சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Today at 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

புகைப்படகலையில் சர்வதேசபுகழ்பெற போகும் சிறுமி சிதாரா

Go down

Sticky புகைப்படகலையில் சர்வதேசபுகழ்பெற போகும் சிறுமி சிதாரா

Post by ராகவா on Mon 26 May 2014 - 18:49கோவையில் சமீபத்தில் கானுயிர் (வைல்டு லைப் போட்டோகிராபி) புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
புகைப்படக்கலைக்காகவும்,புகைப்படக்கலைஞர்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பெஸ்ட் போட்டோகிராபி தமிழ் இதழின் ஆசிரியர் பழனிக்குமார் இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மாநில அளவில் சிறந்து விளங்கும் வைல்டு லைப் போட்டோகிராபர்களின் படங்கள் நுாற்றுக் கணக்கில் இடம் பெற்றிருந்தது.இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்த புகைப்படங்கள் தரவரிசைப்படுத்தி அதற்கு மெகா பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசு வழங்குவதற்காக கண்காட்சியில் இடம் பெற்றிருந்த படங்கள் அனைத்தையும் நடுவர்கள் அலசி ஆராய்ந்து பின் பரிசுக்குரிய படங்களை தேர்வு செய்து அறிவித்தனர்.
ஐந்து ஆந்தைகள் கொண்ட ஒரு ஆந்தை குடும்பம் பட்டுப்போன ஒரு பனைமரத்தில் இருந்து எட்டிப்பார்ப்பது போன்ற படத்திற்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது.
பொதுவாக ஆந்தைகள் பகலில் தென்படுவது என்பதே அபூர்வம், இந்த நிலையில் ஐந்து ஆந்தைகள் ஒரு சேர ஒரே இடத்தில் இருப்பது என்பதும் அதை படம் எடுப்பது என்பதும் ஆபூர்வத்திலும் அபூர்வம்.
வைல்டு லைப் போட்டோகிராபியில் காத்திருத்தலும்,பொறுமையையுமே மிக முக்கியம்,அந்த வகையில் இந்த படத்தை எடுக்க சம்பந்தப்பட்ட போட்டோகிராபரின் காத்திருத்தல் தன்மைக்காக சேர்த்து இந்த முதல் பரிசு வழங்கப்படுகிறது என்றனர்.
11 வயது சிறுமி

: இந்த படத்தை எடுத்து முதல் பரிசு பெறப்போகும் அந்த போட்டோகிராபர் யார் என்பதை அறிய அனைவருக்கும் ஆவல் எழுந்தது.
மேடையில் பெயர் அறிவிக்கப்பட்டதும் பார்வையாளர் பகுதியில் இருந்து எழுந்து மேடைக்கு வந்த அந்த 11 வயது சிறுமியைப் பார்த்த பரிசு வழங்குபவர்கள் அப்பா,அல்லது அண்ணன் எடுத்த படத்திற்காக அவர்களது சார்பில் பரிசை வாங்க வந்திருப்பார் போலும் என்று எண்ணினர். ஆனால் அந்த படத்தை எடுத்தததே சாட்சாத் அந்த சிறுமிதான் என்றதும் அரங்கமே ஆடிப்போனது.பலத்த கரவொலியுடன் பரிசும் வழங்கப்பட்டது.
யார் அந்த சிறுமி
பெயர் சிதாரா
பொள்ளாச்சி பக்கம் உள்ள சித்தமடை என்ற மலையடிவார கிராமத்தை சேர்ந்தவர்.சின்மயா பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கவிருக்கிறார்.படிப்பிலும்,விளையாட்டிலும் படு கெட்டி.விவசாய குடும்பம்.
அப்பா அருள் கார்த்திகேயன் மற்றும் மாமா பிரகாஷ் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு காட்டில் சென்று புகைப்படங்கள் எடுப்பது என்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.அப்படி காட்டிற்கு போகும்போதெல்லாம் சிதாரவையும்,சிதாராவின் அண்ணன் அகஸ்தியாவையும் உடன் அழைத்து செல்வர்.எட்டு வயதிருக்கும் போதே கேமிராவை துாக்கிய சிதாராவை செதுக்கியதில் பெரும் பங்கு அகஸ்தியாவிற்கு உண்டு.
அபரிமிதமான ஆர்வத்தோடு இவர் எடுத்த பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்த பள்ளி நிர்வாகம் சித்தாராவிற்கு புகழ் மாலை சூடியுள்ளது.இதே போல பல்வேறு பார்வையாளர்களும் சித்தாரவின் புகைப்படங்களை பார்த்து பாராட்டி வருகின்றனர்.கோவை பக்கம் உள்ள பேரூர் பகுதிக்கு போயிருந்த போது எடுத்ததுதான் அந்த ஆந்தை குடும்ப படம்.
சர்வதேச போட்டியில்:

முதல் முறையாக கோவை புகைப்பட கண்காட்சியில் இவர் வைத்திருந்த படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது.இதை அடுத்து சர்வதே அளவில் லண்டனில் நடக்கும் வைல்டுலைப் போட்டோகிராபி போட்டிக்கு சித்தாரவின் படங்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
தற்போது பல்வேறு கட்டங்களைதாண்டி தேர்வுக்குழுவின் இறுதிக்கட்ட பார்வைக்கு படம் போயுள்ளது,நிச்சயம் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
சித்தாரவின் புகைப்பட திறமையை ஊக்கப்படுத்தி அவரை பெரியளவில் கொண்டு வருவதற்கான உழைப்பு அவரது தாயார் காயத்ரிக்கு உண்டு.இதற்கான உழைப்பில் அவர் களைப்படைவது கிடையாது.
சிதார இப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேமிராவை துாக்கிக்கொண்டு காட்டிற்கு கிளம்பிவிடுகிறார்.பெரும்பாலும் துணைக்கு அண்ணன் அகஸ்தியா வருவது உண்டு.காட்டை நேசிக்க ஆரம்பித்ததால் சிதாரா பிளாஸ்டிக்கை எந்த ரூபத்திலும் உபயோகிப்பது இல்லை என்று சபதமே எடுத்துள்ளார் ,மேலும் படித்து வனத்துறை அதிகாரியாகத்தான் வருவேன் என்றும் இப்போதே முடிவெடுத்துள்ளார்,விவசாயத்தையும்,இயற்கையையும் பெரிதும் நேசிக்கிறார். இதெல்லாம் வைல்டு லைப் போட்டோகிராபி தந்த நல்ல குணங்கள் என்றும் சொல்லி புன்னகைக்கிறார்.
அவருடன் பேசவும் விரும்புபவர் தொடர்புகொள்ள வேண்டிய எண்:9842677920.(இந்த போன் எண் சிதாரவின் தாயார் காயத்ரியினுடையது)
25ம் தேதி இலவச பயிற்சி:

சிறுமி சிதாரா பற்றியும் அவருக்கு புகைப்பட கலையின் மீது உள்ள ஆர்வம் பற்றியும் இதனால் இவர் பிளாஸ்டிக்கை வெறுத்து, இயற்கையையும் கானகத்தையும் நேசிப்பது பற்றியும் சென்னையில் உள்ள பிரபல ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் புகைப்பட சாதன விற்பனை நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இந்த விதையை போட்டால் வருங்காலத்தில் சில சிறந்த புகைப்பட கலைஞர்களும் பல இயற்கை ஆர்வலர்களும் நிச்சயம் கிடைப்பார்கள் என்றார்.அதற்கு என்ன செய்யலாம் என்று பேசி எடுத்த முடிவின்படி வருகின்ற 25/5/14 ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணி முதல் மதியம் ஒரு மணிவரை சென்னை எக்மோர் பாந்தியன் சாலையில் உள்ள ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் நிறுவனத்தில் இலவசமாக அடிப்படை புகைப்பட பயிற்சி வழங்குவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எட்டு வயதில் இருந்து பதினாறு வயது வரையுள்ள குழந்தைகளை கொண்ட பெற்றோர்கள் தங்களது ஆண் மற்றும் பெண் குழந்தைகளை சொந்த பொறுப்பில் பயிற்சி வகுப்புக்கு கொண்டுவந்து விட்டுவிட்டு பின் திரும்ப கூட்டிச்செல்லவேண்டும்.
புகைப்பட கலையில் சிறந்த வல்லுனர் மூலமாக பயிற்சி வழங்கப்படும்.முப்பது பேருக்கு மட்டுமே இடம் உண்டு என்பதால் முதலில் போன் செய்து உறுதிப்படுத்தும் முப்பது பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு.உங்கள் வருகையை உறுதிப்படுத்த தொடர்பு கொள்ள வேண்டியவர் கௌதம் எண்:9962961919,044-43508550.
இதை படிக்கும் வெளிநாட்டு வாசகர்கள் மற்றும் வெளியூர் வாசகர்கள் சென்னையில் உள்ள தங்களது உறவினர் குழந்தைகளுக்கு சிபாரிசு செய்யலாம்.
- எல்.முருகராஜ்

நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum