சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஹைபுன் கவிதை.
by ந.க.துறைவன் Today at 7:40

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar Tue 21 Mar 2017 - 6:03

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar Tue 21 Mar 2017 - 6:01

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar Tue 21 Mar 2017 - 5:59

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:57

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:56

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar Tue 21 Mar 2017 - 5:55

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar Tue 21 Mar 2017 - 5:53

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar Tue 21 Mar 2017 - 5:51

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by rammalar Tue 21 Mar 2017 - 5:50

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar Tue 21 Mar 2017 - 5:48

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:46

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:45

» ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:59

» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:56

» நான் நல்லா இருந்தா போதும்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:53

» குடிகாரர் வைத்த விருந்து…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:51

» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
by rammalar Mon 20 Mar 2017 - 19:50

» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
by rammalar Mon 20 Mar 2017 - 19:49

» வாய் மாமன்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:48

» குற்றப்பத்திரிகை ஏன் லேட்டாகுது…?
by rammalar Mon 20 Mar 2017 - 19:47

» வேலை வெட்டி எதுவும் இல்லாம இருக்கேன்…!
by rammalar Mon 20 Mar 2017 - 19:46

» மந்திரவாதி அலறியடிச்சு ஓடறாரே,ஏன்?
by rammalar Mon 20 Mar 2017 - 19:45

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 20 Mar 2017 - 18:17

» நல்ல நேரம் – ஒரு பக்க கதை
by rammalar Mon 20 Mar 2017 - 13:39

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கவிப்புயல் இனியவன் Sun 19 Mar 2017 - 18:20

» வரி பாக்கி வைத்துள்ளது யார்? பத்திரிகைகளில் பெயர் வெளியீடு
by rammalar Sun 19 Mar 2017 - 10:59

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar Sun 19 Mar 2017 - 10:57

» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
by rammalar Sun 19 Mar 2017 - 10:55

» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:53

» உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
by rammalar Sun 19 Mar 2017 - 10:51

» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
by rammalar Sun 19 Mar 2017 - 10:48

» கூந்தலை 7.5 அடி நீளத்திற்கு வளர்த்து பராமரித்து வரும் இளம்பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:46

» பறவைகள் பலவிதம்...!!
by ந.க.துறைவன் Sun 19 Mar 2017 - 8:32

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat 18 Mar 2017 - 14:53

.

‘அட்ரா சக்க’ விஜய் சேதுபதி, ‘ஆஹா’ தமன்னா..! – ‘தர்மதுரை’ விமர்சனம்

View previous topic View next topic Go down

Sticky ‘அட்ரா சக்க’ விஜய் சேதுபதி, ‘ஆஹா’ தமன்னா..! – ‘தர்மதுரை’ விமர்சனம்

Post by rammalar on Sun 21 Aug 2016 - 10:40


-
சீனு ராமசாமி -விஜய் சேதுபதி கூட்டணியின் மூன்றாவது
படம். வெளியானதில் இரண்டாவது படம். ”இடம் பொருள் ஏவல்”
இன்னும் ரிலீஸுக்கு காத்திருக்க, முந்தி வந்திருக்கிறான் தர்மதுரை.

நான்கு அண்ணன் தம்பிகள். அதில் மற்ற மூவரும் தொழில்,
பணம் என கருத்தாய் இருக்க, பாரும் பீருமாக சுற்றுகிறார்
விஜய் சேதுபதி. அம்மா ராதிகாவுக்கு விஜய் சேதுபதி மீதுதான்
அக்கறை அதிகம்.

அண்ணன் தம்பிகள் செய்யும் தொழிலுக்கு விஜய் சேதுபதி தொல்லை
கொடுக்க, சொந்த தம்பியையே ‘சம்பவம்’ செய்யத் தயாராகிறார்கள்.
இது தெரிந்த ராதிகா, விஜய் சேதுபதியை தப்பித்து போகச் சொல்கிறார்.

விஜய் சேதுபதி எடுத்துச் செல்லும் பையில் சீட்டுப்பணம் 8 லட்சம்
இருப்பது அவருக்குத் தெரியாது. விடிந்ததும் ஊர்மக்கள் பணம் கேட்க,
விஜய் சேதுபதிதான் திருடிச் சென்றுவிட்டதாக முடிவுக்கு வந்து
விடுகிறார்கள்.

ஊரை விட்டுச் செல்லும் விஜய் சேதுபதி போவது மதுரை மருத்துவ
கல்லூரிக்கு. அங்கே தொடங்குகிறது ஃபிளாஷ்பேக். அங்கே தமன்னா,
சிருஷ்டி டாங்கே என மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார் விஜய் சேதுபதி.
அப்படி நல்ல மாணவனாக இருந்த விஜய் சேதுபதி குடிகாரர் ஆனது ஏன்,
கல்லூரி முடிந்ததும் அவர் நண்பர்களுக்கு என்ன ஆனது, அண்ணன்,
தம்பிகள் பணப் பிரச்னையை எப்படிச் சமாளித்தார்கள் என எட்டுத்
திசைகளிலும் பரவியிருக்கும் முடிச்சுகளை பொறுமையாக அவிழ்க்கிறார்
இயக்குநர் சீனு ராமசாமி.

ஸ்டெதஸ்கோப் கையில் பிடிக்க கொஞ்சம் தடுமாறினாலும், மற்ற
ஏரியாக்களில் சொல்லி, எகிறி அடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
அலப்பறை கொடுப்பதில் இருந்து அழுது ஊரைக் கூட்டுவது வரை
எந்த எமோஷனுக்கு இறங்கி ஆடுகிறார்.

அதுவும் அந்த ஓப்பனிங் குத்துப்பாடல், மாஸ் ஹீரோக்கள் பாடலில்
இருந்து வித்தியாசமானது. ஆனால், தொப்பை குலுங்க அவர் ஆடுவதை
மயங்கி ரசிக்கிறது தியேட்டர்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12002
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ‘அட்ரா சக்க’ விஜய் சேதுபதி, ‘ஆஹா’ தமன்னா..! – ‘தர்மதுரை’ விமர்சனம்

Post by rammalar on Sun 21 Aug 2016 - 10:40

தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் என மூன்று நாயகிகள்.
வெள்ளந்தியான கிராமத்து பெண்ணாக பச்சக்கென ஒட்டிக்கொள்கிறார்
ஐஸ்வர்யா.

இரண்டாம் பாதியில் தனித்துத் தெரிகிறார் தமன்னா.
“இனி நான் நடிக்க போறேன்ப்பா” என கோடம்பாக்கத்துக்கு செம
அறிவிப்பு தந்திருக்கிறார் தமன்னா. வெல்டன் கேர்ள்ஸ்!

மற்ற நடிகர்களில் அம்மா ராதிகாவும், அந்த வீட்டோட மாப்பிள்ளையும்
கவனிக்க வைக்கிறார்கள். கஞ்சா கருப்பு என்ன சொன்னாலும் சிரிக்கத்
தூண்டுகிறது. காரணம்… மிக மெதுவாகப் பயணிக்கும் ஸ்க்ரீன்ப்ளே.

உணர்ச்சிகளை சரியாக கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்
சீனு ராமசாமி. ஹெலிகேம் ஷாட்களில் தேனி மலைகளின் அழகை
இன்னும் அழகாய் படம்பிடித்திருக்கிறார். கிராமத்தில் இருந்து தொடங்கும்
கதை மெல்ல வேகமெடுக்கும் போது தொடர்பே இல்லாமல் நகரத்து
ஃப்ளாஷ்பேக்குக்கு போகும்போது சுவாரஸ்யம் குறைகிறது.

விஜய் சேதுபதியின் நடிப்பு மட்டுமே அதன்பின் படம் பார்க்க வைக்கும்
மாய மந்திரம்.

எந்தக் காலத்தில் கதை நடக்கிறது என்பதில்… ஏக குழப்பம். மெடிக்கல்
காலேஜ் முடிக்கும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் மொபைல் நம்பரையோ,
ஃபேஸ்புக் ஐடியையோ கூட பகிர்வதில்லை. ஆள் காணவில்லை என
அண்டார்டிகா வரை தேடுகிறார் விஜய் சேதுபதி.

1990களில் மெடிக்கல் காலேஜ் படித்தார்களோ? ஆனால், இரண்டாம் ஆண்டு
படிக்கும் போதே சிருஷ்டி டாங்கே ‘வேதாளம்’ அஜித் ஸ்டில்லை அறையில்
ஒட்டி வைத்து “தல ஃபேனாக்கும்” எனப் பேசுகிறார். நண்பர்கள் யாரும்
அவர்கள் திருமணத்துக்கு கூட யாரையும் அழைப்பதில்லை.

பணத்தைக் காணவில்லை என கம்ப்ளையண்ட் தந்தவர்கள் போலீஸ்
ஸ்டேஷனிலே காத்துக் கொண்டிருக்க, விஜய் சேதுபதியோ தமன்னாவை
தேடிக் கண்டுபிடித்து, ஆல்கஹால் அடிகஷனில் இருந்து மீண்டு,
வித்ட்ராயல் சிம்ப்டம்ஸுக்கு தமன்னா கையால் ஊசிப் போட்டுக்
கொள்கிறார்.

குடித்து.. குடியைவிட்டு என்று அத்தனை காலகட்டத்திலும் பையில் இருக்கும்
எட்டு லட்சத்தை பைக்குச் சொந்தக்காரரான விஜய் சேதுபதியோ,
தமன்னாவோ யாருமே பார்க்கவேமாட்டார்களா?

கேட்டுப் பழகிய தெம்மாங்கு மெட்டுதான் பாடல்களுக்கு.
ஆனால், பின்னணி இசையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்
யுவன். சுகுமாரின் கேமரா நுழையாத இடமே இல்லை. ஒவ்வொரு ஃப்ரேமும்
கவிதை பாடுகிறது.

காட்டுக்குள் விழுந்த விமானத்தை தேடிக்கண்டுபிடிப்பது போல,
பல சிக்கலுக்கு நடுவில் கதையை தேடிக்கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
ஆனால், அதற்கு ஒரு கூகுளாய் இருக்கிறார் விஜய் சேதுபதி!

————————————
விகடன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12002
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum