சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by பானுஷபானா Today at 14:06

» 7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
by rammalar Today at 13:50

» திரை விமர்சனம்: மேயாத மான்
by rammalar Today at 13:49

» 'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
by rammalar Today at 13:48

» தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
by rammalar Today at 13:37

» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
by rammalar Today at 13:36

» இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
by rammalar Today at 13:35

» ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
by rammalar Today at 13:35

» ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
by rammalar Today at 13:34

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Yesterday at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Yesterday at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Yesterday at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Yesterday at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Yesterday at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

.

கொலுசு – சிறுகதை

View previous topic View next topic Go down

Sticky கொலுசு – சிறுகதை

Post by rammalar on Sat 25 Apr 2015 - 16:14

முதன்முதலில் வேலையில் சேர்ந்த போது எனக்குப் பிடித்த கொலுசு வாங்கிப் பரிசளித்தார் அம்மா.
அலுவலகத்தில் உமா எனக்கு நெருங்கியத் தோழியானாள், தன் குடும்பப் பிரச்சினைகளை ஒளிவு மறைவின்றி என்னிடம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு.
அவளுடைய அப்பா ஓர் உதவாக்கரை.  மூன்று குழந்தைகளுடன் அவளது அம்மாவை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டார்.  இவள் தான் மூத்தவள்.  தங்களைப் படிக்க வைக்க, வளர்த்து ஆளாக்கத் தன் அம்மா பட்ட
கஷ்டங்களை அவள் விவரிக்கும் போது வேதனையாயிருக்கும்.

தன் குடும்ப நிலைமையுணர்ந்து கஷ்டப்பட்டுப் படித்து இப்போது கிளார்க் வேலைக்குப் பயிற்சியாளராகச் செர்ந்திருக்கிறாள் உமா.
“இனிமே எங்க வீட்டுக்கு விடிவு காலம் தான்.  இப்பக் கிடைக்கிற உதவித் தொகை ரொம்பக்கம்மி தான் என்றாலும் ஒரு வருஷம் முடிஞ்சி வேலையில சேர்றப்ப, நல்ல சம்பளம் கிடைக்கும்.  அதற்கப்புறம் அம்மாவைக் கஷ்டப்பட விடமாட்டேன்.  ராணி மாதிரி வச்சுக்குவேன்.”  சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கும்.
‘இவளல்லவோ பெண்!’ மனதிற்குள் மெச்சிவேன்.
ஒரு நாள் அம்மா வாங்கிக் கொடுத்த கொலுசை நான் அணிந்து சென்ற போது,
“கொலுசு ரொம்ப அழகாயிருக்கு.  அழகான ஒன் கால்கள்ல இருக்கிறதினால, அதுக்கு ரொம்பவே மெருகு கூடியிருக்கு” என்றாள் உமா.

“போதும், போதும் புகழ்ந்தது.  கொலுசை யார் போட்டாலும் நல்லாத் தான் இருக்கும்.  ஏன் நீ வேணா போட்டுப் பாரேன்” என்று கழற்றக் குனிந்தேன்.
“அய்யய்யோ, வேண்டாம், வேண்டாம்,” என் கைகளைப் பிடித்துத் தடுத்தாலும் போட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இருப்பதை முகக்குறிப்பு வெளிப்படுத்தியது.  அவளும் பெண் தானே!
கொலுசு வாங்கி அணிய முடியாத நிலையில் அவளிருக்கும் போது, நான் போட்டுக் கொண்டு போயிருக்கக் கூடாது என்று எனக்குள் குற்றவுணர்ச்சி.
“இன்னிக்கு மட்டும் போட்டுக்கோ.  சாயங்காலம் வீட்டுக்குப் போறப்ப வாங்கிக்கிறேன்”
மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு அணிந்து கொண்டாலும், அதனால் அவளுக்கேற்பட்ட மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது.  ஜல் ஜல் என்ற சப்தத்தைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவள் குறுக்கும்நெடுக்கு மாகத் தேவையின்றி நடப்பதாக எனக்குத் தோன்றியது.
அலுவலகம் முடிந்து மாலை இருவரும் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வரும் போது, திடீரென்று உமா கத்தினாள்.
“அய்யய்யோ! ஒரு கொலுசைக் காணோம்”
பகீரென்றது எனக்கு.  அவளது ஒரு கால் வெறுமையாயிருந்தது.  வந்த வழியே திரும்பிப் போய்த் தேடிப்பார்த்தோம்.  கொலுசு கிடைக்கவேவில்லை.
குற்றவுணர்ச்சி தாங்காமல் வழியெல்லாம் அழுது கொண்டே வந்தாள் உமா.
“அழாதே உமா.  கொலுசு காணாமப் போறது சகஜம் தான்.  உன்னை வற்புறுத்திப் போட்டுக்கச் சொன்னது நான் தான்.  இதுல உன் தப்பு எதுவுமில்லை”.
மேலுக்கு அவளிடம் சமாதானம் சொன்னாலும் அம்மாவிடம் வாங்கப் போகும் வசவை எண்ணி மனம் சஞ்சலப்பட்டது.
ஒரு கொலுசை வாங்கி கைப்பைக்குள் வைத்து விட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.  வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மா கேட்ட முதல் கேள்வி:
“காலையில போட்டுட்டுப் போன கொலுசு என்னாச்சு? சத்தத்தையே காணோம்?”
கொலுசைத் தொலைத்து விட்டதாகச் சொன்னேன்.  அம்மாவுக்கோ ஆத்திரமான ஆத்திரம்.
“எத்தனை கடை ஏறி இறங்கிப் பார்த்துப் பார்த்து வாங்கினேன்.  சரியான தெம்மாடி.  கால்ல இருந்து ஒரு கொலுசு கழண்டு விழறது கூடவா, ஒரு பொண்ணுக்குத் தெரியாது?  ஒரு பைசாவுக்குக் கூட உருப்பட மாட்டே.  காசோட அருமை தெரிஞ்சிருந்தா, அவ்ளோ அலட்சியமா இருந்திருப்பியா?”
அம்மா அன்று முழுக்கத் திட்டிக் கொண்டே இருந்தார்.
உண்மையைச் சொன்னால், அவளிடமிருந்து அதற்குரிய பணத்தை அம்மா வாங்கி வரச் சொல்லிவிடுவாரோ  என்ற பயத்தில், கடைசி வரை உமா தான் கொலுசைத் தொலைத்தாள் என்று நான் சொல்லவேயில்லை.
Kalayarassy G
(தினமணிக் கதிரில் ஒரு பக்கக் கதையாக எழுதியது)

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13210
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum