சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

நானுந்தான் குற்றவாளி

View previous topic View next topic Go down

Sticky நானுந்தான் குற்றவாளி

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 May 2014 - 10:15நெருங்கும் வயதுனக்கு நாற்பது 
நொந்தழும் உன் மனதுக்கெங்கே ஆறுதல் 
கன்னி கழிந்திடாத் துயருனக்கு 
காலங்கடந்த ஆறுதல் வரிகளுமுனக்கு 

உன்விதியின் வழியா இன்நிலை 
சமுகத்துயரா இக்கொடுமை 
சரித்திரத்தில் நிலைக்கின்றாய் 
சமுகத்தின் வடுவாய் இன்றுன்நாமம்  

எத்தனை கன்னிகள் கலங்கிநிற்க 
செல்வந்தரகளின் குதூகலத் திருமணங்கள் 
முதுகெலும்பற்ற வாலிபர்களின் 
சீதனச் சந்தையில் 
மனங்களை யார்தான் தேடுகிறார்கள் 

உன்குற்றமெதுவென்று நானுந்தான் தேடினேன் 
பிறப்பால் சகோதரிகள் ஏழென்றாய் 
அழகால் உனைவெல்ல யாரென்றேன் 
அன்பான உனையடைய ஆளிங்கு தானில்லையே

இறுதிவரை இப்படியே இருந்துவிட்டு 
மரணமதை எய்திட வேண்டுமென்றாய் 
என் உணர்வுகளலெல்லாம் அப்படியே 
செயலிழந்ததை நீயறியாய் 

நீயறிந்த என்நிலையில் 
நான் செய்திட ஏதுண்டு 
சமுகத்துக் குற்றவாளியாய் 
உன் நீதி மன்றத்தில் நானுமுண்டு 
தீர்ப்பின் அதிபதியாம் இறைவன் 
நல்வழியொன்றைக் காட்டிடட்டும் 
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நானுந்தான் குற்றவாளி

Post by Nisha on Fri 9 May 2014 - 10:30

நேசமுடன் ஹாசிம் wrote:நெருங்கும் வயதுனக்கு நாற்பது 
நொந்தழும் உன் மனதுக்கெங்கே ஆறுதல் 
கன்னி கழிந்திடாத் துயருனக்கு 
காலங்கடந்த ஆறுதல் வரிகளுமுனக்கு 

உன்விதியின் வழியா இன்நிலை 
சமுகத்துயரா இக்கொடுமை 
சரித்திரத்தில் நிலைக்கின்றாய் 
சமுகத்தின் வடுவாய் இன்றுன்நாமம்  

எத்தனை கன்னிகள் கலங்கிநிற்க 
செல்வந்தரகளின் குதூகலத் திருமணங்கள் 
முதுகெலும்பற்ற வாலிபர்களின் 
சீதனச் சந்தையில் 
மனங்களை யார்தான் தேடுகிறார்கள் 

உன்குற்றமெதுவென்று நானுந்தான் தேடினேன் 
பிறப்பால் சகோதரிகள் ஏழென்றாய் 
அழகால் உனைவெல்ல யாரென்றேன் 
அன்பான உனையடைய ஆளிங்கு தானில்லையே

இறுதிவரை இப்படியே இருந்துவிட்டு 
மரணமதை எய்திட வேண்டுமென்றாய் 
என் உணர்வுகளலெல்லாம் அப்படியே 
செயலிழந்ததை நீயறியாய் 

நீயறிந்த என்நிலையில் 
நான் செய்திட ஏதுண்டு 
சமுகத்துக் குற்றவாளியாய் 
உன் நீதி மன்றத்தில் நானுமுண்டு 
தீர்ப்பின் அதிபதியாம் இறைவன் 
நல்வழியொன்றைக் காட்டிடட்டும் 

காலம் கடந்தும் வசந்தம் தொலைத்தும் குடும்பத்துக்காக் தனனை உருககி மெழுகு வர்த்திகளாகி... இறுதியில்  யாருக்காக  இத்தனை பாடுகள் பட்டோம் என நொந்து போக செய்யும் நிலையில்...

எத்தனை கன்னிகள் கலங்கி நிற்க செல்வந்தர்களில் குதுகலதிருமணங்கள்.. நிஜ்மான வார்த்திஅ ஹாசிம்.  இருப்பவரிட்ம கொடுககும் மன்சில்லை. கொடுக்க நினைப்பவரிடம் இருப்பதும் இல்லை.

சீதனச்சந்தையில் வாலிபர்கள பல நேரம்  சூழ் நிலைகைதிகள் ஆவதால் அவர்கள் மனங்கள் மரத்து போகிறதோ..

பிறப்பால் ஏழு சகோதரிகள்.... இது ஒரு ஆணுக்கான கவிதையா.. உடன் பிறந்தாளுக்காக தனை உருக்கும் மெழுது வர்த்தியாய் அவன் வாழ்வு ஆனதா.. இல்லை  ஏழு சகோதாரிகள் என்பதால்  சீதனசந்தையில் விலை போக முடியா அபலைபெண்கள் குறித்ததா என  இருவருக்கும் பொதுவாய் எழுதிய விதம் அருமை.

 ஆனால் இதில் நாமெங்கே குற்றவாளியானோம் ஹாசிம். நமக்கிருக்கும் பொறுப்புக்களை நாம் சீராய் செய்யவே முடியாத போது அடுத்தோருக்காக நான் எப்படி பொறுப்பாளியாவது.

ஆனாலும் எனக்கு சில நேரம் புரிவதில்லை ஹாசிம். நம் சூழல் தெரிந்தும் குடும்ப வறுமை  தெரிந்தும் எதற்காக இத்தனை குழந்தைகளை பெற்று  அவர்களை கஷ்டபடுத்தி தாங்களும் கஷ்டப்படணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நானுந்தான் குற்றவாளி

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 May 2014 - 10:47

ஏழு சகோதரிகளுடன் பிறந்ததால் இந்த நிலை ஏழு பேருக்கும் வீடு சொத்து சேர்த்து திருமணம் செய்வதென்பது கடினமான நிலைதானே 
அச்சமுகத்தில் நானும் ஒரு அங்கமாதலால் நானும் குற்றவாளியாகிறேன் என் சமுகத்தை திருத்திட என்னால் முடிவதில்லை என்பது என் இயலாமை மார்கத்தினை ஏற்று நடக்காத என் சமுகத்தவாரால் விழைகிறது என்பது எனது வாதம் 
நிச்சயமாக குழந்தைகளின் எண்ணிக்கை அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறதென்றால் அதிகமான குழந்தை பெற்றெடுப்பது குறைதான் இதில் நாம் திருந்திக்கொள் வேண்டும 
எனக்கு ஒரு ஆண் குழந்தை மீது ஆசை மூன்றாவது ஆகினால் போதும் 
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நானுந்தான் குற்றவாளி

Post by பானுஷபானா on Fri 9 May 2014 - 15:12

நல்ல கவிதை ஹாசிம்

ஆனால் இப்போது இந்த முதிர் கன்னி என்ற நிலை ரொம்ப கம்மியே.

எங்க ஊர் பக்கம் தான் இந்த சீதனம் தலை விரித்து ஆடியது. இப்போது அனனைவரும் திருந்தி ஆண்டவன் சொன்ன வழியில் நபி முறையில் கல்யாணம் செய்கிறார்கள்.
நாம் முதலில் திருந்தினால் தான் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் திருந்துவார்கள்....என் தம்பி மார்க்கம் சொல்வதை என்ன ஆனாலும் நான் விட்டுத் தரமாட்டேன் என பிடிவாதமாகவே இருக்க்கிறான்.

போன மாதம் நடந்த எங்க சித்தப்பா பையன் கல்யாணத்திற்கு கூட வரல. ஏனென்றால் மாப்பிள்ளை வீட்டுச் செலவு பாதி பொண்ணூ வீட்டுச் செலவு பாதி என்பது தெரிந்ததால் வரவில்லை. மாப்பிள்ளையே முழுச்செலவும் செய்து பெண்ணைக் மணம் செய்யும் கல்யாணத்திற்குக் தான் நான் செல்வேன்.

யார் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை என சொல்லி விட்டான்.

ஆனால் நாங்க எல்லோரும் சென்று வந்தோம் . என்ன செய்வது உறவுக்காரர்கள் யாருமே இல்லாமல் நாங்க யாருமே போகமல் இருந்தால் தர்மசங்கடமா போயிடுமேனு போய் வந்தோம்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: நானுந்தான் குற்றவாளி

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 May 2014 - 17:15

பானுஷபானா wrote:நல்ல கவிதை ஹாசிம்

ஆனால் இப்போது இந்த முதிர் கன்னி என்ற நிலை ரொம்ப கம்மியே.

எங்க ஊர் பக்கம் தான் இந்த சீதனம் தலை விரித்து ஆடியது. இப்போது அனனைவரும் திருந்தி ஆண்டவன் சொன்ன வழியில் நபி முறையில் கல்யாணம் செய்கிறார்கள்.
நாம் முதலில் திருந்தினால் தான் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் திருந்துவார்கள்....என் தம்பி மார்க்கம் சொல்வதை என்ன ஆனாலும் நான் விட்டுத் தரமாட்டேன் என பிடிவாதமாகவே இருக்க்கிறான்.

போன மாதம் நடந்த எங்க சித்தப்பா பையன் கல்யாணத்திற்கு கூட வரல. ஏனென்றால் மாப்பிள்ளை வீட்டுச் செலவு பாதி பொண்ணூ வீட்டுச் செலவு பாதி என்பது தெரிந்ததால் வரவில்லை. மாப்பிள்ளையே முழுச்செலவும் செய்து பெண்ணைக் மணம் செய்யும் கல்யாணத்திற்குக் தான் நான் செல்வேன்.

யார் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை என சொல்லி விட்டான்.

ஆனால் நாங்க எல்லோரும் சென்று வந்தோம் . என்ன செய்வது உறவுக்காரர்கள் யாருமே இல்லாமல் நாங்க யாருமே போகமல் இருந்தால் தர்மசங்கடமா போயிடுமேனு போய் வந்தோம்.
உண்மைதான் சகோ... இது உண்மையான சம்பவம் ஒன்று என்னை பாதித்திருந்தது என் பள்ளித்தோழியும் அவள் முத்த சகோதரியும் இந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது எனது கவலை அதிகமான வரண்கள் வந்தும் நிறைவேறாத நிலையில் பல சிக்கல்கள் அவர்களின் குறைகளை சொல்லும் போது உடைந்து போகிறேன்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நானுந்தான் குற்றவாளி

Post by பானுஷபானா on Sat 10 May 2014 - 11:19

அனைத்திற்கும் ஆண்டவன் போதுமானவன் ஹாசிம் .

கூடிய விரைவில் நல்லது நடக்கும். அவர்களுக்காக துவா செய்ங்க.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: நானுந்தான் குற்றவாளி

Post by நண்பன் on Sun 11 May 2014 - 9:28

எத்தனை கன்னிகள் கலங்கிநிற்க
செல்வந்தரகளின் குதூகலத் திருமணங்கள்
முதுகெலும்பற்ற வாலிபர்களின்
சீதனச் சந்தையில்
மனங்களை யார்தான் தேடுகிறார்கள்
உண்மைதான் ஹாசிம் இப்போதெல்லாம் மனங்களை யாரும் தேடுவதில்லை அழகு பணம் அந்தஸ்த்து இவைகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள் இன்றய இளைஞர்கள்...

நிதர்சனம் மனக்குமுறல் உண்மை நிலைதனை கவிதையாக்கி தந்த உறவுக்கு
உள்ளம் நிறைந்த நான்றிகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நானுந்தான் குற்றவாளி

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 11 May 2014 - 9:40

நண்பன் wrote:எத்தனை கன்னிகள் கலங்கிநிற்க
செல்வந்தரகளின் குதூகலத் திருமணங்கள்
முதுகெலும்பற்ற வாலிபர்களின்
சீதனச் சந்தையில்
மனங்களை யார்தான் தேடுகிறார்கள்
உண்மைதான் ஹாசிம் இப்போதெல்லாம் மனங்களை யாரும் தேடுவதில்லை அழகு பணம் அந்தஸ்த்து இவைகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள் இன்றய இளைஞர்கள்...

நிதர்சனம் மனக்குமுறல் உண்மை நிலைதனை கவிதையாக்கி தந்த உறவுக்கு
உள்ளம் நிறைந்த நான்றிகள்
மிக்க நன்றி தோழா சரியாகச் சொன்னீர்கள்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நானுந்தான் குற்றவாளி

Post by பானுஷபானா on Mon 12 May 2014 - 10:25

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:எத்தனை கன்னிகள் கலங்கிநிற்க
செல்வந்தரகளின் குதூகலத் திருமணங்கள்
முதுகெலும்பற்ற வாலிபர்களின்
சீதனச் சந்தையில்
மனங்களை யார்தான் தேடுகிறார்கள்
உண்மைதான் ஹாசிம் இப்போதெல்லாம் மனங்களை யாரும் தேடுவதில்லை அழகு பணம் அந்தஸ்த்து இவைகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள் இன்றய இளைஞர்கள்...

நிதர்சனம் மனக்குமுறல் உண்மை நிலைதனை கவிதையாக்கி தந்த உறவுக்கு
உள்ளம் நிறைந்த நான்றிகள்
மிக்க நன்றி தோழா சரியாகச் சொன்னீர்கள்

http://www.onlinepj.com/

இந்த வெப்சைட் பாருங்க ஹாசிம் இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பயான் செய்கிறார். இவரை சொல்வதைக் கேட்டு லட்சக்கணக்கான மக்கள் இப்போது நபிவழியில் திருமணம் செய்கிறார்கள். அதிலும் இளைஞர்கள் தான் அதிகம் பேர் இவரின் குழுவில் இருக்கிறார்கள். நிறைய நூல்கள் எழுதி இருக்கிறார். குரான் த்மிழாக்கம் எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி எழுதி இருக்கிறார்.

இவர் பயான் கேட்டு திருந்தியவர்கள் ஏராளம் . ஆரம்பத்தில் நிறைய கஷ்டப்பட்டார். இவரை அடித்துக் கூட துரத்தினார்கள். ஆனால் இவரின் மன உறுதி வென்று விட்டது. இஸ்லாமல்லாதவர்கள் கேட்கும் கேள்விக்கும் சரியாக மனம் நோகாத வண்ணம் பதில் சொல்வார்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: நானுந்தான் குற்றவாளி

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 May 2014 - 10:52

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:எத்தனை கன்னிகள் கலங்கிநிற்க
செல்வந்தரகளின் குதூகலத் திருமணங்கள்
முதுகெலும்பற்ற வாலிபர்களின்
சீதனச் சந்தையில்
மனங்களை யார்தான் தேடுகிறார்கள்
உண்மைதான் ஹாசிம் இப்போதெல்லாம் மனங்களை யாரும் தேடுவதில்லை அழகு பணம் அந்தஸ்த்து இவைகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள் இன்றய இளைஞர்கள்...

நிதர்சனம் மனக்குமுறல் உண்மை நிலைதனை கவிதையாக்கி தந்த உறவுக்கு
உள்ளம் நிறைந்த நான்றிகள்
மிக்க நன்றி தோழா சரியாகச் சொன்னீர்கள்

http://www.onlinepj.com/

இந்த வெப்சைட் பாருங்க ஹாசிம் இவர்  கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பயான் செய்கிறார்.  இவரை சொல்வதைக் கேட்டு லட்சக்கணக்கான மக்கள் இப்போது நபிவழியில் திருமணம் செய்கிறார்கள். அதிலும் இளைஞர்கள் தான் அதிகம் பேர் இவரின் குழுவில் இருக்கிறார்கள். நிறைய நூல்கள் எழுதி இருக்கிறார். குரான் த்மிழாக்கம் எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி எழுதி இருக்கிறார்.

இவர் பயான் கேட்டு திருந்தியவர்கள் ஏராளம் . ஆரம்பத்தில் நிறைய கஷ்டப்பட்டார். இவரை அடித்துக் கூட துரத்தினார்கள். ஆனால் இவரின் மன உறுதி வென்று விட்டது. இஸ்லாமல்லாதவர்கள் கேட்கும் கேள்விக்கும் சரியாக மனம் நோகாத வண்ணம் பதில் சொல்வார்.
கண்டிப்பாக எனக்கு தெரிந்த தளம் தெரிந்த விடயம் 
சகோதரர் PJயின் அற்புதமான மார்க்க அறிவும் ஞாபக சக்தியும் இறைவன் அவருக்கு கொடுத்தது அவரின் சேவை அளப்பெரியது எங்களது நாட்டிலும் இவரது பிரச்சாரங்கள் இடம்பெற்றிருக்கிறது பெரும் திரைகளிலும் காட்சிப்படுதுவதுண்டு திருந்துபவர்கள் திருந்துகிறார்கள் மனமில்லாதவர்கள் அவ்வாறே இருக்கிறார்கள் இறைவன் அனைவருக்கும் நேர்வழி காட்டிடட்டும்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நானுந்தான் குற்றவாளி

Post by பாயிஸ் on Mon 12 May 2014 - 10:54

மனங்களை யார்தான் தேடுகிறார்கள் எதார்த்தமான வரிகள்தான் இது எதிரிக்கும் பொருந்தும் இப்படிருக்க காலகாலமாய் தன்னுடன் உடல் வருத்தி உயிர் நசுக்கி வாழப்போகும் தாய்மைக்கு தானமாய் நாம் ஏதும் கொடுப்பதற்கு பதிலாய் நாம் அவர்களிடமிருந்து பிடுங்கிக்கொள்வதே இந்த சீதனம். இதை என்று “சீ” தனமெனறு நினைத்து ஒதுக்கிக்கொள்கிறார்களோ அன்றுதான் முதிர்க்கன்னிகளின் சோக வரிகள் அழிக்கப்படுகிறது. முதிர்கன்னிகளின் கைகள் நாளேடுகளில் இருந்தும் விடுதலை பெருகிறது.


மனதை சுட்டெரிக்கும் வரிகளனைத்தும் எம்மனைவா்களின் மனதினையும் தொடட்டுமே 


வாழ்த்துக்கள் தோழரே அருமையாகவுள்ளது 


Last edited by பாயிஸ் on Mon 12 May 2014 - 11:21; edited 1 time in total
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: நானுந்தான் குற்றவாளி

Post by பானுஷபானா on Mon 12 May 2014 - 11:16

ஏற்கனவே தெரியுமா? தெரியாதென்று தான் சொன்னேன் ஹாசிம். இவரின் பயான் என்றால் எங்க ஏரியாவில் 5 கிலோ மீட்டருக்கு கூட்டம் இருக்கும்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: நானுந்தான் குற்றவாளி

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 May 2014 - 11:24

பாயிஸ் wrote:மனங்களை யார்தான் தேடுகிறார்கள் எதார்த்தமான வரிகள்தான் இது எதிரிக்கும் பொருந்தும் இப்படிருக்க காலகாலமாய் தன்னுடன் உடல் வருத்தி உயிர் நசுக்கி வாழப்போகும் தாய்மைக்கு தானமாய் நாம் ஏதும் கொடுப்பதற்கு பதிலாய் நாம் அவர்களிடமிருந்து பிடுங்கிக்கொள்வதே இந்த சீதனம். இதை என்று “சீ” தனமெனறு நினைத்து ஒதுக்கிக்கொள்கிறார்களோ அன்றுதான் முதிர்க்கன்னிகளின் சோக வரிகள் அழிக்கப்படுகிறது. முதிர்கன்னிகளின் கைகள் நாளேடுகளில் இருந்து விடுதலை பெறும்.


மனதை சுட்டெரிக்கும் வரிகளனைத்தும் எம்மனைவா்களின் மனதினையும் தொடட்டுமே 


வாழ்த்துக்கள் தோழரே அருமையாகவுள்ளது 
எதிர்காலத்திலேனும் உணரும் ஒரு சமுகத்தை உருவாக்கும் பொறுப்பு நம் அனைவரின் கையிலும் உள்ளது
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நானுந்தான் குற்றவாளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum