சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 15:16

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Yesterday at 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Yesterday at 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Yesterday at 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Yesterday at 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Yesterday at 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 16 Oct 2017 - 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Mon 16 Oct 2017 - 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Mon 16 Oct 2017 - 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:37

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:36

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar Mon 16 Oct 2017 - 14:35

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:34

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar Mon 16 Oct 2017 - 14:33

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by rammalar Mon 16 Oct 2017 - 5:02

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar Mon 16 Oct 2017 - 5:00

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by rammalar Mon 16 Oct 2017 - 4:59

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar Mon 16 Oct 2017 - 4:58

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar Mon 16 Oct 2017 - 4:57

» மனசு : வாசிப்பும் மருத்துவமும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:50

» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:48

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Sat 14 Oct 2017 - 18:28

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Sat 14 Oct 2017 - 18:27

» காதல் எஸ் எம் எஸ்
by கவிப்புயல் இனியவன் Sat 14 Oct 2017 - 16:36

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by பானுஷபானா Sat 14 Oct 2017 - 12:55

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by rammalar Sat 14 Oct 2017 - 2:43

» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
by rammalar Sat 14 Oct 2017 - 2:42

.

படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

Sticky படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 13:13

ஜனனம்!

“பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்” என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!” என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார்.

‘சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!’ என்று நினைத்தபடி வெளியே வந்தேன்.

வெளியே நின்றிருந்த ஒருவர், “என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?” என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது.

மகிழ்ச்சி பதிவாகும் நேரத்தில் நெருடல் வேண்டாமே என்றுதான் என்னை வெளியே அனுப்பியிருக்கிறார்.

- பம்மல் நாகராஜன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 13:14

வாய்!
------------
கல்யாண மண்டபத்தில் கூட்டம் திமிறிக்கொண்டு இருந்தது.

தெருவை அடைத்து ஒரு பெரிய கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினாள் மிஸஸ் மங்களா ராமநாதன்.

“ஏய்... அங்கே பாரேன். எவ்ளோ பெரிய தொழிலதிபரின் மனைவி! ஆனா, அந்த பந்தா எதுவும் இல்லாம, சிம்பிளா காட்டன் புடவையில வந்திருக்கா பாரு. அவ நினைச்சிருந்தா நகைக் கடையையே சுமந்துட்டு வந்திருக்கலாமே! ஆனா, பொட்டுத் தங்கம் இருக்குதா உடம்புல? அடடா... என்ன அடக்கம்! எத்தனை எளிமை!” - அங்கே இருந்தவர்களின் வாய்கள் வியப்பில் சளசளத்தன.

சிறிது நேரத்தில், அங்கே வந்தாள் உறவுக்காரப் பெண்மணி ஒருத்தி. இவர்கள் அந்தஸ்தோடு நெருங்கி வர முடியாத ஏழை என்பது தோற்றத்திலேயே தெரிந்தது.

“இதென்னடி கண்றாவி! அபிஷேகத்துக்குத் தயாரா நிக்கிற தைல நாச்சியார் போல வந்திருக்காளே? கழுத்தும் காதும் மூளியா, அச்சுபிச்சுன்னு ஒரு புடவையை எடுத்துச் சுத்திக்கிட்டு... சே! கல்யாணத்துக்கு வர்ற மாதிரியா வந்திருக்கா? தரித்திரம்!”

அதே வாய்கள்தான்!

- கீதாநாதன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 13:15

குறை!

“எ ன்ன சார், வர வர உங்க கடை டிபனே சரியில்லையே?” என்றபடியே, கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளியிடம் பில்லுக்கான பணத்தைக் கொடுத்தான் ரகு.

“ஸாரி சார், ஒரு வாரமா நம்ம பழைய மாஸ்டர் வரலை. உறவுக்காரங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு போயிருக்கார். அடுத்த வாரத்திலிருந்து சரியாயிடும்!”-மீதிச் சில்லறையைக் கொடுத்தபடியே பவ்யமாகச் சொன்னார் முதலாளி.

ரகு வெளியேறிய பின்பு, “என்னங்க, இந்த ஆளுக்கெல்லாம் விளக்கம் சொல்லிக் கிட்டு... இவர் மட்டும்தாங்க தினமும் ஏதாவதுநோணாவட்டம் சொல்லிக்கிட்டே இருக்காரு. மத்தவங்க எல்லாம் எதுவும் சொல்லாம சாப்பிட்டுட்டுப் போறாங்க!” என்று முதலாளியிடம் புகார் போலச் சொன்னார் சர்வர்.

முதலாளி புன்னகைத்துவிட்டு, “எதுவுமே சொல்லாமப் போறவங்க ரெகுலர் கஸ்டமரா இருக்க மாட்டாங்க. அப்படியே தொடர்ந்து கொஞ்ச நாளா வர்றவங்களா இருந்தாலும், டிபன் சரியில்லேன்னதும் சத்தமில்லாம அடுத்த ஓட்டலைத் தேடிப் போயிடுவாங்க. ஆனா, இவர் அப்படி இல்லே. தொடர்ந்து நம்ம ஓட்டலுக்கே வர்றாரு. இனிமேலும் வருவாரு. இவர் மாதிரி கஸ்டமர்கள்தான் நமக்கு முக்கியம்!” என்றார்.

- வேலுபாரதி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 13:16

கைடு!

ஜெ ய்சல்மீர் ஹவேலிகளைச் சுற்றிப் பார்க்க நான் போயிருந்தபோது, “கைடு வேணுமா சார்?” என்றபடி அந்தச் சிறுவன் ஓடி வந்தான்.

எட்டு வயதுதான் இருக்கும். கிழிந்த சட்டை. கலைந்த தலை. மெலிந்த உடம்பு. ‘இவனுக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது!’ என்ற நினைப்பை, அவன் மீதான இரக்கம் ஒதுக்கியது.

“சரி, வா!” என்றேன்.

அவன் உற்சாகமாக ஆரம்பித்தான்... “இது பட்வோ கீ ஹவேலி. அதோ... அது ஒரு காலத்தில் இந்த ஊரில் பிரதம மந்திரியாக இருந்த சாலிம் சிங்குடையது. இதோ, இந்த ஹவேலி, அரச சபையில் பிரபுவாக இருந்த பிரேம் சந்த்தினுடையது. உழைப்பால் உயர்ந்து பெரும் பணக்காரரானவர் அவர். ஆனால், அவருக்குப் பின் வந்த சந்ததிகள் சோம்பேறிகள் மட்டுமல்ல; உல்லாச கேளிக்கைகளில் ஈடுபட்டு அத்தனைச் சொத்துக்களையும் தொலைத்தவர்கள்...”

“அட, இத்தனை விவரமும் உனக்கு எப்படித் தெரியும்?” என்றேன் ஆச்சர்யமாக.

“தெரியாமல் என்ன சார், அந்தப் பரம்பரையில் எங்க அப்பா நான்காவது தலைமுறை. உடம்பு சரியில்லாமல் இருக்கும் அவருக்கு மருந்து வாங்கக்கூட முடியாமல், நான் கைடு வேலை பார்க்கிறேன்..!” 

- லக்ஷ்மி ரமணன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 15:34

நிற்பதுவே...
------------
‘‘கா லெல்லாம் வலிக்குதுப்பா..!’’

குனிந்தபடி முழங்கால்களில் கைகளை ஊன்றிக்கொண்டு பரிதாபமாகச் சொன்ன மகனைச் சமாதானப்படுத்தினார் பெரியசாமி. ‘‘கொஞ்சம் பொறுத்துக்கப்பா. அடுத்த பஸ்ல போயிரலாம்!’’

‘‘போங்கப்பா, ஒரு மணி நேரமா இப்படியேதான் சொல்லிட்டு இருக்கீங்க! இப்ப வந்து நின்ன பஸ்லயாவது ஏறியிருக்கலாம்ல?’’

‘‘கூட்டத்தைப் பார்த்தேதானே. உட்கார ஸீட்டே இல்லை. அதுல போயிருந்தா, பஸ் ஸ்டாண்டு வரைக்கும் நின்னுட்டேதான் போகணும்!’’

‘‘இப்பவும் நின்னுட்டுதானே இருக்கோம். இவ்வளவு நேரமா இப்படி ரோட்ல நிக்கிறதுக்குப் பதிலா, பஸ்ல ஏறி நின்னுருந்தோம்னா, இந்நேரம் வீட்டுக்கே போயிருக்கலாம்!’’ என்றான்.

‘‘அட, ஆமாம்தானே!’’

- ஒப்பிலான்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 15:35

சின்னப் புள்ளையா இருக்கே!

‘‘ஹ லோ மாலதி, நான் அமுதா பேசறேன்...’’

‘‘ஹேய் அமுதா! எப்படி இருக்கே?’’

‘‘நான் நல்லா இருக்கேன். நீதான் மாலதி ரொம்பப் பெரிய ஆளா மாறிட்டே. ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் யாரையும் கண்டுக்கிறதே இல்லை.’’

‘‘ஹேய், அப்படி இல்லை அமுதா. என்கிட்டே யார் நம்பரும் இல்லை. தவிர, இப்போ நான் நிஜமாவே ரொம்ப பிஸி. கம்பெனி வேலையா மாசத்தில் பாதி நாள் பறந்துட்டே இருக்கேன். ஆமா, உனக்கென்ன இப்போதான் என் ஞாபகம் வந்ததா?’’

‘‘நேத்துதான் உன் செல் நம்பரே கிடைச்சுது. எத்தனை ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேக்குறது..?’’

‘‘எனி குட் நியூஸ்?’’

‘‘ஆமா, எனக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கு... அடுத்த மாசம் கல்யாணம்.’’

‘‘கங்கிராட்ஸ், எனக்குக்கூட வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டிருக்காங்க அமுதா.’’

‘‘வீட்ல பார்க்கிறாங்களா? என்ன சொல்றே, ஸாரி... ப்ளஸ் டூ படிக்கிறப்போ பாண்டியன்னு ஒருத்தரை நீ லவ் பண்ணியேப்பா!’’

‘‘பாண்டியன்..? ஓ, அவரா? முகமே மறந்துபோச்சு. அதுக்கப்புறம் நான் காலேஜ் சேர்ந்து யு.ஜி., பி.ஜி., பி.ஹெச்டி., முடிச்சு, இப்போ வேலையில் சேர்ந்து மூணு வருஷம் ஆகிடுச்சு. அதுக்குள்ளே நாலஞ்சு பாண்டியன்களைப் பார்த்துட்டேன் அமுதா! நீ இன்னும் சின்னப் புள்ளையாவே இருக்கே!’’

-வந்தனா
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 15:36

மும்பையில் ஒரு நண்பன்!

அ லுவலக வேலை விஷயமாக மும்பை போனபோது, யதேச்சையாக ஒரு ஷாப்பிங் மாலில் அவனைப் பார்த் தேன். ஓடிப் போய், “என்ன கோபால், என்னைத் தெரியுதா?” என்று அவன் தோளைத் தொட்டேன்.

அவன் என்னை ஏற இறங்கப் பார்த்து “மன்னிக்கணும், நீங்க யார்னு தெரிய லையே! தவிர, நான் கோபால் இல்லை. ஸ்ரீஹரிவர்மா!” என்றான் இந்தியில்.

“ ஸாரி! அச்சு அசல் என் நண்பன் கோபால் மாதிரியே இருந்தீங்களா, அதான்! என்ன, அவன் கொஞ்சம் ஒல்லியா இருப்பான். மீசை வெச்சிருப்பான்...”

‘‘ஓ!”

“அந்த நாயை என் ஃப்ரெண்டுன்னு சொல் லிக்கவே அசிங்கமா இருக்கு, சார்! திருட்டுப் பய. வேலையை விட்டு நிக்கப் போறேன்னுகூடச் சொல்லாம என்கிட்டே ரெண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கிட்டு, வேலையை ரிஸைன் பண்ணிட்டு மும்பை வந்துட்டான். சோத்துல உப்பு போட்டுத் திங்கிறவனா இருந்தா, என்கிட்டே வாங்கின பணத்தை செக் போட்டு அனுப்பி யிருப்பான். பொறுக்கி, பேமானி...” என்று சகல வசவு வார்த்தைகளையும் பிரயோகித்துவிட்டு, அவனிடம் விடைபெற்றுக் கிளம்பினேன்.

பின்னே, என்ன பண்ணச் சொல்றீங்க... வெறும் ரெண்டாயிரம் ரூபாய்க்காக, கூடப் பழகின நண்பனையே தெரியாதவன் மாதிரி ஆக்ட் கொடுக்கிறவனை?

-கண்ணன் பாலாஜி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 15:37

அதிக ஆசை வேண்டாமே!

உணவகம் சென்ற நண்பர் அங்கிருந்த அறிவிப்பு பலகையை பார்த்து, படித்து,தேவைக்கு அதிகமாகவே வாங்கி மகிழ்ச்சியுடன் சாப்பிட்டார்

"நீங்கள் எதை வேண்டுமோ, எவ்வளவு வேண்டுமோ சாப்பிடுங்கள். அதற்கான தொகையை உங்கள் பேரனிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்." என்பதுதான் அறிவிப்பு பலகையில் இருந்த வாசகம்.

சாப்பிட்டு கை கழுவி வெளியில் வந்தவரை தடுத்து நண்பரிடம் ஒரு பில்லை கொடுத்து பணம் காட்டிவிட்டு செல்லுமாறு கூறினார் மற்றொருவர். 

கோபம் தலைக்கேற உணவக பொறுப்பாளரிடம் சென்று, அறிவிப்பு பலகையில் எனது பேரனிடம் பெற்றுக்கொள்வதாக எழுதிவிட்டு என்னிடமே கேட்பது ஏன் என்று கேட்டார்.

பொறுப்பாளர் பொறுமையாக "இது நீங்கள் சாப்பிட்டதற்கு அல்ல. உங்கள் தாத்தா சப்பிட்டதற்கான பில்" என்ற பதிலில் அதிர்ச்சியடைந்து பணம் செலுத்திவிட்டுச் சென்றார்.

அதிவேகம் ஆபத்தானது போல, அதிக ஆசையும் அவசியமானது அல்ல.

நா.செ.மணி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 15:38

ஏழை தொழிலாளி ஒருவர் தனது மகனுடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்து விருந்து சாப்பிடும்பொழுது மகன் அடிக்கடி தண்ணீர் சாப்பிடுவதை பார்த்து தொடையில்கிள்ளி மெதுவான குரலில் “டேய், தண்ணியை குடிச்சுட்டு வயித்தை நொப்பாம சாதத்த சாப்பிடுடா” என கூறிக்கொண்டிருந்தார். ஆனாலும் பையன் கேட்காமல் தண்ணீரும் சாப்பாடுமாக தொடர்ந்தான்,

வீடு திரும்பியதும் மகனிடம் சப்தம்போட்டார். ஆனால் மகனோ தயங்கி தயங்கி “அப்பா நீங்கள் தானே, நான் லீவு நாளில் உங்களுடன் இருந்தபொழுது, ஏன் அப்பா, ஆழ்துளை குழியில் காங்கிரீட் போடும்போது அடிக்கடி தண்ணீர் ஊத்துறீங்க என்று கேட்டேன் – அப்பதாண்ட அது போயி நல்ல செட்டாகி நெறையா போடமுடியும்” என்று சொன்னீர்கள் என்றான்.

அதை கேட்ட தந்தை மறுபடியும் இரண்டு சாத்து சாத்தி “இத ஏன்டா அங்கேயே எங்கிட்டேயும் சொல்லலை” என்றார். 

நா.செ.மணி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 15:39

அவசர உதவி!


ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ரெங்காவின் செல்போன் அந்த நடுநிசியில் அலறி, அவரை எழுப்பிவிட்டது.

“நான் மயிலாப்பூர்லேர்ந்து ஷங்கரன் பேசறேன் டாக்டர்..!’’

“சொல்லுங்க, என்ன பிராப்ளம்?”

“பைபாஸ் சர்ஜரி...”

“பண்ணிடுவோம். பேஷன்ட்டை உடனே கொண்டுவந்து அட்மிட் பண் ணுங்க. ஆம்புலன்ஸ் ரெடியா இருக்கு. அட்ரஸ் சொன்னா உடனே அனுப்பி வைக்கிறேன்!”

“வந்து... பைபாஸ் பண்ணணுமா வேணாமான்னு தெரிஞ்சுக்க ஏதோ ஒரு டெஸ்ட் பண்ணுவீங்களே...”

“ஆஞ்சியோகிராம்தானே... பண்ணிடா லாமே!”

“ஹிஹிஹி, தூக்கம் வரலை. குறுக்கெழுத்து போட்டுட்டு இருந்தேன். ஒண்ணே ஒண்ணு ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு. கொடுத்திருக்கிற க்ளூவுக்கு நீங்க சொன்ன வார்த்தை சரியாப் பொருந்துது. ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்!”

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 15:40

புகழ்ச்சி!

புகழ்ச்சிக்கு மயங்காதவர்களே இல்லை என்பான் சந்துரு. மிடுக்கான தோற்றம், கம்பீரமான குரல், நேர்த்தியான உடை, நடக்கும் ஸ்டைல், அழகான கையெழுத்து, சாதிக்கும் திறமை எனப் பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் ஒரு ப்ளஸ் பாயின்ட் இருக்கும். அப்படி, அவர் கள் தங்களைப் பெருமிதமாக நினைக்கிற ஒன்றிரண்டு விஷயங்களைக் கண்டு பிடித்து, அதை வைத்தே அவர்களைப் புகழ்ந்து தள்ளி, நல்ல பேர் வாங்கிவிடு வான் சந்துரு.

ஆனால், புதுசாக வந்த மேனேஜரிடம் அவன் பாச்சா பலிக்கவில்லை. புகழ்ச் சிக்கு மயங்காதவராக இருந்தார் அவர்.

ஒரே மாதம்தான்... அவரையும் மடக்கித் தன் வலையில் வீழ்த்திவிட்டான். ‘எப்படிடா சாதிச்சே?’ என்றோம்.

“வேறொண்ணுமில்லை... ‘உங்களை மாதிரி புகழ்ச்சிக்கு அடிமையாகாம இருக் கிறவங்க லட்சத்தில் ஒருத்தர், கோடியில் ஒருத்தர்தான் சார்! அந்த விஷயத்தில் நீங்க ரொம்ப கிரேட்!’னு சொன்னேன்!” என்றான்.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 15:41

சாதுர்யம்!


கோவை செல்லும் தனியார் சொகுசுப் பேருந்தில் மனைவியை அனுப்பிவைத்து விட்டு, நான் ஆபீஸ் போன அரை மணி நேரத்தில் மனைவியிடமிருந்து மிஸ்டு கால்! உடனடியாக என் மொபைலிலிருந்து தொடர்புகொண்டேன்.

“ஹலோ, இன்ஸ்பெக்டர் அங்கிளா? நல்லாருக்கீங்களா அங்கிள்? எங்கேர்ந்து பேசறீங்க? சேலத்துலேர்ந்தா? சேலத்துல என்னைப் பார்க்க வரீங்களா? வாங்க அங்கிள்! பஸ் சேலம்கிட்டே வரும்போது உங்களுக்கு கால் பண்றேன். தேங்க்ஸ் அங்கிள்! மாமியைக் கேட்டதாச் சொல்லுங்க!” என்று பேசி, இணைப்பைத்துண்டித் தாள் என் மனைவி.

எனக்கு எதுவும் புரியவில்லை.

மறுபடி, அவள் கோவை போய்ச் சேர்ந்த பின், ராத்திரி ஒன்பது மணிக்கு போன் செய்தாள்.

“என்னங்க, நேத்து பஸ்ஸுல எனக்குப் பின் ஸீட்டுல உட்கார்ந்திருந்தவன் சரியில்லை. ஜாடை மாடையா பேசுறதும், டீஸ் பண்றதுமா இருந்தான். அதான், அப்படிப் பேசினேன். அதுக்கப்புறம் அவன் கப்சிப்னு ஆயிட்டான். நானும் தொந்தரவு இல்லாம நிம்மதியா வீடு வந்து சேர்ந்தேன்..!”
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Mon 9 Nov 2015 - 15:41


கனம்!


அந்தச் சிறுமிக்குப் பத்துப் பன்னிரண்டு வயது தான் இருக்கும். பஸ்ஸுக்காகக் காத்திருந்தவர்களில் அவளும் ஒருத்தி.

ஒரு குட்டிப் பையனைத் தூக்கிச் சுமந்தபடி நின்றிருந்தாள். ரொம்ப நேரமாக பஸ் வரவில்லை. அவளும் அந்தப் பையனைக் கீழே இறக்கிவிடுவதாக இல்லை.

பொறுக்க முடியாமல், “ஏம்மா, அவனைக் கீழே இறக்கிவிடறதுதானே? பஸ் வரும்போது தூக்கிக்கிட்டாப் போச்சு! எவ்வளவு நேரம்தான் பாவம், நீ கனத்தை சுமந்துக்கிட்டே இருப்பே!” என்றேன்.

சட்டென்று அவள் சொன்னாள்... “கனமா? இது என் தம்பிங்க!”

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Tue 10 Nov 2015 - 4:56

கவர் ஞானம்!தனது ஒரே மகளின் கல்யாண ஏற்பாடுகளில் தீவிரமாக மூழ்கியிருந்தார் பேராசிரியர் கல்யாணராமன். நெல்லைச் சீமையில் இது போன்ற கல்யாண விருந்தை இதுவரை யாருமே அனுபவித்திருக்கக்கூடாது என்று சொல்லி விருதுநகர் சமையலுக்கு ஏற்பாடு செய்தார்.

‘‘ஆனாலும், 2000 பேருக்குச் சாப்பாடு என்பது கொஞ்சம் அதிகம் இல்லையா?’’ என்று மனைவி கேட்டதற்கு, ‘‘போடி அசடே! இதுவே போதுமா என்று நான் குழம்பிக்கொண்டு இருக்கிறேன். தெரிந்தவர், அறிந்தவர், உறவினர் என எல்லாக் கல்யாணங்களுக்கும் நான் போகமுடியாவிட்டாலும், நண்பர் நாகராஜன் மூலமாக மொய்க் கவர் கொடுத்தனுப்பத் தவறியதே இல்லை. நீ வேண்டுமானால் பார், கூட்டம் குவியப் போகிறது!’’ என்றார்.

ஆனால், முகூர்த்த நேரம் நெருங்கியும் மண்டபத்தில் ஐம்பது பேர்கூட இல்லை. நண்பர் நாகராஜன் மூலம் மொய்க் கவர்கள்தான் 2,000 வந்து சேர்ந்திருந்தன!

- சேவியர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Tue 10 Nov 2015 - 4:57

திண்டாட்டம்!தான் திடீரென்று இறந்து போய் விட்டால், வெளி உலகமே தெரியாத தன் அப்பாவி மனைவி ஜானகி ரொம் பவும் திண்டாடிப் போவாளே என்பதால், தான் இருக்கும்போதே அவளுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்று, மறுநாளே அவளை பேங்க்குக்குஅழைத்துப்போய் பணம் போட, எடுக்க, மின்கட்டணம், டெலிபோன் கட்டணம் செலுத்த, அமெரிக்காவில்இருக் கும் மகனுக்கு இ-மெயில் அனுப்ப என எல்லாம் வரிசையாகச் சொல் லிக்கொடுத்தார் வாசுதேவன்.

ஆனால் பாவம், மறுவாரமே பாத் ரூமில் வழுக்கி விழுந்து மண்டையில் அடிபட்டு போய்ச் சேர்ந்தாள் ஜானகி.

டூத் பிரஷ்ஷில் பேஸ்ட் எடுத்து வைப்பதிலிருந்து அவருடைய அனைத் துத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்துவந்த மனைவி இல்லாமல், இப்போது வாசுதேவன்தான் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்!

- கருணையானந்தன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Tue 10 Nov 2015 - 4:58

மகனின் கரிசனம்!


இவ்வளவு காலமாக, கிராமத்தில் தான் இருக் கோமா செத்தோமா என்றுகூடப் பார்க்க வராத தன் மகன் திடீரென தன்னைப் பார்க்க வந்தது மட்டுமின்றி, ஏறக்குறைய முழுப்பார்வையுமே இழந்து, தடுமாறிக்கொண்டு இருந்த தன்னை டவுனில் உள்ள பிரபல கண் மருத்துவரிடம் சிகிச்சைக்கு வேறு அழைத்து வந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி பழனியம்மாளுக்கு.

கண் மருத்துவர், பழனியம்மாளின் கண்களை நன்கு சோதித்த பின், வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, அவள் மகனிடம் சிகிச்சை தொடர்பாகப் பேசத் தொடங்க,

‘‘சிகிச்சை இருக்கட்டும் டாக்டர்! இவங்களுக்குப் பார்வை இல்லை என்று நீங்கள் ஒரு சான்றிதழ் கொடுத்தால், அதை வைத்து வீட்டில் உடல் ஊனமுற்றவரை பராமரிக்கக் கொடுக்கப்படும் வருமான வரி விலக்கு பெற முயற்சிக்கலாம். நான் இப்போது அதற்காகத்தான் வந்தேன்’’ என்றான் மகன்!

- பி.ரமேஷ்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Tue 10 Nov 2015 - 4:59

வாத்தியாரம்மா... கணக்கு தப்பு!‘‘முத்து! உனக்கு நான் இரண்டு மாடும், இன்னொரு இரண்டு மாடும், அதன் பிறகு இன்னும் இரண்டு மாடும் கொடுத்தால், உன் வீட்டில் மொத்தம் எத்தனை மாடுகள் இருக்கும்?’’

‘‘எட்டு, டீச்சர்!’’

‘‘மண்டு! கணக்கை மறுபடியும் சொல்றேன். முதல்ல இரண்டு மாடு தரேன். அப்புறம் இரண்டு மாடு தரேன். மறுபடியும் இரண்டு மாடு தரேன். ஆக, உன் வீட்டில் மொத்தம் எத்தனை மாடுகள்?

‘‘எட்டு, டீச்சர்!’’

‘‘போடா முட்டாள்! சரி, இப்ப அதே கணக்கை வேற விதமா சொல்றேன். உனக்கு நான் முதல்ல இரண்டு ஆடு தரேன். அப்புறம் இரண்டு ஆடு தரேன். மறுபடியும் இன்னும் இரண்டு ஆடு தரேன். இப்ப உன் வீட்டில் மொத்தம் எத்தனை ஆடுகள் இருக்கும்?’’

‘‘ஆறு டீச்சர்!’’

‘‘அட, இப்ப மட்டும் எப்படிடா சரியா சொன்னே?’’

‘‘எங்க வீட்ல ரெண்டு மாடுதான் இருக்கு டீச்சர்! ஆடு இல்லியே!’’

- எஸ்கலின் ராணி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Tue 10 Nov 2015 - 4:59

மறதி!அந்த போலீஸ் உயரதிகாரிக்கு இப் போது பெரிய நெருக்கடி! ரௌடி ‘கோழி’ கோவிந்தனைப் போட்டுத்தள்ள அவர்தான் இன்ஸ்பெக்டர் கார்த்திக்குக்கு உத்தரவு கொடுத்திருந்தார். ஆனால், ‘கோழி’ பெரிய அரசியல் தலைவருக்குக் கொடுக்க வேண்டி யதைக் கொடுத்து, கார்த்திக்கை வேறு ஊருக்குமாற்றிவிட்டான். இப்போது எப்பாடு பட்டாவது ‘கோழி’யைப் பத்திரமாகப் பாது காக்க வேண்டிய கட்டாயம் உயரதிகாரிக்கு.

கார்த்திக்கை அவனது செல்லில் தொடர்பு கொள்ளலாம் என்றால், மறந்து வீட்டில் வைத்துவிட்டுப் போய்விட்டான். அவன் மனைவி எடுத்து பதில் சொல்கிறாள். சே..!

நல்லவேளையாக கார்த்திக்கே அவரைத் தொடர்புகொண்டான். ‘‘சார்! ஒரு குட் நியூஸ். நீங்க சொன்னபடி என்கவுன்ட்டரைக் கச்சி தமா முடிச்சுட்டேன். ‘கோழி’ சேப்டர் ஓவர்! நேர்ல வந்து ரிப்போர்ட் தர்றேன்!’’

அதிகாரி உறைந்துபோனார்.

தன்னை வேறு ஊருக்குத் தூக்கியடித்து விட்ட விவகாரம் தெரிந்துதான், வேண்டு மென்றே கார்த்திக் தனது செல்போனை வீட்டில்‘மறதி’யாக விட்டுவிட்டுப் போனான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்!

- அன்னம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Tue 10 Nov 2015 - 5:00

உறவு!


‘‘இதப் பாருங்க! காலாகாலத்துக்கும் உங்க அப்பா-அம்மாவுக்கு நானே வடிச்சுக் கொட்டிட்டிருக்க முடியாது! ஏன், உங்க தம்பி வீட்ல போய் கொஞ்ச நாள் இருக்கிறது?’’ -கடுகடுத்தாள் ரேகா.

‘‘புரியாமப் பேசாதே ரேகா! அவன் தங்களை மீறிக் காதல் கல்யாணம் செஞ்சுக்கிட்டான்னு அப்பாவும் அம்மாவும் அவனைத் தலைமுழுகிட்டது உனக்குத் தெரியாதா? அங்கே எப்படிப் போவாங்க?’’

‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த வீட்டுல ஒண்ணு அவங்க இருக்கணும்; இல்ல, நான் இருக்கணும். யாருன்னு முடிவு பண்ணிக்குங்க!’’

ரேகாவின் கத்தல் காதில் விழவும், நொந்துபோன சிவாவின் பெற்றோர், வேறு வழியின்றி இளைய மகனுடனான மனஸ் தாபத்தை மறந்து, மறுநாளே அவன் வீட்டுக்குப் போய்விட்டார்கள்.

‘‘என்னை மன்னிச்சுடுங்க, உங்க தம்பி யையும் அப்பா, அம்மாவையும் ஒண்ணு சேர்க்க எனக்கு வேற வழி தெரியலீங்க!’’ என்று இங்கே கணவனிடம் கண் கலங் கினாள் ரேகா.

- பி.எம்.தனபாலன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Tue 10 Nov 2015 - 5:01

மனைவிக்கு ஒரு கடிதம்!


மரியாதைக்குரிய மனைவி அவர்களுக்கு,

வணக்கம். நேற்று நீங்கள் செய்த குழம்பில் உப்பு சற்றே தூக்கல் என்பதைப் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். பரவாயில்லை, கரிக்கக் கரிக்கக் கஷ்டப்பட்டுச் சாப்பிட்டுவிட்டேன். தவிர, சட்டையில் பிய்ந்துபோயிருந்த பட்டனைத் தைத்துத் தரும்படி தங்களிடம் தாழ்மையுடன் விண்ணப்பித்திருந்தேன். ஏதோ மறதியில், அதைச் செய்யாமல் விட்டுவிட்டீர்கள். ஊக்கு மாட்டி அட்ஜஸ்ட் செய்துகொண்டேன். அப்புறம்... நேற்று மழையாக இருந்ததால், உங்கள் உடைகளைத் துவைத்து, உலர்த்த முடியவில்லை. ஆனால், அதற்காகநீங்கள் என் மீது எறிந்த சுடு சொற்கள் என் நெஞ்சை மிகவும் ரணப்படுத்திவிட்டன என்பதைவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையெல்லாம் உங்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும் என்ற கடமை எனக்கு இருக்கிறது என்று கருதியே எழுதுகிறேன். மற்றபடி, தங்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

-இப்படிக்கு, அபலைக் கணவன்.

(‘மனைவியை அடித்தால் சிறை’ சட்டம் வெளியானதற்குப் பிறகு எழுதப்பட்ட ஒரு கடிதம்)

- சி.முருகேஷ் பாபு
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Tue 10 Nov 2015 - 5:02

அது!


கோவை ரயில் நிலையம், வெடிகுண்டுப் புரளியில் பரபரப்பாக இருந்தது. காக்கிச் சட்டைகளின் எக்ஸ்-ரே பார்வை கள், மெட்டல் டிடெக்டர்களின் தீவிர சோதனைகள் எல்லாவற்றையும் தாண்டி பிளாட்பாரத்துக்குள் நுழைந்தாள் அந்தப் பெண். அவளின் விரல்களோடு கைகோத்தபடி நடந்துகொண்டு இருந்த அவனது பேன்ட் பாக்கெட் டுக்குள் ‘அது’.

சுற்றுமுற்றும் பார்த்தவன், இனி தன்கைவரிசையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தான். பேன்ட் பாக் கெட்டுக்குள் கைவிட்டு, அதை மெது வாக வெளியே எடுத்தான்.

அடுத்த சில விநாடிகளில்... ‘டமால்’ என்று பெருத்த வெடிச் சத்தம்!

எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, வெடித்த பலூனைக் கையில் பிடித்தபடி அழுது கொண்டு இருந்தான் அந்தப் பையன்!

- நிலா கிருஷ்ணமூர்த்தி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Tue 10 Nov 2015 - 5:03

மாமியார்

சுதாவுக்கு கோபம் கோபமாய் வந்தது. வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு இருக்கும் நான், மாங்கு மாங்கு என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்கிறேன். என் மாமியார் பக்கத்து வீட்டில் உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறாளே?

ச்சே.. ச்சே.. என்ன பொம்பளை இவங்க?... மருமகள் மீது கொஞ்சம் கூடவா ஈவு இரக்கம் இல்லாமல் போய்விடும்?

சுதா, கணவன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவன் வந்ததும் சொன்னாள்...

“என்னங்க... நான் உங்க வீட்டு முதல் வாரிசை சுமக்கிறேன். ஆனா, அதை உங்க அம்மா உணர்ந்த மாதிரி தெரியலையே? என்னை ஒரு வேலைக்காரியா நினைச்சு வேலை வாங்கிட்டு இருக்காங்க. என்னால முடியலைங்க. நீங்களாவது உங்க அம்மாகிட்ட என் நிலமையை பத்தி பேசக்கூடாதா?”

கதிர் அவள் சொல்வதை கேட்டு கொதித்து போனான். “நிச்சயம் அம்மாவிடம் இதுபற்றி கேட்பேன்” என்று ஆறுதல் கூறினான்.

அந்த நேரத்தில், பக்கத்து வீட்டு சரசுவிடம் கதிரின் அம்மா “கடவுள் புண்ணியத்துல...என் மருமகள் சுதாவுக்கு சுகப்பிரசவம் நடந்தா, திருப்பதிக்கு நான் நடைப்பயணமா வர்றதா வேண்டிக்கிட்டு இருக்கேன். அவளுக்கு சுகபிரசவம் நடக்கணும்னு நான் எந்த வேலையையும் செய்யாம அவளையே எல்லா வேலையையும் செய்யச் சொல்றேன். நல்லா வேலை செஞ்சாதானே சுகப்பிரசவம் நடக்கும்? நல்லபடியா அவளுக்கு சுகபிரசவம் ஆயிட்டா அதுக்கு அப்புறம் என் மருமகளை ஒரு வேலையும் செய்யவிடாம, என் உள்ளங்கையில் வைச்சு தாங்குவேன். இப்ப அவளை நான் இப்படி வேலை வாங்கறேன்னு அவளுக்கு என் மேல கண்டிப்பா கோபம் இருக்கும். இருந்துட்டு போகட்டும். நல்லது நடந்தா சரி!” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

அதை ஒட்டுக் கேட்டு கொண்டிருந்த சுதாவின் கண்கள் குளமாயின! 

எஸ்.எஸ். பூங்கதிர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Tue 10 Nov 2015 - 5:04

அம்மா

வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர்.

“என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா என்ன?... வீடு மூடியே இருந்துச்சே?... சொல்லிக்காம எங்க போயிட்டிங்க?” செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு செல்வம் கேட்டார்.

“புதன்கிழமை கிழமை நைட் என் பையன் பயங்காட்டிட்டான் சார்!... மணி ரெண்டு இருக்கும். திடீர்ன்னு வயித்து வலி தாங்காம துடிக்கிறான். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பயந்துட்டோம். உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போனா, அவங்க ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்புறம் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்ன்னு ரெண்டு நாள் அவங்க எல்லா டெஸ்டையும் எடுத்துப் பார்த்தாங்க. அப்புறம் ‘பயப்படும்படி ஒண்ணும் இல்லை’ன்னு சொல்றதுக்குள்ள எங்களுக்கு உயிரே போயிடுச்சு. அவனுக்கும் வயித்து வலி தானா போயிடுச்சு. நேத்து சாயங்காலம்தான் டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சுட்டு வந்தோம். ரெண்டு நாள்ல எழுபதாயிரத்துக்கு மேல செலவாயிடுச்சு. பணம் போனா போகட்டும், பையனுக்கு ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்களே... அது போதும் சார்!” சங்கர் பெருமூச்சு விட்டான்.

“என்ன பேசறீங்க நீங்க?... ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இப்படித்தான் என் பையனும் வயித்து வலி வந்து துடிச்சான். உங்களை மாதிரியே நாங்களும் பயந்தப்ப, உங்க அம்மாதான், ‘அது சூட்டு வலியா இருக்கும். தொப்புள்ல நல்லெண்ணை வைங்க. சட்டுன்னு சரியாடும்’ன்னு சொன்னாங்க. நம்பி வைச்சோம். பத்தே நிமிஷத்துல அவன் விளையாட கிளம்பிட்டான். ஏன்... இதை உங்க அம்மா உங்களுக்கு அன்னைக்கு சொல்லலையா?...” செல்வம் கேட்டார்.

அம்மா இப்போது முதியோர் விடுதியில் இருக்கிறாள் என்பதை அவரிடம் சங்கர் எப்படிச் சொல்வான்...? 

எஸ்.எஸ்.பூங்கதிர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Tue 10 Nov 2015 - 5:05

அழகு

சாரதா மனதுக்குள் வருந்தினாள். இந்த முறையும் மகனுக்கு பெண் பார்க்க போகும்போது அவன் நண்பன் பிரவீனும் கூட வருகிறான் என்பதே வருத்தத்துக்கு காரணம். சாரதாவின் மகன் சுந்தர் கருப்பு நிறம். சராசரிக்கும் கீழே அழகு, ஆனால் அவன் நண்பன் பிரவீன் எலுமிச்சை நிறம், அசப்பில் நடிகர் அஜீத்தைப் போல் இருப்பான். பெண் பார்க்கப் போகும் போதெல்லாம் அவனையும் சுந்தர் தவறாமல் அழைத்துபோவான். பார்க்கும் பெண் எல்லாம் அவனையும் தன் மகனையும் ஒப்பிட்டுப் பார்த்து வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள், இது சுந்தருக்கு தெரியவில்லையே என்பதுதான் சாரதாவின் வருத்தம். மகனிடம் தன் குமுறலை வெளியிட்டாள்.

“சுந்தர் இந்த முறை பெண் பார்க்கப் போகும் போது நம்மகூட பிரவீன் வரவேண்டாம்பா?”

“அம்மா நீ ஏன் பிரவீன் வரவேண்டாம்னு சொல்லுறேங்கிறது எனக்குத் தெரியாம இல்லை, பிரவீன் கூட என்னை ஒப்பிட்டு பார்த்திட்டு பொண்ணுங்க என்னை புடிக்கலைன்னு சொல்லுறாங்க அதானே?. இன்னைக்கு என்னை புடிக்குதுன்னு சொல்லி கல்யாணம் பண்ணிட்டு கொஞ்சம் நாள் கழிச்சு என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய்ட்டா என்னம்மா பண்றது?”

மகன் கேட்ட கேள்வியில் ஆடிப்போனாள் சாரதா. சுந்தர் தொடர்ந்தான்.

“அம்மா நான் வேணும்னேதான் ஒவ்வொரு தடவையும் பெண் பார்க்கப் போகும்போது என் நண்பன் பிரவீனை அழைச்சிட்டுப் போறேன், என்னோட அழகை மத்தவங்களோட ஒப்பிட்டு பார்க்காத வெளி அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு பொண்ணைத்தான் நான் தேடுறேன். அதுவரைக்கும் என் கூட பெண் பார்க்க என் நண்பன் வரத்தான் செய்வான்” என்றதும் அவன் அம்மா வாயடைத்துப் போனார். 

வி.சகிதா முருகன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் on Tue 10 Nov 2015 - 5:06

ஐம்பதாயிரம்

ராதிகா தயங்கியபடி வந்து சகுந்தலாவிடம் சொல்கிறாள்... “அம்மா, நான் ரமேஷை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்...!”

அதைக் கேட்டு சகுந்தலா கொஞ்சம் கோபமடைந்தாலும், தன் பொறுப்பை உணர்ந்து, “யாரடி அந்த ரமேஷ்?” என்று கொஞ்சம் அக்கறையுடன் கேட்கிறாள்.

“அவர் எனக்கு அஞ்சு வருஷம் பழக்கம்மா. ரொம்ப நல்லவர். நேர்மையானவர். அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பிக்கை இருக்கும்மா..’’ தீர்க்கமாய் சொன்னாள் ராதிகா.

சகுந்தலா எதுவும் பேசாமல் மவுனமாய் இருந்தாள். சற்று யோசித்த ராதிகா, ‘‘அம்மா! எனக்கு கல்யாணம் ஆகிட்டா, உங்களையும் அப்பாவையும் அம்போன்னு தவிக்கவிட்டுட்டுப் போய்டுவேன்னு மட்டும் நெனைக்காதீங்க. என்னைக்கும் உங்களுக்கு உதவியா இந்த வீட்ல இருப்பேன். இது சத்தியம்!”

இது சகுந்தலாவுக்கு சற்று தெம்பைக் கொடுத்தது. ‘‘சரி... இப்ப நான் என்ன செய்யணும்?’’ என்றாள்.

“பெருசா ஒண்ணுல்லம்மா, என் கல்யாண செலவுக்கு அப்பாகிட்ட பேசி ஐம்பதாயிரம் வாங்கிக் கொடுத்தா போதும்!”

“என்ன சொல்ற..? முழுசா ஐம்பதாயிரமா? ராதிகாவுக்கா? எந்த நம்பிக்கையில இதை கேட்கற சகுந்தலா?”

“என்னங்க பெரிய ஐம்பதாயிரம்..? அஞ்சு வருஷமா நம்மள அப்பா, அம்மான்னு கூப்பிட்டு நம்ம கூடவே வீட்டு வேலை செய்துட்டு இருக்கா. அவளை நம்பி ஐம்பதாயிரம் கடனா கொடுக்க முடியாதா..? மாசா மாசம் சம்பளத்துல கொஞ்சம், கொஞ்சமா கழிச்சுக்கிட்டா போச்சு!”

எதுவும் பேசாமல் ‘செக் புக்’கை எடுத்தார் சகுந்தலாவின் கணவர். 

எஸ்.எஸ்.பூங்கதிர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10475
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum