சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

2016 சட்டசபை தேர்தல் இலக்கு:மீண்டும் துளிர்விடும் விஜய் அரசியல் ஆசை

Go down

Sticky 2016 சட்டசபை தேர்தல் இலக்கு:மீண்டும் துளிர்விடும் விஜய் அரசியல் ஆசை

Post by ராகவா on Wed 25 Jun 2014 - 17:09

லோக்சபா தேர்தல் முடிவுகள், அகில இந்திய அளவில் பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக வந்திருப்பதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் ரொம்பவும் சந்தோஷமாகி விட்டார். கொஞ்ச காலம், தமிழகத்தில் அரசியல் சூழ்நிலைகள் சரியில்லாததால், தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை அமுக்கிப் போட்டிருந்த அவர், மீண்டும் எதிர்கால திட்டத்துடன், பல்வேறு காரியங்களில் இறங்கி இருப்பதாக, அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் செய்தி பரவி இருக்கிறது.

கருத்து வேறுபாடு


இது தொடர்பாக, விஜய் ஆதரவாளர்கள் வட்டாரங்களில் கூறியதாவது:கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், தலைமையிடம் நெருக்கமாக இருந்து செயல்பட்டார் விஜய். ஆனால், சில விஷயங்களில் தி.மு.க., தரப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட, விஜய்யின் தந்தை சந்திரசேகர், தி.மு.க., தரப்பு மீது கோபமானார்.இதனால், சந்தடியில்லாமல் இருந்த விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தை, அரசியல் இயக்கமாக மாற்ற முடிவெடுத்து, அதற்கான காரியங்களை மெல்ல மெல்ல செய்து கொண்டிருந்தார். வாய்ப்பு கிடைத்தால், தன் மகன் விஜய்யை தமிழகத்தின் முதல்வராக்கி விட வேண்டும் எனவும் முடிவெடுத்தார். இந்ந நேரத்தில், 2011ல் சட்டசபை தேர்தல் வந்தது. அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளித்து, விஜய் நற்பணி மன்றத்தினருக்கு, 'சீட்' கேட்டனர். சீட் கொடுக்கவில்லை. இருந்தாலும், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்தனர். அ.தி.மு.க., வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனார்.ஆனால், அ.தி.மு.க.,வின் வெற்றி தங்களால் தான் ஏற்பட்டது என்கிற ரீதியில் விஜய்யின் அப்பா சந்திரசேகர் பேச ஆரம்பித்தார். இந்த விவரம் அ.தி.மு.க., தலைமைக்கு செல்ல, ஜெயலலிதா, விஜய் தரப்பு மீது கோபமடைந்தார்.

இந்நிலையில், தன்னுடைய பிறந்த நாள் விழாவை சென்னை, தாம்பரம் ஜெயின் கல்லூரியில் வைத்து கொண்டாட ஏற்பாடு செய்தார் விஜய். அந்த விழாவுக்கு, கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது போலீஸ். இதனால், அ.தி.மு.க., தலைமை மீது விஜய் தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். தொடர்ச்சியாக, விஜய் படம் துப்பாக்கிக்கு, அரசு தரப்பில் இருந்து குடைச்சல்கள் ஆரம்பமாகின. இதனால், அறிவிக்கப்பட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகவில்லை. நீண்ட இழுபறிக்குப் பின் படம் ரிலீசானதால், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால், ரொம்பவும் அப்செட் ஆனது விஜய் தரப்பு. கொஞ்ச நாட்கள் சினிமா, அரசியல் என்று எந்த நடவடிக்கையும் இல்லாமல் அமைதியாக இருந்தனர்.இந்த நிலையில், 2014 லோக்சபா தேர்தல் வர, இந்தியா முழுவதிலும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக அலை அடிப்பதை உணர்ந்து, நரேந்திர மோடி பக்கம் தன் பார்வையைத் திருப்பினார் விஜய். பிரசாரத்துக்காக கோவைக்கு வந்த மோடியை நேரில் சந்தித்து, தன் ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.எதிர்பார்த்தது போலவே, நரேந்திர மோடி ஆட்சி மத்தியில் அமைந்துவிட, மீண்டும் விஜய்க்கு அரசியல் ஆசை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தின் பிரதான கட்சியான தி.மு.க., தோல்வி அடைந்ததோடு, ஓட்டு வங்கியில் சரிவும் ஏற்பட்டுவிட, அ.தி.மு.க.,வுக்கு எதிரான பிரதான கட்சி இல்லாத வெற்றிட சூழல் தமிழகத்தில் ஏற்பட்டிருப்பதாக விஜய் தரப்பு உணருகிறது.

சரியாக அரசியல் செய்தால், தி.மு.க., இடத்தை நிரப்புவதோடு, 2016ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் எனவும் நம்புகின்றனர். இதற்காக, ம.தி.மு.க., - தே.முதி.க., - பா.ம.க., - காங்கிரஸ், தி.மு.க., போன்ற கட்சிகளில் அதிருப்தியாக இருக்கும் பலரிடமும் பேசி வருகின்றனர். அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, 2016 தேர்தலுக்கு முன், அரசியல் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்பது, விஜய் தரப்பின் எண்ணம். அதற்கு முன்னதாக, தன்னை தமிழக அரசியல் களத்தில் பிரதானப்படுத்தும் வேலையை செய்வது என முடிவெடுத்துள்ளனர்.

கடித பின்னணி


அந்த வகையில் தான், தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டாராக தன்னை காட்டும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறார். அதேபோல, சினிமா சேவை வரியை குறைப்பது குறித்து, மோடிக்கு கடிதம் எழுதிய பின்னணியும் இதுதான். அடுத்து, தமிழகம் முழுவதும் தன் பிறந்த நாள் விழாவை, பிரமாண்டமாக கொண்டாடவிருக்கிறார்.'கத்தி' படத்தை ரிலீசுக்கு முன், பிரதமர் மோடிக்கு போட்டு காட்டி, அரசியல் மற்றும் சினிமா அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும், ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தவும் திட்டங்கள் தீட்டப்படுகிறது. இப்படி, தன்னுடைய எல்லா நடவடிக்கைகளிலும் அரசியல் நோக்கத்தை பிரதானமாக வைத்து செயல்படுகிறார் விஜய். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 2016 சட்டசபை தேர்தல் இலக்கு:மீண்டும் துளிர்விடும் விஜய் அரசியல் ஆசை

Post by முனாஸ் சுலைமான் on Wed 25 Jun 2014 - 20:30

தம்பி விஜய்க்கு சொல்லி வைங்கோ அரசியல் அரசியல் வாதிகளுக்குத்தான் என்று நடிகர்களுக்கல்ல.. இன்று நடிகர்மார் இந்தியாவை ஆழ வந்து எல்லாவற்றையும் நடிப்பாக நினைக்கினம்..
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum