சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சீனப் பெண்ணை மணக்கும் மதுரை இளைஞர்: ‘டைட்டானிக்’- காதலை விஞ்சிய உருக்கம்

Go down

Sticky சீனப் பெண்ணை மணக்கும் மதுரை இளைஞர்: ‘டைட்டானிக்’- காதலை விஞ்சிய உருக்கம்

Post by நண்பன் on Thu 14 Jan 2016 - 18:41


 பிரபல ​ெஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய உலகப் புகழ்பெற்ற ‘டைட்டானிக்’ திரைப்படப் பாணியில் இத்தாலி கப்பலில் பணிபுரிந்தபோது சீனப் பெண்ணை காதலித்த மதுரை இளைஞர் கலாச்சாரம், மொழி, நாடு கடந்து அவரை வரும் 24-ம் திகதி தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய உள்ளார்.
மதுரை அய்யர் பங்களாவைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் ராக்பெல்லர் என்ற பார்த்தீபன் (29). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பிடிஎஸ் சுற்றுலா அறிவியல் மற்றும் எம்பிஏ ஹோட்டல் ​ெமனேஜ்மெண்ட் படிப்பை முடித்துள்ளார். தற்போது இவர் சீனாவில் ஷாங்காய் மாநகரில் உள்ள தனியார் ஹோட்டல் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணிபுரிகிறார். இவரும், சீனாவின் ஷாங்காயை சேர்ந்த லீயூஜியும் (27) கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
தற்போது பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது திருமணம், வரும் 24-ம் திகதி மதுரையில் பப்பிஸ் ஹோட்டலில் தமிழ் கலாச்சார முறைப்படி நடைபெறுகிறது. பார்த்தீபன், லீயூஜியை முதன்முதலில் இத்தாலி கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
தமிழக இளைஞர்கள், வெளிநாட்டுப் பெண்களை காதலித்து திருமணம் செய்வது புதிதல்ல என்றாலும், பார்த்தீபன் - லீயூஜி காதல் திருமணம் புதுமையானது என்கிறார் அவரது நெருங்கிய நண்பர் மதுரையைச் சேர்ந்த பாக்கியராஜ்.
நண்பர் பார்த்தீபனின் காதல் திருமணம் பற்றி, அவர் மேலும் கூறியதாவது: நான் ஏர்செல் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஆரம்பத்தில், மதுரையில் தனியார் ஹோட்டலில் வரவேற்பு மேலாளராகப் பணிபுரிந்தேன். 2004-ம் ஆண்டு என்னிடம் பயிற்சிப் பணிக்காக பார்த்தீபன் வந்தார். ஹோட்டல் நிர்வாகத் துறையில் அவருக்கு இருந்த நுட்பமான அறிவைக் கண்டு வியந்தேன். நான் அவரிடம், இந்த துறையில் வருங்காலத்தில் கண்டிப்பாக நீ பெரிய ஆளாக வருவாய் என்றேன். அதுபோல, பயிற்சி முடித்தவுடன் பார்த்தீபனுக்கு இத்தாலி கப்பல் நிறுவனத்தில் வேலை கிடைத்து அங்கு சென்றார். அங்கு அவருடன் லீயூஜியும் பணிபுரிந்துள்ளார். ஒருமுறை கப்பல் நடுக்கடலில் சென்றபோது ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் சிக்கிய லியூஜியை பார்த்தீபன் காப்பாற்றி உள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நல்ல புரிதலாக மாறி காதலாக மலர்ந்துள்ளது. அவர்களுடைய காதலுக்கு பெற்றோர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இந்த சூழ்நிலையில், ஒருமுறை விடுமுறைக்காக சீனா சென்ற லீயூஜி மீண்டும் இத்தாலிக்கு திரும்பவில்லை. லியூஜியின் பெற்றோர், அவரை திருப்பி அனுப்பவில்லை. பார்த்தீபனால் லீயூஜியின் காதலை மறக்கவும் முடியவில்லை. அவரை பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.
காதலிக்காக இத்தாலியில் கப்பல் நிறுவன வேலையை உதறிய பார்த்தீபன், சுற்றுலா விசாவில் சீனாவுக்கு சென்று, ஷாங்காயில் உள்ள லீயூஜியை சந்தித் தார். அவரோ, பெற்றோரின் எதிர்ப்பை மீறி என்னால் உங்களை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத் துள்ளார்.
பார்த்தீபன், அவரிடம் பெற்றோரை நான் சம்மதிக்க வைக்கிறேன் என ஷாங்காயிலேயே ஒரு ஹோட்டல் நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டு காதலிக்காக அங்கேயே தங்கிவிட்டார். வெளிநாடுகளில் பொழுதுபோக்குக்காக நெருங்கி பழகிவிட்டு, கொஞ்ச நாட்களில் அதை மறந்து பிரிந்துவிடும் இளைஞர்களுக்கு மத்தியில், இத்தாலியில் பழகிய நட்பை மறக்காமல் சீனாவுக்கே தன்னைத்தேடி வந்த பார்த்தீபனுடைய உண்மையான அன்பும், காதலும் லீயூஜியை மிகவும் கவர்ந்து விட்டது. சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் வேலைபார்த்த பார்த்தீபன், லீயூஜியின் பெற்றோரை சந்தித்துப் பேசியுள்ளார்.
லீயூஜியின் பெற்றோர் அவரிடம் நாடு கடந்து கலாச்சாரம் மாறி செய்யும், திருமணம் கடைசி வரை நீடிக்காது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒருகட்டத்தில் பார்த்தீபனின் நெருக் கடியால் லீயூஜிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் சீனாவைச் சேர்ந்த மணமகனை பார்த்து நிச்சயம் செய்தனர். தமிழகத்தில் பார்த்தீபன் வீட்டிலும் அவருக்கு பெண் பார்க்கத் தொடங்கினர். அதிர்ச்சியடைந்த இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் பேசி, அவர்களுடைய உண்மையான அன்பு, காதலை வெளிப்படுத்தி உள்ளனர். கடைசியில் அவர்களுடைய உருக்கமான காதலை பெற்றோர் ஏற்றனர். தமிழ் கலாச்சார முறைப்படி மதுரையில் வரும் 24-ம் திகதி இருவருக்கும் திருமணம் நடக்கிறது என்றார்.

காதல் உண்மையாக இருந்தால் நாடு, சாதி, மதம், கலாச்சாரம் கடந்தும் வெற்றிபெறும் என்பதற்கு பார்த்தீபன் - லீயூஜி காதல் ஒரு உதாரணம்

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சீனப் பெண்ணை மணக்கும் மதுரை இளைஞர்: ‘டைட்டானிக்’- காதலை விஞ்சிய உருக்கம்

Post by Nisha on Thu 14 Jan 2016 - 19:05

நலம் வாழ வாழ்த்துவோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum