சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Today at 18:48

» மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்
by சே.குமார் Yesterday at 17:17

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by பானுஷபானா Yesterday at 12:35

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

.

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

Sticky ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed 26 Mar 2014 - 16:41

First topic message reminder :

ஹைக்கூ இலக்கணம்

‘ஹை’  என்பதற்கு  ஜப்பானிய  அடிச்  சொல்லுக்கு  அணுத்தூசி,  கரு,  முழுமையான  கரு  என்ற  பொருள்  உண்டு.  ‘கூ’  என்பது  சொற்றொடர்,  வெளிப்பாடு,  வாக்கியம்,  பகுதி,  ஒரு  வரி,  ஓர்  அடி,  ஒரு  செய்யுள்,  ஒரு  கவிதை  என்றும்  பொருள்  தருகிறது.

இவற்றை  இணைத்துப்  பார்க்கையில்  ஹைக்கூ  என்பது  கரு  போன்றும்,  உயிரணு  போன்றும்  உருவானதொரு  கவிதை  என்னும்  முழுப்பொருளைத்  தரும்.  மேலும்  வளர்ச்சிக்கும்  விரிவுக்கும்,  ஒரு  கருவுக்கு  உள்ளிருக்கும்  இன்னொரு  கவிதைக்  கருவைக்  காண்பதற்கும்  ஹைக்கூ  என்ற  சொல்  சிறப்பாக  அமைந்திருப்பதைக்  காணலாம்.

‘ஹைக்கூ’  ஜப்பானிய  மொழிக் கவிதை.  3  அடிகள்  கொண்டது. மூன்று  அடிகள்  கொண்ட  ஜப்பானிய  ஹைக்கூ  ஐந்து,  ஏழு,  ஐந்து  சீர்களைக்  கொண்டு  17  சீர்களில்  ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு  இந்த  சீர்  எண்ணிக்கை  தேவையில்லை). ஜென்  தத்துவத்தோடு  இயற்கை  மற்றும்  மெய்யியலோடு  தொடர்பு  கொண்டது. கவித்துவம்  கொண்டது.  இந்தியாவின்  (தமிழ்நாடு  உள்பட)  சூழலுக்கு  ஜப்பானிய  ஹைக்கூவின்  உள்ளடக்கக்  கோட்பாடு  பொருந்தி  வராது  என்ற  போதிலும்  எப்படியோ  இந்தியாவில்  (தமிழ்நாடு  உள்பட)  ஓர்  இலக்கிய  வடிவமாக  /  கவிதையாக   இடம்  பிடித்துவிட்டது.  பெரும்பான்மையாக  தமிழ்நாட்டு ஹைக்கூ  3  அடிகள்  கொண்டு  எழுதப்படுகிறது.  அவ்வாறு  3  அடிகள்  கொண்டு  எழுதப்படுவதை  தமிழ்  அறிஞர்களால்  ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு    ‘ஹைக்கூ’  வடிவமாகவும்  அங்கீகரித்துள்ளார்கள்.  

இந்தியாவின்  (தமிழ்நாடு  உள்பட)  சூழலுக்கு  ஜப்பானிய  ஹைக்கூவின்  உள்ளடக்கக்  கோட்பாடு  பொருந்தி  வராது  என்ற  போதிலும்  தமிழ்  ‘ஹைக்கூ’ இயற்கை, மெய்யியல்  மற்றும்  கவித்துவம், குறியீடு,  படிமம்,  தொன்மம்  ஆகியவற்றையும்  அவற்றின்  வகைகளையும்  கருத்துச்  செறிவையும் கொண்டதாக  இருப்பது  சிறப்பு.  இன்று  எழுதப்படுவதெல்லாம்  ‘புதுக்கவிதை’  என்பது  போல  ‘ஹைக்கூ’  பற்றிய  சரியான  புரிதல்  இல்லாமல்  3  அடிகள்கொண்டு  எழுதப்படுவது  எல்லாம்  ‘ஹைக்கூ’  என்பதால்  ஹைக்கூவின்  உள்ளடக்கம்  தாழ்ந்துபோய்  உள்ளது.   ஜப்பானிய  ஹைக்கூவின்  தமிழ்  மொழிபெயர்ப்பை  தவிர்த்து  விட்டால்  1974ல்  கவிக்கோ  அப்துல்  ரகுமான்  தமிழில்  முதன்முதலாக  ஹைக்கூ  படைத்துள்ளார்.  இன்று  பல  ஆயிரம்  பேர்  தமிழில்  ஹைக்கூ  எழுதி  வருகிறார்கள்.  தமிழில் ‘ஹைக்கூ’விற்கென்றே  சில  தனி  சிற்றிதழ்கள்  வெளிவந்து  கொண்டுள்ளன.

இன்றைய  ஹைக்கூக்  கவிஞர்கள்  பெரும்பான்மையினர்  தங்களை  ஹைக்கூக்  கவிஞர்கள்  என்று  கூறிக்  கொள்ள  வேண்டும்  அல்லது  தொடர்ந்து  ¨ஹைக்கூவிற்குள்  இயங்கிக்  கொண்டிருப்பதாகக்  காட்டிக்  கொள்ள  வேண்டும்  என்ற  தன்முனைப்புக்காகச்  சென்ரியு  வகைக்  கவிதைகளை  நிறைய  படைத்து  அதனை  ஹைக்கூ  என்று  பெயரிட்டு  வெளியிட்டு  வருகிறார்கள்  என்பது  உண்மை.  இதன்  காரணமாகச்  சென்ரியு  என்ற  ஒரு  வடிவம்  இருப்பதை  அவர்களால்  வெளிக்காட்டாமல்  இருட்டடிப்பும்  செய்யப்படுகிறது.  இந்த  நிலை  இன்னும்  ஓராண்டுவரை  நீடித்தால்  கூட  சென்ரியு  கவிதைகள்  தான்  தமிழின்  ஹைக்கூக்  கவிதைகள்  என்று  வாசகர்கள்  மனத்தில்  பதிந்துபோய்விடும்.  

ஜப்பானிய  மொழியில்  இன்னும் - இன்றும்  ஹைக்கூ,  ஹைக்கூவாகவேதான்  இருக்கிறது.  ஹைக்கூவை எழுத முடியாதவர்கள் சென்ரியு வகையை நாடிச் சென்றுவிடுகிறார்கள். ஹைக்கூவின்  பிறிதோரு  வகையான  நகைச்சுவை,  வேடிக்கை,  சமூக  கேலி  கிண்டல்களை  உள்ளடக்கமாகக்  கொண்டதுதான்  சென்ரியு.  

இந்தியாவில்  குறிப்பாகத்  தமிழ்நாட்டில்  ஹைக்கூ  கவிஞர்கள்  என்று  குறிப்பிட்டுக்  கொள்ளும்  பலரும்  தங்களை  முன்னிலைப்படுத்திக்  கொள்ளவேண்டும்.  ஆயிரக்கணக்கான  ஹைக்கூக்கள்  படைத்துள்ளதாகக்  காட்டிக்கொள்ளவேண்டும்  என்ற  போலியான  /  தன்முனைப்பால்(Ego) சென்ரியு  வகை  கவிதைகளைப்  படைத்து  ஹைக்கூ  என்ற  தலைப்பில்  கவிதைத்  தொகுதியாக  வெளியிட்டுக்  கொண்டிருக்கிறார்கள்.  ஹைக்கூவின்  உள்ளடக்கம்  வேறு.  சென்ரியுவின்  உள்ளடக்கம்  வேறு  என்று  ஹைக்கூ  பற்றி  அவர்களுக்குத்  தெரிந்திருந்தும்,  உண்மையான  ஹைக்கூவை  எழுத  (நிறைய  எழுத)  முடியாதக்  காரணத்தால்  சென்ரியு  வகைக்  கவிதைகளை  எழுதிக்  குவித்துவிட்டு  ஹைக்கூ  என்று  சொல்லிக்  கொள்கிறார்கள்.  தவறான  வழிகாட்டியாவும்  திகழ்ந்து  கொண்டிருக்கிறார்கள்.  

தமிழ்நாட்டில்  ஒருவர்  எழுதிய  ஹைக்கூக்  கவிதைகளின்  எண்ணிக்கையைக்  கணக்கிட்டுதான்  ‘ஹைக்கூக்  கவிஞர்’  என்று  அழைக்கின்றனர்  அல்லது   பட்டம்  கொடுக்கப்படுகிறது.  இது  தவறு.  ஒருவர்   ஓரிரு  ஹைக்கூவைச்  சிறப்பாகப்  படைத்தாலும்  அவர்  ஹைக்கூக்  கவிஞர்தான்  என்று  ஏற்றுக்  கொள்ளும்  ஜப்பானியர்களின்  மனநிலை  தமிழ்நாட்டிலும்  பரவலாக்கப்பட  வேண்டும்.

ஹைக்கூ  மரபுகள்

1.  ஹைக்கூ மூன்று  வரியாக  இருக்க  வேண்டும். (ஒரு  வாக்கியத்தையே  பிரித்து  மூன்று  அடியாக்கி  ஹைக்கூ  எழுதக்  கூடாது.  ஹைக்கூவில்  ஒவ்வொரு  அடியும்  ஒரு  வாக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.)
2.  ஹைக்கூவுக்குத்  தலைப்பிட்டு  எழுதக்  கூடாது.  ஒரு  ஹைக்கூவிற்கு  இரண்டுக்கு  மேற்பட்ட  அல்லது  குறைந்த  பட்சம்  இரண்டு  உட்கருத்தாவது  (குறியீடு  போல;  உட்பொருள்)  இருக்க  வேண்டும். (ஹைக்கூவுக்குத்  தலைப்பிடக்கூடாது  என்பதற்கானக்  காரணம்  இதுதான்.  தலைப்பைத்  தாண்டிச்  சிந்திப்பதைத்  தடை  செய்கிறது.  ஒரு  ஹைக்கூவின்  உட்பொருள் (குறியீடு போல்)  விரிந்து செல்வதாக  இருக்க  வேண்டும்.  தமிழ்நாட்டு ஹைக்கூக்கள்  பெரும்பான்மையும்  ஒற்றைப்  பரிமாணத்தில்தான்  வருகின்றன.  ஒரு  உண்மையான  ஹைக்கூ  குறைந்தபட்சம்  இரண்டு  உட்பொருளையாவதுத்  தாங்கி  இருப்பது  சிறப்பு.)

கவிக்கோ  அப்துல்  ரகுமான்  கூற்று:
ஹைக்கூவில்  நாம்  கடைபிடிக்க  வேண்டிய  மூன்று  முக்கிய  மரபுகள்  உண்டு.
1.ஹைக்கூவில்  முதல்  அடி  ஒரு  கூறு.  ஈற்றடி  ஒரு  கூறு. ஹைக்கூவின்  அழகும்  ஆற்றலும்  ஈற்றடியில்தான்  உள்ளது.  ஈற்றடி  ஒரு  திடீர்  வெளிப்பாட்டை,  உணர்வு  அதிர்ச்சியை  ஏற்படுத்தி  முழுக்  கவிதையையும்  வெளிச்சப்படுத்த  வேண்டும்.
2.மற்றொரு  மரபு  ஹைக்கூவின்  மொழி  அமைப்பு.  ஹைக்கூவின்  மொழி  ஊழல்  சதையற்ற  மொழி.  தந்தி  மொழியைப்  போல்,  அவசியமற்ற  இணைப்புச்  சொற்களை  விட்டு  விட  வேண்டும். (ஹைக்கூ  எளிய  சொற்கள்  கொண்டும்  குறைந்த  வார்த்தைகளைக்  கொண்டும்  இருப்பது  சிறப்பு.  படைப்பாளர்  எல்லாவற்றையும்  விவரித்துக்கொண்டு  இருக்கக்கூடாது.  விவரிப்பது  வசனம்  அல்லது  புதுக்கவிதையின்  வேலை.)
3.உயிர்  நாடியான  ஈற்றடியில்  ஆற்றல்  மிக்க  வெளிப்பாட்டிற்காகப்  பெயர்ச்  சொல்லையே  பயன்படுத்த  வேண்டும்.

மேற்கண்டவற்றை  ஹைக்கூப்  படைப்பாளர்கள்  கடைபிடிக்க  வேண்டும்.  ஏனென்றால்  ஹைக்கூவின்  அடையாளமும்,  அழகும்,  ஆற்றலும்  இவற்றில்தான்  இருக்கின்றன.

ஹைக்கூ  வாசிப்பு  முறை
ஹைக்கூவை  முறையாக  எப்படி  வாசிக்க  வேண்டும்  என்ற  புரிதல்  ஹைக்கூ  எழுதுபவர்களுக்குக்  கூட  தெரியாமல்  இருப்பது  வினோதமானது.  3  அடிகள்  கொண்ட ஹைக்கூவை  முதல்  இரண்டு  அடிகளை  தொடர்ந்து  படித்து  நிறுத்த  வேண்டும்(மூன்றாவது  அடியைப்  படிக்கக்  கூடாது).  மீண்டும்  முதல்  இரண்டு  அடிகளை  படித்து  நிறுத்தி  மூன்றாவது  அடியைப்  படிக்க  வேண்டும்.  அப்படிப்  படிக்கும்  போது  அந்த  இறுதி  அடி  எதிர்பாராதத்  திருப்பம்  கொண்டதாக  இருக்க  வேண்டும்.  இப்போது ஹைக்கூ  எழுதுபவர்கள்  இந்த  எளிமையான  முறையை  மட்டுமே  கடைபிடித்தால்  கூட  அவர்கள்  எழுதும் ஹைக்கூவை  மேலும்  சிறப்பாகப்  படைக்க  முடியும்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu 27 Mar 2014 - 18:09; edited 2 times in total
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down


Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha on Mon 12 May 2014 - 14:29

பகிர்வுக்கு நன்றி கவியரசு சார்.

நிச்சயம் சிந்திக்கின்றேன். நிரம்ப கற்கின்றேன்.. தொடர்ந்த கற்பித்தலுக்கு நன்றி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue 13 May 2014 - 15:20

மகிழ்ச்சி தோழமையே!
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed 21 May 2014 - 5:33

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 11


தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
 
கிராமத்தில் இருப்பவர்கள் மேற்கண்ட நிகழ்வை பார்த்திருக்கலாம். நான் பார்த்திருக்கிறேன்.  இப்போது நான் கிராமத்தில் இல்லை. கிராமத்து நினைவுகள் இருக்கிறதுகிராமத்திற்கும்  அவ்வவப்போது சென்று வருகிறேன். நண்பர்களோடு குளக்கரையில் அமர்ந்து பேசுவது இன்றும் தொடர்கிறது.
 
அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் ஒரு நாள் தண்ணீர் பாம்பு கரையில் இருப்பதைக் கண்டு நண்பன் கல்லை எடுத்து பாம்பை அடிக்க முனைந்தான். நண்பர்கள் தடுத்தி நிறுத்தி பாம்பு எங்கே போகிறது என்று பார்க்கலாம் என கூறினோம். பாம்பு கரையிலேயே இருந்தது. அப்போது தவளை ஒன்று கரையை நோக்கி வந்தது ஒரு துணி துவைக்கும் கல்லின் அருகில் எட்டிப்பார்த்தது.
 
இதைக்கண்ட தண்ணீர் பாம்பு இரைக்காக அதனை கவ்வ நினைத்திருக்கலாம். நண்பனோ எதேச்சையாகக் கையில் வைத்திருந்த கல்லை குளத்தில் எறிந்தான். அப்போது பாம்பும் குதித்தது. தவளையும் நீரில் மூழ்கிப்போனது. பாம்பிடமிருந்து தப்பித்தது தவளை. அந்த நிகழ்வை இன்று ஹைக்கூவாக மாற்றியிருக்கிறேன்.
 
உணவுச் சங்கிலியின் விதிப்படி பாம்பு தவளையை உணவாக உட்கொள்வது தவிர்க்கமுடியாதது. அதைத் தடுக்க என் நண்பன் கல் எரிந்திருந்தான் என்றால் பாம்புக்கான உணவை நாங்கள் தந்திருக்க முடியாது. தடுத்திருந்தால் மனித நேயம் ஆகியிருக்குமே தவளையை காப்பாற்றியிருக்கலாமே என்று நீங்கள் நினைத்தால் அது சென்ரியூ கவிதையாகிவிடும். நண்பன் கல் எறிந்தது எதேச்சையானது அதை கவிதைக்குள் கொண்டு வந்துதான் கீழே உள்ளவாறு ஹைக்கூவை எழுதினேன்.
 
தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
எறிந்த கல்
 
எறிந்த கல் – ஹைக்கூவுக்குள் சரியாகப் பொருந்தவில்லை. பின்னர் திருத்திய வடிவம்தான் இது.
 
தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
 
மேலே உள்ளதை இன்னும் திருத்த வேண்டும் சுருக்க வேண்டும். எப்படி என்று பார்ப்போம்.
நண்பன் கல் எரிந்தால் அது சென்ரியூ என்று குறிப்பிட்டேன். ஆனால் அந்த கவிதையை சென்ரியூவாக்க விரும்பவில்லை. ஹைக்கூவாக எழுத முனைய துணிந்தேன். இப்படி:
அதே நிகழ்வு அதே பாம்பு அதே தவளை நண்பனை மாற்றிவிட்டேன். குளத்தின் கரையில் பல செடிகள், மரங்கள் இருக்கும். அதிலிருந்து ஏதேனும் ஒன்று கல்லுக்குப் பதிலாக விழுவதாக மாற்றிவிட்டேன். இலை, காய், பழம் இந்த வரிசையில் அலரிப் பூ என்று எழுதினேன்.
 
தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
 
இரண்டாவது, மூன்றாவது அடியில் குளம் என்ற சொல் இடம்பெறுகிறது. எனவே இதைச் சுருக்க வேண்டும்.
 
தவளையைக் கவ்வ
தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
 
என்று சுருக்கிவிட்டேன். அலரிப்பூவை தேர்ந்தெடுத்ததில் சிக்கல் இருப்பதாக நினைத்தேன். அதில் என்ன சிக்கல் என்கிறீர்களா? இருக்கிறது. அலரிப்பூ இறைவனுக்குச் சூட பயன்படுத்துவார்கள். சரி அந்தப் பூ உதிர்வது இறைவனே பாம்பிடமிருந்து தவளையைக் காப்பாற்றிவிட்டான் என்று உயர்வாக நீங்கள் எண்ணலாம். ஆனால், அது எனக்குப் பிடிக்கவில்லை. இறைவன் தானே உலக உயிர்களைப் படைத்து எது எது எதை எதை உண்ணலாம் என்றும் குறித்திருப்பான். அதனால் மாற்ற நினைத்தேன்.
 
மேலும், அலரிப்பூ என்பது எப்போதாவது ஒரு முறைதான் விழும். அதனாலும், அதை மாற்ற நினைத்தேன். ஆலம்பழம் என்று மாற்றலாம் என்று எண்ணினேன். ஆமாம் ஆலம்பழம் சிறப்பாகப் பொருந்தி வருகிறது. எப்படிப் பொருந்துகிறது என்று நீங்களே பாருங்களேன்.
 
அலரிப்பூ குளத்தில் விழுந்தால் ஒரு முறைதான் பாம்பிடமிருந்து தவளையைக் காப்பாற்ற முடியும். அடிக்கடிக் காப்பது யார்? ஆலம் மரத்தில் பழம் பழுத்தால் அதை உண்ண பல பறவைகள் வரும். அதனால் பழம் அடிக்கடி கீழே விழும். அதனால் அடிக்கடி தவளை பாம்பிடமிருந்து தப்பிக்க வழி இருக்கிறது. இப்போது ஹைக்கூ, ஹைக்கூவாக இருக்கிறது. இப்படி:
 
தவளையைக் கவ்வ
தயாராய் பாம்பு
குளத்தில் விழும் ஆலம்பழம்
 

எல்லாம் சரிஒரு ஹைக்கூ எழுதும்போது இத எல்லாத்தையுமா பாத்து எழுதுவாங்க சிந்திப்பாங்க. சரிபாவம் அந்தத் தவளைக்கு உணவு கொடுப்பது யார்? சிந்தியுங்கள் நீங்களும் ஹைக்கூ எழுதலாம். எழுதுங்கள்என் ஆசையும் நீங்கள் எழுத வேண்டும் என்பதுதான்… (அடுத்த வாரம் இதே எங்க ஊர் குளத்தொடும் தவளையோடும் ஆனால் பாம்பு தவளையை உண்ணும்படி ஒரு ஹைக்கூவோடு ஹைக்கூ எழுதலாம் வாங்க தொடரில் சந்திக்கிறேன். அடுத்த வாரத்துக்கு இப்பவே எழுதி வைச்சுட்டேன்!)
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha on Wed 21 May 2014 - 7:47

தவளையைக் கவ்வ
தயாராய் பாம்பு
குளத்தில் விழும் ஆலம்பழம்
 
வித்தியாசமன சிந்தனை தான்!  நன்றாக இருக்கிறது சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed 21 May 2014 - 11:22

மகிழ்ச்சி...
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 21 May 2014 - 21:35

பணத்தின் குதூகலத்தில் 
சிந்துகிறது அன்னம் 
ஏழையின் வாழ்க்கை 
 


காகிதங்கள் வெள்ளை 
எழுதாத கவிதைகள் 
மகிழ்கிறது முதுமை


இது நான் முயற்சித்தது 
திருத்தம் எதிர்பார்க்கிறேன் 
இதுநாள் வரை நான் ஹைக்கூவை முயற்சித்ததில்லை உங்கள் இந்த பதிவை பார்த்த பின்னர் தொடரும் ஆசை மேலெழுந்துள்ளது முதலில் உங்களுக்கு அளவு கடந்த நன்றிகள் 

தாமதித்த பதிலுக்கு மன்னிக்கவும் உங்களின் பதிவினை படித்து கற்றிருந்தேன் தொடரும் வாய்ப்பு குறைந்ததால் இன்று முனைந்து தொடர்ந்தேன் 

மிகவும் வரவேற்கத்தக்க ஒரு பதிவு அற்புதமான விளக்கவுரை ஆரம்ப ஆசையுடையவர்களும் கற்றிடும் அளவு அவசியமான அறிவுரைகள்  
தொடருங்கள் 

நிசா அவர்கள் கற்றுக்கொண்டார்கள் என்பது அவர்களது கவிதைகளில் தெரிகிறது பாராட்டுகள்


Last edited by நேசமுடன் ஹாசிம் on Wed 21 May 2014 - 22:37; edited 2 times in total




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 21 May 2014 - 21:58

காய்த்த மரமொன்று 
காய்ந்து கிடக்கிறது 
இறப்பு 


கழிவுகளின் கோர்வையில் 
சாலை மறியல் 
சுயநலச் சந்தை


Last edited by நேசமுடன் ஹாசிம் on Wed 21 May 2014 - 22:33; edited 1 time in total




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 21 May 2014 - 22:17

கவிஞரின் தொடருடன் ஒத்த எனது முயற்சி 


பாம்பின் குரலில் 
தவளையால் கரகரப்பு 
ஊசலாடியது உயிர் 



வீசிய நாக்குடன் 
சி்க்கிய வெட்டுக்கிளி 
நிரம்பியது வயிறு




குறிப்பு : அனைத்திற்கும் திருத்தம் எதிர்பார்க்கிறேன் என்னை நான் திருத்திக்கொள்ள




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu 22 May 2014 - 9:59

நேசமுடன் ஹாசிம் wrote:காய்த்த மரமொன்று 
காய்ந்து கிடக்கிறது 
இறப்பு 


கழிவுகளின் கோர்வையில் 
சாலை மறியல் 
சுயநலச் சந்தை
முதல் ஹைக்கூவின் திருத்தம்

1,2 அடியில் காய்ந்த, காய்ந்து என்று வருவதைத் தவிர்க்க வேண்டும்.
காய்ந்த மரம் காய்ந்து கிடப்பதில் ஒன்றும் அதியம் இல்லை. 3 அடி சூப்பர். அதிலும் கொஞ்சம் மாற்றம் தேவை.

திருத்திய வடிவம் இது

பச்சை மரமொன்று
காய்ந்து கிடக்கிறது
மரணம்

இப்போது படித்துப் பாருங்கள். பச்சை மரம் ஏன் வெட்டப்பட்டது? ஏன் காய்ந்து கிடக்கிறது? வெட்டியவர்கள் யார்? கடைசியில் மரணம் என்று இருப்பதைக் கவனியுங்கள். யாரோ இறந்து விட்டதனால் அந்த உடலை எரிக்க மரம்- பச்சை மரம் வெட்டப்பட்டு உள்ளது என்று பொருளில் ஹைக்கூ சிறப்புப் பெறுவதைக் காணலாம்.

இரண்டாவது கவிதையில் திருத்தம் தேவையில்லை. அது ஹைக்கூ அல்ல சென்ரியூ வகைமையில் சேரும்.

எப்போது திருத்தம் தேவையென்றாலும் நான் செய்யத் தயார். நான் திருத்துவதால் நீங்கள் அதிகம் கவலைப்படக்கூடாது என்பதே என் எதிர்பார்ப்பு.

தொடருங்கள்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu 22 May 2014 - 10:05

நேசமுடன் ஹாசிம் wrote:கவிஞரின் தொடருடன் ஒத்த எனது முயற்சி 

பாம்பின் குரலில் 
தவளையால் கரகரப்பு 
ஊசலாடியது உயிர் 

வீசிய நாக்குடன் 
சி்க்கிய வெட்டுக்கிளி 
நிரம்பியது வயிறு

குறிப்பு : அனைத்திற்கும் திருத்தம் எதிர்பார்க்கிறேன் என்னை நான் திருத்திக்கொள்ள

முதல் ஹைக்கூ நன்றாக இருக்கிறது. எந்த உயிர் பாம்பா - தவளையா? ஊசலாடியது என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

இரண்டாவது ஹைக்கூக்கும் மாற்றம் தேவையில்லை.

பாராட்டுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by பாயிஸ் on Thu 22 May 2014 - 10:20

நானும் முயற்சித்துப் பார்க்கிறேன் 

ஏழைகளின் வாழ்வில் 
ஒரு நாள் கொண்டாட்டம்
கிள்ளுக்கீரை

மனித உள்ளங்கள் 
ஊணமாகிக்கிடக்கிறது
கோயில்கள் மூடியநிலை 
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu 22 May 2014 - 10:31

பாயிஸ் wrote:நானும் முயற்சித்துப் பார்க்கிறேன் 

ஏழைகளின் வாழ்வில் 
ஒரு நாள் கொண்டாட்டம்
கிள்ளுக்கீரை

மனித உள்ளங்கள் 
ஊணமாகிக்கிடக்கிறது
கோயில்கள் மூடியநிலை 
முயற்சிக்குப் பாராட்டுகள்... திருத்தங்கள் சொல்லலாம் தானே?
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by பாயிஸ் on Thu 22 May 2014 - 10:38

கவியருவி ம. ரமேஷ் wrote:
பாயிஸ் wrote:நானும் முயற்சித்துப் பார்க்கிறேன் 

ஏழைகளின் வாழ்வில் 
ஒரு நாள் கொண்டாட்டம்
கிள்ளுக்கீரை

மனித உள்ளங்கள் 
ஊணமாகிக்கிடக்கிறது
கோயில்கள் மூடியநிலை 
முயற்சிக்குப் பாராட்டுகள்... திருத்தங்கள் சொல்லலாம் தானே?
கண்டிப்பாக அதைத்தானே எதிர்பார்க்கிறேன்
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu 22 May 2014 - 10:49

பாயிஸ் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
பாயிஸ் wrote:நானும் முயற்சித்துப் பார்க்கிறேன் 

ஏழைகளின் வாழ்வில் 
ஒரு நாள் கொண்டாட்டம்
கிள்ளுக்கீரை

மனித உள்ளங்கள் 
ஊணமாகிக்கிடக்கிறது
கோயில்கள் மூடியநிலை 
முயற்சிக்குப் பாராட்டுகள்... திருத்தங்கள் சொல்லலாம் தானே?
கண்டிப்பாக அதைத்தானே எதிர்பார்க்கிறேன்

முதல் ஹைக்கூவில் திருத்தம்

கிள்ளுக்கீரை என்பது ஒரு நாள் மட்டும் கிடைப்பது கிடையாது. மழைக்காலம் தொடங்கி கோடை காலம் வரையில் கிடைக்கும்... நானும் சாப்பிட்டுள்ளேன். இப்படி மாற்றலாம்.

ஏழைகளின் வாழ்வில் 
தினம் தினம் கொண்டாட்டம்
கிள்ளுக்கீரை

இப்போது... தினம் தினம் அவர்களுக்கு வாய்ப்பது வகைவகையான காய்கறிகள் இல்லை... கிள்ளுக்கீரை ஒன்றே ஆகும். ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். இதுதான் கிராமத்து வாழ்வியல். 

மனித உள்ளங்கள் 
ஊனமாகிக்கிடக்கிறது
கோயில்கள் மூடியநிலை 
இரண்டாவது கவிதை அழகு பெறுகிறது. எப்படி? மூடிய கோயில் எது? கோயிலா? அல்லது திருமூலர் சொல்வது மாதிரி உடலே கோயிலா?

ம் பாராட்டுகள்... ஆனாலும் உரைநடை போல் உள்ள இந்த ஹைக்கூவை கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும் இப்படி.

மனித உள்ளம்
ஊனமாய்
மூடிய கோயில்

என்று இருந்தால் நன்றாக இருக்கும். இது என் கருத்தே... தங்கள் வேண்டுமானால் இதையே தங்கள் ஹைக்கூவாக எடுத்துக்கொள்ளலாம். - எடுத்துக்கொண்டால் மகிழ்வேன்.

நன்றி
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 22 May 2014 - 10:55

கவியருவி ம. ரமேஷ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:காய்த்த மரமொன்று 
காய்ந்து கிடக்கிறது 
இறப்பு 


கழிவுகளின் கோர்வையில் 
சாலை மறியல் 
சுயநலச் சந்தை
முதல் ஹைக்கூவின் திருத்தம்

1,2 அடியில் காய்ந்த, காய்ந்து என்று வருவதைத் தவிர்க்க வேண்டும்.
காய்ந்த மரம் காய்ந்து கிடப்பதில் ஒன்றும் அதியம் இல்லை. 3 அடி சூப்பர். அதிலும் கொஞ்சம் மாற்றம் தேவை.

திருத்திய வடிவம் இது

பச்சை மரமொன்று
காய்ந்து கிடக்கிறது
மரணம்

இப்போது படித்துப் பாருங்கள். பச்சை மரம் ஏன் வெட்டப்பட்டது? ஏன் காய்ந்து கிடக்கிறது? வெட்டியவர்கள் யார்? கடைசியில் மரணம் என்று இருப்பதைக் கவனியுங்கள். யாரோ இறந்து விட்டதனால் அந்த உடலை எரிக்க மரம்- பச்சை மரம் வெட்டப்பட்டு உள்ளது என்று பொருளில் ஹைக்கூ சிறப்புப் பெறுவதைக் காணலாம்.

இரண்டாவது கவிதையில் திருத்தம் தேவையில்லை. அது ஹைக்கூ அல்ல சென்ரியூ வகைமையில் சேரும்.

எப்போது திருத்தம் தேவையென்றாலும் நான் செய்யத் தயார். நான் திருத்துவதால் நீங்கள் அதிகம் கவலைப்படக்கூடாது என்பதே என் எதிர்பார்ப்பு.

தொடருங்கள்.
அன்பின் சகோ 

எனக்கு எந்த மனக்குறையும் ஏற்படாது கண்டிப்பாக திருத்திக் கொடுங்கள் நானும் ஹைக்கூவுடன் தொடர்வேன் 

நீங்கள் திருத்திய அந்த வரியில் 

காய்ந்த என்று நான் எழுத வில்லை காய்த்த என்றுதான் எழுதியிருந்தேன் 

எனது கரு எதுவாக இருந்ததால் ஒரு விதவையினை சுட்டிக்காட்டியிருந்தேன் 

காய்த்து மகிழ்வோடு இருந்த அதாவது மணமுடித்து சிறப்பாக வாழ்ந்த ஒரு பெண் இப்போது காய்ந்து கிடக்கிறாள் காரணம் அவளது கணவனின் இறப்பு என எடுத்துக்கொண்டேன் அது சரியானதா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu 22 May 2014 - 10:59

ம்... சிறப்பாகவே இருக்கிறது... 

2, 3 கருத்துகள் இருப்பதுதான் ஹைக்கூவின் சிறப்பு... பாராட்டுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by பாயிஸ் on Thu 22 May 2014 - 11:01

கவியருவி ம. ரமேஷ் wrote:
பாயிஸ் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
பாயிஸ் wrote:நானும் முயற்சித்துப் பார்க்கிறேன் 

ஏழைகளின் வாழ்வில் 
ஒரு நாள் கொண்டாட்டம்
கிள்ளுக்கீரை

மனித உள்ளங்கள் 
ஊணமாகிக்கிடக்கிறது
கோயில்கள் மூடியநிலை 
முயற்சிக்குப் பாராட்டுகள்... திருத்தங்கள் சொல்லலாம் தானே?
கண்டிப்பாக அதைத்தானே எதிர்பார்க்கிறேன்

முதல் ஹைக்கூவில் திருத்தம்

கிள்ளுக்கீரை என்பது ஒரு நாள் மட்டும் கிடைப்பது கிடையாது. மழைக்காலம் தொடங்கி கோடை காலம் வரையில் கிடைக்கும்... நானும் சாப்பிட்டுள்ளேன். இப்படி மாற்றலாம்.

ஏழைகளின் வாழ்வில் 
தினம் தினம் கொண்டாட்டம்
கிள்ளுக்கீரை

இப்போது... தினம் தினம் அவர்களுக்கு வாய்ப்பது வகைவகையான காய்கறிகள் இல்லை... கிள்ளுக்கீரை ஒன்றே ஆகும். ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். இதுதான் கிராமத்து வாழ்வியல். 

மனித உள்ளங்கள் 
ஊனமாகிக்கிடக்கிறது
கோயில்கள் மூடியநிலை 
இரண்டாவது கவிதை அழகு பெறுகிறது. எப்படி? மூடிய கோயில் எது? கோயிலா? அல்லது திருமூலர் சொல்வது மாதிரி உடலே கோயிலா?

ம் பாராட்டுகள்... ஆனாலும் உரைநடை போல் உள்ள இந்த ஹைக்கூவை கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும் இப்படி.

மனித உள்ளம்
ஊனமாய்
மூடிய கோயில்

என்று இருந்தால் நன்றாக இருக்கும். இது என் கருத்தே... தங்கள் வேண்டுமானால் இதையே தங்கள் ஹைக்கூவாக எடுத்துக்கொள்ளலாம். - எடுத்துக்கொண்டால் மகிழ்வேன்.

நன்றி
திருத்தப்பட்ட பின் நான் கற்றுக்கொண்டது ஏராளம் தாராளம்  

மனித உள்ளம
ஊனமாய்
மூடிய கோயில்
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 22 May 2014 - 11:04

கவியருவி ம. ரமேஷ் wrote:ம்... சிறப்பாகவே இருக்கிறது... 

2, 3 கருத்துகள் இருப்பதுதான் ஹைக்கூவின் சிறப்பு... பாராட்டுகள்
அப்போ என்னாலும் எழுத முடியுமா ஹைக்கூ......

மிக்க நன்றிகள் சகோ 

தொடர்வோம் தொடருங்கள் 

சென்ரியு பத்தியும் கற்றுத்தாருங்கள் 

புதுக்கவிதைகளை எழுதுகிறோம் அதில் உள்ள வேறுபாடுகள் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் கிடைத்தில்லை உண்மையில் நான் தேடியதும் குறைவு என்னை ஆர்வலராக்கியதற்கு மிக்க நன்றிகள் இப்போது தேடலுடன் லைத்திடச்செய்கிறது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu 22 May 2014 - 18:27

சென்ரியூ இந்தப் பகுதியில் இருப்பதைக் கவனிக்கவும்... கற்கவும்... படைக்கவும்... http://www.chenaitamilulaa.net/t44990-topic
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by நண்பன் on Thu 22 May 2014 - 18:49

நேசமுடன் ஹாசிம் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:ம்... சிறப்பாகவே இருக்கிறது... 

2, 3 கருத்துகள் இருப்பதுதான் ஹைக்கூவின் சிறப்பு... பாராட்டுகள்
அப்போ என்னாலும் எழுத முடியுமா ஹைக்கூ......

மிக்க நன்றிகள் சகோ 

தொடர்வோம் தொடருங்கள் 

சென்ரியு பத்தியும் கற்றுத்தாருங்கள் 

புதுக்கவிதைகளை எழுதுகிறோம் அதில் உள்ள வேறுபாடுகள் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் கிடைத்தில்லை உண்மையில் நான் தேடியதும் குறைவு என்னை ஆர்வலராக்கியதற்கு மிக்க நன்றிகள் இப்போது தேடலுடன் லைத்திடச்செய்கிறது

தலைவா அசத்துங்கள் !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 22 May 2014 - 22:10

கவியருவி ம. ரமேஷ் wrote:சென்ரியூ இந்தப் பகுதியில் இருப்பதைக் கவனிக்கவும்... கற்கவும்... படைக்கவும்... http://www.chenaitamilulaa.net/t44990-topic
மிக்க நன்றி சகோ




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by ந.க.துறைவன் on Fri 23 May 2014 - 13:03

தொடருங்கள் இரமேஷ்...
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed 28 May 2014 - 9:33

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 12

அசையும் இலைகள்
பாம்பு வாயில் தவளை
தாமரையிலிருந்து பறக்கும் வண்டு
 
அசையும் இலைகள் – எதன் காரணமாகவோ இலை அசைந்துள்ளது. ஆனாலும், அது என்ன இலை என்று முதல் வரியில் தெரியவில்லை.
 
பாம்பு வாயில் தவளை – சிக்கிவிட்டதா? ம். சிக்கிவிட்டது சென்ற வாரம் தப்பித்த தவளை. இலை அசையும் போதே ஏதோ வருகிறது – ஆபத்து வருகிறது என்று தண்ணீரில் குதித்து தப்பித்திருக்க வேண்டும். ஆனால் தப்பிக்கவில்லை – தவளைக்கு உணவு உண்ட மயக்கமாகக்கூட இருக்கலாம். எது எப்படியோ சிக்கிவிட்டது.
சரி… ஹைக்கூவில் மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாகவும் அதிர்ச்சியாகவும் முதல் இரண்டு அடியிலிருந்து விலகியும் இருக்க வேண்டும் என்கிறார்களே! – சரி மூன்றாவது அடிக்குத்தான் போய் பார்ப்போம்.
 
தாமரையிலிருந்து பறக்கும் வண்டு – இப்போது தெரிந்துவிடுகிறது – என்ன தெரிகிறது? முதல் அடியில் அசைந்த இலைகள் – தாமரை இலைகள் என்பதும் தாமரை இலையின் மீதுதான் அந்தத் தவளை இருந்திருக்கிறது என்பதும் தாமரையிலிருந்து என்பதால் தெரிகிறது.
 
அப்போது மூன்றாவது அடியில் இருக்கும் “பறக்கும் வண்டு”. ஆமாம். தாமரையில் தேன் எடுத்துக்கொண்டிருந்த வண்டு பாம்பு தவளையை விழுங்கியதால் – தாமரை அசைந்ததால் – பயந்தோ – பயப்படாமலோ பாதியிலேயே பறந்துவிட்டது!
 
ஏன் பாதியில்தான் பறந்திருக்குமா என்ன? தேன் முழுவதையும் அருந்தி விட்டு பறந்து செல்லலாம் என்றுகூட எண்ணி  பறந்திருக்கலாம். அப்போது பாம்பு தவளையை விழுங்கியது எதேச்சையாக நடந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். – நீங்கள் வேறு நினைக்கலாம். அவ்வாறு நினைத்ததை நீங்கள் ஹைக்கூவாக எழுதலாம்.
 
(சரி – சென்ற வாரம் தப்பித்த தவளை இந்த வாரம் சிக்கிக்கொண்டது. இந்த வாரம் பறந்த வண்டு? அடுத்த வாரம் சிக்கிக் கொள்ளுமா என்று எதிர் பார்க்கிறோம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது – ஆளை விடுங்கப்பா! இந்த விளையாட்டுக்கு நான் வரல!!)
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri 6 Jun 2014 - 5:26

பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்
 
இது எல்லாம் ஒரு ஹைக்கூவா? ஆமாம். இது ஹைக்கூ இல்லைதான். எப்படி ஹைக்கூ இல்லை என்று பார்ப்போம்.
 
இயற்கையைப் பாடுவது ஹைக்கூ. மானுடத்தைப் பாடுவது சென்ரியூ (இதுதான் ஹைக்கூ, சென்ரியூவின் சுருங்கிய சுருக்கம்).
 
இதில் மானுடத்தை மனித மனத்தை மனித நேயமின்மையை பகைமையை சுற்றுச் சூழல் சிதைவை அண்ணன் தம்பி உறவு முறிவை (நல்ல வேலை ஒருவரை யொருவர் வெட்டிக்கொள்ள வில்லை ) கிராமத்தில் இயல்பாக நடக்கும் நிகழ்வை மேற்கண்ட கவிதை பாடுவதால் அது சென்ரியூ.
 
மரத்தைக் வெட்டாமல் காத்திருந்தால் அது ஹைக்கூ.
 
வெட்டியதால் அது சென்ரியூ.
 
பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்
 

மேற்கண்ட சென்ரியூவை கொஞ்சம் மாற்றினால்  ஹைக்கூவாக மாறிவிடும். சரிஎங்கே நீங்கள் ஒரு ஹைக்கூ அல்லது சென்ரியூ எழுதுங்களேன். (வரும் வாரம் வெட்டப்பட்ட மரம் வளர்கிறதா என்று பார்ப்போம் என் கவிதையில் மரம் வளர்கிறது மீண்டும் வெட்டவும் படுகிறது ஹைக்கூவாகவும் மாறியிருக்கிறது.)
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu 12 Jun 2014 - 5:03

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 14


ஹைக்கூ எழுதலாம் வாங்க – 13 ல்
 
பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்
 
என்று எழுதி அது சென்ரியூ என்று சொல்லியிருந்தேன். மேற்கண்ட சென்ரியூவை கொஞ்சம் மாற்றினால்  ஹைக்கூவாக மாறிவிடும் என்று சொல்லியிருந்தேன். வெட்டப்பட்ட மரம் வளர்கிறதா என்று பார்ப்போம் என்றும் கூறியிருந்தேன். கீழ்க்கண்ட ஹைக்கூவில் மரங்கள்  வெட்டப்படுகிறது. திரும்பவும் வளர்கிறது மீண்டும் மீண்டும் வெட்டவும்படுகிறது ஹைக்கூவாகவும் மாறியிருக்கிறது இப்படி:
 
துளிர்க்கும் மரம்
மீண்டும் வெட்டப்படுகிறது
சேடையில் மக்கும் தளைகள்
 

மேற்கண்ட ஹைக்கூவில் இரண்டாம் அடியில் “மீண்டும் மீண்டும் வெட்டப்படுகிறது” என்று எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரே ஒரு மீண்டும் மட்டும் வந்தால் இரண்டாவது அடி அதிக நீளமாக இல்லாமல் இருக்கும் என்று கைவிடப்பட்டது. அவ்வாறு கைவிடப்பட்டதால் ஹைக்கூவின் பொருள் சிதைந்துபோகவும் இல்லை. (சேடை என்பது – உழவு செய்த நிலம். நிலத்தில் – பல வகையான செடி அல்லது மரங்களில் சிறுசிறு கிளைகளை வெட்டி அதை மீண்டும் சிறு சிறு துண்டுகளாக்கி நிலத்தில் போடுவார்கள். அது மக்கி இயற்கை உரமாகப் பயன்படும். வேலூர் மாவட்டத்தில் சேடை என்பார்கள். மாவட்டத்திற்கு மாவட்டம் இந்த சொல் மாறுபடும் என்று நினைக்கிறேன். உங்கள் மாவட்டத்தில் சேடை எவ்வாறு கூறப்படுகிறது என்று கூறுங்களேன்.)
avatar
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum