சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

Go down

Sticky மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

Post by ராகவா on Sun 22 Jun 2014 - 17:36

மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்க விளம்பரங்கள் மட்டும் போதாது. அரசின் நேரடி களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை என்றும் சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

வறட்சிக்கான திட்டம்:

வறட்சி ஏற்படும் போதெல்லாம், மழை நீர் சேகரிப்பு மீது தமிழக அரசு அதிகம் கவனம் செலுத்தும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மழை பொய்க்கும் போது ஆறு, குளம், குட்டைகள், வரத்துக் கால்வாய்கள் மற்றும் அணைகட்டுகள் என அனைத்து நீர் நிலைகளும் வறண்டு போகும். இதனால் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளியில் அமைந்துள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து, பொது மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். ஏரி, அணைகட்டுகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து, கோடையில் கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்காமலும், பாசன நீர் கிடைக்காமலும், விவசாயிகள் பாதிக்கின்றனர்.

நீண்ட காலத் திட்டம்:

மழைநீர் சேகரிப்பு அரசும், பொது மக்களும் இணைந்து செயல்படுத்தக் கூடிய நீண்டகால திட்டம். ஆனால் அரசும், அதிகாரிகளும், மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ததும் பொது மக்களின் தண்ணீர் தேவை தீர்ந்து விடும் என்பது போல் இப்பணியை மேற்கொள்கின்றனர்.

உடனடித் தீர்வு அல்ல:


குடிநீர் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண, வீடுகள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத கட்டங்களுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தல் போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மழைநீர் சேகரிப்பு நிரந்தமாக்கப்பட்டு, மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

இயற்கையை அழித்து:


ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் போன்றவற்றில் இயற்கையான முறையில் மழைநீர் சேகரிப்பை நம் முன்னோர்கள் செய்தனர். மழைநீர் சேமிக்கும் போது, அருகிலுள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை முறையில் மழைநீரை அதிகம் சேமித்து வைக்கும் ஆறுகளிலிருந்து, மணல் சுரண்டலை அரசே முன்னின்று நடத்தி வருகிறது. பசுமைத் தீர்ப்பாயம், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், வருவாயை குறிக்கோளாக வைத்து மணல் விற்பனையை அரசு வேகப்படுத்தி வருகிறது. ஆறுகள் கட்டாந்தரைகளாக மாறின. நீர்மட்டம் வெகுவாக குறைந்து, ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள கிராம மக்களே குடிநீர் கேட்டு, மறியலில் ஈடுபடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

நிரந்தரத் தீர்வு:


சுவர் விளம்பரங்கள், விழிப்புணர்வு முகாம்கள் மூலம் சுய விளம்பரங்கள் தேடுவதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான முறையில் மழைநீர் சேகரிப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்து நீர்நிலைகளை ஆழப்படுத்தவும், கட்டடங்களில் நிரந்த மழைநீர் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்த அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- நமது நிருபர் -
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 1:14

மிகவும் ஆரோக்கியமாகவும்,....

அவசியமுமான தகவல் பதிவுக்கு நன்றிகள்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

Post by rammalar on Mon 23 Jun 2014 - 5:52

பெரும்பாலான கோயில்களில் குளம் இருக்கிறது.
-
தூர் வாரி தூய்மையான நீரை சேகரித்தால்
அந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை
நீங்கும்.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13816
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

Post by jasmin on Mon 23 Jun 2014 - 13:31

இன்று மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப நீர் நிலைகள் உயர்த்தப் பட வில்லை . இன்னும் கேரளாவில பல லட்சம் கோடி  நல்ல நீர் வீணாக கடலில் கலக்கிறது ...ஆனாலும் குடி நீருக்காக வரும் சிறுவானி அணை நீரை கேரள அரசு அரசியலாக்கி பணம் பண்ண நினைக்கிறது .....கேவலம் . தமிழ் நாட்டில் கேடு கெட்ட திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி மக்களை ஏமாற்றி ஏமாற்றி கோடீஷ்வரகளாக ஆனதுதான் மிச்சம் .....மக்கள் மாறினால்தான் இதற்கு விடுவு பிறக்கும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 15:24

jasmin wrote:இன்று மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப நீர் நிலைகள் உயர்த்தப் பட வில்லை . இன்னும் கேரளாவில பல லட்சம் கோடி  நல்ல நீர் வீணாக கடலில் கலக்கிறது ...ஆனாலும் குடி நீருக்காக வரும் சிறுவானி அணை நீரை கேரள அரசு அரசியலாக்கி பணம் பண்ண நினைக்கிறது .....கேவலம் . தமிழ் நாட்டில் கேடு கெட்ட திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி மக்களை ஏமாற்றி ஏமாற்றி கோடீஷ்வரகளாக ஆனதுதான் மிச்சம் .....மக்கள் மாறினால்தான் இதற்கு விடுவு பிறக்கும்

கலகம் பிறந்தால்...

நியாயம் பெறும் என்பர்....

நியாயம் என்றாவது அம்மக்களுக்கு கிட்டும்...

அனியாயமாகச் சேர்க்கும் பணம் ....

இறுதியில் எடுத்துச் செல்வதில்லையே !!!!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum