சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Sticky மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar on Tue 25 Mar 2014 - 16:37

First topic message reminder :

பொறாமை
-

-
பொறாமையாக இருந்தது
அவள் மீது
பட்டுத் தெறித்த
மழைத் துளியைப்

பார்த்து..!
-
-------------------------
>அ.குணசேகரன் (குடும்ப மலர்)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down


Sticky லாவகம்..

Post by rammalar on Thu 3 Apr 2014 - 17:29


-
மெல்லிய
காற்றிற்கும்
உதிர்ந்து விடுகின்றன
வேப்பம் பூக்கள்
-
கிளைகளை அசைக்காமல்
பூக்களும் உதிராமல்
மரமேறும் லாவகம்
கற்றறியவேண்டும்
-
நத்தைகளைப்
பின் தொடர்ந்தேனும்----------------------------------
>மு.முருகேஷ்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky கூச்சம்

Post by rammalar on Thu 3 Apr 2014 - 17:31


-
அவசரமாய்
கதவைத் தள்ளி
உள் நுழைகையில்
ஜாக்கெட்டோ, புடவையோ
மாற்றிக் கொண்டிருக்கும்
அம்மா, அக்காவைப்
பார்த்து விட்டால்
பதற்றமாகி
கூசிப் போகிற மனசு
-
நின்று ரசிக்கிறது -
ஆடைகளற்ற
நடிகையின் சுவரொட்டியை
நடுரோட்டில் நின்று.

-
-----------------------

>மு.முருகேஷ்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky மினிபஸ் காலம்

Post by rammalar on Thu 3 Apr 2014 - 17:31


-

'ரொம்பத்தான்
ஊரு கெட்டுப் போச்சு
-
ஏதாச்சும் ஒண்ணுன்னா
ஒடனே தூக்கிக்க்கிட்டு
டவுனுக்கு ஓடிடறானுங்க

-
முன்னெல்லாம்
கோவிலுக்கு கொண்டாந்து
கற்பூரங் கொளுத்தி
தட்டுல ஒண்ணே கால் ரூவா
தட்சணைப் போட்டு
விபூதி
 பூசிக்கினு போவாங்கெ
-
ம்...ம்ஹூம்..
இப்பத்தான்
கலிகாலம் முத்திப் போச்சே...''

-
தனக்குள்ளேயே
மெல்ல முணுமுணுத்துக் கொள்கிறார்
கோவில பூசாரி.
-

-----------------------------------

>மு.முருகேஷ்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky அடடே..!

Post by rammalar on Fri 4 Apr 2014 - 7:46


-

அழகான பொய்
கவிதை..!
மிக மிக

அழகான பொய்
காதல் கவிதை..!
-
-----------------------
>செ.அ.ராகுல்
நன்றி: குடும்ப மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky கேள்வி

Post by rammalar on Fri 4 Apr 2014 - 7:47


-
-
பெண்ணே!
உன்னையே மையமாக வைத்து
என் வாழ்க்கை
இருக்க வேண்டும் என
விரும்புகிறாய்
என் உணர்வுகளை எரித்து
என்னை இயந்திரப்படுத்துகிறாய்
உடலை எரிப்பதற்கு பெயர் சதி
என்றால் இதற்கு பெயர் என்ன?
-
-----------------------------
>போ வீனஸ் மனோஜ்
நன்றி: குடும்ப மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky மாற்றம்..

Post by rammalar on Fri 4 Apr 2014 - 7:48


-
பயிரின் வாழ்விடம்
உயிரின் வாழிடமானது
விவசாய நிலத்தில்
குடியிருப்பு
-
---------------------------
>ஈ.கார்த்திகேயன்
நன்றி: குடும்ப மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky முரண் ...

Post by rammalar on Fri 4 Apr 2014 - 7:49


-
ஆற்றில் தண்ணீர் ஓடியது
அந்தக் காலம்
ஆற்றில் மணல் லாரிகள்
ஓடுவது இந்தக் காலம்..!

-
______________________
>தென்கரை சி.சங்கர்
நன்றி: குடும்ப மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky பாவம்...

Post by rammalar on Fri 4 Apr 2014 - 7:50


-
யானை கட்டி போர் அடித்த
விவசாயி
இன்று
மலிவு விலை அரிசி
இலவச அரிசி வாங்க
ரேசன்கடை வரிசையில்
-
------------------------

>அ.குணசேகரன்
நன்றி: குடும்ப மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by பானுஷபானா on Fri 4 Apr 2014 - 15:17

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky தவளை குதித்தது ,நீரின் ஒலி...

Post by rammalar on Fri 4 Apr 2014 - 16:03உறங்கவேயில்லை


நிலத்தை விற்ற அந்த இரவில்

தவளைகளின் அழைப்பு
-
-ஹொகுஷி
-
-------------------------------பழைய குளம்

தவளை குதித்தது

நீரின் ஒலி
-
-பாஷோ
-
---------------------------------
-

ஒலி வரையும் காட்சி

பாம்பின் வாய்க்குள்

போகும் தவளை
-
--அறிவுமதி
--------------------------
-

அடைமழை

நச்சரிக்கும் தவளைகள்

குளம் விழுங்கிப்போகும் வெள்ளம்

-
--------------------------------
(படித்ததில் பிடித்தது)
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky நினைவில் நீ..

Post by rammalar on Fri 4 Apr 2014 - 19:05


விடிய விடிய மழை
மனம் வலிக்கப் பூக்கள்
தவளைகளின் பாடல்
-
-------------------------------
-
காத்திருந்து
அலுத்து காதுக்கு
தவளை சப்தங்கள் மட்டும்

-
-------------------------------
-
மழையைப் பாராட்டி
புதரிலிருந்து
தவளைகளின் பாடல்
-
--------------------------------
-
பட்டணத்தில் மழை
எதிர்பார்த்து ஏமாந்தேன்
தவளைகளின் பாடல்
-

------------------------------
-
சீனர் உணவகம்
மூடிய வாளிக்குள்
எட்டிப்பார்க்கும் தவளைகள்
-
---------------------------------
-
கொட்டும் மழை
கத்தும் தவளை
நினைவில் நீ...

-
-----------------------------

(படித்ததில் பிடித்தது)
 
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky பிரிதல் என்பது நரகமடி

Post by rammalar on Sat 5 Apr 2014 - 8:05

-
விலகி இருவர் தனித்து இருக்க
எத்தனை யெத்தனை துயரமடி
விழிகள் வெறிக்க வாழ்க்கை கசக்க
மனதில் எல்லாம் வெறுமையடி
-
உலகின் அழகு, ரசனை, கவிதை
எல்லாம் மாயை ஆனதடி
உள்ளம் ஒன்றிய காதலர் எவர்க்கும்
பிரிதல் என்பது நரகமடி

-
எந்தன் அருகே நீயும் இருந்தால்
எல்லாம் இங்கே இன்பமடி
என்றும் எனது கவிதைச் சிறகுகள்
உன்னை நினைத்தே விரியுமடி
-
எரியும் தீயை அணைக்கும் நதியே
விரைந்து நானும் வந்திடுவேன்
எந்தன் நிலைதான் உனக்கும் அங்கே
என்னை முழுதாய் தந்திடுவேன்
-

-----------------------------------

>ஜா.சம்பத்
கவிதை அலைகள்...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky குறிக்கோள்

Post by rammalar on Sat 5 Apr 2014 - 8:06-
பூக்கள் மலருமுன்னே
செடிகள் இளைக்காது
கனிகள் தோன்றுமுன்னே
மரங்களும் களைக்காது?
-
நோக்கம் ஜெயிக்கும் வரை - மனம்
ஓய்வை நாடாது
தேக்குமர நெஞ்சங்கள்
சோக கீதம் பாடாது

-
மண்ணுக்குள் நுழைந்திடத் தயங்கி
மரத்தடி வேர்களும் பயந்தால்
விண்ணுக்கு விளையாடச் செல்லும்
வியத்தகு மரங்களும் ஏது?

-
------------------------------
>ஜா.சம்பத்
கவிதை அலைகள்...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky காதல் என்பது...

Post by rammalar on Sat 5 Apr 2014 - 8:07-
இதயத்தை மென்மையாக்கும்...
வார்த்தையைத் தன்மையாக்கும்
ஆன்மாவைப் பண்படுத்தும்
ஓர் நீடித்த
பரவச உணர்வ
-

------------------------------

>ஜா.சம்பத்
கவிதை அலைகள்...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky கவிதை என்பது... -

Post by rammalar on Sat 5 Apr 2014 - 8:08-
சொல்லும் பொருளும்
சுவையாய் அமைந்து
உள்ளம் வருடும்
உணர்வை ஊட்டித்
தெள்ளிய அறிவு
இதமாய் வளர்க்கும்
எல்லாப் படைப்பும்
-

------------------------
>ஜா.சம்பத்
கவிதை அலைகள்...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky - மொழியா ! வாழ்வா ?

Post by rammalar on Sat 5 Apr 2014 - 8:09-
பசித்திருக்கும் வேளையிலே
மயங்கிக் கிடக்கும் நிலைதனிலே
மலர்களின் வாசம்
பரப்புகிறாய்
வாசனை உடலுக்கு நல்லதுதான்
-
ஆனால்
பசியைப் போக்கிடுமா..?
-

------------------

>ஜா.சம்பத்
கவிதை அலைகள்...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by பானுஷபானா on Sat 5 Apr 2014 - 14:23

அனைத்தும் அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by பானுஷபானா on Sat 5 Apr 2014 - 14:32

சூப்பர் சூப்பர் 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by பானுஷபானா on Sat 5 Apr 2014 - 15:26

சூப்பர் சூப்பர் சூப்பர் 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky விநோத ஏக்கங்கள்

Post by rammalar on Sat 5 Apr 2014 - 19:16


-
எப்படி வளர்கிறது நீளமாய்!
வித விதமான ஸ்டைல்களில்
சுருள் சுருளாக...
வளைவுகளாக...
வளைவு நெளிவுகளாக...
நேராக!
சீராக!
-
எத்தனை விதமாய்
மாற்றிக் கொள்கிறார்கள்
அடடா
எப்படியெல்லாம்
வெட்டி வீணாக்குகிறார்கள்?
ஹூம்...!
-

வளரும் என்ற நம்பிக்கையுண்டு
வளர்ந்து கொண்டும் இருக்கிறது
அதிகமானதை வெட்டுகிறார்கள்
அலட்சியமாய் ஒதுக்குகிறார்கள்
ஏன்...
முற்றிலும் மழிக்கவும் செய்கிறார்கள்
இளமையின் ஆட்சி

-
நமக்கோ...
வளர வாய்ப்பில்லை
வளர என்ன...
இனி வரவே வாய்ப்பில்லை
வழுக்கை வழுக்கை தானே!

-
----------------------------------
>ஜா.சம்பத்
கவிதை அலைகள்...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky எப்போது?

Post by rammalar on Sat 5 Apr 2014 - 19:21வெறும் வார்த்தை திருக்குறளாவது எப்போது?
சிறு கால்வாய் பெருங்கடலாவதும் எப்போது?
வெறுங்குடையும் வெண்கொற்றமாவது எப்போது?
கரகர சப்தம் சங்கீதமாவது எப்போது?
-
கட்டுமரம் கப்பலாவது எப்போது?
காட்டுச் செடி பெரும் தேக்கு ஆவதும் எப்போது?

சிட்டுக்குருவி வல்லூறு ஆவதும் எப்போது?

சிறு கல் தூணும் அரண்மனையாவது எப்போது?
-
எல்லைத் தெய்வம் திருப்பதியாவது எப்போது?
தில்லை நகரும் தில்லியாவது எப்போது?
பள்ளிக்கூடம் பல்கலையாவது எப்போது? - /
முல்லைக்கொடி பிருந்தாவனமாவது எப்போது?

-
---------------------------------------------------
->ஜா.சம்பத்
கவிதை அலைகள்...


avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky நினைவில் நீ... -

Post by rammalar on Sun 6 Apr 2014 - 10:13


விடிய விடிய மழை
மனம் வலிக்கப் பூக்கள்
தவளைகளின் பாடல்
-
-------------------------------
-
காத்திருந்து
அலுத்து காதுக்கு
தவளை சப்தங்கள் மட்டும்

-
-------------------------------
-
மழையைப் பாராட்டி
புதரிலிருந்து
தவளைகளின் பாடல்
-
--------------------------------
-
பட்டணத்தில் மழை
எதிர்பார்த்து ஏமாந்தேன்
தவளைகளின் பாடல்
-
------------------------------

-
சீனர் உணவகம்
மூடிய வாளிக்குள்
எட்டிப்பார்க்கும் தவளைகள்
-
---------------------------------
-
கொட்டும் மழை
கத்தும் தவளை
நினைவில் நீ...
-

-----------------------------

(படித்ததில் பிடித்தது)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..)

Post by rammalar on Tue 8 Apr 2014 - 14:15

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar on Tue 8 Apr 2014 - 14:21

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by பானுஷபானா on Tue 8 Apr 2014 - 14:24

அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum