சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்

View previous topic View next topic Go down

Sticky முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 21:12

ஹெல்ப்ஏஜ் என்ற அமைப்பு பெருநகரங்களான மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய 6 நகரங்களில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் வெளியாகியுள்ள அம்சங்கள் வருமாறு

பெங்களூரில் வசிக்கும் முதியோரில் 75 சதவீதத்தினர், தங்களது சொந்த மகன்களாலும், மருமகள்களாலும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் டெல்லியில் 22 சதவீதம்பேர்தான் இதுபோல கூறியுள்ளனர். இரண்டாம் கட்ட நகரங்களில் அந்த அமைப்பு நடத்திய ஆய்வில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 85 சதவீதம் மக்கள் தங்களது பிள்ளைகள் தங்களை நன்றாக கவனித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் இது வெறும் 13 சதவீதமாக உள்ளது. குடும்பத்தாரால் பாதிக்கப்பட்டதாக கூறும், முதியோரில் 59 சதவீதம் பேர் தங்களது மகன்களாலும், 61 சதவீதம் பேர் தங்கள் மருமகள்களாகவும், மரியாதை குறைவாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விரும்பத்தகாத பேச்சுக்களை 41 சதவீதம் முதியோர் கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும், 29 சதவீதம் பேர் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

குடும்ப கவுரவம் பாதித்துவிடும் என்பதால் தனக்கு நேரும் கொடுமையை வெளியே சொல்லாமல் மறைத்துவிடுவதாக 41 சதவீத முதியோர் கூறியுள்ளனர்.

பெங்களூர் நகர பொலிஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர் இதுகுறித்து கூறுகையில், ஆய்வறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டேன், முதியோர் தங்களுக்கு நிகழும் கொடுமைகள் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்

Post by jaleelge on Sat 14 Jun 2014 - 22:16

இலங்கையில் அப்படியான் கணக்கெடுப்பு எடுப்பார்களேயானால்....

குடும்ப கௌரவம் பாதித்துவிடும் என்பதால் தனக்கு நேரும்

கொடுமையை வெளியே சொல்லாமல் மறைத்துவிடுவதாக..

 81 சதவீத முதியோர் கூறுவார்கள். எமது 

முன்னோர்களின்  பெருமனதினால்தான் நாம் மதிக்கப்படுகிறோம் !!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்

Post by rammalar on Sun 15 Jun 2014 - 6:34

நவீன யுகத்தில் இருக்கிறோம் நாம்..
முதியவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை
குடும்பத்திற்கு செய்ய வேண்டும்...
-
பால் வாங்கி வருவது, பேரக்குழந்தைகளை பள்ளிக்கு
இட்டுச் செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது
என்ற அளவில் உதவிகள் செய்யலாம்..
-
ஈகோ இல்லாமல் ஒட்டி உறவாட வேண்டும்..
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்

Post by Muthumohamed on Sun 15 Jun 2014 - 15:07

தன் வினை தன்னை சுடும்


இதை மறக்காமல் இருந்தான் அனைவருக்கும் நல்லது
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 15:12

rammalar wrote:நவீன யுகத்தில் இருக்கிறோம் நாம்..
முதியவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை
குடும்பத்திற்கு செய்ய வேண்டும்...
-
பால் வாங்கி வருவது, பேரக்குழந்தைகளை பள்ளிக்கு
இட்டுச் செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது
என்ற அளவில் உதவிகள் செய்யலாம்..
-
ஈகோ இல்லாமல் ஒட்டி உறவாட வேண்டும்..

ராம்மலர் அவர்களே !!!

நீங்கள் பதிவு  செய்ததைப் பற்றி பார்க்கும் போது....

முதியோர்கள் ஈகோவோடு தானா உறவுகளுடன் ஒட்டி வாழ்கிறார்களா ???

தலைப்புக்கும் ராம்மலர் கூறும் விடயத்துக்கும் சம்மந்தமே இல்லையப்பனே !!!!

ஆய்வின் பெருபேறுகள் நீங்கள் கருதுவதைப் போல் அல்லாமல்....

வேறு ஓர்  ஆரோக்கியமான முடிவினையே தருகிறது... வாசித்துப் பார்க்க வில்லை போலும்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்

Post by Nisha on Sun 15 Jun 2014 - 18:23

முதியோர்களை மதியாமல் மிதிக்கும் தன்மை அதிகமானாலும் அதற்கு காரணமும் அவர்களே என்பது மறுக்க இயலாத உண்மை!

ராம்மல்ர் ஐயா சொல்வது போல் முதியோரான பின் தம் இளையோரின் மதிப்புணர்ந்து, பதவியுணர்ந்து அவர்கள் மதிப்புக்கும், மரியாதைக்கும் பங்கம் வராத படி  நடப்பதும்,  ஈகோ பாராது சின்ன சின்ன உதவிகள் செய்வதும்   தாம் வாழ்ந்த காலம் வேறு தம்மக்கள் வாழும் காலம் வேறென உணர்ந்து விட்டு கொடுப்ப்பதும், புரிந்து கொள்வதும் ரெம்ப முக்கியம் தான்!

காலத்துக்கு ஏற்ப தம்மை மாற்றாமல் தம கொண்டதே சரி என வாழ்வோருக்கு எபோதும் பிரச்சனைதான்!

பல இடங்களில் பெற்ற பிள்ளைகளை குறை கூறி  அடுத்தவரின் பரிதாபத்தை சம்பாதிக்க முயலும் பெரியோர் என்ப்படுவோரை நான் கண்டே இருக்கின்றேன்!

புதிதாய் குருத்தோலை வரும் போது காவோலை வழி விட்டு இடம் கொடுக்க நினைக்காது எனக்குள் நீ அடங்கி இருக்கணும் என  வீம்பாய் நினைப்பதை தவிக்கலாம்!

மருமகளை குறை சொல முன் தான் இந்த விடயத்தில் எப்படி வாழ்ந்தோம் என கடந்த காலத்தை மீட்டு பார்க்கணும். ஏனெனில் பல நேரங்களில் அவர்கள்  குழந்தைகளாய் இருந்த போது தம் குழந்தைகளிடம் விதைத்தவைதான் அவர்கள் வளர்ந்த பின் அறுக்கும் நிலைக்கு வருகின்றது.

இப்போதெல்லாம் பெரியவர்களில் வீம்பும், பிடிவாதமும், தாம் சொல்வதை மட்டும் தம் பிள்ளைகள்கேட்கணும் எனும் புரிந்திடாமையுமே பல் குடும்பங்களில்  பிளவுகளை ஏற்படுத்து கின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 19:21

நிஷா மேடம் உங்களின் ஆளுமையான கருத்துப் பதிவுக்கு....

என்றும் தலை சாய்க்கிறேன்...

உங்கள் மீது மதிப்பும்..மரியாதையும் அதிகரிக்கிறது.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்

Post by Nisha on Sun 15 Jun 2014 - 19:33

jaleelge wrote:நிஷா மேடம் உங்களின் ஆளுமையான கருத்துப் பதிவுக்கு....

என்றும் தலை சாய்க்கிறேன்...


உங்கள் மீது மதிப்பும்..மரியாதையும் அதிகரிக்கிறது.

நாங்கள் எங்கள் பிள்ளைகளிடம் எப்படி நடக்கணும் என்பதை சரியாக் நடத்தினால் எம் பிள்ளைகள் நம்மை சரியாக நடத்துவார்கள் என்பதை  பலர் புரிந்துப்பதே இல்லை!

ஒரு விடயம்தெரியுமா.. இப்போதெல்லாம் நம் வீட்டு விடயம் வெளியில் செல்வதே நம் வீட்டு பெரியோர்களால் தான் ! மருமக்ளை குறை சொல்வதால் மரியாதை  இழப்பது அவர்கள்மகன் தானே! அரிசி இல்லை, பருப்பு இல்லை,  பசங்க சரியில்லை இப்படி அப்படின்னு  அடுத்த வீட்டுக்கு குறை காவிசெலபவர்களாக இருக்கும் போது இன்றைய் இளையோரை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?

குறைகளை தயக்க மின்றி காண்போரிடம் சொல்லி காயப்படுத்தி விட்டு  கவனிக்கவில்லை எனும் காரணங்களும் சொன்னால் எப்படி?

முன் நாட்கள் நிலை வேறு! ஆண் வேலைக்கு செல்ல வீட்டிலிருக்கும் பெண்  வீட்டு காரியங்களை கவனிக்க  முடிந்தது. இப்போது அப்படியா?  தங்கள் காலத்தை கொண்டு எங்கள் காலத்தினை  எடை போடல் கூடாது!

எதிர்காலத்தில் நாமும் கூட நம் காலத்தின் அனுபவத்தினை நம் பிள்ளைகளிடம் திணிக்க முயல்தல் கூடவே கூடாது!  முக்கியமாக அவர்கள் உழைத்து நம்மை  காக்கணும் எனும் சிந்தனை நமக்குள் கூடாது!  

நாம் நம் சந்தோஷம் நிறைவாயிருக்க நமக்கென பிள்ளைகளை பெற்று விட்டு அதன் சுமையை அவர்கள் மேல் திணிக்க கூடாது.   நம்மால் முடிந்ததை மட்டும் செய்யணும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 23:12

நீங்கள் ஓர் தலைசிறந்த பொறுப்புள்ள குடும்பத் தலைவி என்பதை நிரூபிப்பது , எமது மனதை மேலும் நெகிழ வைக்கின்றீர்கள்  மேடம்...
உங்களுக்கும் எமது பாராட்டுக்கள்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: முதியோர்களை கையெடுத்து கும்பிடும் டெல்லி… காலால் மிதிக்கும் பெங்களூர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum