறி சமைத்து அவர்களுக்கு உணவளித்தார்.ஒரு மாதமாகியும் குணமாகவில்லை ஒரு நாள் காலை விவசாயின் மனைவி இறந்து போய்விட்டாள்.

துக்கம் விசாரிக்க நிறைய பேர் வந்து விட்டதால் வேறு வழி இல்லாமல் அவர் வளர்த்த மாட்டையும் அறுத்து கறி சமைக்க வேண்டியதாயிற்று.இந்த எல்லா நிகழ்வுகளையும் எலி அதன் பொந்தில் உட்கார்ந்து மிகுந்த கவலையுடன் பார்த்து கொண்டு இருந்தது.

இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா ஒருத்தவங்களுக்கு ஆபத்துனா நமக்கு என்ன என்று இல்லாம முடிஞ்ச உதவி பண்ணுங்க!

- கலைவாணி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10508
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 9 Jan 2014 - 8:43

புரிந்தேன் 
**************
ஒரு வீட்டில் ஜன்னல் அருகே தந்தையும் மகனும் அமர்ந்திருந்தனர். சற்றுத் தொலைவில் ஒரு காகம் வந்தமர்ந்தது.
‘அது என்ன மகனே?’ என்று கேட்டார் தந்தை.
‘அப்பா, அது காகம்’ என்றான் மகன்.

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை ‘அது என்ன?’ என்றார்.
‘அது காகம்’ என்றான் மகன்.

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை ‘அது என்ன?’ என்றார்.

மகனுக்கு கொஞ்சம் எரிச்சல். ‘காகம்!’ என்றான்.

நான்காவது முறையாக மீண்டும் தந்தை மகனிடம் `அது என்ன மகனே?’ என்று கேட்டார்.

மகனின் கோபம் எல்லை கடந்தது. ‘காகம்… காகம்… காகம்… வயசாச்சுன்னா சும்மா இருக்க வேண்டியதுதானே’ என்று கோபத்தில் எரிந்து விழுந்தான்.

தந்தையின் கண்கள் பனித்தன. எதுவும் பேசவில்லை. மெதுவாக எழுந்து உள்ளே போனார். ஒரு பழைய டைரியை எடுத்து வந்தார். அதில் ஒரு பக்கத்தைப் புரட்டி மகனிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.
‘இன்று என் செல்ல மகன் என்னிடம் ஜன்னலில் வந்தமர்ந்த ஒரு பறவையைக் காட்டி அது என்ன? என்று கேட்டான்.

காகம் என்று புன்னகையுடன் சொன்னேன்.

அவனுக்குப் புரியவில்லை போல! மீண்டும் மீண்டுமாய் இருபத்து மூன்று முறை என்னிடம் அது என்ன என்று கேட்டுக் கொண்டே இருந்தான். நான் ஒவ்வொரு முறையும் அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டே அது காகம் என்று சொன்னேன்.

இன்று நான் ரொம்ப மகிழ்ச்சியாக உணர்ந்தேன்’ என்று எழுதி யிருந்தது.

மகனின் கண்களில் கண்ணீர் வடிந்தது. இருபத்து மூன்று முறை தன் கேள்விக்கு அன்புடன் பதில் சொன்ன தந்தையையா நான்காவது முறை கோபத்தில் திட்டினேன் என மனம் வருந்தி தந்தையின் கரம் பிடித்தான்.

நன்றி ;ரிளைக்ஸ் பிளீஸ்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10508
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறு கதைகள்

Post by பானுஷபானா on Thu 9 Jan 2014 - 11:55

அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16631
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 9 Jan 2014 - 18:18

:”@:  :”@:
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10508
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 17 Jan 2014 - 7:08

வாழ நினைக்கிறன் - ஒருபக்க கதை
------------------------------------
சிவப்பிரகாசத்துக்கு வலது கை தூக்க முடியாமல் போனபோதே புரிந்து போனது. பக்கவாதம். வயது எழுபத்தைந்து ஆகிறது. மனைவி போய்ச் சேர்ந்துவிட்டாள். பசங்க நான்கு பேரும் நான்கு ஊர்களில் வசதியாக இருக்கிறார்கள். பெண் அமெரிக்காவில்.

"சொல்றேன்னு தப்பா நினைக்காத சிவா, இந்த நிலையில் நீ உன் சொத்துக்களை பிரிச்சி எழுதிக் கொடுத்திட்டின்னா உன்னை நடுவீதியில் விட்டுருவாங்க பசங்க" என்றார் வக்கீல்
செந்தில்நாயகம்.

"எல்லாம் ஒரு லாஜிக்தான் செந்தில்"

"என்ன?"

"நான் சொத்துக்களை பிரிச்சிக் கொடுக்கலைன்னா எப்படா கிழம் மண்டையைப் போடும்னு என்னோட சாவைப் பத்தியே நினைச்சிட்டு இருப்பாங்க. நான் பிரிச்சிக் கொடுத்திட்டா என்னை காப்பாத்தாம மறந்துருவாங்கதான். ஆனா நான் சாகணும்னு நினைக்கமாட்டாங்களே. நான் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் எங்காவது கிடந்துட்டுப் போறேன்.

நான் மீதி இருக்கிற நாளை வாழ நினக்கறேன் சார். நான் சாகணும்னு யாரும் நினைக்கக்கூடாது."

- சூர்யகுமாரன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10508
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 17 Jan 2014 - 7:10

ஒரு பக்க கதை - பிரசாதம் !
---------------------------------------
"ஏன் இப்படி இடிச்சிட்டு வரீங்க. அமைதியாய் நின்னு தரிசனம் பண்ணுங்களேன்." அவரின் குரல், மந்திர ஓலி, மணி ஓலியையும் மீறிக் கொண்டு கணீரென்று ஓலித்தது.
-
"வந்துட்டான்யா வலுத்த கிழவன்! இவன் மட்டும்தான் சாமியாக் கும்புடணுமோ? எங்கயும் இவனாலே இடைஞ்சல்தான்" என்றார் முதிய பெண்மணி ஒருவர்.
-
அனைவரின் கவனமும் அந்தக் கிழவரின் பக்கம் திரும்பியது. ரிஷிப வாகனம் வலம் முடிந்து இறங்கியது. தீபாராதனை ஆனதும் வாகனத்தை அலங்கரித்த மலர் பிரசாதம் பெற தள்ளுமுள்ளு! கிழவரும் பூ வாங்குவதற்கு முண்டியடித்தார். 

"கெழவனுக்கு ஏன்யா பூவு? பொம்பளைகளை வாங்கவிடாம குறுக்கே வர்றானே!" என்றார் அந்தப்பெண்மணி.

இதைச் சட்டையே பண்ணாமல் அவர் பூவை வாங்கிய பிறகே போனார். பெண்கள் பழிப்புக் காட்டினர். பூவுடன் வெளியே வந்த அவர், பிராகாரத் தூண்களில் சாய்ந்தபடி, நடக்க இயலாதவர்களாய் இருந்த வயோதிகப்பெண்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய்ப் பூவைக் கொடுத்தார்.
-
பிரதோஷப் பிரசாதம் பெற்ற பூரிப்பு அவர்களின் முகத்தில், உதவிய சந்தோஷம் கிழவரிடத்தில்.

நன்றி: குமுதம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10508
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 31 Jan 2014 - 5:27

ஊதாங்கோல்
********************
மிஞ்சியிருக்கும் டிபார்ட்மெண்ட் எக்சாம எழுதி முடிச்சிட்டீங்கனா சமுதாயம், இலக்கியம்னு அலைய உங்களுக்கு தோதா இருக்கும்ல?" பதவி உயர்வுக்காக எழுதச் சொல்லி மண்டியிடாத குறையாக கேட்கிறாள். வீட்டுக்காரியின் முணுமுணுப்பும் நச்சரிப்பும் என்னை ரொம்பவும் சங்கடப்படுத்தியது.

"உம், உம், பார்க்கலாம். அதுக்குல்லாம் நேரமும் காலமும் வரவேண்டாமா? வயசான காலத்துல எவன் ஒக்காந்து படிக்கிறது? நீ வேற தொண, தொணன்னு என்னுயிர வாங்குற" சலித்துக்கொண்டே கெஞ்சும் மனைவியைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பாய் தலையணையைத் தூக்கி அக்குளில் இறுக்கிக் கொண்டு மாடிப் படிகட்டுகளில் ஏறத் தொடங்கினேன். .

"ஆமாமா, ஒங்க நல்லதுக்கு சொன்னா நான் தொண தொணக்குறன்னு பேசமாட்டீங்க பின்ன? வூட்டுகாரர் பெரிய உத்யோகத்துல கீறார்னு நானும் பெருமையா சொல்லிக்கலாமேன்னு பாத்தேன். அது தப்பா? நாந்தான் கடைசி காலத்துல காரு ஜீப்புன்னு கெத்தா ரிடயர் ஆகப் போறனாங்காட்டியும்! எனக்கென்ன வந்தது? நல்லதுக்கு சொன்னா மூஞ்சியை தூக்கி வச்சிக்கிட்டு போறத பாரு. அதுக்கல்லாம் நான் கொடுத்து வக்கிலபோல" உணர்ச்சி வசப்பட்டு மூக்கைச் சிந்தும் மனைவியின் வார்த்தைகளும் என்னுடன் மாடிப்படிகளில் ஏறின.

டிபார்ட்மெண்ட்ல இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இருக்குன்னு இவகிட்ட எதுக்குத்துதான் சொல்லித் தொலைச்சுட்டு பெரிய பாடாய் போச்சே இவகூட என்ற ஆதங்கத்துடன் மொட்டை மாடியில் பாய்விரித்து படுத்தேன். விரிந்து கிடக்கும் வானம் இரவு முழுக்க என்னை முறைத்துக் கொண்டிருந்தது. முனங்கிக் கொண்டும் தாடையை விரல்களால் சொறிந்தபடியும், இந்த வயசுல மனுசனுக்கு இப்படி ஒரு சோதனையா என்று படுக்கையில் புழுவாக நெளிந்தேன். பரிட்சையை எழுதலாமா வேண்டாமா என்ற கேள்வி மனசுக்குள் அனலாகத் தகித்துக் கொண்டிருந்தது.

புகைந்து கொண்டிருந்த இரவு வேப்பமரக் காக்கைகளின் பேச்சரவம் கேட்டு விடிந்தது. மனைவியிடம் பேச்செதுவும் கொடுக்காமல் காலைநேர கடமைகளை முடித்துக்கொண்டு வெளியில் புறப்பட்டேன். வீட்டுவாசலின் கீழ்ப்படியில் காட்சிப் பொருளாக புடவைத் தலைப்பால் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தாயாரிடம் "போய்ட்டு வரேம்மா" என்று சம்பிரதாயத்துக்கு சொற்களை உதிர்த்துவிட்டு தெருவில் இறங்கி நடக்க முற்பட்டேன்.

"அய்யோ... என்ன சொல்லிட்டேன்னு இப்படி வயித்துக்குக் கூட கொட்டிக்காம ஜம்பமா பொறப்பட்டுப் போறாரு இந்த மனுசன்" என்று ஏக்கமும் எதிர்பாப்ர்புமாய் எழுந்த மனைவியின் கூப்பாடு வீட்டுவாசலில் ஒலித்தது. அந்தக் கோபக் குமுறல் அக்கம் பக்கம் வீடுகள் தாண்டி பாதி தெருவுக்கு நன்றாகவே கேட்டிருக்கும். சன்னல்களில், வாயிற்படிகளில் மனித முகங்கள் முளைக்க ஆரம்பித்தன. முதுகிற்குப் பின்னால் நடக்கப் போகும் வாசல் நாடகத்தை திரும்பிப் பார்க்கப் பிடிக்காமல் பிடிவாதமாக நடையைத் தொடர்ந்தேன்.

"அத்தே உம்புள்ளைக்கு நீயாவது ஒரு முறை சொல்லிப் பாரேன்" மனைவி தன் மாமியாரிடம் முறையிடுவதும் எனக்குக் கேட்டது. அவசரப்படாமல் நான் நடந்து கொண்டிருந்தேன்.

"சும்மா இரும்மே நீய்யி, அந்த கிறுக்குப் பிடிச்ச பையபுள்ள போகும்போது கூவாத. உன் ஆம்பிடியானுக்கு கோபம் வந்தா இந்த பூமியே தாங்காது" கூச்சலிடும் மருமகளுக்கு படிக்கட்டில் உட்கார்ந்திருந்த தாயார் சமாதானம் சொல்லி அடக்குவதை காதில் வாங்கிக் கொண்டே நகரப்பேருந்தில் ஏறினேன்.

இரவுக்காவலன் மற்றும் அலுவலக உதவியாளனின் வணக்கங்கள் வரவேற்க அலுவலகத்திற்குள் நுழைந்தேன். துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுதான் இறுதிநாள் என்ற நினைப்பு மட்டும் தலைப்புச்செய்தி போல சதா என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

"இன்னா சார் சீக்கிரமா வந்துட்டீங்க? டல்லா வேற கீறீங்க!" இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களுக்கு பின் இரவுக்காவலன் என்னை சகஜமாக விசாரித்தான்.

"டல்லெல்லாம் ஒண்ணுமில்லப்பா முக்கியமான வேலை ஒண்ணு முடிக்க வேண்டியதிருக்கு அதான் சீக்கிரம் வந்துட்டேன்" என்று ஒரு பொய்யைச் சொல்லி அவனை அனுப்பி வைத்தேன். .

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மேசைமீது முழங்கைகளை ஊன்றி தலை கவிழ்ந்து உட்கார்ந்தேன். இரண்டு கட்டைவிரல்களும் நெற்றியை அழுத்தின. கடந்து வந்த இளமைக் காலம் பற்றிய நினைவுகள் நெஞ்சில் இழையோடின.

அடர் மரங்களுக்கு ஊடே குனிந்து நிமிர்ந்து உதிர்ந்து கிடக்கும் இலந்தை, நாவல் பழங்களை புட்டுக்கூடையில் பொறுக்கியெடுத்து பள்ளிக்கூட வாசலில் விற்பனை செய்து படிக்க வைத்த தாயாரின் முகமே அலை அலையாய் நெஞ்சம் முழுக்க நிறைந்தது.

தாயன்பை கடைசி காலத்தில் பலமடங்காக திருப்பிக் கொடுக்க வேண்டியது மகன்களின் தலையாய கடமையென்பது என்னுடைய தீவிரமான நம்பிக்கை. அதனால்தான் தாயாரின் பூமுகத்தில் தனிமை தோன்றா வண்ணம் கூடவே வைத்துப் பார்த்துக்கொள்கிறேன். கொடிய முதுமையுடன் அவள் தன் வாழ்க்கையைத் தொடர கூட்டுக் குடும்பமாக நாங்கள் உடனிருந்தது அவளுக்கு ஆறுதலாகவும் இருந்தது.

பதவி உயர்வு வந்தால் மாநிலத்தின் எந்த மாவட்டத்திற்கு வேண்டுமானாலும் நான் பணி மாற்றம் செய்யப்படலாம். வாழ்ந்த வீட்டில் தாயை தனியாக தவிக்கவிட வேண்டிய நிலை ஏற்படும். இத் தயக்கமான சூழலில்தான் துறைத் தேர்வை எழுதச் சொல்லி மனைவி அழிச்சாட்டியம் பண்ணுகிறாள். . .

"சார்! உங்களூக்குப் போன்" மனதிற்குள் ஆயிரம் குழப்பங்களுடன் கவிழ்ந்திருந்த என்னை அலுவலக உதவியாளனின் குரல் எழுப்பியது. சக பணியாளர்கள் அவரவர் இருக்கையில் வந்து உட்கார்ந்து விட்டிருந்தார்கள்.

சொற்களுக்கு வலிக்காமல் தாழ்ந்த குரலில் அழைத்த அலுவலக உதவியாளனை முதுகில் தட்டிக்கொடுத்து, தோளில் கைபோட்டு அவனை ஜன்னலோரம் அழைத்துச் சென்றேன். தொலை பேசியைக் கையிலெடுத்து அவனைப்போலவே நானும் மிகத்தாழ்ந்த குரலில்தான், "யாரு" என ஆரம்பித்தேன்.

ஆனால் "டேய் சிவா ..! நீயாடா?." நிமிடத்திற்குள் என் குரல் உச்சத்திற்கு உயர்ந்தது. பால்ய நினைவுகள் ஒரே நேரத்தில் மனசுக்குள் துள்ளிக் குதித்தன. மும்மரமாக பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் என் வியப்புக் குரலால் ஈர்க்கப்பட்டு சட்டென்று குரல்வந்த திசையை நோக்கி திரும்பிப் பார்த்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களை நோக்கி தங்களுக்குள் பார்வையால், பெருமூச்சால் கேள்விக் குறிகளைப் பரிமாறிக் கொண்டனர். மேஜைகளின் மீதிருந்த ஆபிஸ் பேப்பர்கள் காற்றில் அசையும் சப்தமோடு இணைந்து என் உற்சாகத்திற்காண காரணம் அலசப்பட்டது.

"அவசியம் வாடா. உனக்குப் போயி நேரங் காலமா..? எப்போன்னாலும் வீட்டுக்கு வாடா. யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்" என்று ஜன்னல் கம்பியில் ஒருகையும் தொலைபேசியில் மறுகையுமாக நான் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். பால்ய சிநேகிதன் முப்பது வருடத்திற்குப் பிறகு பேச நேர்ந்ததால் என் குரலில் உற்சாகம் கரைபுரண்டது.

பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அலுவலக உதவியாளன் மெல்ல விலகிச்செல்வதை பார்வையால் பின் தொடர்ந்தவாறே, "யாரு என் பசங்களா? இரண்டு பேரும் டாக்டருக்குத்தான் படிக்கிறாங்க. பையன் எமெம்சி பொண்ணு சிஎம்சி" என்றேன்.

"டேய் எலந்தை! நீயெல்லாம் பசங்கள டாக்டருக்கு படிக்க வச்சுட்ட....! " மறுமுனையில் ஒலித்த ஏளனமும் நக்கல்பேச்சும் எனக்கு அதிர்ச்சியூட்டின. பத்து நிமிடமாக இலக்கின்றி சந்தோஷமாக நீண்டு கொண்டிருந்த வார்த்தைச் சங்கிலி பட்டென அறுந்தது. குரல் கரகரத்துப் போனது. சட்டென தொலைபேசியை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு என் இருக்கைக்குத் திரும்பினேன்.

ஏழ்மை குத்திக்காட்டப்பட்ட ஷாக்கை தாங்க முடியாமல் உடல் வியர்வையால் நனைந்தது. மனசு மரத்துப்போனது. முகச்சோகத்தை மறைக்க முடியாமல் நாற்காலியில் உட்கார்ந்து புருவங்களை உயர்த்தி அறைக்குள் இருந்த ஊழியர்களை ஏறிட்டுப் பார்த்தேன். ஆயாசத்துடன் உதடுகளைச் சுழித்து அலுத்துக் கொண்டேன்.

ஒரிரு மெளன நிமிடங்களுக்குப் பின் சமாளித்துக் கொண்டு மெல்ல எழுந்த நான் அலுவலக உதவியாளனை நோக்கி, "பேங்க் வரைக்கும் போய் டிபார்ட்மெண்ட் எக்சாமுக்கு பணம் கட்டிட்டு வரேன். யாராவது வந்தா உக்கார வை" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.

அறைக்குள் நடந்தவைகளை கண்ணிமைக்காமல் கவனித்துக் கொண்டிருந்த அவன், "கொழந்தை மாதிரி பேசிக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு என்ன சார் ஆச்சு? யாரு போன்ல?" தலையைச் சொரிந்து கொண்டு அக்கறையோடு கூடவே நடந்து வந்தான்.

"ஒண்ணுமில்லப்பா ஒரு ஊதாங்கோல் அடுப்பு ஊதுச்சு" என்று அழுத்தமாக அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது, யாருமற்ற எங்கள் அலுவலக வாயிலில் அம்மா கையில் டிபன் கேரியருடன் நுழைந்து கொண்டிருந்தாள்.

- கி.மூர்த்தி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10508
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 31 Jan 2014 - 5:33

அன்று காலை. சென்னை. ஒரகடம் அருகே உள்ள பன்மாடிக் கட்டிடம். அங்கு வெகு சமீபத்தில் குடியேறிய ஓர் உழைக்கும் வர்க்கம். அற்பமான பணத்திற்காகவும், பொருளுக்காகவும் மேலான ஒழுக்கத்தை விட்டுக் கொடுக்காத அந்த சமுதாயம். 'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' என்ற புதுமொழிக்கு வழி வகுத்த அந்த கூட்டம்.'பிசினஸ் கண்டிநியுட்டி மேனேஜ்மென்ட்' ஐ காலம் காலமாக அமுல் படுத்தி அசத்திய அமைப்பு. இப்படியோர் சமுதாயத்திற்கு இந்த புது இடத்தில் ஒரு பேராபத்து! நேற்று முன்தினம் 150 பேர் இருந்த இந்த சமுதாயத்தில் இன்று வெறும் 148 உருப்படிகள் தான். 2 கொடூர கொலைகள். மேலும் ஒருவனுக்கு கால் துண்டிக்கப்பட்டுள்ளது. இவையனைத்திற்கும் தெரிந்தோ தெரியாமலோ காரண மாய் இருந்து வருவது ஒரு மூன்றரை வயதுக் குழந்தை - "அம்பர்".

அன்று மதியம். இந்த பிரளயத்தில் இருந்து இனத்தைக் காப்பாற்ற ஒரு அவசர குழு அமைக்கப்படுகிறது. நம் கதையின் நாயகன் 'உத்தமன்' ஒரு மனதாக தலைமை வகிக்க தேர்வு செய்யப்படுகிறான். உத்தமன்- புஜபல பரக்ரமசாலி. கடும் உழைப்பாளி. தன்னை விட மூம்மடங்கு எடையுள்ள மூட்டைகளையும் அசால்ட்டாக தூக்கி நடப்பவன்.தெளிவாக திட்டமிடுவதில் பலே கில்லாடி.! உத்தமனின் உயிர் தோழன்  - 'சிபி'. நேற்று கால் துண்டிக்கப்பட்டவனின் அண்ணன்.  சிபி வயதில் மூற்றவன். நல்ல உடல் வலு. ஆனால் முன் கோபக்காரன். இவர்கள் இருவரின் தலைமையில் ஜரூராக ஆரம்பமானது ஆபேரஷன் - "அம்பர்".

அன்று மாலை சிபியும் உத்தமனும் நடந்து போய்க்கொண்டிருக்கையில் மௌனம் பொறுக்காமல் சிபி பொங்கினான். 
"அவன ஏதாது பண்ணனும் உத்தமா. ரெண்டு நாள்ல ரெண்டு பேரு.."
" சும்மா இரு சிபி..  எடுத்தோம் கவுத்தோம்னு பேசாத. நீ நெனக்கிற மாதிரி அம்பர அவ்ளோ ஈஸியா நெருங்க முடியாது. பெரிய எடத்து புள்ள. நம்மள தடுக்க ஆயிரம் வழி வெச்சிருப்பாங்க.. யோசிச்சி தான் ...."
"போதும் நீ யோசிச்சது.. அடுத்த உயிர்  போறத மொதல்ல தடுக்கணும்"
" ம்ம்ம் .. கவனிச்சி பாத்தன்னா .. இந்த ரெண்டு கொலையுமே அம்பரோட 'டாய் ரூம்'ல, சாயங்காலம் அஞ்சுல இருந்து ஏழு மணிக்குள்ள தான் நடந்துருக்கு .. அவனா தேடி வந்து நம்ம ஆளுங்களக் கொள்ளள .. இவனுகளா போய் தான் சிக்கிருக்கானுங்க.. மடப் பயலுவ.. நீ மொதல்ல நம்ம ஆளுங்க யாரையும் இன்னும் ரெண்டு நாளக்கி அந்தப் பக்கம் போக வேண்டாம்னு சொல்லி வை"
" ஆகட்டும் ... எனக்கு அவனோட கால் வேணும் உத்தமா.. சின்னப் பையன்னு கூடப் பாக்காம ஏந் தம்பியோட கால்ல கார ஏத்திருக்கான் அவன்.. அவங் காலப் புடிச்சி கடிச்சி வெக்கிரனா இல்லையானு பாரு..". உத்தமன் சிரித்தான். சிபியும் சிரித்தான்.

கதையில் திருப்பம். இருவரும் பேசிக் கொண்டே வந்திருப்பது அம்பரின் டாய் ரூம் வாசல். மின்னலென பாய்ந்தது அம்பரின் பொம்மை கார். சடாலென சிபி நகரவே, கார் உத்தமன் மீது ஏறியது. சிபியால் பொறுக்க முடியவில்லை. கண் முன்னே மூன்றாவது கொலை. உத்தமன் துடிதுடித்து செத்தான்.

அதைப் பார்த்த அம்பர் சிரித்துக் கொண்டே அம்மாவிடம் ஓடினான் .. "ம்மா.. இன்னிக்கும் ஒரு ஏறும்ப கார் ஏத்தி கொன்னுட்டேன் "

அவன்   திரும்பி டாய் ரூம் வருகையில் ஏதோ காலில் சுள்ளென பட்டது. தட்டி விட்டு ஓடினான் அம்பர். அவன் காலைக் கடித்த சிபியின் முகத்தில் ஒரு உயிரற்ற புன்னகை. 

முற்றும்!
------------------------
குறிப்பு : உத்தமன், சிபி மற்றும் எறும்பு சமுதாயத்தின் தரப்பில் மட்டும் இந்த கதை எழுதப் பட்டதால் இது 'ஒரு பக்க கதை'!

நன்றி சேது
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10508
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 6 Feb 2014 - 9:21

அவரவர் கதை
--------------------------

சோபாவில் உட்கார்ந்து நொறுக்குத் தீனி கொறித்தபடி தொலைக்காட்சி நெடுந்தொடரை இரசித்துக் கொண்டு இருந்த அவளது கவனத்தை கைப்பிடித்து அழைத்துக் கொண்டுபோய் தண்ணீர் சலசலத்தோடும் எங்கள் ஊர் ஏரி மதகுமேல் உட்கார வைத்தேன். 

செழுமையாய் நீர்ப்பாய்ந்து அடர் பசும் விரிப்பாய் விளைந்த நெற்பயிர்கள் காற்றில் அலை அலையாய் எழுவதும் தாழ்வதுமாய் கண்களுக்குக் குளிர்மையாய் இருந்தது. வயலிலிருந்து விசுக்கென்று எழுந்து வெண் சிறகை விரித்து தென்னந்தோப்புப் பக்கமாய் பறந்துபோய் மறைந்தது கொக்கு ஒன்று.

அந்த சில்லிப்பான சூழல் என் இளம்பருவத்து காதல் கதையைக் கிளரிவிட சொல்லத் துவங்கினேன் அவளுக்கு. கதை கேட்கும் ஆர்வம் மிகுந்துபோய் இன்னும் நெருக்கமாய் நகர்ந்து அமர்ந்துகொண்டாள், என் தோல்மேல் தலையை சாய்த்தவாறு.

ஒரு நாள் இப்படித்தான் அவளது காமம் கிளர்த்தும் நடைகண்டு சுகிக்கவும் இதழ்க்கடையோரம் நழுவி ஒழுகும் புன்முறுவலில் கிறங்கவும் நெடுநேரமாய் இம்மதகுமீது காத்துக்கிடந்தேன் என்று கதையை சொல்லத் துவங்கினேன்.

தொலைக்காட்சி நெடுந்தொடரின் பரபரப்பான காட்சியை அனிச்சையாய் சோபாவின் முனைக்கு நகர்ந்து அமர்ந்துகொண்டு இரசிப்பவள்போல கதையைக் கேட்கலானாள்.

கதை இப்போது முதன் முதலாய் நான் அவளுக்கு சோளக்கொல்லையில் வைத்து இரகசிய முத்தம் கொடுத்த கட்டத்தை அடைந்தது.

கதை அபாரம், விறுவிறுப்பாய் நகர்கிறது, தொடருங்கள் என்றாள்.

கதை இப்போது காட்டுச் செடியின் மறைவில் அவளை நான் புணர்ந்த அத்தியாயத்தை அடைந்திருந்தது.

கதை முடிந்தபோது நான் சோபாவின் முனையில் அமர்ந்திருக்க அவள் உட்கார்ந்திருந்தாள் ஏரி மதகுமேல்.

- வெ.வெங்கடாசலம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10508
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறு கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum