சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Yesterday at 21:39

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Yesterday at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Yesterday at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Yesterday at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Yesterday at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Yesterday at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

.

சின்னச் சின்ன கதைகள்

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Go down

Sticky சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 13 Oct 2015 - 16:57

First topic message reminder :

கொடுத்துப் பெறுதல்
--------------------------------

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

நன்றி: ந. உதயகுமார்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 27 Jan 2016 - 19:25

நிறம்
----------
அண்ணா பூங்காவிற்குள்  நுழைந்ததுமே  புவனாவின்  கண்களில் அவர்  பட்டு  விட்டதால் அவளுக்கு  கோபம் தலைக்கேறியது...
நேராய்  அவரிடம்  சென்று... "நீங்கல்லாம்  என்ன  நினைச்சிகிட்டு இருக்கீங்க மனசுல?. நீங்க  பொண்ணு  பார்க்க  வர்றீங்கன்னு   நாங்க  அலங்காரம்  பண்ணிட்டு  
இருப்போம். நீங்க வந்து  பார்த்துட்டு, நல்லா சாப்பிட்டுட்டு ,பொண்ணே பிடிக்கலன்னு 
சொல்லிட்டு  போயிடுவிங்க. உங்களுக்கெல்லாம்  மனசுல மன்மதன்னு  நினைப்பா?" என்று மூச்சிரைக்க  முடித்தாள் புவனா.

அவர்  நிதானமாய்  தொடங்கினார் ."இப்ப  நான்  பேசலாமா ? மேடம்  நேற்று  உங்க  வீட்டுக்கு  பொண்ணு  பார்க்கத்தான்  வர்றேன்னு  எனக்கு தெரியாது வீட்டுல  கிளம்பசொன்னங்கன்னு  வந்ததுக்கு  அப்புறம்  தான்  தெரிஞ்சது. நான்  கல்யாணம்  பண்ணிகிட்டா  கறுப்பான ஒரு  பொண்ண தான்  கல்யாணம்
பண்ணிக்கனும்னு  இருக்கேன். ஏன்னா   கறுப்பான  பெண்கள்  எப்படில்லாம்   நிராகரிக்க  படறாங்கன்னு  எனக்கு  தெரியும் . நீங்க  அழகா  இருக்கீங்க, உங்களுக்கு  என்ன  விட நல்லா  மாப்பிள்ளை, நீங்க  சொன்ன  மாதிரி  மன்மதன்  கிடைப்பான். அதனால   தான்  பிடிக்கலன்னு சொன்னேன். இத  உங்க  கிட்ட  சொல்ல  நினைச்சேன் . உங்க  அப்பா  பேச  ஒத்துக்கல ,அதான்  வேண்டான்னு  சொல்லிட்டேன் " என்று  நிறுத்தி  நிதானமாய்  முடித்தார்.

தன்  அவசரத்தனத்தை  உணர்ந்து  தலை  குனிந்தாள்  புவனா            
 " சாரி  சார் ,என்ன மன்னிச்சிடுங்க .உங்க மனசு   தெரியாம  கோபப்பட்டுட்டேன்.இப்ப உங்கள  நினைச்சு  ரொம்ப  சந்தோஷப்படறேன். உங்க கல்யாணத்துக்கு  என்னை  கட்டாயம்
நீங்க  கூப்பிடனும்"  என்று  கண்களை துடைத்து  வெளியேறினாள்.


Ram Ananth
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 27 Jan 2016 - 19:26

கொடுத்துப் பெறுதல்
-------------

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

நன்றி: ந. உதயகுமார்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 8 Feb 2016 - 18:41

ராகவனின் எண்ணம் - தாமோதரன்
---------------

வீட்டிற்குள் நுழையும் போது இரவு 7.30 ஆகி விட்டிருந்தது ராகவனுக்கு, அவர் மனைவி வாசலிலே இவருக்காக காத்திருந்தாள், ஏங்க! இன்னைக்கு இவ்வளவு லேட்.. எதுவும் பேசாமல் துணிமணிகளை கழட்டி விட்டு கொடியில் தொங்கிய துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு புழக்கடை சென்று வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் பளீரென அடித்து, சர்ரென தண்ணீரை எடுத்து தன் இரு கால்களிலும் விட்டு,  கால்களாலே மாறி மாறி தேய்த்து கழுவி விட்டு உள்ளே வந்தார்.அவர் மனைவி அவர் பதிலை எதிர்பார்த்தவாறு கையில் வேட்டியுடன் நின்றாள். அதை வாங்கி இடுப்பில் கட்டிக்கொண்டு துண்டை உருவி முகம் கை கால்களை துடைத்துக்கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அக்கடாவென உட்கார்ந்தார். உடல் அசதியக இருந்தது, இதற்குள் மனைவி கையில் காப்பியுடன் வர அதை வாங்கி இரசித்து குடித்து காலி டம்ளரை மனைவியின் கையில் திணித்தவர் இன்னைக்கு ஏதோ போராட்டமாம், பஸ் எல்லாம் திருப்பி விட்டுட்டாங்க, காந்திபுரத்துல இருந்து சாய்பாபா காலனி வர்றதுக்குள்ள... ஸ்..ஸ்.. அப்பப்பா.. சலித்துக்கொண்டார்.

இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிதான், தினமும் இவர் நேரம் கழித்து வருவது, பின் சலித்துக்கொள்வது.... மகன் ரமேசை வண்டியை எடுத்து வந்து ஆபிஸ் வாசலிலேயே ஏற்றிக்கொண்டு வீட்டில் கொண்டு விட சொன்னாலும் இவர் ஒத்துக்கொள்ள மாட்டார்.

கல்யாணமாகிச்சென்ற தன் மகள் கல்பனா அவள் புகுந்த வீடு போகும் வரை தன் தந்தையிடம் மன்றாடி பார்த்து விட்டாள் தன் வண்டியிலேயே அவரை ஆபிஸ் கொண்டு விட்டு விடுவதாகவும் மாலையில் வீட்டில் கொண்டு விடுவதாகவும், இவர் உனக்கு எதற்கு வீண் சிரமம் என்று அவளை தவிர்த்துவிட்டார். மகன் ரமேசுக்கும் இது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை, அவன் அரசு பொறியியல் கல்லூரியில்தான் படிக்கிறான், வரும்போதோ, போகும்போதோ அவரை கூட்டி செல்வது. ஆனால் அவர் ஒத்துக்கொண்டால்தானே! இது போக வீட்டில் கல்பனா உபயோகப்படுத்திய வண்டியும்.சும்மாதான் இருந்தது,  ஒரு பத்து நாள் இவர் காலில் ஏதோ சுளுக்கு என்று நடக்க கஷ்டப்பட்டபொழுது ரமேசுதான் தினமும் அவரை அலுவலகத்துக்கு கூட்டிச்சென்று விட்டு பின் மாலையில் அழைத்து வந்துகொண்டிருந்தான் கால் சரியானதும் அவனை வரவேண்டாமென்றுவிட்டார், வழக்கம் போல வீட்டிலிருந்து அரை பர்லாங்கு தூரம் நடந்து பஸ் ஏறி அலுவலகம் சென்று வந்தார். ரமேசு அம்மாவுடன் புலம்புவான், அப்பா ஏம்மா இப்படி இருக்கறாரு அவரும் கஷ்டப்பட்டு நம்பளையும் கஷ்டப்படுத்தறாரு.ராகவனின் மனைவி ஒன்றும் பேசமாட்டாள், விடுறா அவரா கூப்பிடும்போது  நீ போனா போதும்.

ராகவனும் அவர் மனைவியும் இந்த காலனியில் வீடு கட்டி குடி வருவதற்கு முன்பு ஏழெட்டு வீடுகளில் வாடகைக்கு குடியிருந்தனர், வீட்டுக்காரர்களின் ஆதிக்க மனப்பான்மை இவர்களால் தாளமுடியாமல் நகைகள் அனைத்தையும் விற்று ஒரு மனையை இந்த காலனியில் வாங்கி போட்டனர், அப்பொழுதெல்லாம் இந்த காலனி ஒரே பொட்டல் காடாக இருந்தது.அதன் பின் இவர் வேலை செய்யும் அலுவலகம் மூலமாக வீட்டு கடன் வாங்கி ஒரு வழியாக வீட்டைக்கட்டி முடித்தனர்.

அப்பொழுது கல்பனா சிறுமியாகவும்,ரமேசு கைக்குழந்தையாகவும் இருந்தனர். இவரோடு நான்கைந்து பேர் தொடர்ந்து அங்கு வீடு கட்ட ஒருவருக்கொருவர் அணுசரனையாக இருந்தனர், அப்பொழுதெல்லாம் வீடு கட்ட கடன் கிடைப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போல, பணத்துக்கு இவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், வீடு கட்டும் இடத்தில் ஒருவருக்கொருவர் அனுசரணயாக இருந்ததால் வருத்தம் தெரியவில்லை. வீடு கட்டி முடித்தவுடனேயே பாலைக்காய்ச்சி குடி வந்து விட்டனர். அப்பொழுதெல்லாம் தண்ணீர் கஷ்டமும் கூட, இருபது வீடுகள் மட்டுமே அப்பொழுது கட்டி முடித்து குடி வந்திருந்தனர், அவர்கள் கூடி பேசி ஒரு போர்க்குழாய் அமைத்து ஓரளவு தண்ணீர் பிரச்னையை தீர்த்துக்கொண்டனர்.

பின் காலனியில் வீடுகள் பெருக பெருக வசதிகளும் பெருகி அன்று இது பொட்டல் வெளியாக இருந்தது என்பதை இவர்களாலே இப்பொழுது நம்ப முடியவில்லை. வீடு கட்டி குடி வரும்பொழுது இவர்களுக்கு இருந்த கடன் கழுத்தளவு இருந்தது, ஆனால் ராகவனின் மனைவியின் சாமார்த்தியத்தால் கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்பட்டு நகை நட்டுக்கள் செய்து தன் மகளை நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்துவிட்டனர்.வீடு கட்டி பத்து வருடங்கள் வரை இவர் தினமும் சைக்கிளிலேயே அலுவலகம் சென்று வருவார், அதன் பின் 
சைக்கிள் மிதிக்க உடல் ஒத்துழைக்காததால் பஸ்ஸை நாட ஆரம்பித்து எட்டு வருடங்கள் ஓடிவிட்டன.

ஒரு நாள் ரமேசின் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை, அப்பாவுடனே வண்டியை தள்ளிக்கொண்டு வந்து வண்டி பழுது பார்க்கும் கடையில் விட்டு விட்டு அவ்ருடனே பஸ்ஸில் செல்வதற்கு அப்பாவுடனே கிளம்பினான், இருவரும் வெளியே நடந்து வர எதிரில் வந்த ஆட்டோ ஓட்டுனர் வணக்கம் ஐயரே என்று வணக்கம் சொல்ல இவரும் பதில் வணக்கம் தந்தார், அதன் பின் இவர் நடக்க வழியங்கும் விசாரிப்புக்கள், உங்க பையனா? என்ன பண்றார்? என்று, வழியெங்கும் கடைகள், ஏன் தள்ளுவண்டி வைத்திருப்போர், அனவைரும் இவருடன் ஒரு நிமிடம் நின்று பேசி விட்டி சென்றனர், அவசரமாக செல்வோர் ஒரு புன்னகையுடன் கையசைத்து விட்டு சென்றனர். ரமேசுக்கு வியப்பு, அப்பாவுக்கு இத்தனை நண்பர்களா ! அவரும் முகமலர்ச்சியுடன் எல்லோரிடமும் கல கலப்பாக பேசிக்கொண்டு வந்தார். பஸ் ஏறியும் இவரின் விசாரிப்புகள் குறையவில்லை, இவரைப்போல தினமும் பஸ்ஸில் வருபவர்களுடன் ஒரே 
பேச்சுத்தான். இவன் தந்தையிடம் சொல்லி கல்லூரி செல்ல பாதியில் இறங்கிவிட்டான்.

மாலையில்  ராகவன் வீடு வந்து சேர்ந்த பொழுது ரமேசு சீக்கிரமே வீடு வந்திருந்தான். ராகவன் தன் வழக்கமான சிரம பரிகாரங்கள் முடித்து உட்கார்ந்திருந்தபொழுது ரமேசு அப்பாவின் அருகில் மெல்ல வந்து உனக்கு எத்தனை பிரண்ட்ஸ்ப்பா..எல்லார்கிட்டயும் பேசறயே..ஆச்சர்யப்பட்டான்.

அவன் முகத்தை பார்த்த ராகவன் உங்கம்மாவும் நானும் இந்த வீடு கட்ட ஆரம்பிக்கும்போது சுத்தி இருக்கறவங்க எங்களுக்கு எத்தனையோ உதவி செஞ்சாங்க, நீங்க இரண்டு பேரும் சின்னக்குழந்தைங்க, அப்ப இருந்து இப்ப வரைக்கும் எல்லோரும் என்னிடம் நல்லா பழகுறாங்க, நானும் அவ்ங்களோட நல்லா பழகுறேன், நாம என்ன காசு பணமா செலவு பண்றோம், ஒரு வணக்கம், ஒரு சிரிப்பு, அல்லது எப்படி இருக்க்றீங்க அப்படீன்னு விசாரிப்பு,இது தாண்டா நமக்கு நட்பை கொடுக்கும். நான் ஏன் உன வண்டியிலோ, இல்ல கல்பனா வண்டியிலோ வரலை தொ¢யுமா? இந்த மாதிரி எல்லா முகங்களையும் நாம தினமும் சந்திச்சா நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்னு நம்புறேன். வீட்டுல வண்டி ஏறி ஆபிஸ்ல இறங்கி, அங்கிருந்து திரும்ப வண்டி ஏறி வீடு வந்து சேர்ந்து, அதுக்கப்புறம் தூங்கி காலையிலே யார் முகமும் தெரியாத நாலு மணிக்கு வாக்கிங் போயி, எதுக்குடா இந்த முகமூடி வாழ்க்கை என்னால் நடக்க முடியற வரைக்கும் இந்த முகங்களோட பரிச்சயம் இருக்கணும், அவ்வளவுதான்..

நான் நடக்க முடியாம இருக்கும்போது உங்க உதவி கேப்பேன் அப்ப எனக்கு உதவி செய்யுங்க.!  ரமேஷ் அப்பாவின் கைகளை பிடித்துக்கொண்டான். ராகவன் மனைவி அவரை முன்னரே புரிந்து கொண்டதால் புன்சிரிப்புடன் நின்றாள்.

நன்றி  தாமோதரன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 8 Feb 2016 - 18:42

குலதெய்வம்-சங்கர் ஜெயகணேஷ்
---------------
கடந்த ஒரு வருடமாவே சரவணன் நடத்தி வந்த பலகார கடை, பாத்திர கடை அனைத்தும் நட்டத்தில் நடக்க ஆரம்பித்தன; சரவணன் உடல்நிலையும் சரியாக இல்லை, சர்க்கரை வியாதி, கால் வலி என்றும் அவதி பட ஆரம்பித்தான்.  அது மட்டுமில்லாமல் குடும்பத்தில் நிறைய சண்டைகள் இவனுக்கும் மனைவிக்கும் இடையே, இது எல்லாம் போதாது என்று பூர்வீக சொத்து ரூபத்தில் பங்காளி பிரச்சனை வேறு வந்தது.  சரவணன் பல பிரச்சனைகளால் திக்கி திணறினான். 

என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் அவன் குடும்ப ஜோசியர் ஜோதிட சிகாமணி சிங்காரம் நினைவுக்கு வந்தார், அவரிடம் சென்று தன் ஜாதகத்தை காட்டி பரிகாரம் கேட்கலாம் என்று முடிவு செய்தான்.

அவர் இவன் ஜாதகத்தை அலசி பார்த்துவிட்டு உனக்கு இப்ப கேது திசை நடக்குது; ராகுவும் சரியான இடத்தில் இல்லை, அதனால் எந்த ஒரு காரியம் செய்யும் முன் பல தடவை யோசித்து செய்ய வேண்டும்.  ஒரு முறை உங்க குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் கொஞ்சம் பிரச்சனையில் இருந்து தப்பலாம், ஆனால் முழுவதும் தப்ப முடியாது என்று கூறிவிட்டார். 

சரி என்று சொல்லிவிட்டு, ஏற்கனவே குடும்ப சூழ்நிலை சரியில்லை, இதுல அவளை  எல்லாம் கூட்டி கொண்டு போக முடியாது என மனதில் நினைத்து கொண்டு தனியாக போக முடிவு செய்தான்.  அய்யனார் இவன் குலதெய்வம்; அதுவும் திருநெல்வேலி அருகில் உள்ளது. இவன் கோவில்லுக்கு சென்று சுமார் ஒரு ஐந்து வருடம் ஆயிற்று.  சரி ரொம்ப நாள் கழித்து போகிறோம், வருகின்ற அம்மாவாசை பூஜைக்கு போக முடிவு செய்தான். மாதந்தோறும் அம்மாவாசை  இரவில் அங்கு பெரிய படையில் இட்டு அய்யனாருக்கு ஒரு பூஜை நடக்கும், தாயாதிகள் சில பேர் மட்டும் இந்த பூஜையில் கலந்து கொள்வார்கள்.  மகாளய அம்மாவாசை பூஜை தான் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

மதுரையில் இருந்து பஸ்சில் திருநெல்வேலிக்கு போகும் போது  பழைய நினைவுகள் இவன் நினைவுக்கு வந்தன. ஒருவழியாக  திருநெல்வேலியை அடைந்து மதியம் சாப்பிட்டுவிட்டு, ஒரு டவுண்பஸ் பிடித்து குலதெய்வ கோவிலுக்கு சென்றான்.  பஸ்சில் இருந்து இறங்கி வயக்காட்டு பக்கமாக நடந்தான், போகும் போது  இவன் பால்ய நண்பன் குமாரை பார்த்தான்; பார்த்தவுடன் வியப்படைந்தான்.  ஐந்து வருடம் முன்பு பார்க்கும் போது கஞ்சிக்கு வழியாமல் ஒரு கிழிந்த சட்டை போட்டு ஊர் சாவடியில் படுத்து கிடந்தவான் தான் இந்த குமார்.  இப்ப பார்த்தால் வெள்ளையும் சொள்ளையும் மட்டும் இல்லாமல், கழுத்து நிறைய தங்க சங்கலியும் மின்னியது. 

என்ன குமாரு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்ட என்று கேட்டான்.  

என்ன சரவணா இந்த பக்கம் என்று இவன் கேள்விக்கு பதில் கூறாமல்  மறு கேள்வி கேட்டான்?

ஏன் நான் உன்னை பார்க்க வர கூடதா?

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை?  ஒரு ஐந்து வருடமா நீ கோவில் திருவிழாவுக்கு கூட வரவில்லை அதனால் தான் என இழுத்தான். 

வியாபாரம் ஒன்னும் சரியில்லை, குடும்பத்திலும் ஆயிரம் பிரச்னை, அது தான் இந்த பக்கம் தலை வைக்க முடியவில்லை.

உனக்கு வியாபாரம் எப்படி என்று கேட்டான்.

எதோ ஆண்டவன் புண்ணியத்தில் இப்ப வியாபாரம் நல்ல போகுது.  அக்கம் பக்கம் யாரும் வருகிறார்களா என்று பார்த்து விட்டு, எல்லாம் இந்த ஒரு மோதிரத்தால் தான் என்று சொல்லிவிட்டு தன் கையை கட்டினான்.  

இது என்ன ராசிக்கல் மோதிரமா என்று கேட்டான் சரவணன்

ஆம் இது ஒரு விலை உயர்ந்த ராசிக்கல் மோதிரம், இதற்க்கு பெயர் நாகரத்தினம் என்று கூறிவிட்டு மறுபடியும் அக்கம் பக்கம் சுற்றி பார்த்து விட்டு ஒரு ரகசியம் சொல்றேன் என்று இவன் காதில் ஒன்றை சொன்னான்.   பாம்புகளிடத்தில் நாகரத்தினம் என்னும் ஒரு சிவப்புக் கல் இருக்கும், அதுக  அம்மாவாசை போன்ற நாள்களில் இரவுநேரத்தில் இரை தேடுவதற்கு வசதியாக இதைப் வெளியில் வைத்து விட்டு அந்த வெளிச்சத்தில் இரை தேடும்.  ஒரு நாள் அம்மாவாசை அன்று இரவு குளத்துக்கு போகும் போது எனக்கு ஒரு பெரிய நாகரத்தினகல் கிடைத்தது இதை யாரிடமும் சொல்லாதே என்றும் கூறினான்.   அதுமட்டுமில்லாமல் அந்த கல்லை நான் அதிக விலைக்கு விற்று விட்டேன், ஒரு சிறிய அளவு கல்லை என் விரலில் மோதிரமாக போட்டு கொண்டேன்.  

நாகரத்தினத்தை அணியும் ஒருவனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது வீட்டில் குபேரன் காசு  பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளிடம் இருந்தும் தப்பிக்கலாம் என்றும் கூறினான்.  இருவரும் கொஞ்சம் நேரம் வேற வேற விசயங்களை பேசிக்கொண்டு இருந்துவிட்டு இறுதியில் நான் குலதெய்வ கோவிலுக்கு வந்தேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.   

இரவு அம்மாவாசை பூஜையில் கலந்து கொண்டு, மனமுருக அய்யனாரை பிராத்தனை செய்தான், பூஜை முடியவே இரவு 2 மணி ஆனதால் கோவிலில் தூங்கினான்.

அதிகாலையில் எழுந்து வயக்காட்டு பக்கம் நடந்து வரும் போது தான் பார்த்தான் குமார் இறந்துகிடப்பதை; ஊரே அதிகாலையில் கூடி நின்று வேடிக்கை பார்த்தது, குமாரின் காலுக்கடியில் ஒரு பாம்பும் அடிபட்டு இறந்துகிடந்தது.  குமார் கைகளில் சாணியும் ஒரு பாம்பை அடித்த ஒரு கம்பும் இருந்தது.   வாரம் வாரம் தவறாமல் பாம்பு புற்றுக்கு பால் வார்பார்; அது மட்டுமில்லாமல் நாகரத்னகல் வேற கையில் போட்டு இருந்தார், இருந்தும் பாம்பு அவர் உயிரை பலிவாங்கிவிட்டது என்று ஊர்காரர்கள் பேசிக்கொண்டு இருந்தது அவன் காதில் கேட்டது, உடனே அவனுக்கு நேற்று குமார் சொன்ன நாகரத்தினகல் நினைவுக்கு வந்தது. குமார் இறந்த இடங்களை சுற்றி சுற்றி நோட்டம் விட்டான், ஒரு இடத்தில் ஒரு சிறிய கல் போன்ற சாணிகுவியலை பார்த்தான்.  உடனே யாருக்கும் தெரியாமல் அந்த சாணி குவியலை எடுத்து பையில் போட்டு கொண்டான். நண்பனின் இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ளாமல் உடனே ஊருக்கு திரும்பினான்.   திருநெல்வேலி வந்து அடைந்ததும் அந்த சாணியை கழுவினான்; நாகரத்தினகல் மின்னியது, அவன் கண் கூசியது.  உடனே திருநெல்வேலியில் உள்ள ஒரு பொற்கொல்லர், வீட்டிற்கு சென்று அந்த கல்லை கொடுத்து விலை பேசினான்; ஒரு வழியாக அந்த கல்லை பல லட்சங்களுக்கு விற்றான்.  இவனுக்கும் அதில் ஒரு சின்ன மோதிரமும் செய்து கொண்டான், ஒரு நாள் முழுவதும் சந்தோசமாக இருந்துவிட்டு மறுநாள் ஊருக்கு கிளம்பினான்.

ஒரு சில மாதங்கள் முதலில் கொஞ்சம் பழைய கடன்களை அடைத்தான், வேறு சில தொழில்களிலும் சிந்தனையை திருப்பினான்.  மோதிர ராசியோ என்னவோ இவன் மனைவியும் இப்போது சண்டை சச்சரவு இல்லாமல் பழக ஆரம்பித்தாள்.

இவனது பண செழிப்பை பார்த்து இவன் மனைவி எந்நேரமும் பாச மழையும் பொழிந்தாள்.  ராசிக்கல் வந்த நேரம் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது.  இவனும் கையில் இருந்த பணத்தில் புது புது வியாபாரங்களை தொடங்கினான்.  அனைத்திலும் இவனுக்கு வெற்றியே கிடைத்தது.

புதிதாக சில வீடு மற்றும் தோட்டங்களை வாங்கினான், இவன் ஊரில் இருக்கும் ஒரு பாம்பு புற்றுக்கு ஒவ்வொரு வெள்ளி கிழமையும் சென்று பால் ஊற்றி வழிபடுவான். அது மட்டும்மில்லாமல் ஒவ்வொரு மாதமும் அன்னதானமும் செய்தான்.  வியாபாரம் பல மடங்கு பெருகியது, மறு வருடம் குடும்பத்துடன் குல தெய்வ கோவில் சென்று வழிபாடு செய்து விட்டு, கோவிலுக்கு ஒரு மணியும், அய்யனாருக்கு ஒரு வேலும் சாத்திவிட்டு வந்தான். 

குலதெய்வ வழிபட்டால் மன நிறைவு அடைந்ததாக மனைவியிடம் சொன்னான்; ஆனால் ஒரு முறை கூட தப்பி தவறி கூட ராசிக்கல் மோதிரம் பற்றியோ நாகரத்தினம் பற்றியோ யாரிடமும் இவன் சொல்லவில்லை; அதை ஒரு தெய்வ ரகசியமாகவே அவன் மனதிற்குள் மட்டும் வைத்து கொண்டான். 

இப்படியே இரண்டு வருடம் ஓடியது, பணம் பெருக பெருக இவன் ஒரு துறவி போலவே மாறினான்; எந்த நேரமும் ஏதாவதொரு கோவிலுக்கு செல்வதும், ஒவ்வொரு கோவிலுக்கும் நன்கொடை வாரி வழங்குவதும் என இருந்தான். மறுவருடம் குலதெய்வவிழா கொடை கொடுக்க மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது காரில் திருநெல்வேலியை நோக்கி வண்டியில் சென்று கொண்டு இருந்தான், போகும் வழியில் கோவில்பட்டி அருகில் மதிய உணவை முடித்துக்கொண்டு சர்வருக்கு 50 ரூபாய் டிப்ஸ் தந்து விட்டு மறுபடியும் பயணத்தை தொடர்ந்தனர்.     புறவழி சாலை வழியாக திருநெல்வேலியை நெருங்கும் போது; சாலையில் கிடந்த ஒரு கயிறை பாம்பு என நினைத்து போட்ட தீடிர் பிரேக்கால் வண்டி நிலை குலைந்து மிக பெரிய விபத்தில் முடிந்தது.  விபத்தில் வண்டி ஓட்டிய டிரைவர் தவிர அனைவரும் சம்பவ இடத்தில் இறந்தனர்.  ராசி கல் மோதிரத்தால் விபத்தை......

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்குலதெய்வம்

கடந்த ஒரு வருடமாவே சரவணன் நடத்தி வந்த பலகார கடை, பாத்திர கடை அனைத்தும் நட்டத்தில் நடக்க ஆரம்பித்தன; சரவணன் உடல்நிலையும் சரியாக இல்லை, சர்க்கரை வியாதி, கால் வலி என்றும் அவதி பட ஆரம்பித்தான்.  அது மட்டுமில்லாமல் குடும்பத்தில் நிறைய சண்டைகள் இவனுக்கும் மனைவிக்கும் இடையே, இது எல்லாம் போதாது என்று பூர்வீக சொத்து ரூபத்தில் பங்காளி பிரச்சனை வேறு வந்தது.  சரவணன் பல பிரச்சனைகளால் திக்கி திணறினான். 

என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் அவன் குடும்ப ஜோசியர் ஜோதிட சிகாமணி சிங்காரம் நினைவுக்கு வந்தார், அவரிடம் சென்று தன் ஜாதகத்தை காட்டி பரிகாரம் கேட்கலாம் என்று முடிவு செய்தான்.

அவர் இவன் ஜாதகத்தை அலசி பார்த்துவிட்டு உனக்கு இப்ப கேது திசை நடக்குது; ராகுவும் சரியான இடத்தில் இல்லை, அதனால் எந்த ஒரு காரியம் செய்யும் முன் பல தடவை யோசித்து செய்ய வேண்டும்.  ஒரு முறை உங்க குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் கொஞ்சம் பிரச்சனையில் இருந்து தப்பலாம், ஆனால் முழுவதும் தப்ப முடியாது என்று கூறிவிட்டார். 

சரி என்று சொல்லிவிட்டு, ஏற்கனவே குடும்ப சூழ்நிலை சரியில்லை, இதுல அவளை  எல்லாம் கூட்டி கொண்டு போக முடியாது என மனதில் நினைத்து கொண்டு தனியாக போக முடிவு செய்தான்.  அய்யனார் இவன் குலதெய்வம்; அதுவும் திருநெல்வேலி அருகில் உள்ளது. இவன் கோவில்லுக்கு சென்று சுமார் ஒரு ஐந்து வருடம் ஆயிற்று.  சரி ரொம்ப நாள் கழித்து போகிறோம், வருகின்ற அம்மாவாசை பூஜைக்கு போக முடிவு செய்தான். மாதந்தோறும் அம்மாவாசை  இரவில் அங்கு பெரிய படையில் இட்டு அய்யனாருக்கு ஒரு பூஜை நடக்கும், தாயாதிகள் சில பேர் மட்டும் இந்த பூஜையில் கலந்து கொள்வார்கள்.  மகாளய அம்மாவாசை பூஜை தான் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

மதுரையில் இருந்து பஸ்சில் திருநெல்வேலிக்கு போகும் போது  பழைய நினைவுகள் இவன் நினைவுக்கு வந்தன. ஒருவழியாக  திருநெல்வேலியை அடைந்து மதியம் சாப்பிட்டுவிட்டு, ஒரு டவுண்பஸ் பிடித்து குலதெய்வ கோவிலுக்கு சென்றான்.  பஸ்சில் இருந்து இறங்கி வயக்காட்டு பக்கமாக நடந்தான், போகும் போது  இவன் பால்ய நண்பன் குமாரை பார்த்தான்; பார்த்தவுடன் வியப்படைந்தான்.  ஐந்து வருடம் முன்பு பார்க்கும் போது கஞ்சிக்கு வழியாமல் ஒரு கிழிந்த சட்டை போட்டு ஊர் சாவடியில் படுத்து கிடந்தவான் தான் இந்த குமார்.  இப்ப பார்த்தால் வெள்ளையும் சொள்ளையும் மட்டும் இல்லாமல், கழுத்து நிறைய தங்க சங்கலியும் மின்னியது. 

என்ன குமாரு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்ட என்று கேட்டான்.  

என்ன சரவணா இந்த பக்கம் என்று இவன் கேள்விக்கு பதில் கூறாமல்  மறு கேள்வி கேட்டான்?

ஏன் நான் உன்னை பார்க்க வர கூடதா?

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை?  ஒரு ஐந்து வருடமா நீ கோவில் திருவிழாவுக்கு கூட வரவில்லை அதனால் தான் என இழுத்தான். 

வியாபாரம் ஒன்னும் சரியில்லை, குடும்பத்திலும் ஆயிரம் பிரச்னை, அது தான் இந்த பக்கம் தலை வைக்க முடியவில்லை.

உனக்கு வியாபாரம் எப்படி என்று கேட்டான்.

எதோ ஆண்டவன் புண்ணியத்தில் இப்ப வியாபாரம் நல்ல போகுது.  அக்கம் பக்கம் யாரும் வருகிறார்களா என்று பார்த்து விட்டு, எல்லாம் இந்த ஒரு மோதிரத்தால் தான் என்று சொல்லிவிட்டு தன் கையை கட்டினான்.  

இது என்ன ராசிக்கல் மோதிரமா என்று கேட்டான் சரவணன்

ஆம் இது ஒரு விலை உயர்ந்த ராசிக்கல் மோதிரம், இதற்க்கு பெயர் நாகரத்தினம் என்று கூறிவிட்டு மறுபடியும் அக்கம் பக்கம் சுற்றி பார்த்து விட்டு ஒரு ரகசியம் சொல்றேன் என்று இவன் காதில் ஒன்றை சொன்னான்.   பாம்புகளிடத்தில் நாகரத்தினம் என்னும் ஒரு சிவப்புக் கல் இருக்கும், அதுக  அம்மாவாசை போன்ற நாள்களில் இரவுநேரத்தில் இரை தேடுவதற்கு வசதியாக இதைப் வெளியில் வைத்து விட்டு அந்த வெளிச்சத்தில் இரை தேடும்.  ஒரு நாள் அம்மாவாசை அன்று இரவு குளத்துக்கு போகும் போது எனக்கு ஒரு பெரிய நாகரத்தினகல் கிடைத்தது இதை யாரிடமும் சொல்லாதே என்றும் கூறினான்.   அதுமட்டுமில்லாமல் அந்த கல்லை நான் அதிக விலைக்கு விற்று விட்டேன், ஒரு சிறிய அளவு கல்லை என் விரலில் மோதிரமாக போட்டு கொண்டேன்.  

நாகரத்தினத்தை அணியும் ஒருவனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது வீட்டில் குபேரன் காசு  பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளிடம் இருந்தும் தப்பிக்கலாம் என்றும் கூறினான்.  இருவரும் கொஞ்சம் நேரம் வேற வேற விசயங்களை பேசிக்கொண்டு இருந்துவிட்டு இறுதியில் நான் குலதெய்வ கோவிலுக்கு வந்தேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.   

இரவு அம்மாவாசை பூஜையில் கலந்து கொண்டு, மனமுருக அய்யனாரை பிராத்தனை செய்தான், பூஜை முடியவே இரவு 2 மணி ஆனதால் கோவிலில் தூங்கினான்.

அதிகாலையில் எழுந்து வயக்காட்டு பக்கம் நடந்து வரும் போது தான் பார்த்தான் குமார் இறந்துகிடப்பதை; ஊரே அதிகாலையில் கூடி நின்று வேடிக்கை பார்த்தது, குமாரின் காலுக்கடியில் ஒரு பாம்பும் அடிபட்டு இறந்துகிடந்தது.  குமார் கைகளில் சாணியும் ஒரு பாம்பை அடித்த ஒரு கம்பும் இருந்தது.   வாரம் வாரம் தவறாமல் பாம்பு புற்றுக்கு பால் வார்பார்; அது மட்டுமில்லாமல் நாகரத்னகல் வேற கையில் போட்டு இருந்தார், இருந்தும் பாம்பு அவர் உயிரை பலிவாங்கிவிட்டது என்று ஊர்காரர்கள் பேசிக்கொண்டு இருந்தது அவன் காதில் கேட்டது, உடனே அவனுக்கு நேற்று குமார் சொன்ன நாகரத்தினகல் நினைவுக்கு வந்தது. குமார் இறந்த இடங்களை சுற்றி சுற்றி நோட்டம் விட்டான், ஒரு இடத்தில் ஒரு சிறிய கல் போன்ற சாணிகுவியலை பார்த்தான்.  உடனே யாருக்கும் தெரியாமல் அந்த சாணி குவியலை எடுத்து பையில் போட்டு கொண்டான். நண்பனின் இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ளாமல் உடனே ஊருக்கு திரும்பினான்.   திருநெல்வேலி வந்து அடைந்ததும் அந்த சாணியை கழுவினான்; நாகரத்தினகல் மின்னியது, அவன் கண் கூசியது.  உடனே திருநெல்வேலியில் உள்ள ஒரு பொற்கொல்லர், வீட்டிற்கு சென்று அந்த கல்லை கொடுத்து விலை பேசினான்; ஒரு வழியாக அந்த கல்லை பல லட்சங்களுக்கு விற்றான்.  இவனுக்கும் அதில் ஒரு சின்ன மோதிரமும் செய்து கொண்டான், ஒரு நாள் முழுவதும் சந்தோசமாக இருந்துவிட்டு மறுநாள் ஊருக்கு கிளம்பினான்.

ஒரு சில மாதங்கள் முதலில் கொஞ்சம் பழைய கடன்களை அடைத்தான், வேறு சில தொழில்களிலும் சிந்தனையை திருப்பினான்.  மோதிர ராசியோ என்னவோ இவன் மனைவியும் இப்போது சண்டை சச்சரவு இல்லாமல் பழக ஆரம்பித்தாள்.

இவனது பண செழிப்பை பார்த்து இவன் மனைவி எந்நேரமும் பாச மழையும் பொழிந்தாள்.  ராசிக்கல் வந்த நேரம் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது.  இவனும் கையில் இருந்த பணத்தில் புது புது வியாபாரங்களை தொடங்கினான்.  அனைத்திலும் இவனுக்கு வெற்றியே கிடைத்தது.

புதிதாக சில வீடு மற்றும் தோட்டங்களை வாங்கினான், இவன் ஊரில் இருக்கும் ஒரு பாம்பு புற்றுக்கு ஒவ்வொரு வெள்ளி கிழமையும் சென்று பால் ஊற்றி வழிபடுவான். அது மட்டும்மில்லாமல் ஒவ்வொரு மாதமும் அன்னதானமும் செய்தான்.  வியாபாரம் பல மடங்கு பெருகியது, மறு வருடம் குடும்பத்துடன் குல தெய்வ கோவில் சென்று வழிபாடு செய்து விட்டு, கோவிலுக்கு ஒரு மணியும், அய்யனாருக்கு ஒரு வேலும் சாத்திவிட்டு வந்தான். 

குலதெய்வ வழிபட்டால் மன நிறைவு அடைந்ததாக மனைவியிடம் சொன்னான்; ஆனால் ஒரு முறை கூட தப்பி தவறி கூட ராசிக்கல் மோதிரம் பற்றியோ நாகரத்தினம் பற்றியோ யாரிடமும் இவன் சொல்லவில்லை; அதை ஒரு தெய்வ ரகசியமாகவே அவன் மனதிற்குள் மட்டும் வைத்து கொண்டான். 

இப்படியே இரண்டு வருடம் ஓடியது, பணம் பெருக பெருக இவன் ஒரு துறவி போலவே மாறினான்; எந்த நேரமும் ஏதாவதொரு கோவிலுக்கு செல்வதும், ஒவ்வொரு கோவிலுக்கும் நன்கொடை வாரி வழங்குவதும் என இருந்தான். மறுவருடம் குலதெய்வவிழா கொடை கொடுக்க மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது காரில் திருநெல்வேலியை நோக்கி வண்டியில் சென்று கொண்டு இருந்தான், போகும் வழியில் கோவில்பட்டி அருகில் மதிய உணவை முடித்துக்கொண்டு சர்வருக்கு 50 ரூபாய் டிப்ஸ் தந்து விட்டு மறுபடியும் பயணத்தை தொடர்ந்தனர்.     புறவழி சாலை வழியாக திருநெல்வேலியை நெருங்கும் போது; சாலையில் கிடந்த ஒரு கயிறை பாம்பு என நினைத்து போட்ட தீடிர் பிரேக்கால் வண்டி நிலை குலைந்து மிக பெரிய விபத்தில் முடிந்தது.  விபத்தில் வண்டி ஓட்டிய டிரைவர் தவிர அனைவரும் சம்பவ இடத்தில் இறந்தனர்.  ராசி கல் மோதிரத்தால் விபத்தை......

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 8 Feb 2016 - 18:45

அம்மா - எஸ்.கண்ணன்
------------

"உங்கம்மாவுக்கு எப்பவுமே இங்க இருக்கறதுக்கு இருப்பே கொள்ளாது.  எப்பவும் கால்ல கஞ்சி கொட்டிண்ட மாதிரி வந்தன்னிக்கே திரும்பி உங்க தம்பி வீட்டுக்கு போறதப் பத்திதான் நினைப்பெல்லாம்... பாருங்க நேத்துதான் உங்கப்பா தெவசம் முடிஞ்சுது, இன்னிக்கு ஆரம்பிச்சுட்டா என்ன எப்ப கொண்டு விடப் போறேன்னு..."

"சரி கமலா. நீ அத ஏன் பெரிசு படுத்தற?  அம்மாவுக்கு எங்க இருக்க பிடிக்கறதோ அங்க இருந்துட்டுப் போறா.."

மூர்த்தி தன் மனைவி கமலாவை சமாதானப் படுத்தினாலும், அவள் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை என்பது புரிந்துதான் இருந்தது.  இன்று நேற்றல்ல அப்பா இறந்தபிறகு கடந்த நான்கு வருடங்களில் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு தடவைகள்தான் மயிலாப்பூரிலுள்ள மூத்த மகன் மூர்த்தி வீட்டுக்கு வருவாள், நான்கு நாட்கள் இருந்துவிட்டு குரோம்பேட்டையில் உள்ள இரண்டாவதும் கடைசி மகனுமான ராஜாராமன் வீட்டுக்கு திரும்பிச் சென்று விடுவாள்.  

இத்தனைக்கும் மூர்த்தி வீட்டில்தான் வசதிகள் ஜாஸ்தி.  லஸ் கார்னரில் ஐந்து பெட்ரூம்களுடன் பெரிய தனிவீடு.  அம்மாவுக்கென்று விஸ்தாரமான தனி பெட்ரூம், உள்ளேயே ஆண்டி ஸ்கிட் டைல்ஸ்களுடன் பெரிய பாத்ரூம், ஏ.ஸி., டி.வி., தனி பால்கனி, படிப்பதற்கு ஏராளமான சஞ்சிகைகள் என பார்த்து பார்த்துதான் கவனிப்பெல்லாம்.

டைனிங் ஹால், கூடத்தில் பெரிய ஊஞ்சல் என மற்ற வசதிகளுக்கும் குறைவில்லை.  எட்டு வயது பேரன் ஹரனும், ஐந்து வயது பேத்தி ஹரிணியும் பாட்டியிடம் மரியாதையுடன் இருப்பார்கள். கோவிலுக்கு போகும்போது சொகுசு காரில் கமலாதான் டிரைவருடன் அம்மாவை கூட்டிச் செல்வாள்.  எப்போதும் ஸ்பெஷல் தரிசனம்தான்.

இவ்வளவு இருந்தும் அம்மாவுக்கு மூர்த்தி வீட்டில் மனசே ஒட்டாது.  

மாறாக ராஜாராமன் வீட்டிற்கு செல்வதிலேயே குறியாக இருப்பாள்.  நேற்று அப்பாவின் திவசத்திற்கு மூர்த்தியின் தம்பி ராஜாராமனும் அவன் மனைவி விஜயாவும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்றுவிட்டார்கள்.  இன்று அம்மாவுக்கு இங்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்ப என்ன குரோம்பேட்டைக்கு கூட்டிண்டு போற? என்று மூர்த்தியிடம் காலையில் கேட்டாள்.  அதுதான் கமலாவுக்கு கோபம்.  

மாலை அம்மா தன் பெட்ரூமில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள்.  ஏதோ ஒரு நகைச்சுவையை ரசித்து பெரிதாக வாய்விட்டு சிரித்தாள். மூர்த்தி உள்ளே சென்று அம்மாவுடன் சற்று நேரம் டி.வி பார்த்தான்.

பிறகு அம்மாவிடம் அன்பான குரலில், "ஏம்மா இன்னும் ஒரு பத்து நாள் இங்கேயே இரேம்மா... நாம எல்லாரும் இந்த வாரக் கடைசியில் காஞ்சிபுரம் கோவிலுக்கு போயிட்டு வரலாம்" என்றான்.

அம்மா பதிலேதும் உடனே சொல்லாது சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.  

பிறகு "காஞ்சிபுரம் எத்தன தடவ பார்த்தாச்சு.. வேண்டாம்டா என்ன நாளைக்கு குரோம்பேட்டைல விட்ரு" என்றாள்.

மறு நாள் டிரைவருடன் காரில் குரோம்பேட்டைக்குச் சென்றுவிட்டாள்.

அம்மா சென்ற அடுத்த பதினைந்து நாட்களில்  மூர்த்தியின் பெயருக்கு வீட்டு முகவரிக்கு அம்மாவிடமிருந்து ஒரு நீண்ட கடிதம் வந்தது.

கமலா கடிதத்தை மூர்த்தியிடம் கொடுத்துவிட்டு அருகிலேயே நின்றாள்.  

என் அன்புள்ள மூர்த்திக்கு,

நாம் அடிக்கடி மொபைல் ஃபோனில் பேசிக்கொண்டாலும், ஒரு நல்ல புரிதலுக்காக இந்தக் கடிதத்தை உனக்கு எழுதனும்னு எனக்கு தோணித்து. அப்பாவின் திவசத்திற்குப் பின், நான் தனியே நிறைய யோசித்துப் பார்த்ததில், நிறைய விஷயங்கள் எனக்குப் புரிந்தன. பல விஷயங்களை பேசிப் புரியவைக்க முடியாது, அதனால்தான் இந்தக் கடிதம்.  

கமலா அன்று உன்னிடம், 'அம்மாவுக்கு எப்பவுமே இங்க இருக்கறதுக்கு இருப்பே கொள்ளாது' என்று சொன்னதை நான் கேட்க நேரிட்டது.  அவள் சொன்னது முற்றிலும் உண்மைதான்.  கடந்த நான்கு வருடங்களில் நான் உன்னுடன் மயிலாப்பூர் வீட்டில் இருந்த நாட்கள் மிகவும் குறைவுதான்.  யோசித்துப் பார்த்ததில் இது இயல்பாக நடந்த ஒன்றுதான், வேண்டுமென்றே என்னால் செய்யப்பட்டதல்ல என்று எனக்குத் தோன்றியது.

உன் மயிலாப்பூர் வீட்டில் எனக்கு எந்த விதமான குறையும் இல்லை.  மாறாக வசதிகள்தான் அதிகம்.  தேவைகள் எதுவும் இல்லை, நிறைகள்தான் ஜாஸ்தி. நீ நிறைய படித்தவன். ஒரு பெரிய கம்பெனியில் சி.ஈ.ஓ.  உன் மனைவி கமலாவும் படித்தவள், கெட்டிக்காரி. அவள் அப்பா ரிடையர்டு ஆன ஐ.ஏ.எஸ் அதிகாரி. வசதியான குடும்பத்திலிருந்து வந்தவள், பண்பாடு தெரிந்தவள். ஹரனும், ஹரிணியும் காரில் பள்ளிக்குச் சென்று வருபவர்கள்.  உன் வீட்டில் அது அது திட்டமிட்டபடி வசதியுடன் நேர் கோட்டில் நடக்கிறது.

ஆனால் உன் தம்பி ராஜாராமன் ஒரு சிறிய கம்பெனியில் அஸிஸ்டெண்ட்.  உன்னை மாதிரி படித்தவனில்லை.  சொற்ப சம்பளத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் சிரமப் படுகிறான்.  அவன் மனைவி விஜயா படிக்காதவள்.  சமர்த்து சாமர்த்தியம் போறாது. திருவானைக்காவலில் ஒண்டுக் குடித்தன வாடகை வீட்டில் தொட்டி மித்தத்தில் குளித்து வளர்ந்தவள். அவள் அப்பா திருச்சி பொன்மலையில் ஷண்டிங் ரயில் இஞ்சின் ஓட்டுனராக இருந்தவர்.

அம்மா ஊமை என்பதனால் விஜயாவுக்கு சின்ன வயதிலிருந்தே குரலை உயர்த்தி மிகுந்த சத்தம் போட்டு பேசித்தான் பழக்கம்.  அது இன்றும் மாறவில்லை. பண்பாடும், நாகரிகமும் அறியாதவள்.   அவர்களுக்கு உள்ள ஒரே நம்பிக்கை இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பும் முன்னேற்றமும்தான்.

விஜயாவுக்கு என் அருகாமையும், வழி காட்டுதலும்தான் யானை பலம்.  என்னக் கேக்காம எதையும் அவ செய்யறது இல்ல. குழந்தைகளுக்கும் என்னுடைய உதவிகள் நிறைய தேவை.  அதுகளை எழுப்பி, குண்டான்ல வென்னீர் போட்டு குளிப்பாட்டி, தலை வாரி, தயார் பண்ணி, யூனிஃபார்ம் போட்டு தினமும் ஸ்கூலுக்கு அனுப்பறது நான்தான்.  பாட்டி பாட்டின்னு அதுகளுக்கு நான் இல்லாம எதுவும் நடக்காது.  ராத்திரி தரையில் படுத்து தூங்கும் போதுகூட என் பக்கத்துல ஆளுக்கு ஒரு பக்கமா படுத்துண்டு கால என் மீது போட்டுண்டுதான் தூங்கும்.  

மயிலாப்பூர் வாழ்க்கை எனக்கு அதீத சொகுசு.  நான் நன்றாகக் கவனிக்கப்படும் கூண்டுக்கிளி. ஆனால் குரோம்பேட்டை எனக்கு சவாலான சுகம். உன் வீட்டில் என்னால் பயனடைபவர்கள் யாரும் இல்லை.  ஆனால் இங்கு நான் தான் கிரியா ஊக்கி. எல்லா அம்மாக்களுக்கும் தன் குழந்தைகளிடம் அன்பும், பாசமும், வாஞ்சையும் சமம்தான். ஆனால் கஷ்டப்படும் குழந்தையின் மீது பிரத்தியேக கவனிப்பும், அருகாமையும் அதிகம்.  இது இயல்பான ஒன்று.
  
இப்போது உனக்குப் புரிகிறதா, எனக்கு ஏன் அங்கு இருப்புக் கொள்ளவில்லை என்று?  எனக்கு உன் குடும்பமும், ராஜாராமன் குடும்பமும் இரண்டு கண்கள். என் அன்பும், வாஞ்சையும், பாசமும் உங்களிடம் சமமானதுதான். ஆனால் என் உடல் உழைப்பின் பங்கு ராஜாராமன் குடும்பத்திற்கு அதிகம்.  அது தேவையானதும், அவசியமானதும் கூட.

உன் புரிதலுக்கு என் சந்தோஷங்கள்.

கமலாவுக்கும், குழந்தைகளுக்கும் என் ஆசீர்வாதங்கள்.

அன்புடன்,
அம்மா

பக்கத்திலிருந்த கமலாவும் கடிதத்தை வாங்கி முழுவதுமாக படித்தாள்.  உடனே அம்மாவுக்கு ஃபோன் செய்தாள்.

"அம்மா, இப்பதாம்மா நீங்க அவருக்கு எழுதின கடிதத்தை நானும் அவரும் படிச்சோம்....என்ன மன்னிச்சிடுங்கம்மா... 

உங்க அன்பும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு நிறைய இருந்தா போதும்" குரல் உடைந்து கண்களில் நீர் முட்டியது.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 8 Feb 2016 - 18:49

ராஜா ராணி -சங்கர் ஜெயகணேஷ்

ராஜா வீட்டில் நிறைய பண வசதி இருந்தும் தினமும் காரில் ஆபீஸ் செல்லாமல் ரயிலில் தான் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் வரை ஆபீஸ்க்கு செல்வான்.  அவனது அப்பாவும், அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.  பிறந்தது  முதல் இருபது வருடம் காரில் தானே சென்றேன், இப்பயாவது என்னை என் விருப்ப படி செயல் படவிடுங்கள் என்று கூறுவான்.

அன்று காலையில் அவசரம் அவசரமாக குளித்துவிட்டு வீட்டில் உள்ள சாமி படங்களை கும்மிட்டு விட்டு வழக்கம் போல அலுவலகம் செல்ல கிளம்பும் போது, ராஜாவின் அம்மா சாப்பிட்டு தான் போக வேண்டும் என சொல்லிக்கொண்டே தட்டில் மல்லிகைபூ இல்ல மல்லிகை பூ போல உள்ள இட்லிகளை வைத்தாள், வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே கட கட என சாப்பிட்டான்.


வேகமாக பைக்கை உதைத்து வீட்டில் இருந்து புறப்பட்டான், போகும் வழியில் நடக்க முடியாமல் ரோட்டில் சென்ற ஒரு பெரியவரை வண்டியில் ஏற்றி கொண்டு பேருந்து நிலையம் சென்று அவரை இறக்கிவிட்டு ரயில் நிலையம் வந்தான்.  ரயில் நிலையத்தில் வண்டியை காப்பகத்தில் நிறுத்திவிட்டு, வேகமா நடந்தான் இல்ல ஓடினான், கடைசியில் ஒரு வழியாக பிளாட்பாரத்தை அடைந்தான்.


ரயில் வழக்கத்தை விட கூட்டமாக வந்தது,  ஏதோ சொர்க்கத்திற்கு போகும் வாசல் போல எண்ணி ரயில் வாசலை எல்லோரும் சேர்ந்து அடைத்தனர், அந்த சமயத்தில் உள்ளே இருந்தும் சிலர் நரகத்தில் இருந்து வருவது போல கஷ்டப்பட்டு வந்தனர்.  இவன் பொறுமையாக அனைவருக்கும் வழி விட்டு கொண்டு இருந்தான், கடைசியில் கஷ்டப்பட்டு ரயில் நகரும் போது படியில் தான் இடம் கிடைத்தது.  ரயில் நகரும் போது வரும் காற்று இவனை தாலாட்டியது  இளையராஜா  பாடல்கள் போல. ரயில் தாம்பரம் வந்தவுடன் கூட்டம் சிறிது குறைந்தது. இவன் கொஞ்சம் உள்ளே சென்று நின்றான். 


முதலில் உலக வரைபடம், செய்தித்தாள் விற்பனை செய்யும் பையன் வந்தான், ஒவ்வொருவரிடமும் சென்று காட்டி விற்பனை செய்தான். அடுத்து பட்டாணி , சுண்டல் என்று ஒரு ஒலி மட்டும் கேட்டது, ஒரு வயசான தாத்தா கம்பீர குரலில் சுண்டலை விற்பனை செய்தார்.


அடுத்து வண்டி குரோம்பேட்டையில் வந்து நின்றது, அப்போது பெட்டியில் இருந்த சில கல்லூரி மாணவர்களும்,  மாணவிகளும் இறங்கினர். ராஜாவிற்கு அமர இடமும் கிடைத்தது அதுவும் ஜன்னல் ஓரத்தில்.   அடுத்து வண்டி பல்லாவரம், திரிசூலம் கடப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துகொண்டு வந்தான்.


 ரயில் மீனம்பாக்கம் நிறுத்தத்தை அடையும் போது ஒரு பெண் கைகுழந்தையுடன் வந்து அனைவரிடமும் யாசகம் கேட்டாள். அனைவரும் தங்களால் முடிந்த ஒரு ரூபாய்  நாணயங்களை போட்டனர், ராஜாவும் அவன் பங்கிற்கு ஒரு ரூபாய் போட்டான்.  அடுத்து தன் பையை திறந்து ஒரு குமுதம் வாரஇதழை எடுத்து புரட்டினான், வழக்கம் போல அதுவரை அருகில் வேடிக்கை பார்த்தவர், இவன் படிக்கும் பக்கங்களை தனது காந்த பார்வையால் மேய தொடங்கினார்.  சிறிது நேரம் கழித்து, அவர் பார்ப்பதை பார்த்து விட்டு அவரிடமே வாரஇதழை  நீட்டினான்.  அவரும் சந்தோசமாக வாங்கி படிக்க ஆரம்பித்தார், ராஜா மீண்டும் ஜன்னலை நோக்கினான்.  வண்டி பழவந்தாங்கல் கடந்து கிண்டியை அடைந்தது.  கிண்டியில் 'தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணம்மோ'  பாடலை இளையராஜா ஜானகியை விட அருமையாக இரு மாற்று திறனாளிகள் பாடிக் கொண்டே யாசகம் கேட்டு வந்து கொண்டு இருந்தனர்.  அனைவரும்  காது இருந்தும் கேட்காமல், சிலர் ஒரு ரூபாய் கூட போடாமல்  முகத்தை வேற வேற பக்கம் திருப்பினர், அவர்களுக்கு பார்வை தெரியாது என தெரியாமல்.


 அடுத்து வண்டி சைதாபேட்டையை அடைந்தது, அப்போது சில திருநங்கைகள் அந்த பெட்டியில் ஏறினார்கள்,. ரோசாப்பு நிறத்தில் சாயத்தை இதழ்களுக்கும், மூன்றாம் பிறை நிலவு போல   மார்பகங்கள் தெரியும் படி ரவிக்கையும், உள்ளங்கை நெல்லிக்காயை போல தொப்புளும் தெரியும் படி, இல்ல மார்புக்கு நடுவில் விளக்கின் ஒரு திரியை போல கிடந்தது சேலை.   இந்த சமுதாயத்தில் எந்த வேலையும் கிடைக்காமல், தனது வயிற்று பிழைப்புக்காக எல்லோரிடமும் யாசகம் கேட்டனர்.


அதில் ஒரு வயசான திருநங்கை 'மாமா காசு கொடு', 'மாமா காசு கொடு' என அனைவரிடமும் கேட்டாள், ஒரு இளவயது திருநங்கை அண்ணா காசு கொடு, அண்ணா காசு கொடு என கை களை தட்டி தட்டி கேட்டாள்.  இதுவரை ரயிலில் வந்த யாருக்கும் காசு போடாதவர்களும் கூட திருநங்கைகளுக்கு காசு போட்டனர்.  ரயிலில் இருந்த சில பெண்கள் கூட நாணயங்களை போட்டனர்.  அவர்களில் இரு இளவயது திருநங்கைகள் ராஜா இருக்கும் இடம் நோக்கி வந்தனர். அதில் ஒரு திருநங்கை அண்ணா காசு கொடு, காசு கொடு என கைகளை தட்டி தட்டி கேட்டாள். உடனே  ராஜா தனது சட்டை பையில் கையை விட்டு  நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து கொடுத்தான்.  உடனே அதை வாங்கிய திருநங்கைகள் அவன்  தலையில் கை வைத்து ஆசிர்வதித்துவிட்டும், கண்ணத்தில் தட்டியும் சென்றனர்.  பின்பு அந்த வயசான திருநங்கைகளும் வந்து ஆசிர்வதித்துவிட்டு சென்றனர்.   


ரயில் வண்டி அடுத்து நுங்கம்பாக்கம் வந்தவுடன், அனைத்து திருநங்கைகளும் இறங்கினர்.  ராஜாவின் பக்கத்தில் இருந்த பெரியவர் என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு ரூபாய் கொடுக்கிறாய் என கேட்டார். அதுக்கு ஒரு புன்சிரிப்பு மட்டும் பதிலாக கொடுத்தான்.  அடுத்து இவன் இறங்கும் எக்மோர் ஸ்டேஷன் வந்தது.  இறங்கி சுரங்க பாதையில் செல்லும் போது, அந்த பெரியவர் சொன்னது மட்டும் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது,


" என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு  ரூபாய் கொடுக்கிறாய்”


“என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு  ரூபாய் கொடுக்கிறாய்”


“என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு  ரூபாய் கொடுக்கிறாய்”


தனது பர்சை எடுத்து அதில் உள்ளே இருந்து ஒரு போட்டோவை எடுத்தான், அதை பார்த்தவுடன் கண்ணீர் வந்தது; அது திரு.ராஜா, திருநங்கை ராணியாக இருந்த போது எடுத்த போட்டோ,  நம் வீட்டில் மட்டும் வசதி இல்லாமல் இருந்தால் நாமும் இப்படித்தான் இருப்போம் என்று எண்ணி கண்ணீர் விட்டான்.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 29 Feb 2016 - 19:17

உன்னை திருத்து
*******************
ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்.
அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது.
பல ஊர்களிலிருந்து மிகப்பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.
ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்னியாசி வந்தார்.

அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.
அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான்.

அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.
பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான்.
தலைவலி குணமாகி விட்டது.
சன்னியாசி கூறியது சரிதான்.
உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான்.
வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே!
நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.

அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள்.
சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.
சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள்.

சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார்.
பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை உபசரித்தான்.
“இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார்.
“ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு. “நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி. “பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான்.

“மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம்.
ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி
வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது.

உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி.

நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம்.
நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்.
அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது...
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 29 Feb 2016 - 19:19

வாழ்க்கை
***********
இரு நண்பர்கள் ஒரு பாலைவனத்தின் மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். நடக்கும் களைப்பு தீர கதை பேசிக்கொண்டே சென்றார்கள். பேச்சுவாக்கில் விவாதம் ஒன்று முளைத்தது. எதிர் வாதத்தினால் வாய்ச் சண்டையாகவும் மாறிவிட்டது. கோபம் தாளாத ஒரு நண்பன், மற்றொருவனின் கன்னத்தில் அறைந்துவிட்டான்.

அறை வாங்கியவனோ சற்றும் கோபிக்காமல், மிக அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்ததோடு, தன் விரல்களால், “எனதருமை நண்பன், என் உயிரினும் மேலானவன், இன்று என் கன்னத்தில் அறைந்து விட்டான்!” என்று மணலில் எழுதினான்.
அடி கொடுத்த நண்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் அமைதியாக நடை பயணத்தைத் தொடர்ந்தார்கள். அடுத்து வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டபோது இருவரும், வெம்மையின் தாக்கம் தீர இதமான குளிர் நீரில் குளிக்க ஆரம்பித்தார்கள்.
கன்னத்தில் அறை வாங்கிய நண்பணின் காலை திடீரென்று யாரோ பிடித்து இழுப்பது போன்ற உணர்வில் தடுமாறியவன், அடுத்த நொடி அது புதைகுழி என்பதை அறிந்து, தான் சிக்கிக் கொண்டது புரிய, அலற ஆரம்பித்தான். அடுத்த நொடி அறை விட்ட அந்த நண்பன் பெரும் முயற்சி எடுத்து அந்த நண்பனைக் காப்பாற்றி கரை ஏற்றினான்.

உயிர் பிழைத்த நண்பன் ஆபத்திலிருந்து மீண்டு வந்த உடன் செய்த முதல் வேலை, அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்துகொண்டு, மற்றொரு சிறு கல்லை எடுத்து அதன் மூலம் மிகச் சிரமப்பட்டு எழுத ஆரம்பித் தான், இப்படி ….“இன்று எனதாருயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்” இதைப் பார்த்துக் கொண்டிருந்தவனோ, “நான் உன்னை கன்னத்தில் அறைந்தபோது அதை மணலில்தானே எழுதினாய். இப்போது காப்பாற்றியபோது அதை கல்லில் எழுதுகிறாயே ஏனிப்படி?” என்றான்.
அதற்கு அன்பான அந்த நண்பனின் இனிமையான பதில்,

“யாராவது நம்மைக் காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடவேண்டும். மன்னிப்பு எனும் இதமான காற்று அதை வெகு எளிதாக அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நமக்கு நன்மை செய்தால் அதை காலமெல்லாம் நிலைத்து நிற்கும்படி கல்லில் எழுத வேண்டும்”
வாழ்க்கை என்பது எளிதான பயணம் தான். மனிதர்கள்தான் அதனை பலநேரங்களில் சிக்கலாக்கி விடுகின்றார்கள்...
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 29 Feb 2016 - 19:20

ஆசிரியர்
*********
கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். "பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது. இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். "அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.

ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த என்னைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னாள் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை. அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது. அதுவே தலைகீழாக அமைந்தால்? பதில் உனக்கே தெரியும் என்று கூறினார்...
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 29 Feb 2016 - 19:22

நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு
***************************
ஒரு ஊர்ல ஒரு அழகான கண்ணாடி மாளிகை இருந்தது.
மாளிகையின் உள்ளே எந்தப் பக்கம் பார்த்தாலும் கண்ணாடிகளே பொருத்தப் பட்டிருந்தன.
ஒரு நாள் நாய்க் குட்டி ஒன்று உள்ளே சென்று பார்த்தது.
மாளிகை முழுதும் கண்ணாடி என்பதால் பார்க்கும் இடமெல்லாம் நாய்க் குட்டிகளாகத் தெரியவும் இந்த குட்டி நாய்க்கு சந்தோஷம் வந்தது.
தன் வாலை ஆட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தது.
கண்ணாடியில் தெரிந்த நாய்க்குட்டியின் பிம்பங்களும் அதே போல வாலை ஆட்டுவதாகத் தெரிந்தது.
அட்டா எத்தனை அன்பானவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்னு நினைத்தபடியே சந்தோஷமாக வெளியே ஓடியது.
அதே ஊரில் இன்னொரு நாய்க் குட்டி இருந்தது.
அது கொஞ்சம் முசுடு.

யாரோடும் சேராமல் தனித்தே இருக்கும்.
அந்த நாய்க்குட்டியும் கண்ணாடி மாளிகையின் உள்ளே சென்று பார்க்க விரும்பியது.
கண்ணாடியில் தெரிந்த அதனுடை பிம்பங்களைப் பார்த்ததும் அதற்கு பயமும் வெறுப்பும் வந்ததால் தற்காப்புக்காக முறைத்தபடியே கோபமாகப் பார்த்தது.
அதனுடைய பிம்பங்களும் அவ்வாறே திரும்ப முறைக்கவும் அடடா இத்தனை எதிரிகளா எனப் பயந்து வெளியே ஓடி விட்டது.

அன்பை விதைத்தால் அன்பையே அறுவடை செய்யலாம்.
வெறுப்பு ,கோபம் இவற்றை விதைத்தால் திரும்பக் கிடைப்பதும் அதுவே.
நாம் என்ன செய்கிறோமே அதுவே நமக்குத் திரும்பக் கிடைக்கும்.
நம் எண்ணங்களும் செயல்களுமே நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு...
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Jun 2016 - 10:30

அந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர் பரவிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில் வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது.

தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்’ சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடு நாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம் அடைந்தார்.

குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக வேலைலைக்கரன் வரவேற்றான்.’நான் அந்த மகானைப்பார்க்கவேண்டு’மென்று வேலைக்காரனிடம் சொன்னார்.
குடிசைக்குள் அவருக்கு உபசாரம் நடந்தது. அப்போதும் புனிதரைப் பார்க்கமுடியவில்லை.

நேரம் ஆக ஆக பொறுமையிழந்து கிராமவாசி ‘நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க முடியும்’ என்று கேட்டார்.’நீங்கள் பார்க்க வந்தவரை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்’ என்று சொன்னார்.

மேலும் ’நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண, அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச் சுலபமக தீர்த்துவிடலாம்’ என்று வேலைக்காரனாய் வந்த புனிதர் சொன்னார்.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Jun 2016 - 10:31

இமய மலையில் ஜென் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் சென்றார். அப்போது அவரிடம் "நான் ஒரு புகழ் பெற்ற மடாலயம் ஒன்றை நடத்தி வருகிறேன்" என்று கூறினார். 

குருவும் தன் மௌனத்தை கலைக்காமல் அவர் கூறியதை கேட்டு தலை அசைத்தார்.  மேலும் அந்த தலைவர் குருவிடம் "என் மனம் தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளது. அதற்கான விடையை அறியவே உங்களைக் காண வந்தேன்" என்றும் கூறினான்.


குரு அதற்கு "என்ன குழப்பம்?" என்று கேட்டார். தலைவர் குருவிடம் "என் மடாலயம் மிகவும் அமைதியாக, பழைமை நிறைந்த புனிதமான இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்தது. இதனை அறிந்து உலகின் பல பகுதிகளிலிருந்தும், இளைஞர்கள் வந்து தங்கி, பாடத்தை கற்றுக் கொண்டு செல்வர். ஆனால் இப்போதோ, யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. நீங்கள் தான் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும்" என்று கூறினார்.


அவ்வாறு வருத்தத்துடன் சொல்லும் போது, அவர்து குரலில் வேதனை தெரிந்தது. அதன் பின் குரு தலைவரிடம், "இதற்கு அறியாமை தான் காரணம்" என்று சொன்னார். "அறியாமையா?" என்று கேட்டார் தலைவர்.

அதற்கு "ஆம், உங்கள் மத்தியில் தேவதூதர் ஒருவர் உள்ளார். அவரை நீங்கள் உணரவில்லை, அதனால் தான் இந்த குழப்பம்" என்று கூறி அனுப்பி வைத்தார்.

அவரும் யாராக இருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டே சென்றார். பின் தன் மடாலயத்தில் இருக்கும் சீடர்களிடம் நடந்ததை சொன்னார். அவர்களும் யாரோ ஒருவர் தான் இங்கு தேவதூதர் என்பதை நினைத்து, ஒருவரை ஒருவர் மிகவும் மரியாதையுடன் நடத்தினார்கள்.


பின் சிறிது மாதங்கள் கழித்து, அவரது மடாலயத்தில் கூட்டம் குவிந்தது. ஏனெனில் அவர்கள் இதுவரை எதையும் விரும்பி செய்யாமல், கடமைக்காக செய்ததால், யாரும் வரவில்லை. இப்போது அவர்கள் அனைவருக்கும் மரியாதைக் கொடுத்து, அனைத்தையும் மரியாதையோடு நடத்தினர்.

இவை அனைத்தையும் கண்டப் பிறகு தான் தலைவருக்கு, துறவி சொன்னது புரிந்தது. அப்போது தான் அவருக்கு தேவ தூதர் வேறு எங்கும் இல்லை, அவரவர் மனதில் தான் இருக்கிறார். அதை நாம் உணர்ந்து, நம்மைப் போல மற்றவரையும் நேசித்தால், இறைவனை உணர முடியும் என்பது நன்கு புரிகிறது.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Jun 2016 - 10:31

ஒருநாள் புத்தர் தன் சீடர்களை அழைத்துக் கொண்டு பயணம் ‌சென்று கொண்டிருந்தார். மாலைவேளை போய், இரவு வந்துவிட்டது. அனைவரும் உறங்கலாம் என்று முடிவெடுத்தனர்...


அப்போது புத்தர் தன் சீடர்களிடம், “யாரோனும் நாம் உறங்குவதற்கு தகுதியான இடம் இருக்கிறதா என்று பார்த்து வாருங்கள்!“ என்று கூறி சில சீடர்களை அனுப்பினார்.


அவர்கள் சிறிது தூரம் சென்றனர். அங்கே ஒரு மயானம் இருந்தது. அதைத் தாண்டி சிறிது தூரம் சென்றனர். அங்கே ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் இரவில் தங்கலாம் என்று சீடர்கள் நினைத்தனர்.


அவர்கள் புத்தரிடம் திரும்பி வந்தனர். தாங்கள் வழியில் கண்ட மயானத்தைப்பற்றியும், அதற்கு அப்பால் ஒரு ஊர் இருப்பதையும் கூறினர்.


உடனே புத்தர் “நாம் இன்று இரவு உறங்குவதற்கு ஏற்ற இடம் அந்த மயானம் தான்!“ என்று கூறி, சீடர்களை மயானத்திற்கு அழைத்துச் சென்றார்.


சீடர்களுக்கோ உள்ளூற உதறல் எடுக்க ஆரம்பித்தது. மயானத்தில் எப்படி இரவு தங்க முடியும்? பேய்களும் ஆவிகளும் உலவுகிற இடமல்லவா அது. என்ன செய்வது? குரு தங்களை மயானத்தில் தங்கிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாரே.

மறுக்க முடியாமல் அவர்கள் அனைவரும் அன்றிரவு மயானத்திலே தங்கினர். சீடர்கள் யாருமே இரவில் உறங்கவில்லை. ஒரு வழியாக மறுநாள் பொழுது விடிந்தது.

அவர்கள் எல்லோரும் முதல் வேளையாக புத்தரிடம் சென்று, “குருவே! சற்று தொலைவில் அழகான ஊர் இருக்க, எங்கள் எல்லோரையும் இந்த மயானத்தில் தங்கும்படிக் கூறினீர்களே, எதற்காக?“ என்று கேட்டனர்.

அதற்கு புத்தர், “எல்லோரும் இரவு நன்றாக உறங்கினீர்களா?“ என்று திரும்பிக் கேட்டார்.

“ஒரு நொடியும் நாங்கள் கண் மூடவில்லை“ என்று பதில் கூறினர்.

அதைக்கேட்ட புத்தரும், “அதற்காகத்தான் உங்களை இரவில் இங்கே தங்கும்படிக் கூறினேன்“ என்று கூறிவிட்டு நடையைத் தொடர்ந்தார்.

எந்நேரமும் விழித்திருத்தலே ஜென். அமைதியான, பாதுகாப்பான சூழலில் ஒருவன் இறந்த காலத்தில் ஆழ்ந்து விடுகிறான்: அல்லது எதிர்காலத்தில் மிதக்கிறான்: நிகழ்காலத்தில் வாழ மறந்துவிடுகிறான். 
அதனால் எப்போதும் மனதில் பயம் கொண்டு நிகழ்காலத்தில் விழிப்போடு இருப்போம்.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Jun 2016 - 10:33

ஒரு ஜென்கதை....

இல்லறவாசி ஒருவர் அருகிலுள்ள ஊருக்குப் புறப்பட்டார். அவரால் மறுநாள்தான் திரும்பி வரமுடியும். எனவே, அவரது மனைவி மதியமும் இரவும் சாப்பிடுவதற்காக அவருக்கு ஒரு உணவுப் பொட்டலங்களை ஒரு பையில் போட்டுக் கெர்டுத்தாள். காட்டுவழியே தான அவரது பயணம் அமைந்தது.

அவர் நடுக்காட்டை அடைந்தபோது மதியம் ஆகிவிட்டது. ஒரு மரத்தடியில் அமர்ந்து மதிய உணவை உண்டார். உணவுக்குப் பின் பையை எடுத்துத் தோளில் தொங்க விட்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தார். நினைத்ததைவிட மிக விரைவில் சேர வேண்டிய இடத்தைச் சென்றடைந்த அவர் தனது வேலைகளை விரைவில் முடித்துக் கொண்டார். தனது ஊரை நோக்கிப் புறப்பட்டார்.  விரைவிலேயே புறப்பட்ட காரணத்தால், வீட்டிற்குச் சென்ற பின் இரவு உணவைச் சாப்பிடலாம் எனத் தீர்மானித்தார்.

திரும்பும் வழியில் அவர் ஒரு ஜென் துறைவி அமர்ந்திருப்பதை கண்டார். அந்த ஜென் துறவி இவரிடம்,”இன்று நீ உன் வீடு திரும்பினால் உன் மனைவி இறந்து விடுவாள், இன்று திரும்பவில்லை என்றால் நீ இறந்து விடுவாய்” என்று கூறினார்.

இதைக்கோட்ட இல்லறவாசி திடுக்கிட்டார். துறவிகளின் வார்த்தைகள் பொய்க்காது என்பதை அறிந்த அவர், தம் மனைவியின் உயிரைக் காக்கும் பொருட்டு அன்று வீடு திரும்புவதில்லை என்று முடிவு செய்தார். காட்டில் விலங்குகள் எந்த நிமிடமும் தன் மீது பாய்ந்து தன்னைக் கொன்று தின்னலாம் என்ற எதிர்பார்ப்புடன் அவர் மிக மெதுவாக, கவனமாக எல்லா திசைகளிலும் கூர்ந்து நோக்கியவாறு நடக்க ஆரம்பித்தார்.

சிறிது தூரம் நடந்தபிறகு, ஒரு மரத்தடியில் சில துறவிகள் அமர்ந்திருக்க தலைமைத் துறவி அருளுரை நிகழ்த்துவதைக் கண்டனர். அந்தத் தலைமைத்துறவி யாரென்று பார்த்தபோது அங்கு புத்தரைக் கண்டார்.

இல்லறவாசி ஆர்வத்துடன் அவரது அருளுரையைக் கேட்டார். உரை நிறைவுற்ற பின்னர், அவர் புத்தரை வணங்கினார். பின்னர் தான் வழியில் ஒருவரைச் சந்தித்ததை விளக்கமாக கூறி, தன்னைக் காக்குமாறு வேண்டினார்.


புன்னகை புரிந்த புத்தர். “எனக்குப் பசியாக இருக்கிறது. ஏதாவது சாப்பிட இருக்கிறதா?” என்று கேட்டார்.

இல்லறவாசி அளவற்ற மகிழ்ச்சியுடன் பையைத் திறக்க முற்பட்டார்.  ஆனால் புத்தர், அந்தப்பையை அப்படியே தன்னிடம் தருமாறு கேட்டார். இல்லறவாசியும் பையை அப்படியே புத்தரிடம் கொடுத்தார். புத்தர் மெதுவாக பையைத் திறந்து, அதன் உள்ளே இருந்த சிறிய விஷப்பாம்பை வெளியில் எடுத்தார்.


அதைக்கண்ட இல்லறவாசி திடுக்கிட்டான். மதியம் தான் உணவருந்தப் பையைத் திறந்து மரத்தடியில் வைத்திருந்தபோது விஷப்பாம்பு பைக்குள் சென்றிருக்க வேண்டும் என்று இல்லறவாசி புரிந்து கொண்டார். அப்போதுதான் துறவி சொன்னதன் பொருள் அவனுக்குப் புரிந்தது.

(ஒருவர் மரணத்தை எப்போதும் தன்னுடனேயே எடுத்துச் செல்கிறார். சாதுக்கள் தொடர்பு அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்)

மரணத்தை வென்றவர் என்று இதுவரையில் யாரும் இல்லை நல்லவர்களோடு தொடர்பில் இருப்போம். மனித நாகரீகத்தோடு செயல்படுவோம். மரணங்கள் வந்தாலும் நாம் அதை எதிர்த்து நிற்கலாம்...
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10484
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum