சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 13:53

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by பானுஷபானா Today at 12:25

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Today at 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Yesterday at 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

.

தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

View previous topic View next topic Go down

Sticky தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Mon 26 Jan 2015 - 13:42

அன்புத்தோழமைகளுக்கு இனிய வணக்கம்.

உங்கள் தோழியான நானும் எமது நண்பர்களும் இணைந்து  நடத்திவரும்  ”தமிழ்க்குடில் அறக்கட்டளை”  பற்றிய அறிமுகத்தைத் தங்களியையே பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 

தமிழ்க்குடில் அறக்கட்டளை மே மாதம் 21 ஆம் தேதி 2012  அன்று பதிவு செய்யப்பட்டது.

(பதிவு எண். 18 IV 12)

இடம்: அரியலூர் மாவட்டம், சிலம்பூர் கிராமம்(கங்கைகொண்ட சோழபுரம் அருகில்)

குடிலின் நோக்கம்:
 
மனிதரிடத்தில் மனிதம் வளர்த்தல்
 
தமிழரிடத்தில் தமிழ் வளர்த்தல்.
 
தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுக் கல்வி, கலை, மருத்துவம், வாழ்வியல் அனுபவங்களை தொகுத்து இயற்கை வழியில் சமூகத்திற்கு வழிகாட்டல். தமிழர்களின் வாழ்வியல் நலன்களைப் பேணுதல், தமிழ் வழிக்கல்வி, ஆராய்ச்சிகளுக்கு உதவி செய்தல் இதுபோன்ற 16 நோக்கங்களை கொண்டு செயல்பட்டுவருகிறது தமிழ்க்குடில் அறக்கட்டளை.
அறக்கட்டளையின் செயல்பாடுகள்:
                                           
2012 – 2013 செயல்பாடுகள்
கல்வி உதவிப் பெற்றவர்கள்                                : 108
கல்லூரி கல்விக்கு உதவி பெற்றவர்                    : 1
உதவிபெற்ற பள்ளிகள்                                         : 3
திருப்பூரில் நடப்பட்ட மரக்கன்றுகள் எண்ணிக்கை : 90

2013 – 2014 செயல்பாடுகள்
 
நூலகம்: அரியலூர் மாவட்டம், சிலம்பூர் என்ற கிராமத்தில் இயற்கை சூழலில் கணினி மற்றும் இணைய வசதியுடன்  கூடிய  முன்மாதிரியான  ஒரு பொதுநூலகத்தை தமிழ்க்குடில் அறக்கட்டளை கட்டி, செப்டம்பர் மாதம் 09-09-13 அன்று பேராசிரியர் உயர்திரு. க. இராமசாமி, செம்மொழி நிறுவன முதுநிலை ஆய்வறிஞர் அவர்களால்  திறந்து வைக்கப்பட்டது.
பாரம்பரிய விளையாட்டுப்போட்டி:
 
நமது இளஞ்சிறார்களிடையே தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை சென்றடையச்செய்யும் முயற்சியில் 2014 தமிழர் திருநாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தியது.  அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராம அரசு நடுநிலைப்பள்ளியில்  பயிலும் 80 மாணவர்கள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கியதோடு, கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசும், கலந்துகொண்டமைக்கான சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
 
நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகள்: 

1. உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள்     - ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கபடி
2. மனப்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள்   - கோலாட்டம், கும்மி, இசை நாற்காலி
3. அறிவுசார்ந்த விளையாட்டுகள்                   -  சதுரங்கம், ஆடுபுலி ஆட்டம், கண்ணாமூச்சி 
4. ஞாபக சக்தி சார்ந்த விளையாட்டுகள்      -  நடித்துக்காட்டுதல், ஒப்புவித்தல், பொருட்களை  
                                                                                     அடையாளம் காணுதல்.
 
2014 – 2015 செயல்பாடுகள்
 
2014 மே மாதம்                -      அன்னையர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான  சிறப்பு கட்டுரை போட்டி 
2014 ஜூலை மாதம்         -     காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்டுரை போட்டி
2014 டிசம்பர் மாதம்         -      மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கவிதைபோட்டி                                                                              நடத்தப்பட்டது.
 
போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்பாளிகளுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் என மொத்தம் பத்து பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

2015 – பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்

2015 ஆம் ஆண்டு தமிழர் திருநாளையொட்டி  விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்ட விவரங்கள்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மார்ட்டினார் ஆங்கிலவழி தனியார் நடுநிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவர்களுக்கு 14.01.15 அன்று போட்டிகள் நடத்தப்பட்டு 75 பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 
கோயம்புத்தூர் மாவட்டம் புதுக்காடு கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 16.01.15 அன்று போட்டிகள் நடத்தப்பட்டு (17.01.15) அன்று 31 பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

தஞ்சைமாவட்டம் புனல்வாசல் கிராமத்தில் 17.01.15 அன்று  போட்டிகள் நடத்தப்பட்டு 26.01.15 அன்று தமிழ்க்குடில் சார்பாக 38 பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் 16 நோக்கங்களையும் மக்களிடையே சென்றடையச்செய்து நடைமுறைப் படுத்துவதற்கும், தமிழ்க்குடில் அறக்கட்டளை தம் செயல்பாடுகளை சிறந்தமுறையில் நிறைவேற்றிடவும் தேவையான பொருளாதார சூழல்களை எதிர்கொள்வதற்காக தாங்களும் உதவிகள் வழங்கி அடுத்தடுத்த தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தங்களையும் நம் தமிழ்க்குடில் குடும்பத்தோடு இணைத்துக்கொண்டு தொடர்ந்த ஆதரவினை தமிழ்க்குடில் அறக்கட்டளைக்கு வழங்கி, கரம்பிடித்து பயணிக்க வேண்டுகிறோம்.
மேலும் தமிழ்க்குடிலின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் விவரமாக அறிந்துகொள்ளவும், கடந்த இரண்டு ஆண்டுகளின் நிதியறிக்கையினைக் கண்டறியவும் தமிழ்க்குடில் வலைப்பூ,  தமிழ்க்குடில் முகநூல் பக்கம் கண்டு அறிய வேண்டுகிறேன். 
குறிப்பு: தமிழ்க்குடில் அறக்கட்டளை நூலகத்திற்கு கணினி வேண்டும் எனக்கூறியவுடன் புதிதாக வாங்கி வழங்கிய அன்பு நண்பர் @சுறா (ஜானி) அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினையும், தமிழ்க்குடில் மீது தாங்கள் கொண்டிருக்கும் ஈடுபாட்டிற்கும் மனம்நிறைந்த மகிழ்ச்சியினையும் உரித்தாக்குகிறேன்.  ஐ ஜாலி
இப்படிக்கு,
தமிழ்க்குடில் அறக்கட்டளைக்காக,
 
காயத்ரி வைத்தியநாதன்
பொருளாளர்.

Last edited by காயத்ரி வைத்தியநாதன் on Tue 27 Jan 2015 - 12:00; edited 3 times in total
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by சுறா on Mon 26 Jan 2015 - 16:04

ஆஹா அற்புதமான சேவை. இதை நீங்கள் துவங்கியபோது நான் ஈகரையில் இருந்தேன். அங்கு கதைப்போட்டி நடத்திக்கொண்டிருந்த வேளை நீங்கள் முதலாவதாக வந்து பரிசினை தட்டிச்சென்றீர்கள்.

பரிசுப்பணத்தை என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்ட போது தாங்கள் கூறியது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. பிறகு தான் உங்கள் நூலகத்திற்கு கணினி தேவை என்பதை தங்கள் வாயிலாக அறிந்தேன்.

தற்போதும் (நேற்று)
நீங்கள் கேட்ட பிரண்டர் ஸ்கேனர் மற்றும் ஜெராக்ஸ் இதையும் நான் எனது நண்பர்களிடமும் மாணவர்களிடமும் தெரிவித்து இருக்கிறேன். உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by Nisha on Mon 26 Jan 2015 - 16:09

தமிழுக்காகவும் தமிழ் சிறார்களுக்காகவும் தாங்கள் முயன்று ஆற்றும் சேவை தனை எங்களுடன் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி காயத்ரி.

நல்லது செய்ய நினைத்தால் தடைகள் வந்தாலும் நன்மைகள் தொடரும் என்பது நிச்சயம். தங்கள் பணி சிறக்கட்டும்.பாராட்டுகளோடு வாழ்த்துகளும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Mon 26 Jan 2015 - 16:19

சுறா wrote:ஆஹா அற்புதமான சேவை. இதை நீங்கள் துவங்கியபோது நான் ஈகரையில் இருந்தேன். அங்கு கதைப்போட்டி நடத்திக்கொண்டிருந்த வேளை நீங்கள் முதலாவதாக வந்து பரிசினை தட்டிச்சென்றீர்கள்.

பரிசுப்பணத்தை என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்ட போது தாங்கள் கூறியது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. பிறகு தான் உங்கள் நூலகத்திற்கு கணினி தேவை என்பதை தங்கள் வாயிலாக அறிந்தேன்.

தற்போதும் (நேற்று)
நீங்கள் கேட்ட பிரண்டர் ஸ்கேனர் மற்றும் ஜெராக்ஸ் இதையும் நான் எனது நண்பர்களிடமும் மாணவர்களிடமும் தெரிவித்து இருக்கிறேன். உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன்
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது..தங்களைப்போன்றவர்களின் தொடர்ந்த ஊக்கமும் ஒத்துழைப்பும் நம்பிக்கையூட்டி செயல்பாடுகளை இன்னும் திறம்படச்செய்ய ஊக்கமளிக்கிறது.. __/\__
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Mon 26 Jan 2015 - 16:21

Nisha wrote:தமிழுக்காகவும் தமிழ் சிறார்களுக்காகவும் தாங்கள் முயன்று ஆற்றும் சேவை தனை எங்களுடன் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி காயத்ரி.

நல்லது செய்ய நினைத்தால் தடைகள்  வந்தாலும் நன்மைகள்  தொடரும் என்பது நிச்சயம். தங்கள் பணி சிறக்கட்டும்.பாராட்டுகளோடு வாழ்த்துகளும்.
மிக்க நன்றியும், அன்பும் நிஷா.. தங்களைப்போன்றவர்களின் ஒத்துழைப்பாலும், வாழ்த்துகளினாலும் நம் பணிகள் சிறப்படையும் என்ற நம்பிக்கை உள்ளது..தொடர்ந்திருங்கள்..:) __/\__
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by சே.குமார் on Mon 26 Jan 2015 - 20:24

முன்பே வாசித்ததுதான் என்றாலும் மீண்டும் வாசிக்க...
வாழ்த்துக்கள் அக்கா... குடிலை திறம்பட நடத்தும் தங்களுக்கும் என் நட்புக்களுக்கும்...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1399
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by சுறா on Mon 26 Jan 2015 - 22:11

சே.குமார் wrote:முன்பே வாசித்ததுதான் என்றாலும் மீண்டும் வாசிக்க...
வாழ்த்துக்கள் அக்கா... குடிலை திறம்பட நடத்தும் தங்களுக்கும் என் நட்புக்களுக்கும்...

தமிழ்க்குடில் பற்றி உங்களுக்கு தெரியுமா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Tue 27 Jan 2015 - 8:03

சுறா wrote:
சே.குமார் wrote:முன்பே வாசித்ததுதான் என்றாலும் மீண்டும் வாசிக்க...
வாழ்த்துக்கள் அக்கா... குடிலை திறம்பட நடத்தும் தங்களுக்கும் என் நட்புக்களுக்கும்...

தமிழ்க்குடில் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஆம் நண்பரே...நம்ம தம்பி சே.குமார் தமிழ்க்குடில் துவங்கப்பட்ட நாள் முதல் நம்மோடு இணைந்துபயணிக்கும் தமிழ்க்குடிலின் குடும்ப உறுப்பினர். :) டிசம்பர் மாதம் ”தமிழ்க்குடில் அறக்கட்டளை” நடத்திய கட்டுரைப்போட்டியில் முதல்பரிசை தட்டிச்சென்றவரும் இவரே. எம்முள் கதையெழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தி அவ்வப்பொழுது ஊக்கமளித்துவரும் அன்புத்தம்பி.....
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by சுறா on Tue 27 Jan 2015 - 8:19

அப்படியா? முதலில் இருந்து இருப்பவரா? நல்லது.

உங்கள் கையெழுத்துப்பகுதியில் உங்கள் தமிழ்க்குடில் பற்றின தகவல்கள் அல்லது வங்கிக்கணக்கு என் இவற்றை வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு உதவ நினைக்கும் நம் உறவுகள் உங்கள் கையெழுத்தை பார்த்து உங்களுக்கு உதவலாம். உங்களுக்கு (தமிழ் குடில்) தேவை ஏற்படின் இங்கு தயங்காமல் தெரிவியுங்கள் தோழி.

என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by *சம்ஸ் on Tue 27 Jan 2015 - 8:24

தங்களின் பணி மேலும் சிறக்கட்டும்.பாராட்டுகளோடு நன்றியும் வாழ்த்துகளும்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69190
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Tue 27 Jan 2015 - 8:29

*சம்ஸ் wrote:தங்களின் பணி மேலும் சிறக்கட்டும்.பாராட்டுகளோடு நன்றியும் வாழ்த்துகளும்.
மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்.  தங்களைப்போன்ற அன்புள்ளங்களின் வாழ்த்துகள் நம் பணிகளை சிறப்படைய செய்யட்டும். :)
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Tue 27 Jan 2015 - 8:31

சுறா wrote:அப்படியா? முதலில் இருந்து இருப்பவரா? நல்லது.

உங்கள் கையெழுத்துப்பகுதியில் உங்கள் தமிழ்க்குடில் பற்றின தகவல்கள் அல்லது வங்கிக்கணக்கு என் இவற்றை வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு உதவ நினைக்கும் நம் உறவுகள் உங்கள் கையெழுத்தை பார்த்து உங்களுக்கு உதவலாம். உங்களுக்கு (தமிழ் குடில்) தேவை ஏற்படின் இங்கு தயங்காமல் தெரிவியுங்கள் தோழி.

என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி நண்பரே.. :) அவசியம் தாங்கள் குறிப்பிட்டதுபோல் தமிழ்க்குடில் பற்றிய குறிப்பு கையொப்ப பகுதியில் சேர்க்கிறேன்.
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 31 Jan 2015 - 15:03

மிகவும் சிறப்பான சேவை இவ்வாறான நல்ல உள்ளங்களின் வாயிலாக இன்னும் உலகில் வள்ளல்கள் வாழ்கிறார்கள் 

மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் எங்களாலானதைச் செய்கிறோம் அறிவியுங்கள் நன்றிகள்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by சுறா on Sun 1 Feb 2015 - 20:04

நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் சிறப்பான சேவை இவ்வாறான நல்ல உள்ளங்களின் வாயிலாக இன்னும் உலகில் வள்ளல்கள் வாழ்கிறார்கள் 

மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் எங்களாலானதைச் செய்கிறோம் அறிவியுங்கள் நன்றிகள்

இரண்டான்டுகளுக்கு முன்பு ஏழைக்குழந்தைகள் படித்து பயன்பெற ஒரு நூலகம் அமைத்துதந்தார்கள்.  

இன்னும் நிறைய செய்கிறார்கள் எனக்கு தான் நேரமில்லை. அவர்கள் செய்வதை படிக்க பார்க்க :(

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Wed 4 Feb 2015 - 9:59

சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் சிறப்பான சேவை இவ்வாறான நல்ல உள்ளங்களின் வாயிலாக இன்னும் உலகில் வள்ளல்கள் வாழ்கிறார்கள் 

மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் எங்களாலானதைச் செய்கிறோம் அறிவியுங்கள் நன்றிகள்

இரண்டான்டுகளுக்கு முன்பு ஏழைக்குழந்தைகள் படித்து பயன்பெற ஒரு நூலகம் அமைத்துதந்தார்கள்.  

இன்னும் நிறைய செய்கிறார்கள் எனக்கு தான் நேரமில்லை. அவர்கள் செய்வதை படிக்க பார்க்க :(
இரண்டாடுகளுக்கும் மேலாக நட்புவட்டத்தில் இணைந்து தமிழ்க்குடிலின் வளர்ச்சிக்கு உதவ நினைக்கும் அன்பு நண்பர் செயல்பாடுகள்  அனைத்தையும் அறிந்திட்டால் மகிழ்ச்சியாக இருக்கும். விரைவில் அனைத்தையும் படிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்..:) 

தமிழ்க்குடிலுக்கு தேவையான உதவிகள் பற்றி இங்கு குறிப்பிடலாமா...???
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by சுறா on Thu 5 Feb 2015 - 19:15

காயத்ரி வைத்தியநாதன் wrote:

தமிழ்க்குடிலுக்கு தேவையான உதவிகள் பற்றி இங்கு குறிப்பிடலாமா...???

தாராளமாய் தெரிவியுங்கள்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by Nisha on Thu 5 Feb 2015 - 20:42

சுறா wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:

தமிழ்க்குடிலுக்கு தேவையான உதவிகள் பற்றி இங்கு குறிப்பிடலாமா...???

தாராளமாய் தெரிவியுங்கள்.

ஆமாம் காயத்ரி! தெரிவிக்கலாமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Fri 6 Feb 2015 - 7:40

Nisha wrote:
சுறா wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:

தமிழ்க்குடிலுக்கு தேவையான உதவிகள் பற்றி இங்கு குறிப்பிடலாமா...???

தாராளமாய் தெரிவியுங்கள்.

ஆமாம் காயத்ரி! தெரிவிக்கலாமே!
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். :)
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Fri 6 Feb 2015 - 8:44

நம் தமிழ்க்குடில் அறக்கட்டளைக்குத் தேவையான உதவிகள்:

1. இன்வெர்ட்டர் - Invetor

2. லேசர் பிரிண்டர் - Laser Printer

3. ஏர்டெல் டிடிஎச். செட் டாப் பாக்ஸ் (Air tel DTH Set top Box (கிராமத்தில் ப்ராட்பேண்ட், லேண்ட்லைன் வசதி இல்லாத காரணத்தினால், ஏர்டெல்லில் டிடிஎச் செட் டாப் பாக்ஸ் மூலமாக இண்டெர்னெட் உபயோகிப்பதற்கு. தமிழ் ஆய்வு, இணைய நூலகம் கணினி உபயோகப்படுத்த துரிதமான இணைய வசதி தேவைப்படுகிறது.  ) 

4. இரண்டு வால் பேன்கள் . (Wall Fan)

இவையனைத்தும் மிகவும் அவசியமாக நம் அறக்கட்டளைக்கு தேவைப்படுகின்றன.  

தோழமைகளின் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கி தொடர்ந்த் செயல்பாடுகளை திறம்பட செய்ய உதவிட வேண்டுகிறோம்.  

உதவிட விரும்பும் நட்புகள் மேலும் விவரங்களுக்கு தனிமடலில் தொடர்புகொள்ள வேண்டுகிறோம். இதுவரையிலான வரவு செலவுகள் பற்றிய நிதிநிலையறிக்கை நம் தமிழ்க்குடில் வலைப்பூவில் ஆண்டு அறிக்கையில் பகிரப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  நம் அறக்கட்டளையின் அனைத்து செயல்பாடுகளும் மிகவும் வெளிப்படையாக இருப்பதை வலைப்பூவில் கண்டு அறியலாம். 
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by Nisha on Sat 7 Feb 2015 - 21:29

நல்லது காயத்ரி. 

நான் எனக்கு தெரிந்தவர்களுக்கும் இதை குறித்து சொல்கின்றேன்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Sun 8 Feb 2015 - 11:42

Nisha wrote:நல்லது காயத்ரி. 

நான் எனக்கு தெரிந்தவர்களுக்கும் இதை குறித்து சொல்கின்றேன்பா!
மிக்க மகிழ்ச்சி நிஷா.... தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். :)
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by Nisha on Thu 11 Jun 2015 - 2:32நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by *சம்ஸ் on Sat 13 Jun 2015 - 7:35

சிறப்பான முயற்சி வரவேற்க்கதக்க சேவை வாழ்த்துக்கள் மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69190
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by kalainilaa on Mon 15 Jun 2015 - 19:07

வாழ்த்துக்கள்
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by நண்பன் on Wed 17 Jun 2015 - 10:13

சிறப்பான சேவை அக்கா என் மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 
எங்க நாட்டிலும் எங்க கிராமத்திலும் ஆண்டவன் துணையால் எங்க அண்ணனும் இப்படி சில பல நல்ல காரியங்கள் செய்து வந்தார் இப்போது அவரால் தொடர முடியாத நிலை இருந்தாலும் நாங்கள் அவரை விடாமல் எங்களால் முடிந்த நல்ல பல சிறிய சிறிய உதவிகளை செய்து ஏழை எழிய சொந்தங்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறோம் 

உங்கள் சேவைக்கும் ஆண்டவன் உதவி புரிய வேண்டும் உங்கள் பயணங்கள் வெற்றியடைய வேண்டும் பாராட்டுக்களுடன் நன்றிகள்
மாறா அன்புடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தமிழ்க்குடில் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum