சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

கண்றாவி காதல்கள்

Go down

Sticky கண்றாவி காதல்கள்

Post by ahmad78 on Wed 25 Jun 2014 - 13:44

தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகள் இவை. எத்தகைய சீரழிவை நோக்கி இந்தச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்கள் உதாரணம்.
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்!
பள்ளிக்குச் சென்ற தனது மகளைக் காணவில்லை என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியின் தந்தை ஒருவர் புகார் தந்தார். 'பள்ளிக்குச் சென்று விசாரித்தபோது, அவள் இன்று பள்ளிக்கு வரவே இல்லை என்று சொல்லிவிட்டார்கள்’ என்று அவர் சொல்ல... உடனடியாக போலீஸார் விசாரணையில் இறங்கினர். அந்தப் பெண் படிக்கும் பள்ளி, தோழிகள், உறவினர்கள் என்று விசாரித்தும் எந்தப் பயனும் இல்லை. அந்தப் பெண் பயன்படுத்திய செல்போனில் அதிகமாகப் பேசிய ஒருவன், அந்தப் பெண் பள்ளிக்குச் செல்லும்போதும் திரும்ப வரும்போதும் பின்தொடர்ந்த ஒருவன், அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவன் என மூன்று நபர்களை அள்ளிக்கொண்டு வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்களும், அந்தப் பெண்ணைப் பார்க்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
அந்தப் பெண்ணின் தந்தை, 'சார்... நம்ப வேண்டாம். இவனுகதான் என் மகளை எங்கோ கடத்தி வைத்துக்கொண்டு தெரியாது என்று சொல்கிறார்கள்’ என்று அழவே... போலீஸார் அவர்களை நையப் புடைத்தனர். அப்போது, மூவரில் ஒருவனுடைய செல்போன் ஒலித்தது. 'சார்... இது என் பொண்ணு நம்பர்’ என்று அலறுகிறார் அந்தப் பெண்ணின் தந்தை. அவனைப் பேசச் சொன்னார்கள் போலீஸார். அந்தப் பெண், 'எங்கடா இருக்க? உன்னை நம்பி வீட்டை விட்டு வந்துட்டேன். நீ உடனே சென்னை கிளம்பி வந்துடுடா. நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழலாம். எனக்கு வீட்டில் நிம்மதி  இல்லை’ என்று சொன்னாள். 'இப்போ நீ எங்கே இருக்க?’ என்று இவன் கேட்க, அதற்கு பதில் சொல்லாமல், 'நீ உடனே கிளம்பி சென்னை வா!’ என்று சொல்லிவிட்டு கட் செய்துவிட்டாள்.
அடுத்தடுத்து மற்ற இரண்டு பையன்களுக்கும் அந்தப் பெண்ணிடம் இருந்து போன் வர... போலீஸார் பேசச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமும் அதே வசனத்தை வார்த்தை மாறாமல் பேசியிருக்கிறாள் அந்தப் பெண். ஆனால் யாரிடமும், தான் இருக்கும் இடத்தைச் சொல்லவே இல்லை. இந்தப் பேச்சுக்களைக் கேட்ட அனைவரும் தலை கிறுகிறுத்துதான் போனார்கள். பிறகு, அந்தப் பெண் பேசிய செல்போன் டவரை கண்காணிப்பு செய்தபோது, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து அந்தப் பெண் பேசியது தெரிய வந்தது. திருப்பூர் போலீஸாருக்கு அந்தப் பெண்ணின் புகைப்படத்தோடு தகவல் தரப்பட்டது. அடுத்த 10 நிமிடங்களில் அந்தப் பெண்ணை அலேக்காக தூக்கிவிட்டனர். தேனிக்கு கொண்டுவந்த பிறகு அந்தப் பெண்ணிடம், ''ஏன்மா ஒரே நேரத்துல மூணு பேர லவ் பண்ணிருக்க. அதுவும் ஒரே நேரத்துல வரச் சொல்லியிருக்க?'' என்று போலீஸார் கேட்க... ''லவ் ஃபெயிலியர்னா என்னால தாங்கிக்க முடியாது. ஒருத்தன் விட்டா இன்னொருத்தன் இருப்பான்ல. எப்படியும் மூணு பேரும் ஒழுங்கா வர மாட்டாங்க. அப்படியே வந்தாலும், யார் முதல்ல வர்றாங்களோ அவனோட கிளம்பியிருப்பேன்'' என்று கூலாக பதில் சொல்லியிருக்கிறாள். அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய பெற்றோருக்கும் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தது போலீஸ்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கண்றாவி காதல்கள்

Post by ahmad78 on Wed 25 Jun 2014 - 13:44

எனக்கு 19... உனக்கு 22...
கல்லூரியில் படிக்கும் என் மகளை கடந்த 10 நாட்களாகக் காணவில்லை!’ என்ற புகாரோடு வந்தார் ஒரு தந்தை. அந்தப் பெண்ணின் செல்போன் இன்கம்மிங் - அவுட்கோயிங் விவரங்களை அலசியதில், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குப் பேசியது தெரிய வந்தது. அந்த எண்ணுக்கு உரிய பையனோடு அந்தப் பெண் ஓடிவிட்டதும் தெரியவந்தது. லேட்டஸ்டாக அவர்கள் செல்போனில் தொடர்புகொண்ட ஆட்களை விசாரிக்க, கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு என்ற இடத்தில் ஒரு டீ எஸ்டேட்டில் அவர்கள் இருப்பது தெரிய வந்தது.  அவர்களைத் தூக்கி வந்து போலீஸார் விசாரித்தபோது மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.
''அந்தப் பெண்ணுக்கு 22 வயசு. அந்தப் பையனுக்கு 19 வயசு. அவன் முதலாம் ஆண்டு படிக்கும்போது, இந்தப் பெண் மூன்றாம் ஆண்டு. இருவரும் வேறு வேறு கல்லூரி. ஒரு வருடத்துக்கு முன் செல்போனில் ஆரம்பித்த காதல் ஃபேஸ்புக் மூலம் தொடர... இருவரும் ஊரைவிட்டு ஓடியிருக்கின்றனர். கோயிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். 'சினிமாக்களில் வருவதுபோல முதலிரவு வேண்டும்’ என்று அந்தப் பெண் ஆசையாகச் சொல்ல... கட்டிலில் பூ தூவி அலங்காரம் செய்து, பழம், பால் என்று நண்பர்களின் ஏற்பாட்டில் கொண்டாடி உள்ளனர். இப்படியே ஒரு வாரம் சந்தோஷமாகக் கழிந்தது'' என்று சொல்லியிருக்கின்றனர்.
போலீஸ் ஸ்டேஷன் வந்த பிறகு, 'எங்கள் பெண் வந்தால் போதும்’ என்று பெண் வீட்டில் சொல்ல, 'பிரச்னை வராமல் என்ன செய்தாலும் ஓகே’ என்று பையன் வீட்டில் சொல்ல... குறுக்கே புகுந்திருக்கிறார் அந்தப் பெண். ''எனக்கு இவன் வேண்டாம். நான் என் அம்மா அப்பாவோட போறேன். என் செலவுக்குத் தேவையான பணத்தை இவனால சம்பாதிக்க முடியல. எல்லாத்தையும் நண்பர்கள்கிட்ட எதிர்பார்க்குறான். ஆனா, காதலிக்கும்போது அப்படி இல்ல. சினிமா, ஹோட்டல்னு நல்லா செலவு செய்வான்'' என்று சொல்லிவிட்டு, பெற்றோருடன் புறப்படத் தயாராகி இருக்கிறாள். அந்தப் பையன் போலீஸ் ஸ்டேஷனிலேயே, கீழே படுத்து உருண்டு புரண்டு அழ... 'விடுடா தம்பி’ எண்று அந்தப் பையனைத் தேற்றி ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர் போலீஸார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கண்றாவி காதல்கள்

Post by ahmad78 on Wed 25 Jun 2014 - 13:46

இவள் வேற மாதிரி!
'9-ம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவியைக் காணவில்லை’ என்று அந்தப் பள்ளி நிர்வாகமே புகார் கொடுக்க... செல்போன் டவர் கொண்டு ஆராய்ச்சியில் இறங்கியது போலீஸ். திருப்பூர், கோவை ஏரியாக்களில் இருப்பதாக டவர் காட்டிக்கொடுக்க... அந்தப் பெண்ணையும் அவருடன் இருந்த நபரையும் போலீஸார் தூக்கிக்கொண்டு வந்தனர். விசாரணையில்தான், அந்தப் பெண்ணோடு இருந்தது அவரது ஆசிரியர் என்று தெரிய வந்தது.
அவரை நையப் புடைத்து விசாரித்தபோது, ''அந்த மாணவிதான் என்னை மிரட்டி செக்ஸ் வைத்துக்கொள்கிறார். அவர் அழைக்கும்போது போகவில்லை என்றால், போலீஸில் புகார் செய்வேன் என்று மிரட்டுகிறார்'' என்று பரிதாபமாகச் சொல்ல... ஆடிப்போய்விட்டனர் போலீஸார். இதுபற்றி விசாரணையில் இறங்க... அந்தப் பெண் செல்போன் மூலம் 30-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பேசிவருவது தெரிய வந்துள்ளது. இவருக்கும் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்துள்ளனர் போலீஸார்.
இந்தச் சம்பவங்களை எல்லாம் உற்று கவனிக்கும் சமூக ஆர்வலர்களோ, ''குழந்தை வளர்ப்பில் குறைபாடு உள்ளதுதான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். என்ன செய்கிறோம் என்று தெரியாத இரண்டாங்கெட்ட வயசு பதின்ம வயது. அப்போது பெற்றோர் கண்காணிப்பில் குழந்தைகள் இல்லாவிட்டால், இதுபோன்று வழிதவறி போய்விட வாய்ப்பு உள்ளது. படிக்கும்போது பல வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும்போது, நல்ல விஷயங்களைவிட கெட்ட விஷயங்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். இப்போது நடைபெற்ற அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் செல்போன் இருப்பதைப் பார்த்தாலே இது புரியும்'' என்கிறார்கள்.
பாசத்தோடு கண்டிப்பும் தேவை!
- சண்.சரவணக்குமார்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கண்றாவி காதல்கள்

Post by பானுஷபானா on Wed 25 Jun 2014 - 14:20

!* !* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16679
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கண்றாவி காதல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum