சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Today at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர் ஆசிரியர்'

View previous topic View next topic Go down

Sticky மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர் ஆசிரியர்'

Post by ராகவா on Sun 22 Jun 2014 - 17:40

சென்னை: ''மாணவர்களின் திறமைகள், புத்திசாலித்தனம் ஆகியவற்றை, வெளிக்கொண்டு வருபவர்கள் ஆசிரியர்கள்,'' என, பேராசிரியை பர்வீன் சுல்தானா தெரிவித்தார்.

சொற்பொழிவு:

சென்னை, கீழ்ப்பாக்கம், ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளியில், கணித மேதை, பி.கே.ஸ்ரீனிவாசனின், ஒன்பதாம் ஆண்டு, நினைவு சொற்பொழிவு, நேற்று நடந்தது. இதில், பர்வீன் சுல்தானா பேசியதாவது: யார் ஒருவர் இறந்த பின்பும், அவரை பற்றி பேசுகிறோமோ, அவர் தான் சிறந்த மனிதர். அச்சம் எப்போது, தவிர்க்கப்படுகிறதோ, அப்போது தான், கற்றல் தோன்றுகிறது. குழந்தைகளை புரிந்து கொள்ளாதவர்கள், பாவிகள். குழந்தையின் மொழியில், கணிதத்தை கற்று கொடுத்தவர் ஸ்ரீனிவாசன். அவர், அறிவியல் பாடங்களுக்கு, ஆய்வு கூடம் இருப்பது போல், கணித பாடத்திற்கும் ஆய்வு கூடம் தேவை என்ற கருத்தை வலியுறுத்தியவர்.

உயர்ந்த நிலை:

மாணவர்கள், மனப்பாடம் செய்து படிப்பதை விட, புரிந்து கொண்டு படிக்க வேண்டும். நிறைய மதிப்பெண் வாங்கினால், அதிகம் சம்பாதிக்கலாம். அதே சமயம், நன்றாக புரிந்து படித்தால், நாம் அடுத்தவருக்கு சம்பளம் கொடுக்கும் நிலை உருவாகும். மாணவர்களின் திறமைகள், புத்திசாலித்தனம் ஆகியவற்றை, வெளிக் கொண்டு வருபவர்களே ஆசிரியர்கள். எனவே, அவர்களின் சொற்படி நடந்தால், வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

பி.கே.சீனிவாசன் மக னும், தொழில் ஆலோசகருமான கண்ணன் ஸ்ரீனிவாசன் பேசியதாவது: தலைசிறந்த கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றை, பட்டித் தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தவர், பி.கே.ஸ்ரீனிவசாசன். கணிதம் மீது, வெறுப்பு ஏற்படாத வகையில், மாணவர்களுக்கு எப்படி கற்றுத் தர வேண்டும் என்பதற்காக, பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவரிடம் பாடம் படித்த பலர், இன்று, கணித பேராசிரியர்கள், மேதைகளாக, உலகின் பல்வேறு இடங்களில், பணிபுரிகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

-தினமலர்

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர் ஆசிரியர்'

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 1:01

எங்கள் இலங்கைத் திரு நாட்டிலும்....

 ஆசிரியப் பெருந் தகைகளை மதிப்பதுதான்...

ஆனால்...அத்தகைமைகளின் நாகரீக....

நடத்தைக் கோலங்கள் ...அலங்கோலமாக.....

இருப்பதுதான் மனம் கணக்கிறது...

ஓர் சில ஆசிரியத் தகைமையீனர்கள்.....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர் ஆசிரியர்'

Post by rammalar on Mon 23 Jun 2014 - 6:06

அம்மா அப்பாவுக்கு அடுத்த ஸ்தானத்தில்
வைத்து எண்ணப்படுபவர் ஆசிரியர்
-
இன்றும் பல நல்லாசிரியர்கள் இருக்கத்தான்
செய்கிறார்கள்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர் ஆசிரியர்'

Post by jasmin on Mon 23 Jun 2014 - 13:50

பர்வீன் சுல்தானா நல்ல பேச்சாளர் பட்டிமன்ற பேச்சாளர்கூட , திறமையாக பேசுவார் .. நல்லாசிரியர்கள் எங்கும் இருக்கிறார்கள் இடையே சில கருப்பு ஆடுகள் நுழைந்து விடுகின்றன என்ன செய்வது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர் ஆசிரியர்'

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 18:50

jasmin wrote:பர்வீன் சுல்தானா நல்ல பேச்சாளர் பட்டிமன்ற பேச்சாளர்கூட , திறமையாக பேசுவார் .. நல்லாசிரியர்கள் எங்கும் இருக்கிறார்கள் இடையே சில கருப்பு ஆடுகள் நுழைந்து விடுகின்றன என்ன செய்வது

அதிகமாய் மாணவப் பிஞ்சுகளை...

வெள்ளை ஆடுகளும் மேய்கிறது உறவுக் காரியே !!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர் ஆசிரியர்'

Post by rammalar on Mon 23 Jun 2014 - 18:58

Association of Mathematics Teachers of India (AMTI)
என்ற அமைப்பு உருவாக முக்கியமான காரணியாக
இருந்தவர் கணித மேதை, பி.கே.ஸ்ரீனிவாசன்,
-
இந்த அமைப்பின்மூலம் பல்வேறு ஊர்களுக்கும்
சென்று கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள்
நடத்தி அதன்மூலம் பள்ளிகளில் கணிதம்
பயிற்றுவிப்பதை 'ஜாலியான' ஒரு நிகழ்வாக மாற்ற
பாடுபட்டவர்
-
முதலாம் ஆண்டு நினைவையொட்டி அவரது
குடும்பத்தினர் அவரைப்பற்றிய(பி.கே.எஸ்)
ஒரு குறும்படத்தைத் திரையிட்டுனர்
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர் ஆசிரியர்'

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 19:34

rammalar wrote:Association of Mathematics Teachers of India (AMTI)
என்ற அமைப்பு உருவாக முக்கியமான காரணியாக
இருந்தவர் கணித மேதை, பி.கே.ஸ்ரீனிவாசன்,
-
இந்த அமைப்பின்மூலம் பல்வேறு ஊர்களுக்கும்
சென்று கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள்
நடத்தி அதன்மூலம் பள்ளிகளில் கணிதம்
பயிற்றுவிப்பதை 'ஜாலியான' ஒரு நிகழ்வாக மாற்ற
பாடுபட்டவர்
-
முதலாம் ஆண்டு நினைவையொட்டி அவரது
குடும்பத்தினர் அவரைப்பற்றிய(பி.கே.எஸ்)
ஒரு குறும்படத்தைத் திரையிட்டுனர்
-

மிக அருமையான முயற்சி.....

நாங்கள் படிக்கும் போது...

கணிதம் என்றாலே...

எனக்கு மந்திரம் தான்...

எதிர் கால சந்ததிகளுக்கு....

இவைகள் ஒளிமயமாகும் என நம்புகின்றேன்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர் ஆசிரியர்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum