சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

பொண்டாட்டி தாசன்!

View previous topic View next topic Go down

Sticky பொண்டாட்டி தாசன்!

Post by rammalar on Sat 25 Apr 2015 - 16:02

[img][/img]
-

தன் வயலில் உழுது கொண்டிருந்தான் ராஜாராம். அப்போது கொக்கு ஒன்று வரப்போரமாக வந்து நின்றது. அந்தக் கொக்கைப் பிடிக்க வேண்டும் என்று முயற்சித்தான் ராஜாராம். ஆனால், அந்த கொக்கானது அவன் பிடியில் சிக்கவில்லை.
மாலை நேரம் வேலையெல்லாம் முடிந்த பின்னர் வீட்டை வந்தடைந்தான் ராஜாராம்.

வயலில் வேலை செய்தபோது தான் ஒரு கொக்கைப் பிடிக்க முயற்சி செய்ததாகவும், அந்தக் கொக்கானது தன் பிடியில் சிக்கவில்லை என்றும் தன் மனைவி தனலட்சுமியிடம் தெரியப்படுத்தினான்.
அதனைக் கேட்ட அவன் மனைவியோ கோபமடைந்தாள். நான் கொக்கு கறி சாப்பிட வேண்டும் என்று, நெடுநாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். நீங்களோ அந்தக் கொக்கைப் பிடிக்காமல் வந்துவிட்டீர்களே. இதுதான் உங்கள் வீரத்திற்கு அழகா? நீங்கள் எப்படியாவது அந்தக் கொக்கைப் பிடித்து வாருங்கள். நாளை நீங்கள் வயலில் வேலை செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை. அந்தக் கொக்கை மட்டும் பிடிக்காமல் வந்துவிடாதீர்கள்,” என்றாள் அவன் மனைவி.
ராஜாராம் “மனைவி சொல்லே மந்திரம்’ என்று வாழ்க்கை நடத்தி வந்தான்.

மறுநாள் காலையில் வயல் வேலைக்குச் சென்ற ராஜாராம் வேலை செய்ய மனமில்லாமல், கொக்கு எப்போது வருமென்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் அவன் எதிர்பார்த்தபடி கொக்கானது, வயல் வரப்பில் வந்து நின்றது.

கொக்கைக் கண்ட ராஜாராம் மகிழ்ச்சியடைந்தான். நாம் எதிர்பார்த்தபடி கொக்கு வந்து
விட்டது. எப்படியாவது இந்தக் கொக்கைப் பிடித்து மனைவியிடம் கொடுத்தால் அவள் மகிழ்ச்சியடைவாள் என்று நினைத்தபடியே கொக்கை பிடிக்க முயன்றான்.

ஆனால், கொக்கோ அவன் வயலை விட்டு பறந்து பக்கத்து வயலுக்கு சென்றது. எப்படியாவது அந்தக் கொக்கைப் பிடித்திட வேண்டுமென்று முடிவு செய்த ராஜாராம் ஆத்திரத்தோடு அதனைப் பின்தொடர்ந்தான்.
கொக்கு பக்கத்து வயலையும் தாண்டி இன்னொரு வயலுக்குப் பறந்து சென்றது.

பக்கத்து வயல் மட்டுமில்லாது, அதற்கு அடுத்த வயலிலும் நாற்றுக்களை எல்லாம் மிதித்தப்படி “கொக்கைப் பிடிக்க வேண்டும்’ என்ற ஒரே நோக்கத்துடன் ஓடினான் ராஜாராம்.
கொக்கை விரட்டிக்கொண்டே ஓடுகின்ற ராஜாராமை பக்கத்து வயல்காரர்கள் பார்த்தனர்.

“ராஜாராம் நம் வயல்களில் நடப்பட்ட நாற்றுக்களை எல்லாம் மிதித்தபடி ஓடுகின்றான். நாம் அவனை சும்மா விடக் கூடாது. எப்படியும் நாம் அவனிடம் நஷ்ட ஈடு கேட்டு வாங்கிட வேண்டியதுதான்’ என்று முடிவு செய்தனர்.
உடனே அவர்கள் வேகமாக ஓடிச்சென்று ராஜாராமை பிடித்தனர்.

“”ராஜாராம்! நீ கொக்கைப் பிடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு ஓடினாய். ஆனால், ஓடிய வேகத்தில் எங்கள் வயல்களில் நடப்பட்டிருந்த நாற்றுக்களை எல்லாம் மிதித்து நாசம் செய்து விட்டாயே. மரியாதையாக பாதிக்கப்பட்ட வயல்காரர்களுக்கு நஷ்ட ஈடாக பணம் கொடு. இல்லையென்றால், நாங்கள் எல்லாரும் உன்னை சும்மாவிட மாட்டோம்,” என்றனர்.
அதனைக் கேட்ட ராஜாராம் திடுக்கிட்டான்.

“ஐயோ, நாம் தவறு செய்துவிட்டோமே. கொக்கைப் பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் மற்ற வயல்களில் நடந்து நாற்றுக்களை எல்லாம் மிதித்து விட்டோமே,
இதற்கு நாம் தண்டமாக பணம் கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால், இவர்கள் நம்மை விட மாட்டார்கள். அவர்கள் கேட்டுக் கொண்ட படி நாம் நஷ்ட
ஈட்டினை கொடுத்திட வேண்டியதுதான் என நினைத்தான் ராஜாராம்.

“அய்யோ… மனைவிக்கு தாசனாக இருந்ததால் வந்த விளைவுதான் இது. இனிமேல் நாம இப்படி இருக்கக் கூடாது’ என முடிவெடுத்தான்.

—————————————–
சிறுவர் மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum