சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Yesterday at 21:39

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Yesterday at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Yesterday at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Yesterday at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Yesterday at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Yesterday at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

.

மங்கையரின் பாதங்களை அணிசெய்யும் கொலுசும், மெட்டியும்

View previous topic View next topic Go down

Sticky மங்கையரின் பாதங்களை அணிசெய்யும் கொலுசும், மெட்டியும்

Post by *சம்ஸ் on Fri 11 Mar 2011 - 21:24அழகு உணர்வு கொண்ட மக்கள் தம்மையும் தம்மைச் சார்ந்த பொருட்களையும் கவர்ச்சிக்காக பெரிதும் அணிசெய்து கொள்கிறார்கள். புறத்தே அணிசெய்யப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பலவற்றுள் பொன்னாலும் மணியாலும் உருவான ஆபரணங்களே ஒளி தந்து நெடிது நிற்பதுடன் மங்கலச் சிறப்பும் மிக்கவை. அணி செய்யப் பயன்படுத்தப்படும் ஆடகம், சாம்புநதம், கிழிச்சிரை, சாகரூபம் ஆகிய நான்கும் தங்கத்தின் வகைகளாகும். பொன்னின் முக்கிய நான்கு வகைகளாக இவை குறிப்பிடப்படுகின்றன.

வைரம், முத்து, மரகதம், மாணிக்கம், நீலம், புஸ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் ஆகிய ஒன்பது மணிகள் நவமணிகள் என்ற சிறப்புப் பெயரோடு போற்றப்படுகின்றன. இவை தனிப்பட்ட ஒவ்வொருவருடைய கிரக நிலைகளுக்கு அமைய ÷ஐõதிட விற்பன்னர்களால் பரிந்துரைக்கப்பட்டு அணியப்படுகின்றன. இவை தவிர வெள்ளி, சங்குகள்,யானைத் தந்தங்கள், யானை முடி பிறவும் பண்டைய காலந்தொட்டு தமிழர்களால் அறிந்து ஆபரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. சிறப்பாக கடல் பயந்த பொன்னும் முத்தும் பவளமும் மலை பயந்த மணியும் ஒரு விழி சேர்க்கப்பட்டு நகைகளாக உருப்பெற்றன என நாம் அறிகிறோம். பொன்னிலே மணியைச் கோர்த்து சேர்த்து பதித்து செய்தவை இழை எனச் சிறப்பாகக் கூறப்பட்டது. இழை என்பது ஆபரணத்தைக் குறிக்கும் ஒரு காரணச்சொல் ஆகும். வயது, இடம், தகுதி, இயல்பு, உறுப்பமைவு முதலியவற்றுக்கு ஏற்ற வகையில் பல தரப்பட்ட அணிகளை அணிந்து மக்கள் மகிழ்ந்தார்கள். தகுதியை வெளிப்டுத்தும் முக்கிய அங்கமாக ஆபரணங்கள் திகழ்கின்றன. ஆடவர் மகளிர் குழந்தைகள் என எல்லோரும் இவ்அணிகளை அணிய விரும்பினார்கள். ஆனாலும் பெண்களுக்குத்தான் இழைகளில் பெரிதும் ஈடுபாடு இருந்தது. இது இன்றைய காலத்தில் நடைமுறையில் உள்ள வழக்கு அல்ல. இதை பண்டைய இலக்கியங்களில் இருந்து நாம் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

உள்ளிழை (உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவள்), நேரிழை (நேர்மையான ஆபரணங்களை அணிந்தவள்), ஆயிழை (ஆய்ந்தெடுத்த ஆபரணங்களை அணிந்தவள்), சேயிழை (செம்மையான பொன்னாபரணங்களை அணிந்தவள்), ஏந்திழை, இலந்திழை, மானிழை போன்ற சொற்கள் எல்லாம் பெண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இச்சொற்களைக்கொண்டு பெண்கள் வர்ணிக்கப்பட்டார்கள். எனவே ஆபரணங்கள் மற்றும் நகைகள் என்று சொல்லும் போது அது பெண்கள் சார்ந்தவையாகவே கருதப்படுகின்றன. இக்கூற்றைத்தான் இலக்கியங்களும் எடுத்தியம்புகின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மங்கையரின் பாதங்களை அணிசெய்யும் கொலுசும், மெட்டியும்

Post by *சம்ஸ் on Fri 11 Mar 2011 - 21:24

ஐம்பெருங்காப்பியங்கள் முதலிய இலக்கியங்களிலும் ஆபரணங்கள் பற்றிய குறிப்புக்கள் பல கிடைக்கின்றன. மும்மணிக்கோவை பல வகைப்பாக்களினால் ஆனாலும் கூட ஆபரணங்கள் பற்றிய விபரங்களைத் தருகின்றது. இரட்டைமணிமாலை, மும்மணிமாலை, நான்மணிமாலை, நவமணிமாலை முதலிய நூல்களும் ஆபரணப் பெயர்களாகவே உருப்பெற்றிருக்கிறது.

பக்தி இலக்கியங்களில் ஆண்டவனுக்கு பல விதமான அணிகலன்கள் அணிவிக்கப்படுவதை நாம் காணமுடியும். பல புராதன ஆபரணங்களின் வடிவங்கள் இன்று வழக்கில் இருந்து இல்லாது ஒழிந்துள்ளது. பொன்வினைக் கலைஞர்களுக்கு தெரியாத எத்தனையோ வகையான ஆபரணங்கள் பல கோவில்களில் வைத்து காலங்காலமாகப் பேணப்பட்டு வருகின்றன. சிதம்பரத்தில் நடராஐப்பெருமானுக்கு அணிவிக்கப் படுகின்ற மதாணி என்ற ஆபரணத்தை செய்வதற்கு இன்று யாருமே இல்லை. சிறிரங்கம் முதலிய ஆலயப் பெருமை கொண்ட தலங்களிலே இறைவனுக்காக பிரத்தியேகமாக பல வகையான ஆபரணங்கள் திறமை வாய்ந்த பொன்வினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டன என்பது முக்கியமான ஒரு விடயமாகும்.

அணிகளை தெய்வ அணிகள், மக்கள் அணிகள், பிற அணிகள் என மூன்று வகைப்படுத்தலாம். திருமாலுக்கு "கௌத்துவம்' என்ற அணியும் கிருஸ்ணருக்கு "செமந்தகம்' என்ற அணியும் சிறப்பானது என சமய இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. சூடாமணி, சூளாமணி முதலிய மணிகள் உயர்ந்தவையாக இருந்ததுடன் தெய்வத்தன்மை வாய்ந்த மணிகளாக விளங்கின. இவற்றின் மூலம் பண்டைய காலத்தில் தெய்வ அணிகள் புழக்கத்தில் இருந்தன என்பது எமக்கு புலனாகிறது.

அணிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது பாதத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். காலில் அணிகின்ற பல ஆபரணங்கள் உள்ளதாக இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் பொன்னால் உருவாக்கப்பட்டு காலிலே அணிவதற்கு எந்த ஆபரணமும் அவ்விலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. தற்காலத்தில் பெண்கள் எவ்வளவுதான் செல்வத்தில் சிறந்திருந்தாலும் கூட வெள்ளியால் உருவாக்கப்பட்ட கொலுசுகளைத்தான் கால்களில் அணியவேண்டும். அதுதான் தமிழர் மரபாகப் பேணப்பட்டு வருகிறது. தங்கம் என்பது மகாலட்சுமியாகப் பார்க்கப்படுகிறது. எனவே தங்கத்தை இறைவனுக்கு உரியதாகவே பார்க்கவேண்டும். மகாலக்சுமியை நாம் கால்களில் அணியக்கூடாது என்றும் பொன், மணி என்பவை தெய்வ மூர்த்தங்களுக்காக உருவாக்கப்பட்டவை எனவும் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனாலும் தற்காலத்தில் ஒரு சிலர் தங்கத்தால் செய்யப்பட்ட கால் சங்கிலிகளை அணிவதை நாம் பார்க்கிறோம்.

பாடகம், தண்டை, சிலம்பு, நெகிழம், சதங்கை, சரி, கிண்கிணி போன்றவை கால்களில் அணியும் ஆபரணங்களாக குறிப்படப்படுகின்றன. சிலம்பு என்ற ஆபரணம் திருப்புகழில் ஆபரணம், ஆடகம் என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. அதுமாத்திரமல்லாமல் சிலப்பதிகாரம் கூட சிலம்பில் இருந்து தோற்றம் பெற்றது. இவ்வாறு கால்களில் தங்க ஆபரணங்களை அணிவதற்குப் பதிலாக வெள்ளியால் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை அணிவதற்குத்தான் மக்கள் வழி நடத்தப் பட்டார்கள். அதன் வழி மக்களும் நடந்தார்கள்.

சிலம்பைப் போன்ற அமைப்புடன் குழந்தைகளின் கால்களில் அணிவிக்கப்படும் ஆபரணம் "தண்டை' என அழைக்கப் படுகிறது. இந்த தண்டைகள் ஒலி எழுப்பக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டன. "தண்டை அணிந்த தழல்' என சிறப்பாகக் கூறுவார்கள். சதங்கை, சரி, கிண்கிணி போன்ற ஆபரணங்களும் குழந்தைகளின் கால்களுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்களாகும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மங்கையரின் பாதங்களை அணிசெய்யும் கொலுசும், மெட்டியும்

Post by *சம்ஸ் on Fri 11 Mar 2011 - 21:25

பெண்களின் கால்களில் அணியப்படுகின்ற ஆபரணங்களாக சிலம்பு மற்றும் கொலுசு ஆகியன குறிப்பிடப்படுகின்றன. கொலுசு என்ற பதம் அந்நாட்களில் பயன்படுத்தப்படவில்லை. இன்று நாம் அழைக்கும் கொலுசு அந்நாட்களில் "சரி' என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. கொலுசு என்பது உண்மையில் தமிழ்ச்சொல் கிடையாது. அது ஒரு தெலுங்குச் சொல் ஆகும். எனவே இலக்கியங்களில் இருந்து கால்களுக்கு அணியப் பயன்படுத்தப்பட்ட ஆபரணங்களை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். ஆண்கள் மாத்திரம் கால்களில் வீரத்தினதும் வெற்றியினதும் அடையாளமாக "கழல்' அணிந்ததாக இலக்கியங்கள் மிக அழகாக எடுத்துரைக்கின்றன. போரில் வெற்றியடைந்த சிறந்த வீரர்கள் மாத்திரம் ஒரு காலில் வீரக்கழல்களை அணிந்ததாக நாம் அறிகிறோம். வீரக்கழல் என்பது பூ வேலைப்பாடுகளுடன் அணிகலச் சிறப்பும் கொண்டதாக இருந்ததாக அறிய முடிகிறது.

கழல்களிலும் சிலம்புகளிலும் ஓசை எழுப்பும் நிமித்தம் பரல்கள் பதிக்கப்பட்டன. பாண்டிமாதேவியின் சிலம்பில் முத்துக்கள் பதிக்கப்பட்டிருந்ததாக சிலப்பதிகாரம் எடுத்தியம்புகிறது. அந்த சிலம்பில் ஓசை எழுப்பக்கூடிய பாண்டி நாட்டு கொற்றை முத்துக்களை பரல்களாக பயன்படுத்தியிருந் தார்கள். செழுங்குடி மாத்திரமல்லாமல் வணிகர் குடியில் பிறந்த கண்ணகியின் செல்வச் செழிப்பை அவள் சிலம்பில் பதிக்கப்பட்டிருந்த மாணிக்க கற்கள் உலகிற்கு பறைசாற்றுகின்றன. காலில் நெகிழக்கூடியவாறு அணியும் சிலம்பிற்கு "நெகிழம்' என்று ஒரு பெயர் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. அதாவது காலை இறுக்கிப் பிடிக்காமல் நெகிழ்ச்சியுடன் கூடிய தன்மையுடன் இருப்பதை நெகிழம் என்று அழைத்தார்கள். பரிபாடல், திருக்கோவையார் முதலியவற்றிலும் நெகிழம் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன. இது தற்காலத்தில் கால் சங்கிலி என்று அழைக்கப்படுகிறது.

திருமணம் ஆன பெண்கள் காலிலே அணியும் ஆபரணம் மெட்டி ஆகும். மெட்டி, மிஞ்சி இரண்டுமே ஒரு பொருளைத் தரக்கூடியது. தற்காலத்தில் திருமணம் ஆகாத பெண்கள் கூட நாகரீகம் கருதி கால்களில் மெட்டி அணிகிறார்கள். எந்த ஆபரணம் அல்லது அணிகளை நாம் அணியும்போது காரணம் கருதி அணியும் வழக்கம் நம்மிடம் உண்டு. திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிய வேண்டுமென்பது காலங்காலமாய் பின்பற்றப்படும் தமிழ் மக்களின் சம்பிரதாயமாகும். திருமணத்தின் போது மணமகன் அம்மியில் மணமகளின் காலை எடுத்து வைத்து மெட்டி அணிவிப்பான். பெருவிரலுக்கு அடுத்த விரலில் இந்த மெட்டி கணவரால் அணிவிக்கப்படுகின்றது. இதன் காரணம் திருமணமான பெண்களுக்கு கர்ப்பாசய பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என்பதாகும்.

பெருவிரலுக்கு அடுத்ததாக இருக்கும் விரலில் உள்ள நரம்பு நேரடியாக கர்ப்பாசனத்துக்கு செல்கிறது. பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை மற்றும் கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள் இந்த நரம்பினை அழுத்தி தேய்ப்பதால் குறைவடையும் என நம்பப்படுகிறது. இவ்வாறு எப்போதும் செய்ய முடியாது என்பதற்காக வெள்ளியால் உருவாக்கப்பட்ட மெட்டியை கால் விரலில் அணிவித்தார்கள். இம்மெட்டி நடக்கும் போது இயற்கையாக காலை அழுத்துவதோடு உராய்வையும் ஏற்படுத்துகிறது. விரலில் மெட்டி அணியும்போது அந்த நரம்புகள் தூண்டப்பட்டு கர்ப்பாசய பிரச்சனைகள் இல்லாதொழிகின்றன. எனவே திருமணமான பெண்களுக்கு உரிய ஆபரணமாக மெட்டி பெரியோர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் தற்காலத்தில் பெண்களின் நவநாகரீக வாழ்க்கையிலும் கொலுசு, மெட்டி ஆகிய ஆபரணங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிகளவான நிறை கொண்டு வெள்ளியால் உருவாக்கப்பட்ட கொலுசுகள், குறைந்த நிறை கொண்டு வெள்ளியால் உருவாக்கப்பட்ட கால் சங்கிலிகள் என்பன தற்காலத்தில் புழக்கத்தில் உள்ளன. அத்துடன் பல நிற கிறிஸ்டல் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கால் சங்கிலிகளும் பிரபல்யம் வாய்ந்தவையாக உள்ளன. மெட்டிகளில் ஒலி எழுப்பக்கூடிய மெட்டிகள், பல நிற கிறிஸ்டல் கற்கள் பதிக்கப்பட்ட மெட்டிகள், டிசைன் மெட்டிகள், வளைய வடிவ மெட்டிகள், சாதாரண மெட்டிகள் என பலவகை மெட்டிகள் தற்போது கிடைக்கின்றன.

கருத்து

வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்

நன்றி

கலா ஜூவலர்ஸ்

தொகுப்பு

பிரியங்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மங்கையரின் பாதங்களை அணிசெய்யும் கொலுசும், மெட்டியும்

Post by ஹம்னா on Sat 12 Mar 2011 - 16:25

:!+: ##*


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: மங்கையரின் பாதங்களை அணிசெய்யும் கொலுசும், மெட்டியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum