சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

பெரியார் வீட்டில் மகாத்மா காந்தி;ராட்டையால் நூல் நூற்க கற்றுக்கொடுத்தார்

Go down

Sticky பெரியார் வீட்டில் மகாத்மா காந்தி;ராட்டையால் நூல் நூற்க கற்றுக்கொடுத்தார்

Post by *சம்ஸ் on Wed 23 Mar 2011 - 14:13


பெரியாரின் தந்தை 1911_ம் ஆண்டு காலமானார். இரண்டு மகன்களுக்கும் போதுமான சொத்துக்களை எழுதி வைத்து, மீதியுள்ள பெரும் சொத்துக்களை தர்மத்துக்கு அவர் எழுதி வைத்திருந்தார்.

பெரியார் நண்பர்களுடன் வீணாகச் சுற்றுவதை குறைத்துக் கொண்டு, பொது வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கினார். ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு, வணிகர் சங்கம், விவசாயிகள் சங்கம், தேவஸ்தானம், சங்கீத சபை முதலிய 29 பொது அமைப்புகளில் உறுப்பினர் ஆனார். 1919_ம் ஆண்டு ஈரோடு நகரசபைத் தலைவர் ஆனார்.

அதே ஆண்டில் சேலத்தில் நகரசபை தலைவராக ராஜாஜி இருந்தார். பெரியாரை ராஜாஜியும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வரதராஜலு நாயுடுவும் அடிக்கடி சந்தித்துப் பேசுவது உண்டு. பெரியாரை காங்கிரசில் சேரும்படி அவர்கள் வற்புறுத்தி வந்தார்கள்.

இந்தச் சமயத்தில், "ஜாலியன் வாலாபாக் படுகொலை" நடந்தது. அதற்குக் கண்டனம் தெரிவித்து, பலர் பதவியை ராஜினாமா செய்தார்கள். பெரியாரும், ராஜாஜியும் நகரசபைத் தலைவர் பதவிகளை உதறி எறிந்தார்கள்.

1920_ம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசை எதிர்த்து "ஒத்துழையாமை இயக்கத்தை" காந்தி தொடங்கினார். காந்தி கூறிவந்த தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கோர்ட்டு புறக்கணிப்பு முதலிய திட்டங்கள் பெரியாரைக் கவர்ந்தன. காங்கிரசில் சேர்ந்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெரியார் வீட்டில் மகாத்மா காந்தி;ராட்டையால் நூல் நூற்க கற்றுக்கொடுத்தார்

Post by *சம்ஸ் on Wed 23 Mar 2011 - 14:13

அதுமட்டுமல்ல,ஆடம்பர ஆடை அணிவதை நிறுத்தி, முரட்டுக் கதர் ஆடை அணியத் தொடங்கினார். உயர்ந்த பட்டுச் சேலை அணிந்து வந்த மனைவி நாகம்மையாரையும் கதர் உடுத்தச் செய்தார். பெரியாரின் 80 வயதுத் தாயாரும் கதர் சேலை அணியலானார்.

சிகரெட் பிடிப்பது, வெற்றிலை போடுவது போன்ற பழக்கங்களை ஒரே நாளில் விட்டொழித்தார். முரட்டு மனிதராக இருந்தவர், சாதுவாக மாறினார். 1921 செப்டம்பர் மாதம் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்து சுற்றுப்பயணம் செய்தார். அப்போது ஈரோட்டுக்கும் சென்றார்.

அங்கு பெரியார் வீட்டில்தான் காந்தி தங்கினார். அப்போது ராட்டையில் நூல் நூற்பது எப்படி என்று, பெரியாருக்கும், அவர் குடும்பத்தாருக்கும் கற்றுக் கொடுத்தார்.

"கள் இறக்க உதவும் மரங்களை எல்லாம் வெட்டிவிடவேண்டும்" என்று காந்தி கூறியதைத் தொடர்ந்து, பெரியார் தன் தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். கள்ளுக்கடைகள் முன் மறியல் செய்தார்.

கேரளத்தில் வைக்கம் என்ற ஊரிலுள்ள ஒரு தெருவில், தாழ்த்தப்பட்டவர்கள் நடக்கக்கூடாது என்று வெகு காலமாகக் கட்டுப்பாடு இருந்து வந்தது. அந்தக் கட்டுப்பாட்டை ஒழித்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை கிடைக்கச் செய்ய 1924_ல் காங்கிரஸ் கட்சி "சத்தியாக்கிரகப் போராட்டம்" தொடங்கியது. இதில் பெரியார் பங்கு கொண்டு 22_4_1924_ல் கைதானார்.

இதுபற்றி தகவல் தெரிந்ததும் நாகம்மையார் வைக்கத்திற்கு வந்தார். அவரும் மற்றும் ஏராளமான பெண்களும் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்குப்பிறகு பெரியார் விடுதலை செய்யப்பட்டார். உடனடியாக கேரளாவை விட்டு வெளியேறும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.

அந்த உத்தரவுக்கு கீழ்ப்படிய பெரியார் மறுத்தார். அதனால் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. முடிவில் வைக்கம் போராட்டம் வெற்றி பெற்றது.

தெருவில் நடந்து செல்ல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. 4 மாத சிறை வாசத்துக்குப்பின் விடுதலை அடைந்த பெரியார், "வைக்கம் வீரர்" என்று போற்றப்பட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெரியார் வீட்டில் மகாத்மா காந்தி;ராட்டையால் நூல் நூற்க கற்றுக்கொடுத்தார்

Post by ஹம்னா on Sun 24 Apr 2011 - 21:53

##* ##*


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: பெரியார் வீட்டில் மகாத்மா காந்தி;ராட்டையால் நூல் நூற்க கற்றுக்கொடுத்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum