சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

பெங்களூரில் இருந்து விமானத்தில் வந்த இதயம்: சென்னை நோயாளிக்கு பொருத்தப்பட்டது

View previous topic View next topic Go down

Sticky பெங்களூரில் இருந்து விமானத்தில் வந்த இதயம்: சென்னை நோயாளிக்கு பொருத்தப்பட்டது

Post by Nisha on Thu 4 Sep 2014 - 13:14

பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இங்குள்ள நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. 

கர்நாடக மாநில எல்லையில் வசித்த தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் கடந்த 1-ந் தேதி ஓசூர் மெயின் ரோட்டில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 


அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் கெங்கேரியில் உள்ள பி.ஜி.எஸ். குளோபல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் அவரது உடல்நிலை மோசமாகி மூளைச்சாவு அடைந்தார். 

இந்த தகவல் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட அவர்கள் கதறி அழுதனர். ஆனால் பெண்ணின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயல் இழக்கவில்லை. அதை பெண்ணின் குடும்பத்தாரிடம் தெரிவித்த டாக்டர்கள் அந்த உறுப்புகளை பிறருக்கு தானமாக வழங்கலாம் என்றும் கூறினார்கள். 

அதை கேட்ட அந்த பெண்ணின் குடும்பத்தார் தாங்கள் மிகுந்த சோகத்தில் இருந்தபோதிலும், பிறருக்கு வாழ்வு கிடைக்குமே என்று கருதி அந்த பெண்ணின் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக் கொண்டனர். 


உடனடியாக, அவரது உடலில் உள்ள உறுப்புகளை தானம் செய்வதற்கான நோயாளிகளை டாக்டர்கள் தேர்வு செய்தனர். இதில் அவரது 2 கண்கள், 2 சிறு நீரகங்களை பெங்களூரில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இதயத்தை தானம் பெறும் நோயாளிகள் பெங்களூரில் இல்லாததால், தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் இதய நோயாளியை தேர்வு செய்ய முடிவு செய்தனர். 

சென்னை அடையாறில் உள்ள போர்டீஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மும்பையை சேர்ந்த 40 வயது ஆணுக்கு இதயத்தை பொருத்துவதாக முடிவு செய்யப்பட்டு, மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயத்தை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். பெண்ணின் உடலில் இருந்த இதயத்தை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். 

இதயம் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட பிறகு 6 மணி நேரம் வரை மட்டுமே அதன் செயல்பாடு இருக்கும் என்பதால், அதை நேற்று மாலை 3.30 மணி விமானத்தில் சென்னைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பாதுகாப்பான பெட்டியில் வைக்கப்பட்ட இதயம், குளோபல் ஆஸ்பத்திரி ஆம்புலன்சு வேனில் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்னொரு ஆம்புலன்சு வேனில் போர்டிஸ் மலர் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சென்றனர். 

கெங்கேரி ஆஸ்பத்திரியில் இருந்து சர்வதேச விமான நிலையம் வரை 45 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த தூரத்தை சாதாரணமாக போக்குவரத்து நெரிசலில் கடந்து செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 2 மணி நேரம் ஆகும். அதிலும் பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூர் ரோட்டில் விரைவாக செல்ல வேண்டும் என்றால், அதற்கு போக்குவரத்து போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம் என்று உணர்ந்திருந்த டாக்டர்கள் முன்னதாகவே இந்த தகவலை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு தெரிவித்தனர். 

அதன்பேரில் இதயம் எடுத்து செல்லப்பட்ட ஆம்புலன்சு வேன் சிக்னல்களில் நிற்காமல் விமான நிலையத்துக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னால் போக்குவரத்து போலீசார் வழியில் எங்கும் பச்சை சிக்னல் ஏற்படுத்தும்படி வயர்லஸ் மூலம் கூறியபடியே செல்ல, அதை பின்தொடர்ந்து 2 ஆம்புலன்சு வேன்களும் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் நோக்கி விரைந்தன. 

சுமார் 62 நிமிடத்தில் 45 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து அந்த ஆம்புலன்சு வேன்கள் விமான நிலையத்தை அடைந்தன. பின்னர் விமானத்தில் மதியம் 3.22 மணிக்கு இதயம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. 

வழக்கமாக பெங்களூரில் இருந்து ஏர்-இந்திய விமானம் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மாலை 4.30 மணிக்கு வந்து சேரும். ஆனால் இதயம் கொண்டு வரவேண்டியது இருந்ததால் 8 நிமிடங்கள் முன்னதாக மாலை 3.22 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தை விமானி பிரேம்சங்கர் இயக்கினார். இதில் 85 பயணிகளும் பயணம் செய்தனர். மாலை 4.22 மணிக்கு சென்னை வரவேண்டிய விமானம், 6 நிமிடங்களுக்கு முன்னதாக மாலை 4.16 மணிக்கு தரை இறங்கியது. 

ஓடுபாதையில் வந்து நின்று கதவுகள் திறக்க குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் ஆகும். ஆனால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு 4 நிமிடங்களில் அதாவது 4.20 மணிக்கு விமானத்தை நிறுத்தி கதவை திறக்கச் செய்தார். டாக்டர்கள் பாவுலின் கிருஷ்ணமுரளி, ராஜீ, சவுத்திரி ஆகியோர் பாதுகாப்புடன் இதயத்தை கொண்டு வந்தனர். முதலில் இதயத்துடன் இவர்கள் விமானத்தில் இருந்து கீழே இறங்கினார்கள். 

இதயத்தை கொண்டு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ், விமான நிலையத்தின் உள்ளே ஓடுபாதைக்கு அருகில் அனுமதிக்கப்பட்ட விவரம் தெரியாமல் இதயத்துடன் வெளியே செல்ல முற்பட்டனர். விமான நிலையத்தின் உள்ளே ஆம்புலன்சு நிறுத்தப்பட்டு இருக்கும் தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருக்கும் பகுதிக்கே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு இந்த ஆம்புலன்ஸ் அங்கு இருந்து புறப்பட்டு அடையார் மலர் ஆஸ்பத்திரியை நோக்கி புறப்பட்டது. அங்கு இருந்து மலர் ஆஸ்பத்திரி 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தூரத்தை 7 நிமிடத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர் இதயத்தை 4.37 மணிக்கு கொண்டு வந்தார். 

உடனடியாக, இதயம் மருத்துவமனைக்குள் கொண்டு செல்லப்பட்டு, ஏற்கனவே 3.45 மணியளவில் இருந்து ஆபரேஷன் தியேட்டரில் தயார் நிலையில் இருந்த நோயாளிக்கு இதயத்தை பொருத்துவதற்கான ஆபரேஷன் தொடங்கப்பட்டது. மாலை 4.38 மணிக்கு தொடங்கிய இந்த ஆபரேஷன் இரவு 8.30 மணிக்கு முடிவடைந்தது. 

வெற்றிகரமாக நடைபெற்ற ஆபரேஷன் மூலம் தமிழ்நாட்டு இளம் பெண்ணின் இதயம் மும்பை ஆணின் உடலில் பொருத்தப்பட்டு தனது இயக்கத்தை இடைவிடாமல் தொடர்ந்தது. போர்டீஸ் மலர் மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவர் டாக்டர் சுரேஷ் ராவ் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த ஆபரேஷனை செய்து முடித்தனர்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெங்களூரில் இருந்து விமானத்தில் வந்த இதயம்: சென்னை நோயாளிக்கு பொருத்தப்பட்டது

Post by Nisha on Thu 4 Sep 2014 - 13:18

அவருக்கு இதயத்தை கொடுத்து தன்னுயிர் நீத்த அந்த பெண் ஆத்மா சாந்தி பெறட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெங்களூரில் இருந்து விமானத்தில் வந்த இதயம்: சென்னை நோயாளிக்கு பொருத்தப்பட்டது

Post by Nisha on Thu 4 Sep 2014 - 13:21

மாலைமலரில் வந்த செய்திக்கு  ஒருவர் கொடுத்த காமென்ட் இது!

மூளைச்சாவு'' என்ற பெயரில் உடல் உறுப்புகளுக்காகச் செய்யப்படும் உயிர் கொலை...! 


அண்மைக்காலமாக சாலைவிபத்துகளில் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு மயக்கமான நிலையிலுள்ள ஒருவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால், அவருக்கு ''மூளைச்சாவு'' ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லிவிடுகின்றனர்.


 உயிரோடு இருக்கும் அவரை அறுத்து, அவரது உடலில் நல்லவிதமாக இயங்கிக்கொண்டிருக்கும் இதயம், கண்கள், சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்றவற்றை அப்படியே வெளியே எடுத்து அதன் இயக்கம் அடங்குவதற்குள் குறிப்பிட்ட நேரத்திற்குள், வேகமாக அந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டு மாற்று உறுப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டு அவர்களை உயிர்பிழைக்கச் செய்கிறார்கள். 


மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரை இப்படியாக சாகடித்துக் குறைந்தது ஐந்து பேரையாவது உயிர்பிழைக்கச் செய்கிறார்கள். இது ஓர் அங்கிகரிக்கப்பட்ட ''உயிர் கொலை'' என்றுதான் சொல்லவேண்டும். இதைச் சட்டமும், அரசாங்கமும் எப்படி அனுமதிக்கிறது என்றுதான் புரியவில்லை. உடல்நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு உயிர்வாழ முடியாதவர்களைக்கூட ''கருணைக் கொலை'' செய்ய அனுமதியளிக்காத சட்டம், இந்த உயிர் கொலையை எப்படி வேடிக்கைப்பார்க்கிறது என்றுதான் புரியவில்லை.


 மூளைச்சாவு ஏற்பட்டவர்களுக்கு இதயம் இயங்கும்; மூச்சுக்காற்று உள்ளே போய் வெளியே வரும்; இரத்த ஓட்டம் இருக்கும்; நாடித் துடிப்பு இருக்கும்; சிறுநீரகங்களும் அதன் வேலையைச் செய்துகொண்டுதான் இருக்கும்; வயிறு உணவு கேட்கும். அதுமட்டுமல்ல மருத்துவர்களால் இறந்து விட்டதாகச் சொல்லப்படும் மூளைகூட இயங்கிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் எந்தவித சலனமும் அசைவும் இல்லாமல் விபத்துக்குள்ளானவர் படுத்துக்கொண்டிருப்பார். உயிரோடுதான் இருப்பார். அப்படி உயிரோடு இருப்பவர்களை அறுத்து இயங்கிக்கொண்டிருக்கும் உடலுறுப்புகளை எடுத்து ஒருவரைச் சாகடிப்பது என்பது எந்தவகையில் நியாயமாகும். 


பல தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரகம் திருடுவதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை. இரண்டும் ஒன்றுதான். மூளை இறந்துவிட்டால் மேலே சொன்ன அத்தனை இயக்கமும் நின்றுவிடும். அதனால் இது மூளைச்சாவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றும் அறியாத அப்பாவிகள்தான் இதில் பெரும்பாலும் பலியாகிறார்கள். அறிவியல் மற்றும் மருத்துவம் அதீதமாக வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் தலையில் அடிப்பட்டு கோமா நிலைக்குப் போனவர்களை இந்த மருத்துவத்தால் காப்பாற்றமுடியாதா...? 


நிச்சயம் முடியும். அதற்குக் காலதாமதம் ஆகலாம். நேரமும் பணமும் செலவாகலாம். அதுவரையில் அவர் உயிரோடுதான் இருப்பார். நிச்சயமாக ஒரு நாள் எழுந்து நடமாடுவார். ஆனால் அதுவரையில் காத்திராமல், தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை ''மூளைச்சலவை'' செய்துவிடுகிறார்கள். கோமாவில் இருப்பவர் எழுந்து நடமாட வாய்ப்பில்லை என்று சொன்னால் கூட பரவாயில்லை. உயிர்பிழைக்க வாய்ப்பில்லை அல்லது எழுந்து நடமாட அதிக காலம் பிடிக்கும், அதற்கு அதிக செலவாகும், அதற்கு மாதங்களாகலாம், வருஷங்களாகலாம் அல்லது எழுந்திருக்காமல்கூட முடியாமல் இறந்து விடலாம் என்றெல்லாம் குழப்பி உடலுறுப்பு தானத்திற்குச் சம்மதிக்க வைத்துவிடுகிறார்கள்.


 சரி... இந்த உடலுறுப்புகளை அந்த அப்பாவிகளிடமிருந்து தானமாக பெறுகிறார்களே தவிர, உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருப்பவர்களுக்கு தானமாக பொருத்தி அறுவை சிகிச்சை செய்வதில்லை. அந்த மாற்று அறுவை சிகிச்சைகளுக்குப் பல இலட்சங்களைப் பெறுகிறார்கள். அப்படியென்றால் இதுபோன்ற மாற்று அறுவை சிகிச்சை என்பது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவனையில் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போதே, நகரம் முழுதும் உள்ள மற்ற எல்லா மருத்துவமனைகளிலும், அது சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடமும் உடனடியாக பதியப்படுகிறது. சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்து வருபவர்களை அவர்களுக்கு மருத்துவம் செய்து நடமாட வைப்பதற்கு பதிலாக, ''உடலுறுப்புதானம்'' என்ற பெயரில் உயிர் கொலை செய்துவிடுகிறார்கள். 


இனியாவது அரசாங்கமும், சட்டத்துறையும், பொதுமக்களும் விழித்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற உயிர்கொலையை விசாரிக்க வேண்டும். மேலும் நடக்காமல் தடுத்து நிறுத்தவேண்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெங்களூரில் இருந்து விமானத்தில் வந்த இதயம்: சென்னை நோயாளிக்கு பொருத்தப்பட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum