சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Today at 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Today at 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Today at 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Today at 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Today at 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Today at 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Today at 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Today at 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Today at 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Today at 13:05

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 19:03

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Yesterday at 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Yesterday at 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Yesterday at 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Yesterday at 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Yesterday at 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Yesterday at 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Yesterday at 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Yesterday at 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Yesterday at 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Yesterday at 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Yesterday at 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Yesterday at 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Yesterday at 18:03

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar Yesterday at 18:01

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar Yesterday at 18:00

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar Yesterday at 17:59

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar Yesterday at 17:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Wed 18 Oct 2017 - 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

.

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)

View previous topic View next topic Go down

Sticky தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)

Post by சே.குமார் on Sun 18 Jan 2015 - 18:29

முந்தைய பகுதிகள் : 

---------------------------------
பதினாறாவது பகுதியின் இறுதியில்...
"டேய்...சின்னக் காயம்ன்னு சொன்னே...?" என மணி வேகமாக எழுந்து வந்து பேக்கை வாங்க, "என்ன மாப்ள எல்லாருக்கும் அடிபட்டிருக்கு... அபிக்கு இத்தனை கட்டுப் போட்டிருக்காங்க... சின்ன காயந்தான்னு சொன்னே...' என கேட்டபடியே வந்தார் அழகப்பன்.

"இல்லண்ணே...சின்னக் காயந்தான்... கட்டுத்தான் பெரிசு... " சொல்லி வலியை மறைத்துச் சிரித்த அபி "மாமா எப்படியிருக்காங்க?" என்று கேட்டபடி வேகமாக ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாள். அப்போது அங்கு வந்து நின்ற காரில் இருந்து கண்மணியின் கணவன் ரமேஷ் இறங்கினான்.
இனி...
மேஷ் காரிலிருந்து இறங்கவும் உள்ளே நுழைந்த குமரேசனும் அபியும் மீண்டும் வாசலுக்கு வந்தார்கள். 'வாங்கத்தான்' என மணியும் குமரேசனும் சொல்ல தலையை மட்டும் ஆட்டினான். 'அண்ணே நல்லாயிருக்கீகளா?' என அபி கேட்க 'ம்' என்றான். 'வாப்பா' என்று அழகப்பன் சொல்லவும் 'அண்ணே...' என்றவன் 'எப்படியிருக்கீங்கண்ணே... மாமாவுக்கு இப்ப எப்படியிருக்கு... வேலை விஷயமா வெளிய போயிருந்தேன்..." என அவரிடம் பவ்யமாய் பேசினான்.
"கண்மணி சொன்னுச்சு... எனக்கென்ன நல்லாயிருக்கேன்... மாமா ரொம்ப பயமுறுத்திட்டாரு... ஐசியூவுல இருந்து வெளிய கொண்டாந்துட்டாங்க... இப்பப் பரவாயில்லை... போ... போய் பாரு..."
"ம்... சரிண்ணே..." என உள்ளே செல்ல, அழகப்பன் குமரேசனிடம் நீயும் அவன் கூட போவெனக் கண்ணைக் காட்டினார். பின்னாலேயே சென்ற அபியை கூப்பிட்டு அப்புறம் போகலாம் எனச் சொன்னார்.
"வாங்க... எப்படியிருக்கீங்க..?" தன்னைக் கடந்த ரமேஷிடம் கேட்டாள் சுந்தரி.
"நல்லாயிருக்கேன்... எந்த ரூம்...?"
"இந்தா இதுல கடைசி... அம்மா இருக்கு... இப்பத்தான் கண்மணி பாத்துட்டு வாறேன்னு போனா..."
பதில் சொல்லாது அவள் காட்டிய திசையில் நடந்தான். குமரேசன் அக்காவிடம் பேசிக் கொண்டு நின்றான். அவனின் முகம், கையெல்லாம் தடவிப் பார்த்தவள் எங்கடா அபி புள்ளைங்க எல்லாம் எனக் கேட்டு வாசலுக்கு விரைந்தாள்.
அதற்குள் அறைக் கதவை நாசூக்காக தட்டிவிட்டு உள்ளே சென்றான் ரமேஷ்.
"வாங்கப்பா..." என்றபடி சேரில் இருந்து எழுந்தாள் காளியம்மாள்.
"ம்..."
"உக்காருங்க..." 
பேசாமல் உக்கார்ந்தான். "என்ன மாமா பண்ணுச்சு...?" என்றான் கந்தசாமியிடம்.
"நெஞ்சுவலி வந்திருச்சுப்பா..." என்றாள் காளியம்மா.
"ம்..."
"வேலையாப் போனியன்னு கண்மணி சொன்னுச்சு..." மெதுவாகக் கேட்டார் கந்தசாமி.
"ஆமா... இப்பத்தான் வந்தேன்..."
"வீட்டுக்குப் பொயிட்டு வந்தீங்களா? ஸ்ரீ என்ன பண்றா..?"
"பொயிட்டுத்தான் வாறேன்... அதான் எங்கம்மா இருக்குதுல்ல... அப்புறம் என்ன... நீ ரெண்டு நாளைக்கி இருந்து பாத்துக்கிட்டு வா... நா கிளம்புறேன்..."
"சத்த இருங்க... நானும் வாறேன்... நாளக்கி வந்து பாத்துக்கிறேன்..."
"அங்க வந்து என்ன பண்ணப் போறே...? எல்லாரும் இங்க இருக்கயில நீ வந்துட்டா நாந்தேன் ஒட்டவிடாம கூட்டிக்கிட்டுப் பொயிட்டேன்னு பேசுவாங்க.... இருந்துட்டு வா... எங்கம்மா பாத்துக்கும்..." என்றான்.
அப்போது குமரேசன் உள்ளே வர, தன் பேச்சை நிறுத்தினான். தம்பியைப் பார்த்ததும் "என்னடா... அடி ரொம்பவா.. பிள்ளைங்க, அபியெல்லாம் எங்க...?" என்றாள் கண்ணகி.
"வெளிய இருக்குக..." என்றவனை "அடி ஆத்தி... இப்படி அடிபட்டு வந்திருக்கியே ராசா.... அதுக எங்க... அதுகளுக்கும் ரொம்ப அடி பட்டிருக்கா?... நல்லவேளைக்கு இத்தோட போச்சே... நம்ம குடும்பத்துக்கே நேரஞ்ச் சரியில்லை போல..." என கண்ணீரோடு அவனை அணைத்துக் கொண்டாள் காளியம்மா.
"வெளியில அத்தானுக்கிட்ட பேசிக்கிட்டு இருக்குக... அடியெல்லாம் ரொம்ப இல்லைம்மா... எதுக்குப் பதறுறே..? அப்பாவுக்கு எப்படியிருக்கு..." என்றவன் கந்தசாமிக்கிட்ட போய் "அப்பா.. " என்றழைத்த போது அவனை அறியாமல் கண்ணீர் வந்தது.
"ஏய்... எதுக்கு அழுவுறே...? என்னை விடு... உனக்கென்னாச்சுப்பா..?" பதறலாய் கேட்டார்.
"ஒண்ணுமில்லை... சின்ன ஆக்ஸிடெண்ட்...."
"ஆத்தி... புள்ளைங்க எங்கே... கூப்பிடு நா பாக்கணும்..."
"அப்பா.... உங்களுக்கு உடம்பு முடியலை... பதறக்கூடாது.. இருங்க இப்ப வருங்க..."
"கண்மணி." என மெதுவாக மனைவியை அழைத்தான் ரமேஷ்.
"என்னங்க..." என அவனருகில் வர, அவளிடம் மெதுவாக "எங்கடி விழுந்தானாம்?" என்று கேட்டான்.
"பஸ் ஆக்ஸிடெண்டாம்... வெளிய அபிய பாக்கலையா நீங்க... "
"ஆமா... பாத்தேன்... தலையில கட்டுப் போட்டிருந்துச்சி... ஏதோ ஞாபகம் ஒண்ணும் கேக்கலை..." என்றான் மெதுவாக.
"சரி.. இவனுக்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாமுல்ல..."
"ம்... என்னைய என்ன மானங்கெட்டவன்னு நினைச்சியா? " என்றவன் "அப்ப கிளம்புறேன் மாமா, பாருங்க... இல்லைன்னா சொல்லுங்க மதுரைக்கு போயி பாத்துட்டு வந்திருவோம்.... காசு பணத்தைப் பத்தி யோசிக்காதீக... எங்கிட்ட இருக்கு... நாஞ்செலவு பண்ணுறேன்... என்ன வரட்டுமா?" என்றவன் அவரின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வேகமாக வெளியேறினான்.
'நீயும் அவருகூட போயிட்டு வீட்டுக்கு கூட்டியாந்ததும் வா.. போ... ஊரு ஊரா சுத்திட்டு வர்ற மனுசனுக்கு அவுக ஆத்தா என்ன சமைச்சிப் போடும்... நீ போனியன்னா வாய்க்கு ருசியா சமைச்சிப் போடுவே... போகும் போது ஒத்தக்கடையில மீனு கெடந்தா வாங்கிக்கிட்டுப் போங்க" என மகளை விரட்டினாள் காளியம்மாள்.
"சரிம்மா... அப்பா பாத்துக்கங்க... தம்பி உடம்பைப் பாத்துக்கடா... " என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினாள்.
எல்லாரும் பேசிக் கொண்டு நிற்க, "என்ன அபி ஆக்ஸிடெண்டாமே... ரொம்ப அடியோ...?" என்றான் ரமேஷ்.
"இல்லண்ணே... சின்னக் காயந்தான்..."
"பசங்களுக்கும் அடியா...?"
"லேசா.."
"சரி உடம்பைப் பாத்துக்க... நா வர்றேன்.."
"இருங்கண்ணே... போகலாம்..."
"வேலையிருக்கு... அதான் உங்க அத்தாச்சி இருக்காளே... அண்ணே வர்றேண்ணே... பாருங்க... சரியா வரலைன்னா போன் பண்ணுங்க... மதுரைக்கு கொண்டு போயி காட்டிக்கிட்டு வந்திருவோம்... காசு பணத்தைப் பத்தி யோசிக்காம..."
"என்னப்பா... காசு பணத்துக்கா மொடை... பாத்தாச்சு.... நல்லாயிருக்கார்... பாப்போம்... அப்படி போறதாயிருந்தா போன் பண்ணுறேன்..."
"சரிண்ணே... சரி கண்மணி நா கிளம்புறேன்...."
"நானுந்தான் வாறேன்..."
"உன்னையத்தான் இருக்கச் சொன்னேனே..."
"இல்லங்க... அதான் அண்ணன், அக்கா, அத்தான், தம்பி எல்லாரும் இருங்காங்க... நீ பொயிட்டு வான்னு அம்மா சொன்னுச்சு..."
"சரி வா..." என்றவன் மற்றவர்களிடம் எதுவும் சொல்லாமல் கிளம்பினான்.
"இந்தாளு இன்னும் திருந்தலை... அவனுகளும் மதிப்பும் மரியாதையுமா  இருக்கும் போது அவனுககிட்ட பேசினா என்னா கொறஞ்சா போயிரும்" சுந்தரி கடுகடுத்தாள்.
"விடு.... அவனாத் திருந்தி வருவான்... இன்னைக்கு என்னமோ அதிசயமா அபிக்கிட்ட பேசுனான்... சரி அபி கையெல்லாம் மறச்சிக்கிட்டு மாமாவைப் பாத்துட்டு வா... ரொம்ப நேரம் நின்னா அப்புறம் அவரு உங்களுக்காக வருந்த ஆரம்பிச்சிருவாரு..."
"சரிண்ணே..." என உள்ளே சென்றாள்.
ந்தசாமி ஆஸ்பத்ரியில் இருந்து திரும்பி பத்து நாளைக்கும் மேலாச்சு, கண்ணதாசன் ஆட்களைப் பிடித்து எல்லா வயல்களிலும் அறுபடை முடித்திருந்தான். அபி வீட்டு வேலை பார்க்க, குமரேசன் லீவு போட்டு விட்டு கண்ணதாசனுடன் கூடமாட திரிந்து ஒரு வழியாக நெல் மூடைகளை எல்லாம் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். எல்லாரும் வந்து பாத்துப் போக, மூத்த மருமகள் மட்டும் பொங்கலுக்கு வரும் போது பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னது கந்தசாமிக்குக்கூட வருத்தமாகத்தான் இருந்தது. என்ன செய்வது மகனுக்காக எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டதால் வருத்தத்தை வெளியில் சொல்லவில்லை.
பொங்கலுக்கு இரண்டு நாள் முன்னதாக மணியும் குடும்பத்துடன் வந்துவிட, வீடு  கலகலன்னு இருந்தது. வீட்டுக்குள் ஆய்... ஊய்... என குழந்தைகள் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த சந்தோஷம் இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இருக்கும் அப்புறம் நானும் கெளவியுமாத்தான் கெடக்கணும் என கந்தசாமி நினைத்துக் கொண்டு பேரன் பேத்திகளை அதட்டியும் கேலி செய்து கொண்டும் பொழுதைக் கழித்தார்.
விடிந்தால் பொங்கல்... இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்த கந்தசாமி, வாசலில் வந்து அமர்ந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது "அப்பா... என்னோட நெலமை சரியில்லை... எப்ப என்னாகும்ன்னு தெரியலை..." என இழுத்தார்.
"எதுக்கு மாமா நல்லநாளும் பெரியநாளுமா இப்படி பேசுறீக... உங்களுக்கு ஒண்ணும் ஆகாது..." சித்ரா வேகமாகச் சொல்ல, 'பரவாயில்லையே பாசம் இருக்கத்தான் செய்யுது' என நினைத்துச் சிரித்தபடி "வயசாயிருச்சும்மா... என்ன எப்ப நடக்கும்ன்னு யாருக்குத் தெரியும்..." என்றார்.
"அப்பா... எதுக்கு இப்ப இதெல்லாம்?" குமரேசன் கேட்டான்.
"இரு வாறேன்... பொங்க முடிஞ்சதும் நம்ம அங்காளி பங்காளிகளை வச்சி இடத்தை எல்லாம் ஒழுங்கு பண்ணிருவோம்... இனியும் போட்டு இழுக்க வேண்டாம்... சொத்தை பிரிச்சிக்கிட்டா அவனவனுக்கு என்ன பண்ணனுமோ அதைப் பண்ணிக்குவீங்கதானே.... இனி என்னால வெவசாயம் பாக்க முடியாது.... கண்ணதாசனைப் போட்டு இழுக்க முடியாது... அவனுக்கு அவனோட வேலை பாக்கவே செரியா இருக்கும்... பாவம் புள்ள இந்தத்தடவை நெல்லை வீடு கொண்டாந்து சேக்க எம்புட்டுக் கஷ்டப்பட்டான்... இதுதான் இறுதி முடிவு... இதில் மாற்றமில்லை... மாட்டுப் பொங்க முடிஞ்ச மறுநாள் சொத்தைப் பிரிக்கிறோம்... என்ன செரியா?" என்று கந்தசாமி கேட்க, அனைவரும் மௌனமாய் அமர்ந்திருந்தனர்.
(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 18 Jan 2015 - 19:35

மிக்க மகிழ்ச்சி தங்களின் கதையின் முதல் பகுதியையும் நேரடியாக இங்கு பதிந்துவிடுங்கள் சிரமமிருக்காது என்று நம்புகிறேன் உங்களது தளத்திற்கான லிங்க் கொடுத்திருப்பது சிறப்பாக அமையவில்லை 

கதையினைப் படித்து கதைக்கான பின்னூட்டம் பதிகிறேன் நன்றி
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)

Post by Nisha on Sun 18 Jan 2015 - 19:39

நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க மகிழ்ச்சி தங்களின் கதையின் முதல் பகுதியையும் நேரடியாக இங்கு பதிந்துவிடுங்கள் சிரமமிருக்காது என்று நம்புகிறேன் உங்களது தளத்திற்கான லிங்க் கொடுத்திருப்பது சிறப்பாக அமையவில்லை 

கதையினைப் படித்து கதைக்கான பின்னூட்டம் பதிகிறேன் நன்றி

ஆமாம் நானும்  நினைத்தேன்! ஒவ்வொரு பதிவாக பதிந்தால்  படித்து பின்னூட்டம் இடவும்  வசதியாயிருக்கும்.  படிக்கும் ஆர்வமும் வரும்.  இப்படி மொத்தமாக  லிங்க் இணைப்பது சரியல்ல சார்!

ஒவ்வொன்றாக பதியுங்கள் நிச்சயம் படித்து கருத்திடுவோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 18 Jan 2015 - 19:45

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க மகிழ்ச்சி தங்களின் கதையின் முதல் பகுதியையும் நேரடியாக இங்கு பதிந்துவிடுங்கள் சிரமமிருக்காது என்று நம்புகிறேன் உங்களது தளத்திற்கான லிங்க் கொடுத்திருப்பது சிறப்பாக அமையவில்லை 

கதையினைப் படித்து கதைக்கான பின்னூட்டம் பதிகிறேன் நன்றி

ஆமாம் நானும்  நினைத்தேன்! ஒவ்வொரு பதிவாக பதிந்தால்  படித்து பின்னூட்டம் இடவும்  வசதியாயிருக்கும்.  படிக்கும் ஆர்வமும் வரும்.  இப்படி மொத்தமாக  லிங்க் இணைப்பது சரியல்ல சார்!

ஒவ்வொன்றாக பதியுங்கள் நிச்சயம் படித்து கருத்திடுவோம்.
சகோதரர் குமார் எமது கருத்தினை எவ்வாறு எடுத்துக்கொள்வாரோ தெரியாது 

நேரடியாக 17வது பகுதியை படிப்பதற்கு ஆர்வம் வரவில்லை ஒவ்வொன்றாக படித்து அதன் தொடரை எதிர்பார்த்திருந்து கருத்திடுவது போல் கிக் வராது என்று நினைக்கிறேன் அல்லது அத்தனை பகுதிகளையும் படித்துவிட்டு வந்து இந்த பதிவை படிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்  என்ன?? என்ன??
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)

Post by சே.குமார் on Sun 18 Jan 2015 - 19:57

நேசமுடன் ஹாசிம் wrote:

வணக்கம்.
தங்கள் சொன்னபடி முயற்சிக்கிறேன்.
இது இன்று எனது தளத்தில் பதிந்ததை அப்படியே காப்பி செய்து போட்டதுதான். தொடர் என்பதால் முந்தைய பதிவுகளுக்கான இணைப்பை ஒவ்வொரு பகுதியிலும் இணைப்பதுண்டு. அப்படியே காப்பி செய்து போட்டிருக்கிறேன்.

16 பகுதிகளையும் பதிய வேண்டும்... முயற்சிக்கிறேன். இது வாரம் ஒரு முறை பதியும் தொடர், கடந்த 16 வாரமாக (4 மாதங்கள்) வந்து கொண்டிருக்கும் பதிவு... நேரம் கிடைக்கும் போது அனைத்து பகுதிகளையும் பதிவேற்றுகிறேன். 

தங்கள் இருவரின் கருத்துக்கும் நன்றி.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)

Post by *சம்ஸ் on Sun 18 Jan 2015 - 20:28

சே.குமார் wrote:

புரிதலுக்கு நன்றி சார். உங்களின் கதைகள் ஒவ்வொன்றாக பதியுங்கள் நாங்கள் படித்து பின்னூட்டம் இடுகிறோம்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 18 Jan 2015 - 20:33

சே.குமார் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க மகிழ்ச்சி தங்களின் கதையின் முதல் பகுதியையும் நேரடியாக இங்கு பதிந்துவிடுங்கள் சிரமமிருக்காது என்று நம்புகிறேன் உங்களது தளத்திற்கான லிங்க் கொடுத்திருப்பது சிறப்பாக அமையவில்லை 

கதையினைப் படித்து கதைக்கான பின்னூட்டம் பதிகிறேன் நன்றி

ஆமாம் நானும்  நினைத்தேன்! ஒவ்வொரு பதிவாக பதிந்தால்  படித்து பின்னூட்டம் இடவும்  வசதியாயிருக்கும்.  படிக்கும் ஆர்வமும் வரும்.  இப்படி மொத்தமாக  லிங்க் இணைப்பது சரியல்ல சார்!

ஒவ்வொன்றாக பதியுங்கள் நிச்சயம் படித்து கருத்திடுவோம்.
சகோதரர் குமார் எமது கருத்தினை எவ்வாறு எடுத்துக்கொள்வாரோ தெரியாது 

நேரடியாக 17வது பகுதியை படிப்பதற்கு ஆர்வம் வரவில்லை ஒவ்வொன்றாக படித்து அதன் தொடரை எதிர்பார்த்திருந்து கருத்திடுவது போல் கிக் வராது என்று நினைக்கிறேன் அல்லது அத்தனை பகுதிகளையும் படித்துவிட்டு வந்து இந்த பதிவை படிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்  என்ன?? என்ன??
வணக்கம்.
தங்கள் சொன்னபடி முயற்சிக்கிறேன்.
இது இன்று எனது தளத்தில் பதிந்ததை அப்படியே காப்பி செய்து போட்டதுதான். தொடர் என்பதால் முந்தைய பதிவுகளுக்கான இணைப்பை ஒவ்வொரு பகுதியிலும் இணைப்பதுண்டு. அப்படியே காப்பி செய்து போட்டிருக்கிறேன்.

16 பகுதிகளையும் பதிய வேண்டும்... முயற்சிக்கிறேன். இது வாரம் ஒரு முறை பதியும் தொடர், கடந்த 16 வாரமாக (4 மாதங்கள்) வந்து கொண்டிருக்கும் பதிவு... நேரம் கிடைக்கும் போது அனைத்து பகுதிகளையும் பதிவேற்றுகிறேன். 

தங்கள் இருவரின் கருத்துக்கும் நன்றி.
மிக்க நன்றி சார் தொடருங்கள்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)

Post by Nisha on Sun 18 Jan 2015 - 20:38

முதல் மூன்று நான்கு பகுதிகளை முதலில்  காப்பி செய்து இடுங்கள் சார். வாரம் ஒரு முறை என இல்லாமல்  இரு நாட்களுக்கு ஒரு முறை என இங்கே இடுங்கள்  அடுத்த வாரம் இது வரை பதிந்த மொத்த பதிவும் சமனுக்கு வந்து விடும். 

கொஞ்சம் சிரமம் எனினும் முயற்சி செய்யுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 18 Jan 2015 - 20:41

Nisha wrote:முதல் மூன்று நான்கு பகுதிகளை முதலில்  காப்பி செய்து இடுங்கள் சார். வாரம் ஒரு முறை என இல்லாமல்  இரு நாட்களுக்கு ஒரு முறை என இங்கே இடுங்கள்  அடுத்த வாரம் இது வரை பதிந்த மொத்த பதிவும் சமனுக்கு வந்து விடும். 

கொஞ்சம் சிரமம் எனினும் முயற்சி செய்யுங்கள்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)

Post by Nisha on Mon 19 Jan 2015 - 16:18

ஒரு குடும்பத்தின் வேராய் இருப்பவர் சாயும் போது தான் அக்குடும்ப அங்கத்தவர்களின் இயல்பான் குண நலன்கள் வெளிப்படும் என்பதை   ஒவ்வொரு அத்தியாயம் மூலமும் வெளிப்படுத்தி வருகின்றீர்கள்.  

இயல்பான கிராமிய வாழ்வும், சூழலும் அன்பையும் பாசத்தையும் பின்னி பிணைந்ததாய் இருப்பதை புரிய வைக்கின்றீர்கள். 

அதிலும்  அண்ணன் பெண், தம்பி பெண் என நம்பி சொந்தத்தில் பெண்  எடுத்தால் ஒன்றுக்குள் ஒன்றாய் உதவியாய் இருப்பாள் என நம்பிககையும் வெளியிலிருந்து வரும் பெண்ணை என்றுமே வேற்றாளாக பார்க்கும் போக்கும் நம் சமூகத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. 

ரமேஷ்  மற்றும் மூத்த மருமகள் போல்  வாழ்வோர் தானே அதிகம். அடுத்து சொத்து பிரிப்பில் என்ன இடிகள் விழப்போகின்றதோ யார் அறியார்? 

அருமையான எழுத்து நடை.  இன்னும் கொஞ்சம் அதிகமாய் எழுதலாம் சார்.  
 
வேரும் விழுதுகளையும்  தொடர்ந்து படித்து வந்ததால் கதை புரிகின்றது. அதனால் தான் என்னால் பின்னூட்டம் இடம் முடிந்தது. 

நீங்கள் ஒவ்வொரு பகுதியாய் இட்டால் மீண்டும் படித்து பின்னூட்டலாம் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum