சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

சான்றோரின் வாழ்வில்...

View previous topic View next topic Go down

Sticky சான்றோரின் வாழ்வில்...

Post by Nisha on Sun 29 Jun 2014 - 12:23

வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல தத்துவங்களை உதிர்த்திருப்பவர் சாக்ரடீஸ்.
உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியவர்களுள் தலையாய தலைவர் சாக்ரடீஸ். தத்துவஞானிகளின் தந்தை என்றும் போற்றப்படுபவர்.

இந்த தத்துவஞானியின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவம் ஒன்று, நண்பரோடு வெகுநேரம் நின்று அவர் பேசிக் கொண்டிருப்பதை விரும்பாத அவர் மனைவி அவரைக் கடுமையாகத் திட்டினார். அப்போதும் நண்பரோடு பேசிக் கொண்டிருப்பதை சாக்ரடீஸ் நிறுத்தவில்லை.

ஆத்திரமடைந்த மனைவி ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து அவர் தலையில் ஊற்றினார்.

எந்த ஒரு மனிதரும் அந்த நிலையில் கடும் கோபத்துக்குத் தான் ஆளாகியிருப்பார். நண்பரின் முன்னிலையில் மனைவி தனக்கு ஏற்படுத்திய அவமானத்தையும் சாக்ரடீஸ் ரசித்தார். ‘’முன்பு இடி இடித்தது, இப்போது மழை பெய்கிறது’’ என்று நண்பருக்கு விளக்கம் சொன்னார்.

சாக்ரடீஸால் இவ்வாறு எப்படிப் பேச முடிந்தது? ஆங்கிலத்தில் Sense of Humour என்று சொல்வார்கள். நகைச்சுவை உணர்ச்சியின் உன்னத நிலையிலிருந்தே சாக்ரடீஸ் இந்த விமர்சனத்தைச் செய்திருக்க வேண்டும் என்பது சந்தேகமில்லை.

லங்காசிறி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky சான்றோரின் வாழ்வில்...

Post by Nisha on Sun 29 Jun 2014 - 13:12

சுதந்திரப் போராட்டத்தில் திலகர் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம் அது. அவரின் நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள ஆங்கிலேய அரசு, போலீஸ்காரர் ஒருவரை உளவாளியாக சமையல்காரன் வடிவில் திலகரின் வீட்டுக்கு அனுப்பியது. சில மாதங்கள் சென்றது. "நீங்கள் வழங்கும் சம்பளம் போதவில்லை; கூடுதலாக வழங்க வேண்டும்'' என்று திலகரிடம் கேட்டான் சமையல்காரன்.

"ஏனப்பா, நான் உனக்கு ஆறு ரூபாய் தருகிறேன். ஆங்கில அரசாங்கமோ உனக்கு 26 ரூபாய் தருகிறது. உனக்கு இன்னும் திருப்தி ஏற்படவில்லை என்றால் உன் முதல் எஜமானர் ஆங்கில அரசிடம்தான் கேட்க வேண்டும்'' என்றார் திலகர்.

இதைக்கேட்டவுடன் சமையல்காரன் வடிவில் இருந்த போலீஸ்காரர் `எஸ்கேப்' அகிவிட்டார். அதன்பின் திலகரின் வீட்டுப்பக்கம் அவர் திரும்பி பார்க்கவே இல்லை.

ஆங்கில அரசின் உளவாளியால் தனக்கு ஆபத்து எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதை உணர்ந்த பின்னும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செயல்பட்ட திலகரின் சகிப்புத்தன்மையை பாராட்ட வார்த்தைகளே இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சான்றோரின் வாழ்வில்...

Post by jasmin on Sun 29 Jun 2014 - 13:15

அருமையான செய்திகள் ச்கோ நண்பன்  அறிய வேண்டிய விடயங்கள்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சான்றோரின் வாழ்வில்...

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 14:18

அருமையாக உள்ளது நிஷா அக்கா..தொடருங்கள்....இன்னும் அரிய ஆவலாக உள்ளேன்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சான்றோரின் வாழ்வில்...

Post by நண்பன் on Sun 29 Jun 2014 - 21:52

jasmin wrote:அருமையான செய்திகள் ச்கோ நண்பன்  அறிய வேண்டிய விடயங்கள்
தெரிந்து சொன்னீர்களோ தெரியாமல் சொன்னீர்களோ எனக்குத் தெரியாது சகோ 
ஆனால் திலகர் சாக்ரடீஸ் அவர்கள் இருவரையும் இப்போது நீங்கள் நேரில் பார்க்க முடியாது ஆனால் இப்போது நண்பனின் ரூபத்தில் பார்க்கலாம்  !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சான்றோரின் வாழ்வில்...

Post by Nisha on Mon 30 Jun 2014 - 1:48

குசாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"

வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"

அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."

"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"

"அதில்லை..."

"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"

"இல்லை"

"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"

"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று
சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சான்றோரின் வாழ்வில்...

Post by ahmad78 on Mon 30 Jun 2014 - 10:15

நிகழ்வுகள் அருமை

தொடருங்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சான்றோரின் வாழ்வில்...

Post by jasmin on Mon 30 Jun 2014 - 11:51

இருந்தாலும் நண்பன் அண்ணாவுக்கு இவ்வளவு அதீத மூளை கூடாது சாக்ரடீஷும் திலகரும் இணைந்தால் சென்னை கீழ்ப்பாக்கம் தான் உங்கள் தங்குமிடமாக இருக்கும் ..
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சான்றோரின் வாழ்வில்...

Post by Nisha on Mon 8 Sep 2014 - 12:03

`கடைசி நாளிலும் காமராஜரின் கண்ணியம்'!


*******************************************************************
காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மரணம் அடைந்தார். செப்டம்பர் மாதக் கடைசியில் ஒருநாள் சத்தியமூர்த்தி பவன் நிர்வாகியை அழைத்தார்.
`வள்ளியப்பா.. இங்கே வா...!' என்று கூப்பிட்டவர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தார்.
பிறகு சொன்னார் `காங்கிரஸ் கட்சிப் பணம் 10 லட்சம் ரூபாய் நம்மகிட்ட இருக்கு. இந்தப் பணம் மாவட்டக் கமிட்டிகள் வசூலிச்சி நமக்கு அனுப்பிச்சதுங்கிறது உனக்குத் தெரியும். அந்தக் கணக்கெல்லாம் உன்கிட்டதான் இருக்கு.
இந்த 10 லட்சம் ரூபாயை இனிமே நாம கையில வச்சிருக்கக் கூடாது. அதை உடனே பேங்கிலே கட்டிட்டு வந்துடு...' என்றார்.
உடனே வள்ளியப்பன், `ஐயா.. பல மாவட்டக் கமிட்டிகள்லேருந்து இன்னும் பாக்கி நெறைய வர வேண்டியிருக்கே...' என்று தயக்கத்தோடு சொன் னார்.
காமராஜர் உடனே, `அதையெல்லாம் கணக்குல இன்னும் நீ பாக்கி எழுதி வச்சிகிட்டு இருக்கியா... அந்தத் தொகையெல்லாம் வராதுப்பா...! அவனவன் கட்சிக்குப் பணம் வசூல் பண்றதுக்காக வெளிïர்களுக்குக் கார் எடுத்துகிட்டு போயிருப்பான்.
டாக்ஸி வாடகை, பெட்ரோல், சாப்பாட்டுச் செலவுன்னு ஏராளமா செலவாகியிருக்கும்...! இதையெல்லாம் கட்சிக்காரவங்க கையிலேருந்தா கொடுக்க முடியும்...? பத்தாயிரம், இருபதாயிரம்னு பாக்கியிருந்தா அதையெல்லாம் விட்டுடு...
பெரிய தொகை வரவேண்டியிருந்தா அதுகள மட்டும் என்கிட்டே குறிச்சிக் கொடு. அந்தந்த மாவட்டத் தலைவர்கள் கிட்டே கேட்டு வசூல் பண்ணிப்பிடலாம்...'' என்றார்.
அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் பாங்கியில் பணத்தை கட்டச் சொல்வார் என்று வள்ளியப்பன் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, `இன்னிக்கே கௌம்பு... இப்பவே கொண்டு போய்க் கட்டிட்டு வந்துடு...!' என்று அவசரப்படுத்தினார்.
`போறதுக்கு முன்னே அழ.வள்ளியப்பாவுக்குப் போன் போட்டு சொல்விடு...' என்றார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு இந்தியன் பேங்கின் ஆயிரம் விளக்கு கிளையில் தான், (கண்ணம்மை பில்டிங்) வைக்கப்பட்டிருந்தது.
அந்த கிளையின் மேனே ஜராயிருந்த `குழந்தை கவிஞர்' அழ.வள்ளியப்பா, தலைவரிடம் மிகுந்த மரியாதை உடையவர். அவரே நேரடியாக 10 லட்சம் ரூபாய் கட்டுகளை எண்ணினார். எதிர்பாராத விதமாக ஒரு புது நூறு ரூபாய்கட்டில் ஒரு தாள் குறைந்தது.
மீண்டும், மீண்டும் எண்ணிப்பார்த்து விட்டு, அவர் தொலைபேசியில் காமராஜரை தொடர்பு கொண்டார். தலைவர், `சரி... சரி... நான் அனுப்பி வைக்கட்டுமா... நீ இப்போது போட்டுக் கொள்கிறாயா?' என்று கேட்டார் வள்ளியப்பா. `நான் போட்டுவிடுகிறேன்.
தகவலுக்காகத் தான் உங்ககிட்டே சொன்னேன்யா...!' என்று சொல்லிவிட்டுச் `செலானில்' `சீல்' போட்டுக் கொடுத்து விட்டார்.பணம் கட்டிய ரசீதையும், வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் வாங்கிப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.
மாறி, மாறி பார்த்த அந்தப் பார்வையில் தான் எவ்வளவு மகிழ்ச்சி... நிம்மதிப் பெருமூச்சு.ஊரார் தன்னை நம்பி ஒப்படைத்த அந்தப் பொது நிதியை, வங்கிக் கணக்கில் வரவு வைத்து விட்டு வர அவர் காட்டிய அவசரம் அன்று சத்தியமூர்த்தி பவன் நிர்வாகி வள்ளியப்பாவுக்கு புலப்படவில்லை. `தனக்கு முடிவு நெருங்கி விட்டது.'
என்று தலைவர் உள்ளூற உணர்ந்து விட்டாரோ என்னவோப காமராஜர் தன் கையில் பத்து லட்சம் ரூபாய்ப் பணம் வைத்திருந்தார் என்னும் பாவச் சொல்லுக்கு ஆளாகி விடக்கூடாது என்று அந்தப் புண்ணிய ஆத்மா பதறியிருக்கக் கூடும், ஆம்.
அது தான் அவர் கடைசியாக வங்கியில் கட்டிய பணம்.
கொஞ்சம் தாமதித்துக் கட்டலாம், சில நாள் போகட்டும் என்று விட்டிருந்தால் கூட, தலைவரைப் பற்றிய விமர்சனம், விஷமிகளால் வேறு விதமாக வந்திருக்கக் கூடும்.
`பொதுவாழ்வில் கற்பு' என்பதை ஒரு குடும்பப் பெண்ணைப் போலப் பாதுகாத்து வந்த அந்த உத்தமர். கடைசி நிமிடத்திலும் தனது கண்ணியத்தைக் காத்தார்.
செப்டம்பர் இறுதியில் பத்து லட்சத்தை வங்கியில் கட்டினார். அக்டோபர் 2-ஆம் தேதி அவர் மறைந்தார். அவர் படுக்கையில் இருந்த பணம் பத்து ரூபாய்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சான்றோரின் வாழ்வில்...

Post by Nisha on Wed 1 Oct 2014 - 18:58

என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால
குடியேற போறதா சொன்னேன் எல்லோரும்
சிரிச்சாங்க … 
ஆனா நான் அமெரிக்கால
குடியேறினேன்.!
என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன்
ஆகப்போறதா சொன்னேன். 
எல்லோரும் சிரிச்சாங்க …
நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.!
அதன்பிறகு நான் சினிமால பெரிய
ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும்
சிரிச்சாங்க … 
நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.!
சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன்
இனி அவ்வளவுதான் அப்டினு சொல்லி சிரிச்சாங்க …
நான் மீண்டும் மீண்டு வந்தேன்.!
என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர்
ஆகப்போறதா சொன்னேன் எல்லோரும் என்னைப்
பார்த்து சிரிச்சாங்க …
நான் கவர்னர் ஆனேன்.! 
இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான்
திரும்பி பார்த்து சிரிக்கிறேன் … அவர்கள் எல்லாம்
அதே இடத்துல தான் இருக்காங்க … தன்னம் பிக்கையாலும் என்னோட
கடின உழைப்பாலயும் ,
நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது.!
எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க
சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த
கூடாது.!
அது அவர்களின் வியாதி
நம்மை பற்றியும் தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும்
அவர்களுக்கு எதுவும் தெரியாது.!

- கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சான்றோரின் வாழ்வில்...

Post by நண்பன் on Wed 1 Oct 2014 - 19:07

Nisha wrote:என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால
குடியேற போறதா சொன்னேன் எல்லோரும்
சிரிச்சாங்க … 
ஆனா நான் அமெரிக்கால
குடியேறினேன்.!
என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன்
ஆகப்போறதா சொன்னேன். 
எல்லோரும் சிரிச்சாங்க …
நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.!
அதன்பிறகு நான் சினிமால பெரிய
ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும்
சிரிச்சாங்க … 
நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.!
சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன்
இனி அவ்வளவுதான் அப்டினு சொல்லி சிரிச்சாங்க …
நான் மீண்டும் மீண்டு வந்தேன்.!
என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர்
ஆகப்போறதா சொன்னேன் எல்லோரும் என்னைப்
பார்த்து சிரிச்சாங்க …
நான் கவர்னர் ஆனேன்.! 
இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான்
திரும்பி பார்த்து சிரிக்கிறேன் … அவர்கள் எல்லாம்
அதே இடத்துல தான் இருக்காங்க … தன்னம் பிக்கையாலும் என்னோட
கடின உழைப்பாலயும் ,
நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது.!
எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க
சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த
கூடாது.!
அது அவர்களின் வியாதி
நம்மை பற்றியும் தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும்
அவர்களுக்கு எதுவும் தெரியாது.!

- கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு.
எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க
சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த
கூடாது.!
அது அவர்களின் வியாதி
நம்மை பற்றியும் தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும்
அவர்களுக்கு எதுவும் தெரியாது.!
!_ !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சான்றோரின் வாழ்வில்...

Post by Nisha on Sun 9 Nov 2014 - 23:17

அப்போது காமராஜர் முதல்வராக இருந்த சமயம்...

ஒருநாள் அவரிடம் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகி, தனது இல்லத் திருமணத்துக்கு காமராஜர் வரவேண்டுமென்று கேட்டு, அழைப்பிதழோடு வந்தார்.
அவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த காமராஜர் தியாகியின் வறுமை நிலையை உணர்ந்து கொண்டார்.

அந்தத் திருமண நாளில் தனக்கு வேறு வேலை இருப்பதாகவும் அதனால் திருமணத்துக்கு வர இயலாது என்பதையும் குறிப்பால் உணர்த்தினார். தியாகி வருத்தத்தோடு வீடு திரும்பினார்.

திருமண நாள் வந்தது. காமராஜரின் கார் அந்தத் தியாகியின் வீட்டு வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி வந்த காமராஜரைப் பார்த்ததும் தியாகியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

காமராஜர் அவரிடம், ""நீ அழைப்பிதழ் கொடுத்தபோது உன் வீட்டுத் திருமணத்துக்கு வர முடிவு செய்துவிட்டேன். ஆனால் இதை நான் அப்பவே சொல்லியிருந்தால், முதலமைச்சர் வருகிறார் என்று ஏகப்பட்ட கடன் வாங்கித் திருமணத்தைத் தடபுடலாக நடத்தியிருப்பாய். உன்னை கடன்காரனாக ஆக்க நான் விரும்பவில்லை'' என்று கூறியதும் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சான்றோரின் வாழ்வில்...

Post by நண்பன் on Mon 10 Nov 2014 - 17:42

அக்கா காமராஜரைப் பற்றி அறிந்திருக்கிறேன் ஆனால் இந்தப் பதிவை இப்பதான் முதலில் படிக்கிறேன்

படித்துக்கொண்டிருக்கும் போது அவர் திருமணத்திற்கு வருவதில்லை என்று சொன்னார்
ஆனால் பாருங்கள் நான் அப்போதே எண்ணி விட்டேன் கண்டிப்பாக இந்தத் திருமணத்திற்கு காமராஜர் செல்வார் அப்படி என்று என் உள் மனது எண்ணியது அப்படியே நடந்திருக்கிறது )* )*

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நானும் மெய்சிிர்த்துப்போனேன்
சிறப்பான பகிர்வுக்கு நன்றி அக்கா
மாறா அன்புடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சான்றோரின் வாழ்வில்...

Post by சுறா on Mon 10 Nov 2014 - 19:34

இந்த திரி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அர்னால்டு வாழ்க்கையில் அடைந்த முன்னேற்றம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சான்றோரின் வாழ்வில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum