சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா மீது அமெரிக்கா நேரடி குற்றச்சாட்டு

Go down

Sticky மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா மீது அமெரிக்கா நேரடி குற்றச்சாட்டு

Post by நண்பன் on Tue 22 Jul 2014 - 9:44

மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா மீது அமெரிக்கா நேரடி குற்றச்சாட்டு
உக்ரைனில் வைத்து மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா உடந்தையாக இருந்ததற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க ராஜங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைக்கு ரஷ்யா பொறுப் பேற்க வேண்டும் என்றும் கெர்ரி வலியுறுத்தியுள்ளார். கடந்த வியா ழக்கிழமை ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் எம்.எச்.17 விமானத்தில் இருந்த 298 பேரும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பயன் படுத்தப்பட்டதாக நம்பப்படும் விமான எதிர்ப்பு முறையை கிளர்ச்சியாளர் களுக்கு ரஷ்யா வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த குற்றச் சாட்டை அது தொடர்ந்தும் மறுத்து வருகிறது.

முன்னதாக இந்த விபத்தில் கொல்லப்பட்ட 196 பேரது உடல்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டு கிழக்கு உக்ரைனின் டொரஸ் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சடலங்களை பெறுவதற்காக இரண்டாவது ரயில் வண்டி ஒன்று சம்பவ இடத்திற்கு வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை 251 உடல்கள் மற்றும் 86 உடற் பாகங்கள் மீட்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிகாரி கள் நேற்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் ரயிலில் ஏற்றப்பட்டிருக்கும் உடல் களை அடையாளம் காணும் நடவடிக்கைக்காக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்வதற்கு அரச தரப்புக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருகின்றன.

எனினும் சுதந்திரமான விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கு சர்வதேச நிபுணர்களுக்கு முழு மையான பாதுகாப்பு அளிப்பது கட்டாயமானதாகும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வலி யுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் ரஷ்யாவில் இருந்து உக்ரைனுக்கு பாரிய இராணுவ விநியோகங்கள் அனுபப்பட்டதை அமெரிக்கா அவதானித்தது என்று குறிப்பிட்ட கெர்ரி, இதில் கவச வாகனங்கள், பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளும் அடங்குவதாக விப ரித்தார்.

தொலைபேசி அழைப்பை இடை மறுத்து பெறப்பட்ட தகவலுக்கு அமைய ரஷ்யாவின் எஸ்.ஏ.-11 ஏவுகணை முறை கிளர்ச்சியாளர் பகுதிக்கு கொண்டு செல்லப் பட்டது உறுதியானது என்று கெர்ரி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எம்.எச்.17 விமானம் நொறுங்கி விழுந்ததன் பின்னர் அந்த ஏவுகணை முறை மீண்டும் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப் படும் வீடியோ ஒன்றையும் அமெ ரிக்கா அவதானித்தாக அவர் கூறி னார்.

இந்நிலையில் ரஷ்யா மீது மேலும் கடுமையான பொருளா தார தடைகளை விதிக்கவுள் ளதாக எச்சரித்த கெர்ரி, தமது ஐரோப்பிய கூட்டணி நாடுகளும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

உக்ரைன் தொடர்பிலான நிலைப்பாட்டை ரஷ்யா மாற்றிக்கொள்ளாதபட்சத்தில் ஐரோப்பா மற்றும் மேற்குலகம் ரஷ்யாவுடனான உறவில் அடிப்படை மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் குறிப்பிட்டார்.

விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தின் தரவு களை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பிடம் கையளிப்பதாக ரஷ்ய ஆதரவு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆனால் விமானத்தின் முக்கிய ஆதாரங்களை கிளர்ச்சியாளர்கள் அழித்துவிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum