சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

Sticky தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Sat 11 Jul 2015 - 12:50

First topic message reminder :

  
மார்ச் - 2013-ல் மனசு தளத்தில் ஆரம்பித்து 80 பகுதிகளாக பதிந்த 'கலையாத கனவுகள்' என்ற எனது முதல் தொடர்கதையை இங்கு பதிகிறேன். தினந்தோறும் அல்லது வாரத்தில் ஆறு பகுதிகள் (ஒரே நாளில் இரண்டு பகுதிகள்) என்ற கணக்கில் பதியலாம் என்று நினைக்கிறேன். இது எனது முதல் தொடர்கதை... இதில் நிறையைவிட குறைகள் நிறைய இருக்கலாம்... லாம் என்ன இருக்கும். எனவே நிஷா அக்கா (முன்பு படித்திருந்தாலும்) உள்ளிட்ட அனைவரும் தங்கள் உண்மையான கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்... என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ள உதவும். வேரும் விழுதுகளைத்தான் நிஷா அக்கா பதியச் சொன்னார். பானு அக்கா கூட கேட்டிருந்தார். ஒரு சில காரணங்களால் இங்கு பதியவில்லை. ஆனால் இதைத் தொடர்ந்து அதையும் பதிவேன். 
நன்றி.

நட்புடன்...,
சே.குமார்.                      
   என்னை எழுத்தாளனாக ஆக்கிப் பார்த்து... எனது கதைகளைப் படித்து நிறை குறைகளை எடுத்துச் சொல்லி... இன்னும் என்னை எழுதத் தூண்டும் எனது கல்வித்தந்தை பேராசிரியர். மு.பழனி இராகுலதாசனுக்கும் என் கதை பத்திரிக்கைகளில் வந்தால் படிக்கத் தெரியாவிட்டாலும் என் அப்பா எழுதிய கதை என்று புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வீதியெங்கும் விளம்பரம் செய்யும் என் செல்ல மகளுக்கும் இக்கதையை சமர்ப்பிக்கிறேன்....
*****************

அத்தியாயம்_7 : அதிர்ச்சி!
அத்தியாயம்_8 : மொட்டுக்கள் மலருமா?
அத்தியாயம்_9 : கோபம் கொள்ளும் மனம்!
அத்தியாயம்_10 : நெஞ்சுக்குள் காதல் விதை!
அத்தியாயம்_11 : ஊடலுக்குப்பின் நட்பு!
அத்தியாயம்_12 : சண்டை ஆரம்பம்
அத்தியாயம்_13 : தீர்ப்புக்கள் திருத்தப்படுமா?
அத்தியாயம்_14 : பதறும் பாவை
அத்தியாயம்_15 : வாடகை அம்மா
அத்தியாயம்_16 : மீண்டும் ஊடல்
அத்தியாயம்_17 : மீண்டும் கூடல்

Spoiler:

 1.   படிப்பே பிரதானம்
 1996-ஆம் வருடம்...

மாடு,ஆடு, நாய், கோழிகளின் சத்தத்துடன் அழகான கிராமத்துக் காலைப் பொழுது...

"என்னடா குட்டி போட்ட நாயாட்டம் சுத்தி சுத்தி வாறே..."

"இன்னைக்கு ரிசல்ட் வருதுல்லம்மா... அதான் பயமா இருக்கு"

"என்னடா பயம் வேண்டிக்கெடக்கு... பாஸ் பண்ணிருவல்ல... ஒங்கப்பன் போனதுக்கு அப்பறம் பாலு யாவாரம் பாத்துத்தான் ஒங்கள படிக்க வக்கிறேன்... மூத்தவன் குடும்ப சூழ்நிலையால படிக்க முடியல... அக்கா படிச்சா... பொட்டபுள்ளய காலகாலத்துல கரை சேக்குற காரியத்தை பாக்காம படிக்க வச்சி அழகு பாக்குறியோன்னு அங்காளி பங்காளிக சத்தம் போட்டதால படிப்ப நிப்பாட்டி வீட்டுல இருக்க வச்சிட்டேன். நீயாவது நல்லா படிக்கணுங்கிறது என்னோட கனவுடா... அதுல மட்டும் மண் அள்ளிப் போட்டுறாதேடா..."

"ஐய்யோ அம்மா... ஆ...ஊன்னா புராணம் வாசிக்க ஆரம்பிச்சிருவே..."

"ஆமாடா... நாஞ் சொல்றது ஒனக்கு புராணமாத்தான்டா இருக்கும்... காலேசு படிக்கப் போறமுன்னு தெனாவெட்டு வந்திருச்சா..."

"அதெல்லாம் இல்லம்மா... நல்ல மார்க் வாங்கணுமேன்னு கவலையா இருக்கும்மா... நீங்க வேற தேவையில்லாம பேசி டென்சனாக்கிட்டிங்க..."

"நா... பேசுற ஒங்களுக்கு தேவையில்லாததுதான்... நாயி படிச்சா நாளைக்கு ஒம் பொண்டாட்டி புள்ள மதிக்கும்... இல்லயின்னா கேவலந்தான் படணும்... எனக்கா நாளக்கி சம்பாதிச்சு போடப்போறே... எங்கிட்டு கெடக்கே எடுபட்ட சிறுக்கின்னு கூட கேக்குறியோ இல்லையோ.... யாரு கண்டா... சரி சரி கஞ்சிய குடிச்சிட்டு சித்தம் போக்கு செவம் போக்குன்னு சுத்தி வா... எனக்கு வேல கெடக்கு... ஒனக்கு கஞ்சிய ஊத்திட்டு நா போயி மாடுகளை அவுத்து விட்டிட்டு வாறேன்..."

"சரிம்மா..."

---

இப்ப இருப்பது போல் இணையதள வசதி அவ்வளவு பிரபலமாகவில்லை. தேர்வு முடிவுகள் எல்லாம் நாளிதழ்கள் மூலமாகத்தான் அறிய வேண்டும். மதியம் இரண்டு மணிக்கெல்லாம் மாலைமலர் சிறப்புப் பதிவில் முடிவு வந்துவிடும் என்பதால் முதல் நாளே கருணாநிதி அண்ணன் பெட்டிக்கடையில் சொல்லி வைத்திருந்தான். இருந்தாலும் இருப்புக் கொள்ளாமல் ஒரு மணிக்கெல்லாம் சைக்கிளில் தேவகோட்டை நோக்கி விரையலானான்.

ரிசல்ட் வந்து மார்க் சீட்டும் வாங்கியாச்சு... முன்னூற்றி அறுபது மார்க் வாங்கியிருந்தான். விவரம் தெரிந்த நண்பர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சாத்தான் நல்லது என்று சொல்லி அவனையும் அதற்கே அப்ளிகேசன் போடு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கு சிலவாகும் என்றும் சொன்னதால் அம்மாகிட்ட கேட்டுத்தாண்டா சொல்லணும் என்று சொல்லிவிட்டான்.

"அம்மா... என் பிரண்டெல்லாம் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல சேரப் போறாங்களாம்."

"என்ன பூட்டரோ படி... வேணாங்கல... நாலு பேருமாதிரி நீ நல்லா இருக்கணும்... அதுவும் ஒம்மாமனுக்கு முன்னால நாலெழுத்து படிச்சு உசந்து நிக்கணும்... இந்த ஸ்கூலுல சேக்கப் போகும்போது படிச்சவன் அவந்தான்னு ஒதவி கேக்கப் போனா வேலயிருக்குன்னு சொல்லி வரமாட்டேனுட்டான்... அன்னைக்கு நா ஒன்னய குறுக்கால நடந்து கூட்டிக்கிட்டு போயி கஷ்டப்பட்டு சேர்த்தேன்... அத மறந்துறாத... அதுதான் முக்கியம்..."

"படிப்பேம்மா... ஆனா கம்ப்யூட்டர் படிப்புக்கு அதிகம் செலவாகுமாம்..."

"எம்புட்டாம்... கூடையிலயா கேக்கப்போறாங்க..."

"இல்ல நம்ம சரவணன் அக்கா படிக்கிறாங்க... அவங்க சொன்னாங்க ஒரு செமஸ்டருக்கு ஆறாயிரத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்குமாம்... "

"வருசத்துக்கா...?"

"வருசத்துக்கு ரெண்டு செமஸ்டராம்... பன்னெண்டாயிரம்... அப்புறம் மத்த செலவு..."

"அம்புட்டுக்காசுக்கு ஆத்தா நா எங்கய்யா போவேன்... குருவி சேக்கிறமாதிரி சீதை கல்யாணத்துக்குத்தான் சேத்துக்கிட்டு வாறேன். அதை எடுத்துக் கொடுத்துப்புட்டா நீ படிச்சு முடிக்கிறவரைக்கும் அவள கரை சேக்காம இருக்க முடியாதேய்யா... அண்ணங்கிட்ட கேளு... நாளக்கி சரவணன் வீட்டுக்கு போகும் போது போன்ல அண்ணன கூப்பிட்டு விவரம் சொல்லு... அவன் என்ன சொல்றான்னு கேக்கலாம்...ம்... சரியா..."

"ம்..."

----

"டேய் உங்கண்ணன்கிட்ட அம்மா பேச சொன்னாங்கன்னாய்... பேசுடா"

"வேணான்டா... அதையும் வீணாவுல செரமப்படுத்திக்கிட்டு... பேசாம பிஸிக்ஸ் சேர்ந்திடலாமுன்னு நினைக்கிறேன்... அது போதுன்டா..."

"சரி... உனக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யிடா..."

“ம்... குடும்ப சூழலையும் பாக்கணுமில்ல... அக்காவுக்கு எப்ப வேணுமின்னாலும் கல்யாணம் வைக்கலாம்...”

"ம்.... சரி... அப்புறம் நாளக்கி காலேசுல அப்ளிகேசன் கொடுக்கிறாங்களாம்... காலயில பத்து மணிக்கெல்லாம் அறிவு வரச் சொல்லியிருக்கான்... அவங்க அப்பா சொன்னாராம்..."

அறிவு அப்பா காலேசு ஆபீஸ்லதான் வேலை செய்யிறார். அதனால அவன் மூலமா நினைக்கிற குரூப் வாங்கிரலாமுன்னு சொல்லியிருந்தான்.

"சரிடா... எங்க வரணும்?"

"கரெக்டா 9.45க்கு காலேசு எண்ட்ரண்ஸ்க்கிட்ட வந்திடு..."

"சரிடா"

"சீக்கிரமா வந்தா செம்மேரிசுக்கு எதிர்த்தாப்புல இருக்க கடைக்கிட்ட நில்லு. நாங்க வந்திடுறோம்..."

"ம்..."

---
மறுநாள் காலை 10 மணி...

முன்னதாகவே செம்மேரிசுக்கு எதிர்த்த டீக்கடையில் நிற்க, நண்பர்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர் எல்லாரும் வந்ததும் சைக்கிள் மீண்டும் கிளம்பி செம்மேரிசை ஒட்டியிருக்கும் ரோட்டில் திரும்ப ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி நுழைவு வாயில் வளைவும் அதன் அருகில் இருந்த கல்லறையும் வரவேற்க சைக்கிளை மிதித்தனர்.

தன் வாழ்வின் புதிய அத்தியாயம் இங்கு ஆரம்பமாகப் போகிறது என்பதை அறியாமல் கல்லூரி நோக்கி நண்பர்களுடன் பயணித்தான் கதையின் நாயகன் ராம்கி என்ற ராமகிருஷ்ணன்.

-தொடரும்...
****************************
-'பரிவை' சே.குமார்.


Last edited by சே.குமார் on Thu 24 Sep 2015 - 16:22; edited 1 time in total
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1401
மதிப்பீடுகள் : 618

Back to top Go down


Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் on Thu 23 Jul 2015 - 11:37

தாங்கள் நினைப்பது போல் எனக்கு எழுத தெரியாது மேடம். ஸாரி ஆள விடுங்க  அய்யோ நான் இல்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Thu 23 Jul 2015 - 11:48

நான் நினைப்பதை  எழுதச்சொல்லி எப்போது எங்கே சொன்னேனாம்?  நீங்க நினைப்பதை மட்டும் எழுதினால் போதுமே!

 இப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆக முடியாதுங்க! ஒழுங்கா  இதுவரை படித்ததுக்குரிய விமர்சனம்  எழுதுங்க! 

 உங்க பெயரில் வரும் கவிதை எல்லாம் நீங்க தானே எழுதுவிங்க.. விமர்சனம் மட்டும் ழுத வராதோ?என்ன கொடுமை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் on Thu 23 Jul 2015 - 11:54

கவிதை கற்பனையில் மனதில் எழுபவை.


 விமர்சனம் என்னும் போது சற்று சிரமம்.எப்படி எழுதுவது என்ன எழுதுவது என்று சிறு தயக்கம் மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Thu 23 Jul 2015 - 11:57

அதெல்லாம் எழுதலாம் சம்ஸ்.  கதையை படிக்கும் போது இப்படி இருந்துதே.. இப்படி  இருப்பது சரியா.. இது நல்லா இருக்குமே என மனசில் தோன்றுவதை அப்படியே எழுதுங்கள். 

சும்மா கவிதை மட்டும் கற்பனையில் எழுதுவது எழுத்து  அல்ல .. சிறப்பாய் விமர்சனம் எழுதுவதும்  சிறப்புத்தான்...


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் on Thu 23 Jul 2015 - 11:59

தாங்கள் சொல்வது உண்மை தான் விமர்சனம் எழுதி பழக்கம் இல்லை நல்லதாக விமர்சனம் எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by பானுஷபானா on Thu 23 Jul 2015 - 12:41

இரண்டாம் பாகம் அருமை செந்தில்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Thu 23 Jul 2015 - 16:49

பானுஷபானா wrote:இரண்டாம் பாகம் அருமை செந்தில்
அக்கா...
இங்க யாரு செந்தில்?
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1401
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Thu 23 Jul 2015 - 16:51

நிஷா அக்கா மற்றும் சகோதரர் சம்ஸ் (இங்க அண்ணா போடலை) இருவருக்கும் காரசாரமான விவாதம்... எப்படியோ விமர்சனங்கள் வந்தால் சரி...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1401
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் on Thu 23 Jul 2015 - 17:14

சே.குமார் wrote:நிஷா அக்கா மற்றும் சகோதரர் சம்ஸ் (இங்க அண்ணா போடலை) இருவருக்கும் காரசாரமான விவாதம்... எப்படியோ விமர்சனங்கள் வந்தால் சரி...

 கண்டிப்பாக சிறந்த விமர்சனம் கிடைக்கும் சார் சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Thu 23 Jul 2015 - 17:37

*சம்ஸ் wrote:
சே.குமார் wrote:நிஷா அக்கா மற்றும் சகோதரர் சம்ஸ் (இங்க அண்ணா போடலை) இருவருக்கும் காரசாரமான விவாதம்... எப்படியோ விமர்சனங்கள் வந்தால் சரி...

 கண்டிப்பாக சிறந்த விமர்சனம் கிடைக்கும் சார் சியர்ஸ்

உங்களது விமர்சனங்களே இன்னும் மெருகேற்றிக் கொள்ள வைக்கும்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1401
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Fri 24 Jul 2015 - 6:49

தொடர்கதை : கலையாத கனவுகள்


முன்கதைச் சுருக்கம்...

ஏழைக் குடும்பத்தில் பிறந்து  தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழும் ராமகிருஷ்ணன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்கிறான். கல்லூரி வாழ்க்கை நட்புக்களின் அரட்டையுடன் நன்றாக நகர்கிறது. இந்நிலையில்தான் கதையின் நாயகி புவனா அறிமுகமாகிறாள்.


இனி...

7. அதிர்ச்சி 

"எங்கடா போயிட்டு வாறே..? சரி காலம்பிட்டு வா... சாப்பிட..." என்றாள் நாகம்மா.

"எனக்கு வேண்டாம்மா... நான் சாப்பிட்டேன்..."

"வடிச்சி வச்சா எங்க போயி தின்னுட்டு வாறே..." 

"பழனி வீட்டுல எல்லாரும் சேர்ந்து படிச்சோம்... அங்கயே சாப்பிட்டுட்டேன்..."

"என்னது பழனி வீட்லயா... அவங்க என்ன ஆளுக தெரியுமா... அங்க போயி தின்னுட்டு வாறே..."

"அம்மா படிக்கும் போது சாதி பார்த்தா படிக்க முடியும்... இன்னும் பழம்பஞ்சாங்கமாவே இருக்காதேம்மா"

"ஆமா... நா பழம்பஞ்சாங்கந்தான்.... இப்பதான் ஒருத்த கத்திட்டுப் படுத்திருக்காக... இப்ப நீங்க... ராத்திரிக்கு கஞ்சிதான்... என்னால நேராநேரத்துக்கெல்லாம் வடிச்சுக் கொட்டமுடியாது. சாயந்தரம் எங்கிட்டும் சுத்தப் பொயிட்டு தின்னுட்டு வந்துறாதே... ஆமா சொல்லிப்புட்டேன்..."

"அம்மா நான் கஞ்சி குடிச்சிக்கிறேன்... ஆமா அக்காவுக்கும் உனக்கும் என்ன சண்டை?"

"நா எதுக்குய்யா சண்டை போடப்போறேன்... உள்ள இருக்காக அந்தப்புரத்து ராணி அவுகளையே கேளு..."

"சரி நான் அவகிட்டையே கேட்டுகிறேன்" என்றபடி திண்ணையில் சுருண்டு படுத்திருந்த சீதாவிடம் அமர்ந்து "ஏய்... என்னாச்சு..." என்று முகத்தை மூடியிருந்த தாவணியை இழுக்க தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

"என்னடி ஆச்சு... அம்மா இன்னைக்கு ரொம்ப கோவமா இருக்கு..."

கண்ணைத் தொடைத்தபடி "ஒண்ணுமில்லேடா..." என்றாள் சீதா.

"ஒண்ணுமில்லாமயா அழுவுறே... சொல்லுடி... அம்மா அடிச்சுச்சா..."

"இல்லடா..."

"அப்புறம்..?"

"எனக்கு கலியாணம் பேசுது..."

"இது நல்ல விசயம்தானே... இதுக்கு எதுக்கு அழுவுறே..."

"அது இல்லடா... வந்து... வந்து... நம்ம கனகு மாமா மகன் முத்துராசுக்கு கட்டிக் கொடுக்க போவுதாம்..."

"என்னது... அம்மாவுக்கு என்ன கிறுக்குப் பிடிச்சிருச்சா... அவனுக்குப் போயி...." ராம்கி முடிக்கவில்லை அதற்குள் அவன் பொடறியில் ஒரு அடி விழுந்தது.

"என்னடா காலேசு படிக்கிறேன்னு கொழுப்பு கூடிருச்சோ... அவனுக்கென்னடா... எங்க அண்ணன் மவன்... நாலப்பின்ன இவளுக்கு பாதுகாப்பா எங்க அண்ணனும் அண்ணம்பொண்டியும் இருப்பாக... அவனைக் கட்டிக்க மாட்டாங்களாம்..."

"அம்மா... என்ன பேசுறீங்க... கனகு மாமா நல்லவரு நான் இல்லைங்கலை...ஆனா முத்து மச்சான் தெருப்பொறக்கி... குடிகாரன்... ரவுடி... அதுபோக..." பேச்சை நிறுத்தி அம்மாவைப் பார்த்தான்.

"என்னடா நிறுத்திட்டே... சொல்ல வந்ததை சொல்லு... இந்த ராணிக்கு அவனைவிட நல்லமாப்பிள்ளை வேற யாரு நம்ம போடுறதை ஏத்துக்கிட்டு கட்டிக்கிட்டுப் போவா..."

"அதுக்காக... நீ இப்பச் சொன்னியே அவன் வீட்ல சாப்பிட்டா சாமி குத்தம்ங்கிற மாதிரி குதிச்சியே... அந்த சாதிக்காரன் நம்ம ஊர்லயும் இருக்கான்... அதுல ஒருத்தி ரெண்டு புள்ளைக்கு ஆத்தா... அவகூட...." பேசாமல் சீதாவைப் பார்த்தான்.

"பெரிய மனுசனாயிட்டிக... பெரிய விசயத்தை எல்லாம் விவரமா பேசுறீங்க... இதத்தான் காலேசுல சொல்லிக் கொடுத்தாங்களா... இன்னைக்கு இப்படி இருக்கவன் இவ போற நேரம் மாறிடலாமுல்ல..."

"அம்மா... அவரு மாறுவாருன்னு நாம ஏன் கட்டணும்.... அக்காவுக்கு நல்ல மாப்பிள்ளையா பாப்போம்... அண்ணனுக்கிட்டயும் பேசலாம்..."

"எங்க அண்ணனுக்கு நா வாக்குக் கொடுத்துட்டேன்... முத்துக்குத்தான் இவ... எம்முடிவுல மாற்றமில்லை... நீ பெரிய மனுசனாட்டம் பேசாம வேலயப்பாரு... மூத்தவன் பொங்கலுக்கு வரும்போது பேசி முடிவு பண்ணிக்கிட்டு சித்திர வைகாசியில வச்சிடலாம்ன்னு அண்ணன் சொல்லியிருக்கு... சரியா..."

"என்னம்மா... அவ வாழ்க்கையவும் பார்க்க வேண்டாமா..."

"எங்களுக்குத் தெரியும்... ஒங்க வேலயப் பாருங்க..." படக்கென்று சொல்லிவிட்டு நாகம்மா நகர, ஓவென்று அழுத சீதாவை அணைத்துக் கொண்டு "என்னடி நடந்துருச்சு... அண்ணங்கிட்ட பேசுவோம்... பேசாம இரு... அம்மா போக்குல போயி நாம சாதிச்சிக்கிவோம்... இப்ப எதாவது பேசி நாமளா கெடுத்துக்கக்கூடாது. அண்ணன் பொங்கலுக்கு வரட்டும்... அதுவரைக்கும் நீ எதுவும் செய்யாம இரு.. சரியா..."

"ம்..."

"எந்திரிச்சி வேலயப்பாரு..." என்றபடி அங்கிருந்து ராம்கியும் நகர, கண்ணீரைத் துடைத்துவிட்டு வெளியில் வந்தாள் சீதா.

"ஆத்தாடி தம்பிக்காரன் என்ன சொன்னான்னு தெரியலயே... எந்திரிச்சிட்டாக..." என்று முகவாயை தோளில் இடித்துக் கொண்டு வாசலில் சுப்பியை வெட்டிக்கொண்டிருந்தாள் நாகம்மா.

****

"டேய் மச்சான்.. உன்னைத் தேடி வந்த தேவதை மாத்ஸ் பர்ஸ்ட் இயர்..." என்றான் பழனி.

"அதான் தெரியுமே..." முணங்கினான் ராம்கி.

"என்னது தெரியுமா...டேய் இவன் நம்மகிட்ட பொய் சொல்லியிருக்கான்... அவ எல்லாம் சொல்லியிருக்கா... மாப்ளே... கமுக்கமா மறச்சிட்டியேடா..." முதுகில் குத்தினான் அண்ணாதுரை.

"நாந்தான் அவ பர்ஸ்ட் மாத்ஸ்ன்னு சொன்னான்னு சொன்னேனே... நீங்க கவனிக்கலையா... உங்க கவனமெல்லாம் அவ மேலயில்ல இருந்துச்சு..." பொய்யை பொசுக்கிப் போட்டான் ராம்கி.

"சொன்னியா... ஏண்டா புழுகிறே... உன்னோட ரூட்ல நாங்க வரமாட்டோம்டா... ஆமா அவ யாருன்னு சொன்னாளா?" கேட்டான் பழனி.

"ப்ச்.." உதடு பிதுக்கினான் ராம்கி.

"அவ பேரு புவனா... அவ நம்ம காலேசே பார்த்துப் பயப்படுற... நம்மளை எல்லாம் கொண்டு போய் ராக்கிங் செய்து மிரட்டிய.... இப்போ நம்மளிடம் சினேகமாய் சிரிக்கும் கல்லூரியின் ரவுடி நாயகன்... த ஒன் அண்ட் ஒன்லி திருவாளர் வைரவனின் ஒரே தங்கை..." பழனி சொல்லிக் கொண்டே போக

ராம்கி இமைக்க மறந்து திகிலுடன் அமர்ந்திருந்தான். அவன் மனசுக்குள் புவனா கூறிய 'ஆழந்தெரியாம காலை விடாதீங்க... அப்புறம் நொண்டிக்கிட்டுத்தான் திரியணும்...' என்ற வரிகள் வந்து செல்ல...

"நிஜமாடா..." என்றான் உலர்ந்த உதடுகளை நாவால் ஒற்றியபடி.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1401
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by பானுஷபானா on Fri 24 Jul 2015 - 10:21

சே.குமார் wrote:
பானுஷபானா wrote:இரண்டாம் பாகம் அருமை செந்தில்
அக்கா...
இங்க யாரு செந்தில்?

மன்னிக்கவும் எங்க ஆபிஸ்ல செந்தில்னு ஒரு பையன் இருக்கான் அவனை கூப்பிட்டு பேசிட்டு உங்களுக்கு பின்னூட்டம் போட்டேன் அப்போ தவறுதலா அவன் பெயரை போட்டுட்டேன் குமார்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Fri 24 Jul 2015 - 14:21

அதிர்ச்சியாகத்தான் இருக்கின்றது!

ராம்கியின் அக்கா சீதாவின் கலயாணம்... அறிந்தே தள்ளும் படுகுழியாய் அல்லவோ இருக்கின்றது. கலயாணத்துக்கு பின் திருந்துவான் எனும்  ராகம் பாடி நிஜத்திலும் எத்தனையோ பெண்கள் வாழ்க்கை பாழாகத்தானே செய்யிது. 

அப்பாடா..  புவனா யார் என்பது ஒருமாதிரி ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிட்டாங்க.. கதை  இனி ஜெட் வேகமெடுக்கும் தானே குமார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Fri 24 Jul 2015 - 20:53

பானுஷபானா wrote:
சே.குமார் wrote:
பானுஷபானா wrote:இரண்டாம் பாகம் அருமை செந்தில்
அக்கா...
இங்க யாரு செந்தில்?

மன்னிக்கவும் எங்க ஆபிஸ்ல செந்தில்னு ஒரு பையன் இருக்கான் அவனை கூப்பிட்டு பேசிட்டு உங்களுக்கு பின்னூட்டம் போட்டேன் அப்போ தவறுதலா அவன் பெயரை போட்டுட்டேன் குமார்
பரவாயில்லை அக்கா...
சே.குமாரை ரொம்ப பேர் சேகர்ன்னு சொல்லுறாங்க.. நீங்க முருகனின் நாமமான செந்தில்ன்னுதானே சொல்லியிருக்கீங்க...
கதை குறித்து சொல்லுங்க...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1401
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Fri 24 Jul 2015 - 21:03

Nisha wrote:அதிர்ச்சியாகத்தான் இருக்கின்றது!

ராம்கியின் அக்கா சீதாவின் கலயாணம்... அறிந்தே தள்ளும் படுகுழியாய் அல்லவோ இருக்கின்றது. கலயாணத்துக்கு பின் திருந்துவான் எனும்  ராகம் பாடி நிஜத்திலும் எத்தனையோ பெண்கள் வாழ்க்கை பாழாகத்தானே செய்யிது. 

அப்பாடா..  புவனா யார் என்பது ஒருமாதிரி ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிட்டாங்க.. கதை  இனி ஜெட் வேகமெடுக்கும் தானே குமார்!
அக்கா வணக்கம்.
காலேசுல ஒரு பொண்ணு அழகா இருந்தா அதோட வீடு வரைக்கும் போய் விசாரிச்சிட்டு வந்துற மாட்டாங்களா என்ன...
சீதாவுக்கு வாழ்க்கை எப்படி அமையணுமின்னு இருக்கோ அப்படியே அமையும்...
இது மென்மையான காதலும் மோதலும் நிறைந்த கதை என்பதால் டிராக்டர் வேகத்தில்தான் போகும்ன்னு நினைக்கிறேன்... ஜெட் விடுறமாதிரியா ஏழு பகுதி போயிருக்கு அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1401
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Fri 24 Jul 2015 - 21:07

தொடர்கதை : கலையாத கனவுகள்8. மொட்டுக்கள் மலருமா?


முன்கதைச் சுருக்கம்.
தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் கிராமத்து ஏழை மாணவன் ராம்கி கல்லூரியில் சேர்கிறான். அங்கு மாணவி புவனாவின் அறிமுகம் கிடைக்கிறது. நண்பர்கள் காதல் என்று ஏற்றிவிடுகிறார்கள். அவள் கல்லூரி ரவுடி வைரவன் தங்கை என்று தெரிய வருகிறது. இதற்கிடையே ராம்கியின் அக்காவுக்கு பிடிக்காத மாமா மகன் ரவுடி முத்துராசுக்கு அவளைக் கட்டி வைக்க அம்மா முடிவு செய்கிறாள்.
இனி...

"மாப்ளே... வைரவந்தான் உனக்கு நல்ல பிரண்ட்டாயிட்டாருல்ல... அப்புறம் என்ன... இப்ப அண்ணே அண்ணன்னு சொல்லுறே... தைரியமா மச்சான்னு தோள்ல கையைப் போடு... நடக்கிறதை பாத்துருவோம்..." என்றான் பழனி.

"என்னடா சொல்றே... போட்டிக்கு கூப்பிட வந்தா அம்புட்டுத்தான் அவளை நான் அதுக்கு அப்புறம் பார்க்கவேயில்லை...பேசவும் இல்லை... அதுக்குள்ளயும் வைரவன் அண்ணனை மச்சானாக்கிட்டிங்க... சும்மா போங்கடா..."

"மொதல்ல இப்படித்தான் இருக்கும் அப்புறம் உன்னைத் தேடி அடிக்கடி வர ஆரம்பிப்பா... நீயும் புத்தகத்தை மாடு மேயிறதுகூடத் தெரியாம கனவுல சிரிச்சிக்கிட்டு இருப்பே..."

"இப்ப எதுக்குடா தேவையில்லாம மாட்டை எல்லாம் இழுக்கிறே... இங்க எதுக்கு மாடு வருது..."

"ம்... எட்டாப்பு படிக்கயிலே... செல்வி... ம்.... ஏய்... ஏய்.... எல்லாம் தெரியும்டி..." பழனி சிரித்தான்.

"என்ன செல்வியா... அவ யாருடா..."

"அதான் எண்ணெய் வடிய வடிய தலைய வழிச்சிச் சீவிக்கிட்டு பெரிய சைக்கிள்ல இடுப்ப ஆட்டி ஆட்டி ஓட்டிக்கிட்டு வருவாளாமே..."

"இதெல்லாம் உனக்கு..."

"எல்லாம் சரவணன் உபயந்தான்.... ஆமா அவள லவ் பண்ணுறேன்னு பிதற்றி லவ்லெட்டர் எழுத நோட்டை எடுத்து வச்சிட்டு கனவுக்குப் பொயிட்டியாம் ஒரு குயர் நோட்டையும் உங்க வீட்டு கருத்த எரும பக்குவமா தின்னுருச்சாமே..."

"சும்மா போடா... வேற பேச்சு பேசு..."

"இல்ல மாப்ளே அனுபவம் இருக்கதாலே இனி அப்படி நடக்காம இருக்க மாட்டியா என்ன..."

"என்னடா இன்னைக்கு உங்களுக்கு ஓட்ட ராம்கிதான் கிடைச்சானா?"என்றபடி வந்தான் சரவணன்.

"வாடா.... என்னடா இப்பல்லாம் அதிகமா வரமாட்டேங்கிறே... நேத்துக்கூட பழனி வீட்ல எல்லாரும் இருந்தோம்... நீ வரலை..."

"இல்லடா இன்னைக்கு காலையில ஒரு டெஸ்ட் அதான்டா சாமிநாதன் கூட சேர்ந்து படிச்சேன்..."

"ம் இப்பல்லாம் கிளாஸ் பிரண்ட்ஸ்கூட சேர்ந்துக்கிட்டு எங்களை ஒதுக்கிறே..." என்றான் ராம்கி.

"அப்படியெல்லாம் இல்ல... எப்பவும் அவங்ககூட இருக்கோம்... உங்ககூட சேர்ந்து படிக்க வேற வேற சப்ஸெக்ட்... ஆமா அறிவுந்தான் வரலை... அவனை மட்டும் ஒண்ணும் சொல்லாதீங்க... ஆமா நான் வரும் போது அனுபவம் அது இதுன்னு பழனி சொன்னானே என்ன அது..."

"ஒண்ணுமில்லடா... அவனுக்கென்ன..." வேகமாக பதிலளித்தான் ராம்கி.

"நீ இருடா... என்னடா பழனி..."

"ஒண்ணுமில்ல பய பெரிய இடத்துல காதல்ல விழுந்துட்டான்... அதான் கருத்த எரும, ஒரு குயர் நோட்டு அனுபவம் இருக்கதால இனி அதுபோல நடக்காம இருடான்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்."

"ராம்கிக்கு காதலா... யாருடா அவ..."

"புவனா..."

"புவனா எந்த கிளாஸ்..."

"பர்ஸ்ட் மாத்ஸ்..."

"மாத்ஸ்ஸா.... எங்ககூட தமிழுக்கும் இங்கிலீஸ்க்கும் கம்பைன் கிளாஸ் வருவாங்களே... புவனா... அட அந்த செவத்தக்குட்டி..."

"என்னடா... குட்டி...கிட்டின்னு நண்பனோட ஆளுடா..." அண்ணாதுரை கிளறிவிட்டான்.

"அவளை அப்படித்தான் சொல்லுவோம்... எதுக்கும் பயப்படமாட்டா... அது அவ சாதியில ஊறின திமிரு... ஆனா அவங்க கிளாஸ்ல அவதான் படிப்புல நம்பர் ஒண்ணாம்... ஆமா அவ அண்ணன் யாரு தெரியுமா...?"

"தெரியும்டா... அடக்கி வாசி பின்னால தேர்ட் இயர் பிகாம் கணேசன் பேசிக்கிட்டு இருக்கான் போயி அண்ணன்காரன்கிட்ட போட்டுவிட்டுடுவான்.... அப்புறம் எல்லாருடைய செட்டையையும் ஒடிச்சிருவாய்ங்க..." பழனி குசுகுசுத்தான்.

ணேசன் அங்கிருந்து நகரவும் புவனா லைப்ரரி நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

"சொன்னேன்ல மயிலு தேடி வந்திருச்சு.... மச்சான் எல்லாத்துக்கும் தயாரா இரு..."

“நாம இங்க நிக்கிறது அவளுக்கு எப்படிடா தெரியும்.... லைப்ரரி போனாலும் போவா... சும்மா இருங்கடா...”

“போகட்டுமே... உன்னைய பார்த்த சிரிச்சிட்டாவது போவா.... இல்லாட்டி பேசிட்டுப் போவா பாரு...”

"டேய் அவகிட்ட அதிகம் வச்சுக்காதே... அவ அண்ணன் மோசமானவன்..." சரவணன் பயத்தோடு சொன்னான்.

"இல்லடா... போட்டியில கலந்துக்கிறதுக்காக ஐயா கூப்பிட்டு வரச்சொல்லி வந்து கூப்பிட்டா அம்புட்டுத்தான் மத்தபடி அவளுக்கும் எனக்கும் என்ன இருக்கு..." ராம்கி பேசினாலும் மனசு மட்டும் அவ என்னைய பார்த்து சிரிப்பாளா என்று யாருக்கும் தெரியாமல் தவமிருந்தது.

அவர்களைக் கடந்தவள் எதேச்சையாக திரும்புவது போல் திரும்பி “ அட...நீங்க இங்கதான் எப்பவும் அரட்டை அடிப்பிங்களா... லைப்ரரியில படிக்கிற பழக்கமெல்லாம் இல்லையா ரா....ம்.... ராம்கி..." சிரித்தபடி கேட்டுக்கொண்டு அவனருகில் வர மற்றவர்கள் மெதுவாக நகர்ந்தனர்.

"ம்... இல்ல சாப்பாட்டுத் டயத்துலதான் பிரண்டெல்லாம் ஒண்ணாக் கூடுவோம்... அதான் கொஞ்ச நேரம் அரட்டை..."

"காரைக்குடி வாறீங்கன்னு ஐயா சொன்னார்...?"

"ம்..."

"நல்லா பிரிப்பேர் பண்ணிக்கங்க... நம்ம காலேசுக்கு கண்டிப்பா பரிசு கிடைக்கணும்.... கட்டுரைப் போட்டியில கலக்கலாப் பண்ணனும்..."

"ம்... பண்ணிடலாம்...” மெதுவாக கண்களைச் சுழலவிட்டான் எங்காவது வைரவன் நிற்கிறானா என்று பார்த்துக் கொண்டான்... எஙகும் இல்லை என்றதும் சற்று சமாதானமானவன் “சரிங்க... நான் வாறேன்..."

"என்ன அவசரம்... என்னோட கவிதை இந்த வார ஆனந்த விகடன்ல வந்திருக்கு..."

"அப்படியா... கவிதையெல்லாம் எழுதுவீங்களா... வாழ்த்துக்கள்ங்க..." மெதுவாக கிளம்ப ஆயத்தமானான் வயிற்றுக்குள் வைரவன் பார்த்துவிட்டால் செத்தோம் என்ற பயம் புளியைக் கரைத்தது.

"ம்... எதுக்கு பயப்படுறீங்க... நான் என்ன முனுங்கவா போறேன்... சரியான பயந்தாங்கொள்ளியா இருப்பீங்க போல... எங்கண்ணன் வந்துருவான்னு பயமா... கண்ணு நாலாபக்கமும் சுத்துதே... சரி நான் வாறேன்... அப்புறம் பாப்போம்..." என்றபடி லைப்ரரிக்குள் நுழைந்தாள்.

மீண்டும் நண்பர்களுடன் கலந்தான்... "என்னடா சொன்னா..." என்ன சொன்னாள் என்று அறிய ஆவலாய் அனைவரும் ஒன்றாகக் கேட்டார்கள்.

"காரைக்குடி போட்டிக்கு நல்லா ரெடி பண்ணச் சொன்னாள். புக்ஸ் வேணுமின்னா அவகிட்ட கேட்டு வாங்கிக்கச் சொன்னா...அம்புட்டுத்தான்" கொஞ்சம் சேர்த்து கதைவிட்டவன் "சாயந்தரம் போகும் போது ஆனந்தவிகடன் வாங்கணும்டா..." என்றான்.

"என்னடா புதுசா... சம்பந்தமில்லாம ஆனந்த விகடன் வாங்கணுங்கிறே..."

"அதுல ஒரு முக்கியமான மேட்டர் இருக்கு அப்புறம் சொல்றேன்...." என்றவன் "சரி வகுப்புக்குப் போகலாம்" என்றபடி கிளம்ப அவனையறியாமல் லைப்ரரி சன்னல் வழியே கண்கள் அவளைத் தேட,ஒருவன் அவளுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். ராம்கிக்கு வயிற்றுக்குள் புகைய ஆரம்பித்தது. 

(தொடரும்)

-'பரிவை' சே.குமார்
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1401
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Fri 24 Jul 2015 - 22:11

சே.குமார் wrote:
Nisha wrote:அதிர்ச்சியாகத்தான் இருக்கின்றது!

ராம்கியின் அக்கா சீதாவின் கலயாணம்... அறிந்தே தள்ளும் படுகுழியாய் அல்லவோ இருக்கின்றது. கலயாணத்துக்கு பின் திருந்துவான் எனும்  ராகம் பாடி நிஜத்திலும் எத்தனையோ பெண்கள் வாழ்க்கை பாழாகத்தானே செய்யிது. 

அப்பாடா..  புவனா யார் என்பது ஒருமாதிரி ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிட்டாங்க.. கதை  இனி ஜெட் வேகமெடுக்கும் தானே குமார்!
அக்கா வணக்கம்.
காலேசுல ஒரு பொண்ணு அழகா இருந்தா அதோட வீடு வரைக்கும் போய் விசாரிச்சிட்டு வந்துற மாட்டாங்களா என்ன...
சீதாவுக்கு வாழ்க்கை எப்படி அமையணுமின்னு இருக்கோ அப்படியே அமையும்...
இது மென்மையான காதலும் மோதலும் நிறைந்த கதை என்பதால் டிராக்டர் வேகத்தில்தான் போகும்ன்னு நினைக்கிறேன்... ஜெட் விடுறமாதிரியா ஏழு பகுதி போயிருக்கு அக்கா...

அதென்னமோ சரிதான்பா!

பெண்ணுங்க பின்னாடி  போகவும் யார் எவரென ஆராயவும் அழகாக இருக்க வேண்டும் என்பது இல்லையேப்பா. பெண்ணாக இருந்தாலே போதுமே.. 

 உங்கள் பின்னூட்டம் கண்டதும் எனக்கு என் சின்ன வயது  சம்பவம் தான் நினைவுக்கு  வந்தது.  நானும் என் பக்கத்து வீட்டு தோழியும்  அவ என்னை விட  நான்கைந்து வயது பெரியவள்.  ஒவ்வொரு வியாளனும்  அன்னை வேளாங்கன்னி கோயில்லுக்கு  போவதுண்டு. கோயிலுக்கு  போகின்றோம் என சொல்லிட்டு கடலலையில் விளையாட செய்வது தான் நிஜம்.  அப்படி ஓரு நாள் இவ அவளோட புது பாய் பிரண்டை அங்கே வரச்சொல்ல... அந்த ப்ரெண்டு அவர் ப்ரெண்டோட வர... அவங்க  இருவரும் பேசிட்டிருக்கின்ற நேரம் அவர் கூட வந்த ப்ரெண்டு என்னை  பேரு  விசாரிக்க..  கொஞ்சம் விலகி நின்றி  பேசியதால் அதை யாரோ புண்ணியவான்கள் பார்த்திட்டு  அன்றே எங்கம்மாவிடம் போட்டுகொடுக்க... அம்மா  எனை அடிக்க.......  இதில் கூத்து என்ன தெரியுமா... அந்தப்ரெண்டோட அப்பா எங்க வீட்டு முற்றத்தில் இருந்து கொண்டு அம்மா அடிக்க... அம்மம்மா திட்ட... அவரும் சேர்ந்து பெண்னுன்னா எப்படி இருக்கணும் அது இதுனு அட்வைஸ் செய்ய....... ஹாஹா...! 

குமார் சொன்னால் யாரும் நம்ப மாட்டினம்.. அப்பல்லாம் இந்த காதல் ஊதல்லாம் நமக்கு  தோணவே இல்லை.  பள்ளிக்கொப்பியில்  என்னை விட பெரிய வகுப்பு படிக்கும் பையன்   ஐ லவ் யூ என எழுதிட்டான்னு நான்கு நாள் அழுதே கரைந்திருக்கேன். அத்தனை பயம். 

ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கட்டம் தாண்டித்தான் வருகின்றோம் ஒரு வேளை அந்த வயதுக்கே உரிய சலனங்களுக்கு ஆட்பட்டு நான் விழுந்திருந்தால் இன்றைய  உயரத்துக்கு  வந்திருப்பேனா என தெரியவில்லை. எதையும் காத்திருந்து ஏற்ற காலம் பெறும் போது வாழ்க்கை  நமக்கு தருவது ஜெயத்தினை தான் அல்லவா?

ஜெட் வேகத்தில் இல்லாட்டால் என்ன ட்ராக்டர் வேகத்தில்  கொண்டு போவதாய் சொன்னதே போதும்ம்பா.. ஆமை வேகம் வேண்டாம்-  கொஞ்சம் மெதுவாக அடுத்த அத்தியாயம் போடுங்க.. 

 நண்பன், சம்ஸ், பானு போன்றோரின்பின்னூட்டம் வரட்டும்.. 

கமாலூதீன் என ஒருத்தர் வந்திட்டிருந்தார். அவரை காணோம். அவர் வந்தால் பக்கம் பக்கமா ரசித்து பின்னூட்டமிடுவார்.  நண்பன் தும்பி எப்படியும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய பின்னூட்டம் தருவார்னு நம்புறேன்.  லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் வருவார். குதூகலம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Sat 25 Jul 2015 - 7:17

அக்கா தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி.


//பெண்ணுங்க பின்னாடி  போகவும் யார் எவரென ஆராயவும் அழகாக இருக்க வேண்டும் என்பது இல்லையேப்பா. பெண்ணாக இருந்தாலே போதுமே.. //


அழகாக இருக்க வேண்டும் என்பதில்லை இருப்பினும் மனசுக்குப் பிடித்த பெண்ணாக இருக்க வேண்டும் அல்லவா?


//ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கட்டம் தாண்டித்தான் வருகின்றோம் ஒரு வேளை அந்த வயதுக்கே உரிய சலனங்களுக்கு ஆட்பட்டு நான் விழுந்திருந்தால் இன்றைய  உயரத்துக்கு  வந்திருப்பேனா என தெரியவில்லை. எதையும் காத்திருந்து ஏற்ற காலம் பெறும் போது வாழ்க்கை  நமக்கு தருவது ஜெயத்தினை தான் அல்லவா?//


இதுதான் அக்கா உண்மை... அப்படிக் கடந்தோர்தான் இன்று ஜெயிக்கிறார்கள்.


//ஜெட் வேகத்தில் இல்லாட்டால் என்ன ட்ராக்டர் வேகத்தில்  கொண்டு போவதாய் சொன்னதே போதும்ம்பா.. ஆமை வேகம் வேண்டாம்//


அதுசரி அக்கா... கதையில் காதல், மோதல், வில்லன்கள் என எல்லாம் அடுத்தடுத்து வருவதால்... சாதியும் இடறும்... மென்மையும் கொஞ்சம் வேகமும் கலந்து இருக்கும். கண்டிப்பாக ஆமை வேகத்தில் செல்லாது.


//கொஞ்சம் மெதுவாக அடுத்த அத்தியாயம் போடுங்க..//


சரி அக்கா... சில நாட்கள் கழித்துப் போடுகிறேன்.


//நண்பன், சம்ஸ், பானு போன்றோரின்பின்னூட்டம் வரட்டும்.. கமாலூதீன் என ஒருத்தர் வந்திட்டிருந்தார். அவரை காணோம். அவர் வந்தால் பக்கம் பக்கமா ரசித்து பின்னூட்டமிடுவார்.  நண்பன் தும்பி எப்படியும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய பின்னூட்டம் தருவார்னு நம்புறேன். //


கண்டிப்பாக அனைவரின் கருத்தையும் அறிய ஆவலாய் இருக்கிறேன் அக்கா... முதல் கதை என்பதால் மனசு தளத்திலும் அதிகமாக கருத்துக்கள் வரவில்லை. சில நண்பர்கள் மின்னஞ்சலில் நல்லாயிருக்கு... இப்படி எழுதியிருக்கலாம் என்றெல்லாம் சொன்னார்கள். அதான் தங்கள் கருத்துக்களை அறிய ஆவலாய் இருக்கிறேன்.


இப்ப உங்களுடன் சேர்ந்து நானும் படிக்கிறேன்... அடுத்த பகிர்வை படிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது... இது எனக்கு மட்டும்தானான்னு தெரியலை.. ஏன்னா காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா?


வேரும் விழுதுகளையும் முடித்து விடலாம் என்றிருக்கிறேன். மிஞ்சிப் போனால் 2 அல்லது 3 பகுதிகளில்....


என்னோட மருமக்களைக் ரொம்பக் கேட்டதாகச் சொல்லுங்கள்.


முடிந்தால் முகநூல் அரட்டையில் வருகிறேன்.


நன்றி அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1401
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Sat 25 Jul 2015 - 9:35

அக்கா

நீங்க சொன்ன சம்பவத்தை கருவாகக் கொண்டு மனசில் ஒரு சிறுகதை கூட வரலாம்...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1401
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by பானுஷபானா on Sat 25 Jul 2015 - 12:45

ராக்கிங் உங்க சொந்த அனுபவமா குமார்.... கதை சுவராசியமாக செல்கிறது கையில் புத்தக வடிவில் இருந்தால் எப்போதோ படித்து முடித்திருப்பேன்...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Sat 25 Jul 2015 - 13:01

பானுஷபானா wrote:ராக்கிங் உங்க சொந்த அனுபவமா குமார்.... கதை சுவராசியமாக செல்கிறது கையில் புத்தக வடிவில் இருந்தால் எப்போதோ படித்து முடித்திருப்பேன்...

கொஞ்சம் கொஞ்சம் அக்கா...

புத்தக வடிவில் கொண்டு வரத்தான் ஆசை... பார்க்கலாம் அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1401
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Sat 25 Jul 2015 - 13:30

சே.குமார் wrote:அக்கா

நீங்க சொன்ன சம்பவத்தை கருவாகக் கொண்டு மனசில் ஒரு சிறுகதை கூட வரலாம்...

ஆஹா! அது சரி!

சம்பவம் நிஜம் தான்பா..   தங்க பெண்கள் ரெம்ப நல்லவங்கன்னு அடுத்த வீட்டு பெண் களை  திருத்த போவது நடப்பது தானே.. 

 நானே பல தடவை நினைப்பதுண்டு குமார். என் வாழ்க்கையில் நடந்தவைகளை அப்படியே எழுதினாலே தொட்கதையாகுமே என.. சுரேஷ் அண்ணா சொல்வார். நீ கதை எழுதேன் தங்கை என.. பட் எனக்கு  நிஜமாகவே எழுதணும் எனும் ஆர்வம் வரவே இல்லை.  இனி வருமோ என்னமோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் on Sat 25 Jul 2015 - 15:11

Nisha wrote:
சே.குமார் wrote:அக்கா

நீங்க சொன்ன சம்பவத்தை கருவாகக் கொண்டு மனசில் ஒரு சிறுகதை கூட வரலாம்...

ஆஹா! அது சரி!

சம்பவம் நிஜம் தான்பா..   தங்க பெண்கள் ரெம்ப நல்லவங்கன்னு அடுத்த வீட்டு பெண் களை  திருத்த போவது நடப்பது தானே.. 

 நானே பல தடவை நினைப்பதுண்டு குமார். என் வாழ்க்கையில் நடந்தவைகளை அப்படியே எழுதினாலே தொட்கதையாகுமே என.. சுரேஷ் அண்ணா சொல்வார். நீ கதை எழுதேன் தங்கை என.. பட் எனக்கு  நிஜமாகவே எழுதணும் எனும் ஆர்வம் வரவே இல்லை.  இனி வருமோ என்னமோ?

   உங்களுக்குள் இருக்கும் எழுத்து திறனை வெளிக் கொண்டு வாருங்கள் அதில் உங்கள் கதையை தொடராக எழுதி வாருங்கள் மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் on Sat 25 Jul 2015 - 18:18

ஏழைக் குடும்பதில் பிறந்த ஒருவரின் நிலை அதுவும் அப்பா இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தால் எப்படி இருக்கும் தாயின் எதிர் பார்ப்பு என்ன அந்த மகணின் எதிர் பார்ப்பு என்னவென்று உணர முடிகிறது.கதை அருமையாக நகர்கிறது கதையின் அடுத்த பாகதை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.2ம் அத்தியாயத்தின் பின்னூட்டத்தை பிறகு தருகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Sat 25 Jul 2015 - 18:38

அடேங்கப்பா!

அருமையான விமர்சனம், மொத்தக்கதையையும்   ஒரே விமர்சனத்தில் சொல்லி விட்டீர்கள் போல இருக்குதே! 

 ம்ம் நடத்துங்க.. நன்றி, நன்று!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum