சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

காலிறுதி போட்டி : பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள் இன்று பலப்பரீட்சை

Go down

Sticky காலிறுதி போட்டி : பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள் இன்று பலப்பரீட்சை

Post by நண்பன் on Wed 23 Mar 2011 - 13:32

உலகக் கோப்பையின் முதல் காலிறுதி ஆட்டம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் புதன்கிழமை நடைபெறுகிறது.இந்த
ஆட்டத்தில் பாகிஸ்தான்-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன. இந்த
உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இவ்விரு அணிகளுமே கணிக்க முடியாத அணிகளாகவே
கருதப்படுகின்றன.
பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் நடப்புச் சாம்பியன் அவுஸ்திரேலியாவை
வீழ்த்தியதோடு, 10 புள்ளிகளுடன் "பி' பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
சூதாட்டம், அணித் தேர்வில் குளறுபடி என பல்வேறு சர்சைகளுக்குப் பின்
விளையாட வந்தாலும் இதுவரை நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் நீங்கலாக மற்ற
அனைத்திலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.
நடப்புச் சாம்பியனை வீழ்த்திய உற்சாகத்திலும், மிகுந்த நம்பிக்கையுடனும்
களமிறங்குகிறது பாகிஸ்தான். பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பாகிஸ்தானுக்கு
இன்னும் சிறப்பான தொடக்கம் அமையவில்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது.
முகமது ஹபீஸ், அகமது ஷாஸத் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பதால்,
பாகிஸ்தான் ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து விடுகிறது.
கடந்த ஆட்டத்தில் கம்ரான் அக்மலை தொடக்க வீரராக களமிறக்கியும் பெரிய
அளவில் பலன் கிடைக்கவில்லை. அதேசயம் மிடில் ஆர்டரில் மூத்த வீரர்கள்
சிறப்பாக ஆடி வந்தாலும், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்துவதில்லை. ஆனாலும் யாராவது ஒருவர் நிலைத்து நின்று அணியை
தூக்கி நிறுத்தி விடுகின்றனர். யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹக், உமர் அக்மல்
ஆகியோர் மிடில் ஆர்டரில் வலுசேர்க்கிறார்கள்.
ஆஷாத் ஷபிக் கடந்த இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி ரன்
சேர்த்துள்ளார். அவர் இந்த ஆட்டத்திலும் நன்றாக விளையாடி பாகிஸ்தானுக்கு
வலுசேர்க்கக்கூடும்.
கேப்டன் சயிட் அப்ரிடி எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. வேகமாக ஆட முற்பட்டு விரைவாக ஆட்டமிழந்து விடுகிறார்.
அப்துல் ரசாக் மீண்டும் பார்முக்கு திரும்பியதன் மூலம் பாகிஸ்தானின்
பின்வரிசை பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார். இந்த உலகக் கோப்பையில்
பாகிஸ்தான் அணியில் எந்த வீரரும் சதம் அடிக்கவில்லை.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷோயிப்
அக்தர் ஜொலிக்கவில்லை. உமர் குல், நல்ல பார்மில் உள்ளார். ரசாக், அப்ரிதி,
ஹபீஸ் ஆகியோரும் பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். இந்த உலகக் கோப்பையில்
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 17 விக்கெட்டுகளுடன் அப்ரிடி
முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரையில் பேட்டிங்,
பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்திலுமே சமபலம் வாய்ந்த அணியாகவே உள்ளது.
என்றாலும், பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் சற்று பலம் குறைந்த அணியாகவே
உள்ளது.
பேட்டிங்கில் கிறிஸ் கெயில், டேவன் ஸ்மித், கைரான் பொல்லார்டு, கேப்டன்
டேரன் சமி ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்றாலும், தொடர்ச்சியாக சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர். பந்துவீச்சில் கெமர்
ரோச், சுலைமான் பென், பிஷு, ரவி ராம்பால், ரஸ்ஸல் ஆகியோர் பாகிஸ்தானுக்கு
நெருக்கடி அளிக்கக்கூடும்.
வயிற்று வலி காரணமாக கிறிஸ் கெயில், கெமர் ரோச் ஆகியோர் இந்தியாவுக்கு
எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடவில்லை. இவர்கள் தற்போது குணமாகிவிட்டதால்
பாகிஸ்தானுக்கு எதிராக களம் காண்கிறார்கள். இந்த ஆட்டத்தில் வென்றால்தான்
அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக
கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.
மைதானம் எப்படி?
டாக்கா மைதானத்தில் பாகிஸ்தான் 3 ஆட்டங்களில் விளையாடி இரண்டில்
வெற்றிபெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் இந்த உலகக் கோப்பையில்
மட்டும்தான் இந்த மைதானத்தில் விளையாடியுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான
அந்த ஆட்டத்தில் அந்த அணியை 58 ரன்களில் மேற்கிந்திந்தியத் தீவுகள்
சுருட்டியது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum