சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Today at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

சுவிட்சர்லாந்து ஏன் மகிழ்ச்சியான நாடாக திகழ்கிறது?

View previous topic View next topic Go down

Sticky சுவிட்சர்லாந்து ஏன் மகிழ்ச்சியான நாடாக திகழ்கிறது?

Post by Nisha on Tue 28 Apr 2015 - 22:20

சுவிட்சர்லாந்து ஏன் மகிழ்ச்சியான நாடாக திகழ்கிறது? இதோ மெய்சிலிற்க வைக்கும் காரணங்கள்


சர்வதேச அளவில் 158 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மகிழ்ச்சியான நாடாக சுவிட்சர்லாந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.


இதோ அவற்றின் மெய்சிலிற்க வைக்கும் பட்டியல்:


1.சுவிஸ் மக்கள் பணக்காரர்கள்
சுவிட்சர்லாந்து நாட்டின் தனி நபரை ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 58 ஆயிரம் டொலர்கள் ஆகும். பிரித்தானியாவில் 40 ஆயிரம் டொலர்கள் தான்.


2.அதிக வயதுடன் வாழ்பவர்கள்
சுவிஸ் மக்கள் சராசரியாக 82.8 வயது வரை உயிர் வாழ்பவர்கள். இதன் மூலம் சர்வதேச அளவில் அவர்கள் 10வது இடத்திலும் பிரித்தானியா மக்கள் 28வது இடத்திலும் உள்ளனர்.


3.சுவை மிக்க சொக்லெட் தயாரிப்பு
சொக்லெட் தயாரிப்புக்கு பெயர் போன நாடு எது என்றால், அது சுவிட்சர்லாந்து தான் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் தயாரிக்கும் தனித்துவமான சொக்லெட்டுகள் மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


4.குண்டான சுவிஸ் நபர்களை பார்ப்பது அரிது
சுவை மிக்க சொக்லெட்டை உண்டாலும், சுவிஸ் மக்கள் அதிக எடையுடன் வளர்வது கிடையாது. ஐரோப்பிய நாடுகளிலேயே 9 சதவிகித குறைந்த அளவில் உடல்பருமன் உள்ளவர்களே சுவிஸில் காணப்படுகின்றனர்.


5. மிகச்சிறந்த விளையாட்டு வீரரை குடிமகனாக பெற்றுள்ளது
டென்னிஸ் விளையாட்டு என்றால் ரோஜர் பெடரரை யாராலும் மறக்க முடியாது. சர்வதேச அளவில் சுவிஸிற்கு புகழ்தேடி தந்த அவர் ஒரு சுவிஸ் குடிமகன்.


6.போர் விவகாரங்களில் தலையீடு கிடையாது
கடந்த 1847ம் ஆண்டிலிருந்து எந்த போரிலும் பங்கேற்காத, அல்லது ஆதரவு தராத நாடு சுவிஸ். ராணுவத்திற்காக மில்லியன் கணக்கில் செலவு செய்வது இல்லை. சுவிஸ் மக்கள் அமைதி விரும்பிகள்.


7.நிறைய மொழி பேசுபவர்கள்
பெரும்பாலான சுவிஸ் மக்கள் ஜேர்மன், பிரெஞ்ச், ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழிகளில் புலமை பெற்றவர்கள்.


8.அலுவலக வேலை நேரம் குறைவு
அதிக அளவு வருமானம் பெற்றாலும், சுவிஸ் மக்கள் அலுவலகங்களில் பணி செய்யும் நேரம் வாரத்திற்கு 35.2 மணி நேரம் தான். இது பிரித்தானியா-36.4, ஸ்பெயின்-38, கிரீஸ்-42.1, துருக்கி-48.9 மணி நேரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு ஆகும்.


9.இயற்கை எழில் கொஞ்சம் சுற்றுப்புறம்
சுவிட்சர்லாந்து நாடு முழுவதும் ஆல்ப்ஸ் மலைகள் மற்றும் பசுமையான நிலப்பரப்புகள் சூழ்ந்துள்ளது அவர்களின் ஆரோக்கியத்திற்கு பயனாக அமைந்துள்ளது.


10.மிகச்சிறந்த மருத்துவ சேவை
மருத்துவ சிகிச்சைகளுக்காக காத்திருப்பு நேரம்(Waiting for Appointment) மிகவும் குறைவு என்பதால் சுவிஸ் மருத்துவமனைகளில் சேவைகள் உலகளவில் தலை சிறந்ததாக கருதப்படுகிறது.
அதனால் தான் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பு சுவிஸின் ஜெனிவாவில் அமைந்துள்ளது.


11. சுவிஸ் மக்கள் மிகச் சிறந்த அறிவாளிகள்
சுவிஸ் மக்கள் தொகை சுமார் 8 மில்லியனாக இருந்தாலும், சுமார் 25 நோபல் பரிசு வல்லுனர்களை சுவிட்சர்லாந்து உருவாக்கியுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜேர்மனியில் பிறந்திருந்தாலும், அவர் படிப்பை தொடங்கியது சூரிச் கல்லூரியில் தான். அவருடைய தலைச்சிறந்த ‘சார்பியல் தத்துவத்தை’(Theory of Relativity) பெர்ன் நகரில் உள்ளபோது தான் வளர்த்துக்கொண்டார்.


12.பெண் ’ஜேம்ஸ் பாண்ட்’டை பெற்ற நாடு சுவிஸ்
ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்து பெண் ‘ஜேம்ஸ் பாண்ட்’ என பெயர் பெற்ற Ursula Andress பிறந்தது சுவிஸ் தான்.


13.ஜனநாயகத்திற்கு சுவிஸ் ஒரு சிறந்த உதாரணம்
சுவிஸ் ஜனநாயக நாட்டில் சாதாரண குடிமகன் கூட அரசியலமைப்பு திருத்தத்திற்கு வேண்டுகோள் விடுக்கலாம். எந்த சட்டம் குறித்தும் வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் சுவிஸ் மக்களுக்கு உண்டு. இதனால் தான் 26 மண்டலங்களும் சிறந்த வகையில் தன்னாட்சியை நடத்தி வர முடிகிறது.


14.மன உளைச்சலை குறைக்கும் ஏரிகள்
சுவிஸ் நாட்டில் பெருமளவில் ஏரிகள் உள்ளதால், பொழுதுபோக்கிற்காக ஏரிகளின் கரைகளில் அமர்வது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.


15.இயற்கையை ரசிக்கும் வகையில் ரயில் சேவைகள்
சுவிட்சர்லாந்து நாட்டில் வளம் வரும் ரயில்களில் பயணித்தால், சுவிஸின் ஒட்டுமொத்த அழகையும் பிரமிப்புடன் கண்டுகளிக்கும் வகையில் ரயில்களின் வடிவங்கள் அமைந்துள்ளன.


16. சுவை மிக்க சீஸ் வகைகள்
பல வகைகளில் ஆரோக்கியமான சீஸ்களை(Cheeses) உணவுகளில் பயன்படுத்துவதால், அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.


17.தரம் மிக்க நகரங்கள் மிகுந்த நாடு
அனைத்து வகையிலும் வாழ தகுதியான நகரங்களின் பட்டியலில் சூரிச் இரண்டாவது இடத்திலும், ஜெனிவா 8வது இடத்திலும், பெர்ன் 13வது இடத்திலும் உள்ளன.


18.நேரம் தவறாமை
சுவிட்சர்லாந்து சுவிஸ் கடிகாரங்களுக்கு மட்டும் பிரபலமானது அல்ல. எந்த காரியத்தையும் உரிய நேரத்தில் காலம் தவறாமல் செய்வதில் சுவிஸ் மக்கள் கெட்டிக்காரர்கள்.


19.தேசிய கொடி
கடைசியாக, செஞ்சிலுவை சின்னத்துடன் உலக புகழ்பெற்றிருக்கும் தேசிய கொடி சுவிஸ் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ மிக முக்கிய காரணமாக திகழ்கிறது.

Copyrights by Shelva Swiss News


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்து ஏன் மகிழ்ச்சியான நாடாக திகழ்கிறது?

Post by கமாலுதீன் on Wed 29 Apr 2015 - 6:16

சுவையான தகவல்.

சுவிஸ் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சபாஷ். ஒரு நாட்டின் வெற்றியும் அதன் குடிமக்களின் மகிழ்ச்சியும் அவ்வளவு சுலபமாக வந்துவிடாது. ஒவ்வொரு குடிமகனும் அதற்கு பங்களிப்பது அவசியம். அந்த விஷயத்தில் சுவிஸ் மக்கள் பாரட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர்கள்.

(அது சரி, இன்னொரு முக்கியமான காரணம் இடம் பெறவில்லை. அதாகப்பட்டது:
20. எங்கள் சேனையின் "நிஷா" அவர்கள் அங்கு இருப்பதும், பல்வேறு நிழச்சிகள் திறம்பட நடைபெற வியாபார நோக்கமே மட்டுமின்றி பொது சேவையாகவும் பங்களிப்பதும் அந்நாட்டின் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாக கருதப்படுகிறது.)

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்து ஏன் மகிழ்ச்சியான நாடாக திகழ்கிறது?

Post by நண்பன் on Wed 29 Apr 2015 - 13:24

கமாலுதீன் wrote:சுவையான தகவல்.

சுவிஸ் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சபாஷ். ஒரு நாட்டின் வெற்றியும் அதன் குடிமக்களின் மகிழ்ச்சியும் அவ்வளவு சுலபமாக வந்துவிடாது. ஒவ்வொரு குடிமகனும் அதற்கு பங்களிப்பது அவசியம். அந்த விஷயத்தில் சுவிஸ் மக்கள் பாரட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர்கள்.

(அது சரி, இன்னொரு முக்கியமான காரணம் இடம் பெறவில்லை. அதாகப்பட்டது:
20. எங்கள் சேனையின் "நிஷா" அவர்கள் அங்கு இருப்பதும், பல்வேறு நிழச்சிகள் திறம்பட நடைபெற வியாபார நோக்கமே மட்டுமின்றி பொது சேவையாகவும் பங்களிப்பதும் அந்நாட்டின் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாக கருதப்படுகிறது.)
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்து ஏன் மகிழ்ச்சியான நாடாக திகழ்கிறது?

Post by rammalar on Wed 29 Apr 2015 - 14:29

[img][/img]
-

 Ursula Andress
-
Dr No படம் (1962) ல் வந்தது.

அந்த படத்தில் நடிச்சவங்க,...!!
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்து ஏன் மகிழ்ச்சியான நாடாக திகழ்கிறது?

Post by rammalar on Wed 29 Apr 2015 - 14:39

35 facts about Switzerland
-
ஆர்வமுள்ளவர்கள் இதையும் படிக்கலாம்:
-
http://www.expatica.com/ch/about/35-facts-about-Switzerland_100041.html
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்து ஏன் மகிழ்ச்சியான நாடாக திகழ்கிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum