சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Today at 18:48

» மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்
by சே.குமார் Yesterday at 17:17

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by பானுஷபானா Yesterday at 12:35

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

.

அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

Sticky அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by நண்பன் on Mon 27 Jul 2015 - 20:13

First topic message reminder :அப்துல்கலாமின் பெருமைகள்:
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி
விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த
ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான
வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும்
எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை.
‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர்
“கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க
பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின்
மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய
பொன்மொழிகளாலும், கவிதைகளாலும்,
வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்
பிடித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:13

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அஞ்சலிமேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் ஷில்லாங்கில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அசாம் மாநிலம், கவுகாத்தி கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.
அங்கு அப்துல் கலாமின் உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் துணைக் குடியரசுத் தலைவர் அமீது அன்சாரியும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அப்துல் கலாமின் உடலுக்கு நரேந்திர மோடி அஞ்சலி

மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் ஷில்லாங்கில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அசாம் மாநிலம், கவுகாத்தி கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.


அங்கு அப்துல் கலாமின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:25


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:25


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:28


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:31


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:32


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:33


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:34


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:36


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:37


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:39


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:41


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:43


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:43


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:45


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Thu 30 Jul 2015 - 22:50


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Fri 31 Jul 2015 - 1:56

கலாம்–ன் 2020 கனவு: டாப் 20 வாய்ப்புகள், பிரச்னைகள்!

லாம் அமரர் ஆகிவிட்டார். அவர் விதைத்துச்சென்றவை 2020ல் விருட்சமாகுமா? அவை எந்த நிலையில் உள்ளன? அவர் கனவின் டாப் 20 வாய்ப்புகள் மற்றும் பிரச்னைகள் பற்றிய ஓர் பார்வை இங்கே...

1. கல்வி

வாய்ப்புகள்:

இந்தியாவின் எழுத்தறிவு இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. கல்வி நிறுவனங்களும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நூறு மடங்கு எழுத்தறிவு மிக்க நாடு என்னும் பெருமை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

பிரச்னைகள்:

எழுத்தறிவு மட்டும் போதாது. இந்தியாவின் கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. அறிவைத்தேடும் இடம் என்பது போய் வேலை பெற்றுத்தரும் வேலைவாய்ப்பு அலுவலகம் போல் மக்கள் எண்ணிக்கொள்ள தொடங்கி விட்டனர். அதற்கேற்றார் போல் கல்வி நிறுவனங்களும் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டன. புதிதாய் பல போலி பல்கலைக்கழகங்கள் முளைக்கின்றன. கல்வியை காசு பார்க்கும் தொழிலாக பல கல்வி நிறுவனங்கள் ஆக்கிக்கொண்டன. தொழிற்கல்வி பட்டதாரிகள் போதிய கல்வியறிவின்றி, வேலையில்லா பட்டதாரிகளாகி விடுகின்றனர். இந்த ஆண்டிலேயே இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்கள் குறித்த அறிக்கையை யூ.ஜி.சி வெளியிட்டது. அதில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகமும் அடக்கம்.

2. பொருளாதாரம்

வாய்ப்புகள்:

இன்று பொருளாதார கல்வி பயிலும் மாணவர்களும், கல்வி நிறுவனங்களும் நிறையவே வந்துவிட்டன. பொருளாதார இந்தியா கிட்டத்தட்ட ஒரு பொருளாதார வல்லரசாகவே பார்க்கப்படுகிறது. அகிலம் மெச்சும் பொருளாதார வல்லுனர்களை இந்தியா கொண்டுள்ளது. அமர்த்யா சென், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் மற்றும் இந்நாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் ஆகியோர் பிரபலமான பொருளாதார வல்லுநர்கள் ஆவர்.

பிரச்னைகள்:

இத்தனை பொருளாதார வல்லுநர்கள் இருந்தும் நம் பொருளாதாரம் எழு எழு என்று எழுப்பினாலும் எழும்பமாட்டேன் என்கிறது. காரணம் பொருளாதார வளர்ச்சிக்கான பல காரணிகள் அரசின் கட்டுபாட்டில் இல்லை என்பதே. எடுத்துக்காட்டாக பெட்ரோல் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. நம் பொருளாதாரம் எவ்வளவுதான் வளர்ச்சியை நோக்கி சென்றாலும், பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் எரிபொருள் விலையும் ஏறிக்கொண்டே செல்கிறது. பானையில் தண்ணீர் நிறைக்க நிறைக்க அதிலுள்ள ஓட்டை வழியே தண்ணீர் வெளியே பாய்ந்து பானை நிரம்பாமலே இருக்கும் கதைதான் இது. மற்றொரு காரணம், பல பொருளாதார வல்லுநர்கள் தங்கள் ஆராய்ச்சியை முடித்ததும் வெளிநாட்டிற்கு ‘சேவை’ செய்ய சென்றுவிடுவதுதான்.

3. சுகாதாரம்

வாய்ப்புகள்:

சுகாதாரம் குறித்த விழிப்புணர்ச்சி இந்திய சுதந்திரத்துக்கு பின் தீவிரமானது. ஊர் ஊராய், கிராமம் கிராமமாய் சுகாதாரம் குறித்த பிரசாரங்கள் இந்திய அரசால் செய்யப்பட்டன. கிராமங்களில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அரசு கட்டட சுவர்களை அலங்கரித்தன. சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை தனியார் தொண்டு நிறுவனங்கள் தற்போது முன்னெடுத்து செல்கின்றன. சுகாதாரக்கேட்டினால் வரும் மற்றும் பரவும் நோய்களை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

பிரச்னைகள்:

இந்தியாவில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி என்று வைத்துக்கொள்வோம். அப்படியெனில் 65 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பொதுக்கழிப்பறைகளையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இத்தனை பேருக்கும் கழிப்பறை உள்ளதா என்றால், இல்லை. அவைகளை கட்டமைக்க அரசின் முயற்சியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. சிலவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, அரசியல்வாதிகளின் கைதாண்டி செல்லும்போதே மெலிந்து நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுகிறது. சிலபல கழிவுகள் நகரத்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு எரிக்கவோ, மட்கிபோவதற்கான ரசாயனமோ தெளிக்கப்படுகிறது. இது பெரும் சுகாதாரக்கேட்டை விளைவிக்கிறது. வடசென்னையின் பல இடங்களில் தொழிற்சாலை கழிவுகள் மண்ணுக்குள் புதைக்கப்படுவதால், நிலத்தடி நீர் மஞ்சள் நிறத்தில் வருவதாக சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகையில் செய்தி வந்தது. இப்படி இந்தியாவில் பல சம்பவங்கள் உண்டு.
4. மருத்துவம்

வாய்ப்புகள்:

இந்தியாவில் மருத்துவம் இன்று கிட்டத்தட்ட உலகத்தரத்தில் உள்ளது. ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து மருத்துவத்துக்காக பலர் இந்தியா வந்து செல்கின்றனர். இதயக்குழாய் மற்றும் இதயமாற்று அறுவை சிகிச்சைகள் சர்வ சாதாரணமாக நடந்தேறுகின்றன. ஒரு நகரத்திலேயே பல மருத்துவமனைகள் உலகத்தரத்திலான கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. போலியோ இல்லாத நாடாக இன்று நெஞ்சை நிமிர்த்தியிருக்கிறது என்றால் அது சாதாரணமான சாதனை அல்ல. இலவச மருத்துவக்காப்பீடுத்திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த பயனைத்தருகிறது. 108 ஆம்புலன்ஸ் திட்டம் கிட்டத்தட்ட ஒரு சாதனையே. இந்த திட்டத்தால் பிரசவ வேளையில் உயிரிழப்பு கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது.

பிரச்னைகள்:

நம்மூர் மருத்துவமனைகளின் தரம் கிட்டத்தட்ட உலகத்தரத்தில் இருக்கிறதே தவிர, சிகிச்சை உலகத்தரத்தில் இல்லை. நம்மூர் அரசியல்வாதிகளும் சினிமா பிரபலங்களும் இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொள்வதே இல்லை. காரணம் தரமின்மை. இருந்தாலும் மேற்கண்ட ‘கிட்டத்தட்ட உலகத்தர’ வசதிகள் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளிலேயே இருக்கிறது. இலவச மருத்துவக்காப்பீட்டு திட்ட வசதி சில தனியார் மருத்துவமனைகளில் உள்ளபோதிலும், இந்த பரிசோதனை, அந்த பரிசோதனை என்று சொல்லி காப்பீட்டில் சேராத பல பரிசோதனைகளை நடத்தச்சொல்லி வற்புறுத்தி நோயாளியிடம் ஒரு கணிசமான கட்டணத்தை வசூலித்துக்கொள்கிறது. இதன்காரணமாக தரமான சிகிச்சை ஏழைக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.

அவசரத்துக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை பெற நினைப்பவர்கள் சிலநேரம் சென்று நிற்கும் இடம் தனியார் மருத்துவமனையாகவே இருக்கிறது. இதில் கணிசமான தொகை கமிஷனாக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு வழங்கபடுவதாக ஒரு தனியார் தொலைக்காட்சி சமீபத்தில் சாட்சியுடன் வெளியிட்டது. மருந்துகளின் விலை மலையளவு உள்ளது. இந்தியாவில் மருந்துகளுக்கான ஆராய்ச்சி நடைபெறாததும், மருந்து நிறுவனங்கள் தனியார் வசம் உள்ளதுமே இதற்கு முக்கியமான காரணம். இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத இருபதுக்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளது. ஒரு நோய் பத்தாயிரத்தில் ஒருவருக்கோ, லட்சத்தில் ஒருவருக்கோ வருவதாயிருந்தால், அந்த நோய்க்கான மருந்தை கண்டுபிடிப்பதில் தனியார் மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்வதில்லை. காரணம், அதை விற்றால் அவர்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்காது. அரசு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களும் சரிவர செயல்படுவதில்லை.

5. இயற்கை விவசாயம் மற்றும் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு

வாய்ப்புகள்:

சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று இயற்கை விவசாயத்திற்கான விழிப்புணர்வு அதிகம் பகிரப்படுகிறது. பத்திரிகைகளும், ஊடகங்களும், புகழ்பெற்றவர்கள் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து செல்கிறார்கள். நடிகர் அஜீத்குமார் தன் வீட்டு மாடியிலேயே இயற்கை விவசாயத்தோட்டம் ஒன்றை வளர்த்து வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்த 36 வயதினிலே திரைப்படமும் இயற்கை விவசாயதைப்பற்றியே பேசுகின்றன.

பிரச்னைகள்:

இந்தியாவில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. மீதி பாதிபேர் மட்டுமே பங்குகொள்ளும் ஒரு நிகழ்வாகவே பார்க்கவேண்டியுள்ளது. சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் கூட விவசாய நிலத்தை விற்றுவிட்டு ஓடிப்போய்விட துடிக்கின்றனர். காரணம் விவசாயம் சமீப காலங்களில் பொய்த்துப்போகும் தொழிலாகவே இருக்கிறது. விவசாயத்தை மையமாக கொண்ட நாட்டில், ஒரு விவசாயி தன் நிலத்தை விற்றுவிட்டு ஓடிவிட துடிப்பதைவிட வெட்கிக்குனியவேண்டிய செயல் வேறெதுவும் இருந்துவிடாது.

6. உள்நாட்டு மற்றும் எல்லை பாதுகாப்பு, ராணுவ பலம்

வாய்ப்புகள்:

எல்லை பாதுகாப்பிலும், ராணுவத்திலும் நாமும் உலகத்தரத்திற்கு வந்துவிட்டோம். அப்துல் கலாம் இட்ட விதை இன்று விருட்சமாய் மாறி, நாமே போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் இன்னபிற போர்க்கருவிகள் என தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அடைந்து கொண்டிருக்கிறோம்.

பிரச்னைகள்:

உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. நமது புலனாய்வுத்துறையின் செயல்பாடுகள் மெச்சும்படி இல்லை. நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் தாக்குதல்களை நம்மால் முன்கூட்டியே அறிந்து முறியடிக்க முடிவதில்லை. சில தினங்களுக்கு முன்பு பஞ்சாபில் நடந்த தீவிரவாத தாக்குதலே இதற்கு எடுத்துக்காட்டு. உள்நாட்டு கலவரங்களை நம்மால் முன்னுணர்ந்து, எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடிவதில்லை.
 
7. மாற்று எரிசக்தி

வாய்ப்புகள்:

மாற்று எரிசக்தியை நாம் கண்டுகொண்டுவிட்டோம். மாநில அரசுகள் மாற்று எரிசக்தி திட்டங்களை வகுக்கின்றன. நிலக்கரிக்கு மாற்றான எரிசக்திக்காக சூரியமின்சக்தியை மாநில அரசுகள் கண்டுகொண்டுள்ளன.

பிரச்னைகள்:

மாற்று எரிசக்தி திட்டத்தில் அணுமின்சக்தியும் ஒன்று. ஆனால், அதன் பக்கவிளைவுகளும், பின்விளைவுகளும் மிகவும் ஆபத்தானவை. சின்ன எசகுபிசகு ஆகிவிட்டால் ஒரு மாநிலமே காணாமல் போய்விடக்கூடிய வாய்ப்புண்டு. ஹிரோஷிமா-நாகசாகியின் கதி நம் கண்முன்னே தெரிகிறது. இருந்தும் ரஷ்யாவுடன் இருபது வருடங்களுக்கு முன்பு போட்ட ஒப்பந்தங்களுக்கு பயந்து இன்று நாம் அணுமின்நிலைய கருவிகளை வாங்கி நிறுவித்தான் ஆகவேண்டுமா? இதைவிட சிறந்த பாதுகாப்பான திட்டம் ஏதும் அரசு யோசிக்கலாமே.
 
8. உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தில் மேம்பாடு

வாய்ப்புகள்:

உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டோம்.

பிரச்னைகள்:

உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டாலும், தொழில் மேம்படாததற்கு காரணம், உற்பத்தி செய்யும் இடத்திற்கு பக்கத்திலேயே பதப்படுத்துதல் கிடங்கு இல்லாததே. மட்டுமல்லாமல், நாம் நமது உணவிற்கு போதுமான சந்தையை வெளிநாடுகளில் உருவாக்கவேண்டியுள்ளது.

9. புதுப்புது தொழில்களை உருவாக்குதல்

வாய்ப்புகள்:

புதுப்புது தொழில்கள் உருவாகும் சூழல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது உருவாகியுள்ளது. கல்லூரி மாணவர்களே இருவர் இணைந்து ஒரு தொழில் நிறுவனத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு இன்றைய காலகட்டம் உள்ளது. இந்த புதிய தொழில்களுக்கு நிதியுதவி செய்ய இன்று பல நிறுவனங்கள் வந்துவிட்டன. இவை வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் எனப்படுகின்றன. இத்தகைய நோக்கத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், யுவி கேன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. புது தொழிலதிபர்களிடம் ஐடியாக்களும் பழைய தொழிலதிபர்களிடம் அனுபவமும் இருக்கும். இவை ஒன்றிணைந்தால் இவர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

பிரச்னைகள்:

புது தொழில்கள் வரவர தங்கள் தொழிலை மேம்படுத்தாத தொழிலதிபர்களின் லாபம் குறைகிறது. 'பழையன கழிந்து, புதியன புகும்' என்பதுதானே பொன்மொழி.
 
10. அனைவருக்கும் வேலைவாய்ப்பு

வாய்ப்புகள்:

வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் சமுதாயக்கல்லூரிகள் நம் ஊரில் தேவையான அளவு தொடங்கப்பட்டுள்ளன. சிறப்பு தொழிற்பயிற்சி தரும் நிறுவனங்களும் இன்று ஊருக்கொன்று உள்ளன.

பிரச்னைகள்:

இந்த நிறுவனங்களில் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்கள் அனைவரும் வேலைக்கு தகுதியானவர்களாக இருப்பதில்லை. அறிவில், திறமையில் இவர்கள் மெச்சும்படி இல்லை என்பதே வேலைக்கு சேர்க்கும் பல நிறுவனங்களின் பதில்.

11. தகவல் தொழில்நுட்பத்தில் உலகத்தரம்

வாய்ப்புகள்:

தகவல் தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவை அடைந்து விட்டோம். உலகின் டாப் 10 நிறுவனங்களுள் நம் நாட்டின் மூன்று நிறுவனங்கள் இருப்பதே இதற்கு சாட்சி.

பிரச்னைகள்:

நாம் ஒரு தொழில்நுட்பத்தை பின்பற்றுபவர்களாகவே இருந்து வருகிறோம். அதனாலேயே இத்துறையில் நம் வளர்ச்சி தடைபட்டிருக்கிறது. நாம் ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து முன்னெடுத்து செல்லும் நேரம் வந்துவிட்டது. ஆனால், பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது தான் கேள்வியே.

12. உலகத்தர ஆராய்ச்சி மையங்கள்

வாய்ப்புகள்:

உலகத்தர ஆராய்ச்சி மையங்களை நிறுவுவதற்கான சூழல் இன்று பல பல்கலைக்கழகங்களும் உருவாக்கிக்கொண்டுள்ளன. அதற்கான பண உதவியும், திட்ட உதவியும் உருவாக்கித்தர அரசு தயாராய் உள்ளது.

பிரச்னைகள்:

உலகத்தரத்தில் ஆராய்ச்சி மையங்களை உருவாக்குவதற்கு அரசு தரும் உதவிதொகை சிலநேரங்களில் போதுமானதாக இருப்பதில்லை.

13. காடு வளர்ப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு

வாய்ப்புகள்:

இன்றைய அறிவியல் தொழில்நுட்பவுலகில் காடு வளர்ப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பின் தேவை பற்றிய அறிவு பலருக்கும் உள்ளது. சில வருடங்களுக்கு முன், மழைநீர் சேகரிப்பை தமிழக அரசே கட்டாயமாக்கியது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவற்றின் முக்கியத்தை செயல்வடிவம் கொடுத்து பரப்பி வருகிறது. சென்னையின் கோட்டூர்புரத்தில் இருக்கும் மரப்பூங்கா (Tree park) இதற்கான சாட்சி.

பிரச்னைகள்:

அரசின் சில திட்டங்களால் காடுகள் அழியும்படி ஆகிவிட்டன. இந்தியாவின் வட மாநிலங்களில் தாதுகளுக்காக காடுகள் அழிக்கப்பட்டு, மலைகள் குடையப்படுகின்றன. மழைநீர் சேமிப்பு திட்டத்தை அரசே கட்டாயமாக்கிய பின்பும் ஊருக்கு ஒன்றோ இரண்டோ வீடுகள் மட்டுமே செயல்படுத்தின.
 
14. நீர்நிலைகளை மேம்படுத்துதல்

வாய்ப்புகள்:

நதிகள் இணைப்பு திட்டம் அரசால் முன்மொழியப்பட்டுள்ளன.

பிரச்னைகள்:

நாட்டின் நீர்நிலைகள் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளன. புதிதாய் நீர்நிலைகள் கட்டப்படுவதில்லை. பழைய நீர்நிலைகளுக்காக மாநிலங்கள் சண்டைபோட்டு உச்சநீதிமன்றம் வரை செல்கின்றன. காவேரிக்காக கர்நாடகத்திடமும், முல்லை பெரியாருக்காக கேரளத்திடமும் நாம் குடிமிப்பிடி சண்டை மட்டும் தான் போடவில்லை. பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. அதற்குள் பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் சண்டை வந்துவிட்டது. நதிகள் இணைப்பு தான் நாட்டின் தண்ணீர் பிரச்னைக்கு ஒரே வழி என்றானபின், மாநிலங்கள் ஒத்துக்கொள்ளாமல் பிரச்னையை இழுத்தடிக்கின்றன.
 
15. இளைஞர்கள் கையில் அரசியல்

வாய்ப்புகள்:

இளைஞர்கள் அரசியலுக்கு வர உகந்த சூழல் நாட்டில் நிலவுகின்றது. கட்சிகள் பலவற்றிலும் சில வருடங்களில் இளைஞரணி பதவிகள் காலியாக போகின்றன.

பிரச்னைகள்:

இளைஞர்களுக்கு பதவி கிடைப்பது கட்சியில் மூத்தவர்களுக்கு சிலநேரம் பிடிப்பதில்லை. தாங்கள் ஒதுக்கப்படுவதாக உணர்கிறார்கள். தங்கள் அரசியல் இருப்பை காட்டிக்கொள்ளவே தங்கள் பெயரில் ஒரு கட்சியை ஆரம்பிக்கிறார்கள்.
 
16. ஊழல், போதை மற்றும் உள்நாட்டு அமைதி குழப்பங்கள்

வாய்ப்புகள்:

ஊழலுக்கு எதிரான குரல் இன்று உயரத்துவங்கியுள்ளது. மக்கள் இன்று பல வழிகளில் அமைதியை தேடிக்கொள்ள முற்படுகின்றனர். இன்றைய இளைய சமுதாயம் நிறைய வாசிக்கிறார்கள், கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பிரச்னைகள்:

ஊழலுக்கு எதிரான குரல் வலுத்தாலும், ஊழல் குறைந்தபாடில்லை. கருப்புப்பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்திலேயே பதிலளிக்கிறது. முக்கால்வாசி இந்தியர்கள் குடிக்கும் புகைக்கும் அடிமையாய் வாழ்கிறார்கள். இந்த பழக்கங்கள் தவறு என்று எண்ணாத அளவிலேயே விளம்பரங்கள் அவர்களை மாற்றிவைத்திருக்கின்றன.

அரசே சகாயவிலையில் ‘சரக்’கை விற்பதால், நாட்டின் குடி கேட்டு, வீடுகளில் மரண ஓலம் அதிகரித்திருக்கிறது. புகை பிடிப்பவர்களும், ‘புகை நமக்கு பகை’ என்பதை மறந்து விட்டனர். கருத்து பெறுதலும், பரிமாறப்படும் கருத்துக்களும் மாற்றுக்கருத்து உள்ளவர்களிடம் ஒரு வெறுப்பை ஏற்படுத்துகிறது. மீண்டும் அமைதியின்மைக்கு வழிவகுக்கின்றன. சமீபத்தில் நடந்தேறிய ‘கிஸ் ஆப் லவ்’ இதற்கு ஒரு எடுத்துகாட்டு.
 
17. சிறந்த வெளியுறவுக்கொள்கை மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவு

வாய்ப்புகள்:

இன்றைய தேதியில் அண்டை நாடுகளுடன் நம் நாடு நட்பு பாராட்டி வருவது நாட்டிற்கு நன்மை பயக்கும்.

பிரச்னைகள்:

நட்பு நாடு என்பது ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பதாகும். நட்பு நாடு என்பதாலேயே அவர்கள் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது, நம்மை நாமே வலுவற்றவர்களாக காட்டிக்கொள்வதாகும். சமீபத்தில் இலங்கைக்கெதிராக ஐ.நா. சபையில் ஓட்டளிக்காதது ஒரு உதாரணம்.

18. குழந்தைத்தொழிலாளர்கள் மற்றும் பெண் சிசுக்கொலைகள்

வாய்ப்புகள்:

குழந்தைத்தொழிலாளர்களை காப்பாற்றும் பொறுப்பை அரசு தனி சட்டம் வகுத்து செயல்படுத்தி வருவதால், சில வருடங்களாக குழந்தைத்தொழிலாளர் முறை பல இடங்களில் தடுக்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் செயலுக்கு அரசு தடைவிதித்து சட்டம் இயற்றியுள்ளது. பெண் குழந்தைகள் பிறந்தால் தனியே உதவித்தொகை என்ற பெயரில் பண உதவியும் அரசே செய்கிறது.

பிரச்னைகள்:

இத்தனைக்கும் மூலக்காரணம் என்ன என்பதை அரசு கண்டுபிடித்து களையவில்லை. பெண் குழந்தை சுமை என்று நினைக்கும் சமூகத்தின் மனப்பான்மையை மாற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைத்தொழிலாளர்கள் உருவாகக்காரணமான வறுமை இன்னும் ஊருக்குள் உலா வருகிறது.

19. பெண்ணுரிமை மற்றும் பெண் கல்வி

வாய்ப்புகள்:

இன்று பெண்ணுக்கு தனியுரிமை வழங்கப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டால் பெண் கல்விக்கு ஒரு தனி உற்சாகம் கிடைத்துள்ளது.

பிரச்னைகள்:

பெண்கல்வியை ஊக்குவிக்க பல திட்டங்கள் இயற்றப்பட்டாலும், நாட்டின் கடைக்கோடி பெண் வரை திட்டங்கள் சென்று சேர்வதில்லை.

20. சாதி, மத, வர்க்க ரீதியிலான பிரிவினைகள்

வாய்ப்புகள்:

இன்றைய இளைய சமுதாயம் இந்த பிரிவினைகளை கடந்து பழகுகிறது. சாதி மத வர்க்கங்கள் இன்று இளைய சமுதாயத்தின் சான்றிதழில் மட்டுமே உள்ளது.

பிரச்னைகள்:

பல விஷமிகள் அரசியல் காரணங்களுக்காக மக்களை சாதி, மத, வர்க்க ரீதியாக பிரித்தாளும் முயற்சியை மேற்கொள்கின்றன. சாதி வெறியையும், மத வெறியையும் தூண்டிவிட்டு குளிர்காய்கின்றன. அதில் அரசியல் ஆதாயத்தை அடையப்பார்கின்றன.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Fri 31 Jul 2015 - 1:58

விடை பெற்றார் கலாம்...!
       
ராமேஸ்வரம்: லட்சக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருடன் விடை பெற்றார் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் இன்று ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தாெழுகைக்கு பின்னர், கலாமின் உடல் இறுதி ஊர்வலமாக ராணுவ வாகனத்தில் புறப்பட்டு, வழிநெடுக லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீருடன் சென்றது.
பள்ளிவாசல் வந்தது கலாம் உடல்...
நேற்று இரவு முழுவதும் கலாம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சிறப்பு பிரார்த்தனைகளுக்கு பின் அவரது வீட்டின் அருகில் உள்ள முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளிவாசலுக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சிறப்பு தொழுகை நடைபெற்றது
கலாமின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது...
அங்கு தொழுகை முடிந்தபின் மீண்டும் ராணுவ வீரர்களிடம் கலாமின் உடல் ஒப்படைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தின் மூலம், ராமேஸ்வரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அடக்கத்தளத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வாகனம், ராம தீர்த்தம் தெற்கு, நகர் காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக அடக்கத்தளத்திற்கு சென்றது.
மோடி, ராகுல் மதுரை வருகை...
அப்துல் கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து ராமேஸ்வரம் சென்றனர்.
பேக்கரும்பில் உடலுக்கு ராணுவ மரியாதை...
ராமேஸ்வரத்தில் இருந்து அடக்கம் செய்யப்பட உள்ள பேக்கரும்புக்கு அப்துல் கலாமின் உடல், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதன்பின் அங்கு அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
21 குண்டுகள் முழங்க விடை பெற்றார் கலாம்...
தலைவர்களின் இறுதி அஞ்சலியை தொடர்ந்து, ராணுவ வீரர்களின் 21 குண்டுகள் முழங்க நம்மை விட்டு பிரிந்து சென்றார் இளைஞர்களின் கனவு நாயகன்.
கலாமின் உடலை கடைசி முறையாக பார்ப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்திற்கு சோகத்துடனும், கண்ணீருடனும் வந்திருந்தனர்.
முன்னதாக...
கோடிக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட அப்துல் கலாம், கடந்த திங்கட்கிழமை மாலை மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றி கொண்டிருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்கிழமை காலை அசாம் தலைநகர் கவுகாத்தி கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து விமானப்படை விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
டெல்லி பாலம் விமான நிலையத்தில் அப்துல் கலாமின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு அப்துல் கலாமின் உடல் டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில், அப்துல் கலாமின் இறுதிச்சடங்கை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடத்த அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதைத்தொடர்ந்து, அப்துல் கலாமின் உடல் நேற்று காலை டெல்லியில் இருந்து சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் ராணுவ விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டு,  அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.
அதன்பின், அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கடற்படைக்கு சொந்தமான வாகனத்தில், கலாம் உடல் ராமேஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மண்டபம் முதல் ராமேசுவரம் வரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மாணவர்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அப்துல் கலாமின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதை தொடர்ந்து, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் கலாமின் உடல் வைக்கப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்த 3 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் சோகத்துடனும், கண்ணீருடனும் காத்திருந்தனர்.
உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு...
பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் இரவில் அப்துல் கலாமின் உடல், அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கலாமின் வீட்டினுள் அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Fri 31 Jul 2015 - 2:02

தமிழகம் முழுவதும் அப்துல் கலாமிற்கு வைக்கப்பட்டிருந்த அஞ்சலி போஸ்டர்கள்

       

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Fri 31 Jul 2015 - 2:07

நாங்கள் வாழ உயர்ந்த இந்தியாவை படைத்த நாயகனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

''என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்” - அக்னிச் சிறகுகள் நூலின் முடிவு.
 
 
கோயிலடியில் குடியிருந்த ஞான ஆசிரியரிடம் பாடம், பல மைல் நடையில் அரபுப்பள்ளி, செய்தித்தாள் விநியோகம், அப்பாவின் வியாபாரத்துக்கு மாலை உதவி என்று ஓயாது ஒவ்வொரு நாளும் ஓடிய அந்தச் சிறுவனின் பாதங்கள், தனக்கான இலக்கில் தேசத்துக்கான எழுச்சியைத் தந்தது. அசைவ உணவு, அழகான தலைமுடி வெட்டல் துறந்து உதவித்தொகையும், அக்காவின் நகைகளின் அடமானமும் தந்த பணத்தில் மேற்படிப்புப் படித்த கல்விக்காலம்,  வறுமையில் வானத்தைத் தொட எத்தனிக்கும் அத்தனை பேருக்கும் ஆன்ம பலம்.

 


வினாத்தாள் வெளியாகி ஒரு வருடக்கல்லூரி வாழ்க்கையை இழந்தார். ஒன்பதாவது இடம் பெற்று தவறவிட்ட விமானியாகும் கனவுக்காகக் கங்கையில் மூழ்கி கண்ணீர் விட்டார். எழுந்து நின்று இந்தியாவின் ஏவுகணைப் புரட்சிக்கு வழிகோலினார். எப்பொழுதும் அயல்நாட்டுப் பல்கலைகளில் படிக்காத அப்துல் கலாம், திருச்சி புனித வளனார் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி. ஆகியவற்றின் வார்ப்பு. 'நான் முழுக்க இந்தியாவில் தயாரான அற்புதம்!' என்று பெருமிதம் பொங்கச் சொன்ன பாரத ரத்தினம் அவர். அயல்நாட்டுப் பல்கலைகளில் பாடம் நடத்த அழைப்புகள் வந்தாலும் சொந்த நாடே சொர்க்கம் என்று சிலிர்க்க வைத்தவர்.
"குடியரசுத் தலைவராக நல்ல நேரத்தில் பொறுப்பேற்கிறீர்களா?" என்று வந்த கேள்விக்கு, "எனக்குச் சூரிய மண்டலம் இயங்கும் எல்லா நேரமும் நல்ல நேரம்தான்" என்ற வள்ளுவரின் மகன் அவர். குறளோடு உறவாடி உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என உரமேற்றியும், எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்று திண்ணிய தீரர்களைத் திக்கெட்டும் புடம் போட்டார்.

எண்பத்தி நான்கு ஆண்டுகளில் எழுச்சி தீபங்களை ஏற்றியபடியே இருந்த எளிமைச் சூரியன். புயலால், பெருமழையால் ராமேஸ்வரம் சிதறுண்டதை அப்பாவின் கண்களின் வழியாகக் கண்டவர் சிறுவன் கலாம். எஸ்.எல்.வி.ராக்கெட்டை விண்வெளியில் செலுத்திய முதல் முறை கடலில் விழுந்தது. அடுத்தடுத்த முயற்சிகளை மழையும், புயலும் தடை செய்து கொண்டே இருந்தன. கேலி, கிண்டல், அவநம்பிக்கையால் விமர்சகர்கள் நிறைத்தார்கள்.
"இயற்கையின் ஆற்றல் எல்லையில்லாதது. கடலை நம்பி வாழ்ந்ததால் அதன் வலிமை எனக்குத் தெரியும். அதன் ஆற்றல், வலிமை நம்முடைய இலக்குகள், திட்டங்களை ஆகியவற்றைக் கண் சிமிட்டும் நேரத்துக்குள் அழித்துவிடும். இவற்றை எதிர்கொண்டு நம்முடைய வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க வேண்டும் " என்று சொன்னவர் அந்த ராக்கெட்டையும், எண்ணற்ற ஏவுகணைகளையும் அயராத உழைப்பால் செலுத்தி பாடங்கள் நடத்தினார்.
அக்னி ஏவுகணையின் பொறுப்பில் இருந்த பொழுது எண்ணற்ற தோல்விகள் துரத்தின. பாக்கெட்டில் பதவி விலகல் கடிதத்தை வைத்துக்கொண்டே,  இன்னல்களை இமாலய வெற்றிகள் ஆக்கியவர் அவர்.

ஒரிசாவில் இயற்கை பேரிடரால் வீடிழந்து, முகவரி தொலைத்துக் கண்ணீர் துளிர்க்க நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை ஆறுதலால் அவர் நிறைத்துக் கொண்டிருந்தார். ஒரு அழகிய சிறுவன் கலாமின் கண்களில் பட்டான். அவனுக்கு ஆறுதல் சொல்ல அப்துல் கலாம் அருகே அழைத்தார். "அடுத்த முறை எங்களின் புதிய வீட்டுக்கு நீங்கள் அவசியம் வரவேண்டும்!" என்ற அந்தச் சிறுவனின் நம்பிக்கை சுடர் , "உங்களைப் போலவே நானும் ஜனாதிபதி ஆவேன்" என்ற அக ஒளியர் ஸ்ரீகாந்தின் பெருங்கனவு என்று அத்தனை இளைஞர்களின் உயர்ந்த எண்ணங்களையும் இந்தியா முழுக்கக் கொண்டு சேர்த்த கரைகளற்ற நம்பிக்கை பேரண்டம் அவர்.
ஆயுதங்கள் செய்த அவர், நிம்ஸ் மருத்துவமனையில் உறுப்புகளை இழந்த பிள்ளைகளுக்காக அரைக் கிலோவுக்கும் குறைவான எடையில் செயற்கை கால்கள் செய்து அணிய வைத்து அவர்கள் பட்டாம்பூச்சி போலச் சிறகடித்து நடக்க வைத்து அழகு பார்த்த தருணத்தில், 'இதுவே நிறைவான தருணம்!' என்றவர் சொன்னது எத்தனை நெகிழ்ச்சியான கணம்? இதய நோயாளிகளுக்கு உதவக் கலாம்-ராஜூ ஸ்டென்ட்டை லாபம் எதிர்பார்க்காமல் வடிவமைத்த மனித நேயர்.

பறவைகளைக் கண்கள் விரிய பார்க்க வைத்து, விமானங்களின் செயல்பாட்டைப் புரிய வைத்த ஆசிரியர் சுப்பிரமணியம், விமான வடிவமைப்பை மூன்று நாட்களுக்குள் முடிக்காவிட்டால் உதவித்தொகை ரத்து என அச்சுறுத்தி சாதிக்க வைத்த பேராசிரியர் சீனிவாசன், உட்கரு இயற்பியல் எடுத்த பாதிரியார்  சின்னத்துரை வரை அத்தனை ஆசான்களின் நினைவுகளையும் நித்தமும் சொல்லிக்கொண்டே இருந்த மாணவன் அவர்.

அடிப்படை வசதிகளைக் கிராமங்கள் பெற 'PURA' திட்டம், வளமான இந்தியாவுக்கான இலக்குகளை எண்ணற்ற புத்தகங்கள் மூலம் வடித்த தொலைநோக்கு தோழர்.

விகடனில் ஒரு சுட்டி 'விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர் - உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்த பொறுப்பு எது?'' என்று கேள்வி எழுப்பிய பொழுது ''ஆசிரியர்!" என்று அத்தனை விருப்பத்தோடு பதில் சொன்ன அந்த ஆசான்,  அண்ணா பல்கலையில் ஆசிரியராக அயராது பணியாற்றினார்.
ஷில்லாங்கில் மாலை 6:15க்கு 'அனைவரும் வாழ உகந்த உலகம்' என்கிற தலைப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் இதயம் சற்றே சலிக்கச் சரிந்தார். நாங்கள் வாழ உயர்ந்த இந்தியாவைப் படைத்த நாயகனுக்குச் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ராமேஸ்வரத்து படகோட்டியின் மகன் ராஷ்ட்ரபதி பவனைத் தொட்ட வரலாறு இது. எளிமையைத் தாங்கியபடி ஏவுகணைகளால் எழுச்சி தந்த பெருங்கதை இது. ஆடம்பரத்தின் சாயல் படாத அற்புதம் அது. அவருக்குப் பிடித்த பகவத் கீதை வாசகமே அவருக்கு உரிய சமர்ப்பணமாக இருக்கக்கூடும்:

'அந்த மலரைப் பாருங்கள். அது நறுமணமும், தேனும் தாரளமாகத் தருகிறது. அதன் பணி முடிந்ததும் சலனமில்லாமல் அது சரிகிறது. அதைப்போல அகந்தை இல்லாமல் அத்தனை நற்குணங்களோடு இருங்கள்!'.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Fri 31 Jul 2015 - 2:21


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Fri 31 Jul 2015 - 2:24

அப்துல் கலாமுக்கு தமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி!


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Fri 31 Jul 2015 - 2:26

திரு.அப்துல் கலாம் நினைவலைகள்... புகைப்படத் தொகுப்பாக...


anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by சே.குமார் on Fri 31 Jul 2015 - 7:02

அழகான புகைப்படங்கள்...
பகிர்வுக்கு நன்றி.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1402
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by anuradha on Fri 31 Jul 2015 - 10:13

அந்தக் கால்கள் ஓடிய அழகைப் பார்த்து மெய் சிலிர்த்தேன்..

கலாம் நெகிழ்ந்து போன அந்த தருணம்
டெல்லி: அப்துல் கலாமைப் பற்றி பேசிப் பேசித் தீராது.. அவரைப் பற்றி, அவரது மறுபக்கத்தைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம், பேசிக் கொண்டே இருக்கலாம். கலாம் ராக்கெட் மட்டும் விடவில்லை, ஏவுகணைகளை மட்டும் உருவாக்கவில்லை. மாறாக, சத்தம் போடாமல் பல அருமையான சமூக சேவைகளை அவர் செய்துள்ளார்.அதில் முக்கியமானது போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டோர் அணியும் ஷூக்களின் (கேலிப்பர்) பிட்மென்ட் (இணைப்புப் பகுதி) எடையைக் குறைத்த அருமையான செயல் ஆகும்.இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டோர் மிகவும் எடை அதிகமான ஷூக்களை போட்டுக் கொண்டு இயங்குவதைப் பார்த்திருப்போம். முன்பு இதை விட அதிக எடை கொண்டதாக இந்த கேலிப்பர்கள் இருந்தன. ஆனால் அப்துல் கலாமும், அவரது குழுவினரும் இணைந்து இதன் எடையைக் குறைக்கும் அருமையான காரியத்தைச் செய்தவர்கள் ஆவர்.தனது வாழ்வில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது எடை குறைக்கப்பட்ட காலிப்பர்களை போலியோவால் பாதிக்கப்பட்ட சிறார்கள் போட்டுக் கொண்டு சந்தோஷத்துடன் நடந்தபோதுதான் என்று கலாமும் அதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஒருமுறை கலாமே கூறியது இது... 
போலியோ சிறார்கள் போலியோவால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு காலிப்பர்கள் தயாரிக்கப்படுகின்றன. முன்பு நான் ஹைதராபாத்தில் உள்ள சில மருத்துவமனைகளுக்குச் சென்றிருந்தபோது அங்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட பலர் நடக்கவே மிகவும் சிரமப்படுவதை பார்த்தேன். காரணம், அந்த காலிப்பர்களின் எடை. அது 4 கிலோ வரைக்கும் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
எடை அதிகமான பிட்மென்ட் அப்போது என்னிடம் பேசிய நிம்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் பி.என். பிரசாத், இதற்கு ஏதாவது வழி உள்ளதா. எடையைக் குறைத்தால் பலருக்கு பலன் கிடைக்கும் என்று என்னிடம் கேட்டார். திரும்பி வந்த நான், உடனடியாக எனது அக்னி (ஏவுகணை) நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். நாம் ஏன் அக்னிக்காக பயன்படுத்தப்படும் காம்போசிட் மெட்டீரியல்களை ரீசைக்கிள் செய்து இந்த காலிப்பர்களுக்குத் தேவையான மெட்டீரியல்களைத் தயாரிக்க பயன்படுத்த முடியாது என்று கேட்டேன்.களத்தில் குதித்த அக்னி நண்பர்கள் அவர்களும் இது சாத்தியமானதுதான் என்றனர். உடனடியாக நாங்கள் களத்தில் குதித்தோம். அனைவரும் சேர்ந்து ஒரு குழுவாக செயல்பட்டு புதிய மெட்டீரியலை உருவாக்கினாோம். அதைக் கொண்டு முதலில் 25 காலிப்பர்களை உருவாக்கினோம். காலிப்பர்களில் உள்ள பிட்மென்ட்தான் அதிக எடை கொண்டது. அதைத்தான் நாங்கள் குறைக்க முயற்சித்தோம். அதற்கு முன்பு வரை 4 கிலோ எடையுடன் இருந்த பிட்மென்ட் பகுதியை நாங்கள் 400 கிராமாக குறைத்தோம். டாக்டர்கள் மகிழ்ந்தனர்.


ஓடியதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் ஆனால் எனக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் அந்த காலிப்பர்களைப் போட்டுக் கொண்டு சிறார்கள் மகிழ்ச்சியுடன் முன்பை விட வேகமாக, சந்தோஷமாக, உற்சாகமாக நடந்தார்கள் பாருங்கள். அதுதான் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனது வாழ்க்கையில் நான் மிக மிக அதிக அளவிலான மகிழ்ச்சியை அடைந்தது அந்த சிறார்களைப் பார்த்துத்தான்.பெற்றோரின் மகிழ்ச்சி என் மகிழ்ச்சி தங்களது பிள்ளைகள் நடப்பதைப் பார்த்து அவர்களின் பெற்றோர்கள் விட்ட ஆனந்தக் கண்ணீர் மிகவும் நெகிழ்ச்சியானது. தங்களது பிள்ளைகளும் மற்றவர்களைப் போல ஓடியாட முடிகிறதே என்ற மகிழ்ச்சியால், சந்தோஷத்தால் வழிந்த கண்ணீர் அது. அதே அளவிலான மகிழ்ச்சியில்தான் நானும் இருந்தேன்.வலியைப் போக்கிய சந்தோஷம் அந்தக் குழந்தைகளின் வலியைப் போக்கிய மகிழ்ச்சி எனக்கு. அவர்களும் மற்றவர்களைப் போல இயல்பாக நடக்க முடிகிறதே என்ற மகிழ்ச்சி எனக்கு. அவர்களது வாழ்க்கையில் ஒரு புதிய ஒளி பாய்ச்சப்பட்டதாக நான் உணர்ந்தேன். அந்த சந்தோஷத்தை அதற்கு முன்பும் சரி, பின்னரும் சரி நான் அடைந்ததில்லை, உணர்ந்ததில்லை என்றார் கலாம்.


கலாம் போட்ட விதை கலாம் கூறிய அந்த மெட்டீரியலானது ஏவுகணைகள், விமானங்கள், போர் விமானங்கள் போன்றவற்றி்ல பயன்படுத்தப்படும் மெட்டல் ஆகும். இதன் கழிவைத்தான் ரீஇன்போர்ஸ் செய்து மாற்றியமைத்து காலிப்பர்களின் பிட்மென்ட் பகுதியாக மாற்றி அற்புதம் செய்தது கலாம் குழு. இன்று நாடு முழுவதும் காலிப்பர்கள் எடை குறைந்து காணப்படுகிறது என்றால் அதற்கு கலாம் போட்ட அந்த விதைதான் காரணம். காலிப்பர்களுடன் நடந்து வரும் ஒவ்வொருவரும் கலாமுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளனர்.
நன்றி சொல்வோம் கலாமுக்கு

 கலாமின் இந்த செயல் இன்னொரு விஷயத்தை நமக்குப் போதிக்கிறது. இந்த உலகில் எதுவுமே வீண் இல்லை. வீண் என்று நாம் நினைப்பது வேறு ஒரு காரியத்துக்கு பெரிய நிவாரணமாக இருக்கலாம் என்பதுதான் அந்த போதனை.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum