சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

அம்பானியை அலற வைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் கடிதம்!

Go down

Sticky அம்பானியை அலற வைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் கடிதம்!

Post by Muthumohamed on Sun 23 Feb 2014 - 9:58ஊடகங்கள் சரியான செய்தியை தருகிறதா?
--------------------------------------
அம்பானியை அலற வைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் கடிதம்!

ரியலைன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியை விசாரனை கூண்டில் நிறுத்தி முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய திறந்த மடல் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் அதிகாரத்திலும்.அதிகாரத்தின் பல துறைகளிலும் எரிவாயு விலை உயர்விலும் முகேஷ் அம்பானியும் அவரின் நிறுவனமும் சேர்ந்து நடத்தும் தில்லுமுல்லுகளை பச்சையாக விசாரனை செய்கிறார் கெஜ்ரிவால்.
ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் வெளியிட்டிருக்கும் கடித்தத்தின் முழு விபரம்....

பிரியமுள்ள முகேஷ் அம்பானிக்கு,

தாங்கள் சில தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக மான நஷ்டத்திற்கான வக்கீல் நோட்டீஸ் அணுப்பியுள்ளீர்கள் அல்லவா..
நானும் பிரசாந்த் பூசனும் இணைந்து 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதியும் நவம்பர் 9ம் தேதியும் செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்தினோம் என்பதா அவர்கள் செய்த தவறு?
எரிவாயு விலை உயர்விற்காக அரசின் மேல் தாங்கள் செலுத்தி வரும் முறையற்ற அழுத்ததினை குறித்து அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நாங்கள் நாட்டு மக்களுக்கு தெரிவித்தோம்.
தாங்களுக்கும் தாங்களின் நிறுவனத்திற்க்கும்,தாங்களுடைய நெருக்கமானவர்களுக்கும் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை குறித்து நாட்டு மக்களுக்கு நாங்கள் எடுத்துரைத்தோம்.
பல தொலைகாட்சி நிறுவனங்கள் அதனை நேரிடையாக மக்களுக்கு ஒளிப்பரப்பியது.
இந்த தொலைகாட்சி நிறுவனங்களுக்கே தாங்கள் மான நஷ்டத்திற்கான வக்கீல் நோட்டிஸை அணுப்பி இருக்கிறீர்கள்.
நானும்,பிரசாந்த் பூசனும் தாங்களை அவமானம்படுத்தினோம் என்று எண்ணுகீறீர்களா..?
இல்லை...நீங்கள் தான் உண்மையான குற்றவாளி என்று நான் சொல்லுகிறேன்.
உங்களுக்கு நீங்களே ஒரு மான நஷ்டத்திற்கான வக்கீல் நோட்டீஸ் அணுப்பிக்கொள்ளுங்கள்.
ஊடகங்களை உங்களின் பாத சேவை செய்பவர்களாக மாற்றி எடுக்க வேண்டும் என்பதற்கான ஓர் அத்தாட்சியே தாங்களின் இந்த நடவடிக்கைகள்.

இந்த நிலையில் இந்திய திருநாட்டிலே வசிக்கும் குடிமக்கள் தாங்களோடு சில கேள்விகளை கேட்க விரும்புகிறார்கள்
இந்திய அரசுக்கு கிடைத்திருக்கும் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலில் தாங்களுடைய பேரும் இடம் பெற்றிருப்பது உண்மை தான் என்று எண்ணுகிறீர்களா?
தாங்கள்,தாங்களின் உறவினர்கள், தாங்களுக்கு நெருக்கமானவர்கள்,நண்பர்களின் பெயர்கள்?

தாஙளின் பேரில் 100 கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் இருந்தது உண்மை தானே?
சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியல் வெளிவந்த போது தாங்கள் அந்த பணத்திற்க்கு வரி செலுத்தி விட்டீர்கள் என்பதற்க்கு ஆதாரங்கள் ஏதும் இருக்கிறதா?

மேலே குறிப்பிட்ட விடயங்கள் உண்மை என்று தாங்கள் ஒப்புக்கொண்டால் இந்திய சட்டங்கள் அறிவுறுத்தும் தண்டனைக்கு தாங்கள் சிறையில் இருக்க வேண்டி வரும் அல்லவா?
ஆனால் ஒருபோதும் உங்களுக்கு எதிராக எவரும் வழக்கு தொடுக்க போவதில்லை காரணம் நீங்கள் இந்தியாவின் ஆட்சி அதிகார மையத்தை அச்சுறுத்தி வைத்திருக்கிறீர்கள்.

சில பத்திரிக்கை செய்தியாளர்கள் சொல்லுகிறார்கள்..
சோனியா காந்தி அவ்வவ்போது உங்களுடைய தனியார் விமானத்தில் பயணிக்கிறார்கள்,ஜெய்பால் ரெட்டியின் நிர்வாக துறை கூட தாங்களின் ஆதிக்கத்தால் மாற்ற இயலுகிறது என்று..
காங்கிரஸை மட்டும் குற்றம் சொல்லுவது எப்படி?பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் உங்களின் பாக்கெட்டில் அல்லவா இருக்கிறார்கள்?

அத்வானி அவ்வப்போது சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கருப்பு பணத்தினை குறித்து கேள்வியை உயர்த்திக் கொண்டிருந்தார்.
ஆனால் தாங்களுடைய பெயர் வெளிவந்தபிறகு உங்களுடைய சுவிஸ் வங்கி கணக்குகளை குறித்து ஒருவார்த்தை போலும் பாஜக நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை
அரசியல் கட்சிகள்,அரசியல் கட்சி தலைவர்கள் உங்களுக்கு பயப்படுகிறார்கள் என்பதன் அர்த்தம் அல்லவா இது?
ஆனால் இந்திய மக்களுக்கு உங்களை எண்ணி பயப்பட வேண்டிய அவசியமில்லை.
காரணம் நம்முடைய நாடு விற்பனைக்கு உள்ளதல்ல.
தாங்களுக்கு அரசியல் கட்சிகளையும்,அரசியல் கட்சி தலைவர்களையும் காசு எறிந்து விலைக்கு வாங்க இயலும்.
ஆனால் இம்மண்ணினை விற்க நாங்கள் அணுமதிக்க போவதில்லை.
நான் உயர்த்தும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
தாங்களை நானோ,பிரசாந்த் பூசனோ ஊடகங்களோ அவமானப்படுத்தினோமா?
உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொண்டீர்கள் தானே?

1) 2002இல் ஒரு பங்கிற்க்கு 55 ரூபாய் விலை வரும் ஒரு கோடி பங்குகள் தாங்கள் பாஜக தலைவர் பிரமோத் மஹாஜனுக்கு கொடுத்தீர்கள் அல்லவா?அதுவும் கேவலம் 1 ரூபாய்க்கு?அது பக்காவான லஞ்சம் தானே?
அது குறித்து விமர்சனம் எழுந்த போது மஹாஜனுக்கு கொடுத்த பங்குகளை தாங்கள் திரும்ப பெற்றுகொண்டீர்கள் தானே?
எது எப்படியானாலும் அந்த சம்பவங்களை குறித்து தற்போது நீதிமன்ற விசாரனையில் இருக்கிறது. உண்மையில், நீங்கள் உங்களையே அசிங்கப்படுத்திக் கொண்டீர்கள்

2) தாங்கள் 28 மாடியுள்ள மாளிகை கட்டி உயர்த்தியது ‘வக்ப்’ வாரியத்தின் சொத்தில் அல்லவா?பாவப்பட்ட அநாதை இசுலாமிய சிறுவர்கள் தங்க வேண்டிய இடமல்லவா அது?
அநாதை குழந்தைகளின் இடத்தை தாங்கள் ஆக்ரமித்து உங்களை நீங்களே அசிங்கப்படுத்திகொண்டீர்கள் தானே?

3) 2000ம் ஆண்டு சில கியாஸ் கிணறுகள் உங்களுக்கு தந்தது அதிலிருந்து கியாஸ் எடுத்து நாட்டிற்க்கு தருவதற்காக தானே?அது நாட்டிற்க்கு சொந்தமானதல்லவா?தாங்கள் வெறும் ஒரு குத்தகைக்காரர் மட்டுமே...ஆனால் தற்போது அந்த கியாஸ் கிணறுகள் உங்களுக்கு சொந்தம்.இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காங்கிரஸ் கட்சி உங்களுடைய பாக்கெட்டில்.
உங்களுடைய அழுத்தம் காரணமாக காங்கிரஸ் கியாஸ் விலையை உயர்த்தியது.
உங்களால் உப்பு முதல் கர்பூரம் வரையுள்ள பொருட்களுக்கு விலை உயர்ந்தது.
சகிக்க முடியாமல் பெட்ரோலியத்துறை அமைச்சர் கேள்வியை உயர்த்திய போது அவரை அந்த பதவியில் இருந்து நீங்கள் மாற்றினீர்கள்.
உங்களால் நாட்டில் உள்ள அனைத்து பொருட்களின் விலை ஏறியது.
பெரும்பாலான வியாபாரிகளுக்கு நேர்மையாக வியாபாரம் செய்ய வேண்டும் என்பதே ஆசை.ஆனால் அதற்க்கு சந்தர்ப்பங்கள் ஒத்துவருவதில்லை.. இது உங்களுக்கு அவமானமாக தோன்றவில்லையா?உங்களை குறித்து உங்களுக்கே அவமானமாக தோன்றவில்லையா?
பழைய காலம் எல்லாம் மாறிவிட்டது...
மக்கள் விழிப்படைந்து விட்டார்கள்...
உங்கள் மேல் அச்சம் கொண்டு உங்களுக்கு ஆதரவாக இருந்த ஊடகங்கள் எல்லாம் தங்களை திருத்தி கொண்டு விட்டன. தற்போது அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்க்காக தங்களின் பங்களிப்பினை மேற்கொண்டு வருகிறார்கள்.

நீங்கள்,நாட்டில் உள்ள சில ஊடகங்களில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ முதலீடு செய்திருக்கலாம்.
ஆனால் நடுநிலையான நேர்மையான பத்திரிக்கையாளர்களை விலைக்கெடுக்கலாம் என்று நினைக்க வேண்டாம்.

என்ன உங்களின் கனவு?
உலகின் முதல் பணக்காரன் ஆகவேண்டும் என்றா?
இப்படி ஏமாற்றி பிழைத்து காசு உண்டாக்கி பணக்காரன் ஆகினால் உங்கள் மனதிற்க்கு சமாதானம் கிடைக்குமா?
பணம் குவிய குவிய மனதிற்க்கு சமாதானம் ஒரு போதும் கிடைக்காது,தியாகங்களின் மூலமே மனம் சமாதானம் அடையும்.
மக்களை ஏமாற்றுவதை நிறுத்தி மக்களிடமிருந்து ஏமாற்றி எடுத்த காசுகளை நாட்டின் முன்னேற்றத்திற்க்கு செலவழித்தால்...
இந்த நாடு என்றும் உங்களை நினைத்து பார்க்கும்.

மதிப்புடன்
அரவிந்த் கெஜ்ரிவால்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அம்பானியை அலற வைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் கடிதம்!

Post by ahmad78 on Tue 25 Feb 2014 - 11:13

நாட்டில் இன்னும் பல பணக்காரர்கள் அடுத்தவர்களை ஏமாற்றித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இப்படி வாழ்வதற்கு வீடு வீடாக பிச்சையெடுத்து சாப்பிடலாம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அம்பானியை அலற வைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் கடிதம்!

Post by ராகவா on Wed 26 Feb 2014 - 5:44

ahmad78 wrote:நாட்டில் இன்னும் பல பணக்காரர்கள் அடுத்தவர்களை ஏமாற்றித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இப்படி வாழ்வதற்கு வீடு வீடாக பிச்சையெடுத்து சாப்பிடலாம்avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அம்பானியை அலற வைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் கடிதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum