சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

எம்.ஜி.ஆர்-ன் சிறந்த சாதனை படங்கள்

View previous topic View next topic Go down

Sticky எம்.ஜி.ஆர்-ன் சிறந்த சாதனை படங்கள்

Post by anuradha on Sun 2 Aug 2015 - 12:18

எம்.ஜி.ஆர்-ன் சிறந்த சாதனை படங்கள்
தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு, சினிமாவை கண்ணும் கருத்துமாக நேசிக்கவும் செய்து, சாதாரண மக்களுக்கான படத்தையும் கொடுத்து அதன் பின் அரசியலிலும் வெற்றிக் கொடி நாட்டி, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் எம்ஜிஆர்.
சிறிய கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகனாய் உயர்ந்து பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். ஒவ்வொரு படமும் ரசிகர்களை சரியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக கவனம் செலுத்தி படத்தை மட்டும் ரசிக்காமல் அதில் இடம் பெறும் பாடல்களும் ரசிகர்களைச் சென்றடையும் விதத்தில் படங்களைக் கொடுத்தவர் எம்ஜிஆர்.
அவருக்காக மட்டும் வாழாமல் அடுத்தவர்களுக்காகவும் வாழ்ந்ததால்தான் அவர் இன்றளவும், “மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் பங்காளன்” என அழைக்கப்படுகிறார். அவர் நடித்து பலரையும் கவர்ந்த சில திரைப்படங்களைப் பற்றி பார்ப்பது அவருடைய வெற்றி மகுடத்தில் இடம் பிடித்துள்ள சில வைரக் கற்கள்.


உலகம் சுற்றும் வாலிபன்
எம்ஜிஆர் இயக்கம், நடிப்பில் வெளிவந்து தமிழ்த் திரையுலகத்தையே வியக்க வைத்த ஒரு படம். படத்தின் தலைப்புக்கேற்ப உலகம் முழுவதும் சுற்றி வந்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். தமிழக மக்களை தனது மாஸ் நடிப்பின் மூலம் கவர்ந்த எம்ஜிஆர், ஒரு வித்தியாசமான படத்தை அனைவரும் பிரமிக்க வைக்கும்  விதத்தில் கொடுத்து ரசிக்க வைத்தார்.
 இரு வேடங்களில் எம்ஜிஆர், அவருக்கு ஜோடியாக மஞ்சுளா, லதா, சந்திரகலா, வில்லன்களாக எம்என் நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்து இன்று வரை ரசிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை இன்று வரை யாருமே எடுக்கவில்லை என்று கூடச் சொல்லலாம்.

ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட பல ஊர்களில் இப்படம் படமாக்கப்பட்டது.   மின்னல் மூலம் உருவாகும் சக்தியை வைத்து பலன் தரும் ஒரு ஆராய்ச்சியைக் கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானியான ஒரு எம்ஜிஆர். அதை தனது நாட்டுக்காக அர்ப்பணிக்க நினைக்கிறார். ஆனால், மற்றொரு ஆராய்ச்சியாளர் அதை வெளிநாட்டுக்கு விலை பேசி பணம் சம்பாதிக்க நினைக்கிறார். அதற்கு சம்மதிக்காத எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டு சுய நினவை இழக்க வைக்கிறார்.

அந்த விஞ்ஞானியான எம்ஜிஆரின் தம்பியான இன்னொரு எம்ஜிஆர், உளவுத் துறையைச் சேர்ந்தவர். அண்ணனால் உலக நாடுகளில் உள்ள அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆராய்ச்சிக்குறிப்பைக் கண்டு பிடித்து, வில்லன்களிடமிருந்து காப்பாற்ற நினைக்கிறார். அதன் பின் அவர் அதைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பயணிப்பதுதான்  உலகம் சுற்றும் வாலிபன் பல தடைகளைக் கடந்து வெளியான இப்படம் 200 நாட்களுக்கும் மேல் ஓடி மாபெரும் சாதனை புரிந்தது.
அதன் பின் பல முறை வெளியாகி ஒவ்வொரு முறையும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி நல்ல வசூலைத் தேடிக் கொடுத்தது.
ரிக்ஷாக்காரன்

 கிருஷ்ணன் இயக்கத்தில், எம்எஸ்.விஸ்வநாதன் இசையமப்பில் எம்ஜிஆர், மஞ்சுளா, பத்மினி, மனோகர், அசோகன், சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், சோ மற்றும் பலர் நடித்த படம்.இந்தப் படம் மூலம் எம்ஜிஆர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். எம்ஜிஆர் நடிக்கும் படங்களில் ஒரு ஃபார்முலா இருக்கும். ஏழை மக்களைக் கவரும் விதத்தில்தான் அவருடைய கதாபாத்திரத்தை பொதுவாக அமைத்துக் கொள்வார். அதன் மூலம் எளிய மக்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்.
 இந்தப் படத்தின் ரிக்ஷாக்காரன் கதாபாத்திரம் மூலம் அடித்தட்டு மக்களின் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்து விட்டார். எம்ஜிஆருக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுத் தந்தது.மஞ்சுளா இந்தப் படத்தின் மூலம்தான் கதாநாயகியாக அறிமுகமானார். நல்ல படிப்பறிவும், குணமும் கொண்ட எம்ஜிஆர் ரிக்ஷாக்காரனாக இருக்கிறார். அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் கொண்டவர். பத்மினி, அவர் மீது அன்பு செலுத்தி ஒரு சகோதரியாக அக்கறையுடன் இருக்கிறார். பணக்கார வீட்டுப் பெண்ணான மஞ்சுளா, ரிக்ஷாக்காரனான எம்ஜிஆரைக் காதலிக்கிறார்.
இந்த சூழ்நிலையில் சமுதாயத்தில் பெரிய நிலையில் இருக்கும் சிலரால் எம்ஜிஆர் பாதிக்கப்படுகிறார். அந்தக் கயவர்களை எதிர்த்து அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் கதை.எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் வழக்கம் போல அனைத்துப் பாடல்களும் இனிமையாக அமைந்து படத்திற்கு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தன. குறிப்பாக,அழகிய தமிழ் மகள் இவள்...என்ற பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

மாட்டுக்கார வேலன்

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: எம்.ஜி.ஆர்-ன் சிறந்த சாதனை படங்கள்

Post by anuradha on Sun 2 Aug 2015 - 12:20

மாட்டுக்காரவேலன்


மாட்டுக்கார வேலன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். (இரட்டை வேடம்)
ஜெயலலிதா
லட்சுமி
அசோகன்
வி.கே. ராமசாமி
எஸ். வரலட்சுமி
சோ

கே. வி. மகாதேவன் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
ஒரு பக்கம் பாக்குறா டி. எம். சௌந்தரராஜன்
சத்தியம் நீயே டி. எம். சௌந்தரராஜன்
தொட்டுக்கொள்ளவா டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
பட்டிக்காடா பட்டணமா டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி
பூ வைத்த பூவைக்கு டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

இயக்குனர்
பி. நீலகண்டன்
தயாரிப்பாளர்
என். கனக சபை
ஜெயந்த் பிலிம்ஸ்


மாட்டுக்காரவேலன்" சூப்பர்ஹிட் படம். ஜெயந்தி பிலிம்சார் தயாரித்த இந்தப்படத்தில், எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். வசனம்: ஏ.எல்.நாராயணன். கண்ணதாசன் பாடல்களுக்கு இசை அமைத்தவர் கே.வி. மகாதேவன். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம்.
மாட்டுக்காரவேலனும், வக்கீல் ரகுவும் ஒரே தோற்றம் கொண்டவர்கள். சட்டநாதன் குடும்பத்தினர், வக்கீல் ரகுவை வரவேற்கக் காத்திருக்க, அங்கே வேலன் வருகிறான். அவனுக்கு பெரிய விருந்து நடக்கிறது. வேலனை ரகு என்று எண்ணி, அவனை காதலிக்கிறாள், சட்டநாதன் மகள் லலிதா.
உண்மையைச் சொல்லிவிட வேலன் நினைக்கிறான். ஆனால் சூழ்நிலை, அவன் வாயைக் கட்டிப்போடுகிறது. அதே நேரத்தில் ரகு அங்கு வருகிறான். உண்மையை அறிகிறான். தப்பி ஓட நினைத்த வேலனை அங்கேயே தங்க வைத்து, வேலன் _ லலிதா காதல் வளர உதவுகிறான்.
ஆள் மாறாட்டங்களால் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களுடன், படம் விறுவிறுப்பாக அமைந்தது. இரட்டை வேடத்தில், எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்தார். குறிப்பாக, மாட்டுக்காரவேலன் வேடத்தில் அவர் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.
ஜெயலலிதாவும், மற்ற நட்சத்திரங்களும், பாத்திரத்தை உணர்ந்து, இயல்பாக நடித்தனர். இந்தப் படத்தின் பெரிய வெற்றிக்குப் பாடல்கள் துணை நின்றன. "சத்தியம் நீயே, தர்மத்தாயே", "ஒரு பக்கம் பார்க்குறா", "பட்டிக்காடா பட்டணமா", "பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா", "தொட்டுக்கொள்ள வா" ஆகிய கண்ணதாசன் பாடல்கள், திக்கெட்டும் எதிரொலித்தன.
1970 பொங்கல் அன்று வெளிவந்த இந்தப்படம், சென்னை பிராட்வே, மதுரை சிந்தாமணி ஆகிய தியேட்டர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது. 14 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. "என் அண்ணன்" வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு. இதற்கு சொர்ணம் வசனம் எழுதினார். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். இசை: கே.வி.மகாதேவன். இதில் கதாநாயகி ஜெயலலிதா.

ப.நீலகண்டன் இயக்கத்தில், கே.வி.மகாதேவன் இசையமைப்பில் இரு வேடங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா, லட்சுமி, சோ, அசோகன், வி.கே.ராமசாமி மற்றும் பலர் நடித்த திரைப்படம்.இந்தப் படத்தில் எம்ஜிஆர் மாட்டுக்கார வேலனாக ஒரு கதாபாத்திரத்திலும், வக்கீல் ரகுவாக மற்றொரு  கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
எம்ஜிஆர் இதற்கு முன் நடித்து வெளியாக வெற்றி பெற்ற
“நாடோடி மன்னன்,

எங்க வீட்டுப் பிள்ளை”
 ஆகிய படங்களைப் போன்றே இந்தப் படமும் ஆள் மாறாட்டக் கதைதான்.வி.கே. ராமசாமி வீட்டிற்குள் நுழையும் மாட்டுக்கார வேலன் எம்ஜிஆரைப் பார்த்து வக்கீல் எம்ஜிஆர் என அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் ஜெயலலிதாவும் எம்ஜிஆரை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் வக்கீல் எம்ஜிஆர் அங்கு வர, அங்கு நடக்கும் நிலையைப் பார்த்து அவரும் உண்மையை சொல்லாமல் இருக்கிறார். வக்கீல் எம்ஜிஆர், லட்சுமியைக் காதலிக்கிறார். ஆனால், அவருடைய அப்பாதான் வக்கீல் எம்ஜிஆரின் அப்பாவைக் கொன்றவர். அந்த உண்மை எம்ஜிஆருக்குத் தெரியவர அவர் லட்சுமியை விட்டுப் பிரிகிறார். இந்த வேளையில், மாட்டுக்கார வேலன் பற்றிய உண்மையும் தெரிய வர அவரும் ஜெயலலிதாவை விட்டுப் பிரிகிறார். அதன் பின் பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
கே.வி.மகாதேவன் இசையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. எம்ஜிஆரின் மனம் கவர்ந்த இயக்குனரான ப.நீலகண்டன் இந்தப் படத்தை எம்ஜிஆரின் ரசிகர்களுக்கேற்பக் கொடுத்து படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கி வெள்ளி விழா கொண்டாட வைத்தார்.

அடிமைப் பெண்


கே. சங்கர் இயக்கத்தில், கே.வி.மகாதேவன் இசையமைப்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா, ராஜஸ்ரீ, அசோகன், மனோகர் மற்றும் பலர் நடித்த படம்.எம்ஜிஆருக்கு அடையாளமாகத் திகழும் அவர் அணியும் தொப்பியை இந்தப் படத்திலிருந்துதான் நிஜ வாழ்க்கையில் அணிய ஆரம்பித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்றிருந்த போதுதான் எம்ஜிஆர் அந்தத் தொப்பியை வாங்கி அணிந்து பார்த்திருக்கிறார். அவருடைய அழகுக்கு அது மேலும் அழகு சேர்க்கவே எம்ஜிஆரின் அடையாளமாக அந்தத் தொப்பி கடைசிவரை அமைந்து விட்டது.
வில்லனால் கூனனாக, பேசாதவராக, உலக அறிவு இல்லாமல் ஜெயிலில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் எம்ஜிஆருக்கு ஜெயலலிதாவால் விடிவு காலம் பிறக்கிறது. அதன் பின் அவர் எப்படி வீறு கொண்டு எழுந்து தன்னை இன்னலுக்கு ஆளாக்கிய வில்லனை எதிர்த்து பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படத்தில் எம்ஜிஆர் சிங்கத்துடன் மோதும் சண்டைக் காட்சி இன்றுவரை பரபரப்பாக பேசப்படும் ஒன்று. டூப் எதுவும் இல்லாமல் ஒரு அபாயகரமான நிலையில் அந்த சிங்கத்துடன் எம்ஜிஆர் சண்டை போட்டு நடித்ததை இதுவரை வேறு எந்த ஹீரோவுமே செய்ததில்லை.எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை இந்தப் படத்தில்தான் எம்ஜிஆர் முதன் முதலாக 'ஆயிரம் நிலவே வோ...' என பாட வைத்தார். எஸ்பிபியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தில் பாடல் பதிவை தள்ளி வைத்து, அதன் பின் பதிவு செய்து, படமாக்கினார். ஜெயலலிதாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
குடியிருந்த கோயில்

எம்ஜிஆரின் இரு வேடப் படங்களில் முக்கியமான ஒரு படம். கே. சங்கர் இயக்கத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா, ராஜஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வில்லனால் சிறு வயதிலேயே பிரிக்கப்பட்டவர்களான இரண்டு எம்ஜிஆர்களில் ஒருவர் வில்லனிடமே வளர்கிறான். இன்னொருவர் மேடைப் பாடகராக இருக்கிறார். வில்லனிடம் வளரும் எம்ஜிஆர் கொள்ளையனாகவும், கெட்டவனாகவும் இருக்கிறார். அவரைப் பிடிப்பதற்காக உருவ ஒற்றுமையில் ஒன்றாக இருக்கும் மேடைப் பாடகர் எம்ஜிஆரை காவல்துறை பயன்படுத்துகிறது. அதன் பின்தான் இரண்டு எம்ஜிஆரும் அண்ணன் தம்பிகள் என்ற உண்மை தெரிய வருகிறது. இரண்டு எம்ஜிஆரும் இணைந்து தங்களது தந்தையைக் கொன்ற வில்லனை எப்படிப் பழி வாங்குகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமான இந்தப் படம் எம்ஜிஆர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கெட்டவனாக நடிக்கும் எம்ஜிஆரின் ஸ்டைல் இந்தப் படத்தில் அற்புதமாக அமைந்தது. படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில்  அனைத்துப் பாடல்களும் அதிகம் ரசிக்கப்படும் பாடல்களாக அமைந்தன. அதிலும் விஜயலட்சுமியுடன் எம்ஜிஆர் இணைந்து நடனமாடிய “ஆடலுடன் பாடலைக் கேட்டு...” பாடல் அவருடைய நடனத்திற்காக பெரிதும் ரசிக்கப்பட்டது.ஹிந்தியில்  வெளிவந்து வெற்றி பெற்ற ;சைனா டவுன் என்ற படத்தின் உரிமையை வாங்கி தமிழுக்கு ஏற்றபடி மாற்றி இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டு வெற்றி பெற்றனர்.

காவல்காரன் திரைப்படத்தை எம்ஜிஆர் ரசிகர்களால் மறக்கவே முடியாது. எம்.ஆர்.ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டு தொண்டையில் குண்டடிபட்டு பாதிக்கப்பட்டதால் இந்தப் படம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு அதன் பின் அவர் குணமாகி வந்த பின் எடுத்து முடிக்கப்பட்ட படம். இந்தப் படத்தில்தான் எம்ஜிஆரின் இருவிதமான குரல்களைப் பார்க்கலாம்.அதே சமயம், சட்டமன்றத் தேர்தலிலும் மருத்துமனையிலேயே படுத்திருந்து தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏவாகவும் எம்ஜிஆர் தேர்வானதும் நடந்தது.
கடமை தவறாக போலீஸ்காரராக எம்ஜிஆர் நடித்த இந்தப் படத்தை ரசிகர்கள் அவருடைய குரல் வித்தியாசத்தைப் பார்க்காமல் அவரது குரலை மேலும் ரசிக்க ஆரம்பித்தனர். எம்ஜிஆர் , ஜெயலலிதா மீண்டும் இணைந்து நடித்த இந்தப் படமும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. 1966ம் ஆண்டில் ஆரம்பமான படம் 1968ல் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது ஒரு சிறப்பான வரலாற்றுப் பதிவு. எம்ஜிஆரின் மனம் கவர்ந்த இயக்குனரான ப.நீலகண்டன் மீண்டும் ஒரு சிறப்பான எம்ஜிஆர் படத்தைக் கொடுத்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்த பாடல்கள். வாலியின் வைர வரிகளில் 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது...பாடல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு சிச்சுவேஷன் பாடலாக அமைந்து அற்புதமான அரங்கில் படமாக்கப்பட்டு இன்று வரை இசை ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: எம்.ஜி.ஆர்-ன் சிறந்த சாதனை படங்கள்

Post by anuradha on Sun 2 Aug 2015 - 12:21

அன்பே வாஏவிஎம் நிறுவனத்திற்காக எம்ஜிஆர் நடித்த ஒரே படம். பல படங்களின் ஏழைப் பங்காளனாக நடித்த எம்ஜிஆர் இந்தப் படத்தில் ஒரு பணக்காரக் கதாபாத்திரத்தில் நடித்தார். மிகவும் ஜனரஞ்சகமான படமாக உருவான இந்தப் படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அமோக வெற்றியைப் பெற்றது.
ஒரு சுவாரசியமான கலகலப்பான காதல் கதை, எம்ஜிஆர், சரோஜதேவி இருவருக்கிடையே காதல் மலர்ந்தாலும் இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். அந்த மோதல் அவர்களை அடிக்கடி பிரித்தும் விடும்.  அதிலிருந்து அவர்கள் மீண்டு எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான் படத்தின் கதை.
எம்ஜிஆரை வைத்து முதன் முறையாக படம் இயக்கிய ஏ.சி.திருலோகச்சந்தர் இந்தப் படத்தை அனைவரும் ரசிக்கும்படியான படமாகக் கொடுத்திருந்தார். குறிப்பாக இந்தப் படத்தில் அவர் படமாக்கிய ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்... பாடல் மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று. எம்ஜிஆர், சரோஜாதேவி ஜோடிக்கு இந்தப் படத்தில் இன்னும் அதிகமான வரவேற்பு கிடைத்தது.ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் நடித்த சரித்திரப் படங்களிலேயே மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம். கடந்த வருடம் கூட டிஜிட்டலில் திரையிடப்பட்டு 100 நாட்களைக் கடந்து ஓடி மகத்தான வசூலை அள்ளியது.எம்ஜிஆர் நடித்த வெளிவந்த மாபெரும் வெற்றிப் படங்களில் மிகவும் முக்கியமான படம  அன்பே வா ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் இன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஒரு நாள் இயக்குனர் A.C. திருலோகசந்தர் அவர்கள், Rock Hudson நடித்த Come September படத்தை பார்த்தார். அந்த படம் ஒரு Romantic Comedy வகைப் படம். இந்த படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்து தமிழிற்கு ஏற்றாற்போல் மாற்றி நாம் ஒரு படத்தை இயக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, அதை தன் ஆஸ்தான கம்பெனியின்முதலாளி திரு. A.V. மெய்யப்ப செட்டியாரிடம் தெரிவித்தாராம். செட்டியாரும், 'சரி, பண்ணலாம். யாரை ஹீரோவா போடலாம்னு இருக்க?' என்று அவர் கேட்க, அவர் ஒரு வித தயக்கத்தோடு 'எம்.ஜி.ஆரை போட்டு படம் பண்ணலாம்னு இருக்கேன்' என்று சொன்னாராம். செட்டியாரோ 'எம்.ஜி.ஆரா? அவர் நமக்கு தோது பட மாட்டாரே? அதுவுமில்லாம இது காதல் & காமெடி கலந்த படம். அவர் இதுக்கு ஒத்துக்குவாருன்னு நினைக்கிறியா?' என்று கேட்க, அதற்க்கு A.C. திருலோக்கோ 'நீங்க அனுமதி மட்டும் கொடுங்க. நான் போய் பேசி பார்கிறேன்' என்று சொன்னார். A.V. மெய்யப்ப செட்டியாரும் அனுமதி கொடுக்க, எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு பறந்தது A.C. திருலோகசந்தரின் கார்.


ராமாவரம் தோட்டத்து வீட்டு ஹாலில் ஏற்கனவே பல தயாரிப்பு கம்பெனி மேனேஜர்களும், இயக்குனர்களும் எம்.ஜி.ஆரை தங்களின் அடுத்த படத்தில் புக் செய்ய காத்துக்கொண்டிருந்தார்கள். A.C.திருலோகசந்தரும் தான் வந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தெரியப்படுத்த சொல்லிவிட்டு, அவரும் தலைவரின் வருகைக்காக காத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர் 'அவர் எங்க இந்தப்பக்கம்? அட்ரஸ் மாறி வந்துட்டாரா?' என்று சொன்னாராம். காரணம், A.V. மெய்யப்ப செட்டியாருக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அதனால் தான் எம்.ஜி.ஆர் அப்படி கேட்டார். சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த எம்.ஜி.ஆர், 'உள்ளே வாங்க' என்று திருலோக்கை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தார். முழு கதையை கேட்ட எம்.ஜி.ஆர் 'கதை நல்லா இருக்கு. ஆனா என் ஆடியன்ஸுக்கு பைட்டு சீன்ஸ் இருந்தா தான் பிடிக்கும். இதுல ஒரு ரெண்டு இடத்துல மட்டும் பைட்டு வைக்கிற மாதிரி திரைக்கதை வைங்க. நாம இந்த படத்தை பண்ணலாம்' என்று சொன்னாராம். அந்த படம் தான் இந்த 'அன்பே வா'.

ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில், எம்எஸ்.விஸ்வநாதன் இசையைமப்பில் இந்தப் படம் ஜனவரி 14, 1966ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி, அசோகன், டிஆர். மகாலிங்கம், நாகேஷ், மனோரமா, முத்துலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
எம்ஜிஆரை வைத்து ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ஒரே படம், எம்ஜிஆரை வைத்து ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய ஒரே படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.

இந்தப் படம் வழக்கமான எம்ஜிஆர் படம் போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட படமாக வெளிவந்தது. பொதுவாக, எம்ஜிஆர் அவருடைய கதாபாத்திரத்தை ஏழைக் கதாபாத்திரமாகவோ, அல்லது மக்களுக்காகப் போராடும் கதாபாத்திரமாகவோகத்தான் வைத்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் அவர் ஒரு பணக்காரராக நடித்திருப்பார். அதோடு, எம்ஜிஆர் படங்களில் இருக்கும் வழக்கமான சென்டிமென்ட்டான தாய், தங்கை, தந்தை சென்டிமென்ட் எதுவுமே படத்தில் கிடையாது.


இந்தப் படத்தில் இடம் பெற்ற ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..பாடலை யாராலும் மறக்கவே முடியாது. கிராஃபிக்ஸ் எல்லாம் இல்லாத காலத்திலேயே ஒரே இடத்திலேயே மிகவும் அழகான ஒரு பாடலைப் படமாக்கியிருந்தார் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர். ஒரே ஒரு ரிக்ஷாவைத்தான் அந்தப் பாடலுக்காக அவர் பயன்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து எம்ஜிஆர், திருலோகச்சந்தரை தனக்காக படம் இயக்கும்படி கேட்டுக் கொண்டும், சிவாஜி நடித்த படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கியதால் எம்ஜிஆரை வைத்து ஒரே ஒரு படத்தைத்தான் அவரால் இயக்க முடிந்தது.
இந்தப் படத்தில் எம்ஜிஆர் வாங்கிய சம்பளம் 3 லட்சம், சரோஜாதேவி வாங்கிய சம்பளம் 90 ஆயிரம் ரூபாய். இப்படத்தின் படப்பிடிப்பு, சிம்லா, ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த முதல் கலர் படம் இதுதான். படத்திற்கான மொத்த செலவு 30 லட்ச ரூபாய், வசூலான தொகையோ 60 லட்ச ரூபாயாம். இந்தப் படத்தை வெள்ளி விழா வரை திரையரங்கில் ஓட்டாததால் ஏவிஎம் நிறுவனத்திற்கும், எம்ஜிஆருக்கும் மனக் கசப்பு வந்து, அதன் பின் அவர் ஏவிஎம் நிறுவனத் தயாரிப்பில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
1966ம் ஆண்டில் மட்டும் எம்ஜிஆர் நடித்த 9 படங்கள் வெளிவந்தன. “பெற்றால்தான் பிள்ளையா, பறக்கும் பாவை, தனிப் பிறவி, தாலி பாக்கியம், முகராசி, சந்திரோதயம், நாடோடி, நான் ஆணையிட்டால், அன்பே வா” ஆகியவைதான் அந்த 9 படங்கள். அதில் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது அன்பே வா படம் மட்டும்தான்.

அன்பே வா படத்தின் கதையும் மிகவும் சுவாரசியமான ஒன்றுதான். மிகப் பெரும் பணக்காரரான எம்ஜிஆர் ஓய்வெடுப்பதற்காக அவருடைய சிம்லா பங்களாவிற்குச் செல்வார். ஆனால், அங்கு அவருடைய பங்களாவின் வேலையாளான நாகேஷ், சரோஜாதேவி குடும்பத்தாரிடம் பணம் வாங்கிக் கொண்டு அந்த பங்களாவை வாடகைக்கு விட்டிருப்பார். தன்னை முதலாளி என்று காட்டிக் கொள்ளாமல், அதே பங்களாவில் மற்றொரு அறையில் எம்ஜிஆர் தங்குவார். அதன் பின் எம்ஜிஆரும், சரோஜாதேவியும் சந்தித்துக் கொள்ள இருவரது சந்திப்புக்களும் மோதலாகவே தொடரும். இருவருக்குள்ளும் காதல் இருந்தாலும், அவர்களது வீண் சண்டையால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமலே இருப்பார்கள். அதன் பின் அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படத்தில் எம்ஜிஆர் காதல் மன்னனாகவே உலா வந்திருப்பார், அதோடு நகைச்சுவையிலும் கலக்கியிருப்பார். அவருக்கு ஈடு கொடுத்து சரோஜா தேவியும் அழகாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் அவருடைய கொஞ்சம் கிளிப் பேச்சு ரசிகர்களை அதிகமாகவே கட்டிப் போட்டது.

நாகேஷ், மனோரமா, டிஆர்.ராமச்சந்திரன், முத்துலட்சுமி ஆகியோரின் நகைச்சுவையும் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.ரஜினிகாந்தை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் இந்தப் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். சிம்லாவின் அழகை ஒளிப்பதிவாளர் மாருதிராஜ் அழகாகப் படமாக்கியிருப்பார். ஆரூர்தாசின் வசனம் இந்தப் படத்தில் குறிப்பிடவேண்டிய ஒன்று.
இந்தப் படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே மிகவும் இனிமையான பாடல்கள். அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்களைப் பாடியிருந்தார்கள். அன்பே வா..அன்று வந்ததும்..., லவ் பேர்ட்ஸ்..., நான் பார்த்ததிலே..., ஏ...நாடோடி..., புதிய வானம்..., ராஜாவின் பார்வை...” ஆகிய இனிமையான பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தன.

இன்று பொன்விழா ஆண்டில் நுழையும் அன்பே வா படம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மட்டும் மறக்க முடியாத படமல்ல, திரையுலக  ரசிகர்களுக்கும் மறக்க முடியாத படம்தான்

சிவாஜிகணேசன் நாயகனாக நடித்த “வீரபாண்டிய கட்ட பொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன்,” போன்ற அருமையான படங்களைத் தயாரித்து இயக்கிய பி.ஆர்.பந்துலு


ஆயிரத்தில் ஒருவன்

 படம் மூலம் எம்ஜிஆருடன் முதன் முறையாக இணைந்து ஒரு மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.

கன்னடத்தில் தன்னால் சின்ன கொம்பே என்ற படத்தில்  அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயலலிதாவை இந்தப் படத்தின் மூலம் எம்ஜிஆரின் நாயகியாக நடிக்க வைத்தார் பந்துலு. அதன் பின் எம்ஜிஆருக்குப் பொருத்தமான ஜோடியாக மாறினார் ஜெயலலிதா.
 தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடியாக நடித்த 28 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தது.அற்புதமான அரங்குகள், மிரள வைக்கும் காட்சிகள் என அந்தக் காலத்திலேயே படத்தை மிகவும் அசத்தலாக எடுத்திருந்தார் பந்துலு. மருத்துவத் தொழில் செய்யும் எம்ஜிஆர் அடிமையாக கன்னித் தீவிற்கு விற்கப்பட அந்தத் தீவை கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றி அந்தத் தீவின் இளவரசியான ஜெயலலிதான மனதிலும் இடம் பிடிக்கிறார். ஆனாலும், தன்னுடைய சொந்த நாட்டைக் காப்பாற்ற கடற் கொள்ளையர்களுடன் பயணப்படுகிறார். அதன் பின் அவர்களிடமும் சிக்கிக் கொண்டு அடிமையாகிறார். தன்னுடைய மக்களைக் காப்பாற்ற அவரும் கடற் கொள்ளையனாகிறான். அதன் பின் அவருடைய லட்சித்தை நிறைவேற்றினாரா என்பதுதான் படத்தின் கதை.
நம்பியார், மனோகர், ராம்தாஸ் போன்றோரின் வில்லத்தனமான நடிப்பும், நாகேஷின் நகைச்சுவை நடிப்பும் படத்தில் பெரிதும் பேசப்பட்டது. ஜெயலலிதாவின் அழகான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்து அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற இந்தப் படம் பெரிதும் உதவியது.
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றுமே முத்து முத்தாக அமைந்தன. குறிப்பாக “ஏன் என்ற கேள்வி...ஒரு அற்புதமான கொள்கைப் பாடலாக அமைந்தது.படத்தின் தலைப்புக்கேற்பவே எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவனாக மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் கோடிகளில் ஒருவராகவும் நிரந்தர இடத்தைப் பிடித்தார்.
எங்க வீட்டுப் பிள்ளை

எம்ஜிஆர் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான எங்க வீட்டுப் பிள்ளை படம் இன்றுடன் 50வது ஆண்டை நிறைவு செய்கிறது. விஜயா கம்பைன்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாணக்யா இயக்கத்தில் விஸ்வநாதன் ராம்மூர்த்தி இசையமைப்பில் உருவான இந்தப் படம்1965ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி வெளிவந்தது.
நாடோடி மன்னன் படத்திற்குப் பிறகு விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், எம்ஜிஆரும் மீண்டும் இணைந்த படம் இது.எம்ஜிஆர், சரோஜாதேவி, ரத்னா, எஸ்.வி.ரங்காராவ், நம்பியார், தங்கவேலு, நாகேஷ், பண்டரிபாய் மற்றும் பலர் நடித்த படம்.
எம்ஜிஆர் நடித்த இரு வேடப் படங்களிலேயே இந்தப் படம் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம். இந்தப் படத்திற்கு முன் எம்ஜிஆர் முதன் முதலாக இரு வேடங்களில் நடித்து வெளிவந்த படம்  நாடோடி மன்னன்  இந்தப் படம் வெளிவந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எம்ஜிஆர் அடுத்து இரு வேடங்களில் நடித்த 'எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளிவந்தது.
தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்து  வெளிவந்து வெற்றி பெற்ற  ராமுடு பீமுடு  படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இந்தப் படத்தைத் தயாரித்தனர்.
இப்படத்தை தயாரிக்க ஆரம்பித்த நேரத்தில்தான் அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடி முடிவு எடுத்திருந்தாராம். அதனால் பல வினியோகஸ்தர்கள் எம்ஜிஆரை வைத்துப் படமெடுக்க வேண்டாமென தயாரிப்பாளரான நாகி ரெட்டியிடம் சொல்லியிருக்கிறார்கள். அதையடுத்து எம்ஜிஆரே படத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
எங்க வீட்டுப் பிள்ளை  திரைப்படம் ஏழு திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியிருக்கிறது. சென்னை நகர வினியோக உரிமையை எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியது.படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்துள்ளார்கள். வாலி, ஆலங்குடி சோமு பாடல்களை எழுதியிருக்கிறார்கள். டி.எம்.சௌந்தர்ராஜன், பி. சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களான, “கண்களும் காவடிச் சிந்தாகட்டும்..., குமரிப் பெண்ணின் உள்ளத்திலே..., மலருக்குத் தென்றல் பகையானால்..., நான் ஆணையிட்டால்..., நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..., பெண் போனாள்...” என இந்தப் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்து இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
எம்ஜிஆர் இந்தப் படத்தில் ராமு - இளங்கோ என்ற இரு வேடங்களில் நடித்திருந்தார். இளங்கோ வீரமான கதாபாத்திரம், ராமு கோழையான கதாபாத்திரம். ஜமீன்தார் குடும்பத்து வாரிசான ராமு ஒரு கோழை. அவரது சொத்துக்களை தாய்மாமனான கஜேந்திரன் (நம்பியார்) நிர்வகித்து வருகிறார். ராமுவை உலகம் தெரியாத அப்பாவியாக வேண்டுமென்றே வளர்க்கிறார் கஜேந்திரன். ராமு தவறு செய்தால் அவரை சவுக்கு கொண்டு அடித்து விடுவார் கஜேந்திரன். தாய்மாமனின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு தப்பிக்கிறார் ராமு. அந்த சந்தர்ப்பத்தில் ராமுவைப் போலவே உருவ ஒற்றுமைகொண்ட தைரியசாலியான இளங்கோ அந்த வீட்டிற்குள் வருகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் இளங்கோ, தன்னை ராமுவாக காட்டிக் கொள்கிறார். ஆனால், கோழையாக இல்லாமல் தைரியசாலியாக கஜேந்திரனை எதிர்த்து நிற்கிறார். அதன் பின் ராமுவும், இளங்கோவும் உடன் பிறந்தவர்கள் என உண்மை தெரிய வர என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சரோஜாதேவி, ரத்னா இரண்டு கதாநாயகிகள் படத்தில், இருவருமே பொருத்தமாக நடித்திருப்பார்கள். அதிலும், சரோஜாதேவியின் கதாபாத்திரம் கொஞ்சம் பணக்காரத் திமிருடன் இருந்தது ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒன்று.நம்பியாரின் வில்லத்தனம், நாகேஷ், தங்கவேலுவின் நகைச்சுவை, பண்டரிபாயின் பாசமான நடிப்பு அனைத்துமே படத்திற்கு பக்கபலமாக அமைந்தது.
பல திரையரங்குகளில் 100 நாட்களையும், சில திரையரங்குகளில் 200க்கும் மேற்பட்ட நாட்களும் ஓடி எம்ஜிஆரை எங்க வீட்டுப் பிள்ளை என பல தாய்மார்களும் அழைக்க இந்தப் படம் காரணமாக அமைந்தது.
எம்ஜிஆரின் இரு வேட நடிப்பில் வெளிவந்த இந்தப் படமும் அவருடைய முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது. ஒரு எம்ஜிஆர் வீர தீரமானவர், மற்றொரு எம்ஜிஆர் கோழை, அப்பாவியானவர், இப்படி இரு  வேடங்களில் எம்ஜிஆர் நடித்து ரசிகர்களை தன் பக்கம் அதிகமாக வசீகரித்தார்.
எம்ஜிஆரின் வர்த்தக ரீதியான படங்களில் இந்தப் படத்தின் வசூலும், வெற்றி விகிதமும் மிகவும் அதிகமான ஒன்று. தெலுங்கில் என்டிஆர் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற 'ராமுடு பீமுடு படமே எங்க வீட்டுப் பிள்ளையாக மாறியது.
தாய்மாமனால் அப்பாவியாக வளர்க்கப்படும் ஒரு எம்ஜிஆர் வீட்டை விட்டு ஓடிப் போக, அந்த இடத்திற்கு தைரியசாலியான மற்றொரு எம்ஜிஆர் வருகிறார். இவர் தாய்மாமனின் கொட்டத்தை அடக்க, கடைசியில் இரண்டு எம்ஜிஆரும் அண்ணன் தம்பிகள்தான் என்பது தெரிய வருகிறது. இடையில் எம்ஜிஆர், சரோஜாதேவி , ரத்னா ஆகியோர காதல், இனிமையான பாடல்கள் என இந்தப் படம் அந்தக் காலத்தில் வெளிவந்த  போது ரசிகர்களின் அதிகமான வரவேற்பைப் பெற்ற படமாக விளங்கியது.
அதன் பின் எத்தனை முறை வெளிவந்தாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வசூலை அள்ளியது. விஸ்வநாதன் ராமமூரத்தி இசையில் ஒவ்வொரு பாடலுமே என்றும் இனியவையாக அமைந்தன.
படகோட்டி

படகோட்டி என்றாலேதரை மேல் பிறக்க வைத்தாய்..., கொடுத்ததெல்லாம் கொடுத்தான், தொட்டால் பூ மலரும்..., பாட்டுக்கு பாட்டெடுத்து...' என்று எம்ஜிஆருக்கு முதன் முறையாக பாடல் எழுத ஆரம்பித்த வாலி தொடர்ந்து எம்ஜிஆரின் ஆஸ்தான பாடலாசிரியாக அமைய இந்தப் படம் காரணமாக அமைந்தது.
இந்தப் படத்தின் பாடல்களை இன்றும் பலரும் கண்ணதாசன்தான் எழுதினாரோ என்று சந்தேகிக்க வைக்கும் அளவிற்கு இந்தப் படத்தின் மூலம் கண்ணதாசனுக்கு அடுத்து வாலிதான் என்று பேச வைத்தது.
எம்ஜிஆர் அப்போது படங்களில் நடிக்கும் போதெல்லாம் எந்தக் கதையில், எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை அதிக கவனத்துடன் செயல்படுத்தினார். அப்படி அவர் இந்த படத்தில் ஏற்று நடித்த மீனவர் கதாபாத்திரத்தின் மூலம் மீனவ மக்களின் மனதில் ஒருவராக இடம் பிடித்தார். மீனவர்களின் வாழ்க்கையில் இந்த அளவிற்கு வேறு எந்தப் படமும் இதுவரை சொன்னதில்லை.
இரு மீனவக் குப்பங்கள், அவர்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் சில கயவர்கள், இரண்டு குப்பத்தையும் சேர்ந்த எம்ஜிஆர் , சரோஜாதேவி இருவருக்குமிடையே காதல் என ஒரு இனிமையான காதல் கதையாகவும் இந்தப் படம் அமைந்தது.
இன்னும் அவருடைய ஆரம்ப காலத்தில் வெளிவந்த
 “மலைக்கள்ளன்,
 அலிபாபாவும் 40 திருடர்களும்,

 குலேபகாவலி”
 ஆகிய படங்களும், அதன் பின் வெளிவந்த
 “மதுரை வீரன்,
தாய்க்குப் பின் தாரம், கருப்பு வெள்ளை மற்றும் கலரில் வெளிவந்து சரித்திர சாதனை படைத்த
 நாடோடி மன்னன்,
 வேட்டைக்காரன்,
 உரிமைக்குரல்,
இதயக்கனி”


போன்ற படங்களும் எம்ஜிஆரின் புகழுக்குரிய படங்கள்.
மேலே சொன்ன படங்கள் மட்டுமல்லாது எம்ஜிஆர் நடித்த மற்ற பல படங்கள் இன்று வரை அவருடைய ரசிகர்களாலும், மற்றவர்களாலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. இன்றைய விஜய், அஜித் முதல் அனைவரும் பயணிக்கும் கமர்ஷியல் பாதையை அன்று அழுத்தமாகப் பதிய வைத்தவர்.
அவர் வகுத்துத் தந்த பாதையில்தான் இன்றைய திரையுலக நாயகர்கள் பயணித்து வருகிறார்கள். இன்று அரசாங்கம் எச்சரிக்கும் புகை பிடித்தல், மது குடித்தல் போன்ற காட்சிகளை அன்றே மக்களின் நலன் கருதி தன்னுடைய நடிப்பில் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டவர். அவருடைய பிறந்த நாளில் அவருடைய சில படங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதிலும் தனி ஆனந்தம் உண்டு.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: எம்.ஜி.ஆர்-ன் சிறந்த சாதனை படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum