சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Today at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

குறுந்தொடர் : கொலையாளி யார்?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

Sticky குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Sat 26 Sep 2015 - 20:06

First topic message reminder :


குறுந்தொடர் பகுதி -1 : கொலையாளி யார்? ---- படிக்க கீழே செல்லவும்.

குறுந்தொடர் பகுதி -2 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -3 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -4 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -5 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -6 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -7 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -8 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -9 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -10 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -11 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -12 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி - 13: கொலையாளி யார்?

குறுந்தொடர்: பகுதி - 14. கொலையாளி யார்?

குறுந்தொடர்: பகுதி - 15. கொலையாளி யார்?

குறுந்தொடர்: பகுதி - 16. கொலையாளி யார்?


'பாடி எங்க இருக்கு..?', 'யார் முதலில் பார்த்தது..?' என்ற கேள்வியெல்லாம் கேட்காமல் "அந்தப் பெண் என்ன சொல்றா?" என்ற கேள்வியை சப்-இன்ஸ்பெக்டர் பொன்னம்பலத்திடம் கேட்டபடி காரில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சுகுமாரன், போலீசுக்கே உரிய மிடுக்குடன் இருந்தார். முகத்தில் போலீஸ்காரனுக்கே உரிய கடுமை கலந்திருந்தது.
"மேலதான் சார் இருக்கா?" என்று பவ்யமாய்ச் சொன்ன பொன்னம்பலத்துக்கு சுகுமாரைவிட நான்கைந்து வயது அதிகமிருக்கும். லேசான தொப்பையுடன் இருந்தார்.
"ம்... எதாவது சொன்னாளா?" கேட்டபடி மிடுக்காய் நடந்தார் சுகுமாரன்.
பொன்னம்பலமும் அவருக்கு இணையாக நடந்தபடி "அவகிட்டயிருந்து உருப்படியான தகவல் இல்லை..." என்றார்.
"உங்களுக்கு அவமேல சந்தேகம் இருக்கா?"
"அப்படித் தோணலை சார்... காலையில காபியோட போயிருக்கா... அப்பத்தான் முதலாளி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்திருக்கா..."
"ம்..." 
"அவ சொல்லித்தான் செய்தி வெளிய தெரிஞ்சிருக்கு..."
"ம்..." என்றபடி அந்த அறைக்குள் நுழைந்தார். அங்கே... கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார் தணிகாசலம்... தொழிலதிபர் தணிகாசலம்.
"என்ன வெறியோ தெரியலை... இப்படி கொன்னிருக்காங்க... இன்னும் ஆம்பூலன்ஸ் வரலையா.... பிரான்சிக் ஆட்கள் எங்கே...?"
"ஆம்பூலன்ஸ் இப்ப வந்துரும்... பிரான்சிக் செல்வக்குமார் வந்து கைரேகையெல்லாம் எடுத்துக்கிட்டுப் பொயிட்டார் சார்.."
"சரி... ஆக வேண்டிய காரியத்தை சீக்கிரம் பாருங்க... இவரோட குடும்பத்துக்கு சொல்லியாச்சா?"
"சொல்லியாச்சு சார்..."
"கிளம்பிட்டாங்களாமா?"
"பையனும் பொண்ணுந்தான்... வந்துக்கிட்டு இருக்காங்க..."
"மனைவி...?"
"இல்லையாம் சார்..."
"இல்லைன்னா இறந்துட்டாங்களா... இல்ல...?"
"சரியான விவரம் தெரியலை சார்... இவரோட பசங்க வந்தாத்தான் தெரியும்..."
"ம்... நீங்க மற்ற வேலைகளைப் பாருங்க... நான் அந்தப் பொண்ணைப் பார்த்துட்டு வாறேன்..." என பொன்னம்பலத்தை அனுப்பிவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தார்.
ஊட்டிக் குளிரிலும் வியர்த்துப் போய் கண்ணீரோடு அமர்ந்திருந்த அந்தப் பெண் இவரைப் பார்த்ததும் பயத்தோடு எழுந்து சுவரோடு ஒண்டினாள். சுகுமாரன் தனது போலீஸ் பார்வையை அவள் மீது ஓடவிட்டார். அவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் முப்பத்தைந்து வயதிருக்கும். முகத்தில் முத்து முத்தாய் வேர்வை... கழுத்துப் பகுதியிலும் வியர்த்திருக்க...அந்தக் கோலத்திலும் அழகாகவே இருந்தாள். அவளது அசரடிக்கும் இளமையில் ஒரு கணம் தன்னை இழுந்தவர் சுதாரித்து கட்டுக்குள் வந்தார். அவரோட மனசுக்குள் இவளுக்கும் அவருக்கும் ஏதாச்சும்...? என்ற வினா எழும்ப 'சேச்சே.... சந்தேகப் பார்வையை எல்லா இடத்திலும் வைக்கக் கூடாது' என வீசிவிட்டு "இங்க வா..." என்றார்.
அருகே வந்து நின்றவள் அழுக ஆரம்பித்தாள். "எதுக்கு அழுகுறே...? அப்ப நீதான் கொன்னியா?" 
"இ....இல்லங்க... சார்..." பதறினாள்.
"அப்ப அழுகாம கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும்... சரியா..?"
"ம்..." தலையாட்டினாள்.
"எனக்கு உண்மையான பதில் வேணும்..." அவளை முறைத்துப் பார்த்தபடி அழுத்தமாய்ச் சொன்னார் சுகுமாரன்.  
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.


Last edited by சே.குமார் on Tue 29 Dec 2015 - 17:31; edited 13 times in total
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down


Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Fri 23 Oct 2015 - 15:09

ஹா ஹா கொலைகாரன் வாட்ச்மேனா??????????????
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16623
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Sun 25 Oct 2015 - 20:33

பானுஷபானா wrote:ஹா ஹா கொலைகாரன் வாட்ச்மேனா??????????????
வாங்க அக்கா...
அப்படியும் இருக்கலாம் அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி - 6. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Sun 25 Oct 2015 - 20:34

குறுந்தொடர்: பகுதி - 6. கொலையாளி யார்?


முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். தனது விசாரணையைத் தொடர்கிறார்.
[size=20]
[size=16]இனி...
[/size][/size]


"நா...நா... ன் மட்டுந்தான்..." அவனுக்கு வியர்த்தது.
"பொய் சொன்னே கொன்னேபுடுவேன்... உன்னோட யார் இருந்தா...?"
"ச...சத்தியமா.... யா... யா...ரு...மே இல்லை சார்... " அவனுக்கு போதை சுத்தமாக இறங்கியிருந்தது.
"உனக்கு குடும்பம் இருக்கா?"
"இ... இருக்கு சார்..."
"ம்... எங்கே ஊட்டியிலதானா?"
"இல்ல மதுரைக்குப் பக்கம்..."
"இங்கேதான் இருப்பியா... ஊருகுப் போவியா...?"
"மூணு மாசத்துக்கு ஒருக்கா போவேன்..."
"சரி... எப்ப பிளான் பண்ணுனே... இதை எத்தனை பேர் சேர்ந்து பண்ணுனீங்க?" சுகுமாரன் மீண்டும் அதே இடத்துக்கு வந்தார்.
"என்ன சார்.... திரும்பத் திரும்ப நாந்தான் கொன்னேன்னே பேசுறீங்க... எனக்கு படியளந்த தெய்வத்தைக் கொல்லுவேனா? பாண்டியய்யா மேல சத்தியமா 
எனக்கு காலையில லதாப்பொண்ணு கத்தும்போதுதான் கொலை நடந்ததே தெரியும்..."
"சரி... நீ செய்யலை... ஒத்துக்கிறேன்.... ஆனா நீ இதுல சம்பந்தப்பட்டிருக்கேன்னு தெரிஞ்சா மவனே அப்பவே உன்னை எண்கவுன்டர்ல போட்டுடுவேன்.... 
பாத்துக்க..."
"..." பேசாமல் எச்சில் விழுங்கினான். அப்போது ஒரு இளைஞனும் யுவதியும் கான்ஸ்டபிள் ஆறுமுகத்துடன் உள்ளே வந்தார்கள்.
"நீ ஓரமா நில்லு..." என ரெத்தினத்தை ஓரங்கட்டியவர், அவர்களை "உக்காருங்க" என்று சொல்லி தானும் சீட்டில் அமர்ந்தார்.
"இன்ஸ்பெக்டர் ஐ ஆம் வருண், இது என்னோட சிஸ்டர் தர்ஷிகா" என்றபடி அவரிடம் கை நீட்டிய அந்த இளைஞன், ரெத்தினத்தினத்தைப் பார்த்து "என்ன 
ரெத்தினண்ணே... நீங்கள்லாம் இருந்து இப்படி..." என்றான் கலங்கிய கண்களோடு.

"தம்பி... இப்படி நடக்கும்ன்னு நினைக்கலையே..." கண் கலங்கியபடி முன்னே வந்தவன் சுகுமாரனின் முறைக்கு சற்று ஒதுங்கி நின்றான்.
"உக்காருங்க... " என்று சொல்லியபடி தனது இருக்கையில் அமர்ந்த சுகுமாரன் இருவரையும் நன்றாகப் பார்த்தார். வருண் பார்ப்பதற்கு சிவகார்த்திகேயன் 
போல இருந்தான்... ஆனால் நல்ல சிகப்பு.  தர்ஷிகா பேருக்கு ஏற்றார்போல் அழகாக இருந்தாள். உடம்பை நயன்தாரா போல் சிக்கென்று வைத்திருந்தாள். 
அவள் மீதிருந்த கண்களை வேறு இடம் மாற்ற சிரமப்பட்டார். நான் இராமநாதபுரத்துக்காரியாக்கும் என புவனா கண்ணில் வந்து மறைய மீண்டும் வருண் 
பக்கம் பார்வையைத் திருப்பினார். 
"ம்... சொல்லுங்க வருண்... அப்பாவுக்கு எதிரிங்க யாரும் இருக்காங்களா?"
"எதிரிங்கன்னு யாரும் இல்லை சார்... எல்லாருக்குமே நல்லதுதான் செய்வார்... எப்படி... இப்படின்னு..."
"எதாவது பிஸினஸ் மோட்டிவ்.."
"சான்ஸே இல்லை சார்.. அப்பாவோட பிஸினஸ்ல பார்ட்னர்ஸ் யாரும் இல்லை... எல்லாமே இண்டிவிச்சுவல் பிஸினஸ்தான்..."
"சொத்துக்காக..?"
"அப்பாவோட பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் எல்லாம் இவரை விட வசதியானவங்க.. சொத்துக்காக கொல்ல வேண்டிய அவசியமில்லை." 
"சரி... அம்மா சைடுல..?" என்றபடி  தர்ஷிகவைப் பார்த்தார். அவளோ கன்னத்தில் வழிந்த கண்ணீரை கர்ச்சிபால் துடைத்துக் கொண்டு படபடப்போடு அமர்ந்திருந்தாள்.
வருண் மௌனமாக அமர்ந்திருக்க, "என்ன அம்மா இறந்துட்டாங்களா? சாரி வருண்" என்றார்.
"இல்ல சார்.... அவங்க இருக்காங்க..."
"இல்லைன்னு கேள்விப்பட்டேன்..."
"எங்க கூட இல்லை... அவங்க கூட டச்சும் இல்லை... சொல்லப்போனா அவங்களை நாங்க மறந்துட்டோம்..." என்றவன் அம்மா என்ற வார்த்தையைத் தவிர்த்தான்.
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Nisha on Mon 26 Oct 2015 - 9:51

அட! மகன், மகள், மனைவியும் வந்தாச்சு? ஆமாம் மனைவிக்கு என்னாச்சு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Mon 26 Oct 2015 - 12:01

தொடருங்கள் ஆவல் அதிகமாகுது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16623
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி - 7. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Wed 4 Nov 2015 - 20:40

குறுந்தொடர்: பகுதி - 7. கொலையாளி யார்?
"மறந்துட்டீங்களா...?"  வியப்பாய்க் கேட்டார் சுகுமாரன்.
"ஆமா.... மறந்துட்டோம்.... அப்படி ஒரு சொந்தம் இருப்பதையே மறந்துட்டோம்."
"ஏன்...?"
"ஏன்னா... நாங்க சின்னப்பிள்ளைங்களா இருக்கும் போதே அவங்க போயாச்சி..." தர்ஷிகாவைப் பார்த்தபடி சொன்னான் வருண். அவள் தலையைக் கவிழ்ந்து கொண்டு மூக்கை உறிஞ்சினாள். அழுகை கூடியிருக்கும் என்பதை உணர்ந்த வருண் அவள் தலையில் ஆறுதலாய்த் தடவினான். உடனே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"போயாச்சின்னா... எங்கே...?"
"அப்பாவைப் பிடிக்கலை... பிரிஞ்சு பொயிட்டாங்க..."
"பிரிஞ்சு பொயிட்டாங்கன்னா... அவங்களுக்கு எனி இம்மாரல் கனெக்சன்..."
"நோ... இன்ஸ்பெக்டர்... ஷி ஈஸ் பர்பெக்ட்லி ஜென்டில் உமன்..."
"தென்?"
"விவாகரத்து வாங்கிக்கிட்டு பொயிட்டாங்க..."
"விவாகாரத்தா...?"
"ஆமா..."
"ஏன்...?"
"எனக்குச் சரியான காரணம் தெரியலை... ஆனா காசு காசுன்னு அவங்களைக் கண்டுக்காத அப்பாவைப் பிடிக்காம பொயிட்டாங்கன்னு வீட்டுல உள்ளவங்க சொல்லிக் கேள்வி..."
"சரி பொயிட்டாங்க... ஆனா உங்க அம்மா உங்களைக் கூட நினைக்கலையா?"
அந்தச் சோகத்திலும் லேசாக சிரித்த வருண் "நினைச்சிருக்கலாம்... இப்பவும் நினைக்கலாம்... அவங்க பிரியும் போது நாங்க ரெண்டு பேரும் அம்மா, அப்பா ரெண்டு பேருக்கிட்டயும் மாறி மாறி இருக்கணும்ன்னு  கோர்ட்ல சொல்லியிருந்தாங்க... கொஞ்ச  நாள் அப்படி இருந்தோம்... அப்புறம் அவங்க எங்களை தன் கூட வச்சிக்க விரும்பலை...."
"இவ்வளவு விவராமாச் சொல்றீங்க...? எதுக்காக பிரிஞ்சாங்கன்னு மட்டும் தெரியலை..."
"எனக்கு நல்லா விவரம் தெரியும் சார்... இவ எனக்கு அப்புறம் மூணு வருசம் கழித்துப் பிறந்தவள்... இவளுக்கு ஆறு வயசாகும் போதுதான் அவங்ககூட இருந்த உறவு சுத்தமா முடிவுக்கு வந்துச்சு... எதுக்கு பிரிஞ்சாங்கன்னு உண்மையிலுமே தெரியாது சார்... அப்ப அதை தெரிஞ்சிக்கிற ஆர்வமும் இல்லை... கொஞ்ச நாள் அழுது ஆர்ப்பாட்டம்... அப்புறம் இந்த வாழ்க்கை பழகிடுச்சு... ஆனா இவதான் ரொம்ப நாள் அம்மா வேணும்ன்னு அழுதாள்"  வருண் லேசாக கண் கலங்கினான்.
"சரி... இப்ப எங்க இருக்காங்க....?"
"தெரியாது..."
"உண்மையாவே தெரியாதா... இல்லை சொல்ல வேண்டான்னு நினைக்கிறீங்களா..? நாங்க எப்படியும் அவங்களை இந்த வளையத்துக்குள்ள கொண்டாந்து விசாரிப்போம்... தெரிஞ்சா தெரியும்ன்னு சொல்லுங்க..."
"சத்தியமா எங்களுக்குத் தெரியாது சார்... அவங்களை மறந்துட்டோம் சார்... அப்பா இறந்த இந்த நேரத்துல அதைப் பற்றி பேசி எங்களை கஷ்டப்படுத்தாதீங்க சார்... ப்ளீஸ்.."
"ஓகே... மிஸ்டர் வருண்... இன்னும் கொஞ்சம் டீடெயில் மட்டும் உங்க அம்மா பற்றிக் கொடுங்க ப்ளீஸ்..."
"இனி என்ன சார் இருக்கு... அதான் சொல்லிட்டேன்ல்ல..."
"ப்ளீஸ்... எங்களுக்கு இந்தக் கொலையில எதாவது பிடி கிடைக்குமான்னு பார்க்கத்தான்..."
"சரி... கேளுங்க.."
"அவங்க சொந்தம்...  அதாவது உங்க தாத்தா, பாட்டி, மாமா இப்படி யாராச்சும்..."
"எல்லாரும் இருக்காங்க... மதுரையிலதான் இருங்காங்க... ஆனா நாங்க அங்க போறதில்லை..."
"தொடர்பே இல்லையா...?"
"எஸ்..."
"ஏன்... விவாகரத்துக்கு அப்புறம் உங்கம்மா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா..?"
"எஸ்... எங்களை அவங்க வச்சிக்காததுக்கு காரணமே செகண்ட் மேரேஜ்தான்...."
"அது சரி.... உங்க அப்பா...?"
"அவரு அதுக்கு அப்புறம் மேரேஜ் பண்ணலை... நாங்கதான் அவங்களுக்கு எல்லாமே..."
"சரி... சாரி... கேட்கக் கூடாதுதான் நினைச்சேன்... ஆனா விவரம் வேணுமே... உங்க அப்பாவுக்கு ஏதாவது இல்லீகல் தொடர்பு..."
"தெரியலை சார்... ஆனா இருக்க வாய்ப்பில்லை..." 
"ம்... அம்மாவை அதுக்கு அப்புறம் பார்க்கவே இல்லை... அவங்களோட  ரெண்டாவது வாழ்க்கை பற்றித் தெரியாது... அப்படித்தானே..."
"ஆமா சார்... "
"ஓக்கே..." என்று எழுந்தவர் தர்ஷிகாவைப் பார்த்தபடி "இவங்க எதுவுமே பேச மாட்டேங்கிறாங்க... எல்லாத்துக்கும் நீங்கதான் பதில் சொல்றீங்க..." என்றார். 
"அவ அப்பா இறந்ததுல அப்செட்டாயிட்டா சார்... அவ அப்பா செல்லம்..."
"ரெண்டு பேருமே ஒருத்தருக்குத்தானே செல்லம்... அதான் அம்மா இல்லையே... அப்புறம் அப்பா செல்லம்தானே..." என்று சொல்லி சுகுமாரன் முறைப்பது போல் பார்க்கவும் தலையைக் குனிந்து கொண்டார் பொன்னம்பலம்.
"இல்லை என்னை விட இவளைத்தான் அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்..." பொன்னம்பலத்துக்கான பதிலைச் சொன்னான் வருண்.
"அதுசரி... ஆனா அழுதா அப்பா வந்திருவாரா...? உங்க அப்பாவைக் கொலை பண்ணினது யாரா இருந்தாலும் அவங்களைப் பிடிக்கணுமா இல்லையா..?"  தர்ஷிகாவைப் பார்த்துக் கேட்டார்.
"கண்டிப்பா இன்ஸ்பெக்டர்... அவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கணும்" என்றான் வருண். தர்ஷிகா எதுவும் பேசாமல் வழியும் கண்ணீரைத் துடைத்த கர்ச்சீப்பால் மூக்கையும் அழுத்தித் துடைத்தாள். அது இன்னும் சிவப்பானது.
"ஓகே... மிஸ்டர் வருண், சம் போலீஸ் பார்மாலிட்டீஸ் முடிஞ்சி இன்னைக்கு ஈவ்னிங உங்க அப்பாவோட பாடியை வாங்கிக்கலாம்... இன்னும் ஒரு வாரத்துல கொலையாளியை பிடிச்சிடலாம்ன்னு நினைக்கிறேன்... பாக்கலாம்... ஏதாவது தேவைப்பட்டா கூப்பிடுறேன்... உங்க மொபைல் நம்பர் சொல்லிட்டுப் போங்க... "
"ஷ்யூர் சார்..." என்றபடி பொன்னம்பலத்திடம் மொபைல் நம்பரைக் கொடுத்துவிட்டு அவர்கள் கிளம்பியதும் ஒரு டீ வாங்கி வரச்சொல்லிக் குடித்துக் கொண்டே 'என்னய்யா... எப்பக் கூப்பிட்டாலும் இங்க வரணும் சரியா... போ...' என்று ரெத்தினத்தை போகச் சொல்லிவிட்டு  "அம்மா இவரைக் கொலை பண்ணியிருக்கலாமோன்னு லேசா சந்தேகம் வந்தாலும் அந்தப் பொண்ணு மேல எனக்கென்னவோ டவுட்டா இருக்குய்யா... அழுகுறது கூட ஆக்டிங்கா இருக்குமோன்னு தோணுது" என்றார் பொன்னம்பலத்திடம்.
"சேச்சே... அப்படித் தெரியலை சார்... அது உண்மையிலேயே அப்செட் ஆயிருக்கு சார்..."
"பொண்ணுங்கன்னா ரொம்ப சப்போர்ட் பண்ணுவீங்களே... ஒண்ணு கவனிச்சீங்களா பொன்னம்பலம்... அப்பாவை கொன்னவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கணுமா வேண்டாமான்னு அவகிட்டதான் நான் கேட்டேன்... ஆனா அவ பேசலை.... அப்பா மேல அதிகம் பாசமுள்ள பொண்ணு.... கண்டிப்பாக பதில் சொல்லியிருக்கணுமா இல்லையா... ஆனா பேசாமத்தானே இருந்தா...."
"ஆமா சார்... இதை நான் யோசிக்கலை சார்...."
"சரி... ஆடு புலி ஆட்டம் ஆட ஆரம்பிச்சிருக்கோம்.... யார் அந்த கொலையாளின்னு கண்டுபிடிச்சி ஜெயிக்கிறோமான்னு பாப்போம்... " என்றபடி வட்டமிட்டு எழுதி வைத்திருந்த பேப்பரில் வினாக்குறி இட்ட இடத்தில் வருண், தர்ஷிகா, அம்மா என எழுதியவர் தர்ஷிகாவை மட்டும் அழுத்தமாக எழுதினார்.
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 5 Nov 2015 - 7:45

யார் கொலையாளி என்பதை கண்டு கொள்ள எங்களுக்குந்தான் ஆர்வம் அருமை அண்ணா தொடருங்கள் கதை நகர்வு அருமை பாராட்டுகள்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by கமாலுதீன் on Thu 5 Nov 2015 - 10:35

விறுவிறுபான குறுந்தொடர். கதையின் விறுவிறுப்பில் ஆரம்பம் முதல்   இன்ஸ்பெக்டரின் வருண், தர்ஷிகா, அம்மா என எழுதியதோடு தர்ஷிகா பெயரை அழுத்தமாக எழுதியது வரை ஆர்வத்தோடு படித்து முடித்தேன். ஒவ்வொரு பாத்திரத்தையும் அவர்களது தோற்றம் மற்றும் உணர்வுகள் ஆகியவற்றை வர்ணித்து எழதியது ஓர் மர்ம திரைப்படம் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Thu 5 Nov 2015 - 13:57

தொடர் எண் மாத்தவில்லையா குமார் ....நான் படிக்காமலே இருந்துவிட்டேன்...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16623
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Fri 6 Nov 2015 - 7:43

பானுஷபானா wrote:தொடர் எண் மாத்தவில்லையா குமார் ....நான் படிக்காமலே இருந்துவிட்டேன்...
வாங்க அக்கா...
வேலை அதிகம் அக்கா...
அதான் பகிர வேண்டுமே என்பதால் பதிந்து விட்டு சென்று விட்டேன்...
மற்றவர்களின் பதிவுகளைக் கூட படிக்க முடிவதில்லை...

இன்று அனைத்து இணைப்பையும் முதல் பகுதியில் கொடுத்து தலைப்பில் நம்பரையும் எடுத்து விட்டேன்...
இது ஓகேதானே அக்கா... தேடிப் படிப்பதைவிட இணைப்பைச் சொடுக்கி வாசிப்பது சுலபம்தானே...
தொடர்ந்து வாசித்து கதை எப்படியிருக்குன்னு சொல்லுங்க அக்கா...
இந்த மாதிரிக் கதை முதல் முயற்சி.... சரியா வருமான்னு தெரியலை...
இன்னொன்னு என்னன்னா நான் மொத்தமா எழுதி வச்சி பதியமாட்டேன்... அப்ப அப்பத்தான் ... எப்படித் தோணுதோ அப்படித்தான் போகும்.... இதுவரைக்கும் கதையில் தொய்வில்லாமல் போகுதா...? ஏழாவது பகுதி தொய்வான மாதிரி தெரியுதா?
நன்றி.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Fri 6 Nov 2015 - 7:44

Nisha wrote:அட! மகன், மகள், மனைவியும் வந்தாச்சு? ஆமாம் மனைவிக்கு என்னாச்சு?
வாங்க அக்கா...
எல்லாரையும் ஆட்டையில இழுத்து விட்டுருக்கோம்ல்ல...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Fri 6 Nov 2015 - 7:44

பானுஷபானா wrote:தொடருங்கள் ஆவல் அதிகமாகுது
தொடர்கிறேன் அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Fri 6 Nov 2015 - 7:46

நேசமுடன் ஹாசிம் wrote:யார் கொலையாளி என்பதை கண்டு கொள்ள எங்களுக்குந்தான் ஆர்வம் அருமை அண்ணா தொடருங்கள் கதை நகர்வு அருமை பாராட்டுகள்
வாங்க ஹாசிம்...
தங்கள் கருத்துக்கு நன்றி...
தொடர்கிறேன்...
எனக்கும் இதுவரைக்கும் கொலையாளி யார்ன்னு தெரியாது என்பதே உண்மை...
இறுதிப் பகுதி எழுதும் போதுதான் இவர்களில் யார் வாராங்கன்னு தெரியும்...
இப்போ வட்டத்துக்குள்ள தர்ஷிகா... மாறுமா இல்லை அவள்தானான்னு போகப்போகத்தான் தெரியும்...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Fri 6 Nov 2015 - 7:47

கமாலுதீன் wrote:விறுவிறுபான குறுந்தொடர். கதையின் விறுவிறுப்பில் ஆரம்பம் முதல்   இன்ஸ்பெக்டரின் வருண், தர்ஷிகா, அம்மா என எழுதியதோடு தர்ஷிகா பெயரை அழுத்தமாக எழுதியது வரை ஆர்வத்தோடு படித்து முடித்தேன். ஒவ்வொரு பாத்திரத்தையும் அவர்களது தோற்றம் மற்றும் உணர்வுகள் ஆகியவற்றை வர்ணித்து எழதியது ஓர் மர்ம திரைப்படம் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
வாங்க கமாலுதீன்...
தங்களின் விரிவான கருத்துக்கு நன்றி....
உங்கள் கருத்துப் பார்த்து சந்தோஷம்...
தொடர்கிறேன்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Fri 6 Nov 2015 - 12:45

சே.குமார் wrote:
பானுஷபானா wrote:தொடர் எண் மாத்தவில்லையா குமார் ....நான் படிக்காமலே இருந்துவிட்டேன்...
வாங்க அக்கா...
வேலை அதிகம் அக்கா...
அதான் பகிர வேண்டுமே என்பதால் பதிந்து விட்டு சென்று விட்டேன்...
மற்றவர்களின் பதிவுகளைக் கூட படிக்க முடிவதில்லை...

இன்று அனைத்து இணைப்பையும் முதல் பகுதியில் கொடுத்து தலைப்பில் நம்பரையும் எடுத்து விட்டேன்...
இது ஓகேதானே அக்கா... தேடிப் படிப்பதைவிட இணைப்பைச் சொடுக்கி வாசிப்பது சுலபம்தானே...
தொடர்ந்து வாசித்து கதை எப்படியிருக்குன்னு சொல்லுங்க அக்கா...
இந்த மாதிரிக் கதை முதல் முயற்சி.... சரியா வருமான்னு தெரியலை...
இன்னொன்னு என்னன்னா நான் மொத்தமா எழுதி வச்சி பதியமாட்டேன்... அப்ப அப்பத்தான் ... எப்படித் தோணுதோ அப்படித்தான் போகும்.... இதுவரைக்கும் கதையில் தொய்வில்லாமல் போகுதா...? ஏழாவது பகுதி தொய்வான மாதிரி தெரியுதா?
நன்றி.
தொடர் 7 மற்ற தொடரை விட இன்னும் சூப்பரா எழுதி இருக்கிங்க... நல்ல விறுவிறுப்பா தான் போகுது...

நான் தான் ராஜேஷ்குமார் நாவல் படிப்பது போல உள்ளது என்று. எங்களூக்கு முடிவு தெரியனும்னு ரொம்ப ஆவலா இருக்கு. தொடருங்க குமார்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16623
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Fri 6 Nov 2015 - 16:56

பானுஷபானா wrote:
சே.குமார் wrote:
பானுஷபானா wrote:தொடர் எண் மாத்தவில்லையா குமார் ....நான் படிக்காமலே இருந்துவிட்டேன்...
வாங்க அக்கா...
வேலை அதிகம் அக்கா...
அதான் பகிர வேண்டுமே என்பதால் பதிந்து விட்டு சென்று விட்டேன்...
மற்றவர்களின் பதிவுகளைக் கூட படிக்க முடிவதில்லை...

இன்று அனைத்து இணைப்பையும் முதல் பகுதியில் கொடுத்து தலைப்பில் நம்பரையும் எடுத்து விட்டேன்...
இது ஓகேதானே அக்கா... தேடிப் படிப்பதைவிட இணைப்பைச் சொடுக்கி வாசிப்பது சுலபம்தானே...
தொடர்ந்து வாசித்து கதை எப்படியிருக்குன்னு சொல்லுங்க அக்கா...
இந்த மாதிரிக் கதை முதல் முயற்சி.... சரியா வருமான்னு தெரியலை...
இன்னொன்னு என்னன்னா நான் மொத்தமா எழுதி வச்சி பதியமாட்டேன்... அப்ப அப்பத்தான் ... எப்படித் தோணுதோ அப்படித்தான் போகும்.... இதுவரைக்கும் கதையில் தொய்வில்லாமல் போகுதா...? ஏழாவது பகுதி தொய்வான மாதிரி தெரியுதா?
நன்றி.
தொடர் 7 மற்ற தொடரை விட இன்னும் சூப்பரா எழுதி இருக்கிங்க... நல்ல விறுவிறுப்பா தான் போகுது...

நான் தான் ராஜேஷ்குமார் நாவல் படிப்பது போல உள்ளது என்று.   எங்களூக்கு முடிவு தெரியனும்னு ரொம்ப ஆவலா இருக்கு.  தொடருங்க குமார்.
ரொம்ப நன்றி அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by *சம்ஸ் on Sun 8 Nov 2015 - 11:33

ஆர்வம் அதிகமாகிறது கொலையாளி யார் என்று அடையாலம் கண்டு கொள்ள. ஒவ்வொரு பாகங்களும் அருமையாகவும் சுவாரிசியமாக  நகர்கிறது தொடர்கள். படிக்கும் போது நிஜத்தில் நாங்களும்  பார்பது போன்று உணர்வையும் ஏற்படுத்துகிறது கதை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி - 8. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Fri 13 Nov 2015 - 8:26

ணிகாசலத்தின் உடலைப் பெற்றுக் கொண்டு வருணும் தர்ஷிகாவும் மதுரைக்குக் கிளம்பிய மறுநாள் மாலை...

மருத்துவ அறிக்கையை மீண்டும் ஒருமுறை வாசித்தார் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், அதில் அவரை ஆழ்ந்த உறக்கத்தில் வைத்து கொலை செய்திருப்பதாகவும் இதயத்தில் இரண்டு கத்திக்குத்து விழுந்திருப்பதாகவும் அதில் முதல் குத்து ஆழமாக பாய்ந்திருப்பதாகவும், அவர் எந்த எதிர்ப்பும் காட்டாமலே இறந்து போய் இருக்கக் கூடும். மேலும் அவர் உயிர் போயிருக்குமா என்ற சந்தேகத்தில்தான் கழுத்தில் அறுத்திருக்கக் கூடும் என்று மருத்துவர் தெரிவித்திருந்தார்.
"ஆழ்ந்த உறக்கம்ன்னா... தூக்க மருந்து கொடுத்திருக்கணும்... இல்லேன்னா தண்ணி ஓவரா அடிச்சிருக்கணும்... என்ன எழவுய்யா... எல்லாப் பக்கமும் முட்டுச் சுவரா இருக்கு..." புலம்பினார் சுகுமாரன்.
"சார் ஒருவேளை அவர் சாப்பிட்ட சாப்பாட்டுல தூக்க மருந்தைக் கலந்து கொடுத்திருந்தா..." என்றார் பொன்னம்பலம்.
"ஆழ்ந்த உறக்கம்ன்னுதானே மருத்துவ அறிக்கை சொல்லுது... அப்படி இருந்தா தூக்க மருந்து கொடுத்து அதுக்கப்புறம் குத்தியிருக்காங்கன்னு சொல்லியிருக்க மாட்டாங்களா?"
சுகுமாரன் சொன்னதைக் கேட்டு பொன்னம்பலம் சிரித்தார்.
"எதுக்குய்யா சிரிக்கிறே..?"
"பின்ன என்ன சார்... நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க... விஷம் கொடுத்துக் கொன்னாக்கூட அது விஷந்தான்னு கண்டுபிடிக்க  முடியாத அளவுக்கு இன்னைக்கு உலகம் முன்னேறிடுச்சு... இது ஆப்ட்ரால் தூக்கமருந்து... அதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... ஆனா ஆழ்ந்த தூக்கத்துக்காக அப்படி ஒரு மருந்தை உபயோகப்படுத்தியிருந்தால் இந்தக் கொலையை மெடிசின் பற்றி நல்லா விவரம் தெரிந்த ஒரு ஆள்தான் பண்ணியிருக்கனும்.. ஆனா ரொம்ப பொறுமையா... சுத்தமா வேலை பார்த்திருக்காங்க.... இந்த கொலையில புரபஷனல் கொலைகாரன் இறங்கலை... ஏன்னா அவன் வெட்டிச் சாய்ச்சிட்டு போய்க்கிட்டே இருப்பான்... இங்க நெஞ்சுல குத்தி... அப்புறம் கழுத்துல கொஞ்சம் அறுத்து வச்சி... பொறுமையா கைரேகை எங்கயும் படாம விவரமா வேலை செஞ்சிருக்காங்க..."
"ம்... எனக்கென்னவோ ஒரு ஆள் செஞ்சது மாதிரி தெரியலை... ரெண்டு மூணு பேர் வந்திருக்கணுமின்னு தோணுது... ப்ரான்சிக் ரிப்போர்ட் என்னய்யா சொல்லுது..."
"சுத்தம்ன்னு சொல்லுது... எந்த ஒரு தடயமும் கிடைக்கலை... பிளாங்கா இருக்கு சார்..."
"ஒரு தடயமும் கிடைக்காமல் ஒரு கொலை.... என்னோட சர்வீஸ்ல இப்பத்தான்யா பார்க்கிறேன்... ரெண்டு நாள் ஆச்சின்னு நாளைக்கு மேலிடத்துல இருந்து போன் பண்ணி லெப்ட் ரைட் வாங்குவானுங்க.... என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை... ஒரு வெளிச்சமும் இல்லாமல் சூனியமா இருக்குய்யா..."
"சார்... தப்புப் பண்ணுனவன் எப்படியும் மாட்டுவான் சார்... என்ன கொஞ்சம் ரிஸ்க் எடுக்கணும்.... நாம ஏன் மறுபடியும் வேலைக்காரப் பெண் லதாவை விசாரிக்கக் கூடாது. "
"மறுபடியுமா...?"
"வேற வழி... அவரோட சாப்பாட்டுல விஷம் கலந்திருந்ததுன்னு சொல்லி விசாரிப்போம்."
"ம்... நாளைக்கு நீயே போயி விசாரிச்சிட்டு வாய்யா... நாங்கொஞ்சம் வெளியில புவனா கூட போக வேண்டியிருக்கு..."
"சரி சார்..."
"எதுக்கும் ஏதாவது தடயம் கிடைக்குதான்னு தணிகாசலம் கொலை நடந்த வீட்ல மறுபடியும் நம்ம ஆளுங்க ரெண்டு பேரை விட்டு இஞ்ச் பை இஞ்சா அலசிப் பாத்துட்டு வரச்சொல்லுய்யா..."
"இனி அங்க என்ன சார் கிடைக்கப் போகுது... தேவையில்லாத வேலை சார்..."
"எதுய்யா தேவையில்லாத வேலை... நமக்கே தெரியாம எதாச்சும் மறைஞ்சு கிடக்கலாம்... அப்படி ஒண்ணு கிடைச்சா அதுதான் நம்மளோட துருப்புச் சீட்டு... ஏதாவது கிடைக்கும்ன்னு மனசு சொல்லுது..."
"ம்... உங்க ஆசைக்காக ஆள் அனுப்புறேன் சார்... எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை... இஞ்ச் பை இஞ்சா அங்க நாம காலையிலயே அலசியாச்சு.."
"ஏதாவது இருக்கும்ய்யா... ஆளை அனுப்பி தேடிப்பாக்கச் சொல்லு... அந்த லதாக்கிட்ட விசாரி... ரொம்ப போர்ஸ் பண்ணாம விசாரி... முன்னுக்குபின் முரணா பேசினான்னா இங்க கொண்டாந்துரு... விசாரிக்கிற விதமா விசாரிச்சிப்போம்... சரியா..." என்றபடி அவர் நாற்காலியில் இருந்து எழ, "ஒகே சார்..." என்றபடி பொன்னம்பலமும் எழுந்தார்.
"சரி... வீட்ல இருந்து மிஸ்டுகால் வந்துக்கிட்டே இருக்கு... கோயிலுக்குப் போகணுமின்னா... நம்ம தொழில்ல கோயிலாவது குளமாவது... சொன்னா கேக்க மாட்டா... எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸேசன் வேணுமின்னு தோணுது... கோயிலுக்குப் போற நேரம் இந்தக் கேஸ்ல ஏதாவது குளூ கிடைக்கலாம்ல்ல... இப்பவே ஏழரை மணி ஆச்சு.. இனியும் நான் போகலைன்னா எங்களுக்குள்ள ஏழரை ஆயிடும்...  "
"மனுசன் நாயா பேயா அலையிறோம்.... ஒண்ணும் கிடைக்கலை... கோவில் சிலைதான் வந்து கண்டுபிடிச்சிக் கொடுக்கப் போகுது... அட போங்க சார்..."
"நீ நாத்திகவாதியில்ல... உனக்கிட்ட சொன்னா... இங்க பாரு நம்பினவனுக்கு அது தெய்வம்... நம்பாதவனுக்கு அது கல்லு.... எத்தனையோ கல்லு வெளியில கிடக்கு எல்லாம் சிலையாகுறது இல்லை... எந்தக் கல்லையும் பார்த்து மனம் உருகுறதும் இல்லை... மருகுறதும் இல்லை.... சரிவிடு உங்கிட்ட பேசினா அது பெரிய தர்க்கமாகும்... இப்ப தர்க்கம் பண்ண மூடில்லை... மண்டைக்குள்ள தணிகாசலம் ஆக்கிரமிச்சிருக்காரு.... அவரை விட அதிகமா என் பொண்டாட்டி ஆக்கிரமிச்சிருக்கா... சரி வாறேன்..." என்றபடி சுகுமாரன் கிளம்ப, பொன்னம்பலம் சிரித்துக் கொண்டார்.
சுகுமாரன் போனதும் கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு டீ வாங்கி வரச்சொல்லிக் குடித்து விட்டு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு அமர்ந்த பொன்னம்பலம், 'தடயம் கிடைக்கிதாம்... தடயம்... இஞ்ச் பை இஞ்சாவுல தேடியிருக்கோம்... தடயம் கிடைச்சா இவரு என்ன பண்ணுவாருன்னு நமக்குத் தெரியாதா என்ன..? ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறானுங்கன்னு பிடிச்சி லட்சம் லட்சமா கைப்பற்றினப்போ என்ன பண்ணுனாரு... எனக்கிட்ட ஐம்பதாயிரத்தைக் கொடுத்துட்டு சுளையா ரெண்டரை லெட்சத்தை சுருட்டிக்கிட்டு கணக்கு காட்டுனவருதானே இவரு... வேலையில புலிதான்... ஆனா இந்த மாதிரி கெடச்சா... சுருட்டுறதுலயும் புலிதானே இவரு... கேட்டா இப்ப அடிச்சிட்டுப் போன மாதிரி லெக்சர் அடிப்பாரு... அவரு சொல்றதும் உண்மைதானே... அப்படியே கொடுத்தா மேலிடத்துல உள்ளவன் தின்பான்... நாங்க சுட்டது போக கொடுத்த இருபத்தி ரெண்டு லெட்சத்துல மேலிடம் கணக்கு காட்டுனது பதினைந்து லெட்சம்தானே... ஒரு கொலைக்கேசுல கெடச்ச மோதிரம் கணக்குலயே வராம அவரு பொண்டாட்டி கைக்கு போனது தெரியாதா... என்ன' என்று மனசுக்குள்ளே பேசியபடி புகையை இழுத்து விட்டார்.
"சார்... அந்த சாமிநாதன் கேசு விஷயமா ஒருத்தர் வந்திருக்கார்..." என்று கான்ஸ்டபிள் வந்து சொல்ல "இன்னைக்கெல்லாம் முடியாதுய்யா... நாளைக்கி வரச்சொல்லு... நான் வெளியில போறேன்..." என்றபடி எழுந்தார் பொன்னம்பலம்.
'என்ன லஞ்சம்ன்னு யாருக்கிட்டயும் வாங்க மாட்டாரு... ஆனா இப்படிக் கெடச்சா எடுத்துக்குவாரு... ஏன்னா நாம எடுக்கலைன்னா மத்தவன் எடுத்துப்பான்... பொருள் சொந்தக்காரனுக்கா போகப்போகுதுன்னு சொல்வாரு... இந்த விஷயத்துல அப்படியிப்படிருந்தாலும் ஆளு கேசை முடிக்கிறதுல கில்லாடி... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா மாறி மாறி முன்னேறிப் போவார். அதில் வெற்றியும் பெறுவார். ம்... மனுசன் நாளைக்கு என்ன முடிவுல வருவாரோ...' என்று முணங்கிக் கொண்டே பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு அதை எடுத்தார். 
அது... 
ஒரு வைர மோதிரம்.
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Nisha on Sat 14 Nov 2015 - 1:48

நான்  ஒன்னுமே யோசிக்கல்ல குமார்.  கடைசில கொலையாளின்னு நீங்க யாரை சொல்றிங்களோ அவரையே கொலையாளின்னு நானும் சொல்வதா முடிவு செய்திட்டேன்பா.. ஓரு கைதேர்ந்த கிரைம் எழுத்தாளரின் லாகவத்தோடு கதையை சுழட்டி அடிக்கின்றீர்களேப்பா!  அசத்தல் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி - 9. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Wed 18 Nov 2015 - 5:48

கையிலிருந்த மோதிரத்தை பார்த்துச் சிரித்தார் பொன்னம்பலம், அது பெண்கள் அணியும் விலை உயர்ந்த வைர மோதிரம்... தணிகாசலத்தின் கொலை விவரம் அறிந்து முதலில் சென்ற பொன்னம்பலம் இஞ்ச் பை இஞ்சாத் தேடித்தான் இதைக் கண்டுபிடித்தார். மனைவியிடம் கொடுத்து விட ஆசைதான்... இருந்தாலும் ஏனோ மனசு யோசித்தது... அதனாலேயே இரண்டு நாட்களாக பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு அலைகிறார். 'இனி தடயம் கிடைக்குதா..? அதான் இருந்த ஒண்ணையும் நான் வச்சிருக்கேனே...’ என்று வாய்க்குள் முணுமுணுத்தார். ‘இதைக் கொடுத்தா கேசு முடியும்ன்னா கொடுக்கலாம்... ஆனா இது வெளியவே தெரியாமப் போயிருமே...’ என்று நினைத்தவரின்  செல்போன் கூப்பிட்டது. அதை எடுத்துப் பார்த்தவர் சுகுமாரன் அழைக்கவும், வேகமாக பட்டனைப் பிரஸ் பண்ணி "என்ன சார்... சொல்லுங்க..." என்றார்.
"எங்கய்யா இருக்கே... வீட்டுக்குப் பொயிட்டியா என்ன...?"
"இல்ல சார்... ஸ்டேசன்லதான்... சொல்லுங்க..."
"நீ என்ன பண்றே...? அந்த லதாக்கிட்ட இப்பவே போயி விசாரிச்சிட்டு எனக்கு என்னன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போ..."
"அப்படி என்ன சார் அவசரம்...? நாளைக்குப் போகலாமே..."
"இல்ல நாளைக்குத்தான் எனக்கு கொஞ்சம் பெர்சனல் வேலை இருக்குன்னு சொன்னேனுல்ல....விசாரிச்சி முடிச்சிட்டா நாளைக்கு வேற வேலை பாக்கலாம்ல்ல... அதான் இன்னைக்கே முடிச்சிடு... இது தேவையில்லாத்துதான்... பட்... உன்னோட கருத்துக்கும் மதிப்பளிக்கணுமில்ல... ஏதாவது அவகிட்ட கிடைக்கிதான்னு பார்க்கலாம்.... என்ன சரியா?"
"சரிதான் சார்... காலையில இருந்து அலையிறேன்... எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேண்டாமா? இங்கயும் கொஞ்சம் வேலை இருக்கு... நாளைக்குப் போறேன் சார்..." என்றபடி அவனின் பதிலைக் கேட்காமல் போனைக் கட் பண்ணினார்.
"வாங்க சார்... என்ன சார்...?" பயத்தோடு கேட்டாள் லதா, அவள் கணவனும் இருந்தான்.
"சும்மாதான்... உங்க ஐயா கொலையில சில தடயம் கிடைச்சிருக்கு அதான் உங்கிட்ட விசாரிச்சிட்டுப் போகலாம்ன்னு வந்தேன்..."
"எ... என்ன... தடயம் சா... சா....ர்.... அதுதான்.... எ...ல்லாம் சொ...ல்...லிட்டேனே..." பயம் கலந்த பதட்டத்தோடு கேட்டாள்.
"எதுக்கு பயப்படுறே..? ஆமா உங்க ஐயாவுக்கு அன்னைக்கு ராத்திரி நீதானே சாப்பாடு கொடுத்தே...?"
"ஆ...ஆமா..."
"என்ன மருந்து கலந்து கொடுத்தே...?"
"மருந்தா... நானா... என்ன சார் சொல்றீங்க... நா எதுக்கு கொடுக்கணும்...?"
"எதுக்கு கொடுத்தேன்னு நீதான் சொல்லணும்..."
"என்ன சார் மிரட்டுறீங்க... பெரிய இடத்து கொலையில எங்களை பலிகடா ஆக்கப் பாக்குறீங்களா?" அவளின் கணவன் வேகமாகக் கேட்டான்.
"என்னடா குரலை உயர்த்துறே... பொத்திக்கிட்டு உக்காரு... ஸ்டேசனுக்கு இழுத்துக்கிட்டுப் போனா விசாரிக்கிற விதமே வேற தெரியுமா... உம்பொண்டாட்டி உடம்புல ஒட்டுத்துணி இல்லாம விசாரிப்போம்... கூட்டிக்கிட்டு போகவா..."
"சா....சார்..."
"பேசாம உக்காரடா..." என்று உறுமிவிட்டு "நீ கேக்குறதுக்கு சரியான பதிலைச் சொல்லு... என்ன இல்லேன்னா ஸ்டேசனுக்குத்தான் வர்ற மாதிரி இருக்கும்..." என்றார் லதாவிடம்.
"சொ... சொல்...றேன்... சார்..." என்ற லதா, உலர்ந்த உதடுகளை நாக்கால் ஈரப்படுத்திக் கொண்டாள். அதற்குள் பக்கத்து வீட்டு ஆட்கள் எல்லாம் கூடிவிட "இங்க ஒண்ணும் யாரும் அவுத்துப் போட்டுக்கிட்ட ஆடலை... வாயத் தொறந்துக்கிட்டு வந்து நிக்க... இவ மொதலாளியை யாரோ கொலை பண்ணியிருக்காக அதான் விசாரிக்க வந்திருக்கேன்... எல்லாரும் போயி அவுக அவுக வேலையைப் பாருங்க..." என்று கத்திவிட்டு, "இங்க பாரு லதா... உனக்கு விவரம் தெரிஞ்சா சொல்லு... நீ பண்ணுனேன்னு சொல்ல வரலை... ஆனா யாருக்கோ உதவியிருக்கேன்னு சந்தேகம் இருக்கு..." என்றார் சற்றே கடுமையுடன்.
"சார்... சத்தியமா எனக்கு ஒண்ணுந் தெரியாது..."
"அப்ப எப்படி சாப்பாட்டுல மயக்க மருந்து கலந்துச்சு..."
"அதான் எனக்கும் புரியலை... ஆனா..."
"என்ன ஆனா... சொல்லு..."
"ஐயா படுக்கப் போகுமுன்னால ஒரு டானிக் சாப்பிடுவாங்க... அது அவருக்குன்னே ஸ்பெஷலா மதுரையில நாட்டு மருந்துக்கடையில தயார்ப்பண்றதுன்னு ரெத்தினண்ணன் சொல்லியிருக்கு... அதைச் சாப்பிட்டா தூக்கம் நல்லா வரும்ன்னு ஐயா சொல்லுவாங்கன்னு அண்ணன் சொல்லியிருக்கு..."
"ம்..." என்றவர் 'அட என்னடா இது புஸ்ஸூன்னு போச்சு' என்று நினைத்துக் கொண்டே, "அப்ப அதுல யாரோ மருந்து கலந்திருக்காக... நீ இல்லை அப்படித்தானே...?"
"சத்தியமா... ஏம் புள்ள மேல சத்தியமா எனக்குத் தெரியாது..." பதட்டம் குறைந்து தெளிவாய்ப் பேசினாள்.
"ம்... சரி அங்க ஒரு வைர மோதிரம் கிடைச்சிருக்கு... சார்க்கிட்ட இருக்கு... உனக்கு ஏதாவது அதைப் பற்றி தெரியுமா..?" மெதுவாக பிட்டைப் போட்டார்.
"ம்... வைர மோதிரம்....? ஐயா கையில கூட ஒண்ணு இருக்குமே...?"
"அதான் இருந்துச்சே... அது இல்ல... இது லேடீஸ் மோதிரம்... வித்தியாசமாய் வைரக்கல் பதிச்சி... பாக்க.... அதை எப்படி சொல்றது...? ம்..." சொல்ல வராதது போல் நடித்தார்.
"அன்னப்பட்சி மாதிரியா சார்...?" லதா கண்கள் விரியக் கேட்டாள்.
"எஸ்... அதே... அதேதான்... நீ பாத்திருக்கியா..?"
"ஆமா சார்... அது எங்க தர்ஷிகா அம்மா போட்டிருப்பாங்க... இங்க வர்றப்போ நான் பாத்திருக்கேன்... நானும் அவுகளும் போன்ல போட்டோ எடுத்திருக்கோம்... அதுல கூட இருக்கும்... இருங்க காட்டுறேன்..." என்றபடி தனது மொபைலில் போட்டோவைத் தேடி எடுத்துக் காட்டினாள்.
அதில் லதாவின் தோளில் தனது வலது கையைப் போட்டபடி சிரித்துக் கொண்டு நின்றாள் தர்ஷிகா. அவளது விரல்களைப் பெரிதுபடுத்திப் பார்த்த பொன்னம்பலம் அதிர்ந்தார். அவளின் கையில் அதே மோதிரம்... 
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Wed 18 Nov 2015 - 12:31

எவ்வளவு அருமையா எழுதுறீங்க குமார் சஸ்பென்ஸ் தாங்கல சிக்கிரம் கதை முடிவு சொல்லுங்க....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16623
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Wed 18 Nov 2015 - 20:45

பானுஷபானா wrote:எவ்வளவு அருமையா எழுதுறீங்க குமார் சஸ்பென்ஸ் தாங்கல சிக்கிரம் கதை முடிவு சொல்லுங்க....

என்னையப் போயி க்ரைம் கதை அருமையான எழுதுறேன்னு சொல்ல எங்க அக்கா நீங்க இருக்கீங்க போங்க...

வைர மோதிரத்தை நுழைச்சிட்டேன்... இனி என்ன பண்றது...

உங்ககிட்ட மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன்... கொன்னுட்டு எவனாவது வைர மோதிரத்தைப் போட்டுட்டுப் போவானா... வீட்டையே திருப்பிப் போட்டு தேடியிருக்கமாட்டான்....

இன்னைக்குத்தான் இதை யோசித்தேன்... குமார் மாட்டிக்கிட்டான்.... பேசாம தர்ஷிகாதான் பண்ணுச்சுன்னு ஏதாவது காரணத்தை சொல்லியிருக்கலாமோன்னு யோசிக்க வைச்சிருச்சு போங்க...

இனி அந்த வைர மோதிரத்தை வைத்து தேடுறதா... இல்லையா...?

அதை சுகுமாரனிடம் கொடுக்கலாமா... வேண்டாமா...?

இப்படியெல்லாம் யோசிக்கணுமே அக்கா...

ஹா...ஹா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Thu 19 Nov 2015 - 14:55

ஆக மொத்தம் எங்களை யோசிக்க வச்சு சுத்தல்ல விடுறீங்க அப்படித் தானே குமார்....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16623
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Fri 20 Nov 2015 - 8:55

பானுஷபானா wrote:ஆக மொத்தம் எங்களை யோசிக்க வச்சு சுத்தல்ல விடுறீங்க அப்படித் தானே குமார்....
நானும் சேர்ந்து யோசிக்கிறேன் அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி - 10. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Fri 20 Nov 2015 - 9:01


(தர்ஷிகா)

பொன்னம்பலம் அந்த மோதிரத்தைப் பார்க்கவும் "சார் இதுவா சார்...?" என்றாள் லதா.

"ஆமா... இதே மோதிரம்தான்... எனக்கு அந்த போட்டோ வேணும்" என்றபடி அதை தனக்கு அனுப்பிக் கொண்டார்.

"ஆனா எங்க தர்ஷிகா அம்மா அன்னைக்கு இங்க வரலியே சார்... யாராச்சும் அவங்க மேல பலி போட மோதிரத்தை களவாண்டு கொண்டாந்து போட்டிருக்கலாம்..."

"இங்க வந்தாங்களா... வரலையா... களவாண்டு போட்டாங்களான்னு நாங்க பாத்துக்கிறோம்... ஆமா உங்க தர்ஷிகா அம்மா இங்க அடிக்கடி வருவாங்களா?"

"ஐயாவோட எப்பவாச்சும் வருவாங்க... பிரண்ட்ஸ்ங்க கூட ஊர் சுத்திப்பாக்க வந்தா இங்க தங்குவாங்க..."

"ஓ... ஆமா... கொலை நடந்தன்னைக்கு கேட்டதுக்கு ஐயா மாசத்துல மூணு நாள்தான் வருவாரு... அப்பத்தான் வேலையின்னு எல்லாரும் சொன்னீங்க... இப்ப அவரு பொண்ணு வரும்ன்னு சொல்றே... எதையோ மறைக்கிறே போல..."

"சத்தியமா இல்லை சார்... எனக்கு ஐயா வரும்போதுதான் வேலை.... தர்ஷிகா அம்மா ஐயாவோட வந்தப்போ நான் பாத்திருக்கேன்... மற்றபடி ஊரு சுத்திப்பாக்க வந்தா அங்க தங்குவாங்க... சாப்பாடெல்லாம் வெளியதான்... ரெத்தினண்ணந்தான் அவங்க வந்திருக்காங்கன்னு சொல்லும்..."

"ம்... சரி நான் வந்து மோதிரம் பற்றி விசாரிச்சதை யாருக்கிட்டயும் சொல்லக்கூடாது... குறிப்பாக உங்க தர்ஷிகா அம்மாக்கிட்ட... சரியா..?"

"பெத்த அப்பாவை அது கொல்லுமா சார்.. பாவம் சார்... யாரோ பழி போட்டிருக்காங்க.."

"பாக்கலாம்... இன்னும் ரெண்டு நாள்ல யாருன்னு தெரிஞ்சிரும்ல்ல..." என்று எழுந்தவர், "இங்கரு... கீச்சு மூச்சின்னு கத்துனேன்னு வச்சிக்க... நீதான் அவளுக்கு உதவுனேன்னு சொல்லி ஸ்டேசன்ல அம்மணமா உக்கார வச்சிருவேன்... ஜாக்கிரதை..." என்று அவளின் கணவனிடம் கர்ஜிக்க, அவன் பேசாமல் அமர்ந்திருந்தான்.

"அய்யே... சார்... அது அப்புராணி... எங்கிட்ட நீங்க வேகமாப் பேசவும் கோவத்துல அப்புடிக் கேட்டுருச்சு... அதை எதுவும் பண்ணிடாதீங்க சார்..." கையெடுத்துக் கும்பிட்டாள் லதா.

சுகுமாரனுக்கு போன் பண்ணி "சார்... அவரு ஏதோ நாட்டு மருந்து ஸ்பெஷலா தயார்ப்பண்ணி சாப்பிடுவாராம்... அது நல்லா தூக்கம் வருமாம்... சோ ஆழ்ந்த தூக்கத்துக்கு அதுகூட காரணமாக இருக்கலாம்." என்றார்.

"என்னய்யா... வேற ஒண்ணும் தேறலையாக்கும்... அதான் தெரிஞ்சதுதானே..." எதிர்முனையில் சுகுமாரன் சிரித்தார்.

"கிடைச்சிருக்கு சார்... "

"என்ன கிடைச்சிருக்கா... என்னய்யா.. சொல்லுய்யா... சொல்லு... " சுகுமாரன் பரபரத்தார்.

"இப்பத்தான் சிரிச்சீங்க... அதுக்குள்ள பதர்றீங்க..." என்றவர் "சார்... ஒரு வைர மோதிரம் கிடந்ததுன்னு பிட்டைப் போட்டுப் பார்த்தேன்... நான் லேசா ஆரம்பிக்க அவளே உள்ளே வந்தாள்.. அந்த மோதிரம் தர்ஷிகாவோடதுன்னு சொன்னா, நானும் போட்டோ பார்த்தேன்."

"அட ஏன்ய்யா... இதுல என்ன சிக்கியிருக்கு...? வைரமோதிரம் நம்மக்கிட்ட சிக்கலை... அப்புறம் பொய் சொல்லி என்னாகப் போகுது..."

'மோதிரம் எங்கிட்ட இருக்கே' அப்படின்னு சொல்ல நினைத்து அதை அப்படியே விழுங்கிவிட்டு "சார்... அந்த தர்ஷிகா இங்க வந்தபோது கையில மோதிரம் பாத்தீங்களா?" என்று கேட்டார்.

"அவ போட்டாந்தாளா இல்லையான்னு தெரியலை... அதுபோக வைர மோதிரம்ன்னா விட்டுட்டுப் போயிருப்பாங்களா... வீட்டையே தொடச்சி தேடியிருக்க மாட்டாங்க... அட ஏய்யா நீ வேற..." என்றதும் 'அதுசரி அப்ப இது வைரம்தானா...?' என்ற யோசனை அவருக்குள் எழுந்தது.

"நல்லா யோசிங்க சார்..."

"அட என்னத்தையா யோசிக்க... மோதிரம்...?" என கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தவர், "அட என்னய்யா நீ வேற... மோதிரம் ஞாபகம் வரலைய்யா... என்னென்னமோ ஞாபகத்துல வருது... அவளுந்தான் கையி காலையா பாக்குற மாதிரியா இருந்தா... அவளைப் பார்த்தாலே கண்ணு....." பேச்சை நிறுத்தினார்.

"உங்க கண்ணு போனதைத்தான் நானும் பார்த்தேனே... என்ன பேச்சு பாதியில நின்னுருச்சி... பக்கத்துல திருமதி.சுகுமாரனா...? அதான்... பொட்டிப் பாம்பாயிட்டீங்க... உங்களுக்கு ஞாபகம் இல்லைதானே..."

"ம்... ஆமா... சரி சொல்லுய்யா...?"

"எனக்கென்னவோ அவ கையில மோதிரம் இருந்த மாதிரித் தெரியலை..."

"உண்மையாவா...?"

"ஷ்யூர்ன்னு சொல்ல முடியாது... ஆனா கையில மோதிரம் இல்லைன்னு மனசு சொல்லுது..."

"மனசு சொல்லுது... ம...." வார்த்தையை  முடிக்குமுன் பொன்னம்பலம் "சார்" என்று கத்தினார்.

"அட மத்தவன் சொல்றான்னு சொல்ல வந்தேன்யா..."

"நீங்க என்ன சொல்ல வந்தீங்கன்னு தெரியும்... அதை விடுங்க... நம்ம டார்க்கெட் இப்ப தர்ஷிகா..."

“என்னய்யா நீ வயல்ல மாடு மேஞ்சுச்சுன்னா மாட்டுக்காரனோட சண்டைக்குப் போகலாம்... மாடே மேயாம சண்டைக்குப் போகணுங்கிறே... ரெண்டு நாளைக்கு முன்னாடி மேஞ்சிச்சான்னு யோசிக்கச் சொல்றே... அதையும் வயல்ல போயி பாத்துட்டு வரலாங்கிறே... அட போய்யா....”

“சார்... நீங்க மதுரை போகணுமின்னு சொன்னீங்கதானே...?”

“ஆமா... போயி அங்க ஏதாவது தேறுதான்னு பாப்போம்ன்னு சொன்னேன்...”

“நாளைக்கே அந்த வேலையாப் போறோம்... அப்படியே மோதிர மேட்டர் விசாரிக்கிறோம்...”

"நாளைக்கா....? நாமளா...?"

“ஏன் சார் அலருறீங்க... நாமதான் போறோம்...”

“போவலாம்ய்யா... அதுக்கு பேசாம லோக்கல் போலீசுக்கிட்ட சொல்லி விசாரிக்கலமே... ஏதாவது சிக்கல்ன்னா...”

"ஒரு சிக்கலும் இல்லை... அபீசியலா போக வேண்டாம்... அன் அபீசியலா போய் விசாரிச்சுட்டு வருவோம்... அவதான்னு கன்பார்ம் ஆனா அதுக்கு அப்புறம் லோக்கல் போலீசைக் கூப்பிட்டுக்கலாம்...."

"ம்... ஆனா நாளைக்கு வேண்டாம்... சொந்த பந்தமின்னு எல்லாம் இருக்கும்... அழுகையும் ஒப்பாரியுமா இருக்கும்... இந்த வார சனி, ஞாயிறுல போகலாம்ய்யா."

"ஓகே... அதுவும் சரிதான்... ஆனா கொலையாளி சுதாரிக்கும் முன்னே நாம அங்கிருக்கணும்..."

"இப்ப இங்க யாருய்யா கொலையாளி... சும்மா போறோம்... சரியா... நீயே பில்டப் பண்ணுறே... ஏய்யா... மோதிரம் கீதிரம் எடுத்தியாய்யா...”

“அட போங்க சார்... நீங்க வேற.... சரி சார்... நாளைக்குப் பார்ப்போம்...”

ணிகாசலம் வீட்டில்...

"வாங்க சார்... என்ன திடீர்ன்னு... ஏதாவது விவரம் கிடைச்சதா?"

"அதான் இங்க வந்திருக்கோம்... சீக்கிரம் பிடிச்சிடலாம்..."

"என்ன சொல்றீங்க...? எனக்குப் புரியலை..." என்று வருண் சொன்னபோது மாடியில் இருந்து இறங்கி வந்தாள் தர்ஷிகா. அவளைப் பார்த்ததும் பொன்னம்பலம்  கண்கள் அவளின் விரலைத் தேடின மோதிரம் பார்க்க... வலது கையால் முன் விழுந்த முடியை பின்னால் தள்ளினாள். கண்களை லென்ஸ் ஆக்கி விரலில் பார்த்தார்.

அங்கே....

மோதிரம் இல்லை.

(படம் பிரியா அக்கா வரைந்தது... முன்பே வேறொரு பதிவிற்கு சுட்டுப் போட்டிருக்கிறேன்... இப்ப மீண்டும்.... நன்றி அக்கா)

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.


Last edited by சே.குமார் on Fri 20 Nov 2015 - 12:13; edited 1 time in total
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1400
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum