சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by *சம்ஸ் Yesterday at 13:13

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

இழிமக்கள் தாழி

View previous topic View next topic Go down

Sticky இழிமக்கள் தாழி

Post by guruchana on Mon 25 Jul 2016 - 11:05

    தியானம் என்று பிறர் நம்பக்கூடிய நிலையில் அமர்ந்திருந்தான் சாலமன். உண்ணாமல் பல காலம் கொடுந்தவம் செய்த சித்தனைப்போல் அவன் எலும்புக்கும் தோலுக்குமான இடைவெளி சுருங்கிப்போயிருந்தது. சுவாசம் மட்டுமே அவன் உட்கொள்ளும் ஒரே பொருளாய் இன்றோடு இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. விரலசைக்கவும் திரானியற்ற நிலையிலும் உயிரை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்தான். “ நீ என் உயிர் “ என பல முறை சொல்லியிருப்பான் தன் மனைவியிடம், இன்று அவள் நினைவுகளும் அதனை ஒட்டிய ஒரு ஆசையும் தான் உயிராய் எஞ்சியிருந்தது அவன் உடலுக்குள்ளே.

     அவன் மனைவி அவனுக்கு அந்தரங்க தோழி. இராணுவ வீரனான அவன், 10 மாதஙகள் அவளைவிட்டு விலகியிருந்த போதும், விடுப்புக்கு வரும் 40 நாடகளில் நாழிகை தவறவிடாமல் வாழ்ந்துவிடுவான். பின் ஒருநாள் அவன் வேலை பிடிக்காமல் விருப்ப ஓய்வு பெற்றுவிடவே அணுகணமும் அவள் அன்பில் திளைத்தான். அந்த மண்ணிண் பெண்களுக்கே உரித்தான, தன்னம்பிக்கை மிளிரும் தோழியை ஒத்த அணுகுமுறையே அவனை அவள்பால் ஈர்த்தது. அவளுக்கோ அவன் அத்தனை குணங்களிலும் ஈர்ப்புதான். அவன் பிற பெண்களை விளையாட்டாக பார்த்தாலும் சகிக்கமாட்டள். குழந்தை ஒன்று வந்துவிட்டால், கணவனின் உலகத்தை சுருக்கி குழந்தையின் உலகத்தை பெருக்குவதே உலக வழக்கமாயிருக்க, தன் மகனை சாலமன் நெஞ்சில் தூங்கவைத்து, அவன் தோளில் சாய்ந்து தூங்கும் பழக்கத்தையும் விடாமல் தொடர்ந்து வந்தாள். என்றாவது ஒருநாள் அவனை சமைக்கவிட்டு, அதன் குறைகளை கேலி செய்து சிரிப்பதில் எல்லையில்லா ஆனந்தம் கொண்டாள். விளையாட்டாக அவன் கோபித்துக்கொண்டால் “ நான் செத்தாலும் ஆவியாய் வந்து உங்க தோளில் உடகாரந்து கொள்வேன்” என விளையாட்டை வளர்த்துவிடுவாள்.

     பின் ஒருநாள் உண்மையாகவே அவள் இறக்கும் நிலையாலிருந்த போது, முற்றும் இழந்த சோகத்தில் தவித்த தன் கணவனை தேற்றும் பொருட்டு “ நம்ம மகனுக்கே நான்வந்து பிறக்கிறேன் கவலைபடாதீங்க” என்று சொல்லிவிட்டு கண்ணை மூடினாள்.

 

 

 

 

தோளில் கணமில்லாமல் அவன் தூங்க பழகியிருக்கவில்லை. ஆவியாகவேணும் வருவாள் என்று அவளை அடக்கம் செய்த இடத்திலும் சில இரவுகள் காத்திருந்தான். அங்கே காற்றசைத்த பொருளிலெல்லாம் அவளை கண்டேன் என வீணாய் எழுவான். அதீத அன்பு அவன் அறிவுக்கண்களை மறைத்து நின்றது. அவனுக்கே தெரியும் ஆவி என்றொன்று இந்த உலகத்தில் இல்லை, இருந்திருந்தால் கொத்துக்கொத்தாய் மனிதரை கொன்று குவித்தவரெல்லாம் ஒரு கணமும் இவ்வுலகில் தங்கமுடியுமா?.

சில தினங்களில் அவன் அறிவுக்கண்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு நம்பிக்கை அவன் மனதில் துளிர் விட்டு வளர்ந்தது, அது அவன் மனைவி தன் மகனுக்கே பெண்ணாக பிறப்பாள் என்பது. மனதை தேற்றிக்கொண்டு மகனின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினான். தன் மனைவி மறுபடியும் பிறப்பாள் என்ற நம்பிக்கை அவன் நாட்களை வேகமாக நகர்த்தியது.

கிபி 2030 ஆம் வருடம் பட்டப்படிப்பை முடித்த தன் மகனை உடனடியாக தான் செய்து வந்த தொழிலுக்கு நிர்வாகியாக்கி திருமண ஏற்ப்பாடுகளை செய்தார். தன் தந்தையின் மனப்போக்கை அறிந்திருந்த மகனும் தடையேதும் சொல்லவில்லை. திருமணமாகி ஒராண்டு வரை குழந்தை ஏதும் உருவாகாமல் போகவே, சாலமனின் வருமானத்தில் பெரும் பகுதி தேவாலயங்களுக்கே போனது.

இறுதியாக ஒரு நாள் சாலமனின் மருமகள் கருத்தரித்தாள். சாலமனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி, தனது பெரும்பகுதி நேரத்தை மருமகளுடன் பேசுவதிலேயே செலவிட்டான், உள்ளிருக்கும் ஒரு உயிரும் அதை கேட்டுக்கொண்டுதானே இருக்கிறது.

எல்லாம் அவர் விரும்பிய விதமாய் சென்றுகொண்டிருக்க, எவரும் எதிர்பாராத விதமாய் போர் ஒன்று மூண்டது. தமிழர் படையென்று தங்களை கூறிக்கொண்ட ஒரு கூட்டம், மூன்றே நாட்களில் இலங்கை பாராளுமன்றத்தை பிடித்தது, அடுத்த சில தினங்களில் இலங்கையின் அனைத்து பகுதிகளும் அவர்கள் கட்டுக்குள் வந்தது.

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகம் அடைந்துவந்த வியத்தகு வளர்ச்சி சாலமன் அறிந்ததே. உணர்வும், திறனும் உள்ள தலைவனும், அவனுக்கு உறுதுணையாய் அமைந்துவிட்ட மக்கள் கூட்டமும் எத்துணை வேகமாக வளரச்சியடைகின்றன என்பதற்ககு இன்று தமிழகம் உலகிற்கோர் எடுத்துக்காட்டு. என்ன இருந்தாலும் இவ்வளவு எழிதாக எவரும் ஒரு போரை வெல்ல முடியும் என்பதை சாலமனால் சீரணிக்க முடியவில்லை. பற்றாக்குறைக்கு உதவிக்கு வந்த வேற்று நாட்டு கப்பலும் நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டது. அவை அனைத்திற்க்கும் தங்களுக்கும் ஒரு தொடர்புமில்லை என்பது போல் தமிழகம் காட்டிக்கொண்டாலும், சாலமனும் உலகத்தாரும் அவற்றையெல்லாம் நம்புவதாக இல்லை.

ஆட்சி அதிகாரத்தை கையிலெடுத்த தமிழர்படை, விடுதலை புலிகளுடனான இறுதி கட்டபோரில் பங்குகொண்ட அனைவரையும் கைது செய்தது, சாலமனும் கைது செய்யப்பட்டான். அவ்வாறு கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளையும் குற்றவாளிகளென உடனடியாக அறிவித்தனர். இராணுவ வீரர்களுக்கு மட்டும் ஒரு வாயப்பு அளிக்கப்பட்டது, அதாவது இறுதிகட்டப்போரின் போது அப்பாவி தமிழர் எவருக்கேனும் உதவியதாக நிரூபிக்கமுடிந்தால் அவர்களெல்லாம் விடுவிக்கப்படுவார்கள். சாலமன் உணமையில் பலருக்கு உதவியிருந்தான். அப்பொழுது அவன் சகாக்கள் ஈடுபட்ட இனப்படுகொலைகளில் இவனுக்கு சிறிதும் உடன்பாடிருக்கவில்லை, உலகத்தில் ஒரு உயிரையாவது உணமையாக நேசிக்கத்தெரியந்த எவருக்கும் உயிர்க்கொலை உடன்படாதல்லவா.

தமிழர் படையினர் சற்றும் எதிர்பாராத விதமாக பல சிங்கள விரர்களை தங்களுக்கு உதவியதாக தமிழ் மக்கள் சிலர் அடையாலம் காட்டினர். இத்தனைக்கும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் சொத்துக்களையும் அரசுடமை ஆக்கியதன் மூலம், ஏழைத்தமிழர்கள் பணத்தாசைக்கு விலை போவதற்கான வாய்ப்புகளையும் முறியடித்திருந்தது தமிழர்படை. ஆனால் சாலமனை அடையாளம் காட்ட எவரும் வரவில்லை.சாலமனால் காப்பாற்றப்பட்டவர்கள் நன்றி கெட்டவர்களா?, இல்லை அவன் சகாக்களின் வெறிக்கு பழியாகி போனார்களா? சாலமன் இரண்டாவது காரணமே இருக்குமென்று நினைத்தான்.

இவ்வாறு குற்றவாளிகள் பட்டியலை இறுதி செய்தவர்களால் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டணையை முடிவு செய்ய இயலவில்லை. மரண தண்டணை எனபதில் மாற்றுக்கருத்து இல்லாதபோதும், எளிதில் கிடைக்கும் மரணம் இவர்கள் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு ஈடு செய்வதாக இல்லை என்பது தமிழர் படையின் கருத்தாக இருந்த்து. தமிழ் இனம் இரத்த வெறி பிடித்த இனமாக அறியப்படக்கூடாது என்பதும் அவர்களின் தலைமையின் கவலையாக இருந்தது.தொடரச்சியான விவாதங்களுக்கு பிறகு ஒரு தண்டணையை முடிவு செய்தார்கள். அதன்படி இறுதிப்போர் நடந்த ஒரு குறுகிய பகுதியை சுற்றி முள்வேலி அமைத்தார்கள். அந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இரண்டு ஆள்துளைக்கிணறுகளும் அதற்கான கையடி குழாய்களும் நிறுவப்பட்டன. சாலமன் உட்பட அனைவரையும் அந்த பகுதிக்குள் பூட்டி முள்வேலியை மின்வேலி ஆக்கினார்கள். ஒரு சில கூடாரங்களை தவிர அந்த பகுதியில் மறைவிடமோ, உணவுக்கான வழியோ ஒன்றும் இருக்கவில்லை. இத்தகைய ஏற்ப்பாட்டிற்கு இழிவான செயல் புரிந்தவர்களுக்கான மரணப்படுக்கை என்று பொருள்படும்படி “இழி மக்கள் தாழி” என்று பெயருமிட்டார்கள். இந்த கொடூரமான தண்டணையை அறிந்து பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த கண்டண குரல்களாலும் அதை தடுத்து நிறுத்த முடியவில்லை.

சாலமனுக்கு தான் தவறாக தண்டிக்கப்படுகிறோம் என்ற ஆதங்கத்தை விட,தன் மனைவியின் மறுபிறப்பை பார்க்காமல் போய்விடுவோம் என்ற கவலை பெரிதாக இருந்தது. முதல் நாள் முழுவதும் அவன் உணவை பற்றி சிந்திக்கவே இல்லை. இரண்டொரு முறை அடிகுழாய் வரை சென்று தண்ணீர் அருந்தி வந்தார்.

அங்கிருந்த ஒரு கூடாரத்தை தனக்கென ஒதுக்கிக்கொண்ட முன்னால் அதிபருக்கு, உடைந்துபோன சில பாண்டங்களில் நீரெடுத்து கொடுக்கும் வேலையை இரண்டாம் நாள் பாதிவரை சிலர் செய்து வந்தனர், அதன் பின் அவரே அடிகுழாயில் காத்திருக்கும் நிலை வந்தது..

மூன்றாம் நாள் முதல் அடிகுழாயிலும் கூட்டம் குறைந்துபோனது. மனைவியை பற்றிய சிந்தனையும் மட்டுப்பட்டு உணவை பற்றிய சிந்தனை மட்டுமே மேலோங்குவதை சாலமனும் உணர்ந்தான். அங்கே சிதறிக்கிடந்த சில சறுகுகளை கூட எடுத்து உண்ணலானான். அங்கிருந்த அனைவரும் ஐம்பதை தாண்டயவர்கள் ஆதலால் மூன்று நாள் பட்டினியே கொலைப்பட்டினியாய் இருந்தது.

சர்க்கரை நோயாளியான அதிபர் இரண்டாம் நாளிரவே இறந்துபோய் இருந்தார், அதை நான்காம் நாளில் கூட கண்டுபிடிப்பார் எவருமில்லை. பசிக்கொடுமை தாழாது சிலர் மின்வேலியை தொட்டு உயிரிழக்கும் முடிவுக்கு வந்தனர், ஆனால் கொலையிலும் வஞ்சம் வைத்த தமிழர்கள் அதில் காயப்படுத்தும் அளவுதான் மின்னழுத்தம் வைத்திருந்தனர். இருந்தும் அதில் காயப்பட்டவர்களின் முயற்சி ஒரு நாளைக்குள் வேண்டிய பலனை கொடுத்தது.

 

அடிகுழாய் வரை சென்று நீரறுந்தவும் திறணியற்று போனதால் பலர் அடிகுழாய் அருகிலேயே வாசம் செய்தனர். அதனால் அடுத்த சில நாட்களில் அடிகுழாய் பிணமேடானது. சாலமனுக்கு எப்படியாவது தன் உயிரை காத்துக்கொள்ளவேண்டும் என்ற வெறி இருந்தது. கிடைத்ததை எல்லாம் தின்று வந்தான். இலைகளுக்கும் அதன் சருகுகளுக்கும் எல்லோர் மத்தியிலும் ஆதரவு இருந்தது. பிஞ்சென்றும் பெண்ணென்றும் பாராமல் கொன்று குவித்தவர்கள் தான் ஆனாலும், அவர்களுக்கும் சகமனிதனை திண்று உயிர் வாழும் எண்ணம் வராததில் சாலமனுக்கு ஒரு திருப்தி.

நாளடைவில் சறுகுகளுக்கும் பஞ்சம் வந்தது. சில நாடகளுக்கு முன்பு வரை அவனுக்கு மிகவும் தொந்தரவு கொடுத்து வந்த பூச்சிகள் இப்போது அவன் கடைசி உணவாதாரம். இப்படி ஒரு இரண்டு கால் பூச்சியுண்ணியை இதறக்கு முன் பார்த்திராத காரணத்தால் பூச்சிகள் சாலமனை தேடிவந்து இரையாகின. சில நாட்கள் அப்படியே கடந்திருக்கும், சாலமனின் உடலில் கையடி குழாயில் நீர் சேகரிக்கவும் திரானியற்று போனது.அவ்வாறு நீரோட்டம் அற்றுப்போன உடலில் விரைவில் கை கால்களை அசைப்பதும் அவனுக்கு கடினமாகிப்போனது. பூச்சிகளுக்கோ நேராக அவன் வாயில் வந்து விழும் அளவிற்கு முட்டாள் தனம் போதவில்லை. மரணத்தின் சாயல் ஒரு கருந்திறை போல் அவன் கண்களில் படர்ந்தது, தானியங்கி சுவாசத்தை, இவனாய் இயக்காவிட்டால் நின்றுவிடும் போலிருந்தது. ஆனால் இவனோ மூக்கின் துளை சுறுங்கி மூடியே போனாலும் மூச்சை மட்டும் விடுவதாக இல்லை. சித்தனைப்போல் சில வருடங்களே கடந்தாலும் உயிரை மட்டும் கடக்க விட்டிருக்கமாட்டான். அவனது எண்ணிலடங்கா சுவாசங்களுக்கு பிறகு, சிலர் அங்கே சடலங்களை சேகரிக்க வந்து சேர்ந்தனர். அவர்கள் தமிழர்களாக இல்லாமல் மேலை நாட்டினராக காணப்பட்டார்கள். சறுகுகளும் கிடைக்காமல் சறுகாகிப்போன சடலங்களின் சுமையின்மையால் அதை சுமந்தவர் இதயமெல்லாம் கணத்தது.

ஐநாவின் அமைதி பேச்சு வார்த்தைகளுக்கு எல்லாம் செவி மடுக்காத தமிழர் நிர்வாகம், 21 நாட்கள் கடந்த பின் இனிமேல் எவரும் பிழைத்திருக்க மாட்டார்கள், ஐநாவின் பேச்சுக்கு இணங்கியதாகவும் இருக்கட்டுமே என்ற கணக்கில் எஞ்சியிருப்பவர்களை விடுதலை செய்ய ஒத்துக்கொண்டது. தமிழர் கணக்கையெல்லாம் பொய் ஆக்கியது சாலமனின் மூச்சு. அந்த கணக்கு பிழையை கண்டுபிடித்த மருத்துவருக்கோ மட்டற்ற மகிழச்சி. மிகுந்த அக்கறையுடன் அவனுக்கு மருத்துவம் செயதார். உலகின் பல பகுதியில் இருந்தவர்களெல்லாம் சாலமன் பிழைக்க வேண்டிக்கொண்டார்கள். சாலமனுக்கோ அவன் ஆசை ஒன்றே பிழைப்பதற்கு போதுமான காரணமாயிருந்தது. அவன் முதலில் கண்விழித்த போது அருகிலிருந்த தன் மகனிடம் கேட்க முயன்ற கேள்விக்கான விடையை அவன் கைகளிலேயே சுமந்து வந்திருந்தான்.அந்த பச்சிளம் குழந்தையின் இருப்பே சாலமனுக்கு புது தெம்பை கொடுத்தது. தனக்கென்று தனி மணமிருந்தாலும், நுகர்பவர் விருப்பத்திற்கு இணங்க எல்லா மணங்களையும் காட்டும் ‘மனோரஞ்சிதம்’, அதுபோல் பச்சிளம் குழந்தையானது, பார்ப்பவர் விருப்பத்தற்கு இணங்க தன் மூதாதையர் அனைவரின் சாயலையும் காட்டி இன்பமூட்டும். சாலமனுக்கோ தன் மனைவியின் குழந்தை பருவத்தை பார்க்காத குறை தீர்ந்தது போலிருந்தது. உடனே தன் பேத்தியை தூக்கி தன் தோளில் போட்டுக்கொள்ள முடியவில்லை என்ற கவலை அவருக்கு. மிக விரைவில் அந்த கவலை ‘ என் பேத்திக்கு என் தோளில் சாயாவிட்டால் தூக்கம் வராது’ என்று சாலமன் பெருமை பிதற்றிக்கொள்ளும் அளவில் தீர்ந்துபோனது!!!.
avatar
guruchana
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum