சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

நம்பியார் - சினிமா விமர்சனம்

View previous topic View next topic Go down

Sticky நம்பியார் - சினிமா விமர்சனம்

Post by rammalar on Mon 29 Aug 2016 - 17:30


-
கதாநாயகன்–கதாநாயகி: ஸ்ரீகாந்த்–சுனைனா.

டைரக்ஷன்: கணேஷா.

கதையின் கரு: 
தீய சிந்தனைக்கு ஆட்பட்டு தவறான முடிவுகள் எடுக்கும் 
ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்.

ஜெயப்பிரகாஷ் மகன் ஸ்ரீகாந்த். தந்தை விருப்பத்துக்காக
ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படிக்கிறார். இவர் தனது மனதில் தோன்றும் 
கெட்ட சிந்தனைகளுக்கு சந்தானம் என்ற உருவம் கொடுக்கிறார். 

அந்த உருவமே இவரை ஆட்டிப்படைத்து தவறான வழிக்கு இழுத்து
விடுகிறது. மனதை கட்டுப்படுத்த முடியாமல் படிப்பு சிதறுகிறது. 
தேர்வுகளில் தோற்கிறார். இது அவரது தந்தையை எரிச்சல் 
படுத்துகிறது.

கெட்ட மனசாட்சியான சந்தானத்தின் குறுக்கு யோசனைகள்படி 
சுனைனாவை காதலிக்கிறார். பிறகு அவர் வேறு இளைஞனுடன் 
தொடர்பு வைத்து இருப்பதாக சந்தேகித்து சண்டை போடுகிறார். 
காதல் முறிகிறது. கெட்ட மனதின் உந்துதலால் மது அருந்துகிறார். 
அந்த போதை அவரை பல்வேறு சிக்கல்களில் மாட்டி விடுகிறது.

காதலி வீட்டில் புகுந்து கற்பழிக்க முயற்சிக்கிறார். தந்தையை நடு 
ரோட்டுக்கு இழுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் முன்னிலையில் 
அவமானப்படுத்துகிறார். போலீசாரை கண்மண் தெரியாமல் 
அடிக்கிறார். மறுநாள் போதை தெளிந்ததும் நடந்த தவறுகளுக்காக 
வருந்துகிறார். கெட்ட மனதை வென்று நல்லவனாக மாற 
முயற்சிக்கிறார். 

அது நடந்ததா? ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்றாரா? காதலியுடன் சேர்ந்தாரா? 
என்பது மீதி கதை.

ஸ்ரீகாந்துக்கு மைல்கல் படம். காதல், நகைச்சுவை, குடும்பபாசம், 
அனைத்திலும் அழுத்தம் பதிக்கிறார். கெட்ட உணர்வுகள் 
ஆக்கிரமிப்பிலான மனபோராட்டங்களை கச்சிதமாக வெளிப்
படுத்துகிறார். சுனைனாவை எதேச்சையாக சந்தித்து மோதுவதும், 
காதல்வயப்படுவதும், பிறகு அவரை திருநங்கை என்று கருதி கழற்றி 
விடுவதும் சுவாரஸ்யங்கள். 

குடிபோதையில் போலீஸ்காரர்களை துவம்சம் பண்ணுவது ரகளை. 
கெட்ட எண்ணங்களை வென்று காதலியிடம் தான் செய்த தவறுகளை 
வெளிப்படையாக சொல்லி மனதில் நிற்கிறார். குறிப்பாக தோழியை 
அழைத்து வந்து படிக்கிற காலத்தில் அவளை விரும்பியதால் 
அவளுடையை உண்மையான காதலனை சதி செய்து பிரித்ததாக முன் 
கதையை சொல்வது ஜீவன்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நம்பியார் - சினிமா விமர்சனம்

Post by rammalar on Mon 29 Aug 2016 - 17:30


சுனைனா வசீகரிக்கிறார். தன்னை பின்தொடர்வதாக ஸ்ரீகாந்திடம் 
சண்டைபோடுவது, பிறகு அவரது ஒளிவுமறைவில்லா பேச்சில் 
கவரப்பட்டு காதல்வயப்படுவது. தன்மீது சந்தேகப்பட்டதும் காதலை 
முறித்து விடுவது, என நிறைவாக செய்து இருக்கிறார். 

கெட்ட மனதின் உருவமாக வரும் சந்தானத்தின் நகைச்சுவை, 
நய்யாண்டிகள் குலுங்க வைக்கிறது. ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி, 
பஞ்சு சுப்பு, டெல்லிகணேஷ் கதாபாத்திரங்களும் நேர்த்தி.

போதையிலும் தனக்கு செய்த இம்சைகளை தந்தையிடம் தெளிவாக 
பேசி அவரை ஸ்ரீகாந்த் அவமானப்படுத்தும் காட்சி கதாபாத்திரத்தை 
பலவீனப்படுத்துகிறது. நேர்மறை, எதிர்மறை சிந்தனைகளின் 
தாக்கத்தால் ஒரு மனிதன் வாழ்வில் நிகழும் மாற்றங்களை விறுவிறுப்பும் 
கலகலப்புமாக காட்சிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் கணேஷா. 

விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். 
எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு ரம்மியம்.
-
---------------------------------------
தினத்தந்தி

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நம்பியார் - சினிமா விமர்சனம்

Post by நண்பன் on Tue 30 Aug 2016 - 18:56

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நம்பியார் - சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum