சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 9:11

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 8:46

» பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..?
by சே.குமார் Yesterday at 8:52

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி(1)
by சே.குமார் Yesterday at 8:51

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி (2)
by சே.குமார் Yesterday at 8:47

» ஹைபுன் கவிதை.
by ந.க.துறைவன் Thu 23 Mar 2017 - 7:40

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar Tue 21 Mar 2017 - 6:03

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar Tue 21 Mar 2017 - 6:01

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar Tue 21 Mar 2017 - 5:59

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:57

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:56

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar Tue 21 Mar 2017 - 5:55

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar Tue 21 Mar 2017 - 5:53

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar Tue 21 Mar 2017 - 5:51

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by rammalar Tue 21 Mar 2017 - 5:50

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar Tue 21 Mar 2017 - 5:48

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:46

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:45

» ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:59

» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:56

» நான் நல்லா இருந்தா போதும்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:53

» குடிகாரர் வைத்த விருந்து…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:51

» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
by rammalar Mon 20 Mar 2017 - 19:50

» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
by rammalar Mon 20 Mar 2017 - 19:49

» வாய் மாமன்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:48

» குற்றப்பத்திரிகை ஏன் லேட்டாகுது…?
by rammalar Mon 20 Mar 2017 - 19:47

» வேலை வெட்டி எதுவும் இல்லாம இருக்கேன்…!
by rammalar Mon 20 Mar 2017 - 19:46

» மந்திரவாதி அலறியடிச்சு ஓடறாரே,ஏன்?
by rammalar Mon 20 Mar 2017 - 19:45

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 20 Mar 2017 - 18:17

» நல்ல நேரம் – ஒரு பக்க கதை
by rammalar Mon 20 Mar 2017 - 13:39

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கவிப்புயல் இனியவன் Sun 19 Mar 2017 - 18:20

» வரி பாக்கி வைத்துள்ளது யார்? பத்திரிகைகளில் பெயர் வெளியீடு
by rammalar Sun 19 Mar 2017 - 10:59

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar Sun 19 Mar 2017 - 10:57

» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
by rammalar Sun 19 Mar 2017 - 10:55

» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:53

.

மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்

View previous topic View next topic Go down

Sticky மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்

Post by rammalar on Mon 29 Aug 2016 - 17:25


-

-
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ரீமேக்குகளுக்குப்
பிறகு மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘தட்டத்தின் மறயத்து’
படத்தை தமிழ் பேச வைத்திருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஜவஹர்.
ஆனால், மலையாளத்தில் படம் செய்த மேஜிக் தமிழில்
நிகழ்த்தியிருக்கிறதா?

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் வினோத்
(வால்டர் பிலிப்ஸ்) நண்பனின் திருமணத்தில் ஆயிஷாவைப்
(இஷா தல்வார்) பார்த்ததும் காதலில் விழுகிறார். கட்டுப்
பாடான முஸ்லீம் குடும்பம் இஷா தல்வாரினுடையது.

இஷா, அவரது அக்கா மற்றும் அப்பா தலைவாசல் விஜய்
எல்லோருக்கும் பெரியப்பா நாசர் சொல்வது தான் வேதவாக்கு.
இந்தக் கட்டுப்பாடுகளை மீறி இவர்கள் காதல் சேர்ந்ததா என்ற
மிக பழக்கப்பட்ட கிளைமாக்ஸ்.

இஷாவின் பார்வைக்காக ஏங்குவது, அவளிடம் பேசுவதற்காகத்
துடிப்பது, அவளைப் பார்க்கும் போதெல்லாம் கண்களில் காதலைக்
காட்டுவது என நடிக்க பெரிய ஸ்கோப் இருந்தும் அவ்வளவு வலுவாக
இல்லை வால்டரின் நடிப்பு.

ஒரிஜினல் தட்டத்தின் மறயத்து படத்தில் நிவின் பாலியின் நடிப்பைப்
பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக வால்டரின் நடிப்பு அத்தனை
ஈர்ப்பாக இருக்காது. ஆயிஷா ரோலில் தமிழிலும் இஷாவே நடித்திருப்பது
நலம். ஆனால், தட்டத்தின் மறயத்து வெளியாகி நான்கு ஆண்டுகள்
ஆகிவிட்டதென்பது இஷா தல்வாரின் முகத்திலேயே தெரிவது அநலம்!

அர்ஜுனன் நந்தகுமார், வித்யுலேகா இடையிலான காட்சிகளில்
காமெடி… வெரி ஸாரி! ”சிக்ஸ்-பேக்” வைக்கிறவன்லாம் ஜட்டி
விளம்பரத்துல தான் நடிக்கணும்” என்பது போன்ற ஜெகஜீவனின்
வசனங்கள் அவ்வப்பொழுது சிரிக்கவைக்கிறது.

நாகர்கோவில் தான் கதைக்களம், இருப்பினும் அந்த ஊர் பாஷை
வசனத்தில் வரவில்லை என்பது வருத்தம்.

போலீஸ் வாகனத்திலேயே சுற்றிவரும் மனோஜ் கே ஜெயனின் நடிப்பு
கச்சிதம். இருப்பினும் உங்களுக்கு வேற கேஸே வராதா பாஸ் என்பது
போல, ஹீரோவிற்காக ஹெல்மெட் விற்பனையில் இறங்குவது,
க்ளைமேக்ஸில் எல்லோரையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சுற்றுவது,
திருச்செந்தூர் முருக பக்தி என… முடியல சாமி. நாசர் வருவதும்,
போவதுமாக இருக்கிறாரே தவிர, பேசப்படும் அளவிற்கு வலுவான
கதாபாத்திரமோ, வசனமோ இல்லை.

இந்து பையன், முஸ்லீம் பெண்ணை காதலிப்பது, என்ற அழகிய
முரணும், அதற்கான விடையும் தான் படத்திற்கான கவனஈர்ப்பு.
அதை ரீமேக்கிலும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.

கருப்பு திரைக்குப் பின், ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு மனசும்,
அதில் அழகான ஒரு கனவும் இருக்கிறது. நம்ம கெளரவத்திற்கும்,
பயன்பாட்டிற்கும் பொண்ணுங்க வாழ்க்கையை பகடியாக்க கூடாது
என்ற அழகிய ஒன் லைன் மட்டும் படம் முடிந்தும், நினைவில்
நிற்கிறது.

முழுக்க முழுக்க காதல், இதயத்தை தொடும் இசை, கதை உருவாக்கம்,
கதை சொல்லும் விதம் என்று காதலை அழகியலை
தட்டத்தின் மறயத்து படம் கசிய விட்டிருக்கும். அதனாலேயே அப்படம்
மலையாளத்தில் பெரிதும் கொண்டாடப்பட்டது.
ஆனால், தமிழில் அந்த ஃபீல்… ப்ச்!

படம் முழுக்க நம்மை ஈர்ப்பது விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவும்,
ஷான் ரஹ்மானின் பின்னணி இசையும் மட்டும் தான். மை போட்டு
பாடல் மட்டும் ஒகே மற்ற எல்லா பாடல்களும் அதே ஜீவி டெம்ப்ளேட்.

———————————————-
விகடன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12002
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum