சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Today at 18:48

» மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்
by சே.குமார் Yesterday at 17:17

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by பானுஷபானா Yesterday at 12:35

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

.

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம்

View previous topic View next topic Go down

Sticky வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம்

Post by veel on Wed 25 May 2011 - 22:39

நீண்டபோராட்டத்தின் பின் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம்- இன்னும் சவால்கள் காத்திருக்கின்றன!

கடந்த 9ம் திகதி மாவட்டபுரம் கந்தசாமி கோவில் கிழக்கு வீதியில் 1000 ற்கும் மேற்பட்ட மக்கள் நீண்ட இடைவேளைக்குப்பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் கூடியிருந்தார்கள். அதற்கு காரணம் வலி வடக்கில் மேலும் சில கிராமங்களில் பிற்பகல் 3.00 மணியளவில் மீளக்குடியமர்வு இடம்பெறவுள்ளதாகவும் விசேட பூஜை வழிபாட்டுடன் மீள குடியமர்வு இடம்பெற உள்ளதாகவும் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் உட்பட சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகமாயிருந்தார்கள். அக்கூட்டத்திற்கு முன்னர் அரசாங்கத்துடன் இருக்கும் ஒரு கட்சியின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்களும் பேச்சுகளும் ஒலிபெருக்கப்பட்டமை அரசாங்க கட்சியில் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.

அக்கூட்டம் முடைவடைந்து பிரபலியங்கள் வெளியேறியதும் வலி வடக்கில் கொல்லன்கலட்;டி, நகுலேஸ்வரம், தெல்லிப்பளை, தந்தைசெல்வாபுரம், மாவிட்டபுரம், மாவிட்டபுரம் தெற்கு, பழவீமன்காமம் வடக்கு, பழவீமன்காமம் தெற்கு, வறுத்தலைவிளான் ஆகிய பிரதேசங்களில் மீள குடியேறலாம் என்றும் மக்கள் இன்றே மேற்படி கிராமங்களிற்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியிருந்தது.

உடனடியாகவும் அடுத்தடுத்த நாட்களிலும் தமது சொந்த இடங்களுக்கு சென்று பார்வையிட்ட மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அவர்கள் வாழ்ந்த வாழ்மனைகள் சிலதுகள் இல்லாமலும் உள்ளவற்றில் 90 வீதமான வீடுகளில் கூரையும் கதவும் கதவு நிலைகளும் ஜன்னல்களும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு கிணறுகள் மூடப்பட்ட நிலையில் இருப்பது கண்டு வேதனையடைந்தார்கள். தங்கள் கடின உழைப்பாலும் சிக்கனத்தாலும் உருவாக்கப்பட்ட வாழ்மனைகள் இன்று அழிபாடுகளாக காட்சியளிப்பதைக் கண்டு கண்கலங்கினார்கள். 20 வருடங்களுக்கு மேலாக மக்கள் செல்ல அனுமதிக்கப்படாது இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயங்கள் என சொல்லப்பட்டு வந்த பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள இத்தகைய அழிவுக்கு பொறுப்பு கூறவேண்டியது யார் என மக்கள் வினவுகிறார்கள்.

1983ம் ஆண்டு தொடக்கம் மக்கள் கட்டம் கட்டமாக வெளியேற்றப்பட்டு 1990 ஆம் ஆண்டு ஆனி மாதத்துடன் மிக மோசமான இராணுவ நடவடிக்கை மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தனர். மாண்புமிகு ஜனாதிபதி உட்பட பாதுகாப்பு அமைச்சர், இராணுவ அதிகாரிகள் எல்லோருக்கும் முறையிட்டும் பயன் கிடைக்காமலும் தமிழ் தலைமைகள் கையாலாகாத நிலையில சர்வதேச கரிசனையும் நீதிமன்ற தலையீடுமே இன்றைய முன்னேற்றத்திற்கு காரணம் என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

அரசியல் நகர்வுகள் பயனற்ற நிலையில் மனித உரிமைகள் இல்லத்தினர் இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனையை கரிசனைக்கு எடுத்து செயல்பட ஆரம்பித்தனர். அவர்கள் இப்பிரச்சனையை ஐ. நா சபையின் செயலாளரின் ‘இடம் பெயர்ந்த மக்கள் பிரதிநிதியினதும்’ ஐ.நா சபையின் மனித உரிமைகள் உப ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்கள். மேலும் அவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உத்தேசித்து, இது சம்பந்தமான நகர்வுகளுக்காக தெல்லிப்பளை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அப்போதைய தலைவர் காலம் சென்ற சின்னத்தம்பி சிவமகாராஜாவின் உதவியுடன் வலி வடக்கு இடம்பெயர்ந்தோர் கூட்டம் ஒன்றை 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒழுங்கு செய்திருந்தது. அதில் அன்றைய யாழ் குடாநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

அக்கூட்டத்திலே மக்கள் இடம்பெயர்ந்த பிரதேசங்களை அரசாங்க வர்த்தமானி மூலம் சுவீகரிக்க உள்ளதாக பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றும் அடுத்த கட்டமாக அரசாங்கம் நட்டஈட்டை வழங்க முன்வருவரலாம் என்றும் அது சம்பந்தமாக மக்கள் அபிப்பிராயம் கோரப்பட்ட பொழுது மக்கள் அனைவரும் எமது மண்தான் வேண்டும் என்று ஒரே குரலில் தீர்க்கமாக கூறியதற்கமைய சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அன்று தெரிவித்த நிலையிலிருந்து இன்றுவரையும் தளம்பாது உறுதியுடன் நின்று எமது சட்ட நடவடிக்கைக்கு உறுதுணையாக நின்ற மக்களுக்கு நாங்கள் தலைவணங்குகின்றோம். சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்புகூட மாவை சேனாதிராஜா நீதிமன்ற பணிப்புரைக்கமைய யாழ்ப்பாண அரசாங்க அதிபரால் அழைக்கப்பட்டு நட்டஈடோ அல்லது மாற்றுக்காணியோ ஏற்பீர்களா என கேட்டதற்கு அவர் மிகவும் ஆணித்தரமாக மறுப்பு தெரிவித்திருந்ததும் இன்றைய மீள்குடியேற்றத்திற்கு ஓர் காரணியாகும்.

மேற்படி கூட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாவை சேனாதிராஜா(பா.உ), வல்லிபுரம் இராசதுரை, சின்னப்பு சிவஞானசம்மந்தம், காசிப்பிள்ளை யோகேஸ்வரன், காசிப்பிள்ளை சுப்ரமணியம் ஆகியோரை மனுதாரர்களாகக் கொண்டு 5 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முதல் 3 வழக்குகளும் சட்டத்தரணி சின்னத்துரை மோகன் பாலேந்திராவினால் தாக்கல் செய்யப்பட்டு ஜனாதிபதி சட்டத்தரணி க. கனகேஸ்வரன,; சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன,; சட்டத்தரணி வி. எஸ் கணேசலிங்கம் ஆகியோரின் அனுசரணையுடன் தெரிபட்டு வாதிட்டார். மற்ற 2 வழக்குகளையும் திரு அப்பாத்துரை விநாயகமூர்த்தி தாக்கல் செய்து வாதிட்டார். இந்த வழக்குகள் 2003ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 01ம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்குகள் இலங்கை அரசியல் யாப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள்; மீற்ப்பட்டதன் அடிப்படையிலேயே தாக்கல் செய்யப்பட்டது. சட்;;;;டத்தின் முன் சமத்துவம் மீறப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், விரும்பும் தொழில் செய்யும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் (அரசியல் யாப்பின் உறுப்புரைகள் 12(1),12(2) 14(1)பஇh ஆகியவை மீறப்பட்டுள்ளன என்ற அடிப்படையிலேயே தாக்கல் செய்யப்பட்டன.

ஜனாதிபதி சட்டத்தரணி வலிகாமம் வடக்கு, அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஓர் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்படவில்லை என்றும் மனுதாரர்கள் மீள குடியேற மறுப்பது சட்டவிரோதமானதும் அரசியல் யாப்பினால் உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகளை மீறும் செயல் எனவும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும் மனுதாரர்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் வாதிட்டார்.

மனுக்களை ஏற்ற பிரதம நீதியரசரை தலைவராகக் கொண்ட குழாம் இது சம்மந்தமான அறிக்கையை குறிப்பாக மாற்றுக்காணியை அல்லது நட்டஈட்டை மனுதாரர்கள் பெற இணங்குவார்களா என்பதை ஆராய்ந்து அறிக்கை தருமாறு கோரியிருந்தது. அதற்கேற்ப அப்போதைய அரச அதிபர் கே.கணேஸ் வழங்கிய அறிக்கை நீதிமன்றம் மீளக்குடியேற உத்தரவிடுவதற்கு உதவுவதாக அமைந்தது. அதற்காக இப்பகுதி மக்கள் கணேஸ் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாவர்.

அவரது அறிக்கையை அப்படியே உயர்நீதிமன்றம் தனது 08.02.2006 திகதி கொண்ட கட்டளையில் உள்வாங்கி இருப்பது அந்த அறிக்கையின் தரத்தைக் எடுத்து காட்டுகிறது. அக்கட்டளையில் பிரதம நீதியரசர் அவர்கள் மாவட்ட செயலாளரின் அறிக்கையின்படி மாற்றுக்காணி வழங்கியோ அல்லது நட்டஈடு வழங்கியோ இது தீர்க்கமுடியாதென்றும், 20365 குடும்பங்கள் இடம்பெயர்ந்து இருப்பதால் அந்த அடிப்படையில் தீர்வு காண்பது சாத்தியமில்லை என்றும் மேலும் வலிகாமம் வடக்கு வளம் மிக்க செம்மண் பரதேசம் என்றும் இப்பிரதேசத்தில் மீன்பிடித்தொழில் இலாபகரமாக மேற்கொள்ளப்பட்;டு வந்ததென்றும் 60வீதமான மக்கள் வேளாண்மையிலும் 30வீதமான மக்கள் மீன்பிடித்துறையிலும் ஈடுபட்டு நல்வருவாய் பெற்று வாழ்ந்தார்கள் என்றும் இடப்பெயர்வினால் இம்மக்களின் வாழ்வாதாரம் கடந்த 15 ஆண்டுகளாக பறிக்கப்பட்டு அரசாங்கம் வழங்கும் உலர்உணவில் தங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இவர்களை பராமரிப்பதில் அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 36 மில்லியன் ரூபா செலவிடுகிறது என்றும் கூறி கீழ்கண்டவாறு கட்டளை வழங்கினார்.

‘இந்த சூழ்நிலையில் மனுதாரர்களினால் முறையிடப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் கணிசமானளவு அரசுக்கு பணநட்டத்தையும் பொருளாதார நட்டத்தையும் ஏற்படுத்துகின்றதால் இந்நீதிமன்றினால் தீர்மானிக்கப்பட்ட கீழ்க்காணும் நிபந்தனைகளுக்கமைய மக்கள் மீள் குடியமர்த்துவதன் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கருதுகின்றது.’ இந்த வழக்குகளில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா காட்டிய கரிசனையும் அவர் வெளிப்படுத்திய மனித நேயத்தையும் குறிப்பிடாதிருக்க முடியாது.

இந்த வழக்கின் முக்கியத்துவம் என்னவென்றால் இலங்கையின் பலபாகங்களிலும் குறிப்பாக குடாநாட்டுக்குள்ளும் 15 உயர் பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்ற போதிலும் ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து வாழுகின்ற போதிலும் உயர் பாதுகாப்பு வலயங்கள் மனித உரிமைகளை மீறுகின்றன என்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்குகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளில் ஓர் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

இந்த கட்டளையில் சொல்லப்பட்ட நிபந்தனைகளுக்கமைய அப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரி. விக்னராஜா தலைமையில் யாழ்ப்பாண அரச அதிபர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர், யாழ்ப்பாண இராணுவத்தளபதி மற்றும் யாழ்ப்பாண கடற்படைத்தளபதி ஆகியோரைக் கொண்ட குழு ஒன்று அமைக்கபட்டு அக்குழுவை மீளக்குடியமர விரும்புவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரும்படியும் அவர்களை நேர்முகப்பரீட்சைக்கு உட்படுத்தும்;படியும் அவர்களிடம் காணி உள்ளதா என உறுதி செய்யும்படி நீதிமன்றும் பணித்தது.

அதற்கமைய 13.07.2009 வரை 10376 பேர் மீளக்குடியமர அரச அதிபருக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இப்பிரதேசத்தில் இருந்த பெரும்பான்மையோர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்றும் மீளக்குடியேற மக்கள் இல்லை என்றும் வாதிட்டவர்களுக்கு இந்த விண்ணப்பங்கள் பெரும் அதிர்ச்சியையேற்படுத்தியது. இது ஆண்டுகள் 20 சென்றாலும் எமது மக்கள் மண்மீது வைத்துள்ள பற்றையும் அவர்களின் மனஉறுதியையும் எடுத்துகாட்டுகிறது.;

இக்கட்டளையைத் தொடர்ந்து நீதிமன்று மீளக்குடியேற்றத்திற்கு ஏதுவாக பல கட்டளைகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிரகாரம் அரச அதிபரினால் அனுப்பப்பட்ட 15.01.2010 தேதியிடப்பட்ட அறிக்கையில் இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு, வித்தகபுரம், பன்னாலை, கொல்லன்கலட்டி, நகுலேஸ்வரம,; தெல்லிப்பளை, தந்தைசெல்வாபுரம,; மாவிட்;டபுரம,; மாவிட்டபுரம் தெற்கு, பழவீமன்காமம் வடக்கு, பழவீமன்காமம் தெற்கு, இடைக்காடு ஆகிய 13 கிராமசேவையாளர் பிரிவுகளிலும் 3587 குடும்பங்களை மீளக்குடியமர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் இப்பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கிடைக்கப்;பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் தெரிவித்தவாறு மீளக்குடியேற்றம் இடம்பெறவில்லை என்பதை சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அவர்கள் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

இந்த வழக்குகள் 25.04.2011 உயர் நீதிமன்று முன் வந்த பொழுது பிரதி சொலிசிற்றர் ஜெனரல், இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு, வித்தகபுரம் ஆகிய பிரதேசங்களில் மீளக்குடியேற்றம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெல்லிப்பளை, மாவிட்டபுரம், கீரிமலை ஆகிய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்டு விட்டதாகவும் 2011 மே மாதம் 2ம் கிழமையளவில் அப்பிரதேசங்கள் பொது மக்கள் பாவனைக்கு விடப்படும் என்றும் இதனை அவர் மேற்பார்வை செய்வார் என்றும் நீதிமன்றத்திற்கு உத்தரவாதம் அளித்து, இறுதியாக இவ்வழக்கில் உள்ளடக்கப்பட்ட ஏனைய பிரிவுகளும் கண்ணிவெடி அகற்றப்பட்டதும் படிப்படியாக மக்கள் பாவனைக்கு விடப்படும் என்றும் தெரிவித்தார். நீதிமன்றத்தில் தெரிவித்த இந்த அடிப்படையிலேயே தற்போதைய மீளக்குடியமர்வு நிகழ்ந்துள்ளது.

இன்னும் வலி வடக்கில் சில கிராமங்களில் மக்கள் மீளக்குடியேற்றப்படாதிருக்கிறார்கள். அவர்களும் மீளக்குடியேற்றப்படும்வரை மேற்குறித்த வழக்குகள் தொடரும்.

மீளக்குடியேற பற்றுறுதி காட்டிய எம்மக்கள் வருங்காலங்களில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பது என்பது யதார்த்தம். இதனை எதிர்கொண்டு தமது கடின உழைப்பால் மீண்டும் வலி வடக்கை வளம் கொழிக்கும் பிரதேசம் ஆக்க வேண்டும். மீண்டும் வெற்றிலை, வாழை, வெங்காயம், மிளகாய், முந்திரிகை செய்கைகள் பெருக வேண்டும். தொழில் வளம் பெருக வேண்டும், அம்பனையில், யானை மார்க் அலுமினிய தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை பாராட்டுக்குரியது. கடல்வளம் எமதாக வேண்டும். மீண்டும் வலி வடக்கு வளம் கொழிக்க எல்லோரும் முன்வரவேண்டும். குறிப்பாக புலம்பெயர்ந்த எமது உறவுகள் முன்வர வேண்டும். மீண்டும் எழுவோம்.

வி.எஸ். கணேசலிங்கம்
சட்டத்தரணி, மனித உரிமைகள் இல்லம்.
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum