சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

அடுத்த 12 மணிநேரத்தில் தாம் கொல்லப் படப் போகிறோம் என்று அறியாதவர்கள்

Go down

Sticky அடுத்த 12 மணிநேரத்தில் தாம் கொல்லப் படப் போகிறோம் என்று அறியாதவர்கள்

Post by ராகவா on Sat 22 Mar 2014 - 11:40


இந்தப் படத்தில் இருப்பவர்கள் அனைவருமே அடுத்த 12 மணிநேரத்தில் தாம் கொல்லப் படப் போகிறோம் என்று அறியாதவர்கள். ஒரு கொடிய பயணத்தின் இறுதியில் , கிடைத்த சற்றே சிறிய இடைவெளியில், வாழ்வு குறித்த நம்பிக்கையை மீண்டும் சிறிது தண்ணீராலும், சிறிது காற்றாலும், கிடைத்த சில ரொட்டித் துண்டுகளாலும் உறுதி செய்து கொண்டவர்கள்.

இந்தப் புகைப் படத்தையும் இதில் உள்ள சிறுவனையும் நிறைய முறை நீங்கள் இணையத்தில் அல்லது வேறு ஏதேனும் புத்தகங்களில் கடந்து வந்திருக்கலாம். இந்தப் புகைப் படத்தின் பின்னால் உள்ள துயரம் தோய்ந்த வரலாற்றைப் பார்க்கும் முன்னர், ஒரு தகவல்.

இன்றைய நாளானது நம் மனித குல வரலாற்றில் இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜெர்மனியில் 1933 ஆம் ஆண்டு ஜனவரி 30 இல் தான் , நாசிக் கட்சி ஆட்சியில் அமர்ந்து ஹிட்லர் அந்த நாட்டின் சர்வாதிகாரி ஆனார். அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளில் உலக மக்கள் என்றுமே மறக்க முடியாத , மனிதகுலமே வெட்கித் தலை குனியும் அளவுக்கான அக்கிரமங்களைச் செய்தான் ஹிட்லர்.

தான் சர்வாதிகாரப் பொறுப்பில் அமர்ந்த கணம் முதலே , நாசிக் கட்சியின் செயல் திட்டத்தின் படி , இனச் சுத்திகரிப்பு, இனத் தூய்மை வாதம் ஆகிய கொள்கைகளை முன்னெடுத்து ஜெர்மனியின் யூதர்களை ஒடுக்க ஆரம்பித்த நாசிக்கள், அரசாங்க வேலைகளில் இருந்து யூதர்களை வெளியேற்றி, சட்டம், மருத்துவம் மற்றும் காவல்துறைப் பணிகளில் யூதர்கள் இடம் பெற தடை விதித்தது. யூதர்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன. நாட்டை விட்டு யூதர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று பகிரங்க மிரட்டல்கள் விடப் பட்டன.

பணக்கார யூதர்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப் பட்டன, அவர்களின் மிகப் பெரிய வணிக நிறுவனங்கள் கொளுத்தப் பட்டன. வசதியும் வாய்ப்பும் இருந்தவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு தப்பி ஓடினார்கள். குடும்பம் குடும்பமாக உலகின் பல்வேறு நாடுகளில் சென்று தஞ்சம் அடைந்தார்கள்.

இருந்தும் மிக உக்கிரமாக , இதை முன்னெடுக்க வேண்டும் என நினைத்த ஹிட்லரின் நாசிக் கட்சி , யூதர்களை முழுக்க கொன்று அழிப்பதே இனச் சுத்திகரிப்புக்கான சிறந்த வழி என்று முடிவு செய்தது. ஆஸ்விஸ் என்ற இனச் சுத்திகரிப்பு மையத்தை நிறுவியது.

ஜெர்மனியின் யூதர்கள் மட்டுமல்ல, ஓரினச் சேர்க்கையாளர்கள், பாலியல் தொழிலாளிகள், இதர இனத்தவர்கள் , ஜெர்மனி வெற்றி கொண்ட நாடுகளின் போர் வீரர்கள் அனைவருக்கும் இந்த வதை முகாம்கள் தான் கடைசி உறைவிடம்.

ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் இருந்த யூதர்களை சுற்றி வளைத்து குடும்பம் குடும்பமாக அவர்களை ரயில்களில் மூச்சு முட்ட அடைத்து , ஆச்விச்ச் என்ற அந்த கொடிய முகாமுக்கு கொண்டு சென்றனர் நாசிக்கள். ஹங்கேரி , போலந்து போன்ற நாடுகளில் இருந்தும் யூதர்கள் இங்கு கொண்டு வரப் பட்டனர்.

ரயிலில் இந்த முகாமுக்கு முன்பு இறங்கும் அனைவரும் வரிசையாக நிற்க வைக்கப் பட்டு, அவர்களின் வயது, உடல் நிலை கொண்டு பிரிக்கப் பட்டனர்.

முதியவர்கள், பெண்கள் , குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோரைத் தவிர்த்த எதிரிகளையே தாக்க வேண்டும் என்பது நம் மரபு. ஆனால் மனிதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாசிக்கள், பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளை, ரயிலில் இருந்து இறங்கியவுடன் தனியே பிரித்து அழைத்துச் சென்று விஷவாயு செலுத்தி கொன்று அழித்தனர். உங்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கிறோம் என்று பொய் சொல்லி, முகாம்களுக்குள் அனுப்பப் பட்டு , கதவு அடைக்கப் படும். மிகக் கொடிய சையனைட் வகையைச் சேர்ந்த விஷவாயு செலுத்தப் பட்டு இருபது நிமிட கால அவகாசத்தில் அனைவரும் கொல்லப் பட்டனர். மரணக் கூக்குரல்களும், வலியின் கொடூரமான கதறல்களும் அந்த பலமான சுவர்களைத் தாண்டியும் கேட்ட வண்ணம் இருந்ததால், அதைக் மறைக்க இரண்டு பெரும் டீசல் எந்திரங்கள் சதா காலமும் பெரும் இரைச்சலோடு ஓடிக் கொண்டிருந்தன.

தாயைப் பிரிந்த மகன், மனைவியைப் பிரிந்த கணவன், பெற்றோரைப் பிரிந்த குழந்தைகள் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கிலும் தனித்தனியாக மரணத்தைச் சந்தித்தார்கள். எந்தவொரு சாட்சியும் இன்றி, எந்த ஒரு ஆதரவுக் குரலும் இன்றி . எரிக்கப் பட்ட அவர்களின் சடலங்களின் சாம்பல் அங்கு ஓடிக் கொண்டிருந்த பெயரில்லாத நதியின் ஏதோ ஒரு கரையில் கரைக்கப் பட்டுக் கொண்டே இருந்தது.

சிறிது உடல் வலு இருந்தவர்கள் மிகக் கடுமையான உடல் உழைப்பைக் கொடுக்க வேண்டி இருந்தது. அதிகபட்சமாக அவர்களும் நான்குமாதம் வரை உயிர் வாழ முடிந்தது.அவ்வளவே. இந்தக் கொடுமைகள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்க அத்தனை வேலைகளையும் செய்த நாசிக்கலலின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, பிரிடிஷ் உளவுத் துறை வெளி உலகுக்கு இதைக் கொண்டு வந்த போது, மனசாட்சியுள்ள அத்தனை மனிதர்களும் நொறுங்கிப் போனார்கள்.

தான் தோல்வியில் விளிம்பில் இருக்கிறோம் என்று தெரிந்து கொண்ட ஜெர்மானியர்கள், இந்த முகாம்களில் உள்ள அத்தனை ஆதாரங்கள், பதிவேடுகள், மரணக் கொட்டகை அனைத்தையும் சுவடில்லாமல் அழித்து விட்ட பின்னும், அங்கு என்றோ மரித்துப் போன யூதர்கள் , எழுதி எழுதி புதைத்துவிட்டுப் போன ஆதாரங்கள் தான் ஒவ்வொரு பக்கமாக தினமும் மேலெழுந்து வந்து இந்த துயர வரலாறை தானே எழுதிக் கொண்டது.

ஜனவரியில் ஆரம்பித்த இந்த கொடுமை மீண்டும் பல ஆண்டுகள் கழித்து , சோவியத்தின் செம்படை வந்து மிச்சம் மீதி இருந்த கைதிகளை விடுவித்த நிகழ்வும் ஜனவரியிலேயே நிகழ்ந்தது.

இங்கே நாம் அரசியலாக யோசிக்க எத்தனையோ இருப்பினும், இந்த துயர வரலாற்றை எந்த இடத்தில இருந்து அணுக முடியும் என்று ஆயிரம் விவாதங்களை எடுத்து வைக்க சாத்தியங்கள் இருப்பினும், எதைப் பற்றியும் இல்லாமல், வாழ்வு கட்டாயமாகப் பிடுங்கப் பட்ட அந்த யூதர்களையும், அவர்களோடு கொன்றழிக்கப் பட்ட ஏனைய அப்பாவிகளையும் நினைத்துக் கொள்கிறேன்.

நமக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது , குறைந்தபட்சம் , அடையாளமற்று மரித்துப் போகும் முன்னர், சக மனிதர்கள் மீது அன்பைக் காண்பிக்கவும், உறவுகளின் தவறை மன்னித்து விடவும் , பசிக்கு சிறிது சோறிடவும், தாகத்துக்கு சிறிது நீர்வார்க்கவும் கொஞ்சம் நாட்கள் இருக்கிறது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum