சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

தேசிய, சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பேச்சுவார்த்தை

Go down

Sticky தேசிய, சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பேச்சுவார்த்தை

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 29 Apr 2011 - 9:01

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்தவற்றை கே. பி யினூடாக பகிரங்கப்படுத்த திட்டம்


சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. இலங்கை தொடர்பில் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்க ஐ.நா. செயலாளருக்கு உரிமை கிடையாது. இந்த அறிக்கை குறித்து தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்களை கே.பியினூடாக பகிரங்கப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. தருஸ்மன் அறிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய நிபுணர் குழுவொன்றை நியமித்ததை நாம் ஆரம்பத்திலேயே நிராகரித்தோம். இந்த செயற்பாட்டை ஏற்க முடியாது.

உண்மைக்குப் புறம்பாகவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பெற்ற வெற்றியைத் தலைகீழாக மாற்றவும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் செயற்பாட்டையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் குழப்பவுமே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை இறைமையுள்ள நாடாகும்.

ஆனால், திட்டமிட்ட முறையால் இந்த பொய்யான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிவிவகார அமைச்சினூடாக ஐ.நாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தலைப்பட்சமான இந்த அறிக்கை தொடர்பில் கட்சி இன, மத, பேதமின்றி ஒன்றுபட்டு செயற்படுவது குறித்து பேசி வருகிறோம். பரந்தளவில் இது குறித்து பேச உள்ளோம். சர்வதேச மட்டத்திலும் பல்வேறு தரப்புடனும் பேச்சு நடத்தப்படுகிறது.

புலிகள் இயக்கம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அந்த அமைப்பு ஒழுக்கக் கட்டமைப்பின் கீழ் தேசப்பற்றுடன் செயற்பட்டதாகவும் தருஸ்மன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், உலகில் மிக மோசமான பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன முன்பு தெரிவித்தன. அந்த நாடுகளுடன் தொடர்புடைய நிபுணர் குழுவே இன்று புலிகளை இவ்வாறு உயர்த்திக் கூறியுள்ளது.

ஒழுக்க விழுமியமுள்ள குழு என்பதாலா அவை பிக்குகளை மட்டுமன்றி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள், ராஜீவ் காந்தி போன்றோரையும் கொலை செய்தது. இரத்தவெறி பிடித்த குரூர குழுவாகவே புலிகள் செயற்பட்டனர்.

தருஸ்மன் அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கீகரித்திருப்பது ஆச்சரியப்படும் விடயமல்ல.

இதற்கு முன்னரும் அவர்கள் புலிகள் இயக்கத்தையே பிரதிநிதித்துவப்படுத்தினர். இதிலிருந்து அவர்களை மீட்கவே முயற்சி செய்கிறோம்.

அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் அவர்களை இணைக்க முயற்சி நடக்கிறது.

அவர்களுடன் அரசாங்கம் பேச்சு நடத்தி வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்பதை ஏற்க முடியாது.

இந்த அறிக்கை தொடர்பில் ஐ.தே.க. இதுவரை பொறுப்புடனே செயற்பட்டு வருகிறது. இந்த அறிக்கை குறித்து ஆராய பிரட்மன் வீரக்கோன் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். நாட்டை துண்டாடும் சமாதான உடன்படிக்கைக் குழுவிலும் தலைமை தாங்கியிருந்தார். எனவே, ஐ.தே.க, குழு குறித்து கவனமாகவே ஆராயவேண்டும்.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum