சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 6:37

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Today at 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Yesterday at 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Yesterday at 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Yesterday at 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Yesterday at 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Yesterday at 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 16 Oct 2017 - 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Mon 16 Oct 2017 - 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Mon 16 Oct 2017 - 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:37

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:36

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar Mon 16 Oct 2017 - 14:35

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:34

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar Mon 16 Oct 2017 - 14:33

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by rammalar Mon 16 Oct 2017 - 5:02

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar Mon 16 Oct 2017 - 5:00

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by rammalar Mon 16 Oct 2017 - 4:59

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar Mon 16 Oct 2017 - 4:58

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar Mon 16 Oct 2017 - 4:57

» மனசு : வாசிப்பும் மருத்துவமும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:50

» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:48

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Sat 14 Oct 2017 - 18:28

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Sat 14 Oct 2017 - 18:27

» காதல் எஸ் எம் எஸ்
by கவிப்புயல் இனியவன் Sat 14 Oct 2017 - 16:36

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by பானுஷபானா Sat 14 Oct 2017 - 12:55

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by rammalar Sat 14 Oct 2017 - 2:43

.

உண்மை சுடும் – சிறுகதை

View previous topic View next topic Go down

Sticky உண்மை சுடும் – சிறுகதை

Post by rammalar on Sat 25 Apr 2015 - 16:16

உமாவிற்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் சேர்ந்த பிறகு, வீட்டின் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.
-
மனைவிக்கு ‘மைல்ட் ஹார்ட் அட்டாக்’ என்று தெரிந்தபோது ஆடித்தான் போய் விட்டான்,  எதற்கும் கலங்காத கணபதி.

குக்கரில் வேக வைத்த சாதம் அவனுக்குப் பிடிக்காது.  கஞ்சி வடிக்கப்பட்ட சாதம் தான் வேண்டும்.  காலை நேர டென்ஷனில் சிலசமயம் கையில் கஞ்சி கொட்டிக் கொண்டு நின்ற மனைவியைப் பார்த்து ஒரு நாள் கூட அவன் பரிதாபப் பட்டதில்லை.
-
“சாதம் வடிக்கக் கூடத் தெரியல, என்ன வளர்த்திருக்காங்க ஒங்க வீட்டுல” என்பான் கேலியாக.
-
என்றாவது பதம் தவறி சாதம் குழைந்து போனாலோ கோபம் தலைக்கேறி விடும்.  மாவு அரைத்து பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பது அவனது கண்டிப்பான உத்தரவு.  தினந்தினம் புதிதாக அரைத்துத் தான் இட்லி ஊற்ற வேண்டும்.
-
குழந்தைகளைப் பாட்டு வகுப்புக்குக் கொண்டுவிடச்சொல்லி மனைவி கேட்ட போது, ‘வண்டி ஓட்டக் கத்துக்கோ’ என்று சொல்லி ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்து விட்டு அந்த வேலையிலிருந்து கழன்று கொண்டான்.
-
“வேலைக்கும் போய்க்கிட்டு வீட்டையும் கவனிக்க முடியல.  கொஞ்சம் ஒத்தாசை பண்ணக்கூடாதா?” என்று அவள் புலம்பும் போதெல்லாம்,
-
“உன்னை யார் வேலைக்குப் போகச் சொன்னது?  வேணுமின்னா வேலையை விட்டுடு,” என்பான் விட்டேற்றியாக.
-
குழந்தைகள் நல்ல மதிப்பெண் வாங்கவில்லையென்றாலும் அவளுக்குத் தான் திட்டு விழும்.
-
“குழந்தைங்க படிக்கிறதைக் கூடக் கவனிக்காம அப்படியென்ன வீட்டுல வெட்டி முறிக்கிறே?” என்பான் கோபத்தோடு.
-
மனைவி படுத்த படுக்கையான பிறகு வேறு வழியின்றிச் சமையலைக் கற்றுக் கொள்ளத் துவங்கியவன், முதல் வேலையாக அரிசி குக்கர் வாங்கி வந்தான்.  க்டையில் விற்கும் மாவு வாங்கி வந்து இட்லி ஊற்றினான்.
-
குழந்தைகளுக்கு டியூஷன் ஏற்பாடு பண்ணியவன், பெண் குழந்தையின் முடியைக் குறைத்து ‘பாப்’ வெட்டி விட்டான்.  படிக்க நேரமில்லாததால், பத்திரிக்கைகளை நிறுத்த வேண்டியதாயிற்று.
-
முதன்முறையாக ரசம் செய்து பரிமாறிய போது,
”சே..  இது அம்மா வைக்கிற ரசம் மாதிரியில்ல…” என்று கோபத்தோடு தட்டை நகர்த்தி விட்டான் பையன்.
-
“எவ்ளோ கொழுப்பு இருந்தா தட்டைத் தள்ளி விடுவே?  ஒண்டியா கஷ்டப் பட்டு வேலை செஞ்சிக்கிட்டிருக்கேன்.  அவ்ளோ நாக்கு ருசி கேட்குதா?” என்றபடி பையன் கன்னத்தில், தன் விரல்கள் பதியும்படியாக அறை விட்டான் கணபதி.
-
“நீங்க மட்டும் எத்தினி நாள் சாப்பாடு சரியில்லேன்னு தட்டைத் தூக்கி அடிச்சிருக்கீங்க?  அம்மா பாவம்… ஒங்களால தான் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டாங்க”
-
மகன் தேம்பிக் கொண்டே சொன்ன வார்த்தைகளிலிருந்த உண்மை, அவனை நெருப்பாய்ச் சுட்டது.
=

Kalayarassy G
(20-07-2008 தினமணிக் கதிரில் ஒரு பக்கக் கதையாக எழுதியது)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13158
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உண்மை சுடும் – சிறுகதை

Post by கமாலுதீன் on Sat 25 Apr 2015 - 17:04

நிழலின் அருமை வெயில்தான் தெரியும் என்பதை உண்மைப்படுத்தும் சிறுகதை. பகிர்வுக்கு நன்றி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: உண்மை சுடும் – சிறுகதை

Post by சுறா on Sat 25 Apr 2015 - 17:52

சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல ஆண்கள் கல்யாணத்துக்கு முன்பே சமையல் கற்றுவைத்துக்கொள்வது சிறந்தது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: உண்மை சுடும் – சிறுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum