சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Today at 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Today at 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Today at 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Today at 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Today at 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Today at 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Today at 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Today at 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Today at 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Today at 13:05

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 19:03

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Yesterday at 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Yesterday at 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Yesterday at 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Yesterday at 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Yesterday at 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Yesterday at 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Yesterday at 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Yesterday at 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Yesterday at 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Yesterday at 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Yesterday at 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Yesterday at 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Yesterday at 18:03

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar Yesterday at 18:01

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar Yesterday at 18:00

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar Yesterday at 17:59

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar Yesterday at 17:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Wed 18 Oct 2017 - 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

.

குறுந்தொடர் : கொலையாளி யார்?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

Sticky குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Sat 26 Sep 2015 - 20:06


குறுந்தொடர் பகுதி -1 : கொலையாளி யார்? ---- படிக்க கீழே செல்லவும்.

குறுந்தொடர் பகுதி -2 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -3 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -4 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -5 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -6 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -7 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -8 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -9 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -10 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -11 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -12 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி - 13: கொலையாளி யார்?

குறுந்தொடர்: பகுதி - 14. கொலையாளி யார்?

குறுந்தொடர்: பகுதி - 15. கொலையாளி யார்?

குறுந்தொடர்: பகுதி - 16. கொலையாளி யார்?


'பாடி எங்க இருக்கு..?', 'யார் முதலில் பார்த்தது..?' என்ற கேள்வியெல்லாம் கேட்காமல் "அந்தப் பெண் என்ன சொல்றா?" என்ற கேள்வியை சப்-இன்ஸ்பெக்டர் பொன்னம்பலத்திடம் கேட்டபடி காரில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சுகுமாரன், போலீசுக்கே உரிய மிடுக்குடன் இருந்தார். முகத்தில் போலீஸ்காரனுக்கே உரிய கடுமை கலந்திருந்தது.
"மேலதான் சார் இருக்கா?" என்று பவ்யமாய்ச் சொன்ன பொன்னம்பலத்துக்கு சுகுமாரைவிட நான்கைந்து வயது அதிகமிருக்கும். லேசான தொப்பையுடன் இருந்தார்.
"ம்... எதாவது சொன்னாளா?" கேட்டபடி மிடுக்காய் நடந்தார் சுகுமாரன்.
பொன்னம்பலமும் அவருக்கு இணையாக நடந்தபடி "அவகிட்டயிருந்து உருப்படியான தகவல் இல்லை..." என்றார்.
"உங்களுக்கு அவமேல சந்தேகம் இருக்கா?"
"அப்படித் தோணலை சார்... காலையில காபியோட போயிருக்கா... அப்பத்தான் முதலாளி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்திருக்கா..."
"ம்..." 
"அவ சொல்லித்தான் செய்தி வெளிய தெரிஞ்சிருக்கு..."
"ம்..." என்றபடி அந்த அறைக்குள் நுழைந்தார். அங்கே... கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார் தணிகாசலம்... தொழிலதிபர் தணிகாசலம்.
"என்ன வெறியோ தெரியலை... இப்படி கொன்னிருக்காங்க... இன்னும் ஆம்பூலன்ஸ் வரலையா.... பிரான்சிக் ஆட்கள் எங்கே...?"
"ஆம்பூலன்ஸ் இப்ப வந்துரும்... பிரான்சிக் செல்வக்குமார் வந்து கைரேகையெல்லாம் எடுத்துக்கிட்டுப் பொயிட்டார் சார்.."
"சரி... ஆக வேண்டிய காரியத்தை சீக்கிரம் பாருங்க... இவரோட குடும்பத்துக்கு சொல்லியாச்சா?"
"சொல்லியாச்சு சார்..."
"கிளம்பிட்டாங்களாமா?"
"பையனும் பொண்ணுந்தான்... வந்துக்கிட்டு இருக்காங்க..."
"மனைவி...?"
"இல்லையாம் சார்..."
"இல்லைன்னா இறந்துட்டாங்களா... இல்ல...?"
"சரியான விவரம் தெரியலை சார்... இவரோட பசங்க வந்தாத்தான் தெரியும்..."
"ம்... நீங்க மற்ற வேலைகளைப் பாருங்க... நான் அந்தப் பொண்ணைப் பார்த்துட்டு வாறேன்..." என பொன்னம்பலத்தை அனுப்பிவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தார்.
ஊட்டிக் குளிரிலும் வியர்த்துப் போய் கண்ணீரோடு அமர்ந்திருந்த அந்தப் பெண் இவரைப் பார்த்ததும் பயத்தோடு எழுந்து சுவரோடு ஒண்டினாள். சுகுமாரன் தனது போலீஸ் பார்வையை அவள் மீது ஓடவிட்டார். அவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் முப்பத்தைந்து வயதிருக்கும். முகத்தில் முத்து முத்தாய் வேர்வை... கழுத்துப் பகுதியிலும் வியர்த்திருக்க...அந்தக் கோலத்திலும் அழகாகவே இருந்தாள். அவளது அசரடிக்கும் இளமையில் ஒரு கணம் தன்னை இழுந்தவர் சுதாரித்து கட்டுக்குள் வந்தார். அவரோட மனசுக்குள் இவளுக்கும் அவருக்கும் ஏதாச்சும்...? என்ற வினா எழும்ப 'சேச்சே.... சந்தேகப் பார்வையை எல்லா இடத்திலும் வைக்கக் கூடாது' என வீசிவிட்டு "இங்க வா..." என்றார்.
அருகே வந்து நின்றவள் அழுக ஆரம்பித்தாள். "எதுக்கு அழுகுறே...? அப்ப நீதான் கொன்னியா?" 
"இ....இல்லங்க... சார்..." பதறினாள்.
"அப்ப அழுகாம கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும்... சரியா..?"
"ம்..." தலையாட்டினாள்.
"எனக்கு உண்மையான பதில் வேணும்..." அவளை முறைத்துப் பார்த்தபடி அழுத்தமாய்ச் சொன்னார் சுகுமாரன்.  
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.


Last edited by சே.குமார் on Tue 29 Dec 2015 - 17:31; edited 13 times in total
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Nisha on Sun 27 Sep 2015 - 1:34

ஆஹா! ஆஹா! 

அசத்தல் குமார்!@ அடுத்த  கிரைம் தொடர் ஆரம்பித்தாகி விட்டதா? மிக அருமையான ஆரம்பம்,  கதைகேற்ப திரில்லாய் கத்தியும் இரத்தமுமா படம்.  கலகலக்க ஆரம்பிச்சிடுச்சிங்க... அடுத்து என்ன நடக்கும் என ஆர்வத்தோட இருக்கும் எங்களை ரெம்ப நாள் காக்க வைக்காமல்  தொடரணும். 

அப்புறம்  முடிக்கும் போது கொஞ்சம் சஸ்பென்ஸ் வைத்து அப்படியா-.. இப்படியா... எப்படியும் இருக்குமாவெனவெல்லாம் எங்க முடியை பிய்ச்சுக்க வைக்கணும்.  சொல்லிட்டேன்பா.  கூட்டணி


அப்புறம் ரெம்பமக்கியமான சந்தேகம். கத்தியில் இருப்பது தக்காளி சாஸ் தானேப்பா! 


போட்டுக்கட்டுரை இன்னும்  படிக்கல்லை. இந்த கதைக்கும் நான் பின்னூட்டமிட்டிருக்கும் நேரம் பாருங்க..  இப்பத்தான் வந்தேன்.  இனி  கொஞ்சம் பிசிதான். முடியும் போது படித்திடுவேன்பா. மன்னித்து விடுங்க..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by *சம்ஸ் on Sun 27 Sep 2015 - 8:24

ஆஹா அருமையான ஓர் ஆரம்பம் சார்.

கதை ஆரம்பமே அருமையாக உள்ளது என்ன நடந்திருக்கும் கொலைக்கு காரணம் என்ன கொலையாளி யார் என்ற வினாக்கள் எழும்புகிறது சிக்கலுக்குள்ளும் ஒரு காதல் பார்வையா? நல்லாத்தான் உள்ளதது தொடருங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி - 2. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Mon 28 Sep 2015 - 6:24

குறுந்தொடர்: பகுதி - 2. கொலையாளி யார்?


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர் சுகுமாறன்.


பகுதி -1 படிக்க கொலையாளி யார்?

இனி...

"எனக்கு உண்மையான பதில் வேணும்..." அவளை முறைத்துப் பார்த்தபடி அழுத்தமாய்ச் சொன்னார் சுகுமாரன்.  
"ம்..."
"உம் பேரு என்ன?"
"லதா"
"லதா.... ம்.. லதாதானா... இல்ல ஹேமலதா, சாருலதா இந்த மாதிரி..."
"லதாதான்..."
"கல்யாணம் ஆயிடுச்சா..?"
"ம்.."
"புருஷனுக்கு என்ன வேலை..?"
"பெயிண்ட் மேஸ்திரி..."
"பிள்ளைங்க...?"
"ஒரு பையன் ரெண்டாவது படிக்கிறான்..."
"சரி... நீ இங்க எத்தனை வருசமா வேலை பாக்குறே...?"
"ரெண்டு வருசமா?"
"ம்... பகல்ல மட்டும் வருவியா... இல்ல ராத்திரியில..?"
"ஆறுமணிக்கெல்லாம் வீட்டுக்குப் பொயிட்டு காலையில ஆறுமணிக்குத்தான் வருவேன்.... இங்க தங்க மாட்டேன்..."
"இன்னைக்கும் ஆறு மணிக்குத்தான் வந்தியா?"
"ம்..."
"வந்தோடனே கொலை செஞ்சி கிடக்கதைப் பார்த்தியா?"
"இல்ல... காபி போட்டுக்கிட்டு போயி ஐயாவை எழுப்புவேன்... அது மாதிரித்தான் இன்னைக்கும் போனேன்... அங்கே ஐயா... ஐயா..." அழுக ஆரம்பித்தாள்.
அவள் அடங்கும் வரை அமைதி காத்தவர், "இவரு மதுரைதானே... இங்க அடிக்கடி வருவாரா?" என்றார்.
"மாசத்துக்கு மூணு டைம் வருவாரு... ரெண்டு மூணு நாள் இருப்பாரு... அப்ப மட்டும்தான் எனக்கு வேலை... சம்பளமும் நிறையக் கொடுப்பாரு.... அதான் நான் இந்த வேலைக்கு ஒத்துக்கிட்டேன்..."
"ம்... எப்ப வருவேன்னு உனக்குச் சொல்லுவாரா..?"
"இல்ல.... அவரு வர்றதுக்கு முதல் நாள் ரத்தினண்ணன் போன் பண்ணிச் சொல்லும்..."
"அதாரு ரெத்தினம்..."
"இங்க வாட்ச்மேனா இருக்கு..."
"ம்... ஆளு எப்படி...?"
"யாரு...?"
"அந்த ரெத்தினம்..."
"ரொம்ப நல்ல மனுசன்..."
"சரி... இருக்கட்டும்... நல்லவனா கெட்டவனான்னு நான் பாத்துக்கிறேன்,, உங்க ஐயா இங்க வர்றப்போ யாராலயும் பிரச்சினை..?"
"அப்படியெல்லாம் தெரியலை..."
"இங்க எதுக்கு வர்றாரு... பொண்ணுங்க கூட..."
"அதெல்லாம் இல்லை.." அவசரமாக மறுத்தாள்.
"அப்ப குடி..."
"ம்... அதிகம்...."
"அவரு மட்டுமா?"
"இல்ல கொஞ்சம் பிரண்ட்ஸ் வருவாங்க... எல்லாரும் எல்லா நேரமும் வரமாட்டாக... டாக்டர் சிவராமன் மட்டும் பெரும்பாலும் இங்கயே இருப்பார்..."
"ம்... அப்ப சிவராமன் கொன்னிருப்பாரா...?"
(தொடரும்)

-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by *சம்ஸ் on Mon 28 Sep 2015 - 8:06

”ம்...” சுவரசியமாக செல்கிறது கதை ஆர்வத்தேடு அடுத்தடுத்த வரிகளுக்கு செல்கிறது விழிகள். மனசு ஏக்கத்துடன் தொடர்கிறது கதையின் முழுவதையும் அறிந்திட,அடுத்த தொடரை சீக்கிரம் தாருங்கள் சார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Mon 28 Sep 2015 - 17:24

Nisha wrote:ஆஹா! ஆஹா! 

அசத்தல் குமார்!@ அடுத்த  கிரைம் தொடர் ஆரம்பித்தாகி விட்டதா? மிக அருமையான ஆரம்பம்,  கதைகேற்ப திரில்லாய் கத்தியும் இரத்தமுமா படம்.  கலகலக்க ஆரம்பிச்சிடுச்சிங்க... அடுத்து என்ன நடக்கும் என ஆர்வத்தோட இருக்கும் எங்களை ரெம்ப நாள் காக்க வைக்காமல்  தொடரணும். 

அப்புறம்  முடிக்கும் போது கொஞ்சம் சஸ்பென்ஸ் வைத்து அப்படியா-.. இப்படியா... எப்படியும் இருக்குமாவெனவெல்லாம் எங்க முடியை பிய்ச்சுக்க வைக்கணும்.  சொல்லிட்டேன்பா.  கூட்டணி


அப்புறம் ரெம்பமக்கியமான சந்தேகம். கத்தியில் இருப்பது தக்காளி சாஸ் தானேப்பா! 


போட்டுக்கட்டுரை இன்னும்  படிக்கல்லை. இந்த கதைக்கும் நான் பின்னூட்டமிட்டிருக்கும் நேரம் பாருங்க..  இப்பத்தான் வந்தேன்.  இனி  கொஞ்சம் பிசிதான். முடியும் போது படித்திடுவேன்பா. மன்னித்து விடுங்க..!
வாங்க அக்கா...
தங்கள் கருத்துக்கு நன்றி.
இது பாதி எழுதி வைத்த கதை... கிரைம் கதை கேட்டதால் போட்டாச்சு... இனி என்ன பிரச்சினைன்னா மீதியையும் எழுதணுமே... :(

முடிவு சஸ்பென்ஸாவா... முடிவே எப்படி எழுதுறதுன்னு சஸ்பென்ஸ்தான் போங்க...

முதலில் வேலை  எல்லாம் முடிங்க... கை பாத்துக்கங்க... அப்புறம் வாசிங்க... இதுக்கெல்லாம் மன்னிப்பு எதற்கு?
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Mon 28 Sep 2015 - 17:26

*சம்ஸ் wrote:ஆஹா அருமையான ஓர் ஆரம்பம் சார்.

கதை ஆரம்பமே அருமையாக உள்ளது என்ன நடந்திருக்கும் கொலைக்கு காரணம் என்ன கொலையாளி யார் என்ற வினாக்கள் எழும்புகிறது சிக்கலுக்குள்ளும் ஒரு காதல் பார்வையா? நல்லாத்தான் உள்ளதது தொடருங்கள்.
வாங்க சம்ஸ்...

இந்த சார்... மோரெல்லாம் வேண்டாம்.... பேரைச் சொல்லியே கூப்பிடலாம்... 
ஆஹா... இதுக்குள்ள ஒரு காதலையும் கொண்டாந்து இன்னும் கொஞ்சம் இழுக்கலாமோ?

கருத்துக்கு நன்றி நண்பரே...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Mon 28 Sep 2015 - 17:28

*சம்ஸ் wrote:”ம்...” சுவரசியமாக செல்கிறது கதை ஆர்வத்தேடு அடுத்தடுத்த வரிகளுக்கு செல்கிறது விழிகள். மனசு ஏக்கத்துடன் தொடர்கிறது கதையின் முழுவதையும் அறிந்திட,அடுத்த தொடரை சீக்கிரம் தாருங்கள் சார்.

வாங்க சம்ஸ்...
தங்கள் வாசிப்பிற்கும் கருத்துக்கும் நன்றி.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Nisha on Mon 28 Sep 2015 - 17:33

சே.குமார் wrote:
*சம்ஸ் wrote:ஆஹா அருமையான ஓர் ஆரம்பம் சார்.

கதை ஆரம்பமே அருமையாக உள்ளது என்ன நடந்திருக்கும் கொலைக்கு காரணம் என்ன கொலையாளி யார் என்ற வினாக்கள் எழும்புகிறது சிக்கலுக்குள்ளும் ஒரு காதல் பார்வையா? நல்லாத்தான் உள்ளதது தொடருங்கள்.
வாங்க சம்ஸ்...

இந்த சார்... மோரெல்லாம் வேண்டாம்.... பேரைச் சொல்லியே கூப்பிடலாம்... 
ஆஹா... இதுக்குள்ள ஒரு காதலையும் கொண்டாந்து இன்னும் கொஞ்சம் இழுக்கலாமோ?

கருத்துக்கு நன்றி நண்பரே...

அப்படி  கூட செய்யலாம்ல.  குறுங்கதை நெடுங்கதையாகி  விடும்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Nisha on Mon 28 Sep 2015 - 17:35

இந்த  பொலிஸ்காரங்களுக்கு ஒரு கொலை  நடந்தால்   பார்க்கிறவங்க எல்லாம் குற்றவாளியாகத்தான் தெரிவாங்க போலவே@
பாவம் அந்த சிவராமன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Mon 28 Sep 2015 - 17:50

Nisha wrote:
சே.குமார் wrote:
*சம்ஸ் wrote:ஆஹா அருமையான ஓர் ஆரம்பம் சார்.

கதை ஆரம்பமே அருமையாக உள்ளது என்ன நடந்திருக்கும் கொலைக்கு காரணம் என்ன கொலையாளி யார் என்ற வினாக்கள் எழும்புகிறது சிக்கலுக்குள்ளும் ஒரு காதல் பார்வையா? நல்லாத்தான் உள்ளதது தொடருங்கள்.
வாங்க சம்ஸ்...

இந்த சார்... மோரெல்லாம் வேண்டாம்.... பேரைச் சொல்லியே கூப்பிடலாம்... 
ஆஹா... இதுக்குள்ள ஒரு காதலையும் கொண்டாந்து இன்னும் கொஞ்சம் இழுக்கலாமோ?

கருத்துக்கு நன்றி நண்பரே...

அப்படி  கூட செய்யலாம்ல.  குறுங்கதை நெடுங்கதையாகி  விடும்ல!
மறுபடியும் ஒரு நெடுங்கதையா? ஆத்தாடி... ஆளை விடுங்க அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Mon 28 Sep 2015 - 17:52

Nisha wrote:இந்த  பொலிஸ்காரங்களுக்கு ஒரு கொலை  நடந்தால்   பார்க்கிறவங்க எல்லாம் குற்றவாளியாகத்தான் தெரிவாங்க போலவே@
பாவம் அந்த சிவராமன்.

அவருக்கு தெரியிறாங்களோ இல்லையோ நமக்குத் தெரியணும்... அப்பத்தானே இழுக்கலாம்... ஹி...ஹி...
இனி அதுல இன்ஸ்பெக்டரோட குடும்பத்தையும் கொண்டாந்து சம்ஸ் சொன்ன மாதிரி ஒரு காதல் கதை ஓடவிட்டா என்னன்னு தோணுது அக்கா???
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Nisha on Mon 28 Sep 2015 - 17:57

ஹாஹா@ நடத்துங்க நடத்துங்க.. காதல் ரொமான்ஸ் இருந்தால் தான் கதை சூடு பிடிக்கும் போல..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Mon 28 Sep 2015 - 21:16

Nisha wrote: ஹாஹா@ நடத்துங்க நடத்துங்க.. காதல் ரொமான்ஸ் இருந்தால் தான்  கதை சூடு பிடிக்கும் போல..!


அது இல்லாமல் 5,6 பகுதியில் முடிக்க எண்ணம் அக்கா...
அடுத்தது காதல் கதையா எழுதலாம்...
கல்கி போட்டிக்கு எழுதி அனுப்பிட்டேன் அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி - 3. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Sat 10 Oct 2015 - 19:16

குறுந்தொடர்: பகுதி - 3. கொலையாளி யார்?முன்கதைதொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். அவளிடம் விசாரிக்கும் போது இரண்டு பேரைப் பற்றி அறிந்து அவர்கள் கொலை பண்ணியிருக்கலாமா என சந்தேகிக்கிறார்.


பகுதி -1 படிக்க கொலையாளி யார்?


பகுதி -2 படிக்க கொலையாளி யார்?


இனி..."ம்... அப்ப சிவராமன் கொன்னிருப்பாரா...?"
"ஐய்யய்யோ... அவரு ரொம்ப நல்லவரு... நேத்து அவரு இங்க வரலை சார்..."
"சிவராமன் கொன்னிருப்பாரான்னு கேட்டா நல்லவருன்னும் நேற்று வரலைன்னும் சர்ட்டிபிகேட் கொடுக்கிறே..?"
"இல்ல சார்... ரொம்ப நல்ல டாக்டர்... எல்லாருக்கும் உதவி செய்வாரு... ஐயா வரும் போதெல்லாம் அவரு இங்க தினம் வருவாரு... நேத்து வரலை... ஐயா கூட சாப்பிடும் போது சிவராமனுக்கு இன்னைக்கு ஏதோ முக்கியமான ஆபரேசனாம்... அதான் வரலையாம்ன்னு சொன்னாங்க..."
"ம்... சரி... எல்லாருக்கும் உதவுவாருதானே... அப்ப யாருக்கு உதவ இந்தக் கொலையை பண்ணுனாரு... கண்டிப்பாக உனக்கு தெரிஞ்சிருக்கணுமே... டாக்டர்ல அதான் ரொம்ப கிளியரா செஞ்சிட்டுப் போயிருக்கார்... இல்லையா... ஆமா உனக்கு இதுல என்ன பங்கு...?"
"சார்... என்ன சார் திரும்ப திரும்ப அதுக்கே வாறீங்க... எம்புள்ள மேல சத்தியமா இது எனக்குத் தெரிஞ்சி நடக்கலை... போலீஸ்காரங்க எங்களை மாதிரி சாதாரண ஆளுங்கக்கிட்டதான் மாத்தி மாத்தி கேப்பீங்க... இந்தக் கேசை முடிக்கணுமின்னா என்னையவே கொலைகாரி ஆக்கிடுவீங்க... உண்மையிலேயே டாக்டர் ரொம்ப நல்லவரு... அவரு பண்ணியிருக்கமாட்டாரு... யாரு எதுக்காக பண்ணுனாங்கன்னு எனக்குத் தெரியாது சார்... காசுக்காக கழுத்தறுக்கிற சாதியில்லை சார் எங்க சாதி..." இதுவரை பயந்து பயந்து பேசியவள் உனக்கென்ன பங்குன்னு கேட்டதும் பொரிந்து தள்ளினாள்.
"சரி... சரி... எதுக்கு இப்ப கோபப்படுறே... அவரு நல்லவருன்னு சொல்லிட்டே... நல்லவரா... கெட்டவரான்னு நான் விசாரிச்சிக்கிறேன்... ஆமா அப்புறம் ஒரு விஷயம் கேள்விப்பட்டேனே உண்மையா...?" மெதுவாக கொக்கியைப் போட்டார் சுகுமாறன்.
"எ...என்ன சார்?" கலவரமாய்க் கேட்டார்.
"உனக்கும் உங்க ஐயாவுக்கும் ஒரு இதுன்னு கேள்விப்பட்டேனே.... உண்மையா?"
"சார்..." கத்தினாள்.
"இங்கபாரு.... போலீசுகிட்ட மறைச்சி உண்மை தெரிய வந்தா என்னாகும் தெரியுமா? சும்மா சொல்லு... நீயும் அழகா இளமையோட இருக்கே... அவருக்கும் மனைவி இல்லை.... கூட்டிக் கழிச்சிப் பார்த்தா... " 
"கூட்டிக் கழிச்சி வகுத்தெல்லாம் பாக்காதீங்க சார்... நாங்க ஏழைங்க.. வயித்துப் பொழப்புக்காக வேலைக்கு வர்றோம்... கெட்டுப் போயித்தான் சாப்பிடணுமின்னு இல்லை... அந்தச் சாப்பாட்டை சாப்பிடுறதுக்கு மலத்தை திங்கலாம் சார்... அவரு மதுரையில எப்படின்னு தெரியலை... இங்க வர்ற மூணு நாளும் சத்தியவான் சார்... வேலைக்கு வர்ற பொண்ணுதானேன்னு இல்லாம மகளாட்டம் நினைப்பாரு சார்... அவருக்கும் வயசுக்கு வந்த பொண்ணு இருக்கா... இங்க கூட வந்திருக்கு... நானும் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை.... அவரும் அப்படிப்பட்ட ஆளில்லை..." படக்கென்று சொன்னாள்.
அவளின் முகத்தில் பயத்திற்கான அறிகுறி கொஞ்சமும் இல்லை.. ஆரம்பத்தில் பயந்து பயந்து பேசியவள் அவளை தவறானவள் என்று சொன்னபோது ஆவேசமாகப் பேசினாள். இவள் செய்திருக்கவோ அல்லது யார் செய்தார்கள் என்பதை அறிந்திருக்கவோ மாட்டாள் என்று நினைத்தவர் "எப்பக் கூப்பிட்டாலும் ஸ்டேசனுக்கு வரணும்... உம்புருஷனையும் கூட்டிக்கிட்டு வரணும்... சரியா...?" என்று அவளிடம் சொல்லிவிட்டு சுகுமாரன் வெளியில் வந்தார்.
'அன்புள்ள மன்னவனே... என் ஆசைக் காதலனே...' என அவரின் செல்பேசி அழைக்க, எடுத்து "என்ன புவி.." என்றார். எதிர்முனை ஏதோ சொல்ல "ஓ அப்படியா... என்னைய பேசச் சொன்னாங்களா..? சரி நான் மாமாகிட்ட பேசிக்கிறேன்..." என்றார்.
எதிர்முனையில் புவனா ஏதோ கேட்க, "என்ன... சாப்பாடா... இல்லம்மா... கொஞ்சம் லேட்டாகும்மா... ஒரு மர்டர் கேஸ் குட்டிம்மா... நான் ஸ்பாட்லதான் இருக்கேன்... செத்தது ஒரு பிஸினஸ்மேன்... கொஞ்ச நேரத்துல லோக்கல் சேனல்ல செய்தி வரும்... பாத்துக்க... இப்ப கொஞ்சம் பிஸி... அப்புறம் கூப்பிடுறேன்... பை..." என்றபடி போனை கட் செய்தவரை எதிர்க்கொண்டார் பொன்னம்பலம்.

"என்ன... சொல்லுங்க...?" என்றார்.
"சார்... ஆம்பூலன்ஸ் வந்திருச்சு..." என்றார் மெதுவாக.
"சரி... ஆக வேண்டியதைப் பாருங்க.... இவரோட பசங்க வந்த போலீஸ் ஸ்டேசனுக்கு வரச்சொல்லி கான்ஸ்டபிள்ஸ்க்கிட்ட சொல்லிட்டுப் போங்க... அந்தப் பொண்ணு செய்திருக்க வாய்ப்பில்லைன்னு தோணுது.... தேவைப்பட்டா விசாரணைக்கு கூப்பிடுவோம்ன்னு சொல்லியிருக்கேன்... அதையே சொல்லி அனுப்பிடுங்க... அப்புறம் அவ ரெண்டு பேரு சொன்னா... அது... ம்ம்ம்ம்.... ரெ... ரெத்... ம்... ரெத்தினம்..."
"அவன் வாட்ச் மேன் சார்.. நான் விசாரிச்ச வரை அந்தப் பொண்ணு மாதிரித்தான் இவனும் சொல்றான்"
"ம்... அவனையும்... அப்புறம் இன்னொருத்தர் டாக்டர்........ பேரு கூட.... சி..... சிவ....ராமன்..ஆங்... சிவராமன்... இவங்க ரெண்டு பேரையும் விசாரிக்கணும்... ஆமா அவனுக்கிட்ட விசாரிச்சீங்களா...?"
"ஆமா சார்... அவன் பொய் சொல்ற மாதிரி தெரியலை... டாக்டர் நல்லவருன்னு சொல்றான்... இருந்தாலும் நீங்களும் விசாரிச்சிருங்க சார்... நீங்க விசாரிக்கிற விதம் வேற மாதிரி இருக்கும்ல்ல..."
"என்னத்தை சொல்லப் போறான்... உங்ககிட்ட சொன்னதைத்தான் எங்கிட்டயும் சொல்வான்... இந்தக் கேஸ் நம்மளை அலைய வைக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்... ரொம்ப பிளானா பண்ணியிருக்காங்க... சரி... சரி... அவனைக் கூப்பிடுங்க..."
"இங்கதான் சார் இருந்தான்... இந்தாப் பார்க்கிறேன்..." என்றபோது ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து பதட்டமாய் இறங்கிய நடுத்தர வயது வழுக்கைத் தலை மனிதர்  வேகமாக உள்ளே வந்தார்.
"அலோ சார்... யார் நீங்க... அவருக்கு உறவா?" பொன்னம்பலம் அவரிடம் கேட்டார்.
"சார்... ஐ ஆம் டாக்டர் சிவராமன்"
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by *சம்ஸ் on Mon 12 Oct 2015 - 8:27

ஆஹா! இன்னும் இன்னும் ஆர்வத்தை தூண்டுகிறது  கதை ,கொலையாளி யார் என்று அறிவதைவிட கதையின் கதாப்பாத்திரங்கள்  நகர்வுகள் கற்பனை வளம், சுவாரசியம், என்று மெருகூட்டி  அருமையாக செல்கிறது.   தொடருங்கள் அடுத்த பாகம் படிக்க ஆர்வத்துடன் நான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Nisha on Mon 12 Oct 2015 - 9:49

திரில் கதைக்கு ஏற்ப  திரில்லா கொண்டு போகின்றீர்கள். ஆமாம் யாருப்பா கொலையாளி? 
சீக்கிரமாக சொல்லிருங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி - 4. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Thu 15 Oct 2015 - 13:28

குறுந்தொடர்: பகுதி - 4. கொலையாளி யார்?"சார்... ஐ ஆம் டாக்டர் சிவராமன்"


"ஓ... உங்களைப் பார்த்திருக்கிறேன்னு நினக்கிறேன்?"  என்றார் சுகுமாரன்.
"பார்த்திருக்கலாம் சார்..."
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..?
"சொல்லுங்க..."
"உங்க நண்பர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்..."
"ம்... எதுக்காக சார் அவரைக் கொல்லணும்...?"
"ஐ டோண்ட் நோ டாக்டர்... பட்... திஸ் ஈஸ் மர்டர்..."
"அவருக்கு எதிரிங்கன்னு யாருமில்லையே..." 
"ஏன் எதிரிங்கதான் பண்ணனுமா... பிரண்ட்சே கொலை பண்ணியிருக்கலாம் இல்லையா?" குதர்க்கமாய்க் கேட்டார்.
"சேச்சே... இங்க அவருக்கு பிரண்ட்ஸ் அதிகமில்லை சார்.. கொஞ்சப் பேர்தான்... அதுவும் சொசைட்டியில பெரிய ஆளுங்க... நான் மட்டும்தான் அடிக்கடி வருவேன். மத்தவங்க எப்பவாச்சும் வருவாங்க... அவரு வந்து தங்குறதே ரெண்டு மூணு நாள்தான்..."
"ஆமா... மாசத்துல மூணு நாள் இங்க வந்து தங்குறதுங்கிறது எதுக்காக... அந்த மூணு நாள்ல இங்க என்ன பண்றார்... ஒரு பிஸினெஸ்மேன் மாசத்துல மூணு நாள் ரெஸ்ட் எடுப்பாரா...? இப்படி நிறைய விஷயங்கள் எனக்கு இடிக்குது... உங்களை மாதிரி ஆளுங்க சொன்னாத்தான் தெரியும்... எதுக்காக இங்க வர்றாரு...?"
"சார்... எனக்கு நேட்டிவ் மதுரைதான்... ஸ்கூல் லைப்பெல்லாம் அங்கதான்... நானும் அவரும் கிளாஸ் மெட்ஸ்... திக் பிரண்ட்ஸ்... அப்புறம் அப்பா தொழில் சம்பந்தமா இங்க வந்து இங்கிட்டே செட்டிலாயிட்டாலும் எங்களுக்குள்ள நல்ல பிரண்ட்ஷிப்... அப்புறம் அவர் பெரிய பிஸினஸ்மேன்... நான் டாக்டர்ன்னு வாழ்க்கை எங்களை மேல கொண்டு போயி நிறுத்திருச்சு... இங்க ஒரு தோட்டம் வேணுமின்னு சொன்னப்போ அப்பாதான் அவருக்கு இந்த தோட்டத்தை வாங்கிக் கொடுத்தார். இந்த வீடு அவரே பாத்துப் பாத்து கட்டினார்... மூணு நாள் ரெஸ்ட்டுக்குத்தான் வர்றேன்னு சொல்வார்... வேற எதுவும் சொல்ல மாட்டார்... எப்பவும் பிஸினஸ்தான்... இங்க இருக்கும் போதும் போன்ல பேசிக்கிட்டேதான் இருப்பார்... அவரோட பிஸினஸ் பக்கம் எனக்கு எதுவும் ரொம்பத் தெரியாது சார்... என்னோட தொழிலை அவரும் அவரோட தொழிலை நானும் ரொம்ப ஆழமாத் தெரிஞ்சி வச்சிக்கலை..."
"ம்...சரி... ஆமா நீங்க நேத்து வந்தீங்களா?"
"இல்லை... சார்..."


"என்னங்க அடிக்கடி வர்ற ஆளு நேத்து மட்டும் ஏன் வரலை... முன் கூட்டியே உங்களுக்கு விவரம் தெரியுமா?"
"இன்ஸ்பெக்டர்... " என்று கத்தியவர் "நீங்க என்னைய சந்தேகப்படுறீங்களா?" என்றார் கோபமாய்.
"சார்... நீங்க செஞ்சீங்கன்னு சொல்லலை.... எங்களோட பார்வை எல்லார் மேலயும் ஒரே மாதிரித்தான் சார் பாயும்... அது எங்க தொழில்... எங்கயாவது நமக்குத் தேவையானது கிடைக்காதான்னு யோசிக்கிறதால வர்ற கேள்வி இது... இதுக்குப் பேர் சந்தேகம்ன்னா அப்படியே வச்சிக்கங்க..."
"நேத்து எனக்கு ஒரு முக்கியமான ஆபரேசன்... டாக்டர் பாலமுரளி ஆஸ்பத்திரியில... அங்க பொயிட்டு மிட்நைட்டுத்தான் வீட்டுக்குப் போனேன்... அதனாலதான் இங்க வரலை..."
"ஆமா... நேத்து போன்ல பேசினீங்களா... இல்லையா?"
"ஆபரேசன் தியேட்டருக்குள்ள போறதுக்கு முன்னால பேசினேன்... எப்பவும் போல சந்தோஷமாப் பேசினார். இன்னைக்கு சாயந்தரம் வர்றேன்னு சொன்னேன்... ஆனா அதுக்குள்ள யாரோ கொன்னுட்டாங்கன்னு கேள்விப்பட்டு பதறி அடிச்சி ஓடியார மாதிரி ஆயிடுச்சு..."
"ஆமா கேக்க மறந்துட்டேன்... உங்களுக்கு யார் சொன்னா? வாட்ச்மேன்... வேலைக்காரப் பெண்..."
"என்ன இன்ஸ்பெக்டர்... நியூஸ் லோக்கல் சானல்ல வந்தாச்சு... இப்ப மீடியாதான் உடனே போட்டுடுறாங்களே... அதுல பார்த்துட்டுத்தான் ஓடியாந்தேன்... அப்பத்தான் வாட்ச்மேனும் கூப்பிட்டான்..."
"யாருய்யா... அதுக்குள்ள லோக்கல் சானலுக்கு நியூஸ் கொடுத்தது.?" பொன்னம்பலத்தைக் பார்த்துக் கோபமாய்க் கேட்டார்.
"சார் மீடியா ஆட்கள் வீட்டை வீட்டை சுத்தி வர்றாங்க... இன்னும் யாரையும் உள்ள விடலை... நாங்க யாரும் எதுவும் சொல்லலை... அவங்களா கொலைங்கிறதை வைச்சு செய்தி போட்டிருப்பாங்க.."
"ம்...பயங்கரக் கொலை.. கொடூரக்கொலை... சொத்துக்காக கொலை.. கள்ளத்தொடர்பில் கொலையின்னு ஆளாளுக்கு போடுவானுங்க... செத்தவன் செத்துட்டான்... இவனுகளால நமக்குத்தான்யா பிரஷர்..."
"சாரி சார்... இதை நாம கண்ட்ரோல் பண்ணுறதுங்கிறது கஷ்டம் சார்..."
"ம்... சரி... சரி... கொஞ்ச நேரம் அவங்களை யாரையும் உள்ள விடாதீங்க... பாடியை ஆஸ்பிடல் கொண்டு போக வேகமாக வேலையைப் பாருங்க..." என்று பொன்னம்பலத்திடம் சொன்னவர் டாக்டரிடம் திரும்பி "சரி டாக்டர்... தேவைப்படும் போது நீங்க ஸ்டேசனுக்கு வர்ற மாதிரி இருக்கும்..." என்றார்.
"ஷ்யூர் சார்... ஆமா சார் அவரோட வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிட்டீங்களா?"
"பண்ணியாச்சு... பசங்க வந்துக்கிட்டு இருக்காங்க..." என்றார் பொன்னம்பலம்.
"சார் நான் அவரைப் பாக்கலாமா?"
"ம்... எதையும் தொடாமப் பாருங்க... சீக்கிரம் பாத்துட்டு வாங்க..."
"தாங்க்யூ..." என்று டாக்டர் சிவராமன்  நகர்ந்ததும் பொன்னம்பலத்திடம் "இந்தாளு மேல ஒரு கண் இருக்கட்டும்..." என்றார் இன்ஸ்பெக்டர் சுகுமாரன்.
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Nisha on Thu 15 Oct 2015 - 19:35

ஆமாம்  எல்லார் மேலயும் கண் வைக்கணும். எழுத்து நடை அபாரம் குமார் . டாகடரின் விசாரணையை பிசிறில்லாமல்  எழுதி இருக்கிங்க.. கொலைக்காக மோட்டிவ் என்ன.. கொலையாளி யாராயிருக்கும் எனும் ஆர்வம் அதிகமாகின்றது. 

அதெல்லாம் சரி! உங்களுக்கு என்னச்சு? சில நாட்களாக ஆளையும் காணோம். சத்தமும் காணோம். உடல் நிலை மீண்டும் சரியில்லையோ?எதுவானாலும் கவனமாக இருங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by *சம்ஸ் on Mon 19 Oct 2015 - 16:22

மேலும் மேலும் ஆர்வம் அதிகமாகிறது.சீக்கிரம் சொல்லுங்க சார் கொலையாளி யார் என்று.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Mon 19 Oct 2015 - 20:37

Nisha wrote:ஆமாம்  எல்லார் மேலயும் கண் வைக்கணும். எழுத்து நடை அபாரம் குமார் . டாகடரின் விசாரணையை பிசிறில்லாமல்  எழுதி இருக்கிங்க.. கொலைக்காக மோட்டிவ் என்ன.. கொலையாளி யாராயிருக்கும் எனும் ஆர்வம் அதிகமாகின்றது. 

அதெல்லாம் சரி! உங்களுக்கு என்னச்சு? சில நாட்களாக ஆளையும் காணோம். சத்தமும் காணோம். உடல் நிலை மீண்டும் சரியில்லையோ?எதுவானாலும் கவனமாக இருங்க!
வாங்க அக்கா...
உங்கள் ஆர்வம் அதிகரிக்கிறது...
எனக்குத்தான் பக் பக்ன்னு இருக்கு... எப்படி முடிக்கிறதுன்னு...

கவனமாக இருக்கிறேன் அக்கா....
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Mon 19 Oct 2015 - 20:38

*சம்ஸ் wrote:மேலும் மேலும் ஆர்வம் அதிகமாகிறது.சீக்கிரம் சொல்லுங்க சார் கொலையாளி யார் என்று.
வாங்க சம்ஸ்...
நானும் அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்...
விரைவில் கண்டு பிடிச்சிடலாம்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Tue 20 Oct 2015 - 13:54

க்ரைம் மன்னன் ராஜேஷ்குமார் கதையை படிப்பது போல இருக்கிறது குமார் ...

அருமையா எழுதுறிங்க... யாரா இருக்கும் கொலையாளினு ஆர்வம் அதிகமாகுது...

குறுந்தொடர் எத்தனை அத்தியாயம் எழுதுவிங்க?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Tue 20 Oct 2015 - 21:05

தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா...

பத்துக்குள் முடிக்க எண்ணம் அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி -5. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Wed 21 Oct 2015 - 21:13

குறுந்தொடர்: பகுதி - 5. கொலையாளி யார்?

பொன்பலத்திடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குப் போய்விட்டு மதியத்துமேல்தான் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தார் சுகுமாரன். அதற்கு இடையே டி.எஸ்.பி வேறு போன் செய்து 'என்னாச்சு...? எதுவும் தடயம் கிடைத்தாதா...?' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு இருக்க டென்சனை இன்னும் அதிகமாக்கிவிட அதை வந்ததும் வராததுமாக ஸ்டேசனில் இருந்த கான்ஸ்டபிளிடம் காண்பித்து விட்டு அவர் வாங்கிக் கொண்டு வந்த டீயைக் குடித்தபடி யோசிக்கலானார்.


'எந்த ஒரு கொலை என்றாலும்  ஏதாவது ஒரு தடயம் கிடைத்து விடும். அதை வைத்து நூல் பிடித்தாற்போலச் சென்றால் எப்படியும் கொலையாளியைப் பிடித்து விடலாம். ஆனால் இந்தக் கொலையில் எல்லாம் கிளீன்... ஒரு தடயமும் கிடைக்கவில்லை. தடயம் இல்லாமல் எந்தப் பொறியை வைத்து கொலையாளியைப் பிடிப்பது... ஒரு தடயமும் விடாமல் மிகவும் துல்லியமாக கொலை செய்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் எப்படிப்பட்ட திறமைசாலியாக இருக்கணும்... எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது..? ' அவரின் யோசனையைக் கலைத்தது செல்போன்.


"என்ன மாமா... சொல்லுங்க?" என்றவர் "என்னது இந்த வாரமா? சான்ஸே இல்லை... இங்க ஒரு கொலை... செத்தது பெரிய பிஸினஸ்மேன்... கொலை நடந்து இன்னும் முழுசா ஒருநாள் கூட முடியலை... அதுக்குள்ள டி.எஸ்.பி. கூப்பிட்டு காட்டுக் கத்தாக் கத்துறாரு... ஆளு கொஞ்சம் அரசியல் செல்வாக்கு உள்ளவர்ன்னு தோணுது... மேலிடத்துப் பிரஷர் வேற... எங்கிட்டும் நகர முடியாது... கொலைக்கான மோட்டிவ் என்ன..? கொலையாளி யார்...?  அப்படின்னு கண்டுபிடிக்காம எனக்கு ஊருக்கெல்லாம் வர நேரமே இல்லை... முடிஞ்சா புவியை அனுப்பி வைக்கிறேன்... சாரி மாமா..." என்றவர் எதிர்முனை சொல்லியதைக் கேட்டுவிட்டு "ஓகே அப்புறம் கூப்பிடுறேன்..." என்று கட் செய்தார்.

'எங்கிருந்து ஆரம்பிப்பது...? பேசாமல் டிடெக்டிவ் முருகனை இதுல இறக்கலாமா..?' என்று யோசித்தவர்  ஒரு பேப்பரில் வட்டமிட்டு அதில் வலம் இடம் மேலிருந்து கீழ் என கோடு போட்டு நாலாகப் பிரித்தார்.  லதா, டாக்டர், வாட்ச் மேன் என ஒவ்வொரு  பெயராக எழுதினார். மீதமிருந்த கால் பகுதியில் கேள்விக்குறி போட்டு வைத்தார். அதையே ரொம்ப நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். 'இந்தக் கொலைக்கும் இவர்கள் மூவருக்கும் சம்பந்தம் இருக்குமா? இவர்கள் இல்லையென்றால் நாலாவதாக கேள்விக்குறிக்குள் மறைந்து நிற்கும் அந்த நபர் யார்? உறவா... பழக்கமா... பகையா... அல்லது காசுக்காக கொலையா?' என மண்டையைப் போட்டுக் குடைந்தார்.

'சமையக்காரி லதாவை சந்தேக வட்டத்துக்குள் வைக்க முடியலை... ஏன்னா அவளோட பதில்களும் பார்வையும் அவளை வெளியில் நிறுத்தச் சொன்னது. அடுத்தது டாக்டர்... ஆனா சமூகத்துல அந்தஸ்தோட இருக்க அவரு  எதுக்காக இதைச் செய்யணுமின்னு யோசிக்க வேண்டியிருக்கு... இருந்தாலும் ஒரு கண் வைப்பது நல்லது...  மூணாவதாக வாட்ச் மேன்... இவனுக்கு தெரியாம அங்க யாரும் வந்திருக்க முடியாது.. பொன்னம்பலம் சொன்னதைக் கேட்டு ஏன் இவனை விசாரிக்காமல் வந்தேன்... டாக்டர் வரவும் இவனை மறந்துட்டேனா...? அப்ப இதுல முக்கியமான ஆள் இவன்தானா? இவனை விசாரித்தால் முட்டிக் கொண்டு நிற்கும் விசாரணைக்கு ஒரு வழி கிடைக்குமா...? என்று யோசித்தபடி அவனின் பெயரை சிகப்பு இங்கினால் வட்டமிட்டார்.

செல்போனை எடுத்து பொன்னம்பலத்தைக் கூப்பிட்டார். 

"சார்... சொல்லுங்க சார்..." எதிர்முனையில் பொன்னம்பலம் மரியாதையோடு பேசினார்.

"என்ன எல்லாம் முடிஞ்சதா?"

"இன்னைக்கி போஸ்ட் மார்டம் பண்ணி ஈவ்னிங் ரிசல்ட் தர்றேன்னு சொல்லிட்டாங்க... கைரேகை ரிப்போர்ட்டும் ஈவ்னிங் வந்திரும் சார்..."

"அவரு பசங்க வந்தாச்சா..?"

"வந்தா ஸ்டேசனுக்கு கூட்டிக்கிட்டு வரச்சொல்லி கான்ஸ்டபிள்க்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன் சார்... எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள வந்திருவாங்க சார்..."

"சரி... சரி... இப்ப நீங்க அங்கே இல்லையா...? எங்க இருக்கீங்க...?"

"ஹாஸ்பிடல் வந்தேன் சார்... டாக்டரிடம் பேசினேன்..."

"ஓ.... அப்புறம் அந்த வாட்ச் மேன்....?" மெதுவாக இழுத்தார்.

"அவனுக்கு என்ன சார்..."

"இல்லை அவன விசாரிச்சா கொஞ்சம் கிளியராகும்ன்னு தோணுது..?"

"நான் விசாரிச்ச வரைக்கும் அவனுக்கு இதுல சம்பந்தம் இருக்க மாதிரி தெரியலை சார்... அவரோட பசங்க வரட்டுமே..."

"இல்லை ஒரு சந்தேகம்... விசாரிக்கலாமே.... நமக்கும் மூடியிருக்க கதவு திறக்குதான்னு பாக்கலாம்... ஏன்னா தீவிரமா விசாரித்தான் நம்மளால என்னங்கிறதை பாயிண்ட் அவுட் பண்ண முடியும்..."

"ம்..."

அப்ப நீங்க ஒண்ணு செய்யிங்க... அப்படியே ஸ்பாட்டுக்குப் போயி வாட்ச் மேனை கூட்டிக்கிட்டு வாங்க..."

"சரி...சார்... ஆனா என்ன மோட்டிவ்வால நடந்திருக்குங்கிற க்ளூ நமக்கு கிடைக்கவேயில்லையே சார்..."

"அதைக் கண்டுபிடிக்கத்தானே நாம இருக்கோம்... எப்படியும் பிடிக்கத்தானே போறோம்... என்ன ஆளு மதுரையில பெரிய பிஸ்னஸ்மேன்.... மேலிடத்துல இருந்து பிரஷர் வர ஆரம்பிச்சிருச்சு... டி.எஸ்.பி. வேற புடுங்க ஆரம்பிச்சிட்டாரு... அவருக்கென்ன தெரியும் நாமதானே அலையணும்... எனிவே... நீங்க வாட்ச்மேனோட வாங்க.... மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்"

"ஓகே சார்..."

"நீதான் ரெத்தினமா?" எதிரே ஒடிசலாய் நின்றவனைப் பார்த்துக் கேட்டார் இன்ஸ்பெக்டர் சுகுமாரன்.

"ஆ...ஆமா...சார்..."

"என்ன தண்ணி அடிச்சிருக்கியா?"

"ம்.... ஐயாவோட சாவைத் தாங்கமுடியலை சார்... அதான் கொஞ்சமா ஊத்திக்கிட்டேன்..." தலையைச் சொறிந்தான்.

"கவலைக்கும் தண்ணி... சந்தோஷத்துக்கும் தண்ணி... அப்படித்தானே...?"

ஒன்றும் பேசாமல் மீண்டும் தலையைச் சொறிந்தான்.

"ஆமா இது உண்மையிலேயே கவலையா... இல்லை சந்தோஷமா...?" நக்கலாய்க் கேட்டதும்  ரத்தினத்துக்கு தூக்கிவாரிப் போட்டு விட்டது.

"சா... சார்... எங்கம்மா சத்தியமா புண்ணியவான் செத்துட்டாரேன்னு கவலைதான் சார்... எதுக்கு சார் நான் சந்தோஷப்படணும்..." கண்ணீரோடு கேட்டான்.

"சரி.. அழுது நடிக்காதே... இது சினிமா இல்லை.... அடிச்சி துவைச்சி காயப்போட்டுடுவேன்... கேக்குற கேள்விக்கு சரியான பதில் வரணும்... என்ன..?" பார்வையில் கோபத்தை வைத்து வார்த்தையில் அழுத்தம் கொடுத்தார்.

"ம்..." தலையை ஆட்டினான்.

"ஆமா... நீதான் ஐயாவுக்கு எல்லாமுமாமே?"

அவரின் கேள்வி புரியாமல் விழித்தான்.

"என்ன பாக்குறே... அவரு இங்க வர்றப்போ பொண்ணு, தண்ணி எல்லாத்தையும் நீதான் அரேஞ்ச் பண்ணுவியாமே..?"

"சார்... ஐயாவுக்கு பொண்ணுங்க பழக்கமெல்லாம் இல்லை.... அதே மாதிரி அவரு பாரின் சரக்குத்தான் அடிப்பாரு.. மொத்தமா வாங்கி வச்சிருப்பாரு...."

"உனக்கு கொடுப்பாரா?"

"எப்பவாச்சும் கொடுத்து அடிடாம்பாரு.."

"ம்.... நேத்து ராத்திரி யாரு வந்தாங்கன்னு தெரியுமா?"

"எப்பவும் வர்ற டாக்டர் சார் வரலை.... தனியாத்தான் இருந்தாரு.. லதாப்பொண்ணு போனதும் ஏழு மணி வாக்குல என்னைக் கூப்பிட்டு இருநூறு ரூபாய் கொடுத்து போயி எதாவது சாப்பிட்டு வந்து படுத்துத் தூங்குன்னு சொல்லிட்டு கதவை சாத்திக்கிட்டார்."

"எதுக்கு பணம் கொடுத்தாரு.. எப்பவும் கொடுப்பாரா?"

"சம்பளம் நல்லாக் கொடுப்பார்... எப்பவாச்சும் சந்தோஷமா இருந்தா காசு கொடுப்பார்.. நேத்து சந்தோஷமா இருந்தது மாதிரி தெரிஞ்சது...."

"அவரு சந்தோஷத்துக்கு என்ன காரணம்?"

"தெரியலை..."

"ம்... நீ போயி தண்ணி அடிச்சிட்டு வந்தே.. இல்லையா?"

"ஆமா... வந்து மெயின் கேட்டைப் பூட்டிட்டு முன்னால எரிஞ்ச லைட்டெல்லாம் அமத்திட்டு பின்னால என்னோட ரூம்ல போயி படுத்துட்டேன்..."

"நீ மட்டுமா இல்ல கொலைகாரங்களுமா?"

"நா...நா... ன் மட்டுந்தான்..." அவனுக்கு வியர்த்தது.

(தொடரும்...)
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum