சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி

View previous topic View next topic Go down

Sticky சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 1 May 2014 - 14:41


சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது பிளாட்பாரத்தில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவுஹாத்தி-பெங்களூரு விரைவு ரயில் 9-வது நடைமேடைக்கு வந்த போது இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலின் எஸ்3 மற்றும் எஸ்5 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் இரு குண்டுகள் வெடித்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த 10 பேரும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் 2 ரயில் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவவும் தெரிகிறது.

ஒருவர் பலி:

சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குண்டூரைச் சேர்ந்த சுவாதி என்ற  பெண் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

தீவிரவாதிகள் சதியா?

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளி ஜாகீர் உசேன் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டுவெடித்துள்ளது. 

அறிக்கை அளிக்க உத்தரவு:

சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 


இழப்பீடு அறிவிப்பு:

குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயமடைந்ததோருக்கு ரூ.25,000, லேசான காயமடைந்தோருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ராதெரிவித்தார். குண்டுவெடிப்பு தொடர்பாக தொலைபேசியில் ரயில்வே அமைச்சர் விசாரித்ததாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். பிற ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரயில் குண்டுவெடிப்பு தகவல்களை பெற 044 25357398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளதாக கூறினார்.

சென்னையிலிருந்து புறப்பட்ட கவுகாத்தி ரயில்:

சென்னை சென்ட்ரலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த கவுகாத்தி விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது. பலத்த பாதுகாப்புடன் குண்டுவெடிப்பு நிகர்ந்த விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது. 

மக்கள் பீதியடைய வேண்டாம்:

சென்ட்ரல் குண்டுவெடிப்பில் உயிரிழந்த சுவாதி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 14 பேரும் விரைந்து குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னையில் நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் தமிழக மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ஒருவர் கைது:

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் முகமது பாசில் என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பிரபல மருந்து கடை ஒன்றில் காசாளராக வேலை செய்து வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பாசில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ரயிலில் கழிவறை ஒன்றில் ஒளிந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரதமர் மன்மோகன்சிங் கடும் கண்டனம்:


சென்னை குண்டுவெடிப்புக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்பு கோழைத்தனமான செயல் என்றும் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டுள்ள விரக்தியின் வெளிப்பாடே இந்த குண்டுவெடிப்பு என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

5 பேருக்கு அறுவைச் சிகிச்சை 

குண்டுவெடிப்பில் காயமடைந்த 5 பேருக்கு மருத்துவமனையில்  அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. உமாராணி, விமல்குமார், உள்ளிட்ட 5 பேருக்கும் அறுவை சிக்ச்சை அளிக்கப்பட்டது. 

நன்றி தினகரன்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி

Post by ahmad78 on Thu 1 May 2014 - 14:44

வழக்கம்போல முஸ்லிம்கள் மீது பழி வரும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி

Post by rammalar on Thu 1 May 2014 - 15:09

இந்த தீவிரவாத செயலுக்கு எந்த
அமைப்பு பொறுப்பு ஏற்கிறது என்பதை
எதிர்நோக்கலாம்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum