சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Today at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

திரையரங்குகளுக்கு 100% வரை வரிவிலக்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு

View previous topic View next topic Go down

Sticky திரையரங்குகளுக்கு 100% வரை வரிவிலக்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு

Post by rammalar on Sun 8 Oct 2017 - 12:48

உ.பி.யில் மூடப்பட்ட திரையரங்குகளை மீண்டும் நடத்தினால் ஜிஎஸ்டி வரியில் 50 முதல் 100 சதவீதம் வரை விலக்கு அளிப்பது என முதல்வர் யோகி ஆதித்யநாத அரசு முடிவு செய்துள்ளது.

மற்ற மாநிலங்களை போல், உ.பி.யிலும் பல ஆண்டுகளாக திரையரங்குகள் மூடப்பட்டு வந்தன. இவ்வாறு மாநிலம் முழுவதிலும் இதுவரை 700 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே திரை கொண்ட அரங்குகள் ஆகும். எனினும் திரையரங்குகளுக்கான கேளிக்கை வரியால் உ.பி. அரசுக்கு கடந்த 6 மாதங்களில் அதிக வருவாய் கிடைத்துள்ளது. இதனால் மூடப்பட்ட திரையரங்குகளை மீண்டும் திறக்க உ.பி. அரசு முயற்சித்து வருகிறது.

இது குறித்து உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறும்போது, “உ.பி. திரையரங்குகளில் கடந்த 6 மாதங்களில் ரூ. 187 கோடி கேளிக்கை வரி வசூ லாகி உள்ளது. இது முந்தைய 6 மாதங்களின் கேளிக்கை வரியை விட 121 சதவீதம் கூடுதல் ஆகும். இந்த வருவாயை உயர்த்த வேண்டி, மீண்டும் திறக்கப்படும் திரை அரங்குகளுக்கு ஜிஎஸ்டியில் 50 முதல் 100 சதவீதம் மானியம் அளிக்க முடிவு செய்துள்ளோம். இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டும் அமலில் இருக்கும்” என்றார்.

உ.பி.யில் கேளிக்கை வரி அதிகம் என்பதாலும் வசூல் இல்லாமலும் திரையரங்குகள் திணறி வந்தன. அதேசமயம், திரையரங்குகளை இடித்துவிட்டு குடியிருப்பு, வணிக வளாகம் போன்றவை கட்டவும் அரசு அனுமதிக்கவில்லை. இதனால் மூடப்பட்ட நிலையிலேயே இருந்த திரையரங்குகள் தற்போது மீண்டும் திறக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து 25 திரையரங்குகள் மீண்டும் திறக்க அரசுக்கு விண்ணப்பித்துள்ளன.

உ.பி.யின் 75 மாவட்டங்களில் 58-ல் ஒன்றுக்கும் மேற்பட்ட திரயரங்குகள் கொண்ட மல்டிபிளக்ஸ் கிடையாது. இவற்றில் 10 மாவட்டங்களில் தற்போது மல்டிபிளக்ஸ் கட்டவும் அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

பிஹாரில் அதிகம் பேசப்படும் போஜ்புரி மொழி, உ.பி.யின் கிழக்கு, மத்தியப் பகுதிகளில் பேசப்படுகிறது. இதனால் போஜ்புரி மொழி படங்களுக்கு உ.பி.யில் அதிக வரவேற்பு உள்ளது. எனவே இம்மொழி திரைப்படங்களை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக போஜ்புரி படப்பிடிப்புக்காக திரைப்பட நகரம் உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
-

தி இந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum