சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Today at 15:07

» விநோதமான வேலை!
by rammalar Today at 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Today at 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Today at 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Today at 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Today at 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Today at 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Today at 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Today at 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Today at 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Today at 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Today at 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Today at 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Today at 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Today at 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Today at 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Today at 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Today at 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Today at 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Today at 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Today at 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Today at 12:27

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:41

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Tue 19 Sep 2017 - 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:45

.

சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!!

View previous topic View next topic Go down

Sticky சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!!

Post by ராகவா on Thu 19 Jun 2014 - 21:43

சினிமாவிற்கு விதிக்கப்பட்டு இருக்கும் சேவை வரியை நீக்கி, சினிமாவை காப்பாற்றுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில், தமிழகத்தில் பிரசாரம் செய்ய மோடி வந்தார். அப்போது மோடியை, நடிகர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். மேலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமரான போது அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சினிமாவை காப்பாற்ற கோரி, மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது...

இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தாங்கள் எடுத்து வரும் பல அரிய திட்டங்களும், அதிரடி நடவடிக்கைகளும் பாராட்டுதலுக்குரியது. எல்லா துறையை போல சினிமாவையும் நீங்கள் நேசிப்பவர் என்பதால் இந்த கோரிக்கையை தங்களுக்கு வைக்கிறேன். சினிமா என்பது மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு சாதனம் மட்டும் கிடையாது, அரசுக்கு பல கோடி வருவாயை பெற்று தரும் துறையாகும். அப்படிப்பட்ட துறை கடந்த பல ஆண்டுகளாக பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. பல திரையரங்கங்கள் கல்யாண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி வருகின்றன.

சேவை வரியால் பாதிப்பு...

மத்திய- மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த ஆட்சியில் புதிதாக சுமத்தப்பட்ட சேவை வரியால் இந்திய சினிமா பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. பல காலங்களாக இந்த தொழிலை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், ஏற்றுமதியாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், மற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்.

கோடிக்கணக்கான தொழிலாளர் வேலை இழப்பர்...

குறிப்பாக சினிமா தொழிலில் கொடிகட்டி பறந்த பல முன்னணி நிறுவனங்களும், முக்கிய தயாரிப்பாளர்களும் நஷ்டத்தாலும் விரக்தியாலும் வேறு தொழிலுக்கு செல்லும் மற்றும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடிக்குமானால் திரைப்படம் எடுக்க முதலீட்டாளர்கள் பயந்து ஒதுங்கி விடுவார்கள். இதனால் சினிமா தொழில் பாதிப்பதோடு இந்த தொழிலை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களும் வேலையில்லாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

சினிமா துறையை காப்பாற்றுங்கள்..

கடந்த ஆட்சியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சரத்குமார், மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், பவன்கல்யாண் மற்றும் இந்திய திரைப்பட வர்த்தக சபைகளும், இந்திய தொழிலாளர்கள் சம்மேளனமும் சேவை வரியை ரத்து செய்ய போராடினார்கள். மனுக்களும் கொடுத்துள்ளார்கள். இருப்பினும் திரையுலகிற்கு எதிராக சேவை வரி உள்ளது. ஆகவே சினிமாத்துறைக்கு எதிராகவும், சினிமாத்துறையை நசுக்கி வரும் சேவை வரியை நீக்கி அழிந்து வரும் இந்திய திரையுலகை காப்பாற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

உலக அரங்கில் இந்திய சினிமா முதலிடம் பிடிக்கும்...

இதன் மூலம் பல தரமான படைப்புகள் வருவதோடு உலக அரங்கில் இந்திய படைப்புகளும் பேசப்படும். மேலும் பல புதிய முதலீட்டாளர்களும், புதிய திறமையாளர்களும் இந்திய சினிமாவுக்கு வருவார்கள். உலக அரங்கில் இந்திய சினிமா முதன்மை இடத்தை பிடிக்க உற்சாகமூட்டுமாறு சக கலைஞனாக தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

--தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!!

Post by நண்பன் on Thu 19 Jun 2014 - 21:46

மோடி சார் இந்தியாவை வல்லரசாக்குங்கள் அமெரிக்காவுக்கு கடன் கொடுங்கள் அப்படியே உங்க நாட்டில் எனக்கொரு வேலைகொடுங்கள்
சினிமாவில் நடிக்க கிடிக்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!!

Post by rammalar on Fri 20 Jun 2014 - 6:15

அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் பெற்றுத் தரும்
தொழில்...!
-
இது ஒரு அப்பட்டமான பொய்...!!!
-
தியேட்டரில் உற்பத்தி செலவுக்கு ஏற்ப டிக்கெட்
விலை நிர்ணயித்துக்கொள்ள அரசு அனுமதிக்கிறது.
-
முதல் வாரத்தில் டிக்கெட் விலை ரூ 200
அடுத்த வாரம் ரூ 100
அதற்கு அடுத்த வாரம் ரூ50
பின்னும் படம் ஓடினால் மட்டுமே டிக்கெட்டில்
அச்சாகி இருக்கும் உண்மையான விலைக்கு
ரசிகன் படம் பார்க்க முடியும்..!
-
டிக்கெட் விலை சராசரியாக ரூ 200 க்கு விற்கும்போது
அந்த விலைக்கேற்ப சேவை வரி, தமாஷா வரி
செலுத்துவதில்லை என்பதே உண்மை...!
-
சினிமாத் துறையில் இருப்பவர்கள் முதலில்
தியேட்டருக்கு மக்களை படம் பார்க்க ஈர்க்க
வேண்டும்...
-
குறைந்த கட்டணம் நிர்ணயித்தால் திருட்டு
சி.டி.யைத் தடுக்க முடியும்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12895
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum