சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Yesterday at 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

. சூடான் கமல்… ஆஃப் ஆன விஜய்-அஜித்?

View previous topic View next topic Go down

Sticky . சூடான் கமல்… ஆஃப் ஆன விஜய்-அஜித்?

Post by rammalar on Sat 4 Mar 2017 - 16:17நான் அரசியலுக்கு வருவேனா என்று கேட்கப்படுகிறது?
என்னைப் பொறுத்தவரை நான் அரசியலுக்குத் தகுதி
இல்லாதவன். நான் மிகப் பெரிய கோபக்காரன்,
கோப்படுகிறவர்கள் அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர்கள்’


சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஆக்ரோஷமாக தன்
அரசியல் பார்வை, பதிவுகளை, விமர்சனங்களை வெளியிட்டு
வரும் கமல்ஹாசன் கடைசியாக சொன்னதுதான் இது.


பொதுவாக திரைப்பிரபலங்கள் தங்கள் திரைப்படம் வரும்
காலங்களில் அதிரடியான சில அரசியல் வசனங்களைப்
பேசுவது காலம் காலமாக நடந்து வருவது. ஆனால் கமல்
அப்படியில்லை.


தன் இயல்பான கோபத்தைத்தான் சமீபகாலமாக வெளிப்
படுத்தி வருகிறார். ரஜினிகாந்தும் சில காலங்களுக்கு முன்பு
ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியலில் தன் கருத்தை
கொஞ்சம் வலிமையாகப் பதிவு செய்தார்.


Last edited by rammalar on Sat 4 Mar 2017 - 16:18; edited 1 time in total
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: . சூடான் கமல்… ஆஃப் ஆன விஜய்-அஜித்?

Post by rammalar on Sat 4 Mar 2017 - 16:17

அவர் மறைந்த பின்பு அது தவறு என்றும் அதற்கு
வருந்துவதாகவும் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார். இப்படி
நாம் ஒன்று சிந்திக்க, காலம் வேறுவிதமாகவும் சிந்திக்கும்
என்பது கமலுக்கும் தெரியாதா என்ன?எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உயிரோடு இல்லை. கலைஞர்
ஆரோக்யமாக இல்லை. சினிமாக்காரர்கள் ஆளாளுக்கு
அரசியல் வசனங்களை அள்ளிவிடுகிறார்கள் என்று சமூக
வலைத்தளங்களில் நடிகர்களுக்கு எதிர்க் கருத்துக்களும்
எழுகின்றன.ஆனால், பேசக்கூடிய சூழ்நிலையிலாவது இவர்கள்
பேசுகிறார்களே என்பதும் கவனிக்க வேண்டியதுதான்.
அதேசமயம் கம்ல, பாக்யராஜ், டி.ஆர். பார்த்திபன்,
அரவிந்தசாமி, சத்யராஜ் என்று தொடர்ந்து முழங்கிக்
கெண்டிருப்பவர்கள் எல்லாம் முந்தைய தலைமுறையைச்
சேர்ந்தவர்களாக இருக்கிறார்களே, இளைய தலைமுறையைச்
சேர்ந்த தல, தளபதி, சிங்கம், சிறுத்தை எல்லாம் மௌனமாக
இருக்கிறார்களே ஏன்? என்ற கேள்வியும் சம்பந்தப்பட்ட
நடிகர்களின் தீவிர ரசிகர்களின் கேள்வியாகவும் இருக்கிறது.

இதுகுறித்து மூத்த கலையுலகப் பிரபலம் ஒருவரிடம் கேட்ட
போது…‘முதலில் திரையுலகப் பிரபலங்கள் தாங்கள் யாரை சிபாரிசு
செய்கிறார்களோ அவர்களின் இயக்கத்தில் தங்களை
இணைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான்
மக்களுக்கே நம்பிக்கை வரும். நடிகர்கள் தாங்கள் நடிக்கும்
விளம்பரத்தின் நம்பகத்தன்மைக்கே தார்மீகப் பொறுப்பேற்க
வேண்டிய சூழ்நிலையில் இருக்கும்போது நாட்டை ஆள்வதற்கு
ஒருவரைப் பரிந்துரைத்தால் முதலில் இவர்கள் அவர்களோடு
இணைந்து மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தை வழங்க
வேண்டும்.இப்போதைக்கு இதைச் சொல்கிறேன். பிற்பாடு என் நிலைப்
பாடு என்னவென்று எனக்கே தெரியாது என்று
பொறுப்பில்லாமல் செயல்படக்கூடாது.திரையுலகப் பிரபலங்களுக்கு சமுதாய அக்கறை கண்டிப்பாக
இருக்க வேண்டும். அதைவிட முக்கியம். அதில் உண்மையும்,
அர்ப்பணிப்பும். இதற்கு சரியான முன்னோடிகள் எம்.ஜி.ஆரும்,
சிவாஜியும் தான். அவர்கள் இருவரும் அவர்கள் காலகட்டத்தில்
உச்ச நட்சத்திரங்கள். ஆனால் பகிரங்கமாக இருவரும்
வெவ்வேறு அரசியல் இயக்கங்களில் தங்களை இணைத்துக்
கொள்ளவில்லையா?அரசியலுக்குப் போனால் சினிமா போயிடுமோ, வருமானம்
போய்விடுமோ என்று அவர்கள் தயங்கவில்லை. நடுநிலைமை
என்கிற நாடகமாடவில்லை. அரசியலில் தங்களுக்கிருந்த
உண்மையான ஈடுபாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

அதற்காகப் பணம், நேரம், உழைப்பு என அனைத்தையும்
செலவழித்தனர். சும்மா கருத்துச் சொல்லவில்லை. ஒருவர்
வென்றார், மற்றவர் வெற்றிபெறவில்லை என்றாலும் மக்களால்
நிராகரிக்கப் படவில்லை.அந்த நேர்மை இப்பொழுதுள்ளவர்களுக்கும் இருக்க வேண்டும்.
ஏதோ படம் வெளியாகும் நேரத்தில் மட்டும் சமூக அக்கறை
இருப்பதுபோல காட்டிக் கொள்வதும், மற்ற நேரங்களில்
இருக்கும் இடம் தெரியாமல் அமைதிகாக்கும் நடிகர்களின்
கமர்ஷியல் சாமர்த்தியங்களை மக்கள் தெளிவாகப் புரிந்து
கொண்டு விட்டனர்.இனி அரசியல் பேசவேண்டுமானால் தன் நிலைப்பாட்டை
வெளிப்படையாக காட்டிக் கொள்ளும் நடிகரையே நம்பத்
தயாராக இருக்கிறான் தமிழன். அதைவிடுத்து பஞ்ச
வசனங்களில் இனி காலம் தள்ள முடியாது.இந்த அடிப்படையில் பார்க்கும்போது கமல், அட்லீஸ்ட் முதல்
குரலை உரக்கப் பேசி இருப்பது ஆறுதல்.தமிழ்நாட்டில் உடனடியாக ஒரு புதிய ஜனநாயகம்
மலர்வதற்கான சூழ்நிலை இல்லை. புதிய சிந்தனை
உள்ளவர்கள் எல்லாம் மக்களிடம் இருந்து சற்று விலகியே
இருக்கிறார்கள். மக்களே இன்னும் முற்றிலுமான ஒரு
மாற்றத்துக்கு தயாராக இல்லை. ஏற்கெனவே
தோற்றவர்களை ஜெயிக்க வைப்பதாலோ ஜெயித்தவர்களை
தோற்கடிப்பதாலோ ஜனநாயகம் மாறிவிடுமா என்ன?

அது மாற வேண்டும் என்று உண்மையிலேயே பெரிய
நடிகர்களுக்கு அக்கறை இருக்கும் என்றால் அவரகள்
குறைந்தபட்சம் எம்.ஜி.ஆர்., சிவாஜி வழிமுறையையாவது
பின்பற்ற வேண்டும். அல்லது நிஜமான மாற்றத்துக்கான
ஒரு புதிய தலைமுறைத் தலைவரகளை கண்டுபிடித்து
இனஙகாட்ட வேண்டும். இல்லையென்றால் ஒரு தனிநபர்
மீது மக்களுக்கு கோபம் இருக்கிறது.இவர்களுக்கும் தொழில் ரீதியாக அவர்களுடன்
முரண்பாடுகள் இருக்கிறது. தங்களின் சுயவெறுப்பு
விருப்புக்களுக்கு சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்
படுத்திக் கொள்கிறார்கள் என்ற பழிதான் தேவையே
இல்லாமல் வந்து சேரும்.

அவரவர்கள் செயல்பாட்டில் அவரவர்களுக்கு ஒரு நியாயம்,
காரணம் இருக்கும் அதை நாம் விமர்சிக்க முடியாது! எதிலும்
மக்களுக்கு உண்மையான நன்மை என்ன என்பதே முக்கியம்’
என்று முடித்துக் கொண்டார்.திரைக் கலைஞர்களின் விமர்சனக் குரல் இன்றைய
அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும்,
மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது
மறுக்க முடியாத உண்மை.

———————————

– இளையரவி
குமுதம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum