சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Yesterday at 14:01

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by Nisha Yesterday at 5:22

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by பானுஷபானா Sat 16 Dec 2017 - 16:13

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

.

மேதைகளின் நகைச்சுவை

View previous topic View next topic Go down

Sticky மேதைகளின் நகைச்சுவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Sep 2015 - 7:43

மூதறிஞர் ராஜாஜி ஒரு முறை சேலம் நகர் மன்றத் தலைவராய் இருந்தார்.ஒரு நகர் மன்றக் கூட்டத்தில்,ஒரு உறுப்பினர் சேலம் சுடுகாட்டுக்கு சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.அது சம்பந்தமாக விவாதம் நடந்தது.ஒரு சிலர் வேண்டும் என்றும் ஒரு சிலர் வேண்டாம் என்றும் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்தனர்.நகராட்சியில் நிதிநிலைமை சரியில்லாதிருந்தது.அதைக் கருத்தில் கொண்டாலும் சுற்று      சுவர் உடனைதேவையில்லை என்பது ராஜாஜியின் எண்ணம்.நிதி நிலை பற்றி வெளியில் சொல்வது சரியாய் இருக்காது என்று அவர் கருதினார்.விவாதம் மிக சூடான நிலையில் அதுவரை அமைதியாய் இருந்த ராஜாஜி தலையிட்டார்.

அவர் சொன்னார்,''சுடுகாட்டுக்கு சுற்று சுவர் தேவையில்லை.''என்ன காரணத்தால் அப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்பதை அறிய அனைவரும் ஆவல் கொண்டனர்.ராஜாஜி தொடர்ந்தார்,''சுடு காட்டுக்கு உள்ளே சென்றவன் வெளியே வரமாட்டான்.வெளியே இருப்பவன் உள்ளே செல்ல விரும்ப மாட்டான்.அப்படி  இருக்க சுற்று சுவர் எதற்கு?''அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.நிதிநிலை பற்றி அறிந்தவர்கள் அந்த சூழலை ராஜாஜி சரி செய்தசாமர்த்தியத்தை எண்ணி வியந்தனர்.

நன்றி ;மேதைகளின் நகைச்சுவை
தென்றல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10508
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மேதைகளின் நகைச்சுவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Sep 2015 - 7:46

கவியரசர் கண்ணதாசன் நகைச்சுவை
----
ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக கவியரசர் கண்ணதாசன் காரில் போய்க் கொண்டிருந்தார்.அவர் பொதுவாக தாமதமாய்த்தான் விழாக்களில் கலந்து கொள்வார்.அன்றும் விழா ஆரம்பிக்கும் தருணம் வந்து விட்டது. ஓட்டுனர் காரை அதி விரைவாக ஓட்டிச் செல்கிறார்.அந்த வேகத்தில் கார் கூட அதிர ஆரம்பிக்கிறது.கவியரசருக்கு வயிறே கலங்குகிறது.

உடனே ஓட்டுனரிடம்,''கொஞ்சம் மெதுவாகப் போகலாமே,''என்றார்.ஆனால் தாமதம் ஆகிறது என்பதனை உணர்ந்த ஓட்டுனர் வேகத்தைக் குறைக்காமலேயேஓட்டினார்.கண்ணதாசன் சற்று கோபமாக,''மெதுவாகப் போ என்று சொன்னேனே?''என்றார்.

ஓட்டுநரோ,''ஐயா,இந்த வேகத்தில் போனால்தான் விழாவுக்குப் போய் சேர முடியும் ,''என்றார்.கவிஞர்,''நான் சொல்வதைக் கேள்.ஒரு கால் மணி நேரம் தாமதமாகப் போனால் கூடப் பரவாயில்லை.பத்து வருடம் முன்னாலேயே போய் விடக் கூடாது,''என்றார் சிரிக்காமலேயே. ஓட்டுனர் உடனடியாக வேகத்தை குறைத்து விட்டார் என்று சொல்லவும் வேண்டுமோ!

நன்றி ;மேதைகளின் நகைச்சுவை
தென்றல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10508
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மேதைகளின் நகைச்சுவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Sep 2015 - 7:49

கலைவாணர் என்.எஸ்.கே நகைச்சுவை 
---
கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுக்கு வானொலியில் பேசஒரு வாய்ப்பு வந்தது.அவரும் நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார்.அப்போது வானொலி இயக்குனர் அவரிடம், அவர் பேசக் கொடுத்திருந்த கையெழுத்துப் பிரதியைக் கையில் வைத்துக்கொண்டு,''இதில் ஒரு வரியை மட்டும் நீங்கள் நீக்க வேண்டியிருக்கும்,''என்றார்.கலைவானரும் விபரம் கேட்க நீக்க வேண்டிய வரியைக் காட்டினார் இயக்குனர்.என்.எஸ்.கே.வாசித்துப் பார்த்தார்.

அதில்,''இந்த வருடத்திலே நீங்க எல்லோரும் சந்தோசமா இருங்க, காமராஜர் சந்தோசமா இருக்காரு!அண்ணா சந்தோசமாக இருக்காரு,''என்று இருந்தது.இயக்குனர் இதில் அண்ணா பற்றிக் குறிப்பிட்ட வரியை மட்டும் நீக்க வேண்டும் என்று கூறினார்.அதற்கான காரணத்தையும் அவர் சொல்ல மறுத்தார்.

உடனேஎன்.எஸ்.கே.முகத்தைகுழந்தைத்தனமாகவைத்துக்கொண்டுசொன்னார்,''ஐயா,வேண்டுமானால் இப்போதே அண்ணா வீட்டுக்குப் போன் பண்ணுங்க.அவர் சந்தோசமா இருக்காரா,இல்லையா என்று கேளுங்க.அவரு சந்தோசமா இல்லாம காய்ச்சலில் படுத்திக் கிடந்தார் என்றால் இந்த வரியை நான் எடுத்து விடுகிறேன்,''கலைவாணர் சொன்ன விதம் அதிகாரியின் மனதை மாற்றியது.இறுதியாக,''நீங்கள் உங்கள் விருப்பப்படியே பேசுங்கள்,''என்று சொன்னார்.

நன்றி ;மேதைகளின் நகைச்சுவை
தென்றல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10508
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மேதைகளின் நகைச்சுவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Sep 2015 - 7:51

இங்கிலாந்தின் பிரதமர்  சர்ச்சில் நகைசுவை 
---
ஒரு முறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சர்ச்சிலும்,இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனும் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள்.ராதாகிருஷ்ணன் கையை சுத்தமாகக் கழுவி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தார்.சர்ச்சில் கரண்டி,முள் கரண்டி ஆகியவற்றை உபயோகித்து சாப்பிட ஆரம்பித்தார்.ராதாகிருஷ்ணன் கையினால் சாப்பிடுவதைப் பார்த்த சர்ச்சில் ''என்ன இது,கரண்டியை உபயோகித்து சாப்பிடுங்க.அதுதான் சுகாதாரமானது.

''என்றார்.உடனே ராதாகிருஷ்ணன், ''இல்லை அய்யா,கைதான் ரொம்ப சுகாதாரமானது.''என்றார்.உடனே சர்ச்சில்,'அது எப்படி?''என்று கேட்க,நமது ஜனாதிபதி சொன்னார்,''கைதான் சுகாதாரமானது.ஏனென்றால்,அதை வேறு யாரும் உபயோகப் படுத்த முடியாது.மேலும் எனது கை சுத்தமாக இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்.உங்களால் உங்கள்  கரண்டி சுத்தமாக இருக்கிறது என்று  உறுதியாகச் சொல்ல முடியுமா?''சர்ச்சில் பதில் சொல்ல முடியாது திகைத்து நின்றார்.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10508
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மேதைகளின் நகைச்சுவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 18 Sep 2015 - 7:53

அறிஞர் பெர்னாட்ஷா நகைச்சுவை 
---
கிண்டல்,கேலி செய்வதில் அறிஞர் பெர்னாட்ஷா அவர்களுக்கு ஈடு யாரும் கிடையாது.அவர் ஒரு சமதர்மவாதி(SOCIALIST).இருந்தாலும் சமதர்ம தத்துவத்தையே கிண்டல் செய்வார்.''முப்பது வயதில் நீ ஒரு சமதர்ம வாதியாக இல்லாவிட்டால் உன்னிடம் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.அதேபோல முப்பது வயதுக்குப் பின்னும் நீ சமதர்மவாதியாகத் தொடர்ந்தால் அப்போதும் உன்னிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று பொருள்''என்று சொன்னவர் அவர்.
ஆங்கிலம் தான் அவருக்குத் தாய்மொழி.அந்த ஆங்கிலம் கூட அவரது கிண்டல்,கேலியிலிருந்து தப்ப முடியவில்லை.ஒரு நாள் ஒரு காகிதத்தில் GHOTI என்று எழுதி பக்கத்திலிருந்த ஆங்கில அறிஞர்களிடம் படிக்கச்சொன் னார்.

ஒருவர் 'கொட்டி' என்றும் இன்னொருவர் 'கோட்டி' என்றும் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரியாக உச்சரித்தார்கள்.இறுதியில் அனைவரும் தவறு என்று கூறிய ஷா அதை FISH என்று உச்சரித்தார்.அனைவரும் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.பின் அவர் ROUGH என்ற வார்த்தையில் GHக்கு என்ன உச்சரிப்பு வரும் என்று கேட்டார்.உடனே அவர்கள்F என்று சொன்னார்கள்.பின் WOMEN என்ற வார்த்தையில் O க்கு என்ன உச்சரிப்பு என்று கேட்க அவர்கள் Iஎன்று சொன்னார்கள்.அடுத்து STATION என்ற வார்த்தையில்TI என்பதை எப்படி உச்சரிப்பது என்று கேட்டார்.அவர்களும் SHஎன்று சொன்னார்கள்.அப்படியானால் இந்த வார்த்தை GHOTIயை நான் ஏன் FISHஎன்று உச்சரித்தால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறீர்கள்?''என்று கேட்டார்.வந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10508
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மேதைகளின் நகைச்சுவை

Post by சே.குமார் on Fri 18 Sep 2015 - 14:39

ரசித்தேன்...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மேதைகளின் நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum