சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Today at 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Today at 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Today at 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Today at 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Today at 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Yesterday at 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Yesterday at 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Yesterday at 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Yesterday at 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Yesterday at 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Yesterday at 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Yesterday at 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Yesterday at 14:37

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar Yesterday at 14:36

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar Yesterday at 14:35

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar Yesterday at 14:34

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar Yesterday at 14:33

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by rammalar Yesterday at 5:02

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar Yesterday at 5:00

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by rammalar Yesterday at 4:59

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar Yesterday at 4:58

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar Yesterday at 4:57

» மனசு : வாசிப்பும் மருத்துவமும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:50

» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:48

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Sat 14 Oct 2017 - 18:28

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Sat 14 Oct 2017 - 18:27

» காதல் எஸ் எம் எஸ்
by கவிப்புயல் இனியவன் Sat 14 Oct 2017 - 16:36

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by பானுஷபானா Sat 14 Oct 2017 - 12:55

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by rammalar Sat 14 Oct 2017 - 2:43

» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
by rammalar Sat 14 Oct 2017 - 2:42

» திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
by rammalar Sat 14 Oct 2017 - 2:41

.

சோளக்கொல்லை பொம்மை – சிறுகதை

View previous topic View next topic Go down

Sticky சோளக்கொல்லை பொம்மை – சிறுகதை

Post by rammalar on Thu 24 Mar 2016 - 9:38

தஞ்சை வளநாட்டின் இளவரசி இளவேனில் மிகவும் இனிமையானவள். இளவரசி மேல் மிகவும் அன்பு வைத்திருந்தார் மன்னர். அவள் விரும்பியதை எல்லாம் மறுக்காமல் வாங்கித்தந்து, மிகவும் செல்லமாக அவளை வளர்த்துவந்தார்.
-
இளவரசிக்கு சிறு வயதில் இருந்தே சோளப் பொரி என்றால் உயிர். அரண்மனை யின் சமையலறையில், இளவரசிக்காகச் சுடச்சுட சோளப் பொரி அன்றாடம் பொரிக்கப்படும். இதை மனதில்கொண்டு, இளவரசியின் 17-வது பிறந்தநாள் அன்று, அரசர் அவளுக்கு சோளக்கொல்லையுடன் கூடிய ஒரு தனி மாளிகையைப் பரிசாக அளித்தார். இளவரசி இளவேனிலுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அன்றிலிருந்து வேலையாட்கள், தோழிகள், காவல் வீரர்கள் புடைசூழ, அந்த மாளிகையிலேயே தங்கிக்கொண்டாள். கதிர்கள் விளைந்து முற்றியதும் அறுவடை நடந்தது. முத்து முத்தான வெள்ளைச் சோளத்தைப் பொரித்து, இளவரசி ஆசை தீர உண்டாள்.
-
எவ்வளவு சோளப்பொரியைத்தான் இளவரசியால் உண்டுவிட முடியும்? இளவரசிக்கு ஒரு திட்டம் தோன்றியது. பனை ஓலையில் அழகிய பெட்டிகள் செய்து, அவற்றில் சோளப் பொரியை அடைத்துச் சந்தையிலே விற்க ஏற்பாடு செய்தாள். சோளத் தட்டையில் கை வேலைப்பாடுகள் மிகுந்த பொம்மைகளைச் செய்து, அவற்றையும் விற்பனைக்கு அனுப்பினாள். இரண்டையும் மக்கள் விரும்பி வாங்கினார்கள்.
-
இவ்வாறாக இளவரசியும் அவளது சோளக் கொல்லையும் பிரிக்க முடியாதவர்களாக ஆகிப் போனார்கள். அந்த ஆண்டு முழுவதும் விதைப்பது, வளர்ப்பது, அறுப்பது, விற்பது என விதம் விதமாக இளவரசிக்குச் சோளக்கொல்லையால் பொழுது போயிற்று.
-
சந்தைக்கு வரும் அயல்நாட்டு வணிகர்கள் மூலம் இளவரசியின் சோளப் பொரியும், சோளத் தட்டைப் பொம்மைகளும் பக்கத்து நாடுகளுக்கும் சென்றன. கூடவே, ‘ஓர் இளவரசி இவ்வாறு வணிகம் செய்கிறாள்’ என்ற விந்தைச் செய்தியும் அந்த நாடுகளுக்குப் பரவின.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13158
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சோளக்கொல்லை பொம்மை – சிறுகதை

Post by rammalar on Thu 24 Mar 2016 - 9:39

மதுரை நாட்டின் இளவரசன் இளமாறனும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டான். முகம் தெரியாத இளவரசி மேல் அவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. உடனே, ஓவியம் வரைவதில் திறமை சாலியான ஒற்றன் ஒருவனை அங்கு அனுப்பிவைத்தான் இளமாறன். அந்த ஒற்றன், வணிகன் வேடமிட்டு இளவரசி இளவேனிலின் மாளிகைக்குச் சென்றான். அவளுடைய அழகிய தோற்றத்தை மனதில் நன்கு பதிய வைத்துக்கொண்டு, அழகிய ஓவியமாக அவளைத் தீட்டி, மதுரைக்குத் திரும்பினான்.
-
இளவரசியின் 18-வது பிறந்தநாளன்று, ஒரு பெரிய பெட்டியுடன் அவளது மாளிகைக்குள் தூதுவனாக நுழைந்தான், மதுரை நாட்டு ஒற்றன். இளவரசியை வணங்கிய அவன், ”இளவரசி, எங்கள் மதுரை நாட்டின் இளவரசர் இளமாறன், தம்முடைய நட்பைத் தங்களுக்குத் தெரிவிக்க இந்த அரிய பரிசைத் தங்களுக்கு அனுப்பியிருக்கிறார். சோளக்கொல்லையால் புகழ் பெற்ற தங்களுக்கு ஏற்ற பரிசு இது. இது ஒரு சோளக்கொல்லை பொம்மை. உங்கள் சோளக்கொல்லை மேல் படையெடுக்கும் குருவிகளையும், பறவைகளையும் விரட்டியடிக்கும் பொம்மை இது. இது, சராசரி பொம்மையல்ல. இது ஒரு பேசும் பொம்மை! உங்களுக்காக இது பாட்டுப் பாடும், பழங்கதைகள் கூறும், நகைச்சுவையாகப் பேசும்!” என்று சோளக்கொல்லைப் பொம்மையின் புகழை அடுக்கிக்கொண்டே போனான் அந்தத் தூதன்.
-
இளவரசிக்கு ஆவல் தாங்க முடியவில்லை. ”ம்ம், சரி சரி, பொம்மையை வெளியே எடுங்கள் முதலில்!” என்றாள் பொறுமை இழந்து.
-
தூதுவன் சிறித்தபடியே பெட்டியைத் திறந்து,அந்த ஆறடி உயரச் சோளக்கொல்லைப் பொம்மையை எடுத்து அவையிலே நிறுத்திவைத்தான். கைகளை அகல விரித்துக்கொண்டு, கந்தல் உடை அணிந்துகொண்டு, ஒரு கூத்தாடியைப் போல் வேடிக்கையாகக் காட்சியளித்தது அந்தப் பொம்மை. அதைப் பார்த்ததுமே இளவரசிக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை.
-
தூதுவன், ”ஏய் சோளக்கொல்லைப் பொம்மையே, இளவரசிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு உன் திறமையைக் காட்டு!” என்று கூறியவுடன் அந்தப் பொம்மையிலிருந்து ஒரு மிடுக்கான ஆண் குரல் வெளிப்பட்டது.
-
அந்தக் குரல், இளவரசிக்கு வணக்கம் கூறியது. அவளைப் புகழ்ந்து பாடல்கள் பாடியது. ”ஓய், ஓய் பறவைகளே ஓடிப்போங்கள்!” என்று மிரட்டும் குரலில் கூச்சலிட்டது. பிறகு, கதை சொன்னது. நகைச்சுவையாக, நையாண்டியாகப் பேசியது.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13158
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சோளக்கொல்லை பொம்மை – சிறுகதை

Post by rammalar on Thu 24 Mar 2016 - 9:40

இளவரசி இளவேனில் விழுந்து விழுந்து சிரித்தாள். அவை, கைதட்டலால் அதிர்ந்தது. இப்படி ஒரு பேசும் பொம்மையை இது வரை யாருமே பார்த்ததில்லை.
-
இளவரசி, தான் கழுத்தில் அணிந்திருந்த விலையுயர்ந்த நவரத்தின மாலையைத் தூதுவனுக்குப் பரிசாக அளித்தாள். தன் கைப்பட ஓர் ஓலையில் மதுரை இளவரசனுக்கு நன்றி தெரிவித்து மடல் எழுதி, ஓலையைத் தூதுவனிடம் கொடுத்தாள்.
-
பிறகு இளவரசி, அந்த சோளக்கொல்லைப் பொம்மையைத் தூக்கிவரச் செய்து, தன் சோளக்கொல்லையின் நடுவே நிறுத்திவைத்தாள். அது, கூச்சலிட்டுப் பறவைகளை விரட்டி யடித்தது.
-
அன்றிலிருந்து இளவரசி இளவேனிலுக்கு அந்தச் சோளக்கொல்லைப் பொம்மை உற்ற தோழனாக மாறிவிட்டது. நாள்தோறும் மணிக்கணக்காக அதோடு பேசி மகிழ்ந்தாள் இளவரசி. ஆனால், அந்த சோளக்கொல்லைப் பொம்மை எப்படி இந்த மாதிரி பேசுகிறது என்ற ரகசியத்தை மட்டும் இளவரசியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதுவும் சொல்ல மறுத்துவிட்டது. ஆனால், இளவரசன் இளமாறனின் அறிவு, ஆற்றல், அழகைப் பற்றியெல்லாம் பெருமை பொங்க எடுத்துக் கூறியது. இதையெல்லாம் கேட்கக் கேட்க இளவரசிக்கு இளமாறனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது.
-
ஒருநாள், சோளக்கொல்லைப் பொம்மையால் விரட்டியடிக்கப்பட்ட பறவைகளின் தலைவனாகிய சிட்டுக்குருவி, சோளக்கொல்லை பொம்மையிடம் வந்தது.
-
அருகே வந்த சிட்டுக்குருவி, ”வணக்கம் சோளக்கொல்லைப் பொம்மையே! நீ இங்கே வராத வரை எங்களுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை. ஆனால் இப்போது, எங்கள் குஞ்சுகளெல்லாம் பட்டினி கிடக்கின்றன. எங்களை நீதான் காப்பாற்ற வேண்டும்!” என்று வேண்டியது.
-
சிட்டுக் குருவியின் வேண்டுகோளால் மனம் இரங்கிய சோளக்கொல்லை பொம்மை, இளவரசியோடு பேசி, கொல்லையில் கீழே உதிர்ந்து கிடக்கும் சோள முத்துக்களை மட்டும் பொறுக்கிக்கொள்ள ஏற்பாடு செய்தது. கதிர்களைக் கண்டபடி வேட்டையாடக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டது. பறவைகளும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டன.
-
இதற்கிடையில், தஞ்சை வளநாட்டின் பக்கத்து நாடான கும்பகோணத்தில், ஒரு கொடிய மந்திரவாதி இருந்தான். அவனுக்குத் தலைமட்டும் யானைத் தலை போல இருக்கும். யானைத் தலை மந்திரவாதி என்றுதான் அவனை எல்லோரும் அழைப்பார்கள்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13158
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சோளக்கொல்லை பொம்மை – சிறுகதை

Post by rammalar on Thu 24 Mar 2016 - 9:41

அவன், தன் மந்திரக் கண்ணாடியில் இளவரசி இளவேனிலைப் பார்த்து, அவளைக் கவர்ந்து செல்ல முடிவு செய்தான். எனவே, ஒரு நாள் நள்ளிரவு, பத்து பறக்கும் யானைகளோடு வந்து இளவரசியின் சோளக்கொல்லையில் இறங்கினான்.
-
இதைக் கண்ட சோளக்கொல்லைப் பொம்மை, ”இளவரசி… இளவரசி, ஆபத்து! எதிரிகள் வருகிறார்கள், எச்சரிக்கை!” என்று கத்தி, அனைவரையும் எழுப்பியது.
-
விழித்துக்கொண்ட வீரர்கள், வாட்களை உருவிக்கொண்டு ஓடி வந்தார்கள். ஆனால், மந்திரவாதியின் யானைப் படைக்கு அவர்களால் ஈடு கொடுக்க இயலவில்லை. இளவரசியின் சோளக்கொல்லை, யானைகளால் முற்றிலும் அழிக்கப்பட்டது. சோளக்கொல்லை பொம்மை பிடுங்கி வீசப்பட்டு, மிதித்துத் துவைக்கப்பட்டது. மாளிகைக்குள் நுழைந்த யானைத் தலை மந்திரவாதி, இளவரசியைத் தூக்கிச் சென்றான்.
-
மறுநாள் பொழுது விடிந்தபோது, இரை தேடி வந்த பறவைக் கூட்டம், சோளக்கொல்லையின் அழிவைக் கண்டு திகைத்தது. அப்போது, யானைகளால் மிதிக்கப்பட்டுச் சிதைந்து கிடைந்த சோளக்கொல்லைப் பொம்மை, பறவைகளை அருகே அழைத்தது.
-
”பறவைகளே… நான்தான் மதுரை இளவரசன் இளமாறனின் ஆவி! இளவரசி இளவேனிலின் மனம் கவரவே இந்தப் பொம்மையின் உடலுக்குள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து, என் உயிரைச் செலுத்தி இங்கே வந்தேன். என் உடல், நாட்டின் எல்லையில் இருக்கும் காட்டிலே என் நண்பனால் பாதுகாக்கப்பட்டுவருகிறது. நீங்கள் பறந்து சென்று, அவனிடம் செய்தியைக் கூறி என் உடலோடு அவனை இங்கே அழைத்து வாருங்கள்.” என்று வேண்டுகோள் விடுத்தது.
-
பறவைகள் மூலம் செய்தியைக் கேள்விப்பட்ட இளவரசனின் நண்பனாகிய தூதுவன், இளமாறனின் உடலோடு விரைந்து வந்தான். பொம்மையிலிருந்த இளவரசனின் உயிர் அவன் உடலுக்குத் தாவியது.
-
இதற்குள் பெரும் படையோடு வந்து சேர்ந்திருந்தார்கள் தஞ்சை அரசரும், மதுரை அரசரும்.

இரு நாட்டுப் படைகளுக்கும் தலைமையேற்ற இளவரசன், கும்பகோணம் சென்று யானைத் தலை மந்திரவாதியின் மாளிகையைத் தாக்கினான். பெரும் போருக்குப் பின், மந்திரவாதியைக் கொன்று, இளவரசியை மீட்டு தஞ்சைக்குத் திரும்பினான் இளவரசன்.
-
இருவருக்கும் திருமணம் நடந்தது.
-
தஞ்சையில், இளவரசியின் அழிந்துபோன சோளக்கொல்லை மறுபடியும் உயிர் பெற்றது. அதன் நடுவே இப்போது அமைதியாக நின்றுகொண்டிருக்கிறது, பழுதுபார்க்கப்பட்ட ஊமை சோளக்கொல்லைப் பொம்மை.
-
இப்போதெல்லாம் அது பறவைகளை விரட்டுவதே இல்லை. ஏனென்றால், அந்தச் சோளக்கொல்லை முழுவதையும் பறவைகளுக்கே பரிசாக அளித்துவிட்டாள் இளவரசி.
-
------------------------------
– குறும்பலாப்பேரிபாண்டியன

நன்றி-ஆனந்த விகடன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13158
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சோளக்கொல்லை பொம்மை – சிறுகதை

Post by பானுஷபானா on Fri 25 Mar 2016 - 15:57

பெரிய கதையாவுல இருக்கு.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சோளக்கொல்லை பொம்மை – சிறுகதை

Post by பானுஷபானா on Sat 26 Mar 2016 - 14:43

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி ஐயா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சோளக்கொல்லை பொம்மை – சிறுகதை

Post by சே.குமார் on Sat 26 Mar 2016 - 20:35

நல்ல கதை.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1395
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: சோளக்கொல்லை பொம்மை – சிறுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum