சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Today at 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Today at 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Yesterday at 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Yesterday at 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Yesterday at 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

இருளாக்கிய வெண்மை..!

Go down

Sticky இருளாக்கிய வெண்மை..!

Post by Nisha on Fri 26 Sep 2014 - 23:29

இருளாக்கிய வெண்மை..!
___________________



சில நாட்கள் ஏன்தான் உதிக்கிறதோ என்று தோன்றும்.அந்த லிஸ்ட்டில் தான் கடந்த 23ம் தேதியும் சேர்ந்திருக்கிறது.
..
எல்லாரையும் பதை பதைக்க வைத்திருக்கிறது டில்லி உயிரியல் பூங்கா.அந்த 15 நிமிட வீடியோ காட்சி நம் கண் முன்னேயே நிழலாடுகிறது.
..
மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும்.
..
அந்த வாலிபன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்று முதலில் சொல்லப்பட்டது.
..
இன்று, அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், இரண்டு முறை அந்த வாலிபர் புலி இருக்கும் இடத்தில் குதிக்க முயற்சித்ததாகவும், ஆனால் பூங்கா பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டார் என்றும், அதன் பின்னர் பாதுகாவலர்களின் கண்களை மறைத்து, அந்த வாலிபர் உள்ளே குதித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
..
இதில் பல்வேறு கேள்விகள் எழும்புகிறது.
..
1.மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றால் அவரோடு அவரது நண்பர்கள் எப்படி வந்தார்கள்?

2.மன நிலை பாதிக்கப்பட்டவர் பள்ளி சீருடை அணிந்திருந்தது ஏன்?

3.இரண்டு முறை கீழே குதிக்க இருந்த அந்த வாலிபனைத் தடுத்த பாதுகாவலர்கள், ஏன் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்க முன் வர வில்லை?

4.உடன் வந்த நண்பர்களும் ஏன் அவரை அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கவில்லை?
..
கேள்விகள்..கேள்விகள்..எங்கெங்கும் விடையில்லாக் கேள்விகள்.
..
சரி..இந்தக் கேள்விகளால் தான் என்ன பயன்? இந்தக் கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால் மட்டும் அந்த வாலிபன் மீண்டு வரப் போகிறாரா?
..
இல்லை..இல்லவேயில்லை.
..
ஆனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில் நின்றது.
..
அது –
..
கற்றலினால் ஆன பயன் என்ன?
..
எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம்.
எல்லாம் சரிதான்.
..
ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..
..
ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே..
..
அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”
..
என்ற பாடலை காரணமேயில்லாமல், வக்கனையாய் மனப்பாடமாய் அறிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆனால் ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?
..
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர் கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால் அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10 நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.
..
ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.
..
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
..
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
..
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.
..
இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
..
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?
..
அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.
..
இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன?
..
தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.
..
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
..
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?
..
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி?
..
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
..
இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே.. ஒரு ஆசிரியனாய் நான் வெட்கப்படுகிறேன்
..
ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது.
..
மெக்சூத்தே.. இளம் வாலிபனே-
..
என்னை.. எங்களை மன்னித்து விடு..!

Arul Samuel Puliangudi


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இருளாக்கிய வெண்மை..!

Post by பானுஷபானா on Sat 27 Sep 2014 - 9:37



மிகவும் கொடூரமான செய்தி )* )* )*
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16660
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: இருளாக்கிய வெண்மை..!

Post by பானுஷபானா on Sat 27 Sep 2014 - 9:41

இப்படி செய்திருக்கலாமே அப்படி செய்திருக்கலாமே என பேசி பேசி ஓய்ந்தாச்சு.

அங்கே நின்ற பெண்களீன் துப்ப்ட்டாவை ஒன்று சேர்த்து கட்டி தூக்க்கி வீசி இருந்தால் சில காயங்களோடு தப்பி இருப்பான் .

ஆபத்து நேரத்தில் அறிவு மழுங்கி விடுகிறது.

இப்போது நினைத்தாலும் மனம் கலங்குகிறது :(
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16660
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: இருளாக்கிய வெண்மை..!

Post by நண்பன் on Sat 27 Sep 2014 - 10:13

மூன்று நாட்கள் முன்பு நானும் இந்தக் காட்சியைப் பார்த்தேன் பயங்கரமாக இருந்தது கனவு கண்டது போல்தான் என்னில் இருந்தது பயங்கரக் காட்சி
பானு அக்கா சொன்னது போல் மேலே இருந்தவர்கள் வீடியோ எடுப்பதையே முக்கியமாக கருதினார்கள் தவிர பாவம் அந்தப் பையனை காப்பாற்ற எண்ண வில்லை எண்ணி இருந்தால்
பானு அக்கா சொன்னது போன்று துப்பட்டாக்களை சேர்த்து அங்கு நின்றிருந்த ஆண்கள் கூக்குரலிட்டு கத்தி இன்னும் இரண்டு பேர் அங்கு பாய முற்பட்டிருந்தால் அந்த வாலியனின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்

இன்னும் மனது மறக்காத ஒரு காட்சியாக என் மனதில் )* )* _* _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இருளாக்கிய வெண்மை..!

Post by Nisha on Sat 27 Sep 2014 - 10:28

நான் வீடியோவை முழுதாக பார்க்கவில்லை. அந்த பையனை புலி பார்த்திட்டு இருப்பதை பார்த்ததுமே கட் செய்திட்டேன்.அதற்கு மேல் பார்க்கும் தைரியம் இல்லை. 

நாங்களும் இப்படி பெரிய மிருங்கங்கள் சிங்கம் புலி,  என பார்த்திருக்கோம். ஆனால  அது மிக உயரமான  கம்பி வலை அடித்தி ருப்பார்கள். நினைத்தாலும் எவரும் உள் நுழைய முடியாது. 

இந்த இடத்தில் பாதுகாப்பு  குறைவாய்தான் உள்ளது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இருளாக்கிய வெண்மை..!

Post by பானுஷபானா on Sat 27 Sep 2014 - 10:58

Nisha wrote:நான் வீடியோவை முழுதாக பார்க்கவில்லை. அந்த பையனை புலி பார்த்திட்டு இருப்பதை பார்த்ததுமே கட் செய்திட்டேன்.அதற்கு மேல் பார்க்கும் தைரியம் இல்லை. 

நாங்களும் இப்படி பெரிய மிருங்கங்கள் சிங்கம் புலி,  என பார்த்திருக்கோம். ஆனால  அது மிக உயரமான  கம்பி வலை அடித்தி ருப்பார்கள். நினைத்தாலும் எவரும் உள் நுழைய முடியாது. 

இந்த இடத்தில் பாதுகாப்பு  குறைவாய்தான் உள்ளது.

15 நிமிடம் புலி சும்மா தான் இருந்திருக்கு . பாதுகாப்பு அதிகாரிகள் என்ன தான் செய்து கொண்டிருந்தார்களோ _*
நான் ஒரு தடவை தான் பார்த்தேன் அத்ற்கு மேல் பார்க்க மனம் வரவில்லை.


சிக்கன் செய்தால் என் மகள் 2வது தடவையும் சாப்பாடு வாங்கி சாப்பிடுவா. இந்த வீடியோவை செய்தியில் பார்த்துட்டு சாப்பாடு வேணாம்னுட்டா.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16660
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: இருளாக்கிய வெண்மை..!

Post by பானுஷபானா on Sat 27 Sep 2014 - 10:58

Nisha wrote:நான் வீடியோவை முழுதாக பார்க்கவில்லை. அந்த பையனை புலி பார்த்திட்டு இருப்பதை பார்த்ததுமே கட் செய்திட்டேன்.அதற்கு மேல் பார்க்கும் தைரியம் இல்லை. 

நாங்களும் இப்படி பெரிய மிருங்கங்கள் சிங்கம் புலி,  என பார்த்திருக்கோம். ஆனால  அது மிக உயரமான  கம்பி வலை அடித்தி ருப்பார்கள். நினைத்தாலும் எவரும் உள் நுழைய முடியாது. 

இந்த இடத்தில் பாதுகாப்பு  குறைவாய்தான் உள்ளது.

15 நிமிடம் புலி சும்மா தான் இருந்திருக்கு . பாதுகாப்பு அதிகாரிகள் என்ன தான் செய்து கொண்டிருந்தார்களோ _*
நான் ஒரு தடவை தான் பார்த்தேன் அத்ற்கு மேல் பார்க்க மனம் வரவில்லை.


சிக்கன் செய்தால் என் மகள் 2வது தடவையும் சாப்பாடு வாங்கி சாப்பிடுவா. இந்த வீடியோவை செய்தியில் பார்த்துட்டு சாப்பாடு வேணாம்னுட்டா.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16660
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: இருளாக்கிய வெண்மை..!

Post by Nisha on Sat 27 Sep 2014 - 11:11

ஆபத்து வரும் போது  அதை செய்யலாம் இதை செய்யலாம் என  எதை செய்வது என நிதானிக்க முடியாத படி  பார்த்திருப்போம் மூளையும் மரத்து தான் போயிருக்கும். அதனால் எவரையும் குறை சொல்லிட இயலாது. வீடீயோ எடுப்பதும்.. வெளியில் சென்றாலே  காணும் சாட்சியை வீடீவில் பதிந்து அனுப்புவது இயல்பான படியால்  இயந்திரத்தனமாய் அமைந்திருக்கும்.

அதை விட தவறி விழுந்தாரோ..தானாய் விழுந்தாரோ.. விழுந்தவர்   கல்லூரி மாணவனா இளைஞனா திருமணமானவனா என்பதல்ல.. .. இதோ மரணம் சமீபம் எனும் உணர்வில் பயத்தில்  இருக்கும் கடைசி நொடி .. பயங்கரமானது. 

பயத்தில் மூச்சுத்திணறி இறந்திருக்கவும் வாய்ப்புக்கள் உண்டல்லவா?

இங்கெல்லாம் மிருகட்காட்சி சாலைகள் எனில் அது திறந்த வெளியாய் இருக்கும்.  வண்டிகளில் கூட்டுக்குள் அடைபட்டது போல் நாங்கள் இருப்போம்... மிருகங்கள் தம் இஷ்டப்படி   உலவும், உறுமும், வாகனம் செல்லும் பாதையில் இரு பக்கமும்  உயர்ந்த கம்பி வலை அடித்திருப்பார்கள்.  அதை விட  கொஞ்சம் வலிய மிருகங்கள் இருக்கும் இடத்தில்  குறிப்பிட்ட தூரத்துக்கு  தங்கள் வண்டியுடன் செக்ரூட்டியும் துப்பாக்கி யுடன் நிற்பார்கள். 

துப்பாக்கி கூட மயக்க மருந்து துப்பாக்கியாக தான் இருக்கும். ..தகுந்த பாகுகாப்பு முறையுடனான மிருககாட்சி சாலைகளை அமைப்பதும் கண்காணிப்பதும்  முக்கியம். 

பார்வையாளர்கள் நெருங்க முடியாத  படி  கம்பி வலைகள் இன்ஞும் முக்கியம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இருளாக்கிய வெண்மை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum