சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Yesterday at 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

பாசத்தின் விலை.....

View previous topic View next topic Go down

Sticky பாசத்தின் விலை.....

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 27 Aug 2014 - 16:46


எத்தனை உறவுகள் 
என்னோடு தானிருந்தும் 
பாசத்திற்காய் மாத்திரம் 
ஏங்குகின்ற அனாதை நான் 

கோடிகள் கொட்டிக்கொடுத்திருந்தும் 
கேடியென்றுரைக்கிறார்கள் 
பணமாகிய காகிதம் 
அற்பமென்றுணராது 

சோற்றுக்கு வழியற்று
சேற்றில் கிடந்தோரை 
கரைசேர்த்த நான் 
கோபுரத்திலமர்த்தினேன் 
உச்சியிலிருந்து ஏழனம் செய்கிறார்கள் 

அம்மாவும் அப்பாவும் 
அண்ணனும் நங்கையுமாய் 
ஆதரவு என்னாலடைந்திருந்தும் 
ஆனாதரவாய் நானிங்கு 

தூர தேசம் கடந்திருந்து 
சம்பாதித்த காகிதத்தை 
அடைந்தவர்களுக்குத் தெரியவில்லை 
அதன் பின்னாலுண்டான 
வலியும் வேதனையும் 

பிணத்திற்குச் சமனான பணத்தினை 
மதிக்கின்ற மானிடத்திற்கு 
மனிதனுள் தேடும் 
பாசத்தினை உணரத்தெரியவில்லை 

அரவணைத்து ஆறுதல் 
கூறவேண்டிய உறவுகளிடமிருந்து 
பாசத்திற்காய் ஏலம்விடப்படுகிறது 
பாசத்தின் விலை பணமென்றானதில் 
வெறுக்கின்ற மனமிங்கு 
பார் துறக்கத்துடிக்கிறது........




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பாசத்தின் விலை.....

Post by நண்பன் on Wed 27 Aug 2014 - 18:08

ரொம்ப ரொம்ப வலிகள் நிறம்பியதாக உள்ளது வரிகள்

தூர தேசம் கடந்திருந்து
சம்பாதித்த காகிதத்தை
அடைந்தவர்களுக்குத் தெரியவில்லை
அதன் பின்னாலுண்டான
வலியும் வேதனையும்

இந்த வரிகளில் உள்ள உண்மை எத்தனை என்பதை நானுமறிவேன்
தூர இருந்து பார்ப்பவர்களுக்கு நாம் அனுப்பும் பணம் மாத்திரம்தான் தெரியும் அதன் பின் நாம் படும் வேதனைகள் ரணங்கள் யாரும் அறிவதில்லை சில பல தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு மாதம் பணம் அனுப்ப தாமதமானால் கத்தம் ஓதும் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன்..!

சோற்றுக்கு வழியற்று
சேற்றில் கிடந்தோரை
கரைசேர்த்த நான்
கோபுரத்திலமர்த்தினேன்
உச்சியிலிருந்து ஏழனம் செய்கிறார்கள்

நிதர்சனம் உண்மைகளைப் போட்டு உடைக்கிறீர்கள் சிலர் மௌனமாக இருந்தாலும் அவர்கள் மனதிலும் பல வலிகளும் வேதனைகளும் சூழ்ந்துதான் உள்ளது வெவ்வேறு கோணங்களில்

நேசமுடன் ஹாசிம் உங்கள் வரிகள் மனதில் பல வலிகளை நினைவூட்டியது
மாறா அன்புடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாசத்தின் விலை.....

Post by Nisha on Wed 27 Aug 2014 - 19:02


நேசமுடன் ஹாசிம் wrote:
எத்தனை உறவுகள்
என்னோடு தானிருந்தும்
பாசத்திற்காய் மாத்திரம்
ஏங்குகின்ற அனாதை நான்

யாருமில்லா தனித்தவர்கள் அனாதை என சொல்லலாம்
பாசத்துக்காய் ஏங்கும் அனாதைக்கு இன்னொரு அனாதையின் அன்பும் பாசமும் கிடைத்தபின் எப்படி அனாதை உணர்வு வரும்.

பாசத்துக்காய் ஏங்கும் அனாதை நான் நெஞ்சை குத்தி வலிக்க செய்த வரிகள்.


கோடிகள் கொட்டிக்கொடுத்திருந்தும் 
கேடியென்றுரைக்கிறார்கள் 
பணமாகிய காகிதம் 
அற்பமென்றுணராது 

நிஜம் தான் ஹாசிம்! கோடிகோடியாய் ஊனுறக்கம் இன்றி உடலை வருத்தி கொட்டினாலும் கடைசியில் நீ அப்படி என்ன செய்து விட்டாய் என சொல்லும் மனிதராய் தான் இவ்வுலகில் அனேகர் இருக்கின்றார்கள். அன்பு, பாசம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, வாக்குமாறாமை என நீங்களும் நானும் இன்னும் ஓரு சிலரும் தான் சொல்லிக்கொண்டு வலிகளையும் வாங்கிக்கட்டிகொள்கின்றோம்.!


சோற்றுக்கு வழியற்று
சேற்றில் கிடந்தோரை 
கரைசேர்த்த நான் 
கோபுரத்திலமர்த்தினேன் 
உச்சியிலிருந்து ஏழனம் செய்கிறார்கள் 

அதுதான் அழகாய் சோற்றுக்கு வழியின்றி சேற்றில் கிடந்தோர் என சொல்லி யாகி விட்டதே. சேற்றில் கிடந்தோரை தூக்கி கோபுரத்தில் வைத்த நம் மடைமைத்தனத்தினை என்ன சொல்வது? கோபுர்த்தில் இருந்தோர் ஒரு நாள் குப்புற விழுவர்.. ஆனால் குடிசையில் இருந்தாலும் குணமாய் இருக்கும் நாம் குனிந்து பார்க்கும் நிலை வராது ஹாசிம்!

அம்மாவும் அப்பாவும் 
அண்ணனும் நங்கையுமாய் 
ஆதரவு என்னாலடைந்திருந்தும் 
ஆனாதரவாய் நானிங்கு 

என்ன சொல்வதென பெரியவில்லை. எல்லாமிருந்தும் அனாதை எனும் உணர்வின் வலியை நானும் உண்ர்ந்திருக்கின்றேன்! உங்கள் வரிகளில் காணும் போது நெஞ்சம் வலிக்கிறது!

தூர தேசம் கடந்திருந்து 
சம்பாதித்த காகிதத்தை 
அடைந்தவர்களுக்குத் தெரியவில்லை 
அதன் பின்னாலுண்டான 
வலியும் வேதனையும் 

நிஜம் தாம்! நாய் விற்ற காசு குரைக்குமா? மாட கோபுரங்களும் மாடி வீடுகளுமாய் வானத்திலிருந்து வந்த தேவதையாய் வாழ்வோருக்கு தெரியுமா அதற்கு பின்னாலிருக்கும் வலியும் வேதனையும்!

பிணத்திற்குச் சமனான பணத்தினை 
மதிக்கின்ற மானிடத்திற்கு 
மனிதனுள் தேடும் 
பாசத்தினை உணரத்தெரியவில்லை 

நான் உணர்ந்திருக்கின்றேன் ஹாசிம்! அதனால் தான் கோடி கோடியாய இருந்தாலும பலரால் அற்பமாய் எண்ணப்படும் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டு படுகின்றேன். எங்கள் அன்பில் கட்டுண்ட நீங்கள் ஏன் உங்களை உணராதோரிடம் அன்பை பாசத்தை எதிர்பார்க்கின்றோர்கள்? அதை அள்ளிக்கொடுக்க நாங்கள் இருக்கும் போது வருந்தாதீர்கள்!

அரவணைத்து ஆறுதல் 
கூறவேண்டிய உறவுகளிடமிருந்து 
பாசத்திற்காய் ஏலம்விடப்படுகிறது 
பாசத்தின் விலை பணமென்றானதில் 
வெறுக்கின்ற மனமிங்கு 
பார் துறக்கத்துடிக்கிறது........

எப்படி எப்படி? இப்படி சொல்லித்தான் இன்று நண்பன் தும்பியிடம் அட்வைஸ் மழை வாங்கி கட்டிகொண்டேன். அதென்னமோ எனக்குள்ளும் இவவுலகில் நீண்ட காலம் வாழணும் எனும் ஆசையோ வேண்டலோ இல்லை. என் பிள்ளைகள் தாங்கள் படித்து தங்கள் சுயமாய் வாழும் காலம் வரை வாழ்ந்தால் போதும் . அதற்கும் இறைவன் அனுமதி தருவானோ யார் அறிவார். எல்லாம் இறைவன் சித்தம் தான்!

மொத்தமாய் கவிதை வரிகள் உண்ர்ச்சிகளில் கொந்தளிப்பாய். அக உணர்வை வெளிப்படுத்துவதாய் படிக்கும் நொடியில் கண்களில் கண்ணீரை வரசெய்வதாய் இருக்கின்றதுப்பா!

இப்படி வலிகளோடு எழுதிடும் நேரம் உங்கள் மனமும் வலிக்குமே! சோர்வுகள் தொடருமே ஹாசிம்! தனித்திருக்கும் நேரம் சோர்ந்திடாது உற்சாகமாய் எழுதுங்கள்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பாசத்தின் விலை.....

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 27 Aug 2014 - 19:50

நண்பன் wrote:ரொம்ப ரொம்ப வலிகள் நிறம்பியதாக உள்ளது வரிகள்

தூர தேசம் கடந்திருந்து
சம்பாதித்த காகிதத்தை
அடைந்தவர்களுக்குத் தெரியவில்லை
அதன் பின்னாலுண்டான
வலியும் வேதனையும்

இந்த வரிகளில் உள்ள உண்மை எத்தனை என்பதை நானுமறிவேன்
தூர இருந்து பார்ப்பவர்களுக்கு நாம் அனுப்பும் பணம் மாத்திரம்தான் தெரியும் அதன் பின் நாம் படும் வேதனைகள் ரணங்கள் யாரும் அறிவதில்லை சில பல தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு மாதம் பணம் அனுப்ப தாமதமானால் கத்தம் ஓதும் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன்..!

சோற்றுக்கு வழியற்று
சேற்றில் கிடந்தோரை
கரைசேர்த்த நான்
கோபுரத்திலமர்த்தினேன்
உச்சியிலிருந்து ஏழனம் செய்கிறார்கள்

நிதர்சனம் உண்மைகளைப் போட்டு உடைக்கிறீர்கள் சிலர் மௌனமாக இருந்தாலும் அவர்கள் மனதிலும் பல வலிகளும் வேதனைகளும் சூழ்ந்துதான் உள்ளது வெவ்வேறு கோணங்களில்

நேசமுடன் ஹாசிம் உங்கள் வரிகள் மனதில் பல வலிகளை நினைவூட்டியது
மாறா அன்புடன்
நண்பன்.
உங்களைப்போன்ற என்னைப்போன்றோரின் உள்ளக் குமிறல் என்றால் அது மிகையாகாது உண்மையில் உலகமே வெறுக்கும் நிலைதான் எமது நிலை நாம் எது செய்தாலும் அத்தனையும் 0 தான் 
போண் அழைப்புகள் வராதா என்று ஏங்கும் சந்தர்ப்பங்களில் அழைப்பு வரும் எதுக்கென்றால் காசு தேவையிருந்தால் மாத்திரம் அதுவரை எத்தனை காலமெடுத்தாலும் நினைத்துப்பார்த்தார்களா என்று கூட எடுத்துக்கொள்ள முடியாத அளவு இருப்பார்கள் 

மிக்க நன்றி நண்பன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பாசத்தின் விலை.....

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 27 Aug 2014 - 19:53

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
எத்தனை உறவுகள்
என்னோடு தானிருந்தும்
பாசத்திற்காய் மாத்திரம்
ஏங்குகின்ற அனாதை நான்

யாருமில்லா தனித்தவர்கள் அனாதை என சொல்லலாம்
பாசத்துக்காய்  ஏங்கும் அனாதைக்கு இன்னொரு அனாதையின் அன்பும் பாசமும் கிடைத்தபின்  எப்படி அனாதை உணர்வு வரும்.

பாசத்துக்காய் ஏங்கும் அனாதை நான்  நெஞ்சை குத்தி வலிக்க செய்த வரிகள்.


கோடிகள் கொட்டிக்கொடுத்திருந்தும் 
கேடியென்றுரைக்கிறார்கள் 
பணமாகிய காகிதம் 
அற்பமென்றுணராது 

நிஜம் தான் ஹாசிம்! கோடிகோடியாய் ஊனுறக்கம் இன்றி உடலை வருத்தி கொட்டினாலும் கடைசியில் நீ அப்படி என்ன செய்து விட்டாய் என சொல்லும்  மனிதராய் தான் இவ்வுலகில் அனேகர் இருக்கின்றார்கள்.  அன்பு, பாசம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, வாக்குமாறாமை என நீங்களும் நானும் இன்னும் ஓரு சிலரும் தான்  சொல்லிக்கொண்டு வலிகளையும் வாங்கிக்கட்டிகொள்கின்றோம்.!


சோற்றுக்கு வழியற்று
சேற்றில் கிடந்தோரை 
கரைசேர்த்த நான் 
கோபுரத்திலமர்த்தினேன் 
உச்சியிலிருந்து ஏழனம் செய்கிறார்கள் 

அதுதான் அழகாய் சோற்றுக்கு வழியின்றி சேற்றில் கிடந்தோர் என சொல்லி யாகி விட்டதே.  சேற்றில் கிடந்தோரை தூக்கி  கோபுரத்தில் வைத்த நம் மடைமைத்தனத்தினை  என்ன சொல்வது?  கோபுர்த்தில் இருந்தோர் ஒரு நாள் குப்புற விழுவர்.. ஆனால் குடிசையில் இருந்தாலும் குணமாய் இருக்கும் நாம்  குனிந்து பார்க்கும் நிலை வராது ஹாசிம்!

அம்மாவும் அப்பாவும் 
அண்ணனும் நங்கையுமாய் 
ஆதரவு என்னாலடைந்திருந்தும் 
ஆனாதரவாய் நானிங்கு 

என்ன சொல்வதென  பெரியவில்லை. எல்லாமிருந்தும் அனாதை எனும் உணர்வின் வலியை நானும் உண்ர்ந்திருக்கின்றேன்! உங்கள் வரிகளில் காணும் போது நெஞ்சம் வலிக்கிறது!

தூர தேசம் கடந்திருந்து 
சம்பாதித்த காகிதத்தை 
அடைந்தவர்களுக்குத் தெரியவில்லை 
அதன் பின்னாலுண்டான 
வலியும் வேதனையும் 

நிஜம் தாம்! நாய் விற்ற காசு குரைக்குமா?  மாட கோபுரங்களும் மாடி வீடுகளுமாய்  வானத்திலிருந்து வந்த தேவதையாய் வாழ்வோருக்கு தெரியுமா அதற்கு பின்னாலிருக்கும் வலியும் வேதனையும்!

பிணத்திற்குச் சமனான பணத்தினை 
மதிக்கின்ற மானிடத்திற்கு 
மனிதனுள் தேடும் 
பாசத்தினை உணரத்தெரியவில்லை 

நான் உணர்ந்திருக்கின்றேன் ஹாசிம்! அதனால் தான் கோடி கோடியாய இருந்தாலும பலரால் அற்பமாய் எண்ணப்படும் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டு படுகின்றேன். எங்கள் அன்பில் கட்டுண்ட நீங்கள் ஏன் உங்களை உணராதோரிடம் அன்பை பாசத்தை எதிர்பார்க்கின்றோர்கள்? அதை அள்ளிக்கொடுக்க நாங்கள் இருக்கும் போது  வருந்தாதீர்கள்!

அரவணைத்து ஆறுதல் 
கூறவேண்டிய உறவுகளிடமிருந்து 
பாசத்திற்காய் ஏலம்விடப்படுகிறது 
பாசத்தின் விலை பணமென்றானதில் 
வெறுக்கின்ற மனமிங்கு 
பார் துறக்கத்துடிக்கிறது........

எப்படி எப்படி?  இப்படி சொல்லித்தான் இன்று  நண்பன் தும்பியிடம்  அட்வைஸ் மழை வாங்கி கட்டிகொண்டேன். அதென்னமோ எனக்குள்ளும் இவவுலகில் நீண்ட காலம் வாழணும் எனும் ஆசையோ வேண்டலோ இல்லை.  என் பிள்ளைகள் தாங்கள் படித்து தங்கள் சுயமாய் வாழும் காலம் வரை வாழ்ந்தால் போதும் . அதற்கும் இறைவன் அனுமதி தருவானோ யார் அறிவார். எல்லாம் இறைவன் சித்தம் தான்!

மொத்தமாய் கவிதை வரிகள் உண்ர்ச்சிகளில் கொந்தளிப்பாய். அக உணர்வை வெளிப்படுத்துவதாய் படிக்கும் நொடியில் கண்களில் கண்ணீரை வரசெய்வதாய் இருக்கின்றதுப்பா!

இப்படி வலிகளோடு எழுதிடும் நேரம் உங்கள் மனமும் வலிக்குமே!  சோர்வுகள் தொடருமே ஹாசிம்! தனித்திருக்கும் நேரம் சோர்ந்திடாது உற்சாகமாய் எழுதுங்கள்.

அக்கா உண்மையைச்சொன்னால் உங்களதும் எனது கதை ஒன்றுதான் உங்களது கவலையும் என்னை வெகுவாக பாதித்திருந்தது கவிதை ஒன்றை பல நாட்களின் பின் எழுத நேர்ந்ததில் மனதில் இருந்த பாரத்தினைத்தான் இறக்கிவைத்து விட்டேன் மிக்க நன்றி வரிக்கு வரி விளக்கமழித்து கவிதையினை முழுமைப்படுத்தியிருக்கிறீர்கள் இவைகளை எம்மைச் சார்ந்தவர்களைச் சென்றடையாவிட்டாலும் எமது மனக் குறைகள் அகன்றுவிட்டதாக உணர முடிகிறது 
மிக்க நன்றி நன்றிகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பாசத்தின் விலை.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum