சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar Today at 15:53

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar Today at 15:49

» ரெஸ்டாரென்ட் வைஃபி பாஸ்வேர்ட்
by rammalar Today at 15:45

» திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்-
by rammalar Today at 15:43

» சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Today at 15:39

» சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Today at 15:38

» தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
by rammalar Today at 15:37

» என்னோடு விளையாடு
by rammalar Today at 15:33

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar Today at 15:31

» சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
by rammalar Today at 15:28

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Today at 8:53

» மனசு பேசுகிறது : சிற்றிதழ்கள் உலகம்
by சே.குமார் Today at 6:12

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Today at 5:05

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.க.துறைவன் Fri 17 Feb 2017 - 7:13

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu 16 Feb 2017 - 17:36

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன் Tue 14 Feb 2017 - 18:33

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 13 Feb 2017 - 18:42

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 13 Feb 2017 - 18:25

» 4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார்
by சே.குமார் Sun 12 Feb 2017 - 19:55

» கவிப்புயலின் பல இரசனை கவிதை
by கவிப்புயல் இனியவன் Sun 12 Feb 2017 - 7:58

» மனசு பேசுகிறது : கூத்து
by சே.குமார் Sat 11 Feb 2017 - 19:30

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Fri 10 Feb 2017 - 8:41

» நொடியை வேண்டுகிறேன்
by பானுஷபானா Thu 9 Feb 2017 - 16:27

» பட்டாம்பூச்சி ஸ்டிக்கர்
by பானுஷபானா Wed 8 Feb 2017 - 14:56

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 5 Feb 2017 - 15:08

» காதலின் அவதி
by rammalar Sat 4 Feb 2017 - 16:37

» நதியில் நீந்தும் நிலவு
by rammalar Sat 4 Feb 2017 - 16:35

» இனி கவலையில்லை!
by rammalar Sat 4 Feb 2017 - 16:34

» மிஸ்டர் சாத்தான்
by rammalar Sat 4 Feb 2017 - 16:32

» நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்:
by rammalar Sat 4 Feb 2017 - 16:27

» துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம்
by rammalar Sat 4 Feb 2017 - 16:24

» பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்
by rammalar Sat 4 Feb 2017 - 16:23

» விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி
by rammalar Sat 4 Feb 2017 - 16:22

» டிரம்ப் கொண்டு வந்துள்ள எச்-1 பி விசா கட்டுப்பாடுகளை சமாளிக்கும் வழி: இன்போசிஸ் நாராயணமூர்த்தி பதி
by rammalar Sat 4 Feb 2017 - 16:20

» அரசு ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகல்?
by rammalar Sat 4 Feb 2017 - 16:19

.

ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்)

View previous topic View next topic Go down

Sticky ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்)

Post by சே.குமார் on Tue 19 Jul 2016 - 21:22



போலீஸ்காரர்கள் இருவர் பயிற்சி காலத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கீரியும் பாம்புமாக இருக்கிறார்கள். மேலதிகாரியின் உத்தரவின் பேரில் கீரியும் பாம்பும் இரண்டு கைதிகளை கன்னூரில் இருந்து திருவனந்தபுர சிறைக்கு மாற்றுவதற்காக இரயில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் அழைத்துச் செல்கிறார்கள். மரங்கள் நிறைந்த அழகான பாதையில்... வளைந்து நெளிந்து பயணிக்கும் பாதையில்... ஆறுகள், ஏரிகள் மீதான நீண்ட பாலங்களில்... இரயில் பயணிப்பது போல படமும் அழகாய் பயணிக்கிறது.
இரண்டு கைதிகளில் ஒருவரான செம்பான் வினோத் ஜோஸ், கோவிலில் நகையைத் திருடி, தனது வளர்ப்புத்தாய்... அட நம்ம பரவை முனியம்மா... கையில் கொடுக்க, அவர் அது கோவிலில் திருடியது என்பதை அறியாது கழுத்து... காது... கால் என எல்லா இடத்திலும் போட்டுக் கொண்டு அதே கோவிலுக்குப் போக... அப்புறம் என்ன திருடருக்கு ஜெயில்ல சாப்பாடு.
இரண்டாவது கைதி வினித் சீனிவாசன்... படிப்பு ஏறாததால் டீக்கடையில் வேலை... கூடப்படித்து நல்ல மார்க் எடுத்து வெளியூரில் படிக்கச் சென்ற பெண் மீது காதல்... ஆனால் அது ஓகே ஆனதா என்பதை கடைசி வரை காட்டவில்லை என்பது வேறு விஷயம். அளவில்லா பாசம் கொண்ட அக்கா... அக்காவும் தம்பியும் ஒரு தாய் மக்கள் என்றாலும் அப்பா வேறு... ஆம் முதல் கணவனின் மறைவுக்குப் பின்னர் மேஸ்திரி நெடுமுடி வேணு அவர்களை அழைத்து வந்து குடும்பம் நடத்தி பிறந்தவர்தான் வினீத். வேணுவுக்கோ தன் மனைவியின் மகள் மீது மோகம்... அவளை அடையத் துடிக்கிறார். அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவரின் இந்த கேவலமான எண்ணத்துக்கு மனைவி எதிரியாகிறாள். அக்காவை அந்த காமுகனிடம் இருந்து காப்பாற்ற கொலை செய்யத் திட்டமிடுகிறான் மகன். அந்த திட்டத்தை அறிந்த வேணுவோ அதில் மனைவியை பலி கொடுக்கிறார். அம்மாவைக் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு அடைக்கப்படுகிறான்.

இரயிலில் இருந்து தப்பி அப்பாவைத் தேடிச் செல்லும் வினீத்தை தேடி இரண்டு போலீஸ்காரர்களும் முதல் கைதியும் அலைவது சுவராஸ்யம்... அந்த விசாரணையில்தான் நாயகனின் கதை விரிகிறது. அக்காவுடன் வேறு ஊரில் இருக்கும் அப்பாவை கண்டுபிடித்தானா...? அக்காவை காப்பாற்றினானா...? போலீஸ் அவனைப் பிடித்ததா..? இரண்டு போலீஸ்காரர்களுக்குமான பிரச்சினை தீர்ந்ததா...? இரண்டாவது கைதி அவர்களோடு பயணித்தானா இல்லையா...? என்பதுதான் மீதிக்கதை.
படம் வந்து ஒரு வருசத்துக்கு மேலாச்சு... இப்போதுதான் பார்ப்பதற்கு வாய்த்திருக்கிறது. இந்தப் படத்தில் பள்ளி விழாவில் படிக்கும் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அக்கா நிக்கி கல்ராணிக்கும் தம்பி வினீத் ஸ்ரீனிவாசனுக்கும் இடையிலான வயசு வித்தியாசம் அதிகமில்லை என்பது உறுத்தல், அப்படியிருக்கு நிக்கி சின்ன குழந்தையாக இருக்கும் போதே அவரின் அம்மாவை மனைவியாக்கிக் கொள்ளும்  நெடுமுடி வேணு 'உன்னைய விரும்பிக் கட்டலை... அன்னைக்கே உம்மவ என்னையக் கவர்ந்துட்டா... என்னைக்கா இருந்தாலும் அவளை அடையணும்ன்னுதான் கூட்டியாந்தேன்' என்று சொல்லும் போது  பொறுத்தமில்லாமல் தோன்றுகிறது.

வினித் சீனிவாசன் படங்கள் அதிகம் பார்த்ததில்லை... காமெடிகலந்த திரில்லர் படம் என்பதால் நடிப்பு பரவாயில்லைதான்... அக்காவாக வரும் நிக்கி கல்ராணி அழகு... வினித் விரும்பும் பெண்ணாக வரும்  அபர்ணா பாலமுரளிக்கு அதிக வேலை இல்லை... கொஞ்ச நேரமே வருகிறார். நெடுமுடி வேணுவின் வில்லத்தனம் சூப்பர். போலீஸ்காரர்களின் மோதலும்... அவர்களோடு வினீத்தை தேடி பயணிக்கும் கைதி வினோத்தின் நடிப்பும் கலக்கல். 
செகண்ட் கிளாஸ் யாத்ரா ஒரு சுகமான பயணம்.

-'பரிவை' சே.குமார்.

சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1364
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்)

Post by Nisha on Sun 24 Jul 2016 - 17:37

குமாரின் எழுத்தில் சினிமா பார்க்காதவர்களையும் பார்க்க தூண்டும் இன்னுமொரு அழகான விமர்சனம். 

அருமை குமார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  

Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்)

Post by சே.குமார் on Mon 25 Jul 2016 - 6:15

Nisha wrote:குமாரின் எழுத்தில் சினிமா பார்க்காதவர்களையும் பார்க்க தூண்டும் இன்னுமொரு அழகான விமர்சனம். 

அருமை குமார்.

நன்றி அக்கா....

சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1364
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum