சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Yesterday at 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Yesterday at 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Yesterday at 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Yesterday at 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Yesterday at 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Yesterday at 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Yesterday at 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Yesterday at 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Yesterday at 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Yesterday at 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Yesterday at 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Yesterday at 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Yesterday at 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Yesterday at 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Yesterday at 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Yesterday at 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

» வாசகர் கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:28

» சாதனைக்கு மட்டும் அல்ல
by rammalar Tue 20 Jun 2017 - 17:27

» அன்பு போர்வை
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» சீற்றம் – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:10

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

.

தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)

View previous topic View next topic Go down

Sticky தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)

Post by rammalar on Sun 19 Feb 2017 - 15:37


‘தமிழ் தாத்தா’ என அனைவராலும் போற்றப்படும்
உ.வே.சாமிநாத ஐயர், 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி இதே நாளில்
தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ளே
உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் வேங்கட
சுப்பையர்-சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.


இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத்
தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில்
உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில்
தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக்
கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட
தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம்
5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.


தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில்
ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை
மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.


பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ்
இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத்
தொண்டாற்றியவர்களுள் உ.வே.சாமிநாத ஐயரும் குறிப்பிடத்
தக்கவர்.


தமது அச்சுப் பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின்
தொன்மையையும், செழுமையையும் உலகிற்கு அறியச்
செய்தவர். உ.வே.சா 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்
பதித்தது மட்டுமின்றி 3000-க்கும் அதிகமான ஏட்டுச்
சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.


சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடிகளையும் உ.வே.சா
தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச்
சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை
திருத்தி அச்சிலேற்றும் பணியையும் துவங்கினார். பின்னாளில்
அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார்.


இப்பணியானது அவர் தனது 84 ஆம் அகவையில் இயற்கை
எய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.


சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள்,
சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90-க்கும் மேற்பட்ட
ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில்
இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத்
தந்தார்.


சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும்,
நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும்
எழுதி வெளியிட்டுள்ளார்.
உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும்
திறமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா
ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’
எனும் நூலாக வெளியிடப்பட்டது.


உ.வே.சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய
பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப்
பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது.


இதுதவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி
எனும் பட்டமும் பெற்றுள்ளார்.


இந்திய அரசு பெப்ரவரி 18, 2006ம் ஆண்டில் இவரது நினைவு
அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. உத்தமதானபுரத்தில் உ.வே.சா
வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு
இல்லமாக்கப்பட்டுள்ளது. 1942-ல் இவர் பெயரால் சென்னை
பெசன்ட் நகரில் டாக்டர் உ.வே.சா நூல் நிலையம் அமைக்கப்பட்டு
இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


——————————————

மாலைமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12529
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum