சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Yesterday at 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Yesterday at 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Yesterday at 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Yesterday at 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Yesterday at 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Yesterday at 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Yesterday at 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Yesterday at 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Yesterday at 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Yesterday at 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Thu 19 Oct 2017 - 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Thu 19 Oct 2017 - 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Thu 19 Oct 2017 - 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:03

.

தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Go down

Sticky தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Sat 11 Jul 2015 - 12:50

First topic message reminder :

  
மார்ச் - 2013-ல் மனசு தளத்தில் ஆரம்பித்து 80 பகுதிகளாக பதிந்த 'கலையாத கனவுகள்' என்ற எனது முதல் தொடர்கதையை இங்கு பதிகிறேன். தினந்தோறும் அல்லது வாரத்தில் ஆறு பகுதிகள் (ஒரே நாளில் இரண்டு பகுதிகள்) என்ற கணக்கில் பதியலாம் என்று நினைக்கிறேன். இது எனது முதல் தொடர்கதை... இதில் நிறையைவிட குறைகள் நிறைய இருக்கலாம்... லாம் என்ன இருக்கும். எனவே நிஷா அக்கா (முன்பு படித்திருந்தாலும்) உள்ளிட்ட அனைவரும் தங்கள் உண்மையான கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்... என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ள உதவும். வேரும் விழுதுகளைத்தான் நிஷா அக்கா பதியச் சொன்னார். பானு அக்கா கூட கேட்டிருந்தார். ஒரு சில காரணங்களால் இங்கு பதியவில்லை. ஆனால் இதைத் தொடர்ந்து அதையும் பதிவேன். 
நன்றி.

நட்புடன்...,
சே.குமார்.                      
   என்னை எழுத்தாளனாக ஆக்கிப் பார்த்து... எனது கதைகளைப் படித்து நிறை குறைகளை எடுத்துச் சொல்லி... இன்னும் என்னை எழுதத் தூண்டும் எனது கல்வித்தந்தை பேராசிரியர். மு.பழனி இராகுலதாசனுக்கும் என் கதை பத்திரிக்கைகளில் வந்தால் படிக்கத் தெரியாவிட்டாலும் என் அப்பா எழுதிய கதை என்று புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வீதியெங்கும் விளம்பரம் செய்யும் என் செல்ல மகளுக்கும் இக்கதையை சமர்ப்பிக்கிறேன்....
*****************

அத்தியாயம்_7 : அதிர்ச்சி!
அத்தியாயம்_8 : மொட்டுக்கள் மலருமா?
அத்தியாயம்_9 : கோபம் கொள்ளும் மனம்!
அத்தியாயம்_10 : நெஞ்சுக்குள் காதல் விதை!
அத்தியாயம்_11 : ஊடலுக்குப்பின் நட்பு!
அத்தியாயம்_12 : சண்டை ஆரம்பம்
அத்தியாயம்_13 : தீர்ப்புக்கள் திருத்தப்படுமா?
அத்தியாயம்_14 : பதறும் பாவை
அத்தியாயம்_15 : வாடகை அம்மா
அத்தியாயம்_16 : மீண்டும் ஊடல்
அத்தியாயம்_17 : மீண்டும் கூடல்

Spoiler:

 1.   படிப்பே பிரதானம்
 1996-ஆம் வருடம்...

மாடு,ஆடு, நாய், கோழிகளின் சத்தத்துடன் அழகான கிராமத்துக் காலைப் பொழுது...

"என்னடா குட்டி போட்ட நாயாட்டம் சுத்தி சுத்தி வாறே..."

"இன்னைக்கு ரிசல்ட் வருதுல்லம்மா... அதான் பயமா இருக்கு"

"என்னடா பயம் வேண்டிக்கெடக்கு... பாஸ் பண்ணிருவல்ல... ஒங்கப்பன் போனதுக்கு அப்பறம் பாலு யாவாரம் பாத்துத்தான் ஒங்கள படிக்க வக்கிறேன்... மூத்தவன் குடும்ப சூழ்நிலையால படிக்க முடியல... அக்கா படிச்சா... பொட்டபுள்ளய காலகாலத்துல கரை சேக்குற காரியத்தை பாக்காம படிக்க வச்சி அழகு பாக்குறியோன்னு அங்காளி பங்காளிக சத்தம் போட்டதால படிப்ப நிப்பாட்டி வீட்டுல இருக்க வச்சிட்டேன். நீயாவது நல்லா படிக்கணுங்கிறது என்னோட கனவுடா... அதுல மட்டும் மண் அள்ளிப் போட்டுறாதேடா..."

"ஐய்யோ அம்மா... ஆ...ஊன்னா புராணம் வாசிக்க ஆரம்பிச்சிருவே..."

"ஆமாடா... நாஞ் சொல்றது ஒனக்கு புராணமாத்தான்டா இருக்கும்... காலேசு படிக்கப் போறமுன்னு தெனாவெட்டு வந்திருச்சா..."

"அதெல்லாம் இல்லம்மா... நல்ல மார்க் வாங்கணுமேன்னு கவலையா இருக்கும்மா... நீங்க வேற தேவையில்லாம பேசி டென்சனாக்கிட்டிங்க..."

"நா... பேசுற ஒங்களுக்கு தேவையில்லாததுதான்... நாயி படிச்சா நாளைக்கு ஒம் பொண்டாட்டி புள்ள மதிக்கும்... இல்லயின்னா கேவலந்தான் படணும்... எனக்கா நாளக்கி சம்பாதிச்சு போடப்போறே... எங்கிட்டு கெடக்கே எடுபட்ட சிறுக்கின்னு கூட கேக்குறியோ இல்லையோ.... யாரு கண்டா... சரி சரி கஞ்சிய குடிச்சிட்டு சித்தம் போக்கு செவம் போக்குன்னு சுத்தி வா... எனக்கு வேல கெடக்கு... ஒனக்கு கஞ்சிய ஊத்திட்டு நா போயி மாடுகளை அவுத்து விட்டிட்டு வாறேன்..."

"சரிம்மா..."

---

இப்ப இருப்பது போல் இணையதள வசதி அவ்வளவு பிரபலமாகவில்லை. தேர்வு முடிவுகள் எல்லாம் நாளிதழ்கள் மூலமாகத்தான் அறிய வேண்டும். மதியம் இரண்டு மணிக்கெல்லாம் மாலைமலர் சிறப்புப் பதிவில் முடிவு வந்துவிடும் என்பதால் முதல் நாளே கருணாநிதி அண்ணன் பெட்டிக்கடையில் சொல்லி வைத்திருந்தான். இருந்தாலும் இருப்புக் கொள்ளாமல் ஒரு மணிக்கெல்லாம் சைக்கிளில் தேவகோட்டை நோக்கி விரையலானான்.

ரிசல்ட் வந்து மார்க் சீட்டும் வாங்கியாச்சு... முன்னூற்றி அறுபது மார்க் வாங்கியிருந்தான். விவரம் தெரிந்த நண்பர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சாத்தான் நல்லது என்று சொல்லி அவனையும் அதற்கே அப்ளிகேசன் போடு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கு சிலவாகும் என்றும் சொன்னதால் அம்மாகிட்ட கேட்டுத்தாண்டா சொல்லணும் என்று சொல்லிவிட்டான்.

"அம்மா... என் பிரண்டெல்லாம் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல சேரப் போறாங்களாம்."

"என்ன பூட்டரோ படி... வேணாங்கல... நாலு பேருமாதிரி நீ நல்லா இருக்கணும்... அதுவும் ஒம்மாமனுக்கு முன்னால நாலெழுத்து படிச்சு உசந்து நிக்கணும்... இந்த ஸ்கூலுல சேக்கப் போகும்போது படிச்சவன் அவந்தான்னு ஒதவி கேக்கப் போனா வேலயிருக்குன்னு சொல்லி வரமாட்டேனுட்டான்... அன்னைக்கு நா ஒன்னய குறுக்கால நடந்து கூட்டிக்கிட்டு போயி கஷ்டப்பட்டு சேர்த்தேன்... அத மறந்துறாத... அதுதான் முக்கியம்..."

"படிப்பேம்மா... ஆனா கம்ப்யூட்டர் படிப்புக்கு அதிகம் செலவாகுமாம்..."

"எம்புட்டாம்... கூடையிலயா கேக்கப்போறாங்க..."

"இல்ல நம்ம சரவணன் அக்கா படிக்கிறாங்க... அவங்க சொன்னாங்க ஒரு செமஸ்டருக்கு ஆறாயிரத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்குமாம்... "

"வருசத்துக்கா...?"

"வருசத்துக்கு ரெண்டு செமஸ்டராம்... பன்னெண்டாயிரம்... அப்புறம் மத்த செலவு..."

"அம்புட்டுக்காசுக்கு ஆத்தா நா எங்கய்யா போவேன்... குருவி சேக்கிறமாதிரி சீதை கல்யாணத்துக்குத்தான் சேத்துக்கிட்டு வாறேன். அதை எடுத்துக் கொடுத்துப்புட்டா நீ படிச்சு முடிக்கிறவரைக்கும் அவள கரை சேக்காம இருக்க முடியாதேய்யா... அண்ணங்கிட்ட கேளு... நாளக்கி சரவணன் வீட்டுக்கு போகும் போது போன்ல அண்ணன கூப்பிட்டு விவரம் சொல்லு... அவன் என்ன சொல்றான்னு கேக்கலாம்...ம்... சரியா..."

"ம்..."

----

"டேய் உங்கண்ணன்கிட்ட அம்மா பேச சொன்னாங்கன்னாய்... பேசுடா"

"வேணான்டா... அதையும் வீணாவுல செரமப்படுத்திக்கிட்டு... பேசாம பிஸிக்ஸ் சேர்ந்திடலாமுன்னு நினைக்கிறேன்... அது போதுன்டா..."

"சரி... உனக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யிடா..."

“ம்... குடும்ப சூழலையும் பாக்கணுமில்ல... அக்காவுக்கு எப்ப வேணுமின்னாலும் கல்யாணம் வைக்கலாம்...”

"ம்.... சரி... அப்புறம் நாளக்கி காலேசுல அப்ளிகேசன் கொடுக்கிறாங்களாம்... காலயில பத்து மணிக்கெல்லாம் அறிவு வரச் சொல்லியிருக்கான்... அவங்க அப்பா சொன்னாராம்..."

அறிவு அப்பா காலேசு ஆபீஸ்லதான் வேலை செய்யிறார். அதனால அவன் மூலமா நினைக்கிற குரூப் வாங்கிரலாமுன்னு சொல்லியிருந்தான்.

"சரிடா... எங்க வரணும்?"

"கரெக்டா 9.45க்கு காலேசு எண்ட்ரண்ஸ்க்கிட்ட வந்திடு..."

"சரிடா"

"சீக்கிரமா வந்தா செம்மேரிசுக்கு எதிர்த்தாப்புல இருக்க கடைக்கிட்ட நில்லு. நாங்க வந்திடுறோம்..."

"ம்..."

---
மறுநாள் காலை 10 மணி...

முன்னதாகவே செம்மேரிசுக்கு எதிர்த்த டீக்கடையில் நிற்க, நண்பர்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர் எல்லாரும் வந்ததும் சைக்கிள் மீண்டும் கிளம்பி செம்மேரிசை ஒட்டியிருக்கும் ரோட்டில் திரும்ப ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி நுழைவு வாயில் வளைவும் அதன் அருகில் இருந்த கல்லறையும் வரவேற்க சைக்கிளை மிதித்தனர்.

தன் வாழ்வின் புதிய அத்தியாயம் இங்கு ஆரம்பமாகப் போகிறது என்பதை அறியாமல் கல்லூரி நோக்கி நண்பர்களுடன் பயணித்தான் கதையின் நாயகன் ராம்கி என்ற ராமகிருஷ்ணன்.

-தொடரும்...
****************************
-'பரிவை' சே.குமார்.


Last edited by சே.குமார் on Thu 24 Sep 2015 - 16:22; edited 1 time in total
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down


Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Thu 3 Sep 2015 - 16:45

தொடர்கதை : கலையாத கனவுகள்15. வாடகை அம்மா

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரியில் வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். காதலில் விழுந்தானா இல்லையா என்று போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கல்லூரிகளுக்கா கட்டுரைப் போட்டிக்குச் சென்று முதல் பரிசை வெல்கிறான். திரும்பும்போது அவளுடன் சேர்ந்து அமர்ந்து பஸ்ஸில் பயணிக்கிறான்.  கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அம்மாவை கூட்டியாரச் சொல்கிறார் முதல்வர். வைரவன் மூலமாக வாடகை அம்மாவுக்கு ஏற்பாடு செய்கிறான்.
இனி...


காலையில் அவசர அவசரமாகக் கிளம்பினான். இன்னைக்கு ஒரு நாள் வீட்ல இருந்துட்டு நாளைக்குப் போடா... என்ன அர்ஜெண்டுன்னு கேக்குறேன்னு கேட்ட அம்மாவிடம் இன்னைக்கு முக்கியமான பரிட்சை இருக்கு... இப்போ வலி இல்லை... சாயந்தரம் வரும்போது ஆஸ்பத்ரி பொயிட்டு வாறேன்... வீட்ல இருந்தா பரிட்சை போயிடும்... என்றபடி சைக்கிளை எடுத்தான்.
கல்லூரிக்கு அருகில் இருக்கும் பெட்டிக்கடையில் சைக்கிளை நிறுத்திவிட்டு வைரவனுக்காக காத்திருந்தான். சிறிது நேரத்தில் வைரவன் வந்து சேர, அவனது பைக்கின் பின்னால் இருந்து ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி இறங்கினாள்.
"ராம்கி இது சரசக்கா... இவங்கதான் இன்னைக்கு உங்க அம்மாவா நடிக்கப் போறாங்க... நான் விவரம் சொல்லியிருக்கேன்... நீயும் எல்லாம் சொல்லிக் கூட்டிப்போ... அக்கா கொஞ்சம் தத்ரூபமா நடிக்கும்.. அப்பத்தான் பிரின்ஸிக்கு சந்தேகம் வராது... அடிச்சாலும் வாங்கிக்க... பாத்து முடிச்சிட்டு இங்க கூட்டிக்கிட்டு வா... நான் கூட்டிக்கிட்டுப் போறேன்... சரியா?"
"சரிண்ணே..." என்றபடி சரசக்காவைப் பார்த்தான். ஏறக்குறைய அவனது அம்மாவை ஒத்திருக்கும் சாயல்... நல்ல வளர்த்தி... தலையில் ஆங்காங்கே வெள்ளை முடி... ஒற்றை நாடி தேகம்... ஒரு பாடாவதி கண்டாங்கிச் சேலை... அதற்கு சற்றும் ஒத்து வராத ஜாக்கெட், பொட்டில்லாத நெற்றி... கழுத்தில் தாலி... செங்கற்காலவாய்க்கு செம்மண் மிதித்து சிவப்பேறிய கால்கள்... மிஞ்சி இல்லாத விரல்... அவளைப் பார்வையால் எடைபோட்டு அவள் முகத்துக்கு வந்தபோது, 
"என்ன தம்பி விழுங்குற மாதிரி பாக்குறே... அம்மா வேசம் கட்ட வந்திருக்கேன்... அத்தாச்சி வேசம் கட்ட வந்தமாதிரி பாக்குறே..?" என்று சொல்லி சத்தமாகச் சிரித்தவள் வாய்க்குள் நிஜாம் லேடியையோ... கலைமானையோ அதக்கியிருந்தாள்.
"ஏய்... அவன்கிட்டப் போயி அத்தாச்சி நொத்தாச்சின்னு வந்த வேலையை மட்டும் பாரு..." என்றான் வைரவன்.
"இல்லக்கா... அம்மா வேசத்துக்கு வந்திருக்கீங்க... நெத்தியில பொட்டில்ல... மிஞ்சி இல்ல ஓகே... ஆனா தாலிக் கயிறு.... அதான்..."
"ஏப்பா... உனக்கு நடிக்கிறதுக்காக எம்புருஷனை சாகவா சொல்லமுடியும்... நல்லாயிருக்கே...?"
"ஐய்யய்யோ அப்படி சொல்லலை... அதை மறைச்சு..."
"தம்பி... வைரவன் உன்னோட அப்பா இல்லைன்னு சொன்னாப்ல... அதான் பொட்டு வைக்கலை... எப்பவும் செங்கலுக்கு மண்ணு மிதிக்கிறப்போ மிஞ்சியைக் கழட்டி வச்சிருவோம்... அதனால அதுவும் இல்லை... பாக்கிறவங்க பார்வை நெத்தியப் பாக்கும்... இல்லேன்னா காலைப் பாக்கும் அது ரெண்டையும் மறைக்க முடியாது... சேல முந்தானிய எடுத்து மூடிக்கிட்டா தாலியிருக்கது தெரியாது.. அதெல்லாம் நா பாத்துக்கிறேன்... நீ விவரம் சொல்லு..."
அவளுக்கு விவரம் சொல்லி, தனது அம்மாவை அழைத்துப் போவதுபோல் சைக்கிளில் வைத்து கல்லூரிக்குள் அழைத்துச் சென்றவன் சைக்கிளை நிறுத்திவிட்டு துறைத்தலைவரின் அறைக்கு சரசுவுடன் செல்லும் போது எதிர்ப்பட்ட தமிழய்யா, "என்ன ராம்கி... அம்மாவை கூட்டியாந்துட்டீங்களா... வணக்கம்மா... நல்லாப் படிக்கிறபுள்ள... தெரிஞ்ச பையனை அடிக்கிறாங்கன்னு கம்பை எடுத்துருச்சு... காலேசுக்கு வெளிய நடந்ததுதான்... இருந்தும் காலேசு பேரு கெட்டுடக்கூடாதுன்னுதான் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்காங்க.... புள்ளய எதுவும் சொல்லாதீங்க... இனி இப்படி நடக்கக்கூடாதுன்னு மட்டும் தம்பிக்கு சொல்லி வையுங்க..." என்றபடி நகர்ந்தார்.
புரபஸர் கேவிஎஸ் இண்டியன் எக்ஸ்பிரஸைப் படித்துக் கொண்டிருந்தார். ராம்கி அவரருக்கில் செல்லவும்.
"ம்... அம்மாவா...?"
"ஆ... ஆமா.. சார்..."
"அம்மா பிரச்சினைக்குன்னு காலேசுக்கு வர்றது இதுதான் கடைசியா இருக்கணும்... சரியா.... மறுபடியும் அடிதடின்னு போகக்கூடாது... சரி வாங்கம்மா பிரின்ஸ்பாலைப் பாத்துட்டு வரலாம்..."
"ம்.."
"இதுதான் உங்க அம்மாவா..?" பிரின்ஸிபாலின் முதல் கேள்வியே மிரட்டும் வண்ணம் வந்தது.
"ஆ... ஆமா... சார்..."
"உங்க பேரு என்னம்மா?"
"நாகம்மாங்க சார்..."
"உங்க வீட்டுக்காரர் தவறிப்போயிட்டாராமே..."
"ஆமா... இந்தா இதுக சிறுசுகளா இருக்கயிலயே போயிச் சேந்துட்டாரு... கஷ்டப்பட்டு படிக்க வச்சா இது அடிதடின்னு வந்து நிக்கிது... நா வாங்கியாந்தா வரம் அப்படியிருக்குங்க சார்..."
"இது மொத தடவைங்கிறதாலயும்... அவங்க புரபஸர்ஸ் ரெக்கமெண்ட் பண்ணுனதாலயும் இத்தோட விடுறேன். அப்புறம் அவங்க பசங்களெல்லாம் இவன் நல்லவன்... நல்லா படிக்கிற பையன்... இந்த ஒரு தடவை மன்னிச்சுருங்கன்னு சொல்லி எழுதிக் கொடுத்திருங்காங்க... இந்தா இருக்கு பாருங்க... உங்க புள்ளைக்கு புத்திமதி சொல்லுங்க..."
"சரிங்க சார்..."
"குடும்ப சூழலை நினைச்சு படிக்கச் சொல்லுங்க...  இவன நம்பித்தானே இருக்கீங்க... நல்லா படிச்சு நல்ல வேலைக்குப்  போனான்னா குடும்ப கஷ்டம் போகுமில்ல.... நீங்க என்ன வேலை பாக்குறீங்க..."
"புத்தி சொல்றேங்க சார்... இன்ன வேலையின்னு இல்ல சார்... பாலூத்துவேன்... தயிரூத்துவேன்... களை எடுக்கப் போவேன்... கருதறுக்கப் போவேன்... வீட்டு வேலைக்குப் போவேன்.... இப்புடி எல்லாஞ் செய்வேங்க சார்..."
"தம்பி.... பாரு அம்மா எம்புட்டு கஷ்டப்படுறாங்கன்னு... அவனை அடிச்சாங்க... இவனை அடிச்சாங்கன்னு நீ முன்னாடி போவாதே... அவனுக அடிச்சிக்கிறதுக்குன்னே வர்றவனுங்க... நீ படிக்க வர்றே... அதை மனசுல வச்சுக்க... இனி உம்பேரு பிரச்சினைகள்ல வரக்கூடாது சரியா..."
"சரி சார்..."
"என்னோட கனவுல மண்ணை அள்ளிப் போட்டுறுவான் போலங்க சார்... பெரியவன் கஷ்டப்பட்டு பணம் அனுப்புறான்.. இது இங்க சண்டியராத் திரியுது... எல்லாம் என்னோட தலையெழுத்து.... சனியனை பன்னெண்டாப்போடா மில்லுல விடச் சொன்னாங்க... நாந்தேன் படிக்கட்டுமின்னு நெல்லப்பில்ல வித்து குடும்பம் நடத்துனாலும் பரவாயில்லன்னு காலேசுல சேர்த்துவிட்டேன்... ரவுடின்னு பேரு வாங்கிருச்சு... சனியனே... ரவுடின்னு பேர் வாங்கி என்னை இங்க கொண்டாந்து நிறுத்தவா காலேசுக்கு அனுப்புனேன்.... " என்றபடி ராம்கி கன்னத்தில் பளார்ன்னு ஒரு அறைவிட்டு விட்டு முந்தானையில் மூக்கைச் சிந்தினாள்.
"அம்மா தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை அடிக்காதீங்க... அன்பா சொல்லி புரிய வைங்க... இனி படிப்புல மட்டும் கவனம் செலுத்துவான்... அடிக்காதீங்க... அதுவும் எங்க முன்னாடி அடிச்சீங்கன்னா அவன் ரொம்ப பீல் பண்ணுவான்... சரி... தம்பி நீங்க இனி கிளாஸ்க்குப் போகலாம்..."
"சரி சார்...."
"வர்றேனுங்க சார்... பயல நல்லா பாத்துக்கங்க.... நானும் புத்தி சொல்லுறேன்... நீங்களும் சொல்லுங்க..." என்று முதல்வரிடமும் கேவிஎஸ் சாரிடம் சொல்லிவிட்டு வெளியேற, அவர்கள் பின்னே எழுந்த கேவிஎஸ்ஸை 'இருங்க சார் போகலாம்' என்றார் முதல்வர்.
"சொல்லுங்க சார்..."
"அந்தம்மா வாங்குன காசுக்கு நல்லா ஆக்ட் பண்ணுது பாத்தீங்களா?"
"என்ன சார் சொல்றீங்க... வந்தது அவனோட அம்மா இல்லயா?"
"என்ன சார் எத்தனை பேரைப் பாக்குறோம்... அம்மா மகன்னு பாத்தோடனே தெரியாதா என்ன... அதுவும் போக அந்தம்மா உள்ள நுழையும் போதே எங்கயோ பாத்திருக்கமேன்னு யோசிச்சேன்... அப்புறம் பேசும் போதுதான் ஞாபகம் வந்துச்சு... போன வருசம் ஒ ருதடவை வைரவன் அப்பா, அம்மா ஊருக்குப் போயிருக்காங்க... இது என்னோட சித்தியின்னு கூட்டியாந்தான். இன்னைக்கு இவனுக்கு அம்மாவா வந்திருக்கு.. வைரவனுக்கு ராம்கி என்ன சித்தி பையனா?"
"சார் என்ன திருட்டுத்தனம்... இப்பவே கூப்பிட்டு கண்டிக்கனும் சார்..."
"சார்... பாவம் நல்லா படிக்கிற பய... அவங்க அம்மா கஷ்டப்படுறவங்க... பல கனவோட இருப்பாங்க... அதை கெடுத்துடக்கூடாதுன்னு இவனுககிட்ட கேட்டிருப்பான்... விட்டுடுங்க... அடுத்து மாட்டினான்னா அப்ப பாக்கலாம்... விட்டுடுங்க..."
"சரி சார்.... இருந்தாலும்..."
"விட்டுடுங்க... தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க..."
"ஓகே..."

"என்னடா.... பிரச்சினை முடிந்ததா..?" என்றனர் நண்பர்கள்.
"ம்... ஏன்டா பழனி... நம்ம கிளாஸ்ல எல்லாருமா சேர்ந்து தண்டிக்கக்கூடாதுன்னு எழுதிக் கொடுத்திருக்கீங்க... ரொம்ப நன்றிடா..."
"இதுக்கு முக்கியகாரணம் மல்லிகாதான்... நாங்க சொன்னதும் அதை உடனே செயல்படுத்தியவ அவதான்....  லேடீஸ் ரூம் போயிட்டா போல... ஆள் இல்லை... இவங்களை அனுப்பிட்டு வந்து அவளுக்கு நன்றி சொல்லு..."
"சரிடா... இப்ப வாறேன்... வாங்கக்கா போலாம்..."
"காலேசுக்குள்ள அம்மான்னு சொல்லு யாராவது கேட்கப் போறாங்க...." என்று சிரித்தபடி சைக்கிளில் ஏறினாள்.
"எதுக்கு பளார்ன்னு அறைஞ்சிங்க...?"
"அப்பத்தான் தத்ரூபமா இருக்கும்... எத்தனை பிரின்சுபாலைப் பார்த்திருப்பேன்..."
"அது சரி... அதுக்காக இப்படியா அடிப்பீங்க..."
"ரொம்ப வலிக்கிதா...?"
"அடிச்சிட்டு... வலிக்கிதான்னா... விடுங்க..." என்றான்.
கடையில் வைரவன் வண்டி நிக்க ஆளைக் காணோம்... 
"அண்ணே... வைரவண்ணன் எங்க போனாரு..?"
"பசங்க கூப்பிட்டாங்கன்னு டவுனுக்குள்ளா போயிருக்கு... இந்த அம்மாவை இங்க இருக்கச் சொன்னுச்சு... உன்னைய கிளாசுக்குப் போகச் சொன்னுச்சு...."
"இல்ல இவங்களுக்கு காசு கொடுக்கனும் அதான்..."
"அதெல்லாம் அது கொடுத்துக்கிதாம்...அப்புறம் பேசிக்கலாம்ன்னு சொல்லச் சொன்னுச்சு..."
"சரிண்ணே... அக்கா  ரொம்ப நன்றி... நான் வாறேங்க்கா... அண்ணன் வந்து பணம் கொடுப்பாரு... அண்ணே அக்காவுக்கு ஒரு பவண்டோ குடுங்க... இந்தாங்க காசு..." என்று கொடுத்து விட்டு கிளம்பினான்.
சைக்கிளை நிறுத்திவிட்டு வகுப்பிற்கு நடந்தவன் எதிரே வந்த மல்லிகாவிடம் "ரொம்ப நன்றிங்க..." என்று சொல்ல, "இதுக்கு எதுக்கு நன்றி... நன்றி எல்லாம் சொல்லி என்னைய பிரிச்சுப் பாக்காதீங்க..." என்றாள். 
"அப்படியில்லை... உங்க முயற்சிக்கு நன்றி சொல்லனுமில்ல..." என்றபடி அவளுக்கு இணையாக நடந்தான்.
"ராம்... ஒரு நிமிசம்..." என்று குரல் கேட்க, திரும்பினான்... அவனை நோக்கி புவனா வந்து கொண்டிருந்தாள்.
-'பரிவை' சே.குமார்
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Thu 3 Sep 2015 - 17:13

"அந்தம்மா வாங்குன காசுக்கு நல்லா ஆக்ட் பண்ணுது பாத்தீங்களா?"
"என்ன சார் சொல்றீங்க... வந்தது அவனோட அம்மா இல்லயா?"

ஹாஹா! இருந்தாலும் இது கொஞ்சம் என்ன ரெம்ப டூ மச் குமார்.  வாத்தியாருக்கே சட்டென  ராம்கியோட அம்மா இல்லைன்னு புரிந்த பின்னும் கண்டுக்காமல் விட்டுட்டிங்களே.  இதெல்லாம் நிஜம்மா நடக்குமா?

ஆனால் இந்த மாதிரி அம்மாவா, அப்பாவா நடிக்க வைக்கின்றது கையெழுத்து போடுறதுன்னு அப்பப்ப நடக்கத்தான் செய்யிது. 

தொடராய் படிக்கும் போது இதெல்லாம் சட்டுனுகருத்தில் படல்ல. இங்கே  பதியும் போது தான் கவனத்தில் வருது. 

தொடருங்கள் குமார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Thu 3 Sep 2015 - 20:28

Nisha wrote:
"அந்தம்மா வாங்குன காசுக்கு நல்லா ஆக்ட் பண்ணுது பாத்தீங்களா?"
"என்ன சார் சொல்றீங்க... வந்தது அவனோட அம்மா இல்லயா?"

ஹாஹா! இருந்தாலும் இது கொஞ்சம் என்ன ரெம்ப டூ மச் குமார்.  வாத்தியாருக்கே சட்டென  ராம்கியோட அம்மா இல்லைன்னு புரிந்த பின்னும் கண்டுக்காமல் விட்டுட்டிங்களே.  இதெல்லாம் நிஜம்மா நடக்குமா?

ஆனால் இந்த மாதிரி அம்மாவா, அப்பாவா நடிக்க வைக்கின்றது கையெழுத்து போடுறதுன்னு அப்பப்ப நடக்கத்தான் செய்யிது. 

தொடராய் படிக்கும் போது இதெல்லாம் சட்டுனுகருத்தில் படல்ல. இங்கே  பதியும் போது தான் கவனத்தில் வருது. 

தொடருங்கள் குமார்.

வணக்கம் அக்கா...
நாங்க கல்லூரியில் படிக்கும் போது அம்மா, அப்பாவெல்லாம் வாடகைக்கு பிடித்து வரும் பையன்கள் அதிகம் உண்டு. அப்படிக் கொண்டு வந்த எங்கள் வகுப்புத் தோழன் வாங்கிய அறையும், எனக்குத் தெரிந்து அவனது அம்மா இல்லை என்று தெரிந்தும் முதல்வர் மன்னித்து விட்ட நல்லாப் படிக்கும் பையனுக்கு நடந்ததுமே இங்கு கதையில் சில மாறுதல்களுடன் சேர்த்திருக்கிறேன். ஆனால் கதை கற்பனையே... அங்கங்கே சில வாழ்வில் பார்த்த நிகழ்வுகள்...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Sat 5 Sep 2015 - 9:07

ஆமாமாம் எனக்கு தெரியுமே அது! 

அம்மா அப்பா கையெழுத்தை வைச்சு கடிதம்லாம் கூட எழுதுவாங்க.  நான் எழுதல்லப்பா!  நான் நல்ல பெண்ணு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Sat 5 Sep 2015 - 19:43

Nisha wrote:ஆமாமாம் எனக்கு தெரியுமே அது! 

அம்மா அப்பா கையெழுத்தை வைச்சு கடிதம்லாம் கூட எழுதுவாங்க.  நான் எழுதல்லப்பா!  நான் நல்ல பெண்ணு!

நம்பிட்டேன் அக்கா...
நானெல்லாம் இதெல்லாம் பண்ணலை அக்கா...
புவனா மேல சத்தியமா...
ஆனா ரொம்ப பேருக்கு லவ்வுக்காக கவிதை எழுதிக் கொடுத்திருக்கேன்...
சில நட்புக்களுக்கு எழுதி கீழ சே.குமார்ன்னு எழுதிக் கொடுத்து அவனுக படிச்சிப் பார்த்து அடி வாங்கியிருக்கிறேன்...
ஆனா நான் யாருக்கும் கொடுத்ததில்லை...நம்புங்க...
அதேபோல் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் அம்மா, அப்பாவை எனக்காக அழைத்துச் சென்றதேயில்லை...
பாட்டுக் கேட்டா படிப்பான்னு என் மேல அம்மாவுக்கு ஒரு நம்பிக்கை...
இலங்கையில் இருந்து வரும் தமிழ் வானொலி ரூபவாஹினியின்னு நினைக்கிறேன்... அதில் பாட்டுக் கேட்டுக்கிட்டேதான் பரிட்சைக்கு எல்லாம் படிப்பேன்.
அம்மாவுக்கு என் மேல் நம்பிக்கை அதிகம்.. அதனால் அவர்களை ஏமாற்றும் எண்ணமெல்லாம் தோன்றியதில்லை...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Sun 13 Sep 2015 - 21:03

தொடர்கதை : கலையாத கனவுகள்16. மீண்டும் ஊடல்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரியில் வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். காதலில் விழுந்தானா இல்லையா என்று போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கல்லூரிகளுக்கா கட்டுரைப் போட்டிக்குச் சென்று முதல் பரிசை வெல்கிறான். திரும்பும்போது அவளுடன் சேர்ந்து அமர்ந்து பஸ்ஸில் பயணிக்கிறான்.  கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அம்மாவை கூட்டியாரச் சொல்கிறார் முதல்வர். வைரவன் மூலமாக வாடகை அம்மாவை கூட்டிவந்து சமாளித்து விடுகிறான்.


இனி...


புவனா அவனை நோக்கி வரவும் "சரிங்க... நீங்க போங்க..." என்று மல்லிகாவிடம் சொன்னான்.
"ஏங்க... பெர்சனலா எதுவும் பேசப்போறீங்களா... நான் டிஸ்டர்ப்பா இருக்கேனா?" திருப்பிக் கேட்டாள் மல்லிகா.
"அதெல்லாம் ஒண்ணுமில்ல... அவங்களும் பிரண்ட்தான்... இருங்க..." என்று அவளிடம் சொல்லும் போதே புவனா அருகில் வந்திருந்தாள். மல்லிகாவைப் பார்த்து ஒற்றைச் சிரிப்பை உதிர்த்துவிட்டு ராம்கியை ஏறிட்டாள்.
அவனது தலையில் இருந்த கட்டைப் பார்த்தவள் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். 
"என்னங்க..."
"ம்... அடி பலமா பட்டுடுச்சா?" தலையை நிமிராமல் கேட்டாள்.
"அதெல்லாம் இல்ல... லேசாத்தான்.. உங்க அண்ணனுக்குத்தான் கத்தி நல்லாபட்டிருச்சு..."
"அவன் உங்களுக்குத்தான் நல்ல அடின்னு வருத்தப்பட்டான்... வலி இருக்கா?" தொட்டுப் பார்க்க துடித்த கையை அடக்கிக் கொண்டாள்.
"இல்லங்க... இப்போ பரவாயில்லை..."
"சஸ்பெண்ட் அது இதுன்னு... தேவையில்லாம உங்க பேர் கெட்டுப் போச்சு... இனி எங்கண்ணனை அடிக்க வந்தவங்க உங்களையும் சீண்டிக்கிட்டே இருப்பாங்க... அதான் எனக்குப் பயமா இருக்கு..." சொல்லும் போதே கண் கலங்கியது.
"அட அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லங்க... எதுங்குங்க கண் கலங்குறீங்க... யாராவது பார்த்தா தப்பாத் தெரியும்... சும்மாவே அங்க பேசக்கூடாது... இங்க பேசக்கூடாதுன்னு உங்க அண்ணன் சொல்லியிருக்காரு... எதுக்குங்க வம்பு... நான் நல்லாயிருக்கேன்... எந்தப் பிரச்சினையும் இல்லங்க..."
"நான் வருத்தப்பட்டுக் கேட்கிறது உங்களுக்கு தப்பாத் தெரியுதுல்ல... பரவாயில்ல... நேத்துல இருந்து தவிச்சுப் போயி வந்திருக்கேன்... அன்பா பேசணுமின்னு தெரியலையில உங்களுக்கு... எங்க அண்ணன் என்னங்க பண்ணிடுவான்... சும்மா அவன் சொன்னான்... அவன் சொன்னான்னு பூச்சாண்டி காட்டுறீங்க... எங்கூட பேசத் தைரியம் இருந்தா எவனுக்குப் பயப்படணும்... உங்களுக்கு புதுசா பிரண்ட்ஸ் வந்ததும் எங்கூட பேசக்கூடப் பிடிக்கலை... நான் வாறேன்..."
கண்களைத் துடைத்தபடி திரும்பிச் சென்றவளை "புவனா.. ப்ளீஸ்.. நில்லுங்க..." என்ற ராம்கியின் கத்தல் கட்டுப்படுத்தவில்லை.
"ம்... எதுக்கெடுத்தாலும் கோபம்...சரி வாங்க..." என்று மல்லிகாவுடன் நடந்தான்.
"நம்ம மேல யார் அதிகம் பாசம் வச்சிருக்காங்களோ... அவங்க கோபமும் படுவாங்க ராம்கி..."
"ம்... சின்னப்பிள்ளை மாதிரி..."
"உங்களை அந்தளவுக்கு நேசிக்கிறாங்க போல..."
"நீங்க வேற... பிரண்ட்ஸ்தாங்க... நேசம் அது இதுன்னு சொல்லி புதுக்கதைய ஆரம்பிச்சு வச்சிடாதீங்க..."
"நீங்க இப்படி சொல்றீங்க... ஆனா லேடீஸ் ரூமுக்குள்ள புவனா குரூப் இருந்தாலே உங்க பேச்சுத்தான்..." என்று சிரித்தாள்.
"அதுக்காக...  இப்ப உங்க கூட பேசிக்கிட்டு வாறேன்... உடனே உங்களையும் என்னையும் இணைச்சு சொல்லிடுறதா? பிரண்ட்ஷிப் வேற காதல் வேறங்க... எனக்கு இன்னும் யார் மேலயும் காதல் வரலைங்க..."
"இல்லங்க... காலேசுக்குள்ள ஒரு பொண்ணும் பையனும் பேசினாலே அதை காதலாத்தான் பாப்பாங்க... நேத்து உங்களுக்காக கையெழுத்து வாங்கினப்போ... நம்ம பச்சமுத்து என்ன லைன் போடுறியா.... வாழ்த்துக்கள்ன்னு சொல்றான்... எனக்கு உங்க மேல அன்பிருந்தா டைரக்டா சொல்லப் போறேன்... இதுக்கு எதுக்கு சுத்தி வளைச்சு மூக்கைத் தொடணும்... சொல்லுங்க..."
"ஆமாங்க... புவனாகூட நல்ல பிரண்ட்ஷிப் இருக்கு... ஆனா அவங்க அண்ணனுக்காக அவங்ககிட்ட பேசுறதைக்கூட கொறச்சுக்க வேண்டியிருக்கு... பாவம் ரொம்ப வருத்தப்பட்டுட்டாங்க..."
"அவ உங்களை லவ் பண்றா ராம்கி..."
"என்னங்க நீங்க திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு..."
"உண்மை... உங்க மேல எந்த அளவுக்கு காதல் இருந்தா ஒரு பொண்ணு பக்கத்துல இருக்காளேன்னு கூட பாக்காம கண் கலங்கியிருப்பா... ஏதோ பேச வந்தவ என்னையப் பார்த்ததும் பேசலை... பாவங்க அவ..."
"என்னங்க நீங்க... என்னென்னமோ பேசிக்கிட்டு... வாங்க கிளாஸ்க்குப் போவோம்..."
"நான் கிளாஸ்க்குப் போறேன்... நீங்க அவளைப் பார்த்துட்டு வாங்க... காதலியா பிரண்டான்னு அப்புறம் முடிவு பண்ணுங்க... இப்ப உங்கமேல அன்பா இருக்கிற ஒரு பொண்ணா அவளைப் பார்த்து பேசிட்டு வாங்க... அவங்க அண்ணனுக்காக அவளை கஷ்டப்படுத்தாதீங்க...ப்ளீஸ் எனக்காக... அவகிட்ட பேசிட்டு வாங்க..."
"ம்.. சரிங்க... ஆனா எல்லாரும் கிளாஸ்க்குப் பொயிட்டாங்களே... அவங்களும் போயிருப்பாங்களே..."
"இல்ல அவங்களுக்கு இந்த பிரியேடு இல்லை போல... லேடீஸ் ரூம்தான் போனாங்க... போய்ப் பாருங்க... வைரவண்ணன் பூச்சாண்டியெல்லாம் விட்டுத் தள்ளுங்க... இப்ப காலேசுல நீங்களும் ஒரு ரவுடிதான்..."
"என்னங்க சந்தடி சாக்குல என்னையும் ரவுடின்னுட்டிங்க... நம்ம ஒரே கிளாஸ்... பேசிச் சிரிச்சாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க... ஆனா வேற பொண்ணுக்கிட்ட பேசினா கண்ணு காது மூக்கு வச்சி பெரிசாக்கிடுறாங்க..."
"அதெல்லாம் அப்படித்தான்... சும்மா உங்களை கேலி பண்ணினேன்... போங்க... போய் பேசுங்க..."
"சரி... போறேன்..."
"டீ..  உன்னோட ஆளு உன்னையப் பார்க்க வர்றாரு..."
"சும்மா இருடி.. அங்கிட்டு திரும்பாதே... புரிஞ்சிக்காத ஜென்மம்..."
"எதுக்குடி கோபப்படுறே... பாவம் உங்கண்ணனுக்குப் பயந்து சொல்றாரு... அது போக உனக்காகத்தானே உங்கண்ணனை காப்பாத்தப் போயி அடிபட்டு வந்திருக்காரு... சும்மா அலையவிடாதே..."
"அலையவிட்டாத்தான் ஒரு மனசோட தவிப்புத் தெரியும்..."
"அது சரி... இப்புடி தவிக்க விட்டியனா இப்ப இங்க வர உத்தரவு கொடுத்த மகாராணி தட்டிக்கிட்டுப் போயிடுவா..."
"ம்... போவா போவா... விட்டுடுவேனா... நான் வைரவன் தங்கச்சியாக்கும்..."
"புவனா...."
அவன் பக்கம் திரும்பாமல் அமர்ந்திருந்தாள்...
"புவனா ப்ளீஸ்... "
"என்னவாம்டி... என்னனு கேட்டுட்டு போகச் சொல்லுங்கடி... யாராவது பார்த்தா எங்கண்ணனுக்கிட்ட சொல்லிடுவாங்க... அவன் மறுபடியும் கத்தியை தூக்கிருவான்... இங்க எதுக்கு வந்திருக்காராம்..?"
"ப்ளீஸ் புவனா.... நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..."
"......."
"சரி... உங்க கோபம் எப்ப தீருதோ... அப்ப வந்து பேசுங்க... நான் வாறேன்..."
அவன் போறேன் என்று சொன்னதும் படக்கென்று திரும்பினாள்.

-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Sun 13 Sep 2015 - 21:23

"நம்ம மேல யார் அதிகம் பாசம் வச்சிருக்காங்களோ... அவங்க கோபமும் படுவாங்க ராம்கி..."
"ம்... சின்னப்பிள்ளை மாதிரி..."
"உங்களை அந்தளவுக்கு நேசிக்கிறாங்க போல..."
பெண்கள் மனசை பூந்து  ஆராய்ந்து பார்த்திங்களா குமார்! அதென்னமே கோபம் படவும்  கூட  அதீத நேசிப்பு தான் காரணம் என்பதை பலர் புரிந்துப்பதில்லை. புவனா, ராம்கிக்கிடையில் மல்லிகாவை கொண்டு வந்து அழகான வாழ்க்கை தத்துவமும்  சொல்லி இருக்கின்றீர்கள். 
 
"அலையவிட்டாத்தான் ஒரு மனசோட தவிப்புத் தெரியும்..."

அது தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Thu 24 Sep 2015 - 15:55

@ நிஷா அக்கா...

தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா...
இது தொடர்கதை அல்லவா..? அப்போ கொஞ்சம் சரியாவும் எழுதணுமில்ல... அதான்...
பெண்களின் கோபத்துக்கு அதீத அன்புதான் காரணம் என்பதை நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன் அக்கா...
அலைய விடுறதுங்கிறது பெண்கள் செய்யும் ஒரு சின்ன சந்தோஷ செயல் அவ்வளவே...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky தொடர்கதை : கலையாத கனவுகள் (பகுதி-17)

Post by சே.குமார் on Thu 24 Sep 2015 - 16:04


தொடர்கதை : கலையாத கனவுகள்


17. மீண்டும் கூடல்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. அவனைப் பார்க்க வரும் புவனா, அவனுடன் மல்லிகா இருக்கவும் கோபமாகிறாள்.


இனி...
ராம்கி போறேன்னு சொன்னதும் படக்கென்று திரும்பியவள் "இப்ப மட்டும் எங்க அண்ணனுக்கிட்ட சொல்ல மாட்டாங்களா?" என்றாள்.

"இல்லைங்க... சும்மாவே பிரச்சினையாக் கிடக்கு... இதுல மேல மேல எதுக்கு பிரச்சினையின்னுதான்..."

"ஓ... என்ன பிரச்சினை..? யாரால பிரச்சினை..? என்னாலயா... இல்லையில்ல...  எங்கண்ணனை அடிச்சாய்ங்க... நீங்க திருப்பி அடிச்சீங்க... அதானே... அதுக்கும் எங்கூட பேசுறதுக்கும் என்ன பிரச்சினை..? அப்படின்னா அவகூட பேசினா மட்டும் பிரச்சினை இல்லையா?"

"அது எங்க கிளாஸ் பொண்ணு... அதனால..."

"அதனால... அப்ப அவகிட்ட பேசுவீங்க... எங்ககிட்ட பேசமாட்டீங்க... அப்புறம் எதுக்கு இங்க வந்தீங்க..?"

"அப்படியெல்லாம் இல்லங்க... ரொம்ப கோபமா இருக்கீங்க... நான் கோபமா பேசினதுக்கு சாரிங்க..."

"உங்களுக்கு அடிபட்டிருக்குன்னு தெரிஞ்சதும் நான் பட்ட வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும்... அழுகையோட பாக்க வந்தா தூக்கியெறிஞ்சு பேசுறீங்க... நான் என்னங்க பண்ணினேன்..." கண் கலங்கினாள்.

"அதான் சாரி சொல்லிட்டேன்ல.. கண்ணைத் துடச்சுக்கங்க..."

துப்பட்டாவால் கண்ணைத் துடைத்தபடி, "இப்ப அவ சொல்லித்தானே இங்க வந்தீங்க..?" அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி கேட்டாள்.

"இப்ப எதுக்குங்க அவங்க மேல கோபப்படுறீங்க... அவங்க அப்படிப்பட்டவங்க இல்லை..."

"அவளுக்கு வக்காலத்து வாங்குறீங்க... என்னைய வருத்தப்பட வைக்கிறீங்க... சொல்லுங்க அவ என்ன சொன்னா..?"

"அவங்க உங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணினாங்க... என்னைத் திட்டின்னாங்க.... இதுதான் உண்மை... சரி... சரி... கோபம் எதுக்குங்க... சாரிங்க... எப்பவும் போல நாம பிரண்டா இருப்போம்... சரி.. நான் வாறேன்..."

"நான் உங்ககிட்ட பேசணும்..."

"இப்ப பேசிக்கிட்டுத்தானே இருக்கோம்..."

"என்ன ஜோக்கா? சாயந்தரம் வெயிட் பண்ணுங்க... சரியா?"

"இல்லங்க... சாயந்தரம் ஒரு வேலை இருக்கு... நாளைக்குப் பேசுவோம்... ஐயா வீட்ல நாளைக்குச் சந்திப்போம்..."

"என்ன அத்துவிட்டுப் போறீங்களா? சரி... நாளைக்கு கண்டிப்பா ஐயா வீட்டுக்கு வாறீங்க... கதை எதாவது சொன்னா நா கொல்லங்குடி காளியாயிடுவேன்.... பார்த்துக்கங்க..."

"இப்பவே அப்படித்தான் இருக்கீங்க... இனி மாற என்ன இருக்கு" என்றான் மெதுவாக.

"என்ன..? சத்தமா சொல்லுங்க..."

"ஒண்ணுமில்ல சரியின்னு சொன்னேன்.... வரவா?"

"என்ன சொன்னீங்கன்னு தெரியும்... காளியா மாரியான்னு நாளைக்குத் தெரியும்...."

"மாரியாவே இருந்தால் அழகா இருக்கும்.. காளியான்னா இருக்க அழகும் போயிரும்..."

"என்னது...?" என்றவள் அவனை முறைப்பது போல் பார்த்தாள்.

"ஆத்தாடி... இப்பவே மாறிடாதீங்க... நான் வாறேன்..."

"ம்... அந்தப் பயம் இருக்கட்டும்..."
"அக்கா... அம்மா எங்கே?"

"அங்கிட்டுத்தான் இருந்திச்சு... யாரு வீட்டுக்காவது பேசிக்கிட்டு இருக்கப் போயிருக்கும்... பொங்கல் வருதுல்ல... சேலை துணி எடுக்கிறதைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கும்..."

"ம்... எனக்கு அண்ணங்கிட்ட சொல்லி ஜீன்ஸ் பேண்ட் வாங்கியாரச் சொல்லணும்... உனக்கு சுடிதார் வாங்கச் சொல்லுவோமா?"

"ஆமா... சுடிதார்தான் குறைச்சல்.... அடப்போடா..."

"ஏங்க்கா...... என்ன அலுத்துக்கிறே...?"

"பின்ன என்னடா.... பொங்கல் முடிஞ்சா என்னோட கலியாண வேலய ஆரம்பிச்சிடுவாங்கடா..."

"அண்ணன் வரட்டும்... எல்லாம் பேசிக்கலாம்... விடு... அம்மா டிரஸ் எடுக்கிற முடிவோட இருக்கா... இல்லையா?"

"எடுக்கணுமின்னு சொன்னுச்சு... அண்ணன் அனுப்பின காசு வச்சிருக்கும் போல... எனக்கு சேலையும் அதுக்கு சேலையும் எடுக்கிறேன்னு சொன்னுச்சு.... உனக்கு அண்ணன் எடுத்துக்கிட்டு வருமாம்..."

"ம்... அக்கா பொங்கலுக்கு பிரண்டெல்லாம் வரச்சொல்லணுக்கா... அம்மா திட்டுமோ..?"

"பசங்கன்னா திட்டாது... பொண்ணுங்கன்னா ஊரைக் கூட்டினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை..."

"எல்லாரையும்தான் கூட்டியாரணும்..."

"தேவையில்லாத வேலை பாக்காதே... அப்புறம் அம்மா கொல்லங்குடி காளியா மாறினாலும் மாறிடும்... என்னோட கல்யாண விசயத்துல நீ எதிர்க்க ஆரம்பிச்சதும் உம்மேல ரொம்ப கோவமா வேற இருக்கு... எவளுகளையும் கூட்டிக்கிட்டு வந்திடாதே... சேகர் மாதிரி..."

"கொல்லங்குடி காளியா...?" கேட்டவன் மனதுக்குள் நாளைக்கு கதை சொன்னா நான் காளியா மாறிடுவேன்னு புவனா சொன்னது வந்து செல்ல சிரித்துக் கொண்டான்.

"என்னடா சிரிக்கிறே...?"

"இல்லக்கா... இன்னைக்கு காலேசுல ஒருத்தவங்க இதே வார்த்தைய சொன்னாங்க... அதான் இப்ப நீ சொன்னதும் சிரிப்பு வந்திருச்சு.... அம்மாவை சமாளிச்சிக்கலாம்.... ஆனா அவங்களை சமாளிக்க முடியாதுக்கா" 

"யார்டா அவ?"

"ஐய்யோ அக்கா... அவ இல்லை அவங்க... என்னோட புரபஸர்... ஒரு கொஸ்டின் கேட்டாங்க... யாரும் பதில் சொல்லலை... நாளைக்குச் சொல்லலைன்னா கொல்லங்குடி காளியா மாறிடுவேன்னு சொன்னாங்க..." ஒருவாறு சமாளித்து "இரு இந்தா வாறேன்..." என்றபடி கிளம்பியவன் மனசுக்குள் நாளை புவனா அப்படியென்ன முக்கிய விசயம் பேசப்போகிறாள் என்று நினைத்தபடி சேகரைத் தேடிப் போனான்.
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum