சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..

Go down

Sticky கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..

Post by ந.க.துறைவன் on Sat 29 Mar 2014 - 7:33

மரியாதை {புதுக்கவிதை}
*
மரியாதைத் தெரிந்தவர்கள்
மரியாதையோடு
நடந்துக் கொள்கிறார்கள்
மரியாதைத் தெரியாதவர்கள்
மமதையோடு கர்வமாக இறுமாந்து
இருக்கிறார்கள் எப்பொழுதும்,
மரியாதை கௌரவத்தைக்
கொடுக்கும், மரியாதை யின்மை
அவமானத்தைக் கொடுக்கும்.
நேர்மறையாய் நடக்கும் எவரும்
மரியாதையை எதிர்நோக்கி
வாழ்வதில்லை. இங்கு என்னை
எவரும் மரியாதையாக நடத்துவதில்லை
என்று தேவையின்றி புலம்புகிறார்கள்
பலரும்,
மமதையோ மரியாதை யின்மைக்கு
எதிரி.
மனிதாபமானமோ
மரியாதைக்குரிய பண்பு… நட்பு…!!
*
கவிஞர்களே…!
இக்கவிதையை இன்னும் எப்படி 
எழுதலாம் என்று உங்கள் கற்பனை
வளத்தைக் காட்டி நீங்களும் கவிதை
எழுதுங்களேன்..!

 
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..

Post by Nisha on Sat 29 Mar 2014 - 8:14

எழுதலாமே!

இதே  வார்த்தைகள் வரணுமா!  கரு வந்தால் போதுமா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..

Post by ந.க.துறைவன் on Sat 29 Mar 2014 - 10:08

உங்கள் விரும்பம் போல எழுதுங்க நிஷா...
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..

Post by Nisha on Sat 29 Mar 2014 - 10:31


இயலபாலே எல்லோரும்
இனிமையான  மனிதர்களே!
அன்பெனும் மந்திரத்தை
பண்போடு  பயன் படுத்தி
நானறியேன் எதையுமே
எல்லாமே நீயறிவாய்
என்றொரு வார்த்தை சொல்லி
உனை  நீ தாழ்த்திட்டால்
அன்பிற்கோர் எல்லையில்லை
பண்பிக குய்வே இல்லை

அன்புக்கும்,உண்மைக்கும்
அடங்காதோர்  இவ்வுலகில்
யாருமில்லை எனப்தை  நீ
யுணர்ந்தால்எல்லாமே வசமாகும்.
வானம் கூட  உன்வசமே!
நீ தேடும் புகழென்ன
மகிமை கூட  உனைசுற்றும்!
 
மனதை மறைத்த மமதையோடு
நான் எனும்  அகம்பாவமும்
நாடாளாச் செய்யாது!
நாடு போற்ற வாழ்த்தாது!
தான் தோன்றித்தனத்தோடு
நான் எனும்  செருக்கோடு
வான் செல்வேன் என்றவர்கள்
தான் சென்ற வழி கேளீர்!
எல்லோரும்மனிதர்களே..நீ
கொடுப்பதையே நீ பெறுவாய்..
இருப்பதுதான்  உனை சேரும்.
மானிடனே நீ உணர்வாய்
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..

Post by ராகவா on Sun 30 Mar 2014 - 6:16

நிஷா அக்கா வாழ்த்துக்கள்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..

Post by Nisha on Mon 31 Mar 2014 - 7:29

ந.க.துறைவன் wrote:மரியாதை {புதுக்கவிதை}
*
மரியாதைத் தெரிந்தவர்கள்
மரியாதையோடு
நடந்துக் கொள்கிறார்கள்
மரியாதைத் தெரியாதவர்கள்
மமதையோடு கர்வமாக இறுமாந்து
இருக்கிறார்கள் எப்பொழுதும்,
மரியாதை கௌரவத்தைக்
கொடுக்கும், மரியாதை யின்மை
அவமானத்தைக் கொடுக்கும்.
நேர்மறையாய் நடக்கும் எவரும்
மரியாதையை எதிர்நோக்கி
வாழ்வதில்லை. இங்கு என்னை
எவரும் மரியாதையாக நடத்துவதில்லை
என்று தேவையின்றி புலம்புகிறார்கள்
பலரும்,
மமதையோ மரியாதை யின்மைக்கு
எதிரி.
மனிதாபமானமோ
மரியாதைக்குரிய பண்பு… நட்பு…!!
*
கவிஞர்களே…!
இக்கவிதையை இன்னும் எப்படி 
எழுதலாம் என்று உங்கள் கற்பனை
வளத்தைக் காட்டி நீங்களும் கவிதை
எழுதுங்களேன்..!

 

மதிக்கத்தெரிந்தவர்கள்,
மரியாதையாய்  நடந்து
நம் மதிப்பையும் தன்
மதிப்பையும் உயர்த்தி
கொள்கின்றார்கள்!

மமதை மனம் கொண்டவரோ
இறுமாப்பாய் நடந்து
மரியாதை தெரியாமல்
மனம் போல் நடந்து
கௌரவத்தை
இழக்கிறார்கள்!

நாம் கொடுக்கும் மரியாதை
நமக்கே வரும்  கௌரவமாய்!
கனம் தரும் மதிப்பு
புரியாதோராய்
மரியாதையை  காலடியில்
இட்டு நசுக்கின்றார்கள்!

யாரும் என்னை மதிப்பதில்லை!
என்னால் ஏதும் பயனுமில்லை
புலம்பி மனம்  தடுமாறி
தம் மரியாதையை தாம் கெடுத்து
மதிப்பும,கனமும்தானாய் வருவதில்லை
நாமாய் பெறுவதென உணராதிருக்கின்றார்கள்!

மமதையை நாம் ஒழித்து
மற்றையோரை  நாம் மதித்து
நட்போடு  நாம் நடந்தால்
மதிப்பெணும்  ப்ண்பு
நம்மோடு நிலைத்திருக்கும்!
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..

Post by rammalar on Mon 31 Mar 2014 - 8:20


-
மரியாதை
மனதில் இருந்தால் மட்டும் போதாது
செயலிலும் காண்பிக்க வேண்டும்..!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..

Post by ந.க.துறைவன் on Mon 31 Mar 2014 - 8:28

பாராட்டுக்கு நன்றி ராம்மலர்...
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..

Post by Nisha on Tue 1 Apr 2014 - 19:41

துறைவன் சார்..

நான் எழுதியதில் தவறிருந்தால்  தளை தட்டி.. தலை தட்டி  திருத்துங்கள்!  கவனிக்காமல் போனால் எப்படியாம்!

முதலில் எழுதியது  கொஞ்சம் அவசரத்தில்  உங்கள் பதிவு கண்டு ஐந்தே  நிமிடத்தில் மனதில்வந்ததை தட்டச்சினேன்!

அதனால் தான் உங்கள்  கருத்திலிருந்து  விலகி போனது.

இரண்டாவது சரியா..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..

Post by கவிப்புயல் இனியவன் on Wed 2 Apr 2014 - 4:39

மரியாதையுடன் வாழ்பவன் 
மரித்த பின்னரும் 
மரியாதையுடன் 
வாழ்கிறான் ....!!!

மரியாதை தெரியாததவன் 
வாழும் போதே 
நொடிக்கு நொடி 
மரினித்து கொண்டிருக்கிறான்....
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..

Post by Nisha on Wed 2 Apr 2014 - 9:11

கே.இனியவன் wrote:மரியாதையுடன் வாழ்பவன் 
மரித்த பின்னரும் 
மரியாதையுடன் 
வாழ்கிறான் ....!!!

மரியாதை தெரியாததவன் 
வாழும் போதே 
நொடிக்கு நொடி 
மரணித்து கொண்டிருக்கிறான்....

  நன்று இனியவன்!  மரியாதையுடன் வாழ்ந்தால் மரணத்ததின் பின்னும் நாம் பலர் மனதில்  அழியாது வாழ்வோம்  என்பதை அழகாக சொன்னதுக்கு )(
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum